சில மாதங்களுக்கு முன்பாக பதிவுகளும் சில சந்தேகங்களும் என்று மிக சீரியஸாக ஒரு பதிவை எழுதி, பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக எனக்கு எதிர்பதிவெல்லாம் போட்டார்கள். இப்போது இங்கே நான் கேட்கும் சந்தேகங்களும் பதிவுலகம் பற்றித்தான். ஆனால் இது சீரியசா? காமெடியா? என்று தெரியவில்லை. உங்களுக்கு விடைதெரிந்தாலோ, சந்தேகம் இருந்தாலோ தயவுசெய்து கூறுங்கள். "அதென்ன புதிய பதிவர்னு போட்டிருக்க?" அப்படின்னு கேட்கலாம். இந்த சந்தேகங்கள் புதிய பதிவர்களுக்கு வரலாம் அல்லவா? அவர்கள் மன நிலையில் இருந்து எழுதி இருக்கிறேன். (எனக்கு சந்தேகம்னு சொன்னா ஒரு வருடமா என்னத்த கிழிச்சன்னு கேட்டிருவாங்களோண்ணு இப்படி கேட்டுட்டு, சமாளிக்கிறதை பாரு)
சந்தேகம் #1
இந்த சந்தேகத்தை ரொம்ப நாளாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். அதென்ன வடை? கமெண்ட் போடுவதற்கும் வடை வாங்குவதற்கும் என்ன தொடர்பு? குறிப்பாக வடையைத்தான் சொல்ல வேண்டுமா? மொத பஜ்ஜி, மொத போண்டா என்று சொல்லக்கூடாதா? இது என்னை மாதிரி பஜ்ஜி போண்டா ரசிகர்களின் ஆதங்கம். சில பதிவர்கள் இதை வித்தியாசமாக மொத வெட்டு, சூடு சோறு என்றெல்லாம் சொல்கிறார்கள். மொத வெட்டு என்று சொல்வது ஆட்டைத்தானே? தமிழனையும் சாப்பாட்டையும் பிரிக்க முடியாதோ? அம்மா இங்கே வா வா பாடலில் கூட அம்மாவுக்கப்புறம், "இலையில் சோறு போட்டு" என்றுதானே சொல்கிறார்கள். ஒருவேளை அதன் நீட்சிதானோ இது?
சந்தேகம் #2
சில பதிவர்கள் மற்றும் கமெண்டர்கள் "அவ்வ்வ்வ்" என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். microsoft indic tool பரிந்துரையில் வரும் அளவிற்கு இந்த சொல் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதை எந்த மாதிரி அர்த்ததிற்கு பயன் படுத்த வேண்டும் என்றே குழப்பமாக உள்ளது. சிலர் அழும்போது, சிலர் குழப்பத்தில் இருக்கும்போது, சிலர் கலாய்க்கும்போதும் பயன்படுத்துகிறார்கள். இது வடிவேலு சொல்லும் 'அவ்வ்'வா அல்லது கடித்து குதறுவதற்கு முன் குரைக்கும் 'அவ்'வா. ஒரே குழப்பமா இருக்கு ....அவ்வ்
சந்தேகம் #3
சொம்பு நசுங்குவது என்று சொல்கிறார்கள். அது எந்த சொம்பு? மற்றவர்களை மட்டம் தட்டுவதற்காக சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். சொம்பு நசுங்கினால் அது கேவலமா? யாராவது ஏதாவது கருத்து சொன்னால், சொம்பு நசுங்கி விட்டது என்று சொல்கிறார்களே, இதன் அர்த்தம் என்ன? சொம்பு பல வகைப்படும். அது பித்தளை சொம்பா? எவர்சில்வர் சொம்பா? அல்லது வெள்ளி சொம்பா? இதில் எந்த சொம்பு நசுங்கினால் அது கேவலம்? சொம்பு நசுங்கி விட்டது, அல்லது நசுங்கவில்லை என்று எப்படி கண்டு பிடிப்பது?
சந்தேகம் #4
கொஞ்ச நாளாகவே நம்ம டாக்டர் விஜய் அவர்களை பற்றி எந்த பதிவரும் எழுதுவதில்லையே? பதிவர்கள் மாறி விட்டார்களா? அல்லது அவரை கலாய்த்து போராடித்துவிட்டதா? இவரையும் பாவம் என்று விட்டுவிட்டால் நமக்கு யார் இருக்கா கலாய்க்கிறதுக்கு? பதிவுலகத்தை மீட்க விரைந்து வருவான் வேலாயுதம் என்று முழுமையாக நம்புகிறேன்.
சந்தேகம் #5
கொஞ்சம் சீரியஸான சந்தேகம்தான். வன்கொடுமை சட்டம் என்றால் ஒருவரை சாதியின் பெயரால் திட்டுவது. இது எல்லா சாதிக்கும் பொருந்துமா? அல்லது குறிப்பிட்ட சாதியினருக்குத்தான் பொருந்துமா? ஒரு சில பதிவர்கள் பார்ப்பனர்கள் என்று ஒரு குறிப்பிட்ட சாதியினரை தீட்டி எழுதுகிறார்களே, அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தை பிரயோகிக்க முடியுமா? ஒரு சிலர் "பார்ப்பனர் என்றால் பிராமணர்கள் கிடையாது. தன்னை விட மற்றவர்கள் முன்னேறிவிட கூடாது என்று எண்ணுகிறவர்கள்." என்று சொல்கிறார்கள். ஆனால் எங்கு பார்ப்பனர்கள் பற்றி எழுதும்போதும் "அவா" என்று பிராமணர்களை குறிப்பது போலவே எழுதுகிறார்களே இது அறியாமையா இல்லை குசும்பா?
(என்னதான் வில்லங்கமா எழுதக்கூடாதுண்ணு நினைச்சாலும் முடிய மாட்டேங்குது)
சந்தேகம் #6
முதலாளித்துவத்துக்கு ஆதரவாக ஒரு வார்த்தை சொன்னால் கூட "அமெரிக்காவின் கைக்கூலி" என்று சொல்லி விடுகிறார்களே, கம்யூனிசத்துக்கு ஆதரவாக எழுதுபவர்களை ரஷ்யாவின் கைக்கூலி என்று சொல்லலாமா? இப்படி ஒரு வார்த்தை பேசினால் கூட கூட்டமாக நின்று கும்மி விடுகிறார்களே இதை பார்ப்பனியம் என்று சொல்லலாமா?
இந்த விஷயத்துக்கும் சந்தேகம்#6க்கும் சம்பந்தம் கிடையாது. ரஷ்யா என்றவுடன் நினைவுக்கு வந்தது. கொஞ்ச நாளுக்கு முன்னாள் வினவு தளத்தில் ரஷ்யாவின் வளர்ச்சி, அதற்கு கம்யூனிசத்தின் பங்கு பற்றி ஒரு நீ....ளமான கட்டுரை எழுதி இருந்தார்கள். வழக்கம்போல் அதை படித்த பலபேர் இந்தியாவை திட்டியும், அதைவிட அதிகமானோர் வினவை திட்டியும் கருத்திட்டு மோதிக்கொண்டிருந்தனர். ஒரே ஒரு நபர் மட்டும் சோவியத்தில் இருந்து பிரிந்த சில நாட்டு மக்களிடம் தான் பேசிய கருத்துக்களை சொல்லி இருந்தார். அவர்கள் அனைவரும் கம்யூனிச ஆட்சியால் தாங்கள் அடைந்த துன்பத்தை பற்றி சொல்லி இருந்தார்கள். படிக்க சுவாரசியமாக இருந்தது. ஆனால் நேரம் இல்லாத காரணத்தால் அப்புறம் படிக்கலாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் இப்போது அந்த கட்டுரையை காணவில்லை. ஏன் தூக்கினார்கள் என்று தெரியவில்லை. இல்லை அரை தூக்கத்தில், வினவு, கீற்று, மாற்று என்று நான்தான் குழம்பி போய் விட்டேனோ?
வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறுவதால், என் மற்ற சந்தேகங்களை அப்புறம் கேட்கிறேன்.
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
35 comments:
me first
present bala
@r.v.saravanan
மொத வடைன்னு சொன்னா கேள்வி கேப்பான்னு, me firstன்னு எஸ்கேப் ஆகிட்டீங்களா?
பரவாயில்லை வடைய பிடிங்க...
ஆரம்பத்தில் எனக்கும் .ந்த டவுட்டு இருந்தது ... போக போக நானும் இதை ஃபாலோ பன்ன ஆரம்பிச்சுட்டேன்..
ரைட்டு அடுத்த சர்ச்சையா தொடங்க போகுது , நாம யாரு வம்புக்கும் தும்புக்கும் போறதில்லீங்க
அட ஆமா இல்ல..?
சரி என்னதான் சொல்றாங்கன்னு பார்ப்போம். எல்லாருக்கும் வர்ற டவுட்டுதான்.
வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறுவதால், என் மற்ற சந்தேகங்களை அப்புறம் கேட்கிறேன்.
....ரைட்டு.... அப்புறமா வாரேன்.
நியாயமான சந்தேகங்கள்,பாலா ! சந்தேகத்தைத் தீர்ப்பவருக்குப் பொற்கிழி ஏதும் உண்டா?
@வேடந்தாங்கல் - கருன்
அப்படீன்னா இதுக்கொரு முடிவே கிடையாதா?
@ஆர்.கே.சதீஷ்குமார்
ஆமாவா இல்லையா?
நீங்களும் சந்தேகத்தை கிளப்பாதீங்க...
@கே. ஆர்.விஜயன்
நீங்களும் நம்ம கட்சியா? சரி ஒண்ணாவே வெயிட் பண்ணுவோம்...
@Chitra
என்ன மேடம் சந்தேகத்தை தீர்த்து வைக்காமலேயே போறீங்களே?
@சென்னை பித்தன்
பொற்கிழியா? ஏற்கனவே பைனான்ஸ் டைட். படத்துல போட்டிருக்கிற சொம்பு வேணா வாங்கி தரலாம். அதுவும் கடனாத்தான் வாங்கணும்.
வட?
அவ்!
ஹி..... ஹி..... எல்லா டவுட்டுமே டாப்பு! சின்ன டாக்குடர் விஜய் பத்தி நம்ம அண்ணன் பன்னிக்குட்டி கிட்டடியில புரட்டி எடுத்திருந்தாரு! அது போதுமே ஒரு மாசத்துக்கு!
நியாயமான சந்தேகம்தான். பதில் கிடைக்குமா என்பது சந்தேகமே...
எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....
அட... நீங்க வேற,இதில் பாதி தப்பிக்கிற வழி; இதில் எல்லாம் சந்தேகம் கேட்ட என்னை மாதிரி புதிய பதிவர்களுக்கு வர்ற ஏதோ, ஒன்றிரண்டு கருத்துக்களும் வராது போயிடும்.நாங்க என்னதான் பண்றது?
@ஓட்ட வட நாராயணன்
பத்தாது பத்தாது. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.
@ரஹீம் கஸாலி
அதுவும் சந்தேகமா? சரி வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...
@"குறட்டை " புலி
அப்டி ஒண்ணு இருக்கோ?
super. good questions
comment la ../))))ippadi poduraangale athukku enna arththam..
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
தேங்க்ஸ் நண்பரே...
@மணி (ஆயிரத்தில் ஒருவன்)
இன்னொரு டவுட்டு. மைண்ட்ல வச்சுக்கிறேன்.
நியாயமான சந்தேகங்கள்தான்.. அப்புறம் எனக்கும் ரொம்ப நாளா ஒரு சந்தேகம் டிஸ்கி,முஸ்கி அப்பிடின்னா என்ன..?
//கம்யூனிசத்துக்கு ஆதரவாக எழுதுபவர்களை ரஷ்யாவின் கைக்கூலி என்று சொல்லலாமா?// தாராளமாக சொல்லலாம்.. சமத்துவம் என்பது அதுதானே
@Riyas
அதாவது disclaimarஐ சுருக்கி டிஸ்கி ஆக்கி விட்டார்கள். கடைசியில் டிஸ்கி போட்டு போட்டு, முதலில் போடுவதை முஸ்கி ஆக்கி விட்டார்கள்.
அடிக்கடி வாங்க. நன்றி நண்பரே...
????????
:)
ஓகே...ஓகே...விடை தெரிஞ்சபிறகு அதுக்கு ஒரு பதிவு போடுங்க...பார்ப்போம்..பை பாலா...:)
@jothi
உங்களுக்கும் டவுட்டு இருக்கு போலிருக்கே.
வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க...
@ஆனந்தி..
சரிங்க பாக்கலாம். அடிக்கடி வாங்க.
ஹ...ஹ..ஹ...
எப்புடியெல்லாம் சந்தேகப்பர்றாய்ங்கப்பா.... தாங்க முடியலியே...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.
வணக்கம் சார்.........
நாங்க புதிய பதிவர் தான்......
அருமையான் வடைகள் மற்றும் பஜ்ஜி படத்திற்குப் பாராட்டுக்கள்.
Post a Comment