வர வர ஞாபக மறதி அதிகமாகி விட்டது. போன பதிவிற்கு முந்தய பதிவு என்று நினைக்கிறேன், மனதை வருடிய படத்தை பற்றி எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தேன். மறந்து விட்டேன். ஆகவே அதை கொஞ்சம் மாற்றி மனதை தொட்ட படங்கள் பற்றி எழுதுகிறேன். பொதுவாக நான் விரும்பும் படங்கள் எல்லாம் ரொம்ப பீலிங்கான படங்களாக இருக்காது. ஓரளவுக்கு பொழுது போக்கான படங்கள்தான் என்னை அதிகம் கவரும். மசாலா படங்கள் மீது கொஞ்சம் ஆர்வம் அதிகம். சும்மா சொல்லக்கூடாது மசாலா படங்கள் எடுக்கவும் திறமை வேண்டும். எல்லோராலும் மசாலா படங்கள் எடுத்துவிட முடியாது. அதனால்தான் கே எஸ் ரவிக்குமார் மாதிரி ஆட்களால் மட்டும் இன்னும் வெற்றி படங்களை கொடுக்க முடிகிறது.
ஹாலிவுட் : The Shawshank Redemption
முன்பெல்லாம் விஜய் டிவியில் தமிழாக்கம் செய்யப்பட்ட ஜாக்கிசான் படங்கள் மிக பிரசித்தம். தற்போது எல்லா டிவிக்களிலும் அதே மாதிரி படங்கள் ஒளிபரப்பபடுவதினால் பெரும்பாலும் பார்ப்பது கிடையாது. ஆனால் சந்தர்ப்பவசமாக சென்ற வாரம் கலைஞர் டிவி பார்த்தேன். ஒளிபரப்பான படம் தி ஷாஷங்க் ரிடெம்ப்ஷன். ஸ்டீபன் கிங் எழுதிய நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அற்புதமான படம்.
கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. 1947இல் மனைவியையும், அவளது கள்ளக்காதலனையும் கொன்ற குற்றத்துக்காக சிறைக்கு வரும் ஒரு வங்கி அதிகாரி ஆன்டி, ஏற்கனவே சிறையில் இருபது ஆண்டுகளாக இருக்கும் ஒருவருடன் நட்பு கொள்கிறான். அவர் பெயர் ரெட்(அஜித் அல்ல). அவர் கதை சொல்வது மாதிரிதான் படம் செல்கிறது. தனது அறிவின் மூலம், சிறையில் இருக்கும் அதிகாரிகளுக்கு லஞ்ச பணத்தை வெள்ளை பணமாக மாற்றி தருவதற்கு ஆடிட்டராகவும் பணி புரிகிறான் ஆன்டி. இதனால் அனைவரின் மதிப்பையும் பெறுகிறான். பதினெட்டு வருடங்கள் கழித்து, அதாவது 1965இல் சிறைக்கு வரும் ஒருவன் மூலம் கொலை செய்தது ஆன்டி அல்ல என்று தெரியவருகிறது. இருந்தாலும் தன்னுடைய திரை மறைவு வேலைகளுக்கு ஆன்டியை பயன்படுத்தி வந்த வார்டன், அவனை வெளியே விட மனமில்லாமல் ஆதாரங்களை அழித்து விடுகிறார். அதன் பின் நடப்பது என்ன? என்பதுதான் கதை.
முதன்முதலில் சிறைக்கு வருபவர்களின் முதல் நாள் இரவு எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பதை உணர்வுபூர்வமாக சொல்லி இருப்பார்கள். சிறையில் ஐம்பது வருடம் கழிந்த ஒரு முதியவர் வெளியே செல்ல மறுப்பதையும், அவர் வெளியே வந்தபின் உலகம் தலைகீழாக மாறி இருப்பதை கண்டு மிரள்வதையும் அருமையாக காட்டி இருப்பார்கள். மாறி உள்ள உலகத்துடன் ஒத்து வாழ இயலாமல் தற்கொலை செய்துகொள்வது சோகத்தின் உச்சம். வசனங்களும் நன்றாக இருந்தன.
நாற்பது வருடம் சிறையில் இருந்த ரெட் வெளியில் சென்று ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்கிறான். ஒவ்வொரு முறை உச்சா வரும்போதும் முதலாளியிடம் பெர்மிசன் கேட்கிறான் (சிறையில் வந்த பழக்கம்). அவர், "நீங்கள் என்னிடம் கேட்க வேண்டியதில்லை" என்று சொல்லும்போது, "நாற்பது வருஷ பழக்கம். கேட்காமல் போனால் வர மாட்டேங்குது." என்று சொல்வது நிதர்சனம். படத்தில் இந்தமாதிரி நறுக்கு தெறிக்கும் எதார்த்தமான வசனங்கள் ஏராளம். மெல்லிய உணர்வுகளை சொல்லும் இந்த படம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. இது வெளியான சமயம் பல்ப் பிக்சன்(Pulp Fiction) மற்றும் பாரெஸ்ட் கம்ப் (Forrest Gump) ஆகிய படங்கள் வந்ததால் இது அவ்வளவாக பிரபலம் ஆகவில்லையாம். பார்க்க வேண்டிய படம்தான்.
பாலிவுட் : தபாங்
முதலில் சொன்ன படத்துக்கு அப்படியே நேர்மாறான படம். மூக்கை துளைக்கும் மசாலா வாசனை படம் நெடுக வீசும். இந்த மாதிரி படங்களுக்கு கதை என்ற ஒன்றே தேவை இல்லை என்று மறுபடியும் நிரூபித்திருக்கிறார்கள். சுல்புல் பாண்டே தெனாவட்டான ஒரு போலீஸ் அதிகாரி. தன் தாயின் இரண்டாவது கணவர், மற்றும் அவரின் மகனுடன் ஒன்றாக இருக்கிறார். இருவரும் இவர் மீது வெறுப்பை உமிழ்ந்தாலும் தனது தாய்க்காக பொறுத்துக்கொள்கிறார். ஊரில் அடாவடி செய்யும் ஒரு கும்பலுக்கே பெரிய அடாவடியாக இருக்கிறார். காதல், நட்பு, தாய்பாசம் என்று எதை செய்தாலும் ஒரே அடாவடிதான். கொள்ளைக்காரர்களை விரட்டி பிடித்து அவர்கள் அடித்த பணத்தை இவர் அடித்து சென்று விடுகிறார். அவ்வளவு அடாவடி.
ஒரு கட்டத்தில் அந்த பணத்துக்காக தன் தாய் கொல்லப்பட, வில்லனை பழிவாங்குகிறார். படத்தின் பெரிய பலம் சல்மான்கான் . அவரை பார்த்தாலே நமக்கும் அந்த தெனாவட்டு வந்துவிடுகிறது. அசால்டாக ரவுடிகளை பந்தாடுகிறார். லாஜிக் இல்லாவிட்டாலும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. கதாநாயகி அவ்வளவு அழகு. சத்ருகன் சின்காவின் மகளாம். கடந்த ஆண்டு வெளிவந்து பாலிவுட்டின் அதிக வசூல் படங்களில் இடம்பிடித்தது இப்படம். பொழுதுபோக வேண்டுமானால் தாராளமாக பார்க்கலாம்.
கோலிவுட்: ஆடுகளம்
எங்கள் ஊரில் ஒரு வழியாக இளைஞனை தூக்கி விட்டு ஆடுகளம் திரையிட்டு விட்டார்கள். இதுவும் உணர்வு ரீதியான ஒரு படம்தான். மெல்லிய உணர்வுகள் இல்லாமல் முரட்டு உணர்வுகளை சொல்லும் படம். ஏற்கனவே பதிவுலகில் நன்கு அலசி ஆராய்ந்து விட்டதால் எதுவும் சொல்வதற்கில்லை. தனுசுக்கு மீண்டும் சொல்லிக்கொள்கிற மாதிரி ஒரு படம். அவர் நடிப்பு மிக அட்டகாசம். மதுரை பாஷை பேச கஷ்டபடுகிறார். செயபாலனுக்கு ராதாரவி குரல் கச்சிதமாக பொருந்துகிறது.பேட்டைக்காரனாகவே வாழ்ந்திருக்கிறார். கிஷோருக்குத்தான் சமுத்திரகனி குரல் ஒத்துவரவில்லை. அவரே பேசி இருக்கலாம். வெண்ணிலா கபடி குழுவில் நெல்லை தமிழ் பேசியவருக்கு இது கடினமா என்ன? இல்லை சமுத்திரகனியே நடித்திருக்கலாம்.
சேவல்கட்டு பற்றி நுணுக்கமான பல விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். படம் வெகு நேரத்துக்கு மனதை விட்டு அகலவில்லை. ஜிவி பிரகாசின் இசை படத்துக்கு படம் மெருகேறி வருகிறது. கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என்று எல்லோரும் திறமையை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக வெற்றிமாறன் சிறந்த இயக்குனர் என்று தன் முத்திரையை அழுந்த பதிந்திருக்கிறார். சமீப காலமாக இயக்குனர்களுக்காக திரை அரங்குகளுக்கு கூட்டம் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் இறுதி காட்சிதான் கொஞ்சம் அழுத்தம் இல்லாமல் இருக்கிறது.
மறுபடியும் ஞாபகமறதி. கதாநாயகி டப்ஸியை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாவிட்டால் எப்படி? பாடலாசிரியர் சரியாகத்தான் எழுதி இருக்கிறார். வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாகலான்னு. கதாநாயகியை பார்த்து முதன் முதலில் தனுசுக்கு ஏற்படும் எண்ணம்தான் நமக்கும் ஏற்படுகிறது. ஆடுகளம் பார்க்க வேண்டிய படம்தான்.
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
23 comments:
மறுபடியும் ஞாபகமறதி. கதாநாயகி டப்ஸியை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாவிட்டால் எப்படி? பாடலாசிரியர் சரியாகத்தான் எழுதி இருக்கிறார். வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாகலான்னு. கதாநாயகியை பார்த்து முதன் முதலில் தனுசுக்கு ஏற்படும் எண்ணம்தான் நமக்கும் ஏற்படுகிறது. ஆடுகளம் பார்க்க வேண்டிய படம்தான்.
-------------------------
நல்ல சொன்னிங்க கதாநாயகி டப்ஸியை பற்றி .. எனக்கும் அப்படி தான் தோணிச்சி படம் பார்க்கும் போது..
தாபங் -> சல்மான் கான் நடிப்பு சூப்பர்
present sir
நல்ல தொகுப்பு..
கதாநாயகி டப்ஸியை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாவிட்டால் எப்படி? பாடலாசிரியர் சரியாகத்தான் எழுதி இருக்கிறார். வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாகலான்னு. கதாநாயகியை பார்த்து முதன் முதலில் தனுசுக்கு ஏற்படும் எண்ணம்தான் நமக்கும் ஏற்படுகிறது. //
பாஸ் சூப்பரா இருக்கு உங்களோட திரைப் பார்வை! அப்புறம் இந்த வெள்ளாவி மேட்டர நம்ம வேறவிதமா டீல் பண்ணியிருக்கோம்! வந்து பாருங்க!
அருமை பாலா ...
@Saleem S
நன்றி நண்பரே... அடிக்கடி வாங்க
@ரஹீம் கஸாலி
அட்டெண்டன்ஸ் போட்டாச்சு
@ஆர்.கே.சதீஷ்குமார்
நன்றி தலைவரே....
@மாத்தி யோசி
முதலிலேயே பாத்துட்டேன். கமெண்ட் போடத்தான் கொஞ்சம் நேரம் ஆகிடுச்சு.
@இரவு வானம்
மிக்க நன்றி நண்பரே...
ஹி ஹி மூணுமே பாக்கல, அதிலும் முதல் ரெண்டும் பார்க்கும் சந்தர்ப்பமே இல்லை :-)))
@எப்பூடி..
கவலப்படாதீங்க, முதல் படத்தை திருவாளர் கவுதம் வாசுதேவும், இரண்டாவதை தளபதியும் ரீமேக்கினாலும் ஆச்சர்யம் இல்லை.
நீங்கள் போட்ட முதல் கமன்ட் எனக்கு வரவில்லை நண்பரே. ஏதும் டெக்னிக்கல் தவறாக இருக்கலாம்.
Sonakshi Sinha...
இந்த வருட கனவுக்கன்னி பட்டியலில் நிச்சயம் இடம் உண்டு... யாராவது தமிழுக்கு கூட்டிட்டு வாங்கப்பா...
டப்ஸி தமன்னாவுக்கு போட்டியா இருப்பார்னு நினைக்கிறேன். :)
:))
@எப்பூடி..
பரவாயில்லை. அடுத்த கமெண்ட் பப்ளிஷ் ஆகிடுச்சே..
நன்றி தலைவரே...
@Philosophy Prabhakaran
இவர் முகம் தமிழுக்கு ஒத்து வருமா என்று தெரியவில்லை. இருந்தாலும் கூட்டிட்டு வாங்கப்பா... ஹி ஹி
@Balaji saravana
ம்..ஆகலாம். நடிப்பில் கொஞ்சம் தேரவேண்டும்.
@karthikkumar
புன்னகைக்கு நன்றி...:))
Sonakshi Sinha...
நல்லாத்தான் இருக்காங்க ஹி ஹி ஹி
நீங்க ஹிந்தி படம்லாம் பார்ப்பீங்களா ,நமக்கு புரியாதுங்க
@நா.மணிவண்ணன்
நமக்கும் ஹிந்தி எல்லாம் அவ்வளவா தெரியாதுங்க. இந்த சப்டைட்டில்னு ஒண்ணை கண்டு பிடிச்சவனுக்குத்தான் கோவில் கட்டி கும்பிடனும்.
Post a Comment