வணக்கம் நண்பர்களே, ரொம்ப நாளைக்கு முன்னால் கழுத்தை அறுத்த ஏர்டெல் என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அதை இங்கும் நினைவு கூறுகிறேன். இப்போது பிரச்சனை எனக்கு ஏர்டெல்லுக்கும் இல்லை. எனக்கு இணைப்பு கொடுத்த உள்ளூர் ஏஜென்சிக்கும் எனக்கும். இன்னும் மோடம் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. ஆகவே பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை. எப்போது இந்த பிரச்சனை தீரும் என்றும் தெரியவில்லை. ஆகவே பதிவுலக நண்பர்களுக்கு முன்கூட்டியே தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். (தீபாவளி அன்று கூற இயலுமா என்று தெரியவில்லை).
இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகள்.
ஒரு சில புதிய நடைமுறைகளோடு தொடங்கி, பாதி முடிந்திருக்கும் இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளையுமே வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. சொந்த மண்ணில் ஆடிய இங்கிலாந்து அணியின் ஆக்ரோஷமும் வேகமும் எங்கே போனது என்றே தெரியவில்லை. அணியின் முக்கிய வெற்றிக்கு பங்காற்றும் பீல்டிங்கும், பவுலிங்கும் படு சொதப்பலாக இருக்கிறது. அதிலும் மிகவும் எதிர்பார்த்த ஸ்வான் மூன்று போட்டிகளிலுமே ஏமாற்றமே அளித்தார். விக்கெட் கீப்பர் கீஸ்வெட்டருக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. "அவர் இங்கிலாந்து அணியில் ஆடுகிறாரா? இல்லை இந்திய அணியில் ஆடுகிறாரா?", என்று அவர்களுக்கே சந்தேகம் வந்திருக்கும். மாறாக இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி வருகிறார்கள். குறிப்பாக விராட் கோலி, கம்பீர் மற்றும் தோனி தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். ஓப்பனிங்தான் கொஞ்சம் மந்தமாக இருக்கிறது. இந்த தொடரில் சேவாக் மற்றும் யுவராஜ் இல்லாமல் இருப்பது, இந்திய ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றமே.
பீதியை கிளப்பும் படங்கள்
ஒருகாலத்தில் தீபாவளிக்கு பத்து படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆன கதையாக இப்போது இரண்டு அல்லது மூன்று படங்கள்தான் ரிலீஸ் ஆகின்றன. அதிலும் இந்தி படமான ரா ஒண்ணும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது . மற்றபடி முன்னணி நடிகர்களின் படமான வேலாயுதம் மற்றும் ஏழாம் அறிவு மட்டுமே ரிலீஸ் ஆகிறது. இதில் என்ன கொடுமை என்றால் இந்த இரண்டு படங்களுக்குமான புரோமோக்களே பீதியை கிளப்பும் வகையில் இருக்கின்றன. எந்த படமுமே தோல்வியை தழுவ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது.
முதலில் வேலாயுதம். படத்தின் ட்ரெயிலர் பட்டையை கிளப்பி விட்டது என்று சில விஜய் ரசிகர்கள் சொன்னதை கேட்டு நானும் ட்ரெயிலர் பார்த்தேன். அப்படி என்ன பட்டையை கிளப்பி விட்டது என்று தெரியவில்லை. வழக்கமான படங்கள் போலவே இருக்கிறது.குல்லா அணிந்து வரும் ஒரு காட்சியில் விஜய் அந்நியன் போல வாய்ஸ் மாற்றி பேசுகிறார். அது இன்னும் பீதியை அதிகப்படுத்தி விட்டது. இதற்கு மேல் படம் வந்த பிறகு சொன்னால்தான் நன்றாக இருக்கும். இது இப்படி என்றால் ஏழாம் அறிவு இன்னும் மோசம். படத்தின் ட்ரெயிலர் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக இருந்தாலும், முருகதாஸின் பேட்டிகள்தான் பீதியை கிளப்புகின்றன. "நீங்க எவ்ளோ எவ்ளோ எவ்ளோ எதிர்பார்க்கிறீர்களோ, அதை விட மேலே மேலே மேலே இருக்கும்!", என்று சொல்கிறார். இது ஓவர் கான்ஃபீடன்சா? இல்லை படம் உண்மையிலேயே அப்படி இருக்குமா? என்று தெரியவில்லை. வரட்டும் பார்க்கலாம்.
ரஜினி என்ற ஊறுகாய்
இதை நான் சொல்லவில்லை. பிரபல பதிவராக வலம்வரும் நண்பர் பி.பி. அவர்கள் கூறியது. ஷாருக்கான் ரஜினியை ஏமாற்றி, தன் படத்தில் ஊறுகாயாக பயன்படுத்தி விட்டார் என்று கூறி உள்ளார். மேலும் எந்திரன் படம் ஒரு காப்பி என்றும், ரஜினி பெரிய பிராடு என்றும் தன் கருத்துக்களை பதிவு செய்துள்ளார். "எந்திரன் காப்பியா? இல்லையா?", என்ற விவாதம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் ரஜினியை ஏமாற்றி ஷாரூக் நடிக்க வைத்திருக்கிறார் என்பது ஏற்க முடியாதது. இது ஒரு பிசினஸ் தேவை என்பது இருவருக்குமே தெரிந்திருக்கும். அதே போல நட்பு அடிப்படையில் ரஜினி தெரிந்தே நடித்திருக்கலாம். ரஜினி சம்பந்தமாக எந்த செய்தி வந்தாலும் அது ரசிகர்களை பொறுத்தவரை அது இனிமையான செய்திதான். ஆகவே அவர்கள் கூப்பாடுதான் போடுவார்கள். அது மாற்ற முடியாதது. இப்போதும் எங்கள் ஊரில் ரா ஒண்ணுக்கு தான் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
ரஜினி ஒரு பிராடு. இந்த கூற்றை கேட்டு கேட்டு காது புளித்து விட்டது. வேற ஏதாவது சொன்னால் நல்லா இருக்கும். இதை பற்றியும் இப்போது விவாதம் செய்ய தேவை இல்லை என்று நினைக்கிறேன். மேலே உள்ள கருத்துக்களை இந்த பதிவில் எழுத காரணம், கட்ட கடைசியாக அவர் தெரிவித்த கருத்துக்கள்தான். "நானும் எவ்வளவோ பதிவுகள் எழுதி இருக்கிறேன். அதற்கெல்லாம் வந்து கருத்து தெரிவிக்காத நீங்கள், இப்போது ஓடோடி வந்திருக்கிறீர்களே?", என்று கூறி இருந்தார். என்னை செருப்பால் அடித்தது போல இருந்தது. ஆகவே, "நமக்கு அங்கே கருத்து தெரிவிக்க என்ன யோக்கியதை இருக்கிறது?" என்று வந்துவிட்டேன். மேலும், "ரஜினியை திட்டியதால் மாற்று கருத்து தெரிவிக்கிறீர்கள், ஆனால் ரஜினியை புகழ்ந்து எழுதி இருந்தால் பாராட்டி இருப்பீர்கள்." என்று கூறி இருக்கிறார். வாஸ்தவம்தான். ஆனால் தங்கள் அபிமானத்தை பற்றி தரக்குறைவாக பேசியதை தாளாமல்தானே கருத்து தெரிவிக்கிறார்கள்? சரி விடுங்கள். என் மனதை அரித்து கொண்டிருக்கும் ஒரே கேள்வி, கருத்தை பதிவு செய்வதற்கு, என்ன யோக்கியதை வேண்டும்? தொடர்ந்து படித்து கருத்து தெரிவிப்பவர்கள் மட்டுமே ஒரு பதிவிற்கு கருத்து தெரிவிக்க வேண்டுமா? தொடர்ந்து படித்து, ஆனால் எப்போதுமே பின்னூட்டமிடாதவர்கள் கருத்து தெரிவிக்க கூடாதா?
தமிழ் மணம்?
நண்பர் பன்னிக்குட்டி அவர்கள் பய(ங்கர)டேட்டா ஒன்றை வெளியிட, பின் விளைவுகளாக நடந்தவை பெரும்பாலான பேருக்கு தெரியும். இதில் மதவெறி என்று வேறு இழுத்து விடுகிறார்கள். அதை எல்லாம் தவிர்த்து விட்டு பார்த்தால், அடிப்படை பிரச்சனை, தமிழ் மணம் பற்றி தவறான தரவு ஒன்றை பன்னிக்குட்டி கூறியதால், அதனை கண்டிக்கும் விதமாக பெயரிலி என்ற ஒருவர் இட்ட பின்னூட்டங்கள்தான். அவர் தன்னை தமிழ் மணத்தின் பிரதிநிதியாக கூறிக்கொள்கிறார். ஒரு பதிவரின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுமானால், அதற்கென்ற நாகரிகமான ஒரு முறை இருக்கிறது. அதிலும், ஒரு புகழ்பெற்ற திரட்டியின் பிரதிநிதி என்பவர் எந்த மாதிரியான வார்த்தை பிரயோகங்களை கையாள வேண்டும் என்று கூட தெரியாமல் நடந்து கொண்டது சரியல்ல. இங்கே யாரும் யாரையும் சார்ந்திருக்கவில்லை. ஆகவே அவரவர் தங்களின் ஆணவ கிரீடத்தை இறக்கி வைத்தால்தான் பிரச்சனை தீரும். இல்லை என்றால் முடிவு ஒன்றுதான். அது ஒன்றுமில்லை.
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
45 comments:
நல்ல தொகுப்பு பாலா
ரஜினி மேட்டர் சூப்பர் சிம்பிள்-லா சொன்னா அது அவர் இஷ்டம் வேணுமின்னா நீங்க அந்த படம் போயி பார்க்காதீங்க அப்பிடின்னு சொல்லாம சொல்லி இருக்கீங்க அருமை
தீபாவளி வாழ்த்துக்கள்....
மாப்ள கலக்கல் பதிவுய்யா...உமக்கு முன்னதாகவே தீபாவளி வாழ்த்துக்கள்!
@ஜ.ரா.ரமேஷ் பாபு
மிக்க நன்றி நண்பரே.
@இராஜராஜேஸ்வரி
உங்களுக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
@விக்கியுலகம்
மாப்ள செம் டு யு
முன்கூட்டிய தீபாவெளி வாழ்த்துக்கள். நானும் எதிர்பார்ப்பது ரா ஒன் தான், தலைவருக்காக அல்ல, ஷாரூகிற்காக. ஷாரூக் படத்தில் கவுரவ தோற்றத்தில் ஒருவர் நடிப்பது புதிதல்ல, அதை விமர்சிக்க தேவையில்லை என்றே தோன்றுகிறது.
வாங்க பாஸ் நீண்டநாட்களுக்கு பின்பு..இந்திய அணிஅசத்தலாக 3 போட்டிகளிலும் வென்றுள்ளது முதலாவது போட்டி முடிந்த உடனே நான் ஓரு பதிவு போட்டேன்.தொடர் முடிய ஒரு சிறப்பான பதிவு போடலாம் என்று இருக்கேன்..நீங்களும் உங்கள் பார்வையில்..ஒரு தனிப்பதிவை போடுங்க...ஓரு வாசகனாக எதிர்பாக்கின்றேன்
கீஸ்வெட்டரை விட்டு ப்ரையரை கொண்டுவந்திருக்கலாம்....
தீபாவளி வாழ்த்துக்கள்
வேலாயுதம் தான் பீதிய கெளப்புது.....
அப்பறம் உங்களை நீண்ட நாட்களாக காணததால் நீங்கள் பதிவு போட்டது தெரியவில்லை இப்ப என் தளத்தில் உங்கள் கமண்டை பார்த்துதான் வந்தேன்.எப்படியும் பதிவு போட்டு இருப்பீங்க என்று...அதே போல் போட்டுள்ளீர்கள்..
THEY ARE JUST USING RAJINI'S NAME FOR THEIR SURVIVAL. I WROTE TWO COMMENTS IN THAT PARTICULAR BLOG . BUT I DIDNT GET PROPER ANSWER . ANYHOW HAPPY DEEPAVALI TO U GUYS
தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா
@Dr. Butti Paul
நீங்க சொல்வது கரெக்ட். நானும் ரஜினிக்காக இல்லாமல், ரா ஒண்ணை எதிர் பார்க்கிறேன். நன்றி நண்பரே.
@K.s.s.Rajh
என்ன பன்றது நண்பரே, இன்னும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. பதிவு போதும் நேரத்திலேயே, எல்லா பதிவுகளையும் படித்து கமெண்டும் போட வேண்டி உள்ளது. நன்றி நண்பரே.
@ROSHAN , MUMBAI
THANK U FOR YOUR VALUABLE COMMENT. ADVANCED HAPPY DIWALI WISHES
@மாய உலகம்
நன்றி நண்பரே. உங்களுக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பல்சுவையா அள்ளி தெளிச்சி இருக்கீங்க வாழ்த்துக்கள் பாலா...!!!
//தொடர்ந்து படித்து, ஆனால் எப்போதுமே பின்னூட்டமிடாதவர்கள் கருத்து தெரிவிக்க கூடாதா?//
I am this kind of guy. I read most of your blogs. in fact i didnt even miss any of ur article in last one year. But if u see, no of comments i made, it will be very few, that too i will try to correct some info.
you may wonder, why i am not making comments. From ur articles in one year, my understanding is that by default, all your articles are really good. So, If i didn't comment any of your article, don't feel bad.you can take that i like your post ( by default :) ).
I will comment only if there is any controversy.
Don't worry i may mnissed ur article. I kept your blog page as my first book marked page.
Manoj
நமக்கு கமெண்ட் போடறவங்க 25 பேரு..ஆனால் படிக்கிறவங்க 500-1000 பேர்...
அத்தனை பேரும் கமெண்ட் போட்டா என்ன ஆகிறது..நான்லாம் பதில் போட்டே நொந்திருவேனே.....
ராணா தயாரிப்பாளரும் ரா ஒன் தயாரிப்பாளரும் ஒருவர் தான்..ராணா தள்ளிப்போவதால், அவர் பல பிரச்சினையில் சிக்கி இருப்பார்..எனவே அவருக்கும் சேர்த்து ரஜினி செய்யும் உதவி இது..
ரஜினியின் நல்ல மனது பற்றி இனிதான் விளக்கிப் புரியவைக்கவேண்டும் என்றில்லை..
@MANO நாஞ்சில் மனோ
கருத்துக்கு நன்றி நண்பரே...
@Manoj
I am very happy to have a follower like you. Thank you very much and I will try to improve the quality of the articles i write.
@செங்கோவி
நீங்க சொல்றது சரிதான். ஆனா அசராம டபுள் செஞ்சுரி எல்லாம் கமெண்டில் அடிக்கிறீர்கள். அதுவே பெரியவிஷயம்.
ரஜினி பற்றி பேசி பேசியே போராடித்து விட்டது. நன்றி நண்பரே.
பல்சுவை பகிர்வுகள் நண்பரே....
இந்திய அணி தொடர் வெற்றிக்கு வாழ்த்துக்கள்....
உங்களிடமிருந்து தனி பதிவு வரும் என எதிர்பார்கிறேன்....
ஆங்... தீபாவளி வாழ்த்துகள் நண்பா...
தீபாவளி வாழ்த்துக்கள்.
எனக்கென்ன்வோ ரஹானே ஆட்டம் பிடிக்கவில்லை. ஓப்பனிங் ஆடுபவர்கள் கொஞ்சம் பேட்டை விளாசி ஆடவேண்டும். அப்பதான் நல்லா இருக்கும். பார்த்தீவிடம்கூட அது இருக்கு.. சேவாக் வந்ததும் ரஹானே கிளம்ப வேண்டியதுதான். தோனியில் பொறுப்பான ஆட்டமும் தலைமை பண்பும் நாம் ஜெயிக்க காரணம். இங்கிலாந்தில் நாம் ஆடும்போதும் தோனி நன்றாகத்தான் வழி நடத்தினார். அதிர்ஷ்டம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ரஜினி விசயத்தில் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர் என்றுமே ஏமாளியோ கோமாளியோ இல்லை. வினியோகஸ்தர்களின் கடவுள்.
ரஜினி சம்பந்தமாக எந்த செய்தி வந்தாலும் அது ரசிகர்களை பொறுத்தவரை அது இனிமையான செய்திதான்.
ஆம் இனிமையான செய்தி தான்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே
எனக்கும் ரா-ஓன் தான் பெஸ்ட் சொயிஸ், அப்புறம் வேலாயுதத்தில அந்த தம்பி தலையில கோணிப்பையை கட்டீட்டு ஒரு குச்சியை வச்சிட்டு இருக்கிறதா பாக்கிறப்போ வரும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் எனக்கு 7 ஆம் அறிவிலும் நம்பிக்கை குறைவே, முருகதாசின் அலப்பறை தாங்க முடியவில்லை, டிரெயிலர் பாக்கிறப்போ நிறைய லாஜிக் இடிக்குமேன்று தோனுது.
அப்புறம் ரஜினி மேட்டர், அதை லூசில விடுங்க. மாதமொரு தடவை (அவர் பாசையில சொல்லனுமின்னா) அவருக்கு கு-டி எரியேக்க இப்பிடி ரஜினிபேரை மருந்தாக்கி கூடவே ஹிட்சும் பார்ப்பார்.
நீங்க எழுதியிருக்குற இரண்டு பத்திக்கு இருபது பத்தி பதில் போட்டு ஜல்லியடிக்க எனக்கு நேரமில்லை... ஏற்கனவே சொல்ல வேண்டியதை எல்லாம் என் பதிவிலும் அதன் பின்னூட்டங்களிலும் சொல்லியாயிற்று... நன்றி...
முக்கியமான சில விஷயங்களுக்கு மட்டும் பதிலிடுகிறேன்...
// என் மனதை அரித்து கொண்டிருக்கும் ஒரே கேள்வி, கருத்தை பதிவு செய்வதற்கு, என்ன யோக்கியதை வேண்டும்? தொடர்ந்து படித்து கருத்து தெரிவிப்பவர்கள் மட்டுமே ஒரு பதிவிற்கு கருத்து தெரிவிக்க வேண்டுமா? தொடர்ந்து படித்து, ஆனால் எப்போதுமே பின்னூட்டமிடாதவர்கள் கருத்து தெரிவிக்க கூடாதா? //
யோக்கியதை இல்லை போன்ற அர்த்தம் வரும் வரிகளை நான் எங்கேயும் பயன்படுத்தவில்லை... நீங்கள்தான் அப்படி புரிந்திருக்கிரீர்கள்... என்னுடைய வலைப்பூவில் அனானிகளுக்கு கூட பொறுமையாக பதில் சொல்லியிருப்பதை பார்க்கவும்...
// "எந்திரன் காப்பியா? இல்லையா?", என்ற விவாதம் தேவை இல்லை என்று நினைக்கிறேன் //
ஏன் நீங்க அப்படி நினைக்கிறீங்க...???
// ரஜினி ஒரு பிராடு. இந்த கூற்றை கேட்டு கேட்டு காது புளித்து விட்டது. வேற ஏதாவது சொன்னால் நல்லா இருக்கும். //
ரஜினி பெயரை பயன்படுத்தி ஹிட்ஸ் வாங்குகிறாய். இந்த கூற்றை கேட்டு கேட்டு காது புளித்து விட்டது. வேற ஏதாவது சொன்னால் நல்லா இருக்கும்.
// THEY ARE JUST USING RAJINI'S NAME FOR THEIR SURVIVAL. I WROTE TWO COMMENTS IN THAT PARTICULAR BLOG . BUT I DIDNT GET PROPER ANSWER . //
இதுக்கு மேல என்ன எதிர்பாக்குறீங்க ரோஷன்...
@தமிழ்வாசி - Prakash
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
நன்றி நண்பரே. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
@Karthikeyan
சேவாக் வரும் வரைதான் நாம் இருப்போம் என்று அவருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆகவே தான் இப்படி ஆடுகிறாரோ?
ரஜினியை பற்றி சரியாக சொன்னீர்கள். நன்றி நண்பரே.
@r.v.saravanan
நன்றி நண்பரே. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
@எப்பூடி..
நன்றி தலைவரே...
@Philosophy Prabhakaran
உங்களுடைய கருத்துக்கு நன்றி நண்பரே. ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு கருத்துறையில் பதில் சொல்கிறேன்.
நீங்கள் யோக்கியதை இல்லை என்று கூறவில்லை.
//நான் வேறு சில இடுகைகளையும் எழுதியிருக்கிறேன்... அப்போதெல்லாம் எட்டிப்பார்க்காத நீங்கள் இப்போது ஓடிவந்திருக்கிறீர்களே உங்களுடைய குற்றமா...//
மேலே கொடுத்திருக்கும் வரிகளை எப்படி புரிந்து கொள்வது? நீங்கள் நேரடியாக சொல்லாவிட்டாலும், ரஜினி பதிவு என்றவுடன் ஓடி வந்து விடுகிறீர்களே என்ற அர்த்ததுடன் தான் இது இருக்கிறது?
@Philosophy Prabhakaran
எந்திரன் காப்பியா இல்லையா என்ற விவாதம் தேவை அற்றது என்று நான் கூறக்காரணம் பயமல்ல. ஏற்கனவே படம் வந்த புதிதில் இது பற்றி பேசி, கட்டி உருண்டு புரண்டாயிற்று... மறுபடியும் ஆரம்பிக்க வேண்டுமா என்றுதான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
நான் இல்லை என்பேன், உடனே நீங்கள் சில ஆங்கில படங்களை உதாரணம் காட்டுவீர்கள், அதை மறுப்பேன். அப்படியே இல்லாவிட்டாலும், ஒரு சில காட்சிகள் உருவப்பட்டுள்ளன என்று சொல்வீர்கள். இப்படியே பழைய குருதி கதவை திறடி ஆகி விடும். அதான் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.
இதேதான். ரஜினியை பிராடு என்று சொல்பவர்களும் நிறுத்தப்போவதில்லை, அவரை வைத்து ஹிட்ஸ் வாங்குகிறாய் என்று சொல்பவர்களும் நிறுத்தப் போவதில்லை. இது குறித்து பல ரஜினி ரசிகர்கள் பல பதிவுகள் எழுதி விட்டோம். உதாரணமாக, அவர் பிரியாணி போடுகிறேன் என்று சொன்னதை நாங்களே பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை, அதை பிடித்து நீங்கள் ஏன் தொங்குகிறீர்கள் என்று தெரியவில்லை.
@Philosophy Prabhakaran
இறுதியாக, எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், ஒரு விஷயம் குறித்து விமர்சனம் வைக்கும்போது, தனக்கு பிடிக்காதவர் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே தாக்கி எழுதுவார்கள். அதையே நீங்களும் செய்திருக்கிறீர்கள்.
அதே போல தனக்கு பிடித்தவர்களை பற்றி ஒரு சில கசப்பான உண்மைகளை கூட தாங்கி கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் திட்டி விடுவார்கள். அதையே கருத்திடுபவர்களும் செய்திருக்கிறார்கள்.
ஆனால் உங்களின் பதிவை இங்கே சுட்டிக்காட்டியதன் நோக்கம் எப்பவுமே வராத நீ இப்போ ஏன் வந்த என்ற வார்த்தைகள்தான்.
தல எப்பவுமே எல்லாருக்கும் பிடிக்கிற விஷயம் நமக்கும் பிடிக்குதுன்னு சொன்னா நாமா தனியா தெரிய மாட்டோமே என்று சிலர் சில சமயங்களில் இது மாதிரி எதாவது சொல்வது உண்டு.. Freeya விடுங்க.. எந்திரன் ரிலீஸான ரெண்டாவது நாள் INOX தியேட்டர்ல கூட்டமில்லாம காலியா இருந்துச்சின்னு ஒருத்தர் எழுதிருந்தாரு...என்ன சொல்றது... கண்டுக்காதீங்க...
மத்தவங்களுக்கு வேணா ஷாரூக் படத்துல ரஜினி 1 நிமிஷ கெஸ்ட் ரோல் பண்ணதா இருக்கட்டும்.. ஆனா
நம்ம பொறுத்த வரைக்கும் ரஜினியோட 1 நிமிஷ படத்துல ஷாரூக் 2.30 மணி நேரம் guest role பண்ணிருக்காருன்னு நெனச்சிக்குவ்வோம்... அவ்ளோதான்... :)
@முத்துசிவா
நன்றி நண்பரே. எங்கள் ஊரில் பெரும்பாலான் ரசிகர்கள் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ரஜினியைப் பலர் விமர்சிப்பதற்குக் காரணம் அதனால் கிடைக்கும் விளம்பரம் தான். இதுபோன்ற விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது.
@வேழமுகன்
உண்மைதான் நண்பரே. கருத்துக்கு நன்றிகள்
Post a Comment