விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 27, 2010

மன்னித்து விடுங்கள் மனைவிமார்களே!!!

எனக்கு மின்னஞ்சலில் வந்த நகைச்சுவையான ஒரு விஷயத்தை உங்களுக்கு தமிழ் படுத்தி தருகிறேன். இது மனம் விட்டு சிரிக்க மட்டுமே. யாரையும் புண்படுத்த அல்ல. மன்னித்துவிடுங்கள் மனைவிமார்களே!!!!


ஆண்கள் ஏன் மனைவியை விரும்புவதை விட தான் வளர்க்கும் நாய்களை அதிகம் விரும்புகிறார்கள்?

1. நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு லேட்டாக வீட்டுக்கு வருகிறீர்களோ அவ்வளவு பாசத்துடன் உங்களை ஓடி வந்து கட்டித்தழுவி முத்தமிடுவது உங்கள் வீட்டு நாய்தான். மனைவி விஷயத்தில் நடப்பதே வேறு...

2. நீங்கள் உங்கள் மனைவியின் பெயருக்கு பதிலாக வேறொரு பெண்ணின் பெயரை சொல்லி நன்றாக வாங்கி கட்டி கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டு நாயை வேறு ஒரு நாயின் பெயரை சொல்லி அழைத்து பாருங்கள். அது பெருந்தன்மையுடன் உங்களை கண்டு கொள்ளாது.


3. வீட்டில் பொருட்கள் இறைந்து கிடந்தால் உங்கள் மனைவிக்கு கேட்ட கோபம் வரும். ஆனால் உங்கள் வீட்டு நாய்க்கோ குஷியாகி விடும்.

4. மனைவியின் பிறந்த வீட்டில் இருந்து அடிக்கடி சொந்தக்காரர்கள் வந்து நம் வீட்டில் தங்கி நமக்கு இம்சை தருவார்கள். ஆனால் நம் நாய்க்கோ நம்மை விட்டால் யாருமே இல்லை. யாரும் வரப்போவதுமில்லை.


5. கோபத்தில் குரலை உயர்த்தினால் அடங்கிபோகும் ஒரே ஜீவன் நாய்தான். மனைவியிடம் குரலை உயர்த்தினால் என்ன நடக்கும் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.

6. உங்கள் நாயை வெளியே அழைத்து செல்வதற்கு நீங்கள் ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டாம். உங்களை காத்திருக்க வைக்காமல் நீங்கள் கிளம்பியவுடன் உங்களுடனே வந்து விடும்.


7. ஒரு நாள் குடித்து விட்டு வந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார் உங்கள் மனைவி. நீங்கள் குடித்திருந்தால் உங்களுடன் சேர்ந்து அதை என்ஜாய் பண்ணுவது நாயின் சிறப்பு.

8. நடு ராத்திரியில் எழுப்பி, நான் செத்துட்டா இன்னொரு நாய் வளர்ப்பீங்களா? என்று கேணத்தனமான கேள்வி எல்லாம் உங்கள் நாய் ஒரு போதும் கேட்காது.

9. சம்பந்தமே இல்லாமல் இன்னொரு பெண்ணின் வாசனை நம் மீது வந்தால் அவ்வளவுதான். விஜய், விஜயகாந்த் தோற்றுபோகும் அளவுக்கு பறந்து பறந்து அடி விழும். ஆனால் இன்னொரு நாயின் வாசனை நம் மீது வந்தால் அதை மனபூர்வமாக ஏற்றுகொள்வது நம் வீட்டு நாய்தான்.

10. நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு செலக்ட் செய்த செயின், நேக்லேசாக இருந்தாலும், "நீங்களும் உங்க டேஸ்டும்" என்று கரித்து கொட்டுபவர் உங்கள் மனைவி. ஆனால் செயினை மாட்டுவதை விட கழற்றுவதையே பெரிய சந்தோசமாக நினைக்கும் உங்கள் வீட்டு நாய்.


இறுதியாக....ஒரு கேள்வி

ஒரு அறைக்குள் மனைவியையும் இன்னொரு அறையில் நாயையும் அடைத்து வைத்து விட்டு சுமார் 24 மணி நேரம் கழித்து திறந்து விட்டால் யார் முகத்தில் அதிக மகிழ்ச்சி தெரியும்?  சிந்தியுங்கள்...

சரி இவ்வளவு நேரம் பெண்களை கலாய்த்து விட்டேன். அதற்கு பிராயச்சித்தமாக ஒரு பத்திரிகையில் நான் படித்த துணுக்கு ஒன்றை வெளியிடுகிறேன்.

இரண்டு கல்லூரி மாணவிகள் பேசிக்கொள்கிறார்கள்.


அவள்: "ஏண்டி எல்லா பசங்களும் கல்யாணம் பண்ணிக்க தைரியம் இல்லனாலும் நம்ம பின்னாடியே சுத்துறாங்க?
இவள்: "கார் ஓட்ட தெரியலனாலும், அத தொரத்திக்கிட்டே நாய் ஓடுறதில்லையா? அது மாதிரிதான்" 

மனசுல எதுவும் வச்சுக்காம ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...


8 comments:

வால்பையன் said...

கடைசியா கவுத்துபுட்டியே மக்கா!

அகல்விளக்கு said...

// வால்பையன் கூறியது...

கடைசியா கவுத்துபுட்டியே மக்கா//

repeat.....

beer mohamed said...

அது சரி நாய்க்கு மாலை போடுறது நீங்க தானா அது
http://athiradenews.blogspot.com

Bala said...

@வால்பையன்
@அகல்விளக்கு
கலாய்க்கிறதுன்னு முடிவு செஞ்சப்புறம் அதுல பாரபட்சம் காட்ட கூடாதில்லையா? அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன். எல்லாம் ஒரு சேப்டிக்கு தான். ஹி ஹி .
வருகைக்கு நன்றி நண்பர்களே!!

@beer mohamed
//அது சரி நாய்க்கு மாலை போடுறது நீங்க தானா அது

அய்யய்யோ எனக்கு கல்யாண வயசெல்லாம் ஆகல....
வருகைக்கு நன்றி தல...

Chitra said...

அவள்: "ஏண்டி எல்லா பசங்களும் கல்யாணம் பண்ணிக்க தைரியம் இல்லனாலும் நம்ம பின்னாடியே சுத்துறாங்க?
இவள்: "கார் ஓட்ட தெரியலனாலும், அத தொரத்திக்கிட்டே நாய் ஓடுறதில்லையா? அது மாதிரிதான்"..... ha,ha,ha,ha,ha.... :-)

Robin said...

:)

Yoganathan.N said...

மனம் விட்டு சிரித்தேன். கலக்கல். :)

Bala said...

@Chitra
வருகைக்கு நன்றி

@Robin
வருகைக்கு நன்றி தலைவரே...

@Yoganathen
வாங்க வாங்க அப்பப்ப எஸ்கேப் ஆயிடுறீங்க...

Related Posts Plugin for WordPress, Blogger...