டிஸ்க்: நான் கீழே சொல்லப்போகும் இரண்டு கருத்துக்களுமே நெருப்பு சம்பந்தமானவை. ஆனால் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை. எல்லாம் என் சொந்த கருத்துக்களே. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டவை அல்ல.
பட்டாசோ பட்டாசு
"பட்டாசு ஆலையில் வெடி விபத்து". சமீப காலமாக அடிக்கடி நாளிதழ்களில் சாதாரணமாக நாம் காணும் ஒரு செய்தி. "இதற்கு யார் காரணம்?" என்று பெரிய பட்டிமன்றமே நடந்து வருகிறது. நமது அரசு பட்டாசு ஆலைகளுக்கென்றே நிறைய விதிமுறைகளை பட்டியலிட்டிருக்கிறது. அவற்றை ஆலை நிர்வாகங்கள் பின்பற்றுகின்றனவா? என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். நல்ல காற்றோட்டமுள்ள, நான்கு பக்கமும் வாசல் இருக்கும் அறைகள் நல்ல இடைவெளியில் அமைந்திருக்க வேண்டும். ஒரு அறைக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் ஆட்கள் வேலை செய்ய வேண்டும் என்பது மாதிரியான பல சட்ட திட்டங்கள் இருந்தாலும் அவை வெறும் சட்டங்களாக பேப்பரியிலே இருக்கின்றன நடைமுறைப்படுத்துவதில்லை.
சிவகாசியை பொறுத்தவரை குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த நகரங்களில் ஒன்று. இங்கு சிறியதும், பெரியதுமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இது போக ஆயிரக்கணக்கான தீப்பெட்டி ஆலைகளும் விருதுநர், சிவகாசி, சாத்தூர் போன்ற பகுதிகளில் இயங்கி வருகின்றன. இவற்றில் முறையாக அனுமதி பெற்று இயங்கி வருபவை சொற்பமே.இந்த பகுதிகளில் அடிக்கடி வருவாய்த்துறை அதிகாரிகள் ரெய்டுக்கு வருவார்கள். சும்மா சாமி விக்ரம் மாதிரி புயலாக ஆலைக்குள் நுழைந்து அதிரடி சோதனைகளில் ஈடுபடுவார்கள். அப்போதுதான் எல்லாம் கையும் களவுமாக பிடிபடும். "அவ்வளவு நல்லவைங்களா அவுங்க?" என்று நினைக்காதீர்கள். எவ்வளவு சிக்குகிறதோ அவ்வளவு லஞ்சம் தேறும்.
பட்டாசு கொளுத்துவது என்பதே நமக்கெல்லாம் ஆபத்தாக தோன்றும். ஆனால் பட்டாசு தயாரிப்பது என்பது அதைவிட பல மடங்கு ஆபத்தானது. பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் மருந்துகள் மிக ஆபத்தானவை. சில மருந்துகள் லேசாக தரையில் நகர்த்தி வைத்தாலே பற்றிக்கொள்ளும். இல்லை கொஞ்சம் வெப்பம் அதிகமானாலே வெடித்து விடும். மிகவும் ஸ்டிரிக்ட் ஆபீசர் மாதிரி காட்டிக்கொள்ளும் அதிகாரிகள் சில நேரங்களில் ஆர்வக்கோளாரில் மருந்துகளை சகட்டு மேனிக்கு கையாண்டு விபத்தில் சிக்குவதும் உண்டு. சென்ற வருடம் ஆகஸ்டில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் ஆறு அதிகாரிகள் இறந்தது நினைவிருக்கலாம். பட்டாசு ஊழியர்களை அதிகாரிகள் கீழ்தரமாக நடத்துவதும், அடிக்கடி வசூல் வேட்டைக்கும் வருவதால், அதிகாரிகள் மருந்துகளை தொட ஆரம்பித்ததும் தொழிலாளிகள் பாதுகாப்பாக தூரத்தில் போய் நின்று கொள்வார்கள். லாப நோக்கில் விதிமுறைகளை மீறி ஆலைகளை நடத்தும் நிர்வாகமும், லஞ்ச நோக்கத்திலேயே ரெய்டுக்கு வரும் அதிகாரிகளும் இருக்கும் வரையில் பட்டாசு ஆலைகள் குடிப்பது என்னவோ ஏழைகளின் உயிர்தான்.
சுவாமியே சரணம் அய்யப்பா
சமீபத்தில் இறை நம்பிக்கையாளர்களிடத்தில் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் மகரஜோதி பொய்யாக ஏற்றப்படுவது என்பதுதான். கடவுள் நம்பிக்கை விஷயத்தில் பல வேறுபாடான கருத்துக்கள் இருந்தாலும், தீவிர பக்தர்கள் மனதில் இந்த விஷயம் பெரிய காயத்தை ஏற்படுத்தி இருப்பதேன்னவோ உண்மைதான். தான் இவ்வளவு நாளாக உண்மை என்று நம்பி வந்த ஒரு விஷயத்தை திடீரென பொய் என்று சொல்லும்போது தாங்க முடியாத ஏமாற்றமும், மனச்சோர்வும் ஏற்படத்தான் செய்யும்.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் கடவுள் மறுப்பாளர்களும் (நாத்திகர்கள் என்று சொன்னால் என்னை பார்ப்பனன் என்று சொல்லி விடுவார்கள்), மாற்று மதத்தை சேர்ந்தவர்களும் இதை ஒரு கேலிபொருளாக ஆக்கி விட்டதுதான். என்னை பொறுத்தவரை இரண்டே பிரிவினர்தான் இருக்க முடியும், இறை நம்பிக்கையாளர்கள், மறுப்பாளர்கள். மதவாதிகள் அல்லது தனது சொந்த கடவுள்களை தவிர மற்ற கடவுள்கள் எல்லாம் கெட்டவர்கள் என்பவர்கள் கூட இறை மறுப்பாளர்தான். கடவுளை உண்மையாக உணர்ந்தவர்கள், எல்லாவற்றையும் கடவுள் அம்சமாகத்தான் பார்ப்பார்கள். என் இந்து நண்பர்கள் பலர் கிறித்துவ விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறோம். இசுலாமிய மதத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் எங்களுடன் திருப்பதி வந்திருக்கிறார். இது மத நல்லிணக்கம் என்பதை விட தன்னை வழி நடத்திச்செல்லும் ஏதோ ஒரு சக்தி அது எந்த வடிவமாக பார்க்கப்பட்டாலும் அது ஒன்றுதான் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே.
இறை மறுப்பாளர்கள் மகரஜோதி உள்பட பல விஷயங்களை மற்றவர்களை கிண்டல் செய்யும் ஒரு பொருளாகவே பாவிக்கிறார்கள். இறை மறுப்பு என்பது தன் மீது உள்ள அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படும்போது வரும் ஒரு உணர்வு. நான் உழைக்கிறேன், நான் உண்கிறேன். இதில் கடவுள் எங்கிருந்து வந்தார் என்று கேட்பார்கள். மிக சரி. இதைத்தான் எல்லா மதங்களும் சொல்கின்றன. பூஜைகள், வழிபாடுகள் எல்லாம் ஒரு ஆத்ம திருப்திக்காக செய்யபடுபவை. அந்த மட்டுக்கு அவை நல்லதுதான். ஆனால் அதுவே தன்னுடைய அகங்காரத்தின் வெளிப்பாடாக மாறும்போதுதான் பிரச்சனையே. மதங்கள் என்பவை கடவுளை ( இதற்கு சாமி என்று அர்த்தம் அல்ல. இதை எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்) அடைய வழி மட்டுமே. அதனோடு அகங்காரம் சேரும்போதுதான் மதவாதம் ஆகிறது. சொல்லப்போனால் இறைமறுப்பு என்பதும் மதவாதம்தான். ஒரு வகை அகங்காரத்தின் வெளிப்பாடுதான். விவேகானந்தரின் சொல்படி இறைமறுப்பு என்பது வேறு. பகுத்தறிவு என்பது வேறு. எல்லோருக்கும் கடவுளை காணும் வாய்ப்பு வரும். அப்போது பகுத்தறிவும், இறைமறுப்பும் போன இடம் தெரியாது.
டிஸ்க்: இங்கு கடவுள் என்ற பதம் கோவில், மசூதி, சர்ச்சில் இருப்பவைகளை குறிப்பதல்ல. கடவுள் என்பதை கற்பனை செய்து பார்க்க இயலாமல் ஒவ்வொருவரும் தனக்குள் உருவாகபடுத்தி கொண்டவையே அவை.
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
24 comments:
முதல் வடை
. சும்மா சாமி விக்ரம் மாதிரி புயலாக ஆலைக்குள் நுழைந்து அதிரடி சோதனைகளில் ஈடுபடுவார்கள். அப்போதுதான் எல்லாம் கையும் களவுமாக பிடிபடும். "அவ்வளவு நல்லவைங்களா அவுங்க?" என்று நினைக்காதீர்கள். எவ்வளவு சிக்குகிறதோ அவ்வளவு லஞ்சம் தேறும்.//
உண்மைதான்...செத்த பிறகுதான் ஆலை எப்படி இருக்குன்னே போய் பார்ப்பானுக
இறைமறுப்பு என்பதும் மதவாதம்தான். ஒரு வகை அகங்காரத்தின் வெளிப்பாடுதான். விவேகானந்தரின் சொல்படி இறைமறுப்பு என்பது வேறு. பகுத்தறிவு என்பது வேறு.//
சூப்பர் செம டச்சிங் வரிகள்..சிலருக்கு இந்த விசயம் உரைக்கவே உரைக்காது..பிள்ளையார் சிலையை உடைப்பதுதான் பகுத்தறிவு என நினைத்துக்கொள்கிறார்கள்
ஹ்ம்ம் நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க. மகர ஜோதி எனப் படுவது வானில் உதிக்கும் மகர நட்சத்திரம் தான். இது பலருக்கு ஏற்கனவேத் தெரியும். ஜோதியை பற்றி பலக் கதைகாலை பரப்பியது மீடியாதான்.
தமிழ்மணம் பட்டை எங்கே? இப்படி திரட்டிகளின் படைகள் இல்லாவிட்டால், பட்டையைக் கிளப்பும் உங்கள் பதிவுகளுக்கு நாங்கள்,ஓட்டுக்கள் போடுவது எப்படி?
கருத்து சொல்ல நிறைய இருக்கிறது..
அப்பறம் வரேன்...
PRESENT SIR
உங்கள் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு இருக்கு பாலா!
@ஆர்.கே.சதீஷ்குமார்
அதிகாரிகளின் மெத்தன போக்கே பல ஆலை விபத்துக்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
பகுத்தறிவு என்பதை ஒரு கட்சிக்கே உரிய சொத்தாக்கி ஆட்சியை பிடித்த நாடு இது. பிறர் மனதை புண்படுத்துவதே தொழிலாக கொண்டுள்ளனர் நம் பகுத்தறிவுவாதிகள்.
@எல் கே
உண்மையான வார்த்தைகள்.
@மாத்தி யோசி
தலைவரே அதை பற்றி எல்லாம் நான் யோசிக்கவே இல்லை. இணைக்க முயற்சி செய்கிறேன். நன்றி நண்பரே...
@ரஹீம் கஸாலி
அட்டெண்டன்ஸ் போட்டாச்சு
@Balaji saravana
நன்றி பாலா... :)
kalakkal..
@naan-naanaga
நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க.
// பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் மருந்துகள் மிக ஆபத்தானவை. சில மருந்துகள் லேசாக தரையில் நகர்த்தி வைத்தாலே பற்றிக்கொள்ளும். இல்லை கொஞ்சம் வெப்பம் அதிகமானாலே வெடித்து விடும். //
அதிர்ச்சியாக இருக்கிறது... ரொம்ப கஷ்டம்...
// நாத்திகர்கள் என்று சொன்னால் என்னை பார்ப்பனன் என்று சொல்லி விடுவார்கள்) //
பார்ப்பனியாசிஸ் பீதி இன்னும் இருக்கா...
@Philosophy Prabhakaran
தீக்காயம் என்பது சிவகாசி மக்களை பொறுத்தவரை அன்றாட நிகழ்ச்சி.
பார்ப்பனியசிஸ் என்ன எளிதில் போகக்கூடிய நோயா என்ன?
கடவுள் மருப்பாளர்கள், இறை நம்பிக்கையாளர்கள் [இவர்களில் சிலர், எல்லோரும் அல்ல] இருவரும் நூறு சதவிகிதம் சரியும் அல்ல, தவறும் அல்ல. பிரபஞ்சத்தை தோற்றத்தின் பின்னணியில் எதுவுமே இல்லை, தானாகவே எல்லாம் நடக்கிறது என்ற வகையில் இறை மறுப்பாளர்கள் கொள்கைகளை பரப்புவது தவறு. கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு மஞ்சள் துண்டு போட்டுக் கொள்வதும், பெரியாள் சிலைக்கு பூமாலை, தேங்காய், பழம், கற்பூரம் காண்பிப்பது, தலைவர்கள் நினைவு நாட்களில் அவர்கள் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவது, அங்கே ஐந்து நிமிடம் மவுனமாக நிற்ப்பது இவை அத்தனையும் அவர்கள் எடுத்துக் கொண்ட கொள்கைக்கு விரோதமானவை. இவை பகுத்தறிவு அல்ல. மூட நம்பிக்கை. [தொடரும்....]
அதே மாதிரி, கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் சாதாரண மனிதனைக் கடவுளாக்குவது தவறு. இதற்க்கு தலையில் Scarf கட்டிய பாபா, புசு புசு என முடி வளர்ந்த பாபா, கல்கி பகவான் நாங்கள் என்று சொல்லித் திரியும் புருஷன் பெண்டாட்டி புறம்போக்குகள், [அப்படியே ஆனாலும் ஒருத்தர்தானேப்பா, எதுக்கு ரெண்டு பேரு?], இலங்கையில் இருந்து ஓடிவந்து தமிழகத்தில் கற்பழிப்பு புரச்சி செய்த விராலிமலை சுவாமி [நடிகர் செந்திலின் ஜெராக்ஸ்!], "நான் பீடி குடித்தால் வாய் நாறாது, நீ குடுத்தால் வாய் நாறும் அதனால் நான் கடவுள்" என்றவர், கதவைத் திறக்கச் சொல்லி காற்றுக்குப் பதில் ரஞ்சிதம் வரவைத்தவர், நான்தான் அம்மா என்ற கீழ் மருவத்தூர் காரர் ... என்று சொல்லிக் கொண்டே போகலாம். [தொடரும்....]
இன்னொரு பக்கம் தவறான கொள்கைகளைப் பரப்புவது, இந்த வகையில் "பாழுங் கலை" தாடிக்காரன், ஷங்கர் ராமனை போட்டுத் தள்ளியவன், கட்டிப் பிடி வைத்தியம் பண்ணும் கேரளாக்காரி, கடவுளிடம் ஆத்மா ஸ்டாக் தீர்ந்து போகும் நிலைக்கு வந்துவிட்டதால் கல்யாணமே பண்ண வேண்டாம் என்று கொள்கை பரப்பும் "குமாரிகள்" என்று சொல்லிக் கொண்டே போகலாம். இந்தக் கொடுமை ஒருபக்கம் என்றால், மறுபக்கம் இல்லாத கட்டுக் கதைகளை உண்டு பண்ணி கடவுளை உண்டு பண்ணுவது. இந்த ஐயப்பன் கதை அப்படித்தான். வியாசர் எழுதிய எந்த புராணத்திலும் ஐயப்பன்உருவானதாகச் சொல்லப்படும் சிவன் விஷ்ணுவின் மோகினி அவதாரத்தை துரத்தி, புணர்ந்து பிள்ளை பெற்ற கதை இல்லவே இல்லை. வாழ்மீகியின் ராமாயணத்திலும் இல்லை. இவர்கள் இருவரும் சொல்லாததை அனுமானமாக எடுத்துக் கொள்ளவே முடியாது. இது கேரளாக்காரர்கள் திரித்து விட்டது. அப்பட்டமான புருடா. இதுவும் தவறுதான். சபரிமலை ஜோதி, அங்குள்ள ஒரு மலையில் குறிப்பிட்ட நாளில் கற்பூரம் கொளுத்தி ஏற்றப்படும் நெருப்பு, இது NDTV படமாக நான்கு வருடங்களுக்கு முன்னர் காண்பித்துவிட்டனர். மேலும் சபரிமலை பூசாரிகளே இதை ஒப்புக் கொண்டுவிட்டனர். இறை நம்பிக்கை வேண்டும், மூட நம்பிக்கை கூடாது. [முற்றும்]
லாப நோக்கில் விதிமுறைகளை மீறி ஆலைகளை நடத்தும் நிர்வாகமும், லஞ்ச நோக்கத்திலேயே ரெய்டுக்கு வரும் அதிகாரிகளும் இருக்கும் வரையில் பட்டாசு ஆலைகள் குடிப்பது என்னவோ ஏழைகளின் உயிர்தான்.
-----------------------
அருமையான ஒரு பதிவு.. பாவம் ஏழைகள்..
@Jayadev Das
தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி நண்பரே...
@Saleem S
நன்றி நண்பரே
Post a Comment