விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

June 17, 2010

அஜித்குமார்...ஆர்ப்பாட்டலலிதா... கால்பந்து


வருகிறார் தல...


அஜித் தன்னுடைய ஐம்பதாவது படத்தை பற்றி என்ன முடிவு செய்திருக்கிறார் என்று அவரின் ரசிகர், ரசிகர் அல்லாதோர் என அனைவரும் ஆவலாக இருக்கிறார்கள். இதற்கிடைய அவர் ஐம்பதாவது படம் தயாநிதி அழகிரிக்காக கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார், என்பது முதன்முதலில் வந்த செய்தி. இடையில் நடிகர் சங்க களேபரம், பிரச்சனை என்று கிளம்பி, போங்கடா என்று கார் ஓட்ட சென்று விட்டார். பின் "கண்டிப்பாக திரும்பி வருவேன் படப்பிடிப்பு அக்டோபரில்!" என்று ரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்தார்.

நடுவே கவுதம் வேறு, "நான் அஜித்தின் ஐம்பதாவது, ஐம்பத்தொன்றாவது படம் இரண்டையும் இயக்குகிறேன். எல்லாம் ரெடி, அஜித் வந்தால் படப்பிடிப்பு ஆரம்பம்." என்று பேட்டி கொடுத்தார். திடீரென ஒரு வதந்தி பரவியது. அதாவது அஜித்துக்கு ஏற்கனவே இந்த பேனரில் படம் நடிக்க இஷ்டம் இல்லை. மறுக்க முடியாமல் தான் ஒத்துகொண்டார். படப்பிடிப்பை இழுத்தடித்தால் கடுப்பாகி கழற்றி விட்டு விடுவார்கள் என்று இப்படி செய்கிறார் என்று. இப்போது அஜித் தன் கார் பந்தயத்தை பாதியில் விட்டு விட்டு, உடனடியாக திரும்பி வருகிறார் என்று ஒரு செய்தி கசிகிறது. எனக்கென்னமோ தயாரிப்பு தரப்பில் விடுக்கப்பட்ட "ஸ்பெஷல்" வற்புறுத்தல் காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது . எனக்கு முதலிலேயே க்ளவுட் நைன் பேனரில் அஜித் நடிப்பது ஒரு உறுத்தலாகவே இருந்தது. அஜித்துக்கு தொலைக்காட்சியில் பேட்டி கொடுப்பது, படத்தை கூவி கூவி விற்பது இதெல்லாம் ஒத்துவராது. ஆனால் அவற்றை எல்லாம் செய்தாக வேண்டும். இவற்றை தவிர்க்கவே அவர் இழுத்தடித்திருக்கலாம். மேலும் அஜித் வருவது இன்னும் மர்மமாகவே உள்ளது. அப்படியே வந்தாலும் படப்பிடிப்புக்குதான் வருகிறார் என்றும் சொல்ல முடியாது. பொறுத்திருந்து பார்க்கலாம்.


காது கிழியுது... 

உலககோப்பை கால்பந்து போட்டிகள் ஜோராக தொடங்கி விட்டன. வழக்கம்போல் உற்சாகத்துக்கு ஒன்றும் குறைவில்லை. விளையாட்டு மைதானத்தில் ரசிகர்கள் ஊதும் நீண்ட குழல் போன்ற ஒரு வாத்தியம் ஆப்பிரிக்கர்களின் பாரம்பரிய வாத்தியமாம். அநியாயத்துக்கு ஊதி தள்ளுகிறார்கள். சத்தம் காதை கிழிக்கிறது. டிவியில் பார்க்கும் நமக்கே இப்படி என்றால், மைதானத்தில் விளையாடுபவர்களை நினைத்து பாருங்கள். விளையாடி முடிந்து ஒருநாள் முழுவதும் காதில் ங்கொய்... என்று கேட்டு கொண்டே இருக்கும். வீரர்கள் எல்லாம் கதறிக்கொண்டு புகார் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் பிபா ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரித்து விட்டது.


தடுமாறும் பெரிய அணிகள்...

முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக முன்னணி அணிகள் எல்லாம் தடுமாற்றமாக ஆடுகின்றன. அதிரடியான பிரான்ஸ் அணி கோல் அடிக்க பகீரத பிரயத்தனம் செய்தது. ஆனால் முடியவில்லை. வலுவான கிரீஸ் அணி கொரியாவின் நண்டு பிடி ஸ்டைல் ஆட்டத்தில் மண்ணை கவ்வியது. நைஜீரியாவை துவைத்து எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டைனா கோல் அடிக்கவே கஷ்டப்பட்டது. ஒரு வழியாக ஒரே ஒரு கோல் போட்டு பெருமூச்சு விட்டது. இதே நிலைதான் பிரேசிலுக்கும். கொஞ்சம் கவனம் பிசகி இருந்தாலும் இங்கிலாந்துக்கு ஏற்பட்ட நிலைதான் பிரேசிலுக்கும் நடந்திருக்கும். இங்கிலாந்தின் கோல்கீப்பர் செய்த சிறு தவறால் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இத்தனைக்கும் அமெரிக்கா அப்படி ஒன்றும் நன்றாக ஆடவில்லை. ஜெரார்ட், ரூனி ஏமாற்றம் அளித்தனர். நடப்பு சாம்பியன் இத்தாலியின் நிலை இன்னும் மோசம். ஒரு கட்டத்தில் தோல்வியை நெருங்கி கொண்டிருந்தது இத்தாலி. வெற்றி பெறவேண்டும் என்பதை விடுத்து ஒரு கோலாவது அடித்து டிரா செய்து விடவேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளானது. அவர்கள் ஆட்டத்தில் ஒரு சிரத்தையே இல்லை. இத்தாலிக்கு மயிரிழையில் தப்பிய ஆபத்து ஸ்பெயினை பிடித்துக்கொண்டது. இதை அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். போர்சுகல் அணியின் ஆட்டம் படுமோசம்.

முதல் சுற்றில் நான் எதிர்பார்த்த ஜெர்மனி அணி நன்றாகவே செயல் பட்டது. பொதுவாகவே ஆஸ்திரேலியா அணி எனக்கு பிடிக்காது (கிரிக்கெட்டும் ஒரு காரணம்). ஜெர்மனி துவைத்து எடுத்து விட்டது. அவர்களின் ஆட்டத்தில் வழக்கமாக காணப்படும் ஒரு அசுர வேகம் வெளிப்பட்டது. தோல்வியை நெருங்கினால் ஆஸ்திரேலியா எடுக்கும் ஒரு ஆயுதம், வார்த்தை விளையாட்டு. ஜெர்மனி வீரர்களை நக்கல் செய்து வெறுப்பேற்ற தொடங்கினர். ஆனால் ஜெர்மனி அதற்கு அசரவில்லை. முதல் சுற்றுதான் நடந்து கொண்டிருக்கிறது. இதை வைத்து எந்த முடிவும் செய்து விட முடியாது. முதல் சுற்றில் சொதப்பிய பெரிய அணிகள் எல்லாம் புதிய எழுச்சியுடன் வரும் என்று எதிர்பார்க்கலாம். 

பி.கு: பெரிய அணிகள் ஆடும் முக்கிய ஆட்டங்கள் எல்லாம் சொல்லி வைத்த மாதிரி நடு இரவு பன்னிரண்டு மணிக்கு தொடங்குகிறது. காலையில் கொட்டாவியை கட்டுப்படுத்த முடியவில்லை ...அஆவ்வ்வ்


ஆர்ப்பாட்டலலிதா... 


ஆளும் திமுக அரசு, இலவசங்கள், செம்மொழி மாநாடு, அரசு ஊழியர்களுக்கு ஐந்துநாள் விடுமுறை என்று அடித்து ஆடிக்கொண்டிருக்க என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறது அதிமுக. அரசுக்கு எதிராக பிரச்னையை கிளப்ப எந்த ஒரு பிடியும் கிடைக்கவில்லை. எனக்கு தெரிந்து திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதிமுக செய்யும் ஒரே காரியம் ஆர்ப்பாட்டம். ஒவ்வொரு ஊரிலும் சுழற்சி முறையில் "அம்மாவின் ஆணைக்கிணங்க" என்று பேனர் மாட்டிக்கொண்டு உப்புசப்பில்லாத விசயங்களுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். "ஆமா இவங்களுக்கு வேற வேலை இல்லப்பா!!" என்று முணுமுணுத்துக்கொண்டு மக்களும் இலவச டிவி வாங்க கிளம்பி கொண்டிருக்கின்றார்கள். உண்மையிலேயே மக்களை மயக்கும் வித்தையை சரியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறது திமுக அரசு. அடுத்த தேர்தலில் மைனாரிட்டி திமுக, மெஜாரிட்டி திமுக ஆனாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.


தூங்காதே தம்பி தூங்காதே..
இன்று காலை தினமலர் வெளியிட்ட செய்தி. என்னத்த சொல்ல? நீங்களே பாருங்கள்.
 நன்றி தினமலர்.


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க...

4 comments:

"ராஜா" said...

தல படம் பற்றி விரைவில் நல்ல சேதி வரும்

கால்பந்துன்னா என்ன கால் கிலோ பந்தா? எனக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது...

ஆர்பாட்டலலிதா அட்டகாசம் பண்ணுறாங்களா இல்ல அடங்க போறாங்களான்னு வர்ற தேர்தலுல பாக்கலாம்...

துணைவேந்தர்கள் ... ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்லை... மக்கா நீங்களாவது இப்பவே முழிச்சிகொங்க...

Yoganathan.N said...

நண்பரே, சில மாதங்களாக நம் ஹீரோவுக்கு ஏற்பட்ட/ஏற்படும் விஷயங்களை ஒரு summary போல அழகாக எழுதியுள்ளீர்.
என்னைப் பொருத்தவரை, தல கார் பந்தயத்தை முடித்து அக்டோபரில் தாராளமாக படத்தை ஆரம்பிக்கலாம்.
இது கண்டிப்பாக தயாரிப்பாளர் வளியுறத்தளால் நடந்திருக்காது. அதுகெல்லாம் அப்பாற்பட்டவர் அஜித். தனிப்பட்ட முடிவு என்று தான் எனக்கு தோன்றுகிறது.

நண்பர் ராஜா வலைப்பூவில் சொன்னது போல, உங்கள் இருவரிடமும் சில நாட்களாக சொல்ல வேண்டி ஒரு விசயம் இருந்தது. நல்ல தருணத்திற்காக காத்திருந்தேன்.
நம்ம தல அஜித்திற்காக exclusive forum ஒன்றைத் தொடங்கியுள்ளேன். உங்கள் இருவர் ஆதரவு இலலாமலா... இதோ:

http://ajith.freeforums.org/

Yoganathan.N said...

Btw, காற்பந்து பற்றிய விமர்சனம் நன்றாக உள்ளது.
நேற்று நடந்த அர்ஜென்தினா - கொரியா போட்டியில், அர்ஜென்தினா பட்டயைக் கிளப்பியது. இன்று உங்கள் ஜெர்மனி ஆட்டம் உள்ளது. மிக ஆவலாகக் காத்திருக்கிறேன். :)

Yoganathan.N said...

உங்களது இந்த தல பற்றிய சிந்தனையையும் forum-இல் போட்டுள்ளேன் (in General Updates/Tid-Bits section. நன்றி :)

--------------------

அந்த காதுகளைக் கிழிய வைக்கும் கருவியின் பெயர் vuvuzela. உற்று கவனிதால், அது ஈ மொய்க்கும் சத்தம் போல இருக்கும்.


//பி.கு: பெரிய அணிகள் ஆடும் முக்கிய ஆட்டங்கள் எல்லாம் சொல்லி வைத்த மாதிரி நடு இரவு பன்னிரண்டு மணிக்கு தொடங்குகிறது. காலையில் கொட்டாவியை கட்டுப்படுத்த முடியவில்லை ...அஆவ்வ்வ்//

உங்களிக்கு பன்னிரண்டு மணி என்றால், எனக்கு நள்ளிரவு 2.30 am. என் நிலமையை சற்று யோசித்துப் பாருங்கள். ஹிஹி

Related Posts Plugin for WordPress, Blogger...