எனக்கு பிடிக்காத எதுவும் விரைவில் மக்களிடம் புகழ் பெற்று விடுகிறது. நான் விரும்பும் எதுவும் தோல்வி அடைந்து விடுகிறது. இதற்கு நிறைய உதாரணங்கள் காட்ட முடியும். கார் ரேசில் ஹக்கினன், டென்னிசில் ஹிங்கிஸ், புட்பாலில் பிரான்ஸ் அணி, குறிப்பாக ஜுடேன், மைக் டைசன் என்று எனக்கு பிடித்தவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் அனைவருக்கும் எனக்கும் ஏதோ ஒரு வகையில் ஒற்றுமை இருக்கிறது என்று மட்டும் புரிகிறது. அது ஆக்ரோசம். எனக்கு எப்போதுமே ஆக்ரோசமாக விளையாடினால் பிடிக்கும். அதாவது அதிரடி இல்லை. செயல்பாடுகளில் ஆக்ரோசம். இது பலபேருக்கு எரிச்சலை வரவழைத்து விடுகிறது. ஆனால் எனக்கு இது பிடிக்கிறது. இதனால்தான் எனக்கு ரோஜர் பெடரரை பிடிக்கும். சொல்லி வாயை மூடவில்லை அடுத்தடுத்து நடாலுடன் தோல்வி அடைந்தார். இதே போல தன் ஆக்ரோசத்தாலேயே பிறருக்கு பிடிக்காமல் போன ஒரு கிரிக்கெட் வீரரை பற்றித்தான் சொல்ல போகிறேன் (கண்டிப்பாக ஸ்ரீசாந்த் அல்ல).
சினிமாவில் ரஜினி-கமல், விஜய்-அஜித் என்று அடித்துக்கொள்பவர்கள் நிறையபேர் உண்டு. இதில் என்ன ஒரு சிறப்பு என்றால், ரஜினியை மட்டும் அப்போதைக்கு பிரபலமாக இருக்கும் எல்லா நடிகர்களிடமும் ஒப்பிட்டு சண்டையிடுவர். இது மோகன் காலத்தில் இருந்து, சிம்பு வரை தொடர்கிறது. அவர்கள் கேட்கும் ஒரு கேள்வி, இவன் என்ன பெரிய ரஜினியா? இதே மாதிரி ஒரு விஷயம் கிரிக்கெட்டிலும் நடந்து வருகிறது. அந்த மனிதர் சச்சின் டெண்டுல்கர். நீண்ட காலம் விளையாடுவதாலோ என்னவோ, காம்ப்ளி முதல், விராட் கொஹ்லி வரை அனைவரையும் சச்சினுடன் ஒப்பிடுகிறார்கள். கடைசியில் இவன் சச்சினுக்கு இணை இல்லை என்று முடிவு செய்து விடுகிறார்கள். ஆனால் வயது அடிப்படையில் சச்சினுடன் அதிகம் ஒப்பிடப்பட்டவர் ஒரே ஒருவர் மட்டும் தான். அவர்தான் சவுரவ் கங்குலி.
இவர்கள் இருவரால் எங்கள் நண்பர் குழுவில் பெரிய அடிதடியே நடந்திருக்கிறது. என்ன நீங்களும் வரிந்து கட்டிக்கொண்டு ரெடியாகி விட்டீர்களா? மன்னிக்கவும் இப்போது இந்த இருவரையும் ஒப்பிட்டு நான் பதிவிட போவதில்லை. எனக்கு ஏன் கங்குலி பிடிக்கும், ஏன் டெண்டுல்கர் பிடிக்காது என்றே சொல்ல போகிறேன். கங்குலி முதன் முதலில் களமிறங்கியது 1992 ஆம் ஆண்டு மேற்கிந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மைதானத்தில். அந்த ஆட்டத்தில் அவர் எடுத்தது வெறும் மூன்று ரன்கள் மட்டும்தான். பின் தடாலடியாக நீக்கப்பட்டார். இதற்கு காரணம் வீரர்களுக்கு குளிர்பானம் சுமக்க மாட்டேன் என்று சொன்னார் என்று கூறப்படுகிறது. கங்குலி இதை திட்டவட்டமாக மறுத்தார். பின் நான்கு ஆண்டுகள் கழித்து, அதாவது 1996 இல் இங்கிலாந்தில் களமிறங்கினார். நான்கு ஆண்டுகளாக சேர்த்து வைத்த வைராக்கியம் மட்டையின் மூலமாக வெளியானது. அடுத்தடுத்து இரண்டு சதங்கள். அவருக்கு ஒரு நிலையான ஒரு இடம் அணியில் கிடைத்தது. பின் தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு மடமடவென அணியில் நட்சத்திர வீரர் ஆனார். பின் 2000 ஆம் ஆண்டு கிளம்பிய சூதாட்ட புகார், சச்சினின் உடல் நிலை மற்றும் சரியில்லாத அணித்தலைமை எல்லாம் சேர்ந்து வேறு வழி இல்லாமல் கங்குலியை அணித்தலைவர் ஆக்கியது. அப்போது கடும் விமர்சனம் எழுந்தது. முதலில் குரல் எழுப்பியவர் யாராக இருப்பார்? வழக்கம் போல நம்ம கவாஸ்கர் தான் துவக்கி வைத்தார். அவருக்கு டெண்டுல்கரை தவிர வேறு யாரையும் அணித்தலைவராக நினைக்க முடியவில்லை. இருந்தாலும் கொல்கத்தா வீரர் என்ற வகையில் அமைதியாய் இருந்துவிட்டார் (கவாஸ்கரும் கொல்கத்தாதான்).
இந்த காலகட்டத்தில் அசாரைப்போலவே அணியில் நிறைய புதுமுகங்கள் தென்பட்டன. சேவாக், ஜாகிர்கான், யுவராஜ், ஹர்பஜன் என்று நிறைய மாற்றங்கள். இவர்களை நேர்த்தியாக கையாண்டு ஒரு வலிமையான அணியாக உருவாக்கினார். இப்போதுள்ள இந்திய அணியின் முன்னோடியான ஒரு அணியாக அவர் உருவாக்கிய அணி விளங்கியது. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டம் வரை சென்றது பரபரப்பாக பேசப்பட்டது. எவ்வளவுக்கெவ்வளவு வெற்றி வந்ததோ அவ்வளவு விமர்சனங்களும் எழுந்தன. பின் கிரிக்கெட் போர்ட் கை மாறியது, பவார் தலைவர் ஆனார். மும்பை கை ஓங்கியது. விளைவு கங்குலி தூக்கி அடிக்கப்பட்டார்.
கங்குலி பற்றி சில சுவாரசியமான தகவல்கள்...
வெகு நாட்களாக ஒரு இடது கை பேட்ஸ்மேன் இல்லாத அணியாக இருந்த இந்திய அணியில் தலை சிறந்த இடது கை வீரராக திகழ்ந்தார். இவரது கவர் டிரைவ் மிக பிரசித்தம் பெற்றது. வர்ணனையாளர்கள் கங்குலிக்கு ஆப் சைடில் எத்தனை வீரர்களை நிறுத்தினாலும் அவர் பவுண்டரி அடிப்பதை தடுக்க முடியாது என்று கூறுவார்கள். அது பலமுறை நிரூபிக்க பட்டுள்ளது. அதே போல கங்குலி அடிக்கும் சிக்சர்கள். என்னதான் சச்சின் வேகமாக ரன் குவித்தாலும் அவரால் தொடர்ச்சியாக சிக்சர்கள் அடிக்க முடியவில்லை. கங்குலியை விட நூறு போட்டிகளில் அதிகமாக விளையாடியும் இன்னும் கங்குலியை சச்சின் சிக்சர்களில் முந்தவில்லை. அதுவும் சிக்சர் என்றால் சாதாரணமாக அல்ல. மரண அடி. மைதானத்துக்கு வெளியே தான் போய் விழும். அவர் 1996 இல் ஆடிய ஒருநாள் போட்டிகளில் இருந்து கவனித்து வருகிறேன். கங்குலிக்கு ஸ்பின்னர்கள் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. குஷி ஆகி விடுவார். இரட்டை இரட்டையாக சிக்சர் அடிப்பது அவருக்கு பிடிக்கும்.
பிரைன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ், ஜெயசூரியா, கில்க்ரிஸ்ட் முதலானவர்களை Unstoppables என்பார்கள். அதாவது இவர்களை இருபது பந்துகளுக்குள் அவுட் ஆக்கி விட வேண்டும். இல்லாவிட்டால் கதை முடிந்தது. அவர்களாக நினைத்தால்தான் அவுட் ஆவார்கள். இதில் கங்குலியும் அடங்குவார். நிலைத்துவிட்டால் அவுட் ஆக்குவது கடினம். சளைக்காமல் விளையாடுவார். பந்து வீச்சிலும் ஓரளவிற்கு நம்பிக்கைக்குரிய வீரராக திகழ்ந்துள்ளார். டொராண்டோவில் நடந்த சஹாரா கோப்பையில், திறமையாக பந்து வீசி நம் வெற்றிக்கு வழிவகுத்தார். அசாருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் தலை சிறந்த கேப்டனாக விளங்கி உள்ளார். தன்னிடம் இருந்த ஆக்ரோசத்தை அப்படியே தன் அணியிடம் வர செய்தவர். அதற்க்கு முன் அடுத்தவர் என்ன சொன்னாலும் தலை குனிந்து செல்லும் பழக்கம் உடைய இந்திய வீரர்கள் முதல் முறையாக நிமிர்ந்து பார்க்க தொடங்கினார்கள். இங்கிலாந்தின் பிளின்ட் ஆப் ஒரு முறை இந்திய அணியினரை கேலி செய்வதற்காக தன் சட்டையை கழற்றி மைதானத்தில் சுற்றிக்கொண்டே ஓடினார். இது நடந்தது இந்தியாவில். அதற்க்கு அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் கங்குலி இப்படி செய்தார். இது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
அசாருக்கு அடுத்தபடியாக எனக்கு மிகவும் பிடித்த வீரர் கங்குலி. சச்சின் ரசிகர்களால், அசாரை விட பலமடங்கு அர்ச்சனை வாங்கியவர். இதற்க்கு முக்கிய காரணம் அவரது இயற்கையான ஆளுமை திறன். இதனால் சில விரும்பத்தகாத செயல்களை செய்து அதிருப்தியை சம்பாதித்து கொண்டார். தன்னால் ஏன் சச்சினின் இடத்தை பிடிக்க முடியாது? என்று கருதினார். ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார். அவர் அப்படி நினைத்ததில் தவறில்லை. ஆனால் அவர் நடந்து கொண்ட விதம்தான் தவறானது. என்னை பொறுத்தவரை இருவருமே சமமான பலம் பொருந்திய திறமைசாலிகள். என் தம்பிக்கு கங்குலியை பிடிக்காது. அதை விட சச்சின் பிடிக்கும் என்பதே சரி. கொல்கத்தா அணி தோல்வி அடையும் தருவாயில் இருக்கும் போது, "கங்குலி தோற்கவேண்டும், கங்குலி தோற்கவேண்டும் , திறமையே இல்லாத இவனெல்லாம் சச்சினுக்கு நிகராக வரமுடியுமா? இவன் தோற்கவேண்டும், அணியில் இருந்து துரத்தப்பட வேண்டும்" என்று ஏக வசனத்தில் திட்டினான். எனக்கு கோபம் வந்து விட்டது. உண்மையிலேயே கங்குலி திறமையானவர் இல்லையா என்று தேடியதில் கிடைத்ததே கீழே காணும் தகவல். இருவரும் ஓரளவிற்கு ஒரே மாதிரியாகத்தான் விளையாடி இருக்கிறார்கள்.
Player | SC Ganguly (India) | SR Tendulkar (India) |
Mat | 311 | 442 |
Inns | 300 | 431 |
NO | 23 | 41 |
Runs | 11363 | 17598 |
HS | 183 | 200* |
Ave | 41.02 | 45.12 |
100 | 22 | 46 |
50 | 72 | 93 |
4s | 1122 | 1927 |
6s | 190 | 185 |
(நன்றி cricinfo)
சச்சின் சிறந்த வீரர்தான் அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவரை ஆதரிக்கிறேன் என்று இன்னொருவரை தூற்றுவது சச்சின் மீது வெறுப்பையே உருவாக்குகிறது. இதற்க்கு சச்சின் எந்த வகையிலும் காரணம் இல்லை. "இந்த ஆண்டு ஐபிஎல் இறுதி போட்டியில், முழுக்க முழுக்க மும்பை அணிக்கே ஆதரவு இருந்தது. எங்களை பொறுத்தவரை சென்னைக்கு ஆதரவு நாங்கள் மட்டும்தான். ஒவ்வொரு வீரனுக்கும் மற்ற பத்து பேர் ஆதரவு" என்று டோனி கூறியுள்ளார். இதே போல இரண்டாண்டுகளுக்கு முன் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தின் இறுதியில் யுவராஜ் கோபமாக "நாங்களும் இந்திய அணியில்தான் விளையாடுகிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்" என்று கூறினார். சச்சினுக்கு நிகர் யாரும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அதே போல சச்சின் என்ற சூரியனின் ஒளியால் மற்ற நட்சத்திரங்கள் நம் கண்ணுக்கு தெரியால் போய் விடுகிறது என்பதும் உண்மை. எனக்கு சச்சினின் திறமை மீது எந்த விதமான மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் சச்சின் என்று வந்துவிட்டால் மற்ற வீரர்கள் தாறுமாறாக திட்டப்படுகிறார்களே என்பதுதான் என் கோபம். சச்சின் மீது ஈடுபாடு இல்லாமல் போனதற்கு இதுதான் காரணம்.
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...
15 comments:
thalaiva....
sunil gavaskar is from mumbai...
born 10 July 1949 in Bombay....
just for your information....
but his son rohan is playing for kolkatta.....
anyway the article written by you is arguably onesided thalaiva.....
தல என்ன தல இது... மத்தவங்கள மக்கள் மறந்துட்டாங்கன்னா அதுக்கு காரணம் மக்கள் மனசுல அவங்க நிக்கல .. நிக்கிற மாதிரி எதுவும் பெருசா பண்ணல.... அதுக்கு சச்சின் என்ன பண்ணுவாரு... கடைசி ரேங்க் வாங்குன பையன் மத்த பசங்க நல்லா படிச்சிட்டாங்க.. அதான் நான் கடைசி ரேங்க் வந்துட்டேன்னு காரணம் சொன்னா யாரும் அவனுக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க தல...
//anyway the article written by you is arguably onesided thalaiva.....
yes i agree with this point...
@ Prasanna
தவறுக்கு மன்னிக்கவும். சுட்டிக்காட்டியதுக்கு நன்றி.
இந்த பதிவின் முதல் பகுதியிலேயே நான் பெரும்பாலான கருத்துக்கள் ஒருதலை பட்சமாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறேனே?
@ ராஜா
மத்தவங்க பெரிசா சாதிக்கல அப்படின்னு சொல்ல முடியாது. அதே மாதிரி தான் செய்த சில தவறுகளால் மறக்கப்பட்டவர்கள் என்றுதான் சொல்லி இருக்கிறேன். நான் சச்சினை குறை சொல்லவில்லையே. முதல் மார்க் வாங்கும் பையனை தவிர மத்தவங்க எல்லாம் படிக்கவே லாயக்கில்லை என்று ஏன் சொல்கிறார்கள் என்றுதான் கேட்கிறேன்
தங்களின் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. எனினும் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும். "இமய மலையுடன் எவ்வளவு பெரிய மலையை ஒப்பிட்டாலும் பெரியது இமய மலை தான்."
"மார்க்குக்காக மட்டுமே படிக்கிற படிப்பும், ஹிட்டுக்காக மட்டுமே எழுதுற பதிவும், எதுக்கும் உதவப்போறதில்லை.//
ரைட்டோ ரைட்டு...
நானும் கங்கூலியின் தீவிர ரசிகன். நீங்கள் சொன்ன கடைசி விஷயம் சச்சினுக்காக ரசிகர்கள் அப்படி செய்யவில்லை. மும்பையில் மண்ணின் மைந்தர்கள் அதிகம். எனவே அவர்கள் மும்பைக்கே ஆதரவு தருவர்
@sakthistudycentre.blogspot.com
ரைட்டு :)
@Nirushan
பிரச்சனை இமயமலை பெரியதா என்பதல்ல. மற்ற மலைகளும் மலைகள்தானே என்பத்தான் :)
நன்றி நண்பரே...
@எல் கே
கருத்துக்கு நன்றி நண்பரே...:)
நீங்கள் கூறியிருக்கும் அசார் கங்குலி இருவருமே மிக சிறந்த வீரர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் சச்சின் என்பவர் கிட்டத்தட்ட கிரிக்கெட்டுக்கு ஒரு கடவுளாகவே பார்க்கப்படுகிறார்.அவரைப்போல, அவருக்கு நிகராக யாரையும் ஏற்றுக்கொள்ள எங்களுக்கு மனம் வரவில்லை. இது எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு.
நீங்கள் குறிப்பிட்டு கூறியுள்ள "அந்த சச்சினுக்காக மற்றவ்ர்களை மதிக்காதவர்கள்" பட்டியலில் கண்டிப்பாக நான் முதலில் இருப்பவன்.மற்றவர்களை மதிக்காதவர்கள் என்று சொல்வதை விட சச்சினை மற்றவர்கள் நெருங்க முடியாத ஒரு இடத்தில் வைத்து பார்க்கிறோம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இன்றும் சச்சின் இல்லாத மாட்ச் நான் பார்ப்பதில்லை. சச்சின் இருக்கும் மாட்சில் கூட அவர் களத்தில் இருந்தால் 50 ஓவர்கள் கூட இருந்த இடத்தை விட்டு நகராமல் பார்ப்பவன். அவர் அவுட் ஆகிவிட்ட அடுத்த கனமே இடத்தை காலி செய்து விடுவேன். இதை திருத்திக்கொள்ள முடியவில்லை. உண்மையை சொன்னால் இந்தியாவின் தோல்வி/வெற்றியை பற்றி கவலை படுவதை விட சச்சின் அடித்தாரா/அடிக்கவில்லையா என்பதையே இன்றும் பார்த்துக்கொண்டிருப்பவன். அப்படியொரு வசீகரம் அவரது ஆட்டத்தில்...IPL ல் கூட மும்பை விளையாடும் போது தான் "இது என்னுடைய டீம்" என்ற உண்ர்வு இருந்தது. காரணம் சச்சின் ஒருவரால் தான். அந்த இடத்தில் என்னால் மொழிப்பற்றுக்கோ, தாய் மண்ணிற்கோ மதிப்பு கொடுக்க இயலவில்லை. சச்சின் இனி என்றாவரு ஒரு நாள் இந்தியா/பாக்கிஸ்தான் போட்டியில் பாக்கிஸ்தானுக்கு விளையாடினால், பாகிஸ்தானுக்கே ஆதரவு அளிப்பேன். இது என்னுடைய தனிப்பட்ட ரசனை/உள்ளுணர்வு... தப்பாக நினைக்க வேண்டாம்
கங்குலி சிறப்பாக ஆடிய காலத்தில் அவருக்கு இருந்த ரசிகர்களை காட்டிலும் அவர் form out ஆன பிறகே அவரை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்று சொல்லலாம். பலகீனமான, நசுக்கப்பட்டவர்களை ஆதரிப்பதை விளம்பரமாக கருதுபவர்கள் ஏராளம். பல அரசியல்வாதிகள் இந்த யுக்தியையே கடைபிடிக்கின்றனர். கங்குலி மிக கீழ்தரமாக நடத்தப்பட்டு அணியை விட்டு வெளியேறியது வருத்ததுக்குறியது. காரணம் அவரின் மிக மோசமான ஆட்டமே.... ( ஓய்வு பெறுவதற்கு முந்தைய சில ஆண்டுகளில்)
எப்படி ரஜினிக்கு நிகராம நம்மால் எவரையும் கற்பனை செய்து பார்க்க முடியாதோ அதே போல் தான் சச்சினுக்கும் நிகராக, மாற்றாக எவரையும் எங்களால் நினைக்க முடிவதில்லை.
இன்னும் ஒரு தாழ்மையான கருத்து... பத்து போட்டிகளில் 500 ரன் எடுத்தவனும், நூறு போட்டிகளில் 5000 ரன்கள் எடுத்தவனும் கண்டிப்பாக ஒன்று அல்ல...
@ முத்துசிவா
நண்பரே உங்கள் வயது என்ன என்று எனக்கு தெரியவில்லை. நாம் இருவர் சினிமா பார்க்க தொடங்குபோது ரஜினி என்பவர் உச்சத்துக்கு வந்துவிட்டார். ஆகவே அவருக்கு நிகராக யாரையும் பார்க்க முடியவில்லை. இதே போல்தான் உங்களுக்கு சச்சினும் என்று நினைக்கிறேன். நீங்கள் கிரிக்கெட் பார்க்க தொடங்கும்போது சச்சின் மிகப்பெரிய வீரராக ஆகி இருக்கலாம்.
ஆனால் நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலத்தில் சச்சின் ஒரு புதுமுக வீரர். ஆகவேதான் அவர்மீது ஈடுபாடு இல்லாமல் போனது. ஒரு பேச்சுக்கு சொல்கிறேன். நாளைக்கே விராட்கொஹ்லி சச்சினை விட மிக பெரிய புகழ் பெற்றாலும் உங்களுக்கு சச்சின்தான் பெரிய ஆளாக தெரிவார். காரணம் கொஹ்லி புதியவர். இதே நிலைதான் எனக்கும்.
-தொடரும்
சச்சினை விட கங்குலி சிறந்தவர் கிடையாது. இது எனக்கே தெரியும். ஆனால் 10க்கு 500, 100க்கு 5000 இவர்களுக்கு ஒத்து வராது. ஏனென்றால் இவர்களுக்கு இடையே அவ்வளவு வித்தியாசம் கிடையாது.
விடுங்க இந்த பதிவு என்னுடைய மனநிலையை பிரதிபலிப்பதற்காக எழுதியது. மற்றபடி சச்சினை மட்டம் தட்டுவதற்கல்ல...
என் வயது 25....அண்ணன் என்று சொன்னதில் எதுவும் தப்பு இல்லையே? :)
கண்டிப்பாக நீங்கள் சொல்வது உண்மை... எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இவர்கள் இருவரையும் தவிற வேறு யாரையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...சச்சின் 9 சதம் அடித்திருந்த போது எனக்கு நினைவிருக்கிறது... அதற்கு முன்னர் ஞாபகம் இல்லை.. உங்கள் கருத்துக்களை நான் குற்றம் சொல்லவில்லை.. அந்த இரண்டாவது பத்தியில் நான் சொல்லிய அனைத்துமே என் மனநிலை எப்படி உள்ளது என்பதை பற்றி தானே தவிற, பதிவை விமர்சிக்க அல்ல...
மேலும் தாங்கள் அந்த ரன் அட்டவணையை இட்டு, இருவரும் கிட்டதட்ட சமம் என்று கூறியிருந்தது எனக்கு சற்று உருத்தலாக இருந்தது. அதனாலேயே அவ்வாறு கூறியிருந்தேன்....
தவறு எதாவது இருந்தால் மன்னிக்கவும்...
உங்களை விட எனக்கு இரண்டு வயதுதான் அதிகம். ஆனால் நான் கிரிக்கெட் பார்க்க தொடங்கியது மிக சிறிய வயதில். எனக்கு சச்சின் முதல் சதம் அடித்தது முதல் தெரியும். என் மன நிலையை நான் சொன்னது போல உங்கள் மன நிலையைத்தான் சொல்லி இருக்கிறீர்கள் என்று எனக்கு புரிகிறது. இது தவறே அல்ல. அதற்காக மன்னிப்பு கேட்கவும் தேவை இல்லை.
Post a Comment