விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 17, 2012

பில்லா-2 தெரிந்ததும் தெரியாததும்

வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான் 2ஐ கடைசியில் போடாமல் நடுவில் போட்டேன். இந்த கட்டுரையை படிப்பவர்கள் முதல் பாகத்தில் இருந்து படிப்பதே சிறந்ததே. எனவே இங்கே சென்று படித்து விட்டு தொடருங்கள். 


மு.கு: இந்த பதிவில் வன்முறை தவிர்க்க முடியாததாகி விட்டது. எனவே பிடிக்காதவர்கள் சிகப்பில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். 


.......வினோத் என்று தன்னை ஆஸ்பத்திரியில் பதிவு செய்தவன் தன்னை பில்லா என்றும், ஹர்பஜன் என்று கூறிக்கொண்டவன் தன்னை ரங்கா என்றும் கூறினார்கள். இவை கூட இவர்களின் இயற்பெயரா என்று தெரியவில்லை. பல பெயர்களில் இவையும் ஒன்றே என்று கருதப்பட்டது. சிறைக்குள் ரிமாண்டில் இருந்த காலகட்டத்தில், பலமுறை ஜெயிலில் இருந்து தப்பிக்க பார்த்தது, உண்ணாவிரதம் இருக்க முயற்சித்தது, விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்தது என்று நிறைய முரண்டு பிடித்தார்கள். எத்தனை நாட்கள்தான் முரண்டு பிடிக்க முடியும்? ஒரு கட்டத்தில் உண்மைகளை சொல்ல ஆரம்பித்தார்கள். 

ரங்கா தன் வாழ்க்கையை டிரக் டிரைவராக தொடங்கியவன். அதன் பிறகு மும்பையில் டாக்சி டிரைவராக கொஞ்சம் காலம் இருந்திருக்கிறான். அப்போது அவனுக்கு ராஜ்குமார் என்பவனோடு பழக்கம் உண்டாகி இருக்கிறது. ராஜ்குமாரின் சாராய கடத்தலுக்கு மேனேஜராகவும், டிரைவராகவும் இருந்திருக்கிறான். பிறகு அங்கிருந்து வெளியேறி ஷாம் சிங் என்பவனோடு சேர்ந்து சொந்தமாக சாராய கடத்தலில் ஈடுபட்டிருக்கிறான். ஷாம், ரங்காவுக்கு பெங்காலி(பெயரே இதுதான்) என்பவனை அறிமுகம் செய்திருக்கிறான். அவனும் ஒரு டாக்சி டிரைவர்தான். ஒரு நாள் பெங்காலியும், ரங்காவும் வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது, பெங்காலி அடிக்கடி இறங்கி நம்பர் பிளேட்டை மாற்றுவதை பார்த்த ரங்கா, "இவன் பெரிய கில்லாடி." என்று நினைத்துக்கொண்டான். அங்கிருந்து நேராக ஒரு ஆங்கில பள்ளிக்கு சென்று, அப்பாவியாக ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து விட்டார்கள். "3 லட்சம் வரை கேட்கலாம், இல்லை குழந்தையை கொன்று விடலாம்.", என்று பிளான் போட்டுவிட்டு, குழந்தையை ரங்காவிடம் கொடுத்து விட்டு போய் விட்டான் பெங்காலி. இரண்டு நாள் ஆகிவிட்டது. அதுவரை குழந்தை கடத்தல், கொலை போன்ற செயல்களில் ஈடுபட்டிராத ரங்கா, பயந்து போய், அந்த குழந்தையை கடத்திய இடத்திலேயே விட்டு விட்டு வந்து விட்டான்.


இதனால் பெங்காலியின் கடும்கோபத்துக்கும் ஆளானன்.  இது ஷாம் சிங்குக்கும் தெரியவர, குடிபோதையில் கண்டபடி ரங்காவை திட்டிய ஷாம், "நீ ஏன் பில்லா பேச்சை கேட்கவில்லை?" என்று உளறி விட்டான். இதை கேட்டதும் ரங்கா நடுங்கிப்போனான். ஏனென்றால் பில்லா என்பவன் அப்போது சமூக விரோதிகளில் மிக பிரபலம். அவனுக்கு தெரிந்தது எல்லாம் கொலை, கடத்தல், கற்பழிப்பு. அப்படிபட்ட பில்லாவோடுதான் இத்தனை நாள் சுற்றி இருக்கிறோம் என்று தெரிந்தவுடன் ரங்காவுக்கே வியர்த்து போனது. பில்லாவின் பின்புலம் பற்றி அவ்வளவாக தெரியாவிட்டாலும், பில்லா தனக்கு விவரம் தெரிந்த காலத்தில் இருந்தே சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவன் என்பது உண்மை. ஒரு நூறு ரூபாய்க்காக கூட கேஷுவலாக கொலை செய்ய தயங்கமாட்டான். அது ஒரு குழந்தையாக இருந்தாலும் கவலைப்படமாட்டான். பெண்ணாக இருந்துவிட்டாலோ அவனுக்கு டபுள் லாபம். "ஒரு டேப் ரெக்கார்டுக்காக இரண்டு அரேபியர்களை கொன்றேன்.", என்று பெருமையோடு ரங்காவிடம் கூறியிருக்கிறான் பில்லா. மேலும் கார் திருட்டு, போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி, கொள்ளை என்று எல்லாவித செயல்களையும் கரைத்து குடித்திருந்தான் பில்லா. 


குழந்தையை தப்ப விட்டதால் ஷாம் போலீசில் மாட்டிக்கொள்ள, பில்லாவும் ரங்காவும் மும்பையை காலிசெய்து விட்டு டெல்லிக்கு தப்பி ஓடி விட்டார்கள். டெல்லியில் ஜுகல் என்பவனோடு நட்பு கிடைத்திருக்கிறது. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை டெல்லியில் பல்வேறு லாட்ஜ்களில், வெவ்வேறு பெயர்களில் தங்கி இருந்தார்கள். இப்படியே எத்தனை நாள் காலம் தள்ளுவது? பில்லாவுக்கு கை அரிக்க தொடங்கியது. ஜுகலிடம், "யாராவது பணக்காரன் இருந்தா சொல்லு. வீடு புகுந்து கொன்றுவிட்டு, கிடைப்பதை சுருட்டிக்கொள்ளலாம்" என்று கேட்க. ஜுகல் தன் சொந்த மாமா வீட்டையே காட்டி இருக்கிறான். பில்லாவும், ரங்காவும் அந்த வீட்டுக்குள் புகுந்து, ஒன்றும் கிடைக்காமல் ஏமாந்து போய் கடும் கோபத்துடன் ஜுகலை தேடி வந்தார்கள். அப்போது அவன் கேவல் என்ற இன்னொருவனுடன் இருந்தான். பில்லா இருவரையும் காருக்குள் போட்டுக்கொண்டு ஏர்போர்ட் பக்கம் காரை ஒட்டி இருக்கிறான். பிறகு ஓரிடத்தில் காரை நிறுத்தி, இருவரையும் கொலை செய்ய கத்தியை உருவி இருக்கிறான். இருவரும் காலில் விழுந்து கதற, பில்லா , "உங்களை விட்டால் என்னை போட்டு கொடுத்து விடுவீர்கள். ஆகவே எனக்காக ஒரு கொலை செய்யுங்கள். அப்போதுதான் நீங்களாக போலீசுக்கு போகமாட்டீர்கள்.", என்று சொல்லி, தூரத்தில் கும்மிருட்டில் பார்க்கில் அமர்ந்திருந்த ஒரு ஜோடியை நோக்கி கை காட்டி இருக்கிறான். நால்வரும் அங்கே செல்ல, பில்லாவும் ரங்காவும் அந்த ஜோடியை தாக்கி பணம், நகை ஆகியவற்றை பறிக்க, அவர்களை கொலை செய்வதாக வாக்களித்த ஜுகல், கேவல் இருவரும் இதுதான் வாய்ப்பு என்று, இருட்டில் ஓடி மறைந்து விட்டனர். இந்த சம்பவம் பில்லாவின் கொடூர குணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. 
ஒரிஜினல் பில்லா 

இப்படியே இரண்டு நாட்கள் காரிலேயே ரோடு ரோடாக இறை தேடி அலையும் ஓநாய் போல சுற்றியவர்கள் வலையில், தானாக வந்து விழுந்தன இரண்டு புள்ளி மான்கள். பில்லா அசம்பந்தமாக சாலையில் காரை செலுத்திக்கொண்டிருக்க, சாலை ஓரத்தில் நின்றிருந்த கீதா லிஃப்ட் கேட்டு கை காட்ட, கார் இருவரையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. போகிறபோக்கில் அவர்களின் செல்வ வளத்தை பற்றி தெரிந்து கொண்ட பில்லா காரை வேறு திசையில் செலுத்த, பின் சீட்டில் இருந்த இருவரும் தப்பிக்க முயற்சி செய்ய, கதவின் கைப்பிடி ஏற்கனவே பில்லாவால் கழற்ற பட்டிருந்ததால் முடியாமல் போனது. ஆகவே, கீதா பில்லாவின் தலைமுடியை பற்றி இழுத்தாள். சஞ்சய் ரங்காவின் முகத்தில் மாறி மாறி உதைத்தான். இந்த களேபரத்தில் வண்டியின் கியர் நியூட்ரலுக்கு மாறி நடு ரோட்டில் நின்று விட்டது. சுற்றி இருந்தவர்கள் வண்டியை திறக்க முயல, சுதாரித்த பில்லா வண்டியை அசுரவேகத்தில் செலுத்தி ஊருக்கு வெளியே வந்து விட்டான்.   

நடந்த களேபரத்தில், ரங்கா அவர்களை மிரட்டுவதற்காக கிர்பனை எடுத்து சஞ்சய்யை நாலைந்து இடத்தில் வெட்டி கிழித்து விட்டான். ஆகவே இருவரும் அமைதியாக இருந்தனர். அவர்களின் தந்தை கப்பல் படை அதிகாரி என்று தெரிந்ததும் ரங்கா வயிற்றில் அமிலம் சுரந்தது. அவன் பில்லாவிடம், "இவர்களை விட்டு விடலாம்.", என்று கெஞ்ச தொடங்கினான். முத்லில் மறுத்த பில்லா, அவர்களை விட்டு விட சம்மதித்தான். ஆனால் அவனுக்குள் இருந்த ஓநாய் வேறு விதமாக சிந்தித்து பல்லிளித்தது. பில்லா, "உங்களை விட்டு விடுகிறேன். ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். கீதா இங்கே சாலையில் இறங்கி, ஒரு வண்டியில் லிஃப்ட் கேட்கவேண்டும். அந்த வண்டியை கொள்ளை அடித்தபின் உங்களை நாங்கள் விட்டு விடுவோம்" என்று சொல்ல, அவர்களும் சம்மதித்தார்கள். உடனே பில்லா, ரங்காவிடம், "நீ அவனை கொஞ்ச தூரம் சென்று ஆளில்லாத இடத்தில் பத்திரமாக வைத்துக்கொள் நான் வருகிறேன்." என்று சொல்ல, ரங்காவும் சஞ்சய்யை கூட்டிக்கொண்டு இருட்டடைந்த பகுதி நோக்கி சென்றான்.

ஆளில்லாத சாலையில் சஞ்சய் மண்டியிட்டு அமர்ந்திருக்க, ரங்கா அவன் பின்னால் நின்று கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் பில்லா அங்கே வந்தான். வந்தவன், ரங்காவை பார்த்து, அவனை தீர்த்து வீடு என்று சைகை காட்ட, கொஞ்சம் தயங்கிய ரங்கா, கிர்பனால் ஓங்கி வெட்டினான். குறி தவறி வெட்டு சஞ்சய் தோளில் இறங்க, அவன், "என்னை கொல்லாதீர்கள்", என்று அலறதொடங்கினான். கிர்பனை ரங்கா கையில் இருந்து பிடுங்கிய பில்லா, "நீ எதற்கும் லாயக்கில்லை.", என்று கூறியபடி சரமாரியாக வெட்ட தொடங்கினான். சுமார் பத்து நிமிடம், அவனது கடைசி மூச்சு வரை வெட்டி முடித்தபின், இருவரும் சேர்ந்து அந்த பிணத்தை சாலையோரம் இருந்த அடர்ந்த புதருக்குள் வீசினார்கள். பிறகு இருவரும் காரை நோக்கி சென்றனர்.
 

அங்கே வண்டிக்குள் கீதா, உடலில் ஆடை ஏதும் இல்லாமல் இருப்பதை கண்டு ரங்கா புன்னகைத்தான். என்ன நடந்திருக்கும் என்று அவனால் யூகிக்க முடிந்தது. இருவரும் மாறி மாறி பலமுறை அவளை வேட்டையாடினார்கள். கடைசியாக ஒருமுறை பில்லா அவளை கற்பழிக்கும்போது, எதேச்சையாக பில்லா வைத்திருந்த கிர்பான்(இது 3 அடி நீளமுள்ள பெரியது) கீதா கைக்கு சிக்க, அதை வைத்து பில்லாவை தாக்கினாள். கடைசி நேரத்தில் சுதாரித்து கொண்டாலும், அது, பில்லாவின் தலையில் பெரிய வெட்டுக்காயத்தை ஏற்படுத்தி விட்டது.  இதை பயன்படுத்திக்கொண்டு கீதா சாலையில் ஓடத்தொடங்கினாள். அவளை துரத்தி பிடித்த ரங்கா, "உனக்கு அறிவிருக்கிறதா? உன் உடலில் துணியே இல்லை. அங்கேதான் உன் சகோதரன் இருக்கிறான். இந்த நிலையில் உன்னை அவன் பார்த்துவிட்டால் என்ன செய்வது? முதலில் ஆடைகளை அணிந்துகொள். உன்னை அவனிடம் கூட்டிபோகிறேன்.", என்று சொன்னவன், சொன்னபடி அவளையும் அந்த புதருக்குள் கூட்டி சென்றான். பின்னாலேயே பில்லாவும் சென்றான். தம்பியின் பிணத்தை பார்த்ததும் தரையில் மண்டியிட்டு கதறி அழுத கீதாவின் கழுத்தில் இடியாக இறங்கியது, பில்லாவின் 3 அடி கிர்பன். அவள் உடல் காற்றில் அரைவட்டம் அடித்து, ரத்தம் கொப்பளிக்க அங்கேயே அடங்கியது. இருவரும் அந்த இடத்தை விட்டு நீங்கினார்கள். 

நிறைய ரத்தம் வெளியேறிய நிலையில், வெலிங்டன் மருத்துவமனையில் வினோத் என்ற பெயரில் காயத்துக்கு தையல் போட்டுக்கொண்டான் பில்லா. பிறகு இருவரும் ஆக்ராவில் சென்று ஒரு லாட்ஜில் தங்கினார்கள். அங்கிருந்து வெளியேறி திருட்டு ரயிலில் பயணம் செய்யும்போதே ராணுவ வீரர்கள் கையில் சிக்கினார்கள். மேல கூறப்பட்ட அனைத்துமே ரங்காவால் கூறப்பட்டவை. ரங்கா, "பில்லா தான் மட்டுமே மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே என்னையும் அவளை கற்பழிக்க சொன்னான்.", என்று கூறினான். ஆனால் பில்லவோ, "இதை செய்ய ஐடியா கொடுத்ததே ரங்காதான் என்று கூறினார்கள். எது எப்படியோ, இருவரும் செய்த அனைத்தையுமே ஒப்புக்கொண்டார்கள். இதற்கு முன்பு செய்த பல கொலைகளையும் இருவரும் ஒப்புக்கொண்டதால், பஞ்சாப் கோர்ட் இவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இருவரும் இளவயதினர் என்று கருணை கோரப்பட்டாலும்(குத்துமதிப்பாக ஜஸ்பீர் சிங் என்ற பில்லாவுக்கு அப்போது 24வயது. குல்ஜீத் சிங் என்ற ரங்காவுக்கு 22 வயது)  இந்த தண்டனையை உச்ச நீதி மன்றம் உறுதி செய்ய, 1982 ஆம் ஆண்டில் இருவரும் தூக்கிலிடப்பட்டார்கள். ஆண்டுதோறும் வீரக் குழந்தைகளுக்கான விருதுகளில், கீதா மற்றும் சஞ்சய் பெயரிலும், விருதுகள் வழங்கப்படுகின்றன. 

எண்பதுகளின் தொடக்கத்தில் மிகவும் பரபரப்பாக நடந்த இந்த வழக்கு இந்தியாவையே உலுக்கியது என்றால் மிகையல்ல. இந்த நேரத்தில் அமிதாப் நடித்த டான் படத்தை தமிழில் தயாரிக்க நினைத்த பாலாஜி, மக்கள் மனதில் கிலியை உண்டாக்கிய பில்லாவின் பெயரை பயன்படுத்திக்கொண்டார். அதுவும், 1980இல் பில்லா வழக்கு நடந்து கொண்டிருந்தது. இந்த பெயரே படத்துக்கு ஒரு ஹைப்பை கொடுக்க, படம் பிளாக் பஸ்டர் ஆனது. தொடர்ந்து பில்லா என்ற பெயர் தமிழ் சினிமாவில் பெற்ற புகழ் சொல்லி தெரியவேண்டியதில்லை. பில்லா ரங்கா இருவரும் இணைத்து செயல் பட்டாலும், பில்லாவுடன் ஒப்பிடுகையில் ரங்கா அவ்வளவு கொடூரமானவன் அல்ல. இதனால் தான் என்னவோ, பில்லா திரைப்படம் புகழ்பெற்ற அளவுக்கு ரங்கா திரைப்படம் புகழ் பெறவில்லை. அந்த பெயரும் மறக்கப்பட்டது.  

-முடிந்தது 

நன்றி :விக்கிபீடியா 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

30 comments:

கேரளாக்காரன் said...

Wikipaedia details are very very less compared ur post. U worked a lot for this post and thanks a lot bala

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

அடக் கடவுளே...

arasan said...

எவ்வளவு செய்திகள் உள்ளடிக்கிய பதிவு ...
நன்றிங்க தலைவா ...

பால கணேஷ் said...

குட். ஒரு கேஸ் ஹிஸ்டிரியை நல்லாவே சொல்லிட்டிங்க பாலா.

r.v.saravanan said...

பில்லா பற்றிய செய்திகளை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது நன்றிங்க பாலா

Prem S said...

அடடா இவன் தான் பில்லாவா? இக்கதையே எடுக்கலாமே படமாக தகவல்கள் அருமை

ஆத்மா said...

சூப்பர் தகவல் சார் இனிமே எனக்கிட்ட யாரும் பில்லா என்னு பந்தா காட்ட முடியாது........... பகிர்வுக்கு நன்றி சார்

ஹாலிவுட்ரசிகன் said...

ஸ்ஸ்ஸ்ஸபா ... பில்லா படத்தை விட ரெண்டு பதிவும் ரொம்ப டெரரா இருக்கே. ஹார்ட் பீட் மேலே ஏறி இறங்கிடுச்சு.

24 வயசுக்குள்ள இவ்வளவு வன்முறையா? நிறைய செய்திகளை சேர்த்து தந்தமைக்கு நன்றி :)

கேரளாக்காரன் said...

சீரியல் கில்லர் தொடர் எழுதுங்களேன்.

ஆனா எதனால வீர தீர விருது தர்ராங்க?

அப்போ முஸ்கின்,ரித்திக் பேருலயும் குடுக்கனுமே?

அபாரம்

வருண் ப்ரகாஷ்

சீனு said...

த ம ஒன்று. சிவப்பு நிறத்தில் இருப்பதை படிகதீர்கள் என்பதைப் பார்த்ததும் தான் அதைப் படிக்கும் ஆவல் அதிகம் ஆகியது. உண்மைச் சம்பவத்தை பதிவாகிய விதம் அருமை

selvasankar said...

ithu varai arinthida thagavalgal.. pagirvukku nanri nanbareee

Riyas said...

அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் பாலா வாழ்த்துக்கள்..

பல அயோக்கிய வேலை செய்த பில்லாவின் வரலாற்றை இன்றைய இளைஞர்கள் என்னமோ நாட்டுக்காக உயிர்கொடுத்த தியாகி லெவலுக்கு கற்பனை பண்ணிக்கொண்டு திரியும் நேரத்தில் உண்மையான வரலாற்றை தெரியப்படுத்தியுள்ளீர்கள்..

அப்புறம் சார் அந்த கனவுக்கன்னி தொடர மறந்துட்டிங்களா? #Reminder

பாலா said...

@மௌனகுரு

உண்மைதான் நண்பரே. ஆனால் விக்கியில் கொடுக்கப்பட்டிருக்கும் ரேபரன்ஸ் லிங்கில் சென்று முழு கேஸ் ஹிஸ்டிரியையும் படித்தேன். நன்றி நண்பரே

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

இப்படியும் பலர் இந்த மண்ணில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் மேடம். நன்றி

பாலா said...

@அரசன் சே

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தலைவா

பாலா said...

@பால கணேஷ்

அவ்வளவு பெரிய கேஸ் ஹிஸ்டிரியை எப்படி இவ்வளவு விரைவாக படிக்க முடிந்தது என்று தெரியவில்லை. ஆர்வம்தான் காரணம் என்று நினைக்கிறேன். நன்றி சார்

பாலா said...

@r.v.saravanan

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@PREM.S

இந்த கதையை நம்மாட்கள் வேறு பெயரில் கண்டிப்பாக பயன்படுத்தி இருப்பார்கள். கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@சிட்டுக்குருவி

இந்த கதையை தெரிந்தவர்கள் பில்லாவை கொடூரனாகத்தான் பார்ப்பார்கள். நன்றி நண்பரே

பாலா said...

@ஹாலிவுட்ரசிகன்

சமூக விரோதிகள் பெரும்பாலும் படத்தில் காட்டுவது போல நடுவயதுக்காரராக இருப்பதில்லை. டீன் ஏஜிலேயே அதிக தவறுகள் செய்கிறார்கள். நன்றி நண்பரே

பாலா said...

@மண்டை மனோகர்

எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. கண்டிப்பாக எழுத முயற்சி செய்கிறேன் நண்பரே. இந்த இருவரும் கடைசிவரை போராடினார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல இந்த கேஸ் இந்தியாவின் மனசாட்சியையே தட்டி எழுப்பியதாகவும், மிகப்பெரிய அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. நன்றி நண்பரே.

பாலா said...

@சீனு

அந்த ஆவல் ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் வேண்டாத சங்கடங்களை தவிர்க்கவே அப்படி செய்தேன். நன்றி நண்பரே

பாலா said...

@selvasankar

எனக்கும்தான். இவர்கள் உண்மையில் வாழ்ந்தவர்கள் என்று தெரியும். ஆனால் இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று இப்போதுதான் தெரியும். நன்றி நண்பரே

பாலா said...

@Riyas
பில்லாவை பற்றி உண்மைகளை தெரிந்தவர்கள் அப்படி பேசமாட்டார்கள். பில்லா என்ற பெயரை மட்டுமே தமிழ் சினிமா சாமர்த்தியமாக பயன்படுத்திக்கொண்டது. கவர்ச்சி கன்னி இன்னும் மறக்கவில்லை. கண்டிப்பாக வரும். நன்றி நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

பில்லாவைப் பற்றி அறியாத பல தகவல்கள்...
பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 2)

Anonymous said...

ரங்கா படம் போடல பாஸ்!! இது ஒரு பில்லா-ரங்கா கதைதான்.. ஆனா இப்போ இத மாதிரி பல பேர் இருக்காங்க, அவனுகளையும் தூக்குல போட்டாதான் சரி, கெளஹாத்தி ஒரு உதாரணம்!!

N.H. Narasimma Prasad said...

அருமையான பதிவு பாலா சார். நான் சீரியல் கில்லர் பற்றிய பதிவுகள் எழுதும்போது, பில்லா ரங்கா பற்றியும் பதிவு எழுதனும்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். நீங்க முந்திகிட்டீங்களே? நிறைய தகவல்களை தந்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

எவ்வளவு ஸ்பீடா படிக்க வச்சீங்க பாஸ்!
செமையா எழுதியிருகீங்க!

Unknown said...

இவ்ளோ விசயம் இருக்கா மாப்ளே...அதிகமான தேடுதல் வேட்கை தான் உம்மை இப்படி எழுத சொல்லியதோ...பின்னிட்டய்யா!

வேழமுகன் said...

சுவையான ரைட்-அப்.

உண்மையான ரங்கா எப்படியோ,ஆனால் ரஜினியின் ரங்காவும் மிக பரபரப்பான படம் தான். படத்தின் ஆரம்பத்தில் ரஜினியும் கராத்தே மணியும் செய்யும் விவாதமும், அதன்காரணமாக இருவரின் பாதையும் முற்றிலும் மாறுவதும் ஒரு நாவலின் தொடக்கம் போல இருக்கும்.

மறக்கமுடியாத இன்னொரு விஷயம் அவசர அடி ரங்காவின் பன்ச்

Related Posts Plugin for WordPress, Blogger...