விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 18, 2011

என்னடா நடக்குது இங்க? - நான்தான் அவுட்டா?


நாடோடிகள் படத்தில் சசிக்குமாரின் நண்பருக்கு அவர்முன்னால் நடக்கும் எல்லாமே தெரியும். அதிர்ச்சி அடைவார். ஆனால் சசிகுமார் எதுவும் தெரியாதது போல இருப்பார். இவர் கடைசியில் காமெடி பீசாகி விடுவார். அப்போது சொல்லும் வார்த்தைதான் இது. நாட்டில் நடக்கும் சில விஷயங்களை பார்த்தாலும் அப்படித்தான் சொல்லத்தொன்றுகிறது.


அம்மா போட்ட மாஸ்டர் பிளான் 

முன்பெல்லாம் நாட்டில் நடக்கும் அரசியல் கூத்துக்களை கொஞ்சம் மிகைப்படுத்தி ஆர் கே செல்வமணி போன்ற இயக்குனர்கள் சினிமாவாக எடுப்பார்கள். ஆனால் அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் சுவாரசியமான பல விஷயங்கள் அரங்கேறி வருகின்றன. நேற்றுவரை வெற்றி கூட்டணி என்று வர்ணிக்கப்பட்ட அதிமுக-தேமுதிக-மதிமுக(!?)  உள்ளிட்ட கூட்டணி திடீரென்று சிதறி விடும் நிலையில் இருக்கிறது. அம்மா எப்பவுமே என்ன பண்ணுவாங்கன்னு சொல்லவே முடியாது. ஆனால் நேற்று என் நண்பன் சொன்ன ஒரு விஷயம் வித்தியாசமாக இருந்தது. "திமுக என்பது மிகப்பெரிய தொல்லை. அதை தேர்தலில்தான் சரிக்கட்ட முடியும். ஆனால் காங்கிரஸ் உள்பட சில சில்வண்டு கட்சிகளை அதற்கு முன்பாகவே காலி செய்து விடவேண்டும். முக்கியமாக காங்கிரஸ், தேமுதிகவை சேரவே விடக்கூடாது. என்ன பண்ணலாம்? தேமுதிகவை நம் பக்கம் வரவைப்போம். வேறு வழி இல்லாமல் காங்கிரஸ் திமுகவுடன் இணையும். பிறகு வைப்போம் கேப்டனுக்கு ஆப்பு!" என்று நினைத்திருப்பாரோ? தற்போது இருக்கும் நிலையில் தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் மூன்றாவது அணியால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை குறைக்க முடியுமே தவிர ஜெயிக்க முடியாது. இதில் திமுக தரப்பு கொண்டாட்டமாக இருப்பதாக தகவல்.

அம்மாவுக்கு பிடித்த திரைப்படம் என்னவாக இருக்கும்? த்ரீ இடியட்ஸ்?


சும்மா சீன் போடாதீங்க

கொஞ்ச காலத்துக்கு முன் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில் "பொதுவாக் இந்திய அணி ஒரு உலககோப்பைத்தொடர் முடிந்த பின் நல்ல பார்முக்கு வரும். சரியாக அடுத்த உலகக்கோப்பை தொடக்கத்தில் பார்மை இழந்துவிடும்." என்று அதில் சொல்லி இருந்தேன். முதலில் பவுலின்கில் சொதப்பினார்கள். போகப்போக பேட்டிங்கிலும் சொதப்ப ஆரம்பித்து விட்டார்கள். ஏதோ இங்கிலாந்து புண்ணியத்தில் காலிறுதியில் நுழைந்தால் கூட அதற்கு மேல் முன்னேறமுடியாது என்றே தோன்றுகிறது. வழக்கம்போல பாகிஸ்தான் அல்லது இலங்கையுடன் இறுதி போட்டியில் மோதி ஆஸ்திரேலியா சாம்பியன் ஆகிவிடும் போலிருக்கிறது. வழக்கம்போல அதிக ரன் குவித்த சச்சினுக்கு கார் கொடுப்பார்கள். 2015இல் அப்போதைய கேப்டன் பேட்டி கொடுப்பார் "இது சச்சினுக்கு கடைசி உலகக்கோப்பை. ஆகவே அதை அவருக்கு பரிசளிப்போம்." என்று.

இதில் கேப்டன் தோனி வேறு நிறைய காமெடி செய்து வருகிறார். ஒரு மனிதனுக்கு நம்பிக்கை இருக்கலாம். ஆனால் மூட நம்பிக்கை இருக்கலாமா? இன்னுமா இவர் நெக்ரா மற்றும் பியூஸ் சாவ்லாவை நம்புகிறார்? முதலில் ஏதோ ஒரு நம்பிக்கையில் இவர்களை தேர்வு செய்து விட்டார்கள். தற்போது அதை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், வரட்டு கவுரவத்துக்காக தொடர்ந்து இவர்களை ஆட வைப்பது போல தோன்றுகிறது. சரி அஷ்வின் இந்தியாவை சுற்றி பார்த்ததே இல்லையா? அவரை ஏன் அணியில் சேர்த்தார்கள்? குறைந்தபட்சம் ஏதாவது ஒரு கத்துக்குட்டி அணியுடனான மேட்சிலாவது அவரை ஆடவைத்து அவரின் திறனை சோதித்திருக்கலாமே? இனி இருப்பது ஒரே ஆட்டம். அதில் கண்டிப்பாக இவரது "நம்பிக்கை நட்சத்திரங்கள்"தான் இருப்பார்கள். தப்பி தவறி ஜெயித்து விட்டால் பின்னர் அணியை மாற்றாமலேயே முன்னேறுவார்கள். எல்லா இந்திய கேப்டன்களுக்கும் பிடிக்கும் ஒரு கிறுக்கு தற்போது தோனியை பிடித்து விட்டது. "யப்பா! கம்பீர், ரெய்னா, கொஹ்லி ரெடியாவுங்கப்பா. கேப்டன் வேலைக்கு ஆள் எடுக்க போகிறார்கள்." 

அதுசரி, "பியூஸ் சாவ்லாவுக்கு இன்னும் பிராக்டிஸ் தேவை." என்று தோனி சொல்கிறாரே, எதற்கு பிராக்டிஸ் தேவை? அடுத்த மாதம் ஐபிஎல்லில்  விளையாடவா? அதற்காகத்தான் உலகக்கோப்பையில் விளையாடி பயிற்சி பெறுகிறாரோ?


ஜப்பான் சோகம்


ஜப்பானில் நிகழ்ந்துள்ள இயற்கை பேரழிவில் இருந்து மக்கள் விரைவில் மீண்டு பீனிக்ஸ் போல எழுச்சி பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன். 
பொதுவாக ஜப்பானுக்கு நிலநடுக்கமும், சுனாமியும் புதிது கிடையாது. ஆனால் இயற்கை இப்படி எதிர்பார்க்காத நேரத்தில் மிக கடினமான பாடங்களை எளிதாக நடத்தி விடுகிறது. "சுண்டைக்கா பசங்களா. நீங்களா உலகை ஆளபிறந்தவர்கள்?" என்று மனிதனின் அகந்தையை உடைத்து விடுகிறது. இதில் இயற்கை சீற்றம் பாதி என்றால் மனிதனின் ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகள் மீதி. அணு உலை வெடித்து கதிரியக்கம் வெளியேறுகிறதாம். ஒரு ஹிரோஷிமா நாகசாகியையே நம்மால் இன்னும் மறக்க முடியவில்லை. தற்போது உலக நாடுகள் வைத்திருக்கும் அணு குண்டுகளின் சக்தி அதை விட ஆயிரம் மடங்கு பலம் வாய்ந்தவையாம். என்னதான் மனிதன் விஞ்ஞானம் மூலம் இந்த அண்டத்தையே அளந்தாலும், அதன் சூட்சமத்தை மட்டும் மனிதனால் புரிந்துகொள்ளவே முடியாது. அடுக்கு மாடி கட்டிடங்கள், கார்கள், லாரிகள், கப்பல்கள் என்று நொடிப்பொழுதில் சொத்து என்று நினைத்து மனிதன் சேர்த்துவைத்த அனைத்தும் இந்த மண்ணோடு மண்ணாகிப்போனது. இயற்கை தொடர்ந்து மனிதனுக்கு உணர்த்தி வருவது ஒன்றே ஒன்றுதான். "எல்லாம் ஒருநாள் இந்த மண்ணுக்குள் சென்றுவிடும். உன்னையும் சேர்த்துத்தான்."

பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
"மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று... 
இறைவன் சிரிப்பதுண்டு பாவம் மனிதனென்று..."


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

27 comments:

Unknown said...

மசாலா மிக்சர் நல்லா இருக்கு

Unknown said...

ஜப்பான் மக்களுக்கு தலைவர்ரஜினி இரங்கல் கடிதம் அனுப்பி இருக்காராம்

Unknown said...

அரசியல் ஆட்டம் இன்னிக்கு முடிவு தெரியும்

Unknown said...

அரசியலும் கிரிக்கெட்டும் ஒன்னு பாஸ், எப்ப என்ன பண்றானுங்கன்னே தெரிய மாட்டேங்குது, ஜப்பான் மக்கள் விரைவிலேயே எழுந்து வருவார்கள் அவர்களின் கடின உழைப்பினால்

சென்னை பித்தன் said...

மூன்று முத்துக்கள்!

சக்தி கல்வி மையம் said...

அரசியல் பதிவில் உங்க கருத்து சரியா பார்ப்போம்..

சக்தி கல்வி மையம் said...

அரசியல் சதுரங்கம் இன்னிக்கு முடிவு தெரியும்

முத்துசிவா said...

என் கணிப்பின் படி, அஷ்வினை ஒரு surprise package ஆக பதுக்கி பதுக்கி வைத்திருக்கிறார்கள். ஸ்ரீலங்கா மெண்டிஸை லீக் போட்டிகளில் களமிறக்காமல், நேரடியாக இறுதி போட்டியில் களமிறக்கி இந்தியாவை கவிழ்த்தது போல, நாக் அவுட் போட்டிகளில் இறக்கலாம் என்ற யூகமாக இருக்கும். தோணிக்கு பியூஷ் சாவ்லாவை விட அஷ்வின் மீது நம்பிக்கை உண்டு. Quarter final Knock out ல் கண்டிப்பாக அவருக்கு இடம் அளிக்கப்படும் என்பது என் கணிப்பு. சென்னை போட்டியில் "மண்ணீன் மைந்தன்" என்பதற்காக வாய்ப்பு அளிக்கப்படலாம். ஆனால் அதுவும் சந்தேகம் தான்.

r.v.saravanan said...

நல்லா இருக்கு

r.v.saravanan said...

நல்லா இருக்கு

பாலா said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

நன்றி நண்பரே. ரஜினியின் இந்த செயலையும் விமர்சிக்கிறேன் என்று தூற்றி விடுவார்களோ என்று தோன்றுகிறது.

பாலா said...

@இரவு வானம்

இன்று காலையில் இருந்தே பல அதிரடி திருப்பங்கள் நடந்து வருகின்றன. பார்க்கலாம்.

ஜப்பான் மக்கள் கடின உழைப்பாளிகள். மீண்டு வருவார்கள். எனது கருத்தும் இதுதான்.

பாலா said...

@சென்னை பித்தன்

வருகைக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

நம்ம நிலைமையை பாத்தீங்களா? வர வர அரசியல் கூட கிரிக்கெட் மேட்ச் பாக்குற மாதிரி ஆகி விட்டது.

பாலா said...

@முத்துசிவா

உங்கள் கணிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும். ஆனால் அஷ்வின் பார்மில் இருக்கிறாரா என்று தெரியாமல் நாக் அவுட்டில் களமிறக்குவது ரிஸ்க்தானே. ஆகவே சென்னையில் இறக்கி பார்த்து விடுவது நல்லது.

பாலா said...

@r.v.saravanan

நன்றி நண்பரே...

Unknown said...

ஆமா பெப்சிக்கு தானே அல்லாரையும் அம்மணமாக்கிய பெருமை சேரும்??.ம்ம் அருமை

தப்சி பத்தி சி.பி எழுதக்கூடாது!!
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_18.html

பாலா said...

வருகைக்கு நன்றி பாஸ்

சக்தி கல்வி மையம் said...

இன்னும் முடிவு தெரியல நண்பா..

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

அப்போ நாளைக்கும் நல்லா பொழுது போகும் அல்லவா?

Unknown said...

ஜப்பானிய மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்..
இந்த துயரங்களிலிருந்து நிச்சயம் அவர்கள் மீண்டும் மீண்டு வருவார்கள்..

Unknown said...

இந்த பதிவை தொகுத்தவிதம் அருமை. எல்லா தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் வடிவமைத்துள்ளீர்கள்..

பாலா said...

@பாரத்... பாரதி...

ஜப்பான் மக்கள் நிச்சயம் மீண்டு வந்துவிடுவார்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

Anonymous said...

ம்.. ம்.. மிக்ஸர் ஜூஸ்! :)

எல் கே said...

@பாலா

முத்து சிவா சொன்னது சரி. அஷ்வின்னை பொருத்தவரை அதிக மனவலிமை உள்ளவர். எத்தகைய நிலையிலும் நன்கு பந்து வீசுபவர். அதனால் அவரை நாளையப் போட்டியில் எதிர்பார்க்கலாம்

பாலா said...

@ Balaji saravana

வாங்க பாலா வருகைக்கு மிக்க நன்றி.

பாலா said...

@எல் கே

நீங்க சொன்னது நடந்தா நல்லா இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...