விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 19, 2010

தென்னிந்திய சினிமாவின் பாட்ஷாவும் தலயும்....



இந்தியாவின் சக்தி வாய்ந்த ஐம்பது பிரபலங்களின் பட்டியலை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு 28 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. இவரை தென்னிந்திய சினிமாவின் பாட்ஷா என்றும் புகழ்ந்துள்ளது. இவர் இந்த பட்டியலில் இடம் பெறுவதற்கான காரணங்களாக அவர்கள் சொல்வது இந்தியாவின் பெரும் செலவில் எடுக்கப்படும் எந்திரன் படத்தில் நடித்து வருவது, இவர் மீதான நடிகர் சங்கத்தின் எதிர்ப்பு பலனளிக்காமல் போனது, ஆசியாவிலேயே ஜாக்கி சானுக்கு அடுத்த படியாக அதிக சம்பளம் வாங்குவது முதலியவை ஆகும்.

ஒரு காலத்தில் ரஜினி ரசிகர்கள் யாருக்கும் அஜித்தை பிடிக்காது.  இதற்க்கு காரணம், சுமார் பதின்மூன்று  ஆண்டுகளுக்கு முன்னால் அஜித் அளித்த ஒரு வில்லங்கமான பேட்டி. அதில் அஜித் சூப்பர் ஸ்டார் ஆகும் எண்ணம் எல்லா நடிகர்களுக்கும் இருக்கும். எனக்கும் இருக்கிறது. நான் சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்று ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது. நான் கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிப்பேன் என்று கூறினார். இது "அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான் - அஜித்" என்று நம்ம நித்யா புகழ் பத்திரிகையில் வெளி வந்தது. இதை படித்த அனைத்து ரஜினி ரசிகர்களும் ஆத்திரம் அடைந்தனர். ரஜினியின் ரசிகர் கூட்டம் பற்றி அனைவருக்கும் தெரியும். இயல்பாகவே மக்களிடம் அஜித் மீதான வெறுப்பு பரவி இருந்தது. அதை இன்றும் கூட மக்களிடம் காணலாம். 

நம் மக்களை பொறுத்தவரை ஒரு மக்கள் திலகம், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான். இதனை நன்கு புரிந்து கொண்டவர் ரஜினி. அதனால்தான் அவர் தன் எந்த படத்திலும் எம்ஜிஆர் அவரின் புகழை பயன் படுத்திக்கொள்ளவில்லை. இதனை புரியாத பல நடிகர்கள் தன்னை இந்த இருவரோடு ஒப்பிட்டு காணமல் போனதை பார்த்திருக்கிறோம். 

இதனை சிறிது தாமதமாகத்தான் புரிந்து கொண்டார் அஜித். அதன் பின் தன் வழியை மாற்றிக்கொண்டார். ஆனால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் அவர் எதிரியாகத்தான் தெரிந்தார். ரஜினி ரசிகர்கள் விஜய்யை விரும்பியதற்கு இதுவும் ஒரு காரணம்.  அவ்வப்போது அஜித் ரஜினியுடன் பல விழாக்களில் தோன்றி வெறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தார். இருந்தாலும் ரசிகர்கள் மனதில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.இது என் மனதில் ஒரு வருத்தமாகவே இருந்து வந்தது. ஆனால் அந்த வருத்தத்தை போக்கிய பெருமை நம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களையே சாரும். ஆமாம் அவருக்கு மட்டும் பாராட்டு விழா நடத்தாமல் விட்டிருந்தால்? அதில் அஜித்தை அழைக்காமல் விட்டிருந்தால்? அஜித் உண்மையை பேசாமல் இருந்திருந்தால்? ரஜினி எழுந்து ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால்? எதற்கு இத்தனை கேள்வி? எல்லாமே நடந்து விட்டது. 

இன்று உண்மையை கூற வேண்டுமானால் ரஜினி ரசிகர்கள் மனதில் மட்டுமல்ல, சில விஜய் ரசிகர்கள் மத்தியில் கூட அஜித்தின் மீதான மதிப்பு கூடி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் நேர்மை. அஜித் என்பவரின் பேச்சில் இருந்த நேர்மை. ரஜினி என்பவரின் எண்ணத்தில் இருந்த நேர்மை. ரஜினியின் அந்த ஒரு கைத்தட்டல் தன் ரசிகர்களை அஜித்தின் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. ரஜினி எழுந்து கை தட்டியதால் நிம்மதி பெருமூச்சு விட்ட அஜித் ரசிகர்கள் ஏராளம். இதில் தன்னை ரஜினி ரசிகன் அல்ல என்று சொல்லிக்கொள்ளுபவர்களும் அடங்கும். பாட்ஷா படத்தில் ஒரு பாடல் வரி வரும் "இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா.." இது எவ்வளவு உண்மை!! 
நிஜமாகவே சூப்பர் ஸ்டார் தென்னிந்திய சினிமாவின் பாட்ஷாதான். 

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..  
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...

8 comments:

நாமக்கல் சிபி said...

//பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க.. //

அப்படிச் சொல்லிட்டு தமிலீஷ்லே சப்மிட் கூட பண்ணாம விட்டா எப்படி?

நாங்களே சப்மிட் பண்ணி ஓட்டு வேற போடணுமாக்கும்!

நாமக்கல் சிபி said...

பதிவு அருமை! நல்ல அலசல்!

Bala said...

//நாங்களே சப்மிட் பண்ணி ஓட்டு வேற போடணுமாக்கும்!//


சப்மிட் பண்ணியாச்சு தல..

"ராஜா" said...

//சில விஜய் ரசிகர்கள் மத்தியில் கூட அஜித்தின் மீதான மதிப்பு கூடி உள்ளது

விஜய் ரசிகர்களா? யாரது? அப்படி யாராவது இருக்காங்களா?

//அஜித் என்பவரின் பேச்சில் இருந்த நேர்மை. ரஜினி என்பவரின் எண்ணத்தில் இருந்த நேர்மை.

அப்ப ரஜினியோட எண்ணம்தான் அஜித் பேச்சில வெளி வந்திருக்கு அப்படின்னு சொல்லுறீங்களா? எனக்கு என்ன சந்தேகம்னா அது தானா வந்ததா? இல்ல ரஜினி சொல்லி கொடுத்து வந்ததா?

//நிஜமாகவே சூப்பர் ஸ்டார் தென்னிந்திய சினிமாவின் பாட்ஷாதான்.

என்னங்க ரஜினி ரசிகர்கள் எல்லாம் அவர உலக சினிமாவின் பாட்சான்னு சொல்லுறாங்க நீங்க ரொம்ப சாதாரணமா தென் இந்தியாக்குள்ள அவர அடக்கிட்டீங்க....

Yoganathan.N said...

நண்பரே, "அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான் - அஜித்" பத்திரிக்கைகள் இதனை நன்றாக திரித்து எழுதின.
பில்லா படம் வெளிவந்த காலகட்டத்தில் அஜித் ஒரு பேட்டி அளித்தார். மறுபடியும் இந்த கேள்வியைப் பற்றி கேட்டார்கள். அதற்கு அவர், "ஒரு சிரு குழந்தையிடம், நீ பெரியவனானதும் என்ன ஆக ஆசை படுகிறாய் என்று கேட்டால், அப்துல் கலாம், டாக்டர், பொறியியலாளர் போன்ற பதில்கள் வரும். தமிழ் சினிமாவை பொருத்தவரை, ரஜினி சார் ஒரு சிகரம். அவரைப் போல வர ஆசைப் படுகிறேன் என்பதிலும் அவராகவே ஆகிவிட வேண்டும் என்பதிலும் வித்தியாசம் உள்ளது. நான் சொன்னது முதல் கருத்து அடிப்படையிலே..." என்று சொன்னார்...

நல்ல அலசல். :)
நேரம் இருந்தால், என் பக்கம் கொஞ்சம் வாங்க...

Yoganathan.N said...

//அப்ப ரஜினியோட எண்ணம்தான் அஜித் பேச்சில வெளி வந்திருக்கு அப்படின்னு சொல்லுறீங்களா? எனக்கு என்ன சந்தேகம்னா அது தானா வந்ததா? இல்ல ரஜினி சொல்லி கொடுத்து வந்ததா?//

@ "ராஜா"

என்ன இப்படி கேட்டுட்டீங்க, நம்ம ஆளுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க தேவையில்லை. அது அவரின் சொந்த கருத்து. மனதில் பட்டதை பளிச்சென்று சொல்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. ரஜினி சார் இந்த விஷயத்தில் ஏற்கனவே நிறைய அடி பட்டிருப்பார் போலும்... எழுந்து நின்று கைத்தட்டியதே அதற்கு சான்று. :)

பாலா said...

//விஜய் ரசிகர்களா? யாரது? அப்படி யாராவது இருக்காங்களா?

:))))))))

//அப்ப ரஜினியோட எண்ணம்தான் அஜித் பேச்சில வெளி வந்திருக்கு அப்படின்னு சொல்லுறீங்களா? எனக்கு என்ன சந்தேகம்னா அது தானா வந்ததா? இல்ல ரஜினி சொல்லி கொடுத்து வந்ததா?


நான் சொன்னது அஜித் வெளிப்படையாக பேசியதற்கு எல்லா நடிகர்களும் உள்ளுக்குள் மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் ரஜினி மட்டும் தான் எழுந்து கை தட்டினார். அதைத்தான் நேர்மை என்று சொன்னேன். பொய் தான் சொல்லி கொடுத்து பேச முடியும். உண்மை யாரும் சொல்லி கொடுக்க வேண்டியதில்லை.

//நீங்க ரொம்ப சாதாரணமா தென் இந்தியாக்குள்ள அவர அடக்கிட்டீங்க....

நான் இந்தியா டுடே சொன்னதை உறுதி படுத்தினேன் அவ்வளவுதான்.

kuchi said...

எல்லாம் நன்றாக இருக்கிறது, ஆனால் இந்த சினிமாக்காரகளை பற்றி எழுதி ஏன் உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்? உங்களுக்கு சினிமா பிடித்திருந்தால் பாருங்கள், சினிமா துறையில் நுழைந்து பணமும் புகழும் பெற முயலுங்கள் ஆனால் இந்த நன்றி இல்ல நடிகங்களை பற்றி சிந்திப்பது தமிழனின் வளர்ச்சிக்கு நல்லதல்ல, இவங்கள் தமிழில் நடித்து கோடி கோடியாக சம்பாதித்தாலும் தமிழ் மக்களுக்காக ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி வீசவில்லை, ஆகவே உங்களை போன்ற புத்திசாலி தமிழர்கள் தாய் தமிழை எழுதி தள்ளுங்கள் மற்றும் இந்த வன்தேரிகளை பற்றி உங்கள் நேரத்தை கிஞ்சித்தும் செலவிட வேண்டாம் என்று சக தமிழ் சகோதரனாக கேட்டுக்கொள்கிறேன். நன்றி !.

Related Posts Plugin for WordPress, Blogger...