விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 12, 2012

வெட்டி அரட்டை - சிதம்பரம் vs நடுத்தரம்


முடியப்போகிறது

அப்பாடா... ! ஒரு வழியாக முடியப்போகிறதாம். அதாங்க, நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி நாளையோடு முடிகிறதாம். உடனே உள்ளுக்குள் மகிழ்ந்து கொள்ளாதீர்கள் கண்டிப்பாக சீசன் 2,3,4.... என்று தொடரும். ஆனால் அதில் சூர்யா வருவாரா? என்பது சந்தேகம்தான். இந்த நிகழ்ச்சிக்கு முதலில் விமர்சனங்கள் எழுந்தாலும், கொஞ்சம் தன்னை திருத்திக்கொண்டு ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது என்பது மறுக்கலாகாது. அதிலும் கடந்த வாரம் முழுவதும் எண்பதுகளின் நாயக நாயகியர் கலந்து கொண்டு அசத்தினார்கள். இதை ஒரு போட்டி என்பதை விட அவர்களின் பேட்டி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் அவ்வப்போது சூர்யா மட்டும் மொக்கைதனமாக பேசி தான் இன்னும் சிறுவன்(யூத்)தான்  என்று நிரூபிக்க முயற்சி செய்து கொண்டிருத்தார். நடிகர் மோகன் கலந்து கொண்ட நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது . விஜய் டிவியின் வெற்றி ரகசியமே மொக்கையான விஷயத்தை கூட கலர் பெயிண்ட் அடித்து, நடிகர் படங்களை ஒட்டி விற்று விடுவதுதான். அந்த வித்தை மறந்து போனதாலேயே சன் டிவியின் கையில ஒரு கோடி நொண்டி அடித்து கொண்டிருக்கிறது.  
 
ஈடா.... ஈடா.....ஈடா.....

நான் முன்பே சொன்ன மாதிரி ராஜமவுலி மறுபடியும் ஒரு சிக்சர் அடித்திருக்கிறார்.எங்கள் ஊரில் மொக்கை தியேட்டர் என்று கூட பார்க்காமல் கூட்டம் நிரம்புகிறது. இத்தனைக்கும் இதில் நடித்திருப்பவர்கள் பற்றியோ, இயக்குனர் பற்றியோ யாருக்கும் எதுவுமே தெரியாது. ஏதோ தெலுங்கு டப்பிங் படம், என்று நினைத்து வந்தவர்களின் மவுத் டாக் மூலமாகவே படம் பிரபலம் ஆகி விட்டது. "ஒரு தரமான படத்துக்கு விளம்பரம் தேவை இல்லை." என்று தல ஒரு முறை சொன்னார். முன்பு அவதார் இப்படி எங்கள் ஊரில் மவுத் டாக் மூலம் ஓடியது. இப்போது நான் ஈ அதை மறுபடியும் நிரூபித்திருக்கிறது. முதன் முதலில் நான் எமதொங்கா பார்த்தபோது  தெரிந்த ஃபிரெஷ்நெஸ், ஒரு வியப்பு, இந்த படம் பார்க்கும்போது கொஞ்சம் கூட  குறையவே இல்லை. 

"என்னடா? சுதீப் எப்படி வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டார்?", என்று நான் நினைத்தேன். ஆனால் அவர் ஒப்புக்கொண்டதற்கு காரணம் என்ன என்பதற்கு எங்கள் ஊரில் சுதீப்பும் ஒரு ஹீரோ ஆகிவிட்டதே பெரிய சாட்சி. இதுவரை இவர் யார் என்றே எங்கள் ஊரில் இருக்கும் சாதாரண மக்களுக்கு தெரியாது. இந்த படம் வந்தபிறகு எல்லோரும் அவரை புகழ்ந்து தள்ளுகிறார்கள். உலகப்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று  அறிவுஜீவிதனமாக படம் எடுத்து விட்டு, "இங்கே ரசனை கம்மி.", என்று மக்களை திட்டும் இயக்குனர்கள் மத்தியில், "இப்படியும் எடுக்கலாம்." என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர். அதிலும் இரண்டு படம் ஹிட் கொடுத்து விட்டாலே தன்னை உலகமகா இயக்குனராக பாவித்து கொள்ளும் இயக்குனர்கள் மத்தியில், ஒன்பது ஹிட் அடித்த பிறகும் தன்னை சினிமா கற்றுக்கொள்ளும் மாணவராகவே நினைக்கிறார் ராஜமவுலி. அதுவே அவரது வெற்றிக்கு காரணம். எட்டு படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்த ஒருவரது ஒன்பதாவது படத்தின் மீது எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்?, அது எவ்வளவு பெரிய பாரம்? என்று சுமந்தவர்களுக்கே தெரியும். படம் முடிந்ததும் அந்த ஈ ஒரு கெட்ட ஆட்டம் போடும் பாருங்கள். அப்போது என் கண்ணுக்கு தெரிந்தது ஈ உருவில் இருக்கும் ராஜமவுலியே.  அவருக்கு என் சல்யூட்.
 
தன்னைத்தானே செதுக்கியவன் 

இப்போது ரசிகர்கள் தலயை இப்படி கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். வழக்கம்போலவே ஏகப்பட்ட குழப்பங்கள், ரிலீஸ் தேதியில் மாற்றங்கள் என்று பல செய்திகள் வந்து, கடைசியாக நாளை பில்லா 2 வெளியாகவுள்ளது. முன்பெல்லாம் படம் வெளிவரும் முன்னரே தலயை கலாய்த்து பல பதிவுகள், கமெண்ட்டுகள் இணையம் முழுவதும் வெளிவரும். இந்த முறை அது குறைவாகவே உள்ளது. இதற்கு முழுகாரணமும் தலயின் வெளிப்படையான நடவடிக்கைகளும், எதையும் மறைக்காத பேச்சும்தான். ஒரு நடிகன் என்பதை தாண்டி, "இந்தாளு நல்ல மனுஷன்யா." என்று எல்லோரையும் பேச வைத்து விட்டார். ஹாட்ஸ் ஆஃப் தல. 

இருந்தாலும் சில குறும்பு பிடித்தவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர் பதிவுலகில் பிரபலாமானவர். தீவிர டாக்டர் ரசிகர். அதற்காகவாவது தலயை கலாய்த்து ஏதாவது எழுதுவார். ஆனால் இப்போதெல்லாம் அவர் கூட எழுதுவதில்லை. பேஸ்புக் அல்லது டுவிட்டரில் மட்டுமே ஸ்டேட்டஸ் போட்டு மகிழ்கிறார். அவரது எழுத்துக்கள் சக்தி வாய்ந்தவை. ஒரு முறை, "அசல் படத்தை ஒரே வாரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள்." என்று சொன்னார். அதன் பின் வரிசையாக எல்லா டாக்டர் படத்தையும் டிவியில் ஒளிபரப்பி விட்டார்கள். தற்போது கூட, "தன் வாழ்வில் ஒவ்வொரு நொடியையும் செதுக்கியவருக்கு ரிலீஸ் தேதியை செதுக்க தெரியவில்லையே...", என்று கலாய்த்திருந்தார். எதிர்பார்த்த மாதிரியே துப்பாக்கியின் ரிலீஸ் தேதியில் குழறுபடி உண்டாகி விட்டது. இதே மாதிரி அவர் நிறைய சொல்ல வேண்டும் என்றே நான் எதிர்பார்க்கிறேன். நண்பன் படம் பார்த்து நிறைய டாக்டர் ரசிகர்கள் எழுதுவதை நிறுத்தி விட்டார்களா? இல்லை விரக்தியில் இருக்கிறார்களா? இல்லை துப்பாக்கி வரும் வரை பதுங்கி இருக்கிறார்களா? என்றே தெரியவில்லை. ண்ணா எங்கண்ணா போனீங்க எல்லோரும்?

இதைக்கேட்க யாருமே இல்லையா?

கேரளாவில் இருந்து தினசரி லாரிகளில் இறைச்சி கழிவுகளை தமிழக எல்லைகளில் கொட்டுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தியே. என் நண்பன் ஒருவன் தனது மலையாளி கல்லூரி நண்பனிடம் இது குறித்து கேட்டபோது, "கேரளா கடவுள்களின் தேசம் அதை அசுத்துப்படுத்த கூடாது. ஆகவேதான் இங்கே கொட்டுகிறார்கள்." என்று மிக சீரியசாக கூறினானாம். அதற்கு என் நண்பன், "அப்படியானால் ஒன்று செய்யுங்கள். எல்லோரும் ஒரு கார்க் வாங்கி அடைத்துக்கொள்ளுங்கள். கேரளா அசுத்தமே ஆகாது." என்று கூறினானாம். அதில் இருந்து அவன் இவனோடு பேசுவதே இல்லை. இதுவரை இறைச்சி கழிவுகளை எல்லையில் கொட்டி வந்தவர்கள், தற்போது உள்ளே வெகு தூரம் வந்து இறைச்சி கழிவுகளை மட்டுமல்லாது, மருந்து கழிவுகளையும் கொட்டி விட்டு செல்கிறார்கள். இப்போது திருநெல்வேலி வரை வந்து கொட்டி விட்டு சென்றிருக்கிறார்கள். 

காசு வாங்கிக்கொண்டு தீவிரவாதியாக இருந்தாலும் சலாம் போட்டு அனுப்பி விடுவார்கள் செக் போஸ்டில் இருக்கும் நம் கடமை தவறாத காவல் அதிகாரிகள். ஆகவே இது போன்ற நேரங்களில் பொதுமக்களே சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுனர்களை பிடித்து நாலு சாத்து சாத்தினால்தான் அஞ்சுவார்கள். சிறை நிரப்பும் போராட்டம், மதுக்கடைகளை மூடும் போராட்டம், தன் சாதிக்கு இழந்த உரிமைகளாய் மீட்டு தருவதாக ஆர்ப்பாட்டம் என்று களேபரம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இந்த விஷயம் இன்னுமா தெரியவில்லை?

நடுத்தரம் vs சிதம்பரம் 

அப்படி என்ன சொல்லிப்புட்டார் இந்த மனுஷன்? "ஐஸ்கிரீம் வாங்குர அளவுக்கு உங்களுக்கு பவுசு வந்துடுச்சா? ஒரு வேளை அரிசிக்கே வழியில்லை, இப்போ ஐஸ்க்ரீம் ஒரு கேடா?" என்று தானே கேட்டார்? இது எப்படி கிண்டல் ஆகும்? உண்மையில் அவருக்கு மக்களின் மீது பெரிய அக்கறை இருக்கிறது. நன்றாக யோசித்து பாருங்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டால் ஜலதோஷம், காய்ச்சல் வரும். டாக்டர், மருந்து மாத்திரை என்று ஏகப்பட்ட செலவு. இது தேவையா? அவர் ஹார்வர்ட்ல படிச்சவர். அவருக்கு தெரியாதா எப்போ விலையை ஏத்தணும் இறக்கணும்னு? இந்த அறிவு ஓட்டு போடும்போது இருக்கணும். அட்லீஸ்ட் கடைசி நேரத்தில் தில்லாலங்கடி வேலைகள் செய்து அவர் மறுபடியும் ஜெயித்தபோதாவது இருக்கணும். அதையெல்லாம் விட்டுபுட்டு இப்போ குதிச்சா என்ன அர்த்தம்? நீங்க வேணா பாத்துக்கிட்டே இருங்க. கூடிய விரைவில் அரசியல்வாதிகளை பார்த்து கேள்வி கேட்பவர்களுக்கு கேள்வி வரி, பதில் கிடைக்கவேண்டுமானால் தனியாக சேவை வரி கட்டவேண்டும் என்று சட்டம் வரப்போகிறது. அப்போதுதான் நாமெல்லாம் அடங்குவோம். "சிதம்பரம் சார், அடுத்த தேர்தலிலும் நீங்கதான் ஜெயிப்பீங்க.  மக்கள் எல்லாத்தையும் மறந்துடுவாங்க.  அதனால கவலை இல்லாம இருங்க. கஞ்சிக்கே லாட்டரி கைக்கு பேட்டரியோ என்று இயக்குனர் பாலா சொன்னா சரி, நீங்க சொன்னா தப்போ?" 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

46 comments:

ஆத்மா said...

நிறைய விடயங்கள் அப்பப்பா....எப்பிடி சார்...

ஆத்மா said...

தீவிரவாதியாக இருந்தாலும் சலாம் போட்டு அனுப்பி விடுவார்கள்///////////

தீவிரவாதிகள் சலாம் சொல்பவர்கள் மட்டும் தானா...?...:(

பாலா said...

@சிட்டுக்குருவி

அய்யய்யோ இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா? இப்படித்தாங்க எதையாவது சொல்லப்போய் வண்டி எங்காவது போய் முட்டி விடுகிறது.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

இன்னிக்குதான் நினைத்தேன் எங்கே ஆளயே காணோமேன்னு.. சந்தோசம்.
வந்தவுடன் காரசார காமடிதான் போங்க.
இறைச்சிக்கழிவு.. உண்மையாகவா? ப்ப்ச்ச்

முத்தரசு said...

வெட்டி அரட்டை.....ம்

தெரிந்து கொண்டேன்

பால கணேஷ் said...

கடவுளின் தேசத்தைச் சேர்ந்தவனுக்கு சொல்லப்பட்ட பதில் அருமை. அந்த லாரி ஓட்டுனர்களுக்குத் தான் கார்க் அடித்து அனுப்ப வேண்டும். மற்ற அரட்டை விஷயங்கள் எல்லாமே நன்று. சூப்பர் பாலா.

நிரஞ்சனா said...

நல்ல அரட்டைங்க பாலா. நான் ஈ இன்னும் நான் பாக்கலை. உடனே பாத்துடணும்னு தோணுது நீங்க எழுதினதைப் படிச்சதும். எனக்கும் அஜித்தை ரொம்பப் பிடிக்கும். கடவுளின் தேசம் அவங்களோடதுன்னா... நம்மோடது நிறைய கடவுள்கள் வாழும் தேசம்னு உறைக்கிற மாதிரி எடுத்துச் சொல்லணும். சரிதானே...

Unknown said...

என்ன சார் நீங்க..? மாட்டை நாம அனுப்புகிறோம்...சாப்பிட்டு கழிவ இங்க வந்து கொட்டுறாங்க....அவன் நல்லவன் சார்!நன்றி மறக்காதவன் சார்!

r.v.saravanan said...

அரட்டை விஷயங்கள் எல்லாமே நல்லாருக்கு பாலா
அஜித் படம் பார்க்க ஆர்வமாய் இருக்கிறேன்

"ராஜா" said...

//ண்ணா எங்கண்ணா போனீங்க எல்லோரும்?

ஒளிஞ்சி நின்னு வேடிக்கை பார்க்கிறார்கள் , பில்லா ப்லாப் ஆனா வெளிய வருவார்கள் , ஆனா ஹிட் ஆகிடுச்சுன்னா அப்படியே ஊரை காலி பண்ணிட்டு ஓடி விடுவார்கள் இந்த படித்துறை பாண்டிகள்...

Unknown said...

அதிகமான விசயங்கள், நிறைவான பதிவு, கார்க் வாயிலயும் சேர்த்து அடைக்கனும்.

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

ரொம்ப நன்றிங்க உங்க சந்தோஷத்தை வெளிப்படுத்தியதற்கு.

பாலா said...

@மனசாட்சி™

வெட்டி அரட்டைன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி

பாலா said...

@பால கணேஷ்

கருத்துக்கு நன்றி சார். கார்க் மேட்டர் செம காரம் ஹா ஹா

பாலா said...

@நிரஞ்சனா

நான் ஈ பார்க்க வேண்டிய படம்தான். உரைக்கிரமாதிரி சொல்றத்துக்கு இங்கே யாரும் இல்லையென்கிறதுதான் இப்போ பிரச்சனையே. கருத்துக்கு நன்றிங்க

பாலா said...

@வீடு சுரேஸ்குமார்

ஆமாமா நன்றி மறக்காதவன். ஏன் அதையும் சேர்த்து சாப்பிட வேண்டியதுதானே?

பாலா said...

@r.v.saravanan

ரொம்ப நன்றி சார். நானும் ஆர்வமாயிருக்கிறேன்.

பாலா said...

@"ராஜா"

படித்துறை பாண்டிகள் என்று சொன்னால் வடிவேலு கோபித்துக்கொள்ளப்போகிறார்.

பாலா said...

@இரவு வானம்

அய்யோ அவர்கள் வாய் ரொம்ப பெரிசே? அவ்வளவு பெரிய கார்க்குக்கு எங்கே போறது? கருத்துக்கு நன்றி நண்பரே

arasan said...

வணக்கம் பாலா சார் ,...
செமத்தியான பதிவு ..
குப்பை கொட்டுவதை தடுக்க நேரமில்லாமல் வேறு வேளைகளில் பாதுகாவலர்கள் பிசியாக இருக்கின்றார்கள் ..
அதுவும் கார்க் மேட்டர் நெத்தியடி.. அந்த நண்பர் பேசாமல் இருப்பது மேல் ..

அப்புறம் சிதம்பரம் ஒன்றும் தப்பாக சொல்லவில்லையே ...
என்னதான் சொல்லிபுட்டார் திட்டகமிஷ்னர் சொன்னாரே அதைவிடவா இவர் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்து புட்டார் ..
இவருக்கு ஒருத்தர் நேற்று புதிய தலைமுறை சேனலில் ஜால்ரா அடிச்சிருக்கார் .. கொடும தாங்க முடியல ..
இவனுங்க எல்லாமே மக்களை மிளகா அரைக்கவே பயன் படுத்துராயிங்க மக்களும் குனிஞ்சி முதுக வக்கனையா காட்டிகிட்டு தான் இருக்குதுக
இலவச குச்சி ஐஸை பார்த்துகொண்டு ...

Prem S said...

நல்ல அரட்டை தான் தொடருங்கள்

RAM said...

கேரளா பிரச்சனை- ஐ "பொதுமக்களே சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுனர்களை பிடித்து நாலு சாத்து சாத்தினால்தான் அஞ்சுவார்கள்." இது போல அனைவரும் பார்க்க தொடங்க வேண்டும். உங்கள் தொடக்கத்திற்கு நன்றி.

விஜய், அஜித் -அ கம்பேர் பண்ணாம எழுதுங்க.
எல்லாரும் பண்ணுனா நாமளும் பண்ணனுமா?

வருண் said...

***ஒரு முறை, "அசல் படத்தை ஒரே வாரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள்." என்று சொன்னார். அதன் பின் வரிசையாக எல்லா டாக்டர் படத்தையும் டிவியில் ஒளிபரப்பி விட்டார்கள். தற்போது கூட, "தன் வாழ்வில் ஒவ்வொரு நொடியையும் செதுக்கியவருக்கு ரிலீஸ் தேதியை செதுக்க தெரியவில்லையே...", என்று கலாய்த்திருந்தார்.***

இம்பூட்டுப் பெரிய டாக்டர் விசிறியா இருக்காரு!!! நமக்கு யாருனு தெரியலை. டாக்டர் விசிறியையெல்லாம் பெருசா மதிச்சு.. நம்ம கோபிராஜ்னு ஒருத்தர் அங்கே சுத்தி இங்கே சுத்தி டாக்டருக்கு சொம்படிப்பாரு. எந்திரன் ம்பாரு, வசூல்ம்பாரு, பிஹண்ட்வுட்ஸ்னு சொல்லுவாரு, கடைசில கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் அந்த வீணாப்போன "டாக்டரு பெருமையை" பீத்த இன்னொரு பதிவா இருக்கும்.

ஏன்னு தெரியலை எனக்கு வர வர விஜய் மேலே வெறுப்பு அதிகமாகிகிட்டேதான் போகுது. உலகமே என்னோட கருத்தை ஒத்து, வர வர டாக்டர் மேல் வெறுப்பு எல்லாருக்குமே அதிகமாகிற மாரி ஒரு பிரமை வேற.

நீங்க அஜீத் விசிறினே எனக்கு கொஞ்ச நாளாத்தான் தெரியும். He is lucky to have a "fan" like you! :)

Yoga.S. said...

வணக்கம்,பாலா!நலமா?///வெட்டி?!அரட்டை ரொம்பவே நல்லாருந்திச்சு.செதம்பரம்...................ஊம்,ஊம்....!!!!!

Yoga.S. said...

தல வாழ்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Madhavan Srinivasagopalan said...

//ஐஸ்கிரீம் சாப்பிட்டால் ஜலதோஷம், காய்ச்சல் வரும் //

This is not always right.
Infact, for infants (even adults) doctors advice to take icecream on high fever to bring down the body temperature. otherwise it may lead to fits. (Febrile convulsion)

This is advised in addition to take bath in shower (with normal temperature tank water --not hot water as we get in summer).

+ Sponging with luke warm water

Yoga.S. said...

என்னம்மா,நிரஞ்சனா,இன்னுமா ஒரு "ஈ" கூடப் பாக்கல?ஹி!ஹி!ஹி!!!!

சீனு said...

// ண்ணா எங்கண்ணா போனீங்க எல்லோரும்?//
ஹா ஹா ஹா நானும் படித்துள்ளேன், படித்து கடுப்பகியும் உள்ளீன்

//அப்படியானால் ஒன்று செய்யுங்கள். எல்லோரும் ஒரு கார்க் வாங்கி அடைத்துக்கொள்ளுங்கள். கேரளா அசுத்தமே ஆகாது."// அனாலும் உங்க நண்பனுக்கு குசும்பு ரொம்பவே ஜாஸ்தி... ஹா ஹா ஹா. என் ஊரான தென்காசி எல்லையில் அதிகமாக நடக்கிறது.. கண்டு கொள்வார் யாரும் இல்லை


படித்துப் பாருங்கள்

தல போல வருமா (டூ) பில்லா டூ

http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_13.html

ஹாலிவுட்ரசிகன் said...

அடடா ... மோகன் வந்த நிகழ்ச்சியைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. நேற்று கடைசி நிகழ்ச்சி என்பதால் கொஞ்ச நேரம் பார்த்தேன். அதிலும் சிவகுமார் அவர் வரைந்ததாக கூறிய அந்த ஓவியங்கள் ... குறிப்பாக நாகேஷினதும், நேருவினதும் போட்டோக்கள், simply superb !!!

அரட்டை நல்லாவே இருந்துச்சு ... :)

Unknown said...

அது என்ன தல மட்டும் தான் உலகத்துல உத்தமன், அவரை மட்டும் கிண்டல் பண்ண கூடாது. மத்தபடி இதர நடிகர்களை மட்டம் தட்டும் உமது பொறுப்புணர்ச்சி அட அட. சூர்யா ஒழிக. அஜித் வாழ்க. போதுமா? குளிருதா? இந்த பொழப்புக்கு ஹி ஹி

Unknown said...

billa 2 vimarsanam enga bala ?

Athisaya said...

அரட்டை கலக்கல்.....ஆராய்ச்சி ஏதும் செய்யலாமே பாஸ்:)
தீவிராதம் பற்றிய கொள்கைகள் திருத்தப்பட வேண்டும்:).......
சந்திப்போம் சொந்மே!
ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!

பாலா said...

@அரசன் சே

உங்கள் கடைசி வரிகள் சரியான கருத்து. நன்றி நண்பரே

பாலா said...

@PREM.S

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@RAM

உங்க கருத்துக்கு நன்றி நண்பரே. நானும் கம்பேர் பண்ணக்கூடாதுன்னு பார்க்கிறேன். விடமாட்டேன்கிறார்களே ?

பாலா said...

@வருண்

உங்க கருத்துக்கு நன்றி தலைவரே. அப்புறம் லக்கி எல்லாம் பெரிய வார்த்தை

பாலா said...

@Yoga.S.

உங்க கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@Madhavan Srinivasagopalan

உங்கள் மருத்துவ ஆலோசனை அடடா? சரி இதை நீங்க சீரியஸா சொல்றீங்களா இல்லை காமெடியா சொல்றீங்களான்னு தெரியலயே?

பாலா said...

@சீனு

நன்றி நண்பரே. படித்துவிட்டேன்

பாலா said...

@ஹாலிவுட்ரசிகன்

சிவகுமார் வந்த நிகழ்ச்சி கடைசிவரை நன்றாக இருந்தது. கடைசியில் அவரையும் அழ வைத்து மொக்கையாக்கி விட்டார்கள்.

பாலா said...

@deepak cbe

நான் எப்போ தல அப்படி சொன்னேன். உங்களுக்கு ஏன் உறுத்துது. தல உத்தமன்தான். ஆனால் சூரியா உலக மகா உத்தமன். ஏன்னா அவருதான் எல்லோருக்கும் நல்லபிள்ளை(சொம்படிப்பதால்)...

அது சரி இந்த பொழப்புக்குன்னு சொல்லிட்டு நிப்பாட்டி விட்டீர்களே? ஒரு வேளை இந்த பொழப்புக்கு சூரியா மாதிரி நாலுபேருக்கு சொம்படித்து பொழைக்கலாம் என்று சொல்ல வருகிறீர்களா?

பாலா said...

@rajivct scan

பொதுவாக நான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதவில்லை. என்ன எழுதினாலும் ஒரு தலை பட்சமாகத்தான் இருக்கும். எழுதாமல் இருப்பதே நல்லது.

பாலா said...

@rajivct scan

பொதுவாக நான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதவில்லை. என்ன எழுதினாலும் ஒரு தலை பட்சமாகத்தான் இருக்கும். எழுதாமல் இருப்பதே நல்லது.

பாலா said...

@Athisaya

உங்கள் மேலான கருத்துக்கு நன்றிங்க. அடிக்கடி வாங்க

Unknown said...

நான் உங்களை மாதிரி சொம்படிக்குற ஜாதி இல்லை. அஜித் தான் உருப்படி மத்த நடிகன் விஜய் சூர்யா எல்லோரும் மொக்கை உங்களுக்கு.

ஏன் இந்த வெறுப்பு?

உஷ்.. கேட்டா எங்க தல நல்லவருடா-னு வெட்டி பஞ்சாயத்து

அவரு நல்லவற இருக்கட்டும் இல்லாம இருக்கட்டும். அதுக்காக மத்தவனை ஏன்யா குறை சொல்ற

நீ தல தல சொல்றதால உனக்கு சோறு கிடைக்க போகுதா??

யோசி தம்பி

நடிகர் பின்னாடி போற விசிலடிச்சான் குஞ்சா இருக்காத

உன்னை மாதிரி ஆளுங்களை எல்லாம் திருத்தவே முடியாது

என்ன பண்ண?

இந்த பொழப்புக்கு தூக்கு மாட்டிக்கிட்டு சாகலாம்-னு சொன்னேன்


முடியலப்பா சூர்யா ரசிகன் இல்லை. நான் நல்ல சினிமா எவன் கொடுக்கிறானோ அவனை தான் சூப்பர் என்று சொல்லுவேன்

பாலா said...

@deepak cbe

இந்த கேள்வியை முதலில் கேட்டிருக்கவேண்டும். உங்களது முந்தைய கமெண்ட் எனக்கு அட்வைஸ் செய்யும் விதத்தில் இருந்ததா இல்லை கிண்டல் செய்யும் விதத்தில் இருந்ததா? அட்வைஸ் செய்யும் விதத்தில் என்று நீங்கள் சொன்னால் அதையேதான் நானும் பதிவில் செய்கிறேன். விஜய் மற்றும் சூரியா என்ன எனக்கு ஜென்ம விரோதிகளா?

நீங்கள் எனக்கு விசிலடிச்சன் குஞ்சு என்று பட்டம் தர தேவை இல்லை. நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு நன்றாக தெரியும். அதே போல தூக்கு மாட்டிக்கொள்ளலாம் என்று அட்வைஸ் எல்லாம் இங்கே தேவை இல்லை.

நீங்கள் சூரியா ரசிகர் என்று நான் சொல்லவே இல்லையே? சூப்பர் படம் எவன் எடுத்தாலும் அவன் பின்னால் போவதை விசிலடிச்சான் குஞ்சு என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

எனக்கு பிடித்த செய்கைகளை தல செய்வதால் அவரை பாராட்டுகிறேன். அதையே சூர்யாவோ விஜயோ செய்தால் அதையும் பாராட்டுவேன். எனக்கு பிடிக்காத விஷயங்களை தல செய்தாலும் விமர்சனம் செய்வேன்.

சில நேரம் உண்மைகள் இப்படித்தான் சுர்ரென்று உரைக்கும். இன்னும் நிறைய தூரம் போக வேண்டி இருக்கிறது சொம்படிச்சான் ரசிகரே....

Related Posts Plugin for WordPress, Blogger...