ரெய்னா செய்த தவறு....
முந்தாநாள் இந்தியா, இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த ஒரு மொக்கை ஆட்டத்தை நிறையபேர் பார்த்திருக்கலாம். நானும் பார்த்து தொலைத்தேன். இலங்கை அணி ஏதோ பூர்வ ஜென்ம கடனை நிறைவேற்றுவது போல ஆடிக்கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் இந்த மைதானத்தில் முதலில் ஆடுபவர்கள் 300-க்கு மேலே எடுக்க முடியும் என்று கணிக்கப்பட்டது. விஷயம் அதுவல்ல. மைதானத்தில் அம்பயர், தில்ஷான் உட்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்த ஒரு விஷயம் நடந்திருகிறது. இதை நான் கூட கவனிக்கவில்லை. உடன் பணி புரியும் நண்பர் ஒருவர் சொன்ன பிறகுதான் அறிந்தேன்.அது என்னான்னு கேக்குறீங்களா? அதாவது இலங்கை பேட்டிங் செய்யும்போது முதல் பத்து ஓவர் கட்டாய பவர் ப்ளே முடிந்ததும், அடுத்த ஐந்து ஓவர்களை பவர் ப்ளே ஆக நினைத்துக்கொண்டு பீல்டர்களை வட்டத்துக்குள்ளேயே நிற்க வைத்து பந்து வீச செய்தார் ரெய்னா. பதினாறாம் ஓவரில் தான் அம்பயர் இன்னும் பவுலிங் பவர் பிளேவை எடுக்கவில்லை என்றவுடன் திடுக்கிட்டார். பவர் ப்ளே எடுத்தவுடன் முதலில் அம்பயரிடம் சொல்ல வேண்டும் என்றும் கூறினார். ஒரு பக்கம் தில்ஷான் நமுட்டு சிரிப்பு சிரிக்க, ரெய்னா முகத்தில் ஈயாடவில்லை. அதாவது பவர் ப்ளே இல்லாமேலேயே பீல்டர்களை வட்டத்துக்குள் நிறுத்தியபடி ஐந்து ஓவர்களை வீசி இருக்கிறார். பின் பதினேழாம் ஓவரில் இருந்து பவுலிங் பவர் ப்ளே ஓவர்கள் வீசப்பட்டிருக்கின்றன. ஆக மொத்தம் இலங்கைக்கு வீசப்பட்டது 25 பவர் ப்ளே ஓவர்கள்.
இதில் கொடுமை என்னவென்றால் இது அத்தனையும் அறிந்த பிறகும் இலங்கை தன் மந்தமான ஆட்டத்தையே ஆடி இருக்கிறது. அதாவது முதலில் வீசப்பட்ட ரெய்னாவின் கற்பனை பவர் ப்ளேயில் இலங்கை எடுத்த ரன்கள் வெறும் 13. அடுத்து வீசப்பட்ட நிஜ பவர் ப்ளேயில் அவர்கள் எடுத்தது 41. சரி இலங்கை எப்படி வேண்டுமானாலும் ஆடி விட்டு போகட்டும். அது விஷயமில்லை. ஒரு சர்வதேச போட்டியில், ஒரு பள்ளி சிறுவன் போல செயல்பட்டுள்ள ரெய்னாவை என்னை சொல்வது? இதை ரெய்னாவிடம் சொல்ல வேண்டும் என்று அம்பயருக்கு எந்த கட்டாயமும் இல்லை. அவர் நினைத்திருந்தால் 40 ஆவது ஓவரில் சொல்லி இருக்கலாம். ஆனால் ரெய்னா மீதுள்ள பரிதாபத்தால் சொல்லி விட்டார் போலும். அப்படி நடந்திருந்தால் ஒருவேளை இலங்கை இன்னும் அதிகமாக ரன்கள் எடுத்திருக்கும். ஜாக்கிரதையாக இருங்கள் ரெய்னா!!!
சிங்கம் அசிங்கமா?
திரை உலகில் ஒரு பிரச்சனை என்றால் ரஜினி ஏதாவது சொல்லியே ஆக வேண்டும். பின் அவர் என்ன சொன்னாலும் கும்முவதற்கு பலர் காத்திருப்பார்கள். அதே போல, பதிவுலகில் மிகவும் எதிர்பார்க்கும் படம் வெளிவந்தால் அதற்கு விமர்சனம் எழுதியே ஆக வேண்டும் என்பது விதி. இல்லை என்றால் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அப்படி எழுதி விட்டாலும் சும்மா விடமாட்டார்கள். உனக்கெல்லாம் விமர்சனம் ஒரு கேடா? நீ பார்ப்பதுதான் உலக சினிமாவா என்று கும்மி விடுவார்கள். பொதுவாக திரை விமர்சனம் என்று நான் எதுவும் எழுதுவதில்லை. ஏனென்றால் திரைப்படங்களை நான் திரை அரங்குகளோடு மறந்து விடுவேன். நான் ஆங்கில படங்கள் பற்றி எழுதுவது கூட அப்போது எனக்கு ஏற்பட்ட எண்ணங்கள்தான். வெகு நாட்களுக்கு பிறகு இரண்டரை மணி நேரம் போவதே தெரியாமல் நான் பார்த்த படம் என்றால் அது சிங்கம்தான். சூர்யா ஒரு உலகமகா நடிகன், அடுத்த கமல், சாக்லேட் ஹீரோ என்பது ஒரு புறமும், சூர்யா அடுத்த விஜய், குள்ளமானவர், இவருக்கு அனுஷ்கா கேக்குதா என்று மறுபுறமும் விமர்சனம் வந்தாலும், படம் பார்க்கும் போது இவை அனைத்தும் மறந்து போவதென்பது உண்மை. வாழ்க்கையை, நிதர்சனத்தை உணர்த்தும் ஒரு படம் அல்ல. பொதுவாக எனக்கு மசாலா படங்களை பார்க்க பிடிக்கும். ஆனால் சமீபத்தில் வந்த சுறா, தம்பிக்கு இந்த ஊரு போன்ற படங்களை பார்க்கும் போது ஏற்பட்ட எரிச்சல் இந்த படம் பார்க்கும் போது இல்லை என்பது உண்மை. சிங்கம் கம்பீரம் என்று சொல்ல முடியாவிட்டாலும், என்னை பொறுத்தவரை அசிங்கம் இல்லை.
சீமான் செய்வது சரியா?
ஐஃபா விழாவில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக்கூடாது என்று திரு சீமான் அவர்கள் போர்கொடி உயர்த்தி அதில் ஓரளவு வெற்றியும் பெற்று விட்டார் என்று சொல்லப்படுகிறது. எனக்கென்ன தோன்றுகிறது என்றால் திரை உலகினர் இந்த விழாவை புறக்கணித்து விட்டால் என்ன நடந்து விட போகிறது? அப்படி போகாதவர்கள் எல்லாம் உண்மையிலேயே தமிழ் உணர்வால்தான் போகவில்லை என்று கூற முடியுமா? அப்படியென்றால் போராட்டம் அறிவிக்கும் முன்பே அல்லவா முடிவெடுத்திருக்க வேண்டும்? போகாதவர்கள் எல்லாம் நமக்கெதுக்கு வம்பு என்று விலகி உள்ளது போலவே தெரிகிறது. எதிர்ப்பை காட்ட வேண்டுமென்றால் அதற்கு இதுதான் வழியா? இது விளம்பரம் தேடிக்கொள்வதற்கான வழி என்றே தோன்றுகிறது. அரசியல் ரீதியாக காட்டப்படும் எதிர்ப்புக்குத்தான் உண்மையிலேயே பலன் கிடைக்கும். இலங்கைக்கு செல்லும் கப்பல்களில் சரக்கு ஏற்ற விடாமல் போராடுவாரா? இல்லை வணிக ரீதியாக இந்திய இலங்கை தொடர்புகளை எதிர்த்து போராடுவாரா? இன்னும் மறை முகமாக நட்பு பாராட்டும் தமிழக முதல்வரை எதிர்த்து போராடுவாரா?
ஒரு பகடியும், ஒரு புனைவும், எதிர்வினைகளும்
கடந்த இரண்டு நாட்களாக ஒரு விஷயம் பதிவுலகில் ஒரு குறிப்பிட்ட சில நண்பர்களால் விவாதிக்கப்பட்டு பெரும் சாதி கலவரமாக உருவாகி உள்ளது. இந்த விஷயம் புகைய தொடங்கியதும் நான் ஆர்வமாக (ரோடில் யாராவது சண்டை போட்டால் எட்டி பார்ப்போமே அது போல) கவனித்தேன். மாறி மாறி வசைகள் பாராட்டுகள், தன்னிலை விளக்கம், மன்னிப்பு என்று ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தேறி விட்டன. ஒரு பக்கம் மானம், மரியாதை, ரோசம் என்றும், மறுபக்கம் ஆணாதிக்கம், பார்ப்பனியம் என்று ஆயுதத்தை தூக்கி கொண்டு மோதிக்கொள்கிறார்கள். இதில் யார் பக்கம் நியாயம் சொல்ல இயலாது. அவரவர்க்கு அவர்கள் சொல்வதுதான் நியாயம். ஆனால் பொதுவாக பலபேர் வந்து பார்க்கும் ஒரு வலைப்பதிவில் அபசகுனமான (நெகட்டிவான ) வார்த்தைகளை பயன் படுத்துவதையே நான் ஏற்றுகொள்ள மாட்டேன். ஆனால் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிடுவது என்பது தவறானது. புனைவு அது இது என்று சொன்னாலும் பதிவானதை மாற்றவா முடியும்? சாலையில் நின்று கெட்ட வார்த்தையில் கத்தி பாருங்கள். ஒருவனாவது வந்து நீ படித்தவன்தானா? என்று கேட்பான். அதன் காரணம் படித்தவன் வாயில் இருந்து இப்படியான வார்த்தைகள் வராது என்று பொருள். இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. என்னதான் படித்து விட்டாலும், அடிமனதில் பதிந்த ஒரு சில விஷயங்கள் மாறாது.
மேலே கூறிய விஷயம் என்ன என்று தெரியாதவர்கள் இந்த பதிவில் பாருங்கள்... போறதுக்கு முன்னாடி ஓட்டு போட்டுட்டு போங்க...
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...
14 comments:
//வெகு நாட்களுக்கு பிறகு இரண்டரை மணி நேரம் போவதே தெரியாமல்
தல குவாட்டர் அடிச்சிட்டு போய் தியேட்டர்ல தூங்கிட்டீன்களோ? ஆனா அவரு விடுற சவுண்டுல தூங்கவும் முடியாதே.. ஒருவேள ஏதாவது பிகர்கூட படம் பாத்தீங்களோ? நான்தான் தல தனியா போய் ரொம்ப கஷ்டபட்டுட்டேன்...
//படம் பார்க்கும் போது இவை அனைத்தும் மறந்து போவதென்பது உண்மை
ஆனா நான் குடுத்த அம்பது ரூபா வீணா போனது எனக்கு மறக்கவே மறக்காது தல ...
//ஆனால் சமீபத்தில் வந்த சுறா, தம்பிக்கு இந்த ஊரு போன்ற படங்களை பார்க்கும் போது ஏற்பட்ட எரிச்சல் இந்த படம் பார்க்கும் போது இல்லை என்பது உண்மை
சிங்கம் படம் பத்தி எழுதும்போது ஏன் சுறா வந்துச்சி.... நீங்க சுராகூட கம்பேர் பண்ணும்போதே தெரியுதே சிங்கத்தோட தரம்...
//சிங்கம் கம்பீரம் என்று சொல்ல முடியாவிட்டாலும், என்னை பொறுத்தவரை அசிங்கம் இல்லை.
சிங்கத்தில் ஆண்மையும் இல்லை...
//அம்பயர், தில்ஷான் உட்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்த ஒரு விஷயம் நடந்திருகிறது
எனக்கும் நீங்கள் சொன்ன பின்னாடிதான் தெரியும்... அந்த நண்பர் யாருன்னு சொல்லுங்க... வேல வெட்டி இல்லாம இந்த விசயத்தையும் கவனிச்சி சொல்லிருக்காரே அவர் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?
//இன்னும் மறை முகமாக நட்பு பாராட்டும் தமிழக முதல்வரை எதிர்த்து போராடுவாரா?
தல கலக்கிட்டீங்க... எப்படி உங்களால மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடியுது ....
//சாலையில் நின்று கெட்ட வார்த்தையில் கத்தி பாருங்கள். ஒருவனாவது வந்து நீ படித்தவன்தானா? என்று கேட்பான்.
சரோஜா தேவி புத்தகங்களா?
//இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. என்னதான் படித்து விட்டாலும், அடிமனதில் பதிந்த ஒரு சில விஷயங்கள் மாறாது.
முற்றிலும் உண்மை தல...
//ஆனா நான் குடுத்த அம்பது ரூபா வீணா போனது எனக்கு மறக்கவே மறக்காது தல
Neengal doctor check panna vendiya time vanthaagi vittathu.. Pavam neengalum enna thaan seiveergal.. visay attu padamah nadichu ungal rasanaiyaai matthi irukkaan
யோவ் நான் விஜய் ரசிகன்னு யார் சொன்னது... என்ன இப்படி அசிங்கபடுத்திட்டீங்களே...
// Pavam neengalum enna thaan seiveergal.. visay attu padamah nadichu ungal rasanaiyaai matthi இருக்கான்
ஆமாங்க நீங்க சப்போர்ட் பண்ணுற ஆளும் உலகபடமா நடிச்சி தள்ளிட்டாரு .... சிங்கம் அதுல குறிப்பிடப்படவேண்டிய உலக படம் .. போய் எல்லாரும் பாருங்க...
/Neengal doctor check panna vendiya time vanthaagi vittathu..
ஆமாங்க சிங்கம் படம் பாத்துட்டு உடனே அங்கதான் போனேன்... டாக்டர் இன்னும் கொஞ்ச நாளைக்கு சன் டிவி பாக்க வேணாமுன்னு சொல்லிருக்காரு...
//டாக்டர் இன்னும் கொஞ்ச நாளைக்கு சன் டிவி பாக்க வேணாமுன்னு சொல்லிருக்காரு...
sariyaana aalaiya neer.. visay padam illaamal sun tv serial vaeraya baesh.. baesh..
ஆமாங்க நீங்க சப்போர்ட் பண்ணுற ஆளும் உலகபடமா நடிச்சி தள்ளிட்டாரு .... சிங்கம் அதுல குறிப்பிடப்படவேண்டிய உலக படம் .. போய் எல்லாரும் பாருங்க.
neengalum ulagapadam paathuttaalum... thambi unga thalaivan padam vida ithu far better.. ithu naa sollallae.. ella bloggers review solluthu.. ponga thambi kappi thanama paesikittu
அடடா... ரெய்னா அப்படியா செய்தார். எல்லாம் அனுபவமில்லாமை தான் போல
//சூர்யா ஒரு உலகமகா நடிகன், அடுத்த கமல், சாக்லேட் ஹீரோ என்பது ஒரு புறமும், சூர்யா அடுத்த விஜய், குள்ளமானவர், இவருக்கு அனுஷ்கா கேக்குதா என்று மறுபுறமும் விமர்சனம் வந்தாலும்...//
ஹஹஹ. எப்படி இப்படி எல்லாம்...
//சிங்கம் கம்பீரம் என்று சொல்ல முடியாவிட்டாலும், என்னை பொறுத்தவரை அசிங்கம் இல்லை.//
உங்களைப் புரிஞ்சிக்கவே முடியலையே... எது எப்படியோ, படம் உங்களுக்கு திருப்தி, அதான் மேட்டர். :)
//இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.//
இரு முறை இப்படி உள்ளதே, நான் மிஸ் பண்ணிட்டேனோ...
//ella bloggers review solluthu.. ponga thambi kappi thanama paesikittu//
ஓ... ப்லோக்கர்ஸ்-ஏ சொல்லிட்டாங்களா???
@ராஜா
ஃபிரியா விடுங்க. நான் முன்பே சொன்னபடி, இதையே வேற ஹீரொக்கள் செய்திருந்தால், பலர் இப்படி இந்த அமர காவியத்திற்கு வக்காளத்து வங்க மாட்டார்கள். :P
@ "ராஜா"
ஒரு படத்தை கிண்டல் செய்யவேண்டும் என்று நினைத்து விட்டால் எப்பேர் பட்ட படத்தையும் கிண்டல் செய்து விடலாம். உங்களுக்கு படம் பிடிக்காமல் போனதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. இப்பதிவில் நான் சொல்லி இருப்பது படம் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட எண்ணங்கள். இதில் பொய் சொல்ல என்ன இருக்கிறது? சுராவுடன் ஒப்பிட்டு எழுதியதன் காரணம் சமீபத்தில் பார்த்த படம் என்பதால்தான். அதனால்தால் கூடியமட்டும் நான் கூறும் கருத்துக்களை என்னை பொறுத்தவரை என்று கூறுகிறேன்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே :))
@ Maduraimalli
வாங்க வாங்க...
@ எட்வின்
வருகைக்கு நன்றி நண்பரே...
@Yoganathan
கருத்துரைகளை நான் அகற்றவில்லை நண்பரே. கருத்திடுபவரே அகற்றி விட்டாலும் அப்படித்தான் வரும்..
வருகைக்கு நன்றி...
//neengalum ulagapadam paathuttaalum... thambi unga thalaivan padam vida ithu far better.. ithu naa sollallae.. ella bloggers review solluthu.. ponga thambi kappi thanama paesikittu
மதுரை மல்லிக்கு ஒரு டஜன் எலுமிச்சை பழம் ஆர்டர் பண்ணுங்கப்பா... பாஸ் நான் திரும்பவும் சொல்லுறேன் நான் விஜய் ரசிகன் கெடயாது... சிங்கம் என்ன கடிச்சி கொதறுனதுனால நொந்து போய் போட்ட கமெண்ட் தான் எல்லாமே... இதுல வேற நீங்க உலக படம் அது இதுன்னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க... டாக்டர பாக்க வேண்டியது நீங்கதான் தல... முத்தி போறதுக்குள்ள சீக்கிரம் போய் பாருங்க
@ பாலா
//ஒரு படத்தை கிண்டல் செய்யவேண்டும் என்று நினைத்து விட்டால் எப்பேர் பட்ட படத்தையும் கிண்டல் செய்து விடலாம்.
அதான எப்பேர்பட்ட பட்ட படத்தையும் கிண்டல் பண்ணலாம்கிற போது சிங்கம் எல்லாம் ஜுஜூப்பி... கிண்டல் பண்ணியே ஆகணும்...
//உங்களுக்கு படம் பிடிக்காமல் போனதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.
போங்க தல காமெடி பண்ணாதீங்க...
இப்படி ஒரு மொக்க படத்த நல்லா இருக்குன்னு சொல்லி இன்னும் நாலு பேர அந்த படத்த பாக்க வைக்க வேண்டாமே..
உண்மையைச்சொல்லவேண்டுமென்றால், எனக்கு "சிங்கம்" திரைப்படம் பிடித்திருந்தது... சண்டைக்காட்சிகளைத்தவிர மற்ற இடங்களில் லாஜிக் எல்லாம் ஓரளவிற்கு மீறப்படாமல் இருந்ததாகவே எனக்குத்தோன்றுகிறது. இது எனது கருத்து மட்டும்தான்... சுறா, வேட்டைக்காரன் போன்ற திரைப்படங்களை இதனுடன் ஒப்பிடுவதே எனக்கு சரியாகத்தோன்றவில்லை.
நன்றி!
//சண்டைக்காட்சிகளைத்தவிர மற்ற இடங்களில் லாஜிக் எல்லாம் ஓரளவிற்கு மீறப்படாமல் இருந்ததாகவே எனக்குத்தோன்றுகிறது
அப்படியா?????????????????
Post a Comment