விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

இது விளம்பரம் அல்ல....

March 11, 2011

கோபத்தை அடக்கலாம் வாங்க....சராசரியாக எல்லா மனிதருக்குமே இருக்கும் ஒரு குணம், கோபம். இந்த உலகில் கோபப்படாத மனிதரே இருக்கமுடியாது. அப்படி கோபம் இல்லாவிட்டால் அவர் மனிதராகவே இருக்கமுடியாது. எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படும் முறையில்தான் வித்தியாசம்.சிலபேர் அழுவார்கள், சிலபேர் கையை பிசைவார்கள், பல்லைகடிப்பார்கள், கையை ஓங்கி குத்துவார்கள் (சுவற்றிலோ அல்லது அடுத்தவர் மூக்கிலோ), காச் மூச்சென கத்துவார்கள், கையில் கிடைத்ததை போட்டு உடைப்பார்கள். சரியோ தவறோ, கோபப்படுவது அவ்வளவு நல்ல குணம் அல்ல. ஆனால் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது? எனக்குத்தெரிந்த சில ஐடியாக்களை சொல்கிறேன். பெரும்பாலும் சொந்த அனுபவத்தில் இருந்தே சொல்கிறேன்.கோபத்தின் படிநிலைகள் 

கோபம் என்பது பலவகைப்படும். நமக்கு பிடிக்காத அல்லது நாம் எதிர்பார்க்காத ஒன்று நடந்து விட்டாலோ, நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்காமல் போனாலோ, நமக்கு வரும் ஏமாற்றம்தான் ஒருசில நொடிகளில் கோபமாக உருவெடுக்கிறது. அது அளவு கடந்து போகும்போது ஆத்திரமாக மாறுகிறது. அதை வெளிப்படுத்த முடியாமல் போகும்போது ஆற்றாமை ஆகிறது. மனதின் உள்ளே புதைக்கப்பட்டு வஞ்சமாக உருவெடுக்கிறது. வஞ்சத்தையும் தீர்க்க முடியாவிட்டால் மனசோர்வை ஏற்படுத்தி சுயபச்சாதாபமாக ஆகிவிடுகிறது. இதுதான் ஹிஸ்டீரியா உட்பட பல மனநோய்களின் ஆரம்பம். இவற்றுள் ஆரம்பத்திலேயே கோபத்தை கட்டுப்படுத்திவிடுவது நலம். ஒவ்வொரு நிலையிலும் அதற்கேற்ற தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதில்லை.


கோபத்தை அடக்கலாமா?

கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள். இதன் அர்த்தம் கோபத்தை அடக்குவதல்ல. கோபத்தை கையாள்வது ஆகும். கோபம் என்பது நெருப்புத்துண்டம் மாதிரி. அதை அடக்குகிறேன் என்று மனதில் போட்டு அழுத்தினால் மேலே கூறிய படிநிலைகளில் அது உருமாறிக்கொண்டே வரும். ஆகவே மனதில் இருக்கும்வரை அந்த நெருப்புத்துண்டு காயம் ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கும். கோபத்தை கையாள்வது என்பது அதனை சரியான பாதையில் திருப்பி விடுவது அல்லது அதன் வேகத்தை லாவகமாக குறைப்பது. கிரிக்கெட்டில் வேகமாக வரும் பந்தை பிடித்தபின் வீரர்கள் கையை பின்னுக்கிழுத்து, சில அடி உருள்வது பந்தின் வேகத்தை குறைத்து அதன் தாக்கம் (impact) கையில் ஏற்படாமல் தடுக்கவே. அதே முறையை நாம் கோபப்படும்போதும் பின்பற்றவேண்டும்.


கோபத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் 

இந்த வழிமுறைகளில் பலவற்றை நான் பின்பற்றி பலன் கண்டிருக்கிறேன். தொடக்கத்தில் ரொம்ப கஷ்டமாக இருக்கும். பிறகு பழகிவிடும்.

தற்காலிகமாக குறைக்க

1. அந்த இடத்தை விட்டு நல்ல காற்றோட்டமான இடத்துக்கு சென்று விடுங்கள். அந்த நிகழ்வை பற்றி நினைக்காமல் நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். இது உங்களை சாந்தப்படுத்தும்.

2. எனக்குத்தெரிந்து ஒரு மனிதனின் முகம் மிக அசிங்கமாக இருப்பது அவன் கோபப்படும்போதுதான். ஆகவே கோபம் வந்தால் உடனே கண்ணாடியில் முகத்தை பாருங்கள் (கண்ணாடி கைக்கெட்டும் தூரத்தில் இல்லாமல் இருப்பது நலம்). அசிங்கமான நம் முகத்தை பார்க்கும்போது நமக்கு சிரிப்பு வரும். அதன்பின் எப்போது கோபம் வந்தாலும் நம் முகம்தான் ஞாபகத்துக்கு வரும்.

3. கோபத்தில் தொலைவில் இருக்கும் யாரையாவது தாக்கவேண்டும், அல்லது திட்ட வேண்டும் என்றால், அதை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். சாயங்காலம் திட்டலாம், நாளைக்கு கச்சேரியை வைத்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுங்கள். தள்ளிப்போட்ட எந்த காரியமும் உருப்பட்டதில்லை.

4. உங்கள் மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள். வலுக்கட்டாயமாக இல்லாமல், இயல்பாக கேட்க ஆரம்பியுங்கள். இசை கேட்க விருப்பம் இல்லை என்றால் கார்டூன் சேனல் பாருங்கள்.

5. குழந்தைகளோடு உரையாடுங்கள். கோபம் பறந்துவிடும். இல்லை இரண்டு குழந்தைகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள். பிறகு உங்களுக்கு அதே போலத்தானே நாமும் செய்கிறோம் என்று வெட்கபடுவீர்கள்.

6. ஜப்பானியர்கள் பொதுவாக கோபத்தை குறைக்க தலையணையை அடித்து துவைப்பார்களாம். ஆகவே தனக்கு காயம் ஏற்படுத்தாத இந்த முறையை பின்பற்றலாம்.


நிரந்தரமாக குறைக்க 

1. கோபத்தின் பெற்றோர் எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்தான். இவற்றை களைந்து விட்டால் கோபம் வருவது குறையும். எந்த ஒரு விஷயத்தோடும் மிகுந்த ஈடுபாடு காட்டாமல் தாமரை இலை நீர்போல இருப்பது சிறந்தது. கணவர் சினிமாவுக்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்ப்போம். கடைசி நேரத்தில் அவர் இன்னிக்கு மீட்டிங் என்று காரணம் சொல்வார். சினிமாக்கு போக அப்படி ஒன்று அவசியம் இல்லை என்ற எண்ணம் வந்தால் கோபம் வருவது குறையும்.

2. யாராவது தவறு செய்தால் அதை ஏன் செய்தார்கள் என்று ஆராயவேண்டும். அந்த இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்வோம் என்று நினைத்து பார்க்கவேண்டும்.

3. இதற்குமுன் இதே மாதிரி ஒரு விஷயத்தில் நாம் கோபப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகளை நினைத்து பார்க்கவேண்டும். 

4. கோபம் ஏற்படுவதற்கு முன்பும் பின்பும் உங்கள் உடலில் உண்டாகும் மாற்றங்களை கவனியுங்கள். கோபம் வந்து சில நிமிடங்களில் மிக களைப்பாக இருப்போம். பசி இருக்காது. அடிவயிற்றில் நெருப்பு எரிவது போல உணர்வோம். அடுத்தவர் மீது கோபப்பட்டு நாம் உடல்நிலையை கெடுத்துக்கொள்ளலாமா?

5. எல்லோருக்கும் குறைகள் உண்டு குற்றங்கள் உண்டு. மனிதர்களின் குறைகளை பார்க்காமல் அவர்களின் நல்ல குணங்களை பாருங்கள். தவறு செய்தால் உணர்த்துங்கள். கோபத்தால் ஒருவரை திருத்த முடியாது. பயமுறுத்தத்தான் முடியும். அவர்கள் மறுபடியும் அதே வேலையை செய்யும்போது பதட்டத்தில் இன்னும் அதிக தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது.


மேலே சொன்ன வழிமுறைகளை கடைபிடிப்பது கொஞ்சம் கடினம்தான். ஆனால் பின்பற்றி அதன் பலனை பார்த்தபின் ஒரு முடிவுக்கு வாருங்கள். கோபத்தின் விளைவுகள் மிக மோசமானவை. ஒரு தந்தை மகனிடம், “உனக்கு கோபம் வரும்போதெல்லாம் அந்த சுவற்றில் ஒரு ஆணி அடி. அது தவறு என்று நினைக்குபோது ஆணியை பிடுங்கி வீடு” என்றாராம். ஒரு வருடம் கழித்து மகன் சாந்தமானவன் ஆகிவிட்டான். ஆனால் சுவர் முழுக்க ஓட்டைகள். கோபத்தின் விளைவுகள்தான் அது. 

அதுசரி கோபமே படாமல் இருந்தால், சூடு சொரணையே இல்லாத ஜடம் ஆகி எல்லோருடைய கேலிக்கும் ஆளாகி, இளிச்சவாயன் என்று பேரெடுத்து விடுவோமே? கோபம் அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும். சரியான இடத்தில் கோபத்தை காட்ட வேண்டும். காந்தியை பிடித்து கீழே தள்ளிய அந்த ரயில்வே அதிகாரியிடம் கோபத்தை காட்டி இருந்தால் அன்றே அந்த பிரச்சனை முடிந்திருக்கும். ஆனால் அவர் கோபத்தை ஆங்கில அரசிடம் காட்டினார். அதுதான் அர்த்தமுள்ள கோபம். மனிதநயம் என்று ஒன்று வந்துவிட்டால், தேவை இல்லாத கோபத்தை தவிர்த்து விட்டு உங்களை சுற்றி ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கமுடியும். 


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 


34 comments:

சக்தி கல்வி மையம் said...

நன்றி நண்பரே ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி ...

சக்தி கல்வி மையம் said...

யாராவது தவறு செய்தால் அதை ஏன் செய்தார்கள் என்று ஆராயவேண்டும் ///நேற்று என்னுடைய பிளாக்கை யாரோ டெலிட் செய்துவிட்டார்கள்.. ரொம்ப கஷ்டப்பட்டு அதை ரிகவரி செய்தேன்...இதற்கு கோபம் வரக்கூடாதா?

தமிழ் 007 said...

//வேடந்தாங்கல் - கருன் கூறியது...

யாராவது தவறு செய்தால் அதை ஏன் செய்தார்கள் என்று ஆராயவேண்டும் ///நேற்று என்னுடைய பிளாக்கை யாரோ டெலிட் செய்துவிட்டார்கள்.. ரொம்ப கஷ்டப்பட்டு அதை ரிகவரி செய்தேன்...இதற்கு கோபம் வரக்கூடாதா?//

கொக்க! மக்கா!

இந்த மாதிரி வேலை பண்ணுற ஆளுங்கள ஊமக்குத்தா குத்தி விட்டிரணும்.

தமிழ் 007 said...

//6. ஜப்பானியர்கள் பொதுவாக கோபத்தை குறைக்க தலையணையை அடித்து துவைப்பார்களாம். ஆகவே தனக்கு காயம் ஏற்படுத்தாத இந்த முறையை பின்பற்றலாம்.//

சூப்பர்!

Unknown said...

கோபத்தை அடக்க எளிய வழி தண்ணியில மிதக்குறதுதான்..அந்த தண்ணி இல்லைங்க

Pavi said...

நல்ல பயனுள்ள தகவல் பாலா

Unknown said...

நன்றாக அலசியுள்ளீர்கள் பாலா? ஆனால் நடைமுறைக்கு உடனடியாக சாத்தியம் ஆகுமா என தெரியவில்லை, முயற்சித்து பார்க்கிறேன், நன்றி

பாலா said...

@வேடந்தாங்கல் - கருன்

தாமரை இலை தண்ணீரை போல இருக்க வேண்டியதுதான். வேறென்ன வழி. நன்றி நண்பரே...

பாலா said...

@தமிழ் 007

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

Unknown said...

நமக்கு கோபமே வராதுங்க

பாலா said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

அதானே அந்த தண்ணி இன்னும் கோபத்தை அதிகப்படுத்ததானே செய்யும்.

பாலா said...

@Pavi

மிக்க நன்றி பவி

பாலா said...

@இரவு வானம்

எல்லாவற்றையும் பின்பற்ற முடியாது. ஆனால் தேவைக்கேற்றவாறு பின்பற்றலாம். இது அனுபவம். வருகைக்கு நன்றி நண்பரே....

Unknown said...

கலைஞரின் காமெடிகளை,ஒரு மணி நேர உண்ணாவிரத காட்சிகளை அப்படியே மனதில் கொண்டுவந்தால் எந்த கோபமும் பஞ்சாய் பறக்கும். வடிவேல் காட்சிகள் போரடிக்கும் பட்சத்தில்.

பாலா said...

@நா.மணிவண்ணன்

நீங்க நம்ம ஜாதி.

பாலா said...

@கே. ஆர்.விஜயன்

சரியா சொன்னீங்க

ரஹீம் கஸ்ஸாலி said...

முயற்சி பண்ணிருவோம்

Unknown said...

எனக்கு கோபம் கோபமா வருதுங்க....

Anonymous said...

நல்ல பதிவு பாலா. சொன்ன அட்வைஸ்களும் மிக நன்று! :)

Unknown said...

ம்ம்ம்.. முயற்சி பண்ணிப் பார்ப்போம்..

நன்றி..

சென்னை பித்தன் said...

கோபம் நம்மைக் கொல்லும் முன்,நாம் கோபத்தைக் கொல்லத்தான் வேண்டும்.பயனுள்ள பதிவு.

Anonymous said...

அருமையான கருத்துக்களை சொல்லியுள்ளீர்கள். மிகுந்த நன்றி.

தாங்கள் சொன்ன உத்திகள் நல்ல பலன் தரக் கூடியவை. ஆனால் சில உத்திகள் கோபத்தை கட்டுப் படுததுவதற்கான உத்திகள். அவை பலன் அளிக்குமா என ஆராய வேண்டியுள்ளது.

ஏனென்றால் கோபத்தின் இயலபை நாம் புரிந்து கொண்டால் இதற்கு விடை கிடைக்கும்.

கோபம் என்பது ஒரு ஆற்றல். ஒரு தூண்டப் பட்ட ஆற்றல். திடீரென கிளம்பும் அந்த ஆற்றல் நம் கட்டுப் பாட்டை மீறி, நம்மை ஆட் கொண்டு
எதிராளியை சொல்லாலோ செயலாலோ தாக்க தூண்டுகிறது. கோபத்தின் மூலம் நாம் செய்யும் தவறு நம்மையும் எதிராளியையும் பாதிக்க வைக்கிறது.

இதனைத் தவிர்ப்பதற்காக கோபத்தைக் கட்டுப் படுதத்லாம். ஆனால் அதிலும் பிரச்சனை உள்ளது. ஏனெனில் கட்டுப் படுத்தும் போது அந்த கோப ஆற்றல் வெளியேறுவதில்லை. மாறாக தற்காலிகமாக பதுங்கியுள்ளது. ஏதாவது ஒரு நேரத்தில் மீண்டும் வெளிப்படலாம்.

ஆகவே அந்த கோப ஆற்றலை படை மாற்றம் செய்வது தான் சாலச் சிறந்தது என்று தோன்றுகிறது.

நீஙகள் சொன்ன ஜப்பானிய வழி முறை அந்த வகை சார்ந்ததே.

மேலும் கோபத்தை கிளையிலேயே, ஆரம்பத்திலேயே வெட்டி விட்டால் அத்னை தவிர்ப்பது எளிது.

அதற்கு விழிப்புணர்வுடன் வாழப் பழக வேண்டும். தியானம் செய்து வர வேண்டும்.

நல்ல பதிவுக்கு நன்றி.

தொடர்ந்து சிந்திப்போம்.

Chitra said...

பயனுள்ள பல குறிப்புகள் கொண்ட பதிவு. சிந்திக்கவும் பல கருத்துக்கள் சொல்லப்பட்டு இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிங்க.

ப.கந்தசாமி said...

மிகவும் பயனுள்ள பதிவு.

பாலா said...

@ரஹீம் கஸாலி

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே...

பாலா said...

@மைந்தன் சிவா

ரொம்ப கோபப்படாதீங்க. உங்க கோபத்துக்கு என்ன காரணம் பாஸ்

பாலா said...

@Balaji saravana

மிக்க நன்றி பாலா

பாலா said...

@பதிவுலகில் பாபு

பண்ணுங்க பண்ணுங்க. மிக்க நன்றி

பாலா said...

@சென்னை பித்தன்

உண்மை. வருகைக்கு நன்றி நண்பரே

பாலா said...

@பெயரில்லா

கோபத்தை அடக்குவது மிக தவறு. தற்காலிகமாக குறைக்கும் வழியையே சொல்லி இருக்கிறேன்.

பெயருடனே வரலாமே?

பாலா said...

@Chitra

நன்றிங்க...

பாலா said...

@DrPKandaswamyPhD

மிக்க நன்றி சார்.

சுதா SJ said...

பயன் உள்ள பதிவு பாஸ்
நன்றி

yasodharansps@gmail.com said...

தேடி வந்தோர்கு நல்ல பயனுள்ள தகவல் thanks

Related Posts Plugin for WordPress, Blogger...