விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 16, 2012

பில்லா தெரிந்ததும் தெரியாததும்.


பில்லா.... இந்த பெயரை கேட்டவுடன் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? சிலருக்கு ரஜினி நடித்த பழைய படமும், சிலருக்கு அஜீத் நடித்த புதிய படங்களும் ஞாபகம் வரலாம். ஆனால் இந்த பெயருக்கு பின்னால் வேறு ஒரு உண்மைக்கதை ஒளிந்திருக்கிறது. எண்பதுகளில் பதின்ம வயதினராக இருந்தவர்களுக்கு இந்த கதை தெரிந்திருக்கலாம். 


டெல்லியில் வசிக்கும் சோப்ரா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். கீதா மற்றும் சஞ்சய். கப்பல் படையில் வேலை செய்து வந்த அவர், தனது பிள்ளைகள் கலந்து கொள்ளும் ரேடியோ நிகழ்ச்சியை கேட்க ஆவலோடு ரேடியோ முன் மனைவியுடன் அமர்ந்திருக்கிறார். மாலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சியில் அவர்களின் குழந்தைகளின் குரலுக்கு பதிலாக ஒலித்தது வேறு ஒருவரின் குரல். அதிர்ச்சி அடைந்தவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்படியானால் மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி சென்றவர்கள் எங்கே? இது நடந்தது ஆகஸ்ட் 26, 1978. 
கீதா சோப்ரா மற்றும் சஞ்சய் சோப்ரா 

"என்னவோ குழப்பம் நடந்து விட்டது." என்று நினைத்து, முன்பே திட்டமிட்டபடி, அவர்களை 9 மணிக்கு ரேடியோ ஸ்டேஷனில் இருந்து அழைத்து வரலாம் என்று ஸ்டேஷன் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் ரேடியோ ஸ்டேஷனுக்கு வரவில்லை. எனவே தன் குழந்தைகளை காணவில்லை என்று அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே மாலை அந்த ஸ்டேஷனுக்கு இன்னொரு புகார் வந்தது. அந்த சாலையில் மஞ்சள் நிற ஃபியட் கார் ஒன்று அசுர வேகத்தில் சென்றதையும், அதன் பின் சீட்டில் பதினாறு பதினேழு வயது மதிக்கத்தக்க இருவர்(ஒரு பெண் மற்றும் ஒரு ஆண்) இருந்ததாகவும், அவர்கள் இருவரும், முன் சீட்டில் இருந்தவர்களோடு சண்டை பிடித்ததாகவும் சொல்லப்பட்டது. இதை பல பேர் பார்த்து, அந்த காரை விரட்டி பிடிக்க முடியாமல் போனதாகவும் சொன்னார்கள். 

அதே இரவு சுமார் பத்தேகால் மணிக்கு வினோத் என்பவர் படுகாயத்தோடு வெலிங்டன் மருத்துவமனைக்கு (தற்போது அது ராம் மனோஹர் லோஹியா அரசு மருத்துவமனை என்று அழைக்கப்படுகிறது) ஹர்பஜன் என்பவரால் அழைத்து வரப்படுகிறார். அங்கிருந்த மருத்துவரிடம், வினோத் தன்னிடம் இருந்த பணத்தை ஒருவர் திருடியதாகவும், தடுக்க முயற்சி செய்ததற்காக தன்னை தாக்கி விட்டு ஓடி விட்டதாகவும் கூறுகிறார். இது அங்கிருந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் வினோத், "உடனே வீட்டுக்கு செல்ல வேண்டும்" என்று கூறுகிறார். இந்தளவுக்கு காயமடைந்திருக்கும் நிலையில் அவர் வீட்டுக்கு செல்வது ஆபத்தானது என்று டாக்டர் கூறியும் அவர் கேட்கவில்லை. அங்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் ஹர்பஜனிடம் ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கி கொள்கிறார். மேலும் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு சம்பவம் நடந்த இடத்துக்கு செல்கிறார். சம்பவத்தை பற்றி சரியாக தகவல் தர இயலாத நிலையில் வினோத் தன் தாயை காண விரும்புவதாகவும், அவர்களை பார்த்து விட்டு மறுநாள் காலை வந்து சப் இன்ஸ்பெக்டரை பார்ப்பதாகவும் கூறி விட்டு செல்கிறான். 

ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஊருக்கு ஒதுக்கு புறமான காட்டில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு அவை கீதா மற்றும் சஞ்சயின் சடலங்கள் என்று உறுதி செய்யப்படுகின்றன. போஸ்ட் மார்டத்தில் கீதா கற்பழிக்கப்பட்டதும், கீதா, சஞ்சய் இருவருமே, கிர்பான் என்றழைக்கப்படும் சீக்கியர்கள் வைத்திருக்கும் குறுவாளால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. ஊடகங்கள் இந்த இருவரின் புகைப்படங்களையும் பத்திரிக்கையில் வெளியிட்டு, காவல்துறையின் மெத்தன போக்கை கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்டன. இந்த செய்தியை படித்த ஒருவர், குறிப்பிட்ட தினத்தில், இந்த இருவரும் தன்னுடையை காரில் ரேடியோ ஸ்டேஷன் வரை லிப்ட் கேட்டு, தான் அங்கு செல்லாததால் பாதி வழியில் இறக்கி விட்டதாகத் தெரிவித்தார்.

ஆகஸ்டு 31ஆம் தேதி ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெகு நாட்களாக ஒரு மஞ்சள் நிற ஃபியட் வண்டி நிற்பதை பற்றி காவல் துறைக்கு தகவல் வரவே, ஆறு வாரங்களுக்கு முன் தன் ஃபியட் வண்டியை காணவில்லை என்று சொன்னவரையும் அழைத்துக்கொண்டு அங்கே சென்ற காவல் துறை, அது அவரது கார்தான் என்று உறுதி செய்தது. மேலும் அந்த வண்டியில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதும், ரசாயனங்கள் மூலம் பூட்டுகள் திறக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அந்த வண்டியில் உள்ள அனைத்து கை ரேகைகளும் எடுக்கப்பட்டன. அதே போல காருக்குள் இருந்த ரத்தம் தோய்ந்த மண் துகள்களும், சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்த மண்ணும் ஒரே மாதிரியாக இருந்தன.

செப்டம்பர் 8ஆம் தேதி, ஓடும் ரயிலில், ராணுவ வீரர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பெட்டிக்குள் ராணுவ வீர்கள் என்று சொல்லிக்கொண்டு சந்தேகத்திற்கிடமான முறையில் பயணம் செய்த இருவரை, ராணுவ வீரர்கள் இருவர் சேர்ந்து மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்கள். அதில் ஒருவன் காயங்களோடு இருப்பதை பார்த்ததும், வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனது எக்ஸ்ரே, அதே மருத்துவமனையில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி எடுக்கப்பட்ட வினோத் என்பவனது எக்ஸ்ரேயோடு ஒத்துப்போகவே போலீஸ் சுதாரித்து கொண்டது. அவனை சோதனையிட்ட போலீசுக்கு, ஒரு துப்பாக்கியும், ரத்தக்கறை படிந்த ஒரு கிர்பானும் கிடைத்தது. தகுந்த முறையில் விசாரித்ததும், எல்லா உண்மைகளையும் ஒப்பிக்க தொட்ங்கினார்கள். முதலில் சம்பவ தினத்தன்று தான் மும்பையில் இருந்ததாக கூறிய வினோத், பிறகு அது பொய் என்று ஒப்புக்கொண்டான். 

சந்தர்ப்ப சாட்சிகள், கை ரேகைகள், காரில் கிடைத்த தலைமுடிகள் என்று எல்லாமே அவர்களுக்கு எதிராகவே இருந்தன. தொடர்ந்து முரண்பாடான தகவல்களை அளித்து வந்த அவர்கள் தங்களை அறியாமல் ஒருசில உண்மைகளையும் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் தாங்கள் செய்த தவறுகளையும் ஒப்புக்கொண்டார்கள். இதில் வினோத் என்பவன் தன் பெயர் பில்லா என்றும், ஹர்பஜன் என்பவன் தன் பெயர் ரங்கா என்றும் கூறினான். 

-தொடரும் 

அடுத்த பதிவில்..... என்னை கொல்லாதீர்கள் என்று அந்த சிறுவன் அலறத் தொடங்க, என் கையில் இருந்து வாளை பிடுங்கிய பில்லா, "நீ எதற்கும் லாயக்கில்லை", என்று என்னை திட்டிக்கொண்டே அந்த சிறுவனை சரமாரியாக வெட்ட தொடங்கினான்......  

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

37 comments:

கேரளாக்காரன் said...

Continue:)

Tamilmovieszone said...

submit your website to diggusa increase your alexa rank

http://diggusa.com

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

தொடருங்கள் பாலா. காத்திருக்கின்றேன்

திண்டுக்கல் தனபாலன் said...

நிஜ சம்பவத்தை படித்தவுடன் மனசு 'பகீர்' என்று இருக்கிறது.

பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம.1)

முத்தரசு said...

கடந்த கால கசப்பான நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் ஞாபக படுத்தி விட்டீர்கள் - பதிவும் செய்து விட்டீர்கள் வருங்கால சமுதாயத்துக்கு..

தொடருங்கள் புதிய தலைமுறை தெரிந்து கொள்ளட்டும்

kk said...

இதே மாதிரி சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டன.ஆனால் நமக்கு நடைபெறும்போதுதான் வலி என்னவென்று தெரியும்.அடுத்த பதிவை தொடருங்கள் ஐ ஆம் வெயிட்டிங்க்

Unknown said...

என்ன இது புது தகவல்.இருந்தாலும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

r.v.saravanan said...

தொடருங்கள் பாலா

பால கணேஷ் said...

அந்த கேஸ் ஹிஸ்டரி முமுமையும் எனக்குத தெரியும். நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் படித்திருக்கிறேன். உண்மையில் பில்லா ரங்கா என்ற இரக்கமற்ற இரண்டு ராட்சஸர்களை தமிழ் சினிமா தன் வழக்கப்படி சாகச ஹீரோக்களாக்கி விட்டது வேதனையான விஷயம். இப்போதுள்ளவர்களுக்கு விரிவான தகவலாகப் பதிய முன்வந்துள்ள உங்களின் உழைப்புக்கு பாராட்டுக்கள் பாலா. தொடருங்கள்.

வவ்வால் said...

ஜூனியர் விகடனிலோ எதிலோ பயங்கர குற்றவாளிகல் பற்றி வந்த தொடரில் படித்து இருக்கிறேன்.

பில்லி/பில்லு என்றால் பூனை,பூனை போல திருடுவான் என்பதால் பில்லு ஆகி பின்னர் பில்லா ஆகிவிட்டது என படித்த நினைவு.

MANO நாஞ்சில் மனோ said...

பில்லாவின் நிஜப்படம் கிடைத்தால் போடுங்கள், இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்...!

பாலா said...

@மௌனகுரு

ஒரே பதிவில் முடித்து விடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் மிக நீளமாக் இருக்கும் என்பதால் இரண்டாக உடைத்து விட்டேன். கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@Tamilmovieszone

படிக்கிற காலத்துல இருந்தே நமக்கு இந்தே ரேங்க் மேல எல்லாம் நம்பிக்கை இல்லீங்க

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

உங்கள் கருத்துக்கு நன்றி மேடம்

பாலா said...

@திண்டுக்கல் தனபாலன்

உங்க கருத்துக்கு நன்றி சார்

பாலா said...

@மனசாட்சி™

இந்த தலைமுறையில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். கருத்துக்கு நன்றி தலைவரே

பாலா said...

@Kiruththikan Yogaraja

விரைவில் எழுதுகிறேன். கருத்துக்கு நன்றிங்க

பாலா said...

@ilavarasan

உங்கள் மேலான கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@r.v.saravanan

உங்கள் ஆதரவுக்கு நன்றி சார்

பாலா said...

@பால கணேஷ்

உங்கள் பாராட்டுக்கு நன்றி சார். உழைக்கவெல்லாம் இல்லை. கொஞ்சம் இணையத்தில் துழாவினேன் அவ்வளவே

பாலா said...

@வவ்வால்

உங்களது தகவல் எனக்கு புதியது. நன்றி நண்பரே.

பாலா said...

@MANO நாஞ்சில் மனோ

கண்டிப்பாக அடுத்த பதிவில் போடுகிறேன் நண்பரே. கருத்துக்கு நன்றி

tamilvaasi said...

பில்லா வரலாறு பற்றி அறிந்து கொண்டேன்.

அடுத்த பாகம் வெய்ட்டிங்.

vimalanperali said...

இது மாதிரியான விஷயங்களை படிக்கும் போது கொஞ்சம் சங்கடமாகவே இருக்கிறது.

Anonymous said...

படத்த விட சூப்பரா இருக்கே..சீக்கிரமா முழுக்கதையையும் சொல்லுங்க பாஸ்!

பாலா said...

@தமிழ்வாசி பிரகாஷ்

மிக்க நன்றி நண்பரே. கூடிய விரைவில் அடுத்த பாகத்தையும் எழுதி விடுகிறேன்.

பாலா said...

@விமலன்
உண்மைதான் சார் சில நேரங்களில் நிழலை விட நிஜம்தான் பல நேரங்களில் சங்கடங்களை அளிக்கக்கூடியது

பாலா said...

@மொக்கராசு மாமா
இதை பற்றி படிக்கும்போது எனக்கும் அப்படியே தோன்றியது. கருத்துக்கு நன்றி நண்பரே

ம.தி.சுதா said...

சகோ மிகப் பெரும் எதிர் பார்போடு காத்திருக்கிறேன்...

இப்போதே முகநூலுக்கும் இதை கடத்துகிறேன் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது...

பாலா said...

@♔ம.தி.சுதா♔

நண்பரே இதை ஒரே பதிவாக எழுதலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் நீளம் கருதி, இரண்டாக பிரிக்க வேண்டி வந்தது. மேலும் இரண்டாவது பகுதியில் கொஞ்சம் வன்முறை அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். முடிந்த அளவுக்கு சுவாரசியமாக தர முயற்சி செய்கிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

சீனு said...

இது உண்மைக் கதையா இல்லை உங்கள் கதையா பாஸ்

ஆத்மா said...

மிகவும் வலி கூடிய கதையாக இருக்கிறது பில்லா...

தொடருங்கள் மிகுதியையும் பார்த்து அழுதுவிடுவோம்... :(

Athisaya said...

பி;லாவின் மற்றொரு பக்கம் வலிமிக்கதாயிருக்கிறது...முகநூலில் பகிர்ந்த சுதா அண்ணாவிற்கும்,என் அண்ணாவிற்கும் நன்றிகள...வாழ்த்துக்கள் சொந்தமே

பாலா said...

@சீனு
இது முழுக்க முழுக்க உண்மைக்கதை நண்பரே. எண்பதுகளில் இந்தியாவையே உலுக்கிய உண்மை சம்பவம் இது.

பாலா said...

@சிட்டுக்குருவி

உங்கள் உணர்ச்சி மிக்க கருத்துக்கு நன்றி நண்பரே.

பாலா said...

@Athisaya

உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கு நன்றிங்க

கவி அழகன் said...

Thodarunkal waiting

Related Posts Plugin for WordPress, Blogger...