விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

இது விளம்பரம் அல்ல....

April 18, 2010

சுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்இன்று சன்தொலைக்காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வேண்டியவர்கள், அடிப்பொடிகள் எல்லோரும் வந்திருந்தார்கள் போலும். ஒரே கலகலப்பாக பட்டாசு வெடிகளுடன், பாடகர்கள் மேடையில் பாட விழா இனிதே நடந்து முடிந்தது. அதுவல்ல விஷயம். விழாவில் பங்கேற்றவர்களின் பேச்சுதான் ஹைலைட்.வந்தவர்கள் அனைவரும் சன் பிக்சர்ஸ், கலாநிதிமாறன் இந்த இரண்டு பெயர்களையும், மாற்றி மாற்றி சொன்னார்கள். அவர்கள் குடும்பத்துக்கே தன்னையும் தன் நிறுவனங்களையும் மற்றவர்களுக்கு காசு கொடுத்தாவது புகழ சொல்லி கேட்பதில் அவ்வளவு விருப்பம் போலும். இதை விட பெரிய காமெடி, மேடையில் பேசியவர்கள் ஒவ்வொரு முறை கலாநிதிமாறன் பெயரை சொல்லும்போதும் அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் போடுவார்களே அதே போல போலி audience applause record ஐ பேக்ரவ்ண்டில் போட்டு கொண்டே இருந்தார்கள். மிக கேவலமாக இருந்தது. மக்கள் உண்மையிலேயே கை தட்டி இருந்தால் அதற்க்கு அவசியம் இருக்கதே? ஏன் இந்த தேவை இல்லாத பில்டப்பு? 


விஜயின் நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். பேசியவர்கள் அனைவரும் சன் பிக்சர்ஸை புகழ்வதாக நினைத்துகொண்டு விஜயை மட்டப்படுத்துவது போலவே பேசினார்கள்.


முதலில் பேசிய நம்ம புதுமை விரும்பி பார்த்திபன் வித்தியாசமா பேசுவதாக நினைத்துக்கொண்டு உளறி கொட்டினார். ஏற்கனவே ஐஸ்வர்யா, நயன்தாரா ஆகியோர்களிடம் காட்டிய அதே அல்ப தனத்தை தமன்னாவிடமும் காட்டினார். விஜயை அப்புறம் பார்த்து கொள்ளலாம். முதலில் தமன்னா பற்றி பேசுகிறேன் என்று சொல்லி, மின்சாரம் இல்லாத போது எல்லோர் வீட்டிலும் மெழுகுவர்த்தி ஏற்றுவார்கள், ஆனால் தமன்னா வீட்டில் மட்டும் ஏற்ற மாட்டார்கள். ஏன்னா அவரே ஒரு மெழுகுசிலை போலதான் என்று சப்பு கொட்டிக்கொண்டே பேசி மேடையில் ஜொள்ளு விட்டார். அதோடு நிறுத்தி இருக்கலாம். தளபதி, இளைய தளபதி, வருமானவரி என்று வழக்கம் போல தன் அதிகபிரசங்கிதனத்தை காட்டினார். 


கேஎஸ் ரவிக்குமார் பேசும் போது, இதற்க்கு முந்தய படமான வேட்டைக்காரனும் சன் பிக்சர்ஸ் படம்தான். அதில் பாடல்கள் நன்றாக இருந்தன. அதுவும் நல்ல வசூல் என்று நினைக்கிறேன் என்று மென்று முழுங்கினார். பின் வாய்தவறி, கவலைப்படாதீர்கள் அதுமாதிரி இல்லாமல் இது மாபெரும் வெற்றி அடையும் என்று சொல்லிவிட்டார். பின் நீங்கள் (ஏன் இப்படி நடித்து எங்களை கொடுமை படுத்துகிறீர்கள் என்று சொல்லாமல்) த்ரீ இடியட்ஸ் மாதிரி வித்தியாசமான படங்களில் நடிக்கலாமே என்று அறிவுரை வேறு வழங்கினார். (ஏன்பா நொந்து போயிருக்குற நேரத்துல வந்து வம்பு பண்ற?)


இப்படி ஒவ்வொருவரும் தன் வாய்க்கு வந்தபடி உளறினார்கள். எல்லோரும் பேசிய பேச்சின் சாராம்சம் இதுதான். சன் பிக்சர்ஸ் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் ஓட வைத்து விடும். அதனால் விஜய்க்கு கவலை இல்லை. சன் பிக்சர்ஸ் வெளியிட்டால் சாமியார் படம் கூட வெற்றிபெறும். அதில் ஒருவர், விஷால் , நகுல், கருணாஸ் நடித்த படமாக இருந்தாலும் அது சன் பிக்சர்ஸ் படம் என்றால் வெற்றி பெரும் என்று சொன்னார். கொடுமைடா சாமி. விஜய் எந்த லிஸ்டில் சேர்ந்து விட்டார் பார்த்தீர்களா? சன் பிக்சர்ஸ் படங்களில் இன்னொரு பலிகடா ஒன்று உண்டு. அதுதான் படத்தின் இயக்குனர். அவர் பேசும்போது இந்த கதையை முதலில் திரு எஸ் ஏ சந்திரசேகரன் அவர்களிடம்தான் சொன்னேன். அவருக்கு கதை மிகவும் பிடித்து போய் விட்டதால் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்துள்ளார் என்று கூறினார். மக்களே! எஸ்ஏசி அவர்கள் தேர்ந்தெடுத்த கதை எப்படி இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். பின்னர் இயக்குனரை காணவே இல்லை. பாவம் சரியாக மாட்டிக்கொண்டோம் என்று வெளியே சென்று அழுதிருப்பார். தமன்னா கொஞ்சும் தமிழில் அழகாக பேசினார். எல்லா கதாநாயகிகள் போல விஜயுடன் நடனமாட கடினமாக இருந்தது என்று அதே பல்லவியை பாடினார். (விஜய்க்கு இணையாக நடிக்க முடியவில்லை என்று யாரும் சொல்றதில்லையே?).


வழக்கம்போல் விஜய் அதே சொங்கிதனமான தோரணையுடன் பேசினார். வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி, பெற்றவர்களை பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி பிறக்கும். ஆனால் அதைவிட இங்கு வந்து உங்களை எல்லாம் (ரசிகர்களை) பார்க்கும்போது அதிக மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று கூறினார். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் அவர் முகத்தில் இல்லை. அது அடுத்தடுத்த தோல்விகளின் வலியா? இல்லை விழாவில் மற்றவர்கள் பேசிய பேச்சின் விளைவா? என்று தெரியவில்லை. ஆனால் அவர் பேசிய பேச்சு ரசிகர்களுக்கு தெம்பூட்டும் விதமாக இருந்தது.


சன் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா (இது தமிழ் பெயர்தானா? இவர் தமிழர் தானா? தெரிஞ்சா சொல்லுங்களேன்.) நாங்கள் விஜயை வைத்து வேட்டைக்காரன் என்னும் வெற்றி படத்தை(!?) கொடுத்தோம் என்று கூறினார். இதற்க்கு ரசிகர்களே கத்தவில்லை. பின் அவர் வேட்டைக்காரனுக்கு 650 பிரின்ட் போடப்பட்டது. ஆகவே அது வெற்றி படம் என்றார். போடப்பட்ட பிரிண்டுகளை வைத்து எப்படி வெற்றி படம் என்று சொல்ல முடியும்? எனக்கு தெரியவில்லை. சரி வெற்றி படம் என்று வாய் கூசாமல் சொன்னவர்கள், பிரிண்டுகளின் எண்ணிக்கைகளை உயர்த்தி சொல்ல மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? மேலும் அவர் பேசுகையில் நாங்கள் விஜய் கூட ஹாட்ரிக் அடிக்க ஆசை படுகிறோம் என்று கூறி ரசிகர்கள் வயிற்றில் மட்டுமல்லாமல் விஜய் வயிற்றிலும் புளியை கரைத்தார். ஆகவே மக்களே, காவல்காரனும் சன் பிக்சர்ஸ் கைக்கு போகலாம். எனவே இப்போதே மனதை திடபடுத்தி கொள்ளுங்கள்.


என் அன்புக்கினிய விஜய் ரசிகர்களே! நான் சொல்வதை கேட்டால் உங்களுக்கு கோபம் வரலாம். சுறா படம் படுதோல்வி அடையவேண்டும் என்று தயவு செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஒரு சுமாரான வெற்றி பெற்று விஜயின் ருசியை சன் பிக்சர்ஸ் சுவைத்து விட்டால், சன் பிக்சர்ஸ் என்னும் திமிங்கலத்தின் வாயில் இருந்து விஜய் தப்பிக்கவே முடியாது. அப்படி அவர் தப்பிக்காத வரை அவரால் த்ரீ இடியட்ஸ் மாதிரி சோதனை முயற்சி எதுவும் செய்ய முடியாது. சன் பிக்சர்சின் நோக்கம் எல்லாம் குறைந்த தரம், குறைந்த விலை, நிறைந்த லாபம். இதற்க்கு அவர்களுக்கு தேவை ஒரு சுமாரான கமர்சியல் படம். ஆகவே காலமெல்லாம் விஜய் ஒரு கமர்சியல் நடிகனாகவே தொடர்வார். நீங்களும் எத்தனை நாளுக்குத்தான் அவர் படம் நன்றாக இல்லாவிட்டாலும், குருவிக்கு பரவாயில்ல, வில்லுக்கு பரவாயில்ல, அப்படி ஒன்னும் மோசமில்ல, ஒரு தடவ பாக்கலாம், விஜய்க்காக பார்க்கலாம், என்று சப்பை கட்டு கட்டுவீர்கள். எனவே இந்த ஒரு தோல்வி அவரை ஒன்றும் செய்து விட போவதில்லை. ஆகவே சுறா தோல்வி அடைய பிரார்த்தனை செய்யுங்கள். ..


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
10 comments:

ரமேஷ் said...

என்ன மாப்பு சுட சுட பதிவை போட்டுட்டீங்க. கடைசியா சொன்ன விஜய் ரசிகர்களுக்கான மேட்டர் சூப்பரப்பு

SShathiesh-சதீஷ். said...

கடைசிப்பந்தியில் சொன்ன அத்தனையும் உண்மை. படன் நன்றாக இருந்து ஓடினாலும் சன்ணினால் ஓடியது என்று சொல்லிவிடுவார்கள். அதற்க்கு மேலே சொன்ன கருஹ்துக்கள் உங்கள் தனிப்பட்ட கருத்துக்கள் என நினைக்கிறேன். வேறு என்னத்த சொல்ல...

Bala said...

@ரமேஷ்

பொதுவாக இப்படி விமர்சித்து பதிவு போடுவதில்லை. ஆனால் மனதில் பட்டது.
அதுதான் சுட சுட..
நன்றி ரமேஷ்

@சதீஷ்
கண்டிப்பாக என் சொந்த கருத்துக்கள்தான்.
வருகைக்கு நன்றி சதீஷ்.

கார்க்கிபவா said...

:)))))

யாசவி said...

same blood :)

Yoganathan.N said...

//போலி audience applause record ஐ பேக்ரவ்ண்டில் போட்டு கொண்டே இருந்தார்கள். மிக கேவலமாக இருந்தது. மக்கள் உண்மையிலேயே கை தட்டி இருந்தால் அதற்க்கு அவசியம் இருக்கதே? ஏன் இந்த தேவை இல்லாத பில்டப்பு?//

அட, நான் கூட அவருக்கு அவ்வளவு கைத்தட்டலா என்று வியந்தேன். இப்போது தான் உண்மை தெரிகிறது.

கே.எஸ்.ஆருடைய பேச்சை மட்டும் தன் பார்க்க நேர்ந்தது. நீங்க்ள் சுட்டிக் காட்டியதை நானும் உணர்ந்தேன். ஹிஹி

மற்றபடி வேர என்ன சொல்ல. சுறாவிற்கும் நண்பர் சதீஷுக்கும் வாழ்த்துகள். :)

Bala said...

@கார்க்கி
உங்கள் சிரிப்பின் பொருள் என்ன கார்க்கி?
வருகைக்கு நன்றி. புட்டி கதை என்னாச்சு?

@யாசவி
அங்கேயுமா?
மிக்க நன்றி.

@Yoganaathan
அப்புறம் இவனுங்களுக்கெல்லாம் யார் கை தட்டுவா?

KANA VARO said...

நீங்கள் விஜய் எதிர்பாளர் என்றாலும் எழுதிய விடயங்கள் ஏற்றுக்கொள்ள கூடியவை என்பதால் எங்களுக்கும் மறுத்து பேச எதுவுமில்லை. உண்மையை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும்.

Bala said...

@AKAM

அய்யய்யோ என்ன இப்படி சொல்லி விட்டீர்கள். விஜய் என்ன செய்தாலும் அதை கண்மூடித்தனமாக எதிர்ப்பவன் இல்லை நான். நம் மனதுக்கு சரி என்று பட்டதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். விஜய் என்ன என் எதிரியா?

வருகைக்கு நன்றி நண்பரே..

sweet said...

hi

h r u?

ur article was nice

but vijay nalla nadichu enna aga pogudhu?

vikram mathiri national award vaanga porara?

illai surya mathiri nalla nadikka porara?

he don't know anything... dance too.... simbu, bharath dance is better than vijay... dance proffessional people-kitta kelunga...

vijay is nothing-ya... he is ZERO....


okey this stupid karki.... mhmmm everytime i am sending comments to him... but he is not publishing...

okey-ya

take care

Madhumidha
madhumidha1@yahoo.com

Related Posts Plugin for WordPress, Blogger...