விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

September 27, 2011

இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்....

முன் குறிப்பு: இந்த பதிவில் கொஞ்சம் ஆபாசமான விஷயங்கள் பகிரப்பட்டிருப்பதால், ஜாக்கிரதையுடன் படிக்கவும். பிடிக்காதவர்கள் தவிர்த்து விடவும். 

காட்சி :1 

தன் அறையில் அவன் அமர்ந்திருக்கிறான். தலை வலிக்கிறது. தலையில் கைவைத்துக்கொண்டு கடுப்புடன் அமர்ந்திருக்கிறான். அப்போது அவள் அவனது அறைக்குள் வருகிறாள். அவளது சேலை வழக்கத்துக்கு மாறாக நெகிழ்ந்து பார்ப்பவர்களை கிறங்கடிக்கும் வண்ணம் இருக்கிறது.


அவனது அருகில் வந்து, "தலை வலிக்கிறதா?"

அவன்,"ஆமா.."

அவள்,"நான் உனக்கு தைலம் தேய்த்து விடுகிறேன்." 

அவனது தலையை தன்னருகில் கொண்டு வந்து தைலத்தை தலையில் தேய்த்து விட தொடங்குகிறாள். அவளுடைய தடவல் தலைவலிக்கு மருந்திடுவது போல இல்லை. அவனை சூடேற்றுவதற்காக வேண்டி அவள் தடவுகிறாள் என்பது அவனுக்கு புரிகிறது. அவன் கிறங்குகிறான். சட்டென ஞாபகம் வந்தவளாக, "உங்க அண்ணன் வர்ற நேரமாச்சு." என்றபடி அவனது அறையை விட்டு வெளியேறுகிறாள். 

ஆம் அவள் அவனது அண்ணி. 

காட்சி :2 

"ஆண்டி உங்க பொண்ணு எங்கே?" என்று கேட்டபடி அவன் உள்ளே நுழைகிறான். 

"ஏன் அவள தேடுற?" இது அந்த பெண்ணின் தாய். 

"இல்ல இன்னிக்கு சினிமாவுக்கு போறோம்." அவளை உற்று பார்த்தபடி அவன் சொல்கிறான். 

"இந்த மாதிரி அவ கூட சுத்தக்கூடாது. அவ உன் கூட சினிமாவுக்கு வரமாட்டா." அதட்டலான குரலில் அவள் சொல்கிறாள். 

"அப்போ நாம ரெண்டுபேரும் சினிமாவுக்கு போலாமா?" என்று கேட்டபடி அவளை நெருங்குகிறான். காற்று புகமுடியாத நெருக்கம் அது. 

அவனை அவ்வளவு நெருக்கத்தில் உணர்ந்த அவள், அவனது அருகாமையில் தன்னை மறந்து, தான் மகள் மாடியில் இருப்பதை கூட மறந்து, கண்களை மூடி லயிக்கிறாள். மாடியில் இருந்து அவள் மகள் இறங்கி வரும் சத்தம் கேட்டதும், இருவரும் சுதாரித்து விலகுகிறார்கள். "உன்னை சினிமாவுக்கு கூட்டிட்டு போக வந்திருக்கான்." என்று அசடு வழிந்தபடி சொல்கிறாள். 

அவன் மகளை சினிமாவுக்கு அழைத்து செல்வதை பார்த்துக்கொண்டே, ரகசியமாக, வெட்க புன்னகை பூக்கிறாள் தாய். 


காட்சி - 3 

முதலில் சிறியதாய் இருக்கும் அது, ஒரு பெண்ணின் விரல் பட்டதும், மெதுவாக நீண்டு பெரியதாகிறது. 


விளக்கம்: 
ஏதோ பிளாட்பார கடையில் விக்கும் பலான புத்தகத்தில் இருந்து கிழித்தெடுக்கப்பட்ட பக்கங்களில் இருக்கும் கதைகள் இவை என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. இந்த மூன்று காட்சிகளும் நாம் அன்றாடம் குடும்பத்தோடு பார்க்கும் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள். 

காட்சி 1 - அமிர்தாஞ்சன் விளம்பரம் 
காட்சி 2 - வெர்ஜின் மொபைல் விளம்பரம் 
காட்சி 3 - ஆக்ஸ் டியோடரண்ட் (நீள்வதற்கு காரணம் 35% எக்ஸ்ட்ராவாம்) 


நண்பர்களே நாம் குழந்தைகள் டிவி பார்க்கும்போது மிக கவனமாக இருக்கவேண்டும். இல்லை என்றால் நம்மை போல் பிஞ்சிலேயே பழுக்காமல், விதையிலேயே பழுத்து விடுவார்கள். 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 

78 comments:

முத்தரசு said...

இது கொஞ்சம் ஓவரா தெரியல

Mohammed Arafath @ AAA said...

ya its really true bala...we take care of it..

பாலா said...

@மனசாட்சி

நண்பா அவங்கள சொல்றீங்களா என்ன சொல்றீங்களான்னு தெரியலயே?

பாலா said...

@Mohammed Arafath @ AAA

கருத்துக்கு நன்றி நண்பரே...

Mohammed Arafath @ AAA said...

thanks bala...

but enaku kadupethurathu ethuna...
sappida ukarum bothu toilet la kati itha sutham seiyanum nu soluvanga parunga... appadiye vomit panalam pola irukum enaku...

பாலா said...

@Mohammed Arafath @ AAA

ஆமாம் நண்பா. அதிலும் மிக குளோஸ் அப்பில், கிருமிகள் பெருகுவதை காட்டி கடுப்பேத்துவார்கள்.

Unknown said...

ஓகே ஓகே

சென்னை பித்தன் said...

என்னத்தைச் சொல்ல?
ஓட்டுப் போட்டாச்சு.

பால கணேஷ் said...

என் கண்ணில் இவை இன்னும் படவில்லை. விளம்பரங்கள் வரவர ஓவராகவே போய்க் கொண்டிருக்கின்றன. சரியான எச்சரிக்கை தந்துள்ளீர்கள்!

முத்தரசு said...

@????
தோழரே இதில் சந்தேகம் வேண்டாம் அவர்களைத்தான் சொன்னேன்.
பெரிய திரைக்கு உள்ளது போல் சென்சர் வேணும்.இல்லைனா எதிர்காலம்?????

MANO நாஞ்சில் மனோ said...

முதல்ல வீட்ல இருக்குற டிவி எல்லாம் தூக்கிப்போட்டு உடைக்கணும், போயி உடைச்சுட்டு வாரேன் என்னை விடுங்கய்யா...

IlayaDhasan said...

கொஞ்ச நேரம் எங்க 'சாமி' டைரக்டர் எடுத்த படங்களோன்னு நினச்சேன் , விளம்பரமே இவ்வோல்வு விரசமா?

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்

தமிழ் உதயம் said...

இது கொஞ்சம் ஆபாசமான விஷயம். ஆனால் நிறைய ஆபத்தான விஷயம். நல்ல பகிர்வு.

காந்தி பனங்கூர் said...

அட இது ஏதோ ஏடா கூடமான பதிவுன்னு பார்த்தா, அருமையான விழிப்புணர்வு பதிவு. வாழ்த்துக்கள் நண்பா. அருமையான பதிவு.

தமிழ்வாசி பிரகாஷ் said...

நண்பா... சூப்பரா எடுத்துக்காட்டி இருக்கீங்க. இது போல இன்னும் நிறைய விளம்பரம் இருக்கு...

manoharan said...

ஆபாச விளம்பர பொருள்களை புறக்கணித்தாலே இவர்களுக்கு உறைக்கும்.முதலில் இது போன்ற விளம்பர படமெடுக்கும் agency தடை செயபடவேண்டும் .சமுக அக்கறை கொண்ட பகிர்வுக்கு நன்றி திரு .பாலா .

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

இந்தாளுக பண்ணற கொடும தாங்கல, இதெல்லாம் விட்டுபுட்டு சிந்து சமவெளிகளதான் புடிச்சுக்கறாங்க நம்மாளுக.

நாய் நக்ஸ் said...

இதுக்குதான் நான் டி.வி ...வைத்தில்லை

Unknown said...

பெரிய திரையை விட ஈசியா மக்கள அணுகிட்டு இருக்குற சின்னதிரைக்குதான் கண்டிப்பா சென்சார் போர்டு வேணும், பணம் சம்பாதிக்கறதுக்காக இப்படியுமா விளம்பரம் எடுப்பானுங்க, நாளைக்கு அவங்க வீட்டு குழந்தைகளே கெட்டு போனா???

Cricket Lover said...

nalla rasichu padichen

K.s.s.Rajh said...

சூப்பர் நண்பா நான் இந்த விளம்பரங்களை பார்க்கவில்லை எனவே நீங்கள் எழுதியதும் அட நீங்களும் எஸ்.ஜே.சூர்யா பட ரேஞ்சில் பதிவுக்கு இறங்கீட்டீங்கலோனு நினைச்சு புட்டன்..ஹி.ஹி.ஹி.ஹி.இறுதியில் சொல்லப்பட்ட உங்கள் கருத்து மிக அழகு.

இது என்ன பதிவுலகில் அறிவுரை சொல்லும் வாரமோ நானும் இன்று ஒரு அறிவுரை சொல்லியிருக்கேன்..

Unknown said...

மாப்ள ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்...அப்புறம் தான் தெரிஞ்சது இது விளம்பரம் பற்றிய பதிவுன்னு...சென்சார் போர்ட வச்சி முதல்ல கும்மப்படவேண்டியவை சின்னத்திரை விஷயங்களே....பகிர்வுக்கு நன்றி!

Mathuran said...

ஆபாசம் என்பதை விட உறவுகளின் புனிதத்தை கேவலப்படுத்தும் அசிங்கம்.. இவற்றுக்கெல்லாம் சென்சார் இல்லையா

Nirosh said...

ஓவரா இருந்தாலும் ஒரு நல்ல செய்தி சொல்லும் பவர்புல் பதிவு வாழ்த்துக்கள் நண்பரே..!

Anonymous said...

நல்ல வேளை...விளம்பரம் பார்க்கிறதே கிடையாது...:)

நிரூபன் said...

விளம்பரங்களில் இருக்கும் சீர்கேடுகளை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க பாஸ்...

Unknown said...

விளம்பரத்துக்கு எல்லாம் சென்சார் போர்டு கெடையாதா?

இதுக்கு கூட DND கொண்டு வந்தா நல்லாத்தான் இருக்கும்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

முதல் விளம்பரம் பார்த்து அளவில்லாத கோபம் வந்தது. கொஞ்ச நாளிலேயே சிறிது மாற்றி அண்ணியை மனைவி போல் ஆக்கி விட்டார்கள்

shanmugavel said...

முக்கியமான விஷயம்.வாழ்த்துக்கள் பாலா!

செங்கோவி said...

கேவலமான சிந்தனை அது..இந்த மாதிரி விளம்பரம் செய்யும் பொருட்களை தவிர்ப்போம் - என்று முடிவெடுப்பதே சரி.

வருண் said...

Seems like we have got bunch of sick mother fuckers in the advertising industry. This kind of "porn business" should be seriously condemned and should not be taken "gently"! The govt can fine these mother fuckers for millions of dollars and make the country RICH! That is one way of making money for the govt form this rich bastards!

எம்.ஞானசேகரன் said...

வேதனையான விஷயத்தை விலாவரியாய் எழுதியிருக்கிறீர்கள்

வருண் said...

பாலா: ஒரு பின்னூட்டத்தை பளாககட்மினிஸ்ட்ரேட்டர் ரிமூவ் பண்ணுவதுக்கும், அந்தப் பதிவரே ரிமூவ் பண்ணுவதுக்கும் நெறைய வித்தியாசம் இருக்குனு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. உங்க ப்ளாக்ல பதிவே அதை ரிமூவ் பண்ணினாலும் நீங்க (பளாக் அட்மினிஸ்ட்ரேட்டர்) செய்ததாகக் காட்டுது. இதை சரி செய்ய முடியுமானு பாருங்க. நன்றி :)

bandhu said...

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, சகட்டு மேனிக்கு இவர்கள் மேல் கேஸ் போட்டு நாறடிப்பதே!

Philosophy Prabhakaran said...

இந்த மேட்டரை பற்றி உங்கள் கருத்தை பட்டும் படாமலும் மேலோட்டமாக சொன்னது போல் இருக்கிறது...

Philosophy Prabhakaran said...

சில பேர் நாலெழுத்து இங்கிலீசு படிச்சிட்டு போடுற அறிவுஜீவி சீனுக்கு அளவே இல்லாம போச்சு...

பாலா said...

@நா.மணிவண்ணன்

நன்றி நண்பரே...

பாலா said...

@மனசாட்சி

எதிர்காலம் கேள்விக்குறிதான்.

பாலா said...

@MANO நாஞ்சில் மனோ

உங்க வீட்டு டீவிய எதுக்கு உடைக்க போறீங்க?

பாலா said...

@IlayaDhasan

இப்போ டிரெண்டே இந்த மாதிரி விளம்பரங்கள்தான்.

பாலா said...

@சென்னை பித்தன்

நன்றி சார்

பாலா said...

@தமிழ் உதயம்

வருகைக்கு நன்றி நண்பரே.

பாலா said...

@காந்தி பனங்கூர்

கருத்துக்கு நன்றி நண்பரே.

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

ஆமாம் நண்பரே. நான் டக்கென்று மனதில் தோன்றிய விளம்பரங்களை மட்டுமே சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

பாலா said...

@manoharan

நன்றி நண்பரே.

பாலா said...

@Dr. Butti Paul

தியேட்டருக்கு நாம் காசு கொடுத்து உள்ளே சென்று பார்க்க வேண்டும். ஆனால் இவர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து விடுகிறார்கள்.

பாலா said...

@NAAI-NAKKS

சூப்பர்

பாலா said...

@இரவு வானம்

பணம்தான் பிரதானம் ஆகிவிட்ட உலகைல் இதற்கு மேலும் நடக்கும்.

பாலா said...

@Cricket Lover

என்னது ரசிச்சு படிச்சீங்களா? அய்யய்யோ இது அந்த மாதிரி கதை இல்லீங்க...

பாலா said...

@K.s.s.Rajh

நாம என்ன அவ்வளவு பெரிய ஆளா? அறிவுரை எல்லாம் சொல்லும் அளவிற்கு வளர வில்லை நண்பா. ஏதோ ஒரு கருத்து அவ்வளவுதான்.

பாலா said...

@விக்கியுலகம்

இந்த பதிவை இடுவதற்கே எனக்கு ரொம்ப தயக்கமா இருந்தது நண்பரே. ஆனால் அவர்கள் தயங்காமல் எடுத்து விடுகிறார்கள்.

பாலா said...

@Nirosh

இந்த பதிவுல எதையுமே மிகைப்படுத்தல நண்பா. கருத்துக்கு நன்றி.

பாலா said...

@ரெவெரி

நாம் தவிர்த்தாலும் சில விளம்பரங்கள் நம் கண்ணில் பட்டு விடுகின்றன.

பாலா said...

@நிரூபன்

உங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பா.

பாலா said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு

சினிமாவுல மட்டும் சென்சார் போர்டு தன் கடமையை ஒழுங்கா செய்யுதா என்ன? நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்.

பாலா said...

@நாய்க்குட்டி மனசு

ஆமாம் அந்த கடைசி வசனத்தை கட் செய்து விட்டார்கள்.இருந்தாலும் உணர்ச்சியை தூண்டும் விதமாகவே இருக்கிறது.

பாலா said...

@shanmugavel

நன்றி நண்பரே.

பாலா said...

@செங்கோவி

நன்றி நண்பா

பாலா said...

@வருண்

உங்களின் உணர்ச்சி மிகு கருத்துக்களுக்கு நன்றி. அப்புறம் நாலு பேரு வந்து போற எடத்துல கொஞ்சம் கெட்ட வார்த்தையை குறைச்சுக்கலாமே? நன்றி நண்பரே.

பாலா said...

@bandhu

கருத்துக்கு நன்றி நண்பரே.

பாலா said...

@Philosophy Prabhakaran

சில விஷயங்களை பட்டும் படாமலும் தானே சொல்ல வேண்டி இருக்கிறது. அதுவும் இல்லாமல் இந்த மாதிரி விளம்பரங்கள் குறித்து இது என்னுடைய மூன்றாவது பதிவு.

அப்புறம் இங்க்லீசு அறிவு ஜீவி மேட்டருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்?

பாலா said...

@கவிப்ரியன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க.

Philosophy Prabhakaran said...

// அப்புறம் இங்க்லீசு அறிவு ஜீவி மேட்டருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்? //

நான் சொன்னது முன்னாடி பின்னூட்டம் போட்ட ஒருத்தரை பற்றி...

பாலா said...

@Philosophy Prabhakaran

நண்பா பதிவுக்கு சம்பந்தமான கருத்துக்களை மட்டும் சொல்லுங்கள். தேவை இல்லாமல் வண்டியை வேற ரூட்டில் திருப்பி விட்டு விடாதீர்கள்.

கேரளாக்காரன் said...

@varun Mr this is not ur bathroom don't you know how to post a public comment. Intha advertisers than exbii.com padichuttu vanthu ad edukkuraanganna nee commentum athe maathiri poduraye

Unknown said...

பிரான்ஸ் தலைநகரின் வீதிகளில் தொழுவதற்கு எதிரான சட்டம் அமுலாக்கம்.!




பிரான்ஸின் தலைநகர் பரிஸின் வீதிகளில் தொழுவதற்கு எதிரானசட்டம்
கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்குவந்தது.பிரான்ஸ் அரசாங்கத்தினால் உடனநடியாக அமுலுக்குவரும்வகையில் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தினால்பிரான்ஸ் முஸ்லிம்கள் கடும்கோபமடைந்துள்ளனர். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் பொலீஸார் நேராடியாக தலையிட்டு பாதைகளில் நடைபெறுகின்ற தொழுகைகளை நிறுத்துவதற்காக
முயன்று வருகிறார்கள் என பெரும்பாலானோர் கருதுகிறார்கள். எனினும் வருடத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆயிரக்கணக்கான பிரான்ஸ் முஸ்லிம்கள் பரிஸ்நகர வீதிகளில் தொழுகை நடாத்துவதால் பொலீஸாரின்முயற்சி நிறைவேறாது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எப்பூடி.. said...

விளம்பரம் என்பது ஒரு கலை, சினிமாவில் 80 சீன்களில் சொல்வதை வெறும் 2 அல்லது 3 சீனில் சொல்லும் மாஜிக் அது. அது தவறான வழியில் போவது வருத்தம்தான். ஆனாலும் எனக்கு ரின், சேர்ப் எக்ஸ்சல் விளம்பரங்கள் ரொம்ப பிடிக்கும்.

பாலா said...

@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.

பாலா said...

@அபு சனா

நண்பா நீங்க எங்க போகணும்? அட்ரஸ் மாறி வந்துட்டீங்களா? வேறு ஒரு தளத்தில் இடவேண்டிய கருத்துரையா?

பாலா said...

@எப்பூடி..

நன்றி தலைவரே. விளம்பரம் என்கிற கலையை இப்படி கீழ்தரமாக்கி விட்டார்களே என்பதுதான் வருத்தம்.

N.H. Narasimma Prasad said...

கொஞ்ச நேரத்துல மனுஷனை இப்படி சூடேத்திட்டிங்களே? இது நியாயமா?

சுதா SJ said...

அவ்வ... இப்படி எல்லாமா விளம்பரம் போடுறாங்க???

எங்கையா போய்ட்டாங்க அந்த கலாச்சார காவர்காரங்க எல்லாம்..

சீனுவாசன்.கு said...

அட இன்னா பாஸ் நீங்க?
நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்து சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!

சி.பி.செந்தில்குமார் said...

நான் முதல்ல சினிமால வர்ற காட்சிகள்னு நினைச்சேன், விளம்பரமே இப்படியா? வெளங்கிடும்!!!

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

ச்சே அவ்வளவுதானா பாலா..:)

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

இது என்னங்க ரீயாக்ஷன்? நீங்க என்ன எதிர்பார்த்தீங்க?

காப்பிகாரன் said...

super daily oru pathivu update panunga nanba

பாலா said...

@safi
ரொம்ப நன்றி நண்பா. ஆனா பணிச்சுமை இன்ன பிற காரணங்களால் எழுத முடிவதில்லை. அடிக்கடி வாங்க

Related Posts Plugin for WordPress, Blogger...