சமீப காலமாக மாவோயிஸ்டுகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன் சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதலில் ஒரு பேருந்தில் சென்ற நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். இணையதள நண்பர் (தோழர்) ஒருவரிடம் சில நாட்களுக்கு முன் இது குறித்து என்னுடைய சந்தேகங்களை கேட்டேன். அதாவது மாவோயிஸ்ட்டுகள் என்பவர்களும் காம்ரேடுகள்தானே? அவர்கள் நோக்கம் முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டி சமத்துவத்தை நிலை நாட்டுவதாகத்தானே இருக்கும்? பின் ஏன் இப்படி தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார்கள்? இது என் கேள்வி. அதற்கு அவர் பதில் அவர் சட்டை கலரிலேயே வந்தது. நீங்கள் இங்கு வசதி வாய்ப்புகளை நிறைய வைத்துக்கொண்டு வாய்சவடால் பேசுவீர்கள், வடகிழக்கில் மக்களுக்கு அடிப்படை தேவைகள் கூட நிறைவேறவில்லை, ராணுவத்தால் மலைவாழ் பெண்கள் மானபங்க படுத்த படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? உரிமை கிடைக்காவிட்டால் பொங்கி எழுவது குற்றம் ஒன்றும் இல்லை. அது இயல்புதான் என்று கூறினார். அவர் சொன்ன பதிலையும் சமீபத்தில் நடந்த பேருந்து தாக்குதலையும் வைத்து பார்த்தால் அவர்கள் பக்கம் இருக்கும் நியாயம் புலனாகிறது.
இந்த தாக்குதலில் இறந்த காவல்துறையினர் கண்டிப்பாக லஞ்சம் வாங்கி இருப்பார்கள். அல்லது கொடுத்திருப்பார்கள். அவர்கள் சமூகத்தின் நச்சு. அதே போல இறந்தவர்களில் கண்டிப்பாக சிறு வியாபாரிகள் இருப்பார்கள். அவர்கள் எதிர்கால முதலாளிகள் அல்லது பண முதலைகள். அவர்கள் சாக வேண்டியவர்கள். சில விவசாயிகள் மற்றும் பாட்டாளிகள் இருக்கலாம். தன் இனம் எழுச்சி பெறுவதற்கு இந்த தியாகத்தை கூட செய்யாவிட்டால் எப்படி? குழந்தைகள் இருப்பார்கள். எப்படியும் அவர்கள் மேலே கூறிய ஏதாவது ஒன்றாக நிச்சயம் ஆவார்கள். பெண்கள், சொல்லவே வேண்டாம், அவர்களும் இதில் அடங்கும். இந்த வகையில் பார்த்தால் அவர்கள் செய்தது, செய்து கொண்டிருப்பது சரிதான்.
அய்யா தோழர்களே உங்கள் சக தோழர்கள் செய்யும் இந்த அரும்பணிக்கு நீங்களும் உறுதுணையாக இருங்கள். எனக்கு நீங்கள் சொல்லும் பகுத்தறிவு கிடையாது. நுண்ணரசியல் தெரியாது. மனித நேயம் தெரியும். முதலாளிகளை ஒழிக்க வேண்டும் என்று கூறி நீங்களும் அதே அப்பாவி மக்களை குறி வைக்கிறீர்களே இது என்ன நியாயம்? நான் பார்ப்பனன் கிடையாது. பாட்டாளி வர்க்கத்தில் இருந்து வந்தவன்தான். நான் பார்ப்பனீயம் பேசவில்லை. நீங்கள் தகர்க்கும் பாலங்கள், பேருந்துகள், கொளுத்தும் ரயில்கள் எல்லாம் எந்த முதலாளிக்கு சொந்தம்? எல்லாம் சாமானியனின் வரி. போராட்டம் தேவைதான். ஆனால் அது முட்டாள்தனமாக இருந்தால் யாருக்கு லாபம்? என்னை போன்ற அறிவீலிகள்தான் இதை முட்டாள்தனம் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். நீங்கள் உங்கள் பாதையில் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு தேவை சமூக மாற்றம் அல்ல. சட்ட ஒழுங்கு சீர்கேடு. பணம் கொழிக்கும் பதவி திமிங்கலத்தை பிடிக்க நீங்கள் பயன்படுத்தும் இரைதான் பொதுமக்கள்.
நீங்கள் ஆட்சியை பிடித்து விட்டால் மட்டும் என்ன புடுங்கி விட போகிறீர்கள். ஸ்டாலின் செய்த அதே வேலையைத்தான் செய்வீர்கள். உங்கள் கருத்துக்கு இணங்காதவர்களை களைஎடுப்பீர்கள். பின் இருக்கவே இருக்கிறது இன வெறி. அதை தூண்டிவிட்டு மிச்சம் இருக்கும் மக்களையும் கொன்று குவிப்பீர்கள். நடத்துங்கள். இந்தியாவில் பணம் இருக்கிறதோ இல்லையோ கொல்லுவதற்கு நிறைய மக்கள் இருக்கிறார்கள். நடத்துங்கள் உங்கள் சேவையை.
இவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன், மாவோ செய்தது போல டெல்லியை நோக்கி புறப்படுங்கள் பார்க்கலாம்? இல்லை ஏதாவது முதலாளிகள் மீது கை வையுங்கள் பார்க்கலாம்? முடியாது. நீங்கள் செய்வது எல்லாம், எழுச்சி என்ற பெயரில் அப்பாவிகளை கொல்வதுதான். இதுதான் கம்யுனிசம் என்றால், எனக்கு தேவை இல்லை உங்கள் பாழாய்ப்போன கம்யுனிசம்.
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
4 comments:
உங்கள் ஆதங்கம் நியாயமானது.
மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
Boss enna boss romba kobamaa irunthirukkinga ethu ennamo rightaa sollirukkinga
Boss please write review for the movie "the hills have eyes" the story based on atomic research and this will helpful for Tamil peoples to find an idea about koodangulam atomic plant. Note: it is a slasher movie R rated
@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )
உங்களது கருத்துக்களுக்கு நன்றி நண்பரே. அப்புறம் Hills haves eyes பட வரிசைகளை நான் முன்பே பார்த்து விட்டேன். ஆனால் அது கிட்டத்தட்ட Wrong Turn மாதிரியே இருப்பதால் எழுதவில்லை. முடிந்தால் கூடிய சீக்கிரமே எழுதுகிறேன்.
Post a Comment