ஒரு நாயகன், உதயமாகிறான்....
ஊரார்களின், இதயமாகிறான்...
எண்பதுகளில் வந்த தாவணி கனவுகள் படத்தில் பாக்யராஜ் சினிமாத்துறையில் மேன்மேலும் உயர்வதை குறிப்பதாக இந்த பாடல் அமைந்திருக்கும். இளையராஜாவின் துள்ளலான பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பாக்யராஜ் என்றில்லாமல் எந்த சினிமா நடிகன் இந்த பாடலை கேட்டாலும் மனதில் ஒரு மிதப்பு வந்து ஒரு பெரிய கனவுலகத்துக்கே அழைத்து சென்று விடும். பெரிய சூப்பர் ஸ்டார் ஆகி ஒரு கட்டத்தில் முதலமைச்சர் ஆவதுபோல கூட கனவுக்குள் இழுத்து சென்று விடும்.
சரி இப்போது எதற்கு இந்த செய்தி என்கிறீர்களா?
டிஸ்க்: உங்கள் மனதில் நடிகர் விஜய் பற்றி அபிமானம் இருந்தால் கடைசியில் சிகப்பில் உள்ளவற்றை முதலில் படித்து விட்டு பிறகு அடுத்த பத்தியை தொடருங்கள். மற்றவர்கள் தொடர்ந்து படியுங்கள்.
சமீப காலமாக தன்னை ஒரு முழுநேர அரசியல்வாதியாக மாற்றிக்கொள்ள ஒரு நடிகர் முயன்று வருவது தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்து ஒரு செய்தி. "ஒரு நடிகன் நாடாளகூடாது" என்று சொல்ல யாருக்கும் தகுதி கிடையாது. சேவை செய்யும் மனப்பான்மை, ஆட்சி நடத்தும் திறமை, கடும் உழைப்பு ஆகிய குணங்கள் இருக்கும் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், தேர்தலில் போட்டியிடலாம், ஆட்சியில் அமரலாம்.
இப்போது பிரச்சனை விஜய் கட்சி தொடங்குவது அல்ல. அவர் ஜெயிப்பதற்கு எவ்வளவு சாத்திய கூறுகள் இருக்கின்றன என்பதுதான். கட்சி தொடங்குபவர் எல்லோரும் முதலமைச்சர் ஆகிவிடுவார்கள் என்றால், சரத்குமார் உள்பட பலரும் வரிசையில் நிற்கிறார்கள், உதாரண புருஷர்களாக. ஆனானப்பட்ட சிரஞ்சீவிக்கே, அரசியல் ஆசையின் பலனாக அல்வாதான் பரிசாகத்தரப்பட்டது. சினிமா என்பது வேறு அரசியல் என்பது வேறு. விஜய் ரசிகர்கள் பலருக்கே அவர் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை. படம் பிடிக்கவில்லை என்றாலும் பார்த்து விடுவார்கள். அதே போல ஓட்டும் போட்டு விடுவார்கள் என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது. மேலும் விஜய் ஒன்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தியேட்டருக்கு வருபவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்து விட முடியாது. விஜயின் தீவிர ரசிகர்களின் பெரும்பாலானோர் ஓட்டு போதும் வயது இல்லாதவர்கள். எம்ஜிஆர் காலம் என்பது வேறு. தற்போது அரசியல் நடிகர்களின் ரசிகர்கள் பலர் தங்கள் ஜாதிகட்சியிலோ, அல்லது ஏதாவது ஒரு அரசியல் கட்சியிலோ பெரிய பொறுப்பில் இருக்கலாம். அவர்களை எல்லாம் ஒருங்கிணைப்பது என்பது மிக கடினமான காரியம்.
அரசியல் என்று விஜய் செய்து வரும் காமெடிகள்
1. தனது மன்ற கொடியை அறிமுகப்படுத்தியது. இது ஒரு சில ரசிகர்களை வேண்டுமானால் மகிழ்ச்சிபடுத்தி இருக்கும். மற்றபடி ரஜினி உள்ளிட்ட பெரிய நடிகர்களை பார்த்து இவர் செய்த கோமாளித்தனம் என்றுதான் அனேக மக்கள் கருதினர். மேலும் ரஜினியோ தன் மன்ற கொடியை இன்றுவரை அறிவிக்கவில்லை. ரசிகர்கள் தாங்களாகவே வடிவமைத்துக்கொண்டது அந்த கொடி.
2. ரஜினியை விட பெரிய மாஸ் தனக்கு உள்ளது என்று நினைத்துக்கொண்டு லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பை வெளியிட்டு வாங்கி கட்டிக்கொண்டது.
3. இலங்கை தமிழர்களுக்காக கலைஞர் ஸ்டைலில் அரைநாள் உண்ணாவிரதம் இருந்தது. அந்த நேரத்தில் நான் சென்னையில்தான் இருந்தேன். நகரின் பல பகுதிகளில் இருந்தும் பலர் அதில் கலந்து கொண்டனர். பெரும்பாலான பேர் அங்கு வழங்கப்பட்ட டீ-ஷர்ட்டுக்கும், பிரியாணிக்கும் ஆசைப்பட்டே கலந்து கொண்டனர். இது நான் நேரில் பார்த்தது. ரஜினி காவிரி பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்ததை போல தமிழகமே திரும்பி பார்க்கும் என்று தப்பு கணக்கு போட்டு போராட்டம் காமெடி ஆனதுதான் மிச்சம்.
4. ராகுலை சந்தித்து தன்னுடைய மாஸ் என்ன என்பதை காட்ட நினைத்து பின்னர் டிஸ்குவாலிஃபைடு என்று சொன்னவுடன், மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று மீசையில் ஒட்டிய மண்ணை துடைத்துக்கொண்டது.
தற்போதும் சின்ன சின்ன அறிக்கைகள் விடுவது, பசு, அரிசி வழங்கி விளம்பரப்படுத்துவது, சமூக அவலங்களை கண்டு மனம் கொதித்து எழுவதை போல பாவ்லா காட்டுவதென்று அனுதினமும் காமெடி செய்து வருகிறார்.
விஜய் அரசியல் கட்சி தொடங்குவதன் முழுமுதற் காரணம் என்ன? தன்னுடைய ஒரே ஒரு படத்தை வெளியிட சிலர் ஏற்படுத்திய தடைக்கற்கள்தான் காரணமா? அப்படியானால் தன் சொந்த படங்களை தடையில்லாமல் வெளியிடுவதற்காகத்தான் இந்த நாடகமா? "அப்படி இல்லை. திமுக ஆட்சியின் அநியாயங்கள் அதிகமானதால் தமிழ் மக்களை காப்பதற்காகத்தான் அரசியலுக்கு வருகிறேன்." என்றால், இதற்கு முன் கலைஞருடனும், சன் குழுமத்துடனும் கூத்தடித்தபோது இது தெரியவில்லையா? இவரது இரண்டு படங்களை சன் பிக்சர்ஸ் வாங்கி பஞ்சர் ஆனதாலேயே இந்த பிரச்சனை ஆரம்பம் என்று சொல்கிறார்கள். அப்படியானால் ஒரு வேளை அந்த இரண்டு படங்களும் மெகா ஹிட் ஆகி இருந்தால், விஜய்க்கு இந்த ஞானோதயம் வந்திருக்காதோ?
இதற்கு முன் சன் டிவியுடன் கை கோர்த்துக்கொண்டு, விஜய்யை மக்கள் மனதில் பெரிய இடத்துக்கு கொண்டு செல்வதற்காக, ஓடாத பல படங்களை ஓடியது போலவும், சமகால படங்களை குறைத்து விமர்சித்து, இருட்டடிப்பு செய்தது போலவும் பல தில்லாலங்கடி வேளைகளில் தன் தந்தை ஈடுபட்டது கூட விஜய்க்கு தெரியாதா? தனக்கு என்று ஏதாவது நடந்து விட்டால் மட்டும் சமூக ஆர்வம் எங்கிருந்து போத்துக்கொண்டு வருகிறது? ஒருவேளை நாளைக்கே இருவரும் சமரசம் ஆகிவிட்டால் இவரின் ரசிகர்களையும் சேர்த்து அனைத்து மக்களும் என்ன ஆவார்கள்? (இதற்கு பெரிய உதாரணம் சிரஞ்சீவிதான். தனது கட்சியை காங்கிரசோடு இணைத்து விட்டார் அல்லவா?)
உண்மையிலேயே விஜய் அரசியல்வாதிதான்
ஒரு அரசியல்வாதிக்கு முக்கிய தேவை, ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் குணம். அது அவரிடம் நிறைய உள்ளது. முதலில் "ரஜினியின் சிஷ்யன், விஜயகாந்தின் தம்பி" என்று அடைமொழியுடன் தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர்தான் விஜய். பிற்காலத்தில் அவர்கள் இருவரையும் தூக்கி எறிந்தவர். தலைகனத்தில் ரஜினியையே இழிவாக பேசியவர். ரஜினி படத்துடன் வெளிவந்த எந்த விஜய் படமும் ஓடியதில்லை என்பது கூட அவர் அறியவில்லை.
விஜய் என்ற ஒரு நடிகர் இருக்கிறார் என்று பட்டிதொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தது சன்டிவி. அப்போதெல்லாம் அவர்கள் இனித்தார்கள். தற்போது ஒரு சிறிய பிணக்கு என்றவுடன் அவர்களது போட்டி தொலைக்காட்சியான ஜெயாடிவியில் சன் டிவியை தாக்கி பேட்டி கொடுத்து தன் நன்றியை காட்டியுள்ளார். காவலன் வெளியாவதற்கு முன்பாக அம்மாவை சென்று சந்தித்து ஆசிகள் பெற்று, பின் காவலன் ஒருவழியாக வெளியானவுடன், மறுபடியும், "நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவனல்ல." என்று அந்தர் பல்டி அடிக்கிறார்.
நேரடியாகவே தனது படத்தில் அஜீத்தை தாக்கிவிட்டு, அவருக்கு தானாகவே விட்டுகொடுப்பது போல காட்சிகள் வைத்துவிட்டு, "தான் விட்டுக்கொடுத்ததால்தான் அவர் ஜெயித்தார். தான் நினைத்தால் அவரை தோற்கடிக்க முடியும்." என்று சொல்லிவிட்டு, இப்போது எங்களை யாராலும் பிரிக்கமுடியாது என்று ஒன்றாக போஸ் கொடுக்கிறார். இவரது சகவாசத்தால் அஜித்துக்கு லாபமும் இல்லை இழப்பும் இல்லை. இன்றே கூடி குலாவிவிட்டு நாளைக்கே எட்டி உதைத்தாலும் அசாராமல் எழுந்து நின்றுவிடுவார் அஜித். ஆனால் இந்த நிகழ்வு விஜய் அவர்களின் சந்தர்ப்பவாத குணத்தை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு நிகழ்வாகவே பார்க்கிறேன். இப்படி பல காரணங்கள் இருக்கின்றன அவர் உண்மையிலேயே ஒரு அரசியல்வாதி என்பதற்கு. ஆனால் கண்டிப்பாக ஒரு நல்ல அரசியல்வாதி அல்ல.
நண்பர்களே ...
நம்மிடம் ஒரு பொதுவான குணம் உண்டு. ஒருவன் ஒரு விஷயத்தை சொல்கிறான் என்றால், அவன் என்ன சொல்கிறான்? என்பதை விட்டுவிட்டு, அவன் யார்?, என்ன இனம்? என்று ஆராய கிளம்பிவிடுவோம். இந்த பதிவை படிக்கும் பலர் அஜித் ரசிகனான நான் என்னவோ காவலன் படம் வெற்றி(?) அடைந்ததை பொறுக்காமலும், அவர் முதலமைச்சர் ஆவது கண்டு வயிற்றெரிச்சலில் இவ்வாறு சொல்கிறேன் என்று நினைக்கலாம். காவலன் வெற்றி அடைந்ததாலோ, விஜய் முதல்வர் ஆவதாலோ எனக்கு வயிற்றெரிச்சல் ஏற்படபோவதில்லை. (நாங்கல்லாம் கலைஞரையே பார்த்தவைங்க...). மேலே நான் கூறி இருக்கும் செய்திகளில் கொஞ்சமேனும் உண்மை இருக்கிறதா? என்று பாருங்கள்.
இவை எல்லாம் என் சொந்த கருத்துக்கள்தான். என் பார்வையில் மட்டுமே எழுதப்பட்டது. ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அதன் காரணம் தன் படங்களை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள் என்பதாகத்தான் இருக்க வேண்டுமா?
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
55 comments:
நீங்கள் கூறிய அனைத்தும் அப்பட்டமான உண்மை நண்பரே ...
//"தான் விட்டுக்கொடுத்ததால்தான் அவர் ஜெயித்தார். தான் நினைத்தால் அவரை தோற்கடிக்க முடியும்."
கைபுள்ள ஞாபகம்தான் வருது இத வாசிச்சவுடனே...
//காவலன் படம் வெற்றி(?)
இது எப்ப நடந்தது ...
// நாளைக்கே எட்டி உதைத்தாலும் அசாராமல் எழுந்து நின்றுவிடுவார் அஜித்.
எட்டி உதைத்தவன் , மறுபடியும் எப்பவாது வந்து கால்ல விழ வேண்டி வரும் ...
u r 100% true
நல்லா கோர்வையா எழுதியிருக்கீங்க.. பாலா..
நீங்க சொல்றது எல்லாம் எங்கீங்க கேட்கப்போகுது..
விஜய் மட்டுமல்ல மற்ற எல்லா நடிகர்களும் அரசியலுக்கு வருகிறார்கள், இல்லை எதாவது கட்சியில் இளைகிறார்கள், குறைந்தபட்சம் தெர்தல் மேடையிலாவது ஆஜாரக்கிறார்கள் , என்ன காரணம் ?
நடிக நடிகைரின் சம்பளம் பல லட்சம், அல்லது கோடிகள், எனவே அவர்களின் சேமிப்பின் பெரும் பகுதி கண்டிப்பாக ரியல் எஸ்டேட் , ஷாப்பிங் காம்பிளக்ஸ். என இருக்கும்.
இவைகளில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
நாங்கள் ஒரு வாடகைக்கு ஒரு காம்பவுண்டு விடு வாங்கினேம்.
அதில் முன்புறம் ஒரு கடை உள்ளது. உள்ளே 10 சிறிய வீடுகள் உள்ளது.
எங்களுக்கு முன் அந்த வீட்டு ஓனர் தன் சொந்த்காரனுக்கு கொடுத்து இருந்தார். 10 வீட்டுக்கும் யாரும் குடிவராமல் பார்த்து கொண்டார் கடைக்காரர். இதனால் நாட்டமாகி விற்று விட்டுபோனார் விட்டுகாரர்.
விற்கும்போது.. கடையை தானே நடத்துவதாக கேட்க நாங்கள் சரி என்ன சொன்னோம்.
பின்னர் கடைகாரை பற்றி தெரிந்ததனால் காலி செய்ய சொன்னால் வீடு கட்டியிருக்கும் இடம் எங்களுக்கு சொந்தமில்லை என பஞ்சயத்து வைத்தர் கடைக்கரர்.
என் சித்தப்பா போலிசில் இருப்பவர் போய் அவரிடம் பேசிய உடன் காலி செய்துவிட்டு போனார்.
ஒரு வீட்டுக்கு இத்தனை பிரச்சனை என்றால் .. பல கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் எத்தனை வீடு , கட்டிடம் வைத்து இருப்பர்கள்.. எத்தனை பிரச்சனைகள் வரும்...
இவற்றை சமாளிக்க அரசியல் சக்தி தேவை.
எனவேதான் இந்த உதார் எல்லாம்....
இவை எல்லாம் புரியாமல் நடிகர் கட்சி ஆரம்பித்தால் தங்கள் வட்ட சதுர முக்கோண பொருப்புக்கு வரலாம் என கனவு கண்டு கைக்கசை செலவு செய்து கொடி , பிளக்க்ஸ் போர்டு, கட் அவுட் என வைத்து ரசிகர்கள் பலிகடா ஆகிறனர்
இவற்றை காட்டி அடுத்த படத்தில் தங்கள் சம்பளத்தை உயர்த்தி சுகமாக சம்பாதிதின்றான் நடிகன்
correct baala.i never welcome the actors to poltics.....
பாலா கசக்கி எடுத்துட்டீங்க விஜய்யை ...
தெளிவான பார்வை இது டம்மி பீசுதான்
@"ராஜா"
//காவலன் படம் வெற்றி(?)
இது எப்ப நடந்தது ...
அப்படித்தான் சொல்லிக்கிர்ராங்க..
//எட்டி உதைத்தவன் , மறுபடியும் எப்பவாது வந்து கால்ல விழ வேண்டி வரும் ...
அது நடந்தாலும் கவலைப்படுபவரல்ல நம்ம தளபதி
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
நன்றி நண்பரே
@ச.செந்தில்வேலன் / S.Senthilvelan
நம்ம நோக்கம் விஜய்யை திருத்துவதல்ல. என் கருத்தை வெளியிட்டேன் அவ்வளவுதான். படிப்பவர் புரிந்து கொண்டால் சரி.
@Vinoth
நீங்கள் சொல்வது உண்மை. தன் சொந்த பிரச்சனைகளை சமாளிக்க அவர்களுக்கு அரசியல்வாதிகளின் சப்போர்ட் தேவை படுகிறது. அதான் இப்படி எல்லாம்.
@மாத்தி யோசி
நன்றி நண்பரே...
@ஆர்.கே.சதீஷ்குமார்
என்னத்த சொல்ல எல்லாம் காலக்கொடுமை.
ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அதன் காரணம் தன் படங்களை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள் என்பதாகத்தான் இருக்க வேண்டுமா?
100% உண்மை பாலா
ஒரு நாயகன், உதயமாகிறான்....ஊரார்களின், இதயமாகிறான்...
. இளையராஜாவின் துள்ளலான பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
எனக்கும் பிடித்த ஒன்று.
@r.v.saravanan
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
உங்கள் பல கருத்துடன் ஒத்துப்போகவில்லை. ஆனால் நான் விஜய் ரசிகனல்ல. விஜய் அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகள் எப்போதிருந்தே நடந்து வருகின்றன. இது சடுதியாக எடுக்கப்பட்டதல்ல. அதோட அஜித் ஒன்றும் பெரிய உத்தமர் என்று நினைக்கவில்லை. அரசியல் சருபவர்கள் எல்லாம் கெட்டவர்கள் இல்லயே!!
//சேவை செய்யும் மனப்பான்மை, ஆட்சி நடத்தும் திறமை, கடும் உழைப்பு ஆகிய குணங்கள் இருக்கும் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், தேர்தலில் போட்டியிடலாம், ஆட்சியில் அமரலாம். //
மேலே நீங்கள் சொல்லியதை ஆமோதிக்கிறேன் ஆனால் ஆட்சியில் அப்பாவின் மடியில் உட்கார்ந்துகொண்டே ஆட்சியில் அமரலாமா?
//கட்சி தொடங்குபவர் எல்லோரும் முதலமைச்சர் ஆகிவிடுவார்கள் என்றால், சரத்குமார் உள்பட பலரும் வரிசையில் நிற்கிறார்கள், உதாரண புருஷர்களாக.//
இதை வன்மையாக கண்டிக்கிறேன், எங்கள் தளபதிபோல சரத்குமார் மும்தாஜுடன் கட்டிப்பிடி பாடலுக்கு A கிளாஸ் நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறாரா ? ஆ... குஷி என்றதும் ஞாபகம் வருது 'குஷி' திரைப்படத்தில் தளபதி விட்ட மூச்சு மாதிரி சரத்குமார் மூச்சு விட்டிருக்கிறாரா? இல்லை மாமி கேரக்டருக்கு முதுகில சோப்பு போட்டிருக்கிறாரா? ரசிகன், தேவா என தன ஆரம்பகால திரைப்படங்களில் குழந்தைகளையே A கிளாஸ் படம் பார்க்க வைத்த தளபதியை சரத்குமாருடன் எப்படி ஒப்பிடலாம்?
//சிரஞ்சீவிக்கே, அரசியல் ஆசையின் பலனாக அல்வாதான் பரிசாகத்தரப்பட்டது.//
விஜய்க்கு இது பொருந்தாது, விஜய்க்கு அரசியல் ஆசை ஊட்டியது 'அல்வா' புகழ்(ஓவாக்) நடிகர் சத்யராஜ்தானே, விஜய்க்கு அல்வா ஏற்கனவே குடுத்தாச்சு பாஸ்.
//படம் பிடிக்கவில்லை என்றாலும் பார்த்து விடுவார்கள்//
காவலனுக்கு முன்னாடி வெளியான ஐந்து படங்களோட ரிசல்ட பார்த்தா அப்படி தெரியலையே.
@????????
pannadai pala give your hanephone number...
@கார்த்தி
மேலே கூறிய்வை அனைத்தும் என் சொந்த கருத்துக்கள்தான். அதாவது அவரை அரசியலுக்கு கொண்டு வருவதற்காகவே திட்டமிட்டு வேலைகள் நடந்தனவா? அஜீத் உத்தமர் என்று நான் சொல்லவில்லையே? இதை சொல்வதற்கு நீங்கள் விஜய் ரசிகராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நன்றி நண்பரே...
@எப்பூடி..
//மேலே நீங்கள் சொல்லியதை ஆமோதிக்கிறேன் ஆனால் ஆட்சியில் அப்பாவின் மடியில் உட்கார்ந்துகொண்டே ஆட்சியில் அமரலாமா?
அதுவும் நடக்கும்
//A கிளாஸ் படம் பார்க்க வைத்த தளபதியை சரத்குமாருடன் எப்படி ஒப்பிடலாம்?
அப்போ விஜய் ஒரு பலான அரசியல்வாதின்னு சொல்லுங்க.
சத்தியராஜ் மாதிரி ஒரு அல்லக்கையை பார்க்கவே முடியாது.
// காவலனுக்கு முன்னாடி வெளியான ஐந்து படங்களோட ரிசல்ட பார்த்தா அப்படி தெரியலையே.
ரசிகர்களையே சிதறி ஓட வைக்கும் பவர் தளபதிக்கு மட்டுமே உண்டு
@பெயரில்லா
பெயருடன் வருவதுதானே நாகரீகம்?
நீங்க சொல்லியிருக்கும் வேலைகளை உங்க தலைவரிடமிருந்து தான் இவர் காப்பியடித்திருப்பதாக ஒருத்தர் சொல்றார், படிச்சீங்களா?
//சரி விஜய் எங்கே தோற்றார் என்று பார்த்தால் ரஜினி தன் 45ஆவது வயதில் செய்யததை விஜய் தன் 30 வயதில் செய்ய நினைத்தார். //
//அதனால் விஜய் ரஜினியை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு களம் இறங்குவதை முதலில் விட்டொழிக்கவேண்டும்.//
http://writervisa.blogspot.com/2011/01/blog-post_19.html
//சேவை செய்யும் மனப்பான்மை, ஆட்சி நடத்தும் திறமை, கடும் உழைப்பு ஆகிய குணங்கள் இருக்கும் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், தேர்தலில் போட்டியிடலாம், ஆட்சியில் அமரலாம்.// இது உங்க அவா, ஆசை [கனவுன்னு கூட சொல்லலாம்!]. ஆனா அதுதான் நிஜத்தில் நடக்குதா? இன்னைக்கு தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் இந்த லட்சணங்கள் பொருந்தியவர்களா? இந்தியாவில், பிரதமர் உட்பட, எத்தனை அரசியல்வாதிகள் இந்த தகுதிகளோடு ஆட்சியமைத்துள்ளார்கள் என்று சொல்ல முடியுமா? கூமுட்டை சனங்க ஓட்டு போட்டா போதும் எந்த கழுதை வேண்டுமானாலும் ஆட்சி அமைக்கலாம், என்பதுதான் உண்மை.
அரசியலுக்கு வரும் Vijay-ன் எண்ணத்தில் நேர்மை இல்லை, அவர் தேர்ந்தெடுத்த காரணங்கள் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லை, [//ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அதன் காரணம் தன் படங்களை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள் என்பதாகத்தான் இருக்க வேண்டுமா? //], விஜயை ஒரு சந்தர்ப்பவாதியாக கணிப்பு போன்று இந்த இடுக்கை முழுவதும் விஜயைப் பற்றிய தங்களது சொந்தக் கருத்துக்களைத் தான் கூறியுள்ளீர்கள். இதைப் போலவே அரசியலுக்கு வருவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் /ஏற்கனவே வந்து விட்ட எல்லோரைப் பற்றியும் விமர்சங்களை எழுத முடியும். ஆனால் அவர் அரசியலுக்கு வர/ஆட்சியமைக்க லாயக்கற்றவர் என்று இதை வைத்து தீர்ப்பு சொல்லிவிட முடியாது, அது ஓட்டு போடும் இளிச்சவாயர்கள் கையில் உள்ளது.
விஜய் திரைப் படத்தில் மாமிக்கு சோப்பு போட்டதைஎல்லாம் கிண்டல் பண்ணியிருக்கீங்க. இதுக்கு என் நண்பர் ஒரு பதில் குடுத்திருக்காரு, // உங்களுக்குப் பிடிச்ச காட்சி இன்னொருத்தருக்கு பிடிக்காம போகலாம், இன்னொருத்தருக்கு பிடிக்காத காட்சி உங்களுக்கு பிடிச்சதா இருக்கலாம். ஒரு படத்தில எந்த காட்ச்சியை வைக்க வேண்டும், வைக்கக் கூடாது என்பது சும்மா படம் பார்க்கப் போகும் உம்மையும் என்னையும் விட அந்த படத்தின் டைரக்டருக்கும், பணம் போட்ட தயாரிப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றாகவே தெரியும்//. இதை, 60 வயசு நடிகனுக்கு அவரோட மகள் வயசில் இருக்கும் பெண் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுப்பது போல காட்சி வைக்க அனுமதித்தது அந்த நடிகரின் தவறு என்று சொன்ன பின்னூட்டத்து பதிலாக என் நண்பர் எழுதியது. அது விஜைக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன்.
//
எந்த காட்சி தேவை, எந்த காட்சி தேவையில்லை என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியாது நண்பரே, அது இயக்குனருக்கு தெரியும், உங்களுக்கு காதல் ரத்து காட்சி தேவையில்லை என்பதுபோல வேறு ஒருவருக்கு வேறொரு காட்சி தேவையில்லாமல் இருக்கும், இன்னொருவருக்கு இன்னொரு காட்சி தேவையில்லாமல் இருக்கும்; ஒவ்வொருவரையும் குறிப்பாக நொட்டை பிடிப்பவர்களை திருப்திப்படுத்தி எந்த படமும் எடுக்க முடியாது. உங்களுக்கு பிடிக்காத காட்சி பலருக்கு பிடித்திருக்கலாம் என்பதால் உங்களுக்கு பிடிக்காதது சரியாக இருக்குமென்று தப்பாக முடிவெடுத்துவிடாதீர்கள்.//இது சரின்னா, விஜய் சோப்பு போட்டதும் சரிதான். [ச்சே.. எங்கேன்னு தேடிக் கண்டுபிடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சு.. ஹா..ஹா..ஹா..]. //"நடிகன் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு என்ன சட்டமா?"//- இது சரின்னா விஜய் அரசியலுக்கு வர நினைப்பதும் சரிதான். அவர் பணம் சம்பாதிக்கவோ, சந்தர்ப்ப வாதத்திற்க்காகவோ, சுய நலத்துக்காகவோ இல்லை வேறு எந்தக் காரணத்துக்காகவோ வந்தாலும் அதை தப்பு என்று யாரும் சொல்ல முடியாது. ஏனெனில் //மக்கள் புத்திசாலிகள், அவர்களுக்குத் தெரியும் யாருக்கு ஓட்டுப் போடவேண்டுமென்று// என்பதால், புத்திசாலி மக்கள் சரியான நபரைத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள் [கடந்த நாற்ப்பது வருஷமா அதைத்தானே கச்சிதமா நம்ம சனம் பண்ணிக்கிட்டு வருது!!] என்பதால், விஜய் என்ற தனிமனிதரின் உரிமையில் தலையிட வேண்டாமென முடிவு செய்து இடத்தை காலி செய்கிறேன். வரட்டுமா, பாலா.... மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்!!
என்னென்னவோ பின்னூட்டம் போடணும்னு யோசிச்சேன்... நான் நினச்சது எல்லாத்தையும் நண்பர்கள் எப்பூடி, Jayadev Das உள்ளிட்டோர் போட்டுவிட்டார்கள்...
@Jayadev Das
வணக்கம் நண்பரே. நீங்கள் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் சில பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறீர்கள். உங்கள் கருத்துப்படி விஜய்யை திட்டுவதுபோலவே ரஜினியையும் திட்டவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.
கூமுட்டை சனங்கள் என்று சொல்லும் மக்களில் நீங்களும் ஒருவர்தானே? அறுபது வயதுள்ள ஒரு நடிகர், இருபது வயது நடிகையோடு நடிக்கிறார். மிக முட்டாள்தனமான கருத்துக்களில் இதுவும் ஒன்று. இதையும் மாமியாருக்கு சோப்பு போடுவதையும் எப்படி ஒப்பிடமுடியும்? வயது வித்தியாசம் வெளியேதானே தவிர, படத்தில் இல்லை. அதையும் முறைதவறி நடக்கும் ஒரு காட்சியையும் ஒப்பிடுவதால், நீங்கள் குறிப்பிட்டுள்ள மத்த கருத்துக்கள் மீது நம்பகத்தன்மை போய் விடுகிறது.
@Jayadev Das
உங்கள் கருத்துக்களில் ரஜினி மீதுள்ள வன்மம் வெளிப்படையாகவே தெரிகிறது.
விஜய் அரசியலுக்கு வர கூடாதுன்னு நான் எங்காவது சொன்னேனா? இந்த விஷயத்தில் எல்லாமே என் கருத்துக்கள்தான்னு சொல்லிட்டேன். திரும்பவும் நீங்களே கண்டுபிடிச்ச மாதிரி சொல்கிறீர்களே?
அதே போல விஜய் அரசியல்வாதிதான். ஆனால் நல்ல அரசியல்வாதி அல்ல என்றுதான் சொன்னேன். நான் சொன்ன சேவை மனப்பான்மை நல்ல அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டியவை.
அது அவர் உரிமை என்றால், இது என் உரிமை. காமராசர் ஊரில் பிறந்ததால் கொஞ்சம் அதிகமா எதிர்பார்த்துட்டேன்.
ஒரு நண்பர் இந்த பகுதியில் எனக்கு சில தமிழ் கெட்ட வார்த்தைகளையும், சில ஆங்கில கெட்ட வார்த்தைகளையும் சொல்லிக்கொடுக்க முயற்ச்சி செய்கிறார். எனக்கு ஏற்கனவே அவை தெரியும் என்பதால், அதே வார்த்தைகளை உங்கள் தளபதியை போய் கேளுங்கள் நாடாவது உருப்படும் என்று வெளிப்படையாக தெரிவித்து கொள்கிறேன்.
@Philosophy Prabhakaran
அதுக்கென்ன உங்க சார்பிலும் கொஞ்சம் கருத்து சொல்லுங்களேன்....
//உங்கள் கருத்துப்படி விஜய்யை திட்டுவதுபோலவே ரஜினியையும் திட்டவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். //என்னை நீங்க தப்ப புரிஞ்சுகிட்டு இருக்கீங்க. எங்க தலைவர் வந்த அது மக்களுக்கு சேவை செய்வதற்கு, வேறு யாராச்சும் வந்தா அது சந்தர்ப்பவாதம், சுயநலம் என்று குற்றம் சாட்டுகிறீர்கள், என் இந்த முரண்பாடு என்பதுதான் என் கேள்வி. படத்தில் மாமியாருக்கு சோப்பு போடுவது போல நடித்தது தவறு என்பது தங்களது கருத்து, ஆனால் அந்தக் காட்சி சென்சார் செய்துதானே திரைக்கு வந்தது? அந்தக் காட்சியை வைத்ததே தப்பு, அதில் விஜய் நடித்ததே தப்பு என்று குற்றம் சாட்டுவது எப்படி நியாயமாகும்? எந்த காட்சி தேவை, எந்த காட்சி தேவையில்லை என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியாது நண்பரே, அது இயக்குனருக்கு தெரியும், உங்களுக்கு சோப்பு போடும் காட்சி மோசம் என்பதுபோல வேறு ஒருவருக்கு வேறொரு காட்சி மோசமாகத் தோன்றும், இன்னொருவருக்கு இன்னொரு காட்சி மோசமாகத் தோன்றும்; ஒவ்வொருவரையும் குறிப்பாக நொட்டை பிடிப்பவர்களை திருப்திப்படுத்தி எந்த படமும் எடுக்க முடியாது. உங்களுக்கு பிடிக்காத காட்சி பலருக்கு பிடித்திருக்கலாம் என்பதால் உங்களுக்கு பிடிக்காதது சரியாக இருக்குமென்று தப்பாக முடிவெடுத்துவிடாதீர்கள்.
//அறுபது வயதுள்ள ஒரு நடிகர், இருபது வயது நடிகையோடு நடிக்கிறார். மிக முட்டாள்தனமான கருத்துக்களில் இதுவும் ஒன்று. இதையும் மாமியாருக்கு சோப்பு போடுவதையும் எப்படி ஒப்பிடமுடியும்?// நீங்க சொல்வது சரிதான். அந்த காட்சி தவறு என்று சொல்லவில்லை. அறுபது வயதில் இதெல்லாம் தேவையா என்று கேட்பவர்களுக்கு நீங்கள் சொல்லும் பதில் சரிதான். ஆனால் நான் அப்படிச் சொல்லவில்லை, அது சரி என்றால் விஜய் சோப்பு போட்டதும் சரிதான். சட்டத்திற்கு புறம்பான வகையில் காட்சிகள் இருந்தால் அதை நீக்கத்தான் சென்சார் போர்டு இருக்கிறதே? அதையும் மீறி தப்பு என்றால் எல்லா படத்திலும் எல்லா காட்சிகளையும் தப்பு தப்பு என்று சொல்லிக் கொண்டே இருக்கலாம். தப்பு கண்டுபிடிபதேன்றால் காமராஜர் மீது கூட தப்பு கண்டுபிடிக்கலாம், தவறே செய்யாதவர்கள் யாரும் இல்லை, என்றெல்லாம் சொல்லிவிட்டு, ஒரு படத்தில் ஒரு நடிகர் அந்தப் படத்தின் கதைக்குத் தேவையான, அந்தப் படத்தின் டைரக்டர் சொன்னபடி நடித்து தனது தொழில் தர்மத்தைக் காத்ததை தப்பு என்று சொல்வதைத் தான் நான் ஏற்கவில்லை. அட அப்படியே சோப்பு போட்ட காட்சியில் அவர் நடித்திருந்தாலும், அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்குச் சேவை செய்யலாமே? அதற்குத் தடையேது?
//காமராசர் ஊரில் பிறந்ததால் கொஞ்சம் அதிகமா எதிர்பார்த்துட்டேன்.// ஐயா, அதற்க்கு நீங்கள் பெருமைப் பட வேண்டும். உங்கள் ஊரில் பிறந்திருந்தாலும் அவர் ஒரு தேசியத் தலைவர், மக்கள் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் தேசம் முன்னேற வேண்டும், என்ற பரந்த எண்ணம் கொண்டவர். தனது குடும்பம், சாதி என்ற என்னதிற்கெல்லாம் அப்பாற்பட்டவர். அவரை பற்றி எங்கள் ஊரில் எங்கள் அப்பா, பாட்டி நிறைய சொல்லியிருக்கிறார்கள். அவரிடம் மக்கள் போய் குறைகளைச் சொன்னால், "..ம்ம் பார்க்கலாம்" என்று மட்டும்தான் சொல்வாராம், அடுத்த ஒரு வாரத்தில் அது நிறைவேற்றப் படுமாம். [எங்கள் ஊருக்கு வந்த போது, என்னம்மா குறை என்று கேட்ட போது, தெருவிளக்குகள் இல்லை என்றார்களாம், "..ம்ம் பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு சென்றாராம். அடுத்து மூன்றாவது நாள் மின்துரையிறனர் கம்பங்களோடு வந்து மின் இணைப்பு கொடுத்து விளக்குகளை எறிய வைத்தனராம்]. அவர் எங்கே, இன்றைக்கு தானும் தன் பிள்ளை குட்டிகள், பெண்டுகள் நலமாக இருக்க வேண்டுமென்று மாநிலத்தையும் நாட்டையும் காட்டிக் கொடுத்து, விற்கவும் துணியும் இழவு எடுத்தவன் எங்கே என நினைக்கும் போது வேதனை மனதைக் கவ்வுகிறது. காமராஜரைத் தோற்கடித்துவிட்டு இந்த மாதிரி ஒரு ஆட்சியாளனைத் தேர்ந்தெடுத்தவர்களை கூமுட்டைகள் என்று சொல்வதில் தவறென்ன?
நீங்கள் ஒரு ரஜினி ரசிகர் என்பது(என்னப்போல்) மட்டும் அப்பட்டமாக தெரிகிறது. விஜய்-க்கு பதில் சொல்ல மக்கள் தயாரகிக்கொண்டிருக்கிறார்கள் நண்பரே.
//சோப்பு...மாமி... //
இந்த மாதிரிக் காட்சிகள் படத்தின் பாத்திரங்களுக்கான காட்சிகளேயன்றி நடிகர்களுக்கான காட்சியல்ல. அது மாமியாக இருந்தாலென்ன, காதலியாக இருந்தாலென்ன, அண்ணன்/தம்பி மனைவியாக இருந்தாலென்ன இந்த மாதிரிக் காட்சிகளில் எல்லா(பெரும்பாலான) நடிகர்களும் நடித்துள்ளார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித் ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல.
உங்கள் கருத்துகளில் பஞ்சமிருப்பதால்தான் இந்த மாதிரி உதாரணங்களை நீங்கள்(எல்லோர்க்குமல்ல) கையாள்கிறீர்கள். படங்களில் தற்புகழ்ச்சிக்(இது சில வேளைகளில் நடிகர்களுக்கானவை) காட்சிகளைத் தவிர மற்றய நீங்கள் சொல்லும் காட்சிகள் படத்துக்கான வர்த்தக நோக்குக் கொண்டவை.
மற்றபடி, நடிகர்களது தனிப்பட்ட, அரசியல் வாழ்க்கை பற்றி நாம் செய்திகளினூடாகத் தான் அறிகிறோம். அவற்றில் எந்தளவு தூரம் உண்மை பொய் என்று யாருக்குத் தெரியும்.
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
@Jayadev Das
//எங்க தலைவர் வந்த அது மக்களுக்கு சேவை செய்வதற்கு
உங்களுக்கு ஒரு சவால். என்னுடைய வலைத்தளத்தில் எங்காவது ஒரு இடத்தில் ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும்னு ஒரு வார்த்தை கண்டுபிடிச்சு சொல்லுங்க பார்க்கலாம். ரஜினி அரசியலுக்கு வர தேவையில்லை என்ற கருத்து உள்ளவர்களில் நானும் ஒருவன்.
காமராஜரை பற்றி நல்ல செய்திகள் சொல்லி இருக்கிறீர்கள். அந்த காலகட்டத்தில் கடும் தானிய பஞ்சம். மக்களுக்கு அவ்வளவு விவரம் பத்தாது. ஆகவே அவசரத்தில் எடுத்த முடிவு அது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@கே. ஆர்.விஜயன்
நன்றி நண்பரே...
@கரன்
மாமியாருக்கு சோப்பு போட்டவர் என்ற வார்த்தையை நான் உபயோகிக்க வில்லையே?
பொருந்திருந்து பார்க்கலாம்.
நன்றி நண்பரே...
பாலா கூறியது...
//மாமியாருக்கு சோப்பு போட்டவர் என்ற வார்த்தையை நான் உபயோகிக்க வில்லையே?//
பொதுவாகத் தான்[நீங்கள்(எல்லோர்க்குமல்ல)...] இந்தக் கருத்தைச் சொன்னேன்.
பாலா கூறியது...
//எங்காவது ஒரு இடத்தில் ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும்னு ஒரு வார்த்தை கண்டுபிடிச்சு சொல்லுங்க பார்க்கலாம்.//
இல்லைதான்.
அண்மைய காலத்தில் (இதுவரை) நடிகர்களது அரசியற் பிரவேசம் தமிழ்நாட்டில் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதனால், தங்கள் கருத்துகளோடு சொல்ல விளையும் யதார்த்தத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.
எனினும், எதிர்காலத்தில் நடிகர்களது அரசியற் பிரவேசத்தின் தாக்கத்தை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். (தாக்கத்துக்கான வாய்ப்புகள் மிகக் குறைவுதான்!?)
தங்களது பதிலுக்கு நன்றி, பாலா.
//என்னுடைய வலைத்தளத்தில் எங்காவது ஒரு இடத்தில் ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும்னு ஒரு வார்த்தை கண்டுபிடிச்சு சொல்லுங்க பார்க்கலாம். //
அப்படின்னா
//அவர் முதல்வரானால் கூடுதல் மகிழ்ச்சி. அவ்வளவுதான்.// இதற்க்கு என்ன அர்த்தம்? உங்க தலைவர் முதல்வரானால் உங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி வருவது போல விஜய் ரசிகனுக்கும் கூடுதல் மகிழ்ச்சி அடைய ஆசைப் பட மாட்டானா? உங்க தலைவருக்கு ஐஸ் முத்தம் கொடுத்தால் அது சனா என்னும் கேரக்டர் வசீகரன் என்ற கேரக்டருக்கு கொடுத்தது, அதே சமயம் விஜய் சங்கவிக்கு சோப்பு போட்டால் அது விஜயே நேரா சங்கவிக்கே போட்டது. உங்க தலைவரின் அரசியல் நடவடிக்கைகள், திரையில் தோன்றும் காட்சிகள் பற்றி அடுத்தவர்கள் செய்யும் விமர்சனத்தை காட்டமாக எதிர்க்கும் நீங்கள், அதையே விஜய்க்குச் செய்கிறீர்கள். அதை யாராவது சுட்டிக் காட்டினால், அவர்களுக்கு உங்க தலைவர் மேல வன்மம் இருக்கிறது, அவரது வெற்றியை /வளர்ச்சியைப் பார்த்து வயிறு எரிந்து போய் இருக்கிறார்கள் என்று அர்த்தம் கற்பிக்கிறீர்கள். ஏனிந்த Double standards என்பது தான் என் கேள்வி.
@Jayadev Das
அப்படியானால் தன்னுடைய ரசிகனுக்கு மகிழ்ச்சி அளிக்கவாவது விஜய் முதல்வராக வேண்டும் என்று சொல்கிறீர்கள். சரிதானே?
விஜய் சங்கவிக்கு சோப்பு போட்டாலோ, அவரை தடவினாலோ யாரும் கேட்க போவதில்லை. அதை எல்லா நாயகர்களும் செய்வதுதான். அதே போல சம்பந்த படத்தில் நடித்த ஸ்ரீவித்யாவுக்கு போட்டதையும் நான் குறிப்பிடவில்லை. சமீபத்தில் மாமனார் மருமகளை காதலிப்பது போல வந்த படத்தை ஏன் எல்லோரும் எதிர்த்தார்கள்? சம்பந்த பட்ட நடிகர்கள் மீதுள்ள வயிற்றெரிச்சலா? எந்திரனில் ஐஸ்வர்யா நிஜமாகவே அபிஷேக் பச்சனின் மனைவியாக நடித்து, அவருக்கு ரஜினி முத்தம் கொடுத்திருந்தால் நீங்கள் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது.
விட்டால் நாடகத்தில் ஸ்த்ரீபார்ட் போட்டு நடிக்கும் ஆண்களை கதாநாயகன் காதலித்தால் அவர்களை ஓரினசேர்க்கையாளர்கள் என்று சொல்வீர்கள் போலிருக்கிறதே?
@Jayadev Das
ஒரு விஷயத்தில் ரஜினி எதுவும் பேசாவிட்டால் அதற்கு ஒரு அர்த்தம் கற்பிப்பது, பிறகு பேசினால் அதற்கு ஒரு அர்த்தம் கற்பிப்பது, அரசியல் வேண்டாம் என்றால், ரசிகனின் கடிதம் என்ற பெயரில் கண்டன கடிதம் எழுதுவது, வேண்டும் என்றால் நடுநிலையாளன் பெயரில் கண்டனம் எழுதுவது என்று இருப்பவர்களுக்கு என் எதிர் கருத்துக்களை தெரிவித்திருக்கிறேன்.
இந்த கட்டுரை விஜய் அவர்களை பற்றி நான் எழுதியது. இதில் உள்ள தவறுகளை சுட்டி காட்டாமல், நீங்களும் நம்ம கலைஞர் போல, அவன் தப்பு பண்ணலையா அதை பற்றி எழுத மாட்டியா என்று கேட்கிறீர்கள்.
பாலா கூறியது...
//அதே போல சம்பந்த படத்தில் நடித்த ஸ்ரீவித்யாவுக்கு போட்டதையும் நான் குறிப்பிடவில்லை.//
அது தவறுதலான சம்பவமாகவே படத்தில் காட்சிப் படுத்தப் படுகிறது.
(அப்படியிருந்தும், தேவையில்லாத காட்சிதான் அது)
பாலா கூறியது...
//சமீபத்தில் மாமனார் மருமகளை காதலிப்பது போல வந்த படத்தை ஏன் எல்லோரும் எதிர்த்தார்கள்?//
இதில் படத்தோட theme ஏ அதுதான்.
(எதிர்ப்பைப் பற்றி நான் தற்போது கருத்துக் கூற விரும்பவில்லை)
மொக்கைப் படமாக இருந்தாலும் ரசிகன் படத்தையும் பலர் பார்த்திருக்கிறார்கள் போலுள்ளது.
உ-தகவல்: ரசிகன் படம் வந்து 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
//விட்டால் நாடகத்தில் ஸ்த்ரீபார்ட் போட்டு நடிக்கும் ஆண்களை கதாநாயகன் காதலித்தால் அவர்களை ஓரினசேர்க்கையாளர்கள் என்று சொல்வீர்கள் போலிருக்கிறதே? //
//இந்த கட்டுரை விஜய் அவர்களை பற்றி நான் எழுதியது. இதில் உள்ள தவறுகளை சுட்டி காட்டாமல், நீங்களும் நம்ம கலைஞர் போல, அவன் தப்பு பண்ணலையா அதை பற்றி எழுத மாட்டியா என்று கேட்கிறீர்கள். //ஹா...ஹா....ஹா... சும்மா என்னோட நண்பர் மாதிரியே நானும் பிக்காலித் தனமா எழுதிப் பாத்தேன்.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி .
உண்மைகளை எடுத்து இயம்பி உள்ளீர்கள்
இதுதான் முக்கியம்
அருமையான பதிவு .
காலத்துக்கு ஏற்ற பதிவு
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...
நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
mulukka mulukka niyayamana karuthukkal
Post a Comment