"கோபம் என்பது தன்னை தானே அழித்துக்கொள்ளும் ஆயுதம்." என்று பல பேர் சொல்லக்கேட்டதுண்டு. எனக்கும் அந்த கொள்கைதான். ஆனால் கோபத்துக்கும் வஞ்சத்துக்கும் வித்தியாசம் உண்டு. தற்காலிக கோபங்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. எனக்கும் அப்பப்போ சீசனுக்கு ஏற்ற மாதிரி கோபங்கள் வருவதுண்டு. சமீப காலத்தில் கோபத்தை ஏற்படுத்திய சில விஷயங்களை பற்றி சொல்கிறேன்.
பஸ் தினம்
நாங்கள் கல்லூரியில் படித்த காலத்திலும் பஸ் தினம் கொண்டாடியதுண்டு. ஓட்டுனர், மற்றும் நடத்துனருக்கும், மாணவர்களுக்கும் இடையே நல்ல உறவை வளர்க்கும் விதமாகவும், பயணிகளை அவ்வளவாக இடையூறு செய்யாததாகவும் (கொஞ்சம் இடையூறு இருக்கத்தான் செய்யும்) இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறி எதோ தறி கேட்டு ஆட்டம் போடுவதற்க்காகவே இந்த நாள் இருப்பதாக மாற்றி விட்டார்கள்.ஒரு கொண்டாட்டத்தை அனுபவிக்க வேண்டுமானால் தண்ணி அடிக்கவேண்டும் என்ற தவறான கருத்து மக்களிடையே பரவி விட்டது. ஒரு கொண்டாட்டத்தை முழுவதுமாக அனுபவிக்க வேண்டுமானால் தெளிவாக இருந்தால்தான் முடியும். இல்லையேல் அது தனக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி தரும். மற்றவர்களுக்கு கண்டிப்பாக இடையூறுதான்.
எல்லோரும் மகிழ்ந்திருப்பதுதான் கொண்டாட்டம். எல்லோரிடமும் வசைப்பாட்டு வாங்கி என்ன சாதிக்க போகிறோம்? இள வயதில் ரத்தம் சூடாகத்தான் இருக்கும். எதையும் அலட்சியம் செய்யும். நினைத்ததை அடைய துடிக்கும். ஆனால் இவற்றை சரியான முறையில் வழி நடத்தத்தான் கல்வி அறிவு பயன்படுகிறது. ஆனால் படித்தவர்கள் என்பதற்கு துளியும் அடையாளம் இல்லாமல் இவர்கள் போதும் ஆட்டம் இருக்கிறது. இதில் பஸ் தினம் கொண்டாட விடாததால் போலீஸ் மீது கல்வீச்சு, மற்றொரு கல்லூரியில் வேண்டுமென்றே பேருந்தை நடத்தி கூட்டி சென்றிருக்கிறார்கள். இந்த களேபரத்தில் முன்னூறு மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இனி அரசு வேலையில் இருந்து, வெளிநாட்டு வாய்ப்புகள் வரை எதுவுமே இவர்களுக்கு கிடையாது. என்னை பொறுத்தவரை கள்ளங்கபடம் இல்லாமல், நேர்மையாக, உண்மையான நாட்டுபற்றுடன் இருப்பது மாணவர் சமுதாயமே. ஆனால் அவர்களே இப்படி கண்மூடிதனமாக இருப்பது கோபம் வரவழைக்கிறது.
விஜயகாந்த்
திமுக, அதிமுக ஆகிய இரண்டே இரண்டு கட்சிகளின் பிடியில் தமிழகம் இருக்கும்போது, மூன்றாவதாக ஒரு சக்தி வந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் நினைத்து கொண்டிருந்த போது, கட்சியை துவக்கியவர் விஜயகாந்த். முதலில் எல்லோராலும் காமெடி பீஸ் என்று அழைக்கப்பட்டவர், கொஞ்சம், கொஞ்சமாக் தமிழகத்தின் ஆட்சியையே நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக மாறிவிட்டார். பெரும்பாலான மக்கள் இவருக்கு ஆதரவு தெரிவிக்க காரணம், எந்த பக்கமும் சாராமல், தனித்து நின்றது. ஒரு காலத்தில், "தனித்துதான் நிற்பேன்." என்று சொன்னவர், கொஞ்ச நாளில், "கூட்டணி வைப்பாரா? மாட்டாரா?" என்று எல்லோரையும் எதிர்பார்க்க வைத்தார். பின், "யாருடன் கூட்டணி?" என்று கேட்க வைத்தார். தற்போது ஏறக்குறைய அதிமுக பக்கம் சாய்ந்து விட்ட இவர், கட்சி ஆரம்பிக்கும் முன் இருந்த இரண்டு கட்சி நிலையையே மறுபடியும் உருவாக்கிவிட்டார். இவரை ஒரு மாற்றாக நினைத்த மக்களை, காமெடி பீஸ் ஆக்கிவிட்டார். முதல்வன் படத்தில் வருவதுபோல "நீயும் அரசியல்வாதின்னு நிரூபிச்சுட்டியேன்னு?" கோபம் வருது.
திருமாவளவன்
வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் இறுதி சடங்கில் கலந்து கொள்ள இலங்கை சென்று, திருப்பி அனுப்ப பட்டிருக்கிறார். வந்தவுடன் வழக்கம்போல மைக்கை பிடித்து ஆத்து ஆத்து என்று ஆத்துகிறார் சொற்பொழிவை. ஏற்கனவே இந்த மாதிரி எரிமலை, சூறாவளி, பொங்கி எழுவோம், அடித்து நொறுக்குவோம் என்று சவடால் விட்டுவிட்டு, இலங்கை சென்று ராஜபக்சேவிடம் பல்பு வாங்கியது அனைவருக்கும் தெரியும். இவர் செய்வதை பார்த்தால் ஒரு படத்தில் கவுண்டமணி வீட்டுக்குள் மனைவியிடம் செமத்தியாக உதை வாங்குவார். ஆனால் வீட்டைவிட்டு வெளியே வந்து, "ஆய் ஊய்" என்று கத்திக்கொண்டே ஓடுவார். அந்த காமெடி காட்சிகள்தான் ஞாபகம் வருகிறது. இவ்வளவு நடந்த பிறகும், இவரை ஒரு மிலிட்டரி வீரர் ரேஞ்சுக்கு உருவகப்படுத்துவதைக்கண்டு கோபம் வருகிறது.
பெங்களூரு கிரிக்கெட்
மொத்தமுள்ள 35000 டிக்கெட்டுகளில் வெறும் 8000 டிக்கெட்டுகளை மட்டுமே ரசிகர்களுக்கு விற்க முடிவு செய்து, அதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் என்று ரசிகர்களையும் ஏமாற்றி இருக்கிறார்கள். மேலும் டிக்கெட் வாங்கும் இடத்தில் தடியடி நடத்தி ரசிகர்களை நாய்களை போல துரத்தி இருக்கிறார்கள். ஆமாம் ரசிகர்களுக்காகத்தானே கிரிக்கெட் போட்டிகளே நடக்கிறது? இவர்கள் யாரும் வரவில்லை என்றால், பொழப்பு எப்படி ஓடும்? டெஸ்ட் போட்டிகளின்போது ரசிகர்கள் வரவில்லை என்று இலவச டிக்கட் கொடுக்க நினைத்தவர்கள்தானே? இப்போது மட்டும் ஏன் இந்த மண்டைக்கனம்? கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் அதிகம் இருப்பதால்தான், ஐசிசியில் இருந்து அனைத்து விளம்பரதாரர்களும் இந்தியாவை நோக்கி படை எடுக்கிறார்கள். ஆனால் அந்த ரசிகர்களை அடித்து துரத்தி விட்டு போட்டி நடத்தி என்ன சாதிக்க போகிறார்கள்? இதை பார்த்தால் கோபம் தலைக்கேறுகிறது. இவ்வளவு நடந்த பிறகும், "கிரிக்கெட் போட்டிகளை பார்த்தே தீருவேன்!" என்று அடம்பிடிக்கும் ரசிகர்களை கண்டால் இன்னும் கோபம் வருகிறது. ஒரே ஒரு முறை போட்டியை புறக்கணித்து பாருங்கள். அடித்து பிடித்துக்கொண்டு ஓடி வருவார்கள்.
நாடாளுமன்ற கூட்டுக்குழு
ஒரு வழியாக ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எதிர்க்கட்சிகள் தாங்கள் நினைத்ததை சாதித்து விட்டதால் மகிழ்ச்சியாக இருக்கின்றன. இதை முதலிலேயே சொல்லி இருக்கலாம் அல்லவா? மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இந்த ஒரு பிரச்சனையால் முடங்கியது. ஒரு நாளைக்கு சுமார் ஏழரை கோடி வீதம், சுமார் நூறு கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. லட்சம் கோடியில் இது தூசு என்றாலும், நூறு கோடி என்பது கொஞ்சமில்லையே? இதை நினைத்தால் கோபம் கோபமாக வருகிறது
நடு நிசி நாய்கள்
இந்த படத்தை பற்றி பல்வேறு விதமாக விமர்சனங்கள் வந்துவிட்டன. ஒரு பக்கம் , "இப்படி முறையற்ற உறவுகள் எங்கோ எப்போதோ நிகழ்கிறது. அதை மையமாக வைத்து படமெடுத்து விட்டார்கள்." என்று கொதிக்கிறார்கள். மறுபக்கம் "எல்லாவற்றையும் சினிமாவாக பார்க்க சொல்பவர்கள், இதை மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள்?" என்று கேட்கிறார்கள். மேலும் , "நாட்டில் இது அதிகமாக நடக்கிறது." என்று புள்ளி விபரங்களை சொல்கிறார்கள். எல்லாம் சரிதான். இயக்குனரின் நோக்கம் கருத்து தெரிவிப்பதா? அல்லது வக்கிரத்தை வியாபாரப்படுத்துவதா? முதலாவதுதான் நோக்கம் என்றால், காதல் கொண்டேன் படத்தில் வருவதை போல பட்டும் படாமலும் சொல்லி இருக்கலாம். அதை விடுத்து எல்லா காட்சிகளையும் மனப்பாடம் செய்யும் அளவுக்கு டீடெயிலாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வியாபார நோக்கம் என்றால், இன்னும் திரில்லிங்காக எடுத்துவிட்டு, எல்லா தொலைக்காட்சியிலும் தோன்றி தன்னிலை விளக்கம் கொடுப்பதை தவிர்த்திருக்கலாம். வெளிநாடுகள் போல நம் நாட்டில் மக்கள் தேர்ந்தெடுத்து படம் பார்ப்பதில்லை. படம் பார்க்கவேண்டுமானால் குடும்பத்துடன்தான் செல்கிறார்கள். இதை இயக்குனர்கள் மனதில் வைத்தால் நல்லது. "தமிழ் சினிமாவில் இதுமாதிரி படம் வந்ததே இல்லையா?" என்று கேட்பவர்களுக்கு, இப்படி படம் வந்திருக்கிறது. அதனால் இதையும் வரவேற்கவேண்டும் என்று சொல்வது தவறில்லையா? மொத்தத்தில் இயக்குனர் எப்படி வேண்டுமானாலும் படம் எடுப்பார். அதை தேர்வு செய்வதும் ஒதுக்குவதும் நம் விருப்பம். அதை விடுத்து மோதிக்கொண்டிருப்பதை பார்த்தால் கோபம் அல்ல எரிச்சல்தான் வருகிறது.
வழக்கறிஞர்கள் சாலை மறியல்
நேற்று ஒரு செய்தி. அதாவது சொந்த பிரச்சனையில் போலீஸ்காரர் ஒருவர் வழக்கறிஞர் ஒருவரை தாக்கி விட்டார். இது இரண்டு தனி மனிதர்களின் பிரச்சனை. ஆனால் இதை வக்கீல்கள் காவல்துறையினர் பிரச்சனை ஆக்கி, வக்கீல்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். நம் சமுதாயத்தில் போலீஸ்காரர்களை தைரியமாக தட்டி கேட்பவர்கள் வக்கீல்களே. ஆனால் எதற்கெடுத்தாலும் இப்படி தெருவுக்கு வருவது, தன்னை சமூகத்தில் ஒரு பெரிய ஆள் என்று காட்டிக்கொள்வதற்கு செய்வது போலவே இருக்கிறது. தற்போதெல்லாம் சட்டக்கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே, சாதி சாயமும், அரசியல் சாயமும் பூசிக்கொள்ளும் வக்கீல்கள்தான் நாளை சட்டம் என்னும் இருட்டறையில், மெழுகுவர்த்தியாக இருக்கபோகிறார்கள் என்று நினைக்கும்போது கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.
கோபத்துல அப்படியே போய்டாதீங்க...
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
14 comments:
வடை
சூடான விடயங்களை அலசி இருக்கீங்க..நல்லா இருக்கு பாஸ்..
உங்கள் கோபங்களில் நியாயம் இருக்கிறது நண்பரே....அடிக்கடி இப்படி கோபப்படுங்க....
நம்ம கடையில் இன்று
என்னவா பீட்டர் விடுறாங்க இந்த பசங்க....
"கிரிக்கெட் போட்டிகளை பார்த்தே தீருவேன்!" என்று அடம்பிடிக்கும் ரசிகர்களை கண்டால் இன்னும் கோபம் வருகிறது. ////உங்கள் கோபம் மிகச்சரியானது நண்பரே...
@மைந்தன் சிவா
நன்றி பாஸ்...
@ரஹீம் கஸாலி
நன்றி நண்பரே. இங்கே வீடியோ ஓபன் ஆக வில்லை. மாலையில் பார்க்கிறேன்
@வேடந்தாங்கல் - கருன்
நன்றி நண்பரே
கோபப்பட வேண்டியவற்றுக்குக் கோபப் படாவிட்டால் மனிதன் வெறும் களிமண்தான்!ரௌத்ரம் பழகத்தான் வேண்டும்!
நன்று!
யாருக்குமே கோபத்தை வரவழைக்கிற விஷயங்கள்தான் இவை.
கோபங்களில் நியாயம் இருக்கிறது நண்பரே
குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியவில்லை, உங்களின் அனைத்து கருத்தோடும் ஒத்து போகிறேன் பாலா, அருமையான பதிவு..
//ஒரு கொண்டாட்டத்தை அனுபவிக்க வேண்டுமானால் தண்ணி அடிக்கவேண்டும்//
இல்லையா பிண்ண... ஹிஹி
Jokes apart, உங்கள் கோபம் புரிகிறது. நம்மால் என்ன செய்ய முடியும்... :(
இவ்வளவு நடந்த பிறகும், இவரை ஒரு மிலிட்டரி வீரர் ரேஞ்சுக்கு உருவகப்படுத்துவதைக்கண்டு கோபம் வருகிறது//
இது காமெடி பீசு தல
நியாயமான கோபம தானே
வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.
Post a Comment