விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

January 29, 2011

டெரர் செய்திகள் - விஜய்க்கு ஆப்பு !

டெரர் செய்திகள் டெரர் செய்தி #1: 
கடந்த சில நாட்களாக சில பல டெரர் செய்திகள் செய்தித்தாளில் தென்படுகின்றன. சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. இங்கிலாந்தில் ஒருவர் 29 வயதில் தாத்தா ஆகி விட்டார். அவருக்கு மகள் பிறந்தது 14 வயதில். தற்போது அவளுக்கு 14 வயது. கர்ப்பமாக இருக்கிறாளாம். அப்படியானால் 43 வயதில் கொள்ளுத்தாத்தா ஆகி உலக சாதனை படைக்கலாம். ஒரு உண்மை தெரியுமா? நான் இருபத்து நான்கு வயதிலேயே தாத்தா ஆகி விட்டேன். சந்தேகப்படாதீர்கள். எனக்கும் என் அக்காவுக்கும் பதினேழு வயது வித்தியாசம். என் அக்கா மகளுக்கும் எனக்கும் ஒண்ணரை வயது வித்தியாசம். என் அக்கா மகளுக்கு இரண்டாண்டுகளுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு முறைப்படி நான் தாத்தா. சரிதானே?

டெரர் செய்தி #2: 
தமன்னா, அனுஷ்கா ஆகியோரின் கலைசேவையை பாராட்டி கலைமாமணி விருதுகள் அறிவிக்க பட்டிருக்கின்றனவாம். இவர்கள் செய்த சேவை என்ன என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

என்னுடைய வருத்தம் என்னவென்றால் இவர்களுக்கு முன்பே, வெகுநாட்களாக கலைசேவையை தான் தலையாய செயலாக செய்து வரும் ஷகீலாவுக்கு ஏன் இன்னும் கலைமாமணி விருது அறிவிக்கபடவில்லை என்பதுதான். ஒரு வேளை அவர் அடுத்த ஆண்டு பத்மஸ்ரீ விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படலாம்.

டெரர் செய்தி #3:
மாலேகானில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி உயிருடன் எரித்து கொல்லப்பட்டிருக்கிறார். சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்தியாவில் போலீஸ்காரன், ரவுடி, அரசியல்வாதி மூன்று பேர்தான் உயிர் வாழ முடியும் போலிருக்கிறது (யாருப்பா அது, மூணுமே ஒண்ணுதான்னு சொல்றது?). இந்துமதம் எங்கே போகிறது என்பதை போல, பேசாம பால்தாக்கரேவை விட்டு இந்தியா எங்கே போகிறது என்று எழுத சொல்லலாம்.

டெரர் செய்தி #4: 

"எல்லா சாதியினரும் முதலமைச்சர் ஆகும்போது ஒரு வன்னியர் ஏன் முதலமைச்சர் ஆகக்கூடாது?" என்று ராமதாசு அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார். பேசாமல், "நான் ஏன் ஆகக்கூடாது?" என்று கேட்டிருக்கலாம். வர வர இவருக்கு காமெடி மிக சரளமாக வருகிறது. இவரால் காமெடி பீஸ் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் தெரிந்தோ தெரியாமலோ, ஆட்சியை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாகவே மாறி விட்டார். இவர்தான் காமெடி பீஸாகவே இருக்கிறார்.


விஜய்க்கு ஆப்பு 

உயர்திரு எஸ்எ சந்திரசேகர் அவர்கள் எம்ஜிஆர் படங்களுக்கு இடையூறு தந்ததைப்போல, தன் மகனுக்கு இடையூறு செய்கிறார்கள் என்று தன் மகனையும் எம்ஜிஆரையும் ஒப்பிட்டுள்ளார். இளைய தளபதிக்கு ஆப்பு வேறெங்கும் இல்லை. அவர் வீட்டிலேயேதான் இருக்கிறது.  அதை அவர் கண்டு கொண்டதாக தெரியவில்லை. மேலும் திரு விஜய் அவர்கள் குடியரசு தினம் அன்று எல்லா சேனல்களிலும் அஸினுடன் ஜோடியாக தோன்றினார் என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயா டிவியில் பேசும்போது மட்டும் ஆளும்கட்சியையும், அவர்கள் சார்ந்த தொலைக்காட்சிகளையும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல குத்தி குத்தி குறும்பாக பேசிக்கொண்டிருந்தார். ஒரு வேளை ஆளும் கட்சிக்காரர்கள் ஜெயாடிவி பார்க்க மாட்டார்கள் என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது.

இந்த போட்டோவை எடுத்தவர் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி 

போதாக்குறைக்கு அவரது ரசிகர்கள் வேறு விஜய் அவர்கள் திமுகவுக்கு எதிராக வாய்ஸ் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள். சுமாரான ஒரு படத்துக்கே, "தடைகளை வென்ற தளபதி!", "எதிரிகளை அழித்த தளபதி!!" என்று முழங்கும் தளபதியின் படை, ஒருவேளை காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக திமுக தோற்று விட்டால் என்ன செய்வார்களோ? என்று உண்மையிலேயே டெரராக இருக்கிறது.

அதுசரி பேப்பரில் காவலன் இந்த ஆண்டின் முதல் வெற்றி, சிறுத்தை பத்தாண்டுகளின் மகத்தான வெற்றி, ஆடுகளம் சாதனை வெற்றி என்று போடுகிறார்கள். எதை நம்புவது?

தமிழக மீனவர்களின் வேதனைக்காக கந்தசாமிக்கு (பார்க்க கருத்து கந்தசாமி) கருத்து தந்து உதவிய அதிஷா அவர்களுக்கு மிக்க நன்றி 

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

   

41 comments:

சௌந்தர் said...

ஒருவேளை காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக திமுக தோற்று விட்டால் என்ன செய்வார்களோ? என்று உண்மையிலேயே டெரராக இருக்கிறது.////


ஆமா இது வேறை இருக்குல இவரால் தான் ஆ.தி.மு.க வெற்றி பெற்றது சொல்வார்.....இந்த கொடுமையை எல்லாம் நாம பார்க்க வேண்டியிருக்கு

Unknown said...

ஹா ஹா ஹா கடைசியா சொன்ன மேட்டரு நிதர்சனம்தான், அருமையா இருக்குங்க ...

ராஜகோபால் said...

//என் அக்காவுக்கும் பதினேழு வயது வித்தியாசம். என் அக்கா மகளுக்கும் எனக்கும் ஒண்ணரை வயது வித்தியாசம். என் அக்கா மகளுக்கு இரண்டாண்டுகளுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.//


உங்க அப்பா ரொம்ப பொறுமைசாலிங்க

karthikkumar said...

:))

NKS.ஹாஜா மைதீன் said...

நல்லா நறுக்குன்னு டெர்ரரா கலக்கிட்டிங்க

ரஹீம் கஸ்ஸாலி said...

ஆஹா...டெரர் செய்திகள் ஒவ்வொன்னும் கலக்கல் ராகம். அடிக்கடி எழுதுங்க பாஸ். வள்ளி படத்தில் ரஜினி தலைகாட்டுவதுபோல எப்பவாவது தலைகாட்டுறீங்களே

"ராஜா" said...

//உயர்திரு எஸ்எ சந்திரசேகர்

அது என்ன உயர்திரு ....இதுல ஏதாவது உள்குத்து இருக்கா?

// தடைகளை வென்ற தளபதி!", "எதிரிகளை அழித்த தளபதி!!

யாருப்பா அந்த பதினொரு பேர் கொண்ட குழு... அதுல ஒருத்தர் பேரு எனக்கு நல்லாவே தெரியும் ...

//காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக

யார காக்காண்ணு சொல்லுறீங்க .. விஜையவா? பாவங்க காக்கா அத இந்த அளவுக்கு அசிங்கபடுத்த கூடாது ....

"ராஜா" said...

கல்யாணமாகமலே தாத்தா ஆகிட்டீங்க? நாளைக்கு பிறக்க போர உங்க பையனை உங்க பேத்தி என்ன சொல்லி கூப்பிடுவாள்? #டவுட்டு

Pavi said...

பல சுவாரசியங்களுடன்
அருமை

பாலா said...

@சௌந்தர்

அதுமட்டுமில்ல அதுக்கப்புறம் அவர் படங்களில் அரசியல் டயலாக்குகளை கேட்கும் கொடுமையும் நடக்கும்.

தமிழண்டா ....

பாலா said...

@இரவு வானம்

நன்றி தல...

பாலா said...

@ராஜகோபால்

யார் சொன்னது. ரெண்டுபேருக்கும் பதினேழு வருட இடைவெளி என்றுதானே சொன்னேன். இடையில் இரண்டு அண்ணன்கள் ஒரு அக்கா இருப்பதை சொல்லவில்லையே...

பாலா said...

@karthikkumar

புன்னகைக்கு மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@NKS.ஹாஜா மைதீன்

நன்றி நண்பரே

பாலா said...

@ரஹீம் கஸாலி

அடிக்கடி எழுத முயற்சி செய்கிறேன் நண்பரே. மிக்க நன்றி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vijay ?? pongka thambi...

பாலா said...

@"ராஜா"

//.இதுல ஏதாவது உள்குத்து இருக்கா

நீங்க வேற. நாளைக்கே அவர் ஏதாவது துறைக்கு மந்திரி ஆனாலும் ஆச்சர்யம் இல்லை. ஆகவே ஒரு முன்னேற்பாடு.

முதலில் பதினொரு பேரு தேருவார்களா?

காக்காவை அந்த அளவுக்கு கேவல படுத்துவேணா? நான் சொன்னது விஜய் ரசிகர்களை.

என் பேத்தி என் மகனை சித்தப்பா என்றுதான் சொல்ல வேண்டும். காலக்கொடுமை.

பாலா said...

@Pavi

நன்றி சகோ...

பாலா said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

ரைட்டு...

ப்ரியா said...

//என்னுடைய வருத்தம் என்னவென்றால் இவர்களுக்கு முன்பே, வெகுநாட்களாக கலைசேவையை தான் தலையாய செயலாக செய்து வரும் ஷகீலாவுக்கு ஏன் இன்னும் கலைமாமணி விருது அறிவிக்கபடவில்லை என்பதுதான்//
//இந்தியாவில் போலீஸ்காரன், ரவுடி, அரசியல்வாதி மூன்று பேர்தான் உயிர் வாழ முடியும் போலிருக்கிறது (யாருப்பா அது, மூணுமே ஒண்ணுதான்னு சொல்றது?)//
படித்ததும் சட்டென்று சிரிப்பு வந்தது .. நல்ல எழுதி இருக்கீங்க ..
இது போன்று இன்னமும் எழுதுங்க ,, நன்றி...

மதுரை சரவணன் said...

ஷகிலா மேல் உள்ள அனுதாபம் புரிகிறது. காடுவெட்டிகள் பற்றிய செய்தி நகைச்சுவை. வாழ்த்துக்கள்

எப்பூடி.. said...

எல்லா மேட்டரும் நல்லாயிருக்கு, அதில நம்ம ராமதாசு காமடி செம சோக்காயிருக்குது. அப்புறம் அந்த விஜய் படத்தை எங்க எடுத்தீங்க? யாராவது புதுசா வீடு கட்டினா நாத்திட்டி கழிக்க (வீட்டு முன்னாடி மாட்ட) இந்த படத்தை பரிந்துரை செய்யுங்க :-))

Philosophy Prabhakaran said...

ஏன்...? அமலா பால் கலைச்சேவை ஆதரவே இல்லையா...? வன்மையாக கண்டிக்கிறேன்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹாய் பாலா தாத்தா! எப்புடி இருக்கீங்க? கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் இடிச்சு தரவா? ( உங்களுக்குத்தான் பல்லே இல்லையே ) அப்புறம் டெரர் செய்திகள் செம கிக்கு! சிரிச்சு முடியல! அனுஷ்காவையும், தமன்னாவையும் கிண்டலடித்த உங்களுக்கு என்ன பனிஷ்மென்ட் தரலாம் னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்!அதுசரி தமிழ் 10 , உலவு இதுல எல்லாம் நீங்க ஜாயின் பண்ணலையா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Philosophy Prabhakaran கூறியது...

ஏன்...? அமலா பால் கலைச்சேவை ஆதரவே இல்லையா...? வன்மையாக கண்டிக்கிறேன்...

30 ஜனவரி, 2011 3:29 am//

அதானே! நானும் வன்மையா கண்டிக்கிறேன்! அமலா பால் வாழ்க!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹி.... ஹி..... ஹி.... இந்தியாவுல இப்போ நேரம் அதிகாலை நான்கு மணியாகுது! பாலா சார் நல்லா தூங்கிக்கிட்டு இருப்பார்! காலையில எந்திரிச்சு ப்ளாக் பாத்து ஷாக்காயிடப் போறார்!அனுஷ்கா வாழ்க! தமன்னா வாழ்க!! இருவரையும் கிண்டலடித்த பாலா சாரை வன்மையாக கண்டிக்கிறோம்!- வருத்தப்படும் வாலிபர் சங்கம் -

பாலா said...

@எதிர்வீட்டு ஜன்னல்

உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். நன்றி சகோ...

பாலா said...

@மதுரை சரவணன்

நன்றி நண்பரே...

பாலா said...

@எப்பூடி..

பாவம் தலைவரே. அந்த போட்டோவை வீட்டு முன்னால மாட்டுனா ஒரு பய வீட்டுக்கு வரமாட்டான்.

பாலா said...

@Philosophy Prabhakaran

அமலா பாலுக்கு அதுக்குள்ள பட்டம் கொடுத்து பழைய நடிகை ஆக்கணுமா? அவுங்க இன்னும் நிறைய சேவை பண்ணனும்.

பாலா said...

@மாத்தி யோசி

சின்ன வயசுலேயே தாத்தா ஆனா இதான் நிலைமை. :))

அவங்களை எல்லாம் விருது கொடுத்து பழைய நடிகை ஆக்கிட்டா அப்புறம் இமேஜ், கேரக்டருக்கு முக்கியத்துவம்னு இழுத்து போர்த்திக்கிட்டு நடிக்க ஆரம்பிச்சுட்டா நம்ம நிலைமை என்ன ஆகும்?

எனக்கு தமிழ்10 உலவு இத பத்தி எல்லாம் தெரியவே தெரியாது (சத்தியமா...) தமிழிஷ்ல இணைக்கிறதே ஒரு சம்பிரதாயத்துக்குத்தான். பின்னே ஒவ்வொரு தடவை பதிவிடும் போதும் இணைப்பது ஒரு வேலை ஆகி விடுகிறது.

பாலா said...

@மாத்தி யோசி

கண்டிப்பா ஷாக் ஆக மாட்டேன். இரண்டு மணி வரை விழித்துதான் இருந்தேன். ஆகவே நான் உங்கள் கமெண்ட்களை பார்க்கும்போது மதியம் ஆகி விடும்.

தமன்னா, அனுஷ்கா இவர்கள் எல்லாம் எனக்கும் பிடிக்கும். இவர்கள் மட்டுமல்ல எல்லாருமேதான்.

:))

சீக்கிரம் வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல சேருங்க.

Unknown said...

@டெரர் செய்தி #2:

அதுவும் ஒரு சேவைதானே , ஹி ஹி ஹி

r.v.saravanan said...

டெரர் செய்திகள் கலக்கல்

அருமையா இருக்கு

பாலா said...

@நா.மணிவண்ணன்

நல்ல சேவை போங்க...

Unknown said...

எல்லா விஷயங்களைப்பற்றியும் தெளிவாக அலசியிருக்கிறீர்கள். தெளிவான அலசல்.

பாலா said...

@r.v.saravanan

நன்றி தல

கார்த்தி said...

தகவல்கள் எல்லாம் சுப்பர். நச்சுன்னு நல்லா ஏறிச்சு. அதுசரி உண்மைய சொல்லுங்க தமிழ்நாட்டில் சறுதடதைதான முன்னுக்கு நிற்பதாக Behindwoods ஆதாரத்தோட சொல்லுது. உண்மையில் எது உண்மை. உங்களையும் நான் தொடர்கிறேன்.

Saleem S said...

டெரர் செய்திகள் சூப்பர்... எனக்கு பிடித்தது -- ( வெகுநாட்களாக கலைசேவையை தான் தலையாய செயலாக செய்து வரும் ஷகீலாவுக்கு ஏன் இன்னும் கலைமாமணி விருது அறிவிக்கபடவில்லை என்பதுதான். ஒரு வேளை அவர் அடுத்த ஆண்டு பத்மஸ்ரீ விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படலாம்.
)-- உங்கள் வார்த்தை பலிக்கட்டும் நண்பரே..

பாலா said...

@கார்த்தி

அதான் எனக்கும் ரொம்ப குழப்பமா இருக்கு. பொறுங்க கொஞ்ச நாளில் தெரிந்து விடும்.

பாலா said...

@Saleem S

பலித்தாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...