விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

February 15, 2011

தற்கொலை செய்து கொள்ள நினைத்ததுண்டா?


இந்த மாதம் நிறைய திருமண முகூர்த்தம் போலிருக்கிறது. நமது நண்பர்கள் பலருக்கும் இது கல்யாண சீசன் என்பதால் அடுத்தடுத்து திருமண விழாக்கள். வெளியூர் பயணங்கள். இணையத்தில் இணைந்திருக்கும் நேரம் மிக குறைவாகவே இருக்கிறது. சரி விஷயத்துக்கு வருவோம். மிதமான கருத்துக்களையே வெகு காலமாக எழுதி வந்ததால் கொஞ்சம் கனமான பதிவை எழுத வேண்டும் என்ற எண்ணத்திலேயே எழுதுகிறேன். இது ஆராய்ச்சி கட்டுரை அல்ல. என் சொந்த கருத்துக்களின் வெளிப்பாடே.



சமீபத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இரண்டு மாணவிகளின் தற்கொலை சம்பவங்களை யாரும் மறக்கமுடியாது. இந்த விஷயத்தில் வாதி, அல்லது பிரதிவாதி என்கிற இருபக்கமும் ஆதரவு தெரிவித்து பலர் பதிவெழுதி விட்டதால் நான் அதை பற்றி பேச போவதில்லை. ஒரு குழந்தைக்கு தற்கொலை எண்ணம் வருகிறதென்றால் அதற்கு முழு காரணமும் அதன் பெற்றோர்தான் என்பேன். முன்பெல்லாம் தலைமுறை இடைவெளி என்பது இருபதாண்டுகள் இருந்தது. நான் மாணவனாக இருந்த காலத்தில் பத்தாண்டுகள் ஆனது. இப்போதெல்லாம் அது ஐந்தாண்டுகள் ஆகி விட்டது. அதாவது மாணவர்களின் மனநிலை மாற்றங்களை சொல்கிறேன். எனக்கும் என்னை விட ஐந்து வயது இளையவர் ஒருவருக்கும் கூட தலைமுறை இடைவெளி இருக்கிறது. அவர்களின் எண்ண ஓட்டங்கள் நம்மை விட புத்திசாலித்தனமாக இருக்கின்றன, துடுக்குத்தனமாக இருக்கின்றன. இவை மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விஷயம் என்றால், மனோதிடம் குறைந்து கொண்டே போகின்றது. இது வருந்தவைக்கும் செய்தி. நீங்கள் எப்பொழுதாவது தற்கொலை செய்ய நினைத்ததுண்டா?


நான் நினைத்திருக்கிறேன். அதன் விளிம்பு வரை சென்றிருக்கிறேன். சம்பந்தப்பட்ட அந்த நாளில் மதியம் பள்ளிக்கு மட்டம் போட்டாகிவிட்டது. இரவு வரை ஊர் சுற்றி விட்டு, நடு இரவில் யாருக்கும் தெரியாமல் மாண்டு விடலாம் என்பது திட்டம். மதியத்தில் இருந்து உருகி உருகி ஒரு கடிதம் வேறு எழுதினேன். முதலில் ஒன்றும் தெரியவில்லை. நேரம் செல்ல செல்ல பயம் கவ்வியது. இன்னும் சிறிது நேரத்தில் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என்று நினைத்தாலே குலை நடுங்கியது. கடைசி நிமிடத்தில் ஏதோ பைத்தியம் பிடித்ததை போல உணர்ந்து அலறி அடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். சரி எதற்கு தற்கொலை என்ற காரணம் சொல்லவில்லையே? பன்னிரண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைவு.


மதிப்பெண் குறைவு என்றவுடன் ஏதோ பொது தேர்வில் கோட்டடித்து விட்டேன் என்று எண்ணாதீர்கள். பதினொன்றாம் வகுப்பு வரை நான் வகுப்பில் முதல் மாணவன். பன்னிரண்டாம் வகுப்பில் காலாண்டு தேர்வில் எல்லா பாடத்திலும் பார்டர் (ஒன்றிலும் பெயில் ஆகவில்லை). ஆனால் இத்தனை ஆண்டுகளாக நான் சாதித்து வந்த இடத்தை விட்டு கீழிறங்கி விட்டதும் மனம் தாளவில்லை. காலாண்டிலேயே இப்படி என்றால் முழு ஆண்டில் பெயில் ஆகி விட்டால் என்ன செய்வது என்று பயந்து விட்டேன். என்னை நம்பிக்கையோடு பள்ளிக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்களுக்கு ஏதோ துரோகம் செய்து விட்டதை போன்ற நினைப்பில் நான் எடுத்த முடிவு அது.


கேட்பதற்கே பைத்தியக்காரத்தனமாக இருக்கின்றதல்லவா? எனக்கும் இப்போது அப்படித்தான் இருக்கின்றது. ஆனால் கொஞ்சம் உங்கள் பள்ளி நாட்களுக்கு சென்று பாருங்கள். அந்த மாணவன் நிலையில் இருந்து எண்ணி பாருங்கள். இதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்? நாம் பெற்றோர் அல்லது பெற்றோர்கள் அடங்கிய சமுதாயம். ஒரே வயதுடைய இரண்டு மாணவர்கள் ஒரு குடும்பத்திலோ அல்லது ஒரே காலனியிலோ இருந்து விட்டால் தொலைந்தது. எல்லாவற்றுக்கும் ஒப்பீடு. "அவனைப்பார். அவனை விட உனக்கு எல்லாம் அதிகமாகத்தானே கிடைக்கின்றது? பின் ஏன் சரியாக படிக்கவில்லை? உன் மார்க்கை நாலு பேருக்கு முன்னால் சொல்ல எனக்கு கேவலமாக இருக்கின்றது. இன்றில் இருந்து டிவி கட். கிரிக்கெட் பேட்டை எடுத்து ஸ்டோர் ரூமில் பூட்டி வைத்து விடுவேன். நாலு மணிக்கு எழுந்திரு, பன்னிரண்டு மணி வரை படி, சிரிக்காதே, சிரிப்பதற்கு உனக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது? முதலில் மார்க் எடுத்துக்காட்டு அப்புறம் சிரிக்கலாம்." இது மிகையல்ல நண்பர்களே! தற்கால மாணவர்கள் வாங்கும் வசைப்பாட்டின் ஒரு சாம்பிள்தான் இது. பத்தாம் வகுப்பில் 500க்கு 440 மார்க் எடுத்த மகிழ்ச்சியில் என் டியூசன் மிஸ்ஸிடம் போய் நின்றேன். அவர் "இவ்வளவு கம்மியா மார்க் வாங்கிருக்கியே?" என்றாரே பார்க்கலாம். நொறுங்கிப்போனேன். தெரியாமல் கேட்கிறேன் யானை கரும்பை தின்று பெரிய சைஸ் சாணி போடுகிறது என்பதற்காக, ஆட்டுக்கும் அதே கரும்பை கொடுத்து பெரிய சைஸ் சாணி போட வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா? எங்க ஊர் பக்கம் விளையாட்டாய் சொல்லப்படும் பழமொழி இது. “யானை லத்தி போடுதுன்னு, ஆடும் முக்கினா லத்தி வராது, புளுக்கைதான் வரும்”


இது ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் பெற்றோர்கள் குழந்தைகளின் போராடும் குணத்தை தெரிந்தோ தெரியாமலோ மழுங்கடித்து விடுகின்றனர். ஒரு அப்ளிகேசன் பாரம் வாங்குவதில் இருந்து, பேங்க் சலான் நிரப்புவது வரை எல்லாவற்றையுமே தந்தை பார்த்துக்கொள்வார். "டிடி எடுக்க வேண்டுமா? கால்கடுக்க வரிசையில் நிற்க வேண்டுமா, அப்பா இருக்கேண்டா! டூவீலர் லைசென்ஸ் எடுக்க வேண்டுமா? அப்பா இருக்கேண்டா! உன் வேலை படிப்பது. எல்லாம் உன் இடம் தேடி வரும்." இப்படி ஸ்பூனில் எல்லாவற்றையும் குழந்தைக்கு திணித்து விடுவதால், நாளை ஏதோ ஒரு இடத்தில் உண்டாகும் ஒரு சிறு ஏமாற்றத்தையோ, தோல்வியையோ தாங்கும் மனப்பக்குவத்தை இழந்து விடுகிறார்கள். தோல்வி என்பது வீழ்ச்சி அல்ல ஒரு பின்னடைவே என்று எண்ணுவதற்கு பதில், ஒரு சிறு பின்னடைவை கூட மாபெரும் தோல்வியாக மனதில் கற்பனை செய்து கொள்கிறார்கள். விளைவு மன அழுத்தம். முடிவு தற்கொலை எண்ணம்.


பெற்றோர்கள், மற்றும் பெற்றோர் ஆகப்போகிறவர்கள் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், வாழ்க்கை என்பது ஒட்டப்பந்தயம் அல்ல, ஜெயித்து முதல் பரிசு வாங்குவதற்கு. அது ஒரு உன்னத அனுபவம். அதில் பரிசோதனை செய்து கற்று கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. எல்லாம் சொந்த அனுபவங்களாக இருக்கவேண்டும். ஒரு ஜென் கதை உண்டு. கூட்டுக்குள் இருந்த பட்டாம்பூச்சி ஒன்று தட்டு தடுமாறி வெளியே வரமுயற்சி செய்து கொண்டிருந்தது. அதை பார்த்த ஒருவன். கூட்டை பிரித்து அது வெளியே வர உதவினான். பட்டாம்பூச்சி வெளியே வந்தது. ஆனால் அதனால் பறக்க முடியவில்லை. கூட்டை பிய்க்கும் முயற்சியில் அதன் இறகுகள் நன்கு பக்குவ பட்டுவிடும். ஆனால் இவன் கூட்டை பிரித்து விட்டதால் இறகுகள் பக்குவமாகாமலேயே பட்டாம்பூச்சி வெளியே வந்துவிட்டது. ஆகவே பறக்க முடியவில்லை. இறந்து போனது. குழந்தைகள் சிறு சிறு இடர்பாடுகள் மூலம் நிறைய கற்று கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு உதவுகிறேன் என்று அந்த அனுபவங்களை அவர்கள் பெறாமலேயே செய்து விடுகிறோம்.


குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே வளரவிடுவதும், அவர்களின் விருப்பம் என்ன, கெப்பாசிட்டி என்ன என்பதை உணர்ந்து, அதற்கேற்ற சவால்களை அவர்களுக்கு கொடுத்து, அதில் வெற்றி பெறும்போது மனதார பாராட்டி, தன் குழந்தையின் சிறிய சாதனையை கூட எல்லோரிடமும் திறந்த மனதுடன் பெருமையுடன் சொல்லி பாருங்கள். உங்கள் குழந்தை மிகப்பெரிய சாதனையாளாராக வருவார்கள்.

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 


16 comments:

Anonymous said...

முதல் வடை

சுதர்ஷன் said...

இந்த கல்வி முறைமை ,வளர்ப்பு முறைமை அனித்தும் நீங்கள் கூறியது சரியே ...எத்தனை 3 இடியட்ஸ் வந்தாலும் அமீர்கான் வந்தாலும் மாறபோவதில்லை.. சரியான மாற்றுத்திட்டம் வரப்போவதில்லை ..நல்ல பதிவு ..தேவையானதும் கூட .:)
http://ethamil.blogspot.com/2011/02/blog-post_15.html

Anonymous said...

தற்கொலை செய்வது கோழைத்தனம்..அதற்கு பதிலாக செத்துட்டதா நினைச்சு பலருக்கும் பயனுள்ளதாக ஏதாவது செய்யலாம்

ராஜகோபால் said...

நல்ல பதிவு வாழ்த்துக்காள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாழ்ந்து என்னாகப் போகிறது
செத்து தொலைவோம்..
செத்து என்னவாகப் போகிறது
வாழ்ந்தே தொலைப்போம்..

அருமையான பதிவு..
வாழ்த்துக்கள்..
மற்றும் வாக்குகளும்..

சக்தி கல்வி மையம் said...

நன்றி நண்பரே ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி

சக்தி கல்வி மையம் said...

ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...
கலக்கல் தல....நம்ம பக்கமும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு எதாவது சொல்லுங்க....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

super boss....!

பாலா said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

ஒரு தடவை தற்கொலை செய்ய முயற்ச்சி செய்து பின் கை விட்டு விட்டால் பின் அது எவ்வளவு முட்டாள்தனம் என்று தெரியும்.

பாலா said...

@S.Sudharshan

இந்த கல்வி திட்டம் வேண்டுமானால் மாறாமல் இருக்கலாம். ஆனால் நாம் மனது வைத்தால் நம் அணுகு முறையை மாற்றலாம்.

பாலா said...

@ராஜகோபால்

நன்றி நண்பா

பாலா said...

@sakthistudycentre-கருன்

நன்றி தல கண்டிப்பாக வருகிறேன்.

பாலா said...

@மாத்தி யோசி

நன்றி நண்பரே...

ரஹீம் கஸ்ஸாலி said...

நண்பரே இந்த வார வலைச்சர ஆசிரியராக நான் பொறுப்பேற்றிருக்கிறேன். வந்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தை பகிருங்கள்.

Unknown said...

மிக மிக அருமையான பதிவு இது நண்பா, நானும் இது போல ஒப்பீடால் மனம் சிறுத்து போனவர்களை நிறைய பார்த்திருக்கிறேன், அருமையாக அலசி உள்ளீர்கள், ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பவும்...

Philosophy Prabhakaran said...

கவுண்டரை வச்சி ஒரு நகைச்சுவை பதிவு போட்டிருக்கேன்... வந்து ஆதரவு தரவும்...

Related Posts Plugin for WordPress, Blogger...