விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

October 31, 2011

மங்காத்தாவை மிஞ்சிய வேலாயுதம்
தீபாவளிக்கு வந்த மூன்று படங்களையும் பார்த்து பெரும் குழப்பம் ஏற்பட்டு, "எந்த படம் நல்ல படம்?", என்று தெரியாமல் கன்பியூஸ் ஆகி, இப்போதுதான் தெளிந்திருக்கிறேன். மேலும் பதிவெழுத ஒரு மேட்டரும் சிக்கவில்லை. ஆதலால், வெகு நாட்களுக்கு பிறகு திரை விமர்சனம் ஒன்றை எழுதப்போகிறேன். நடு நிலையாக இருக்கும் என்று நம்புகிறேன்.  

நடு நிலை விமர்சனம் #1 


தீபாவளிக்கு முன்பு நிலைமை எப்படி இருந்ததோ, தீபாவளிக்கப்புறம் அப்படியே தலை கீழாக இருக்கிறது. ஏழாம் அறிவு மண்ணை கவ்வ, லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவோடும், கோடிக்கணக்கான மக்களின் ரசனையோடும் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது வேலாயுதம். கதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆகவே நான் ரசித்ததை மட்டும் சொல்கிறேன். முன்னெப்போதும் விட விஜய் மிக இளமையாக இருக்கிறார். அதிலும் மாயம் செய்தாயா பாடலில் செமே கியூட். சிக்ஸ் பேக் சூர்யாவிடம் இல்லாத வசீகரம் இவரிடம் உள்ளது. இது வரை மிக சீரியஸான அண்ணன் தங்கை பாசத்தை இப்படியும் காட்டலாம் என்று நிரூபித்திருக்கிறார்கள். பாசமிக்க அண்ணனாக சிறப்பாக நடித்திருக்கிறார் விஜய். கிராமத்தில் அவர் அடிக்கும் லூட்டியாகட்டும், அவரைப்பற்றிய பில்டப் வசனங்களுக்கு அப்பாவியாக ரீயாக்ஷன் கொடுப்பதாகட்டும் பின்னி பெடலெடுத்திருக்கிறார். 

ஆக்சன் காட்சிகளில் முன்னெப்போதும் இல்லாத வேகம். அதிலும் அந்த ரயில் காட்சி, மிக சிறப்பானதாக அமைந்திருக்கிறது. கிளைமாக்ஸில் வரும் மோதலில் அனல் பறக்கிறது. எல்லாம் செய்துவிட்டு அமைதியாக செல்லும் இடத்தில் விஜய் மனதை அள்ளுகிறார். விஜய் மீது எல்லோரும் வைக்கும் குற்றச்சாட்டு அவர் ஒரே மாதிரி நடிக்கிறார் என்று. ஒரு மாஸ் படம் இதை விட சிறப்பாக எப்படி இருந்து விட முடியும் என்று தெரியவில்லை. விஜய்க்கு அடுத்த படியாக படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஜெனிலியா. இதுவரை லூசுப்பெண்ணாகவே பார்த்து வந்த இவர் இந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி போகிறார். விஜய் மீது காதல் கொள்வதாகட்டும், பின்னர் அதை மனதில் மறைப்பதாகட்டும், ஜெனிலியா நெஞ்சை கொள்ளை கொள்கிறார். 

ஹன்ஸிகா, சந்தானம் சொல்வது போல வெண்ணையில் செய்த சிலை போல இருக்கிறார். அப்பாவி கிராமத்து பெண் கேரெக்டரை அருமையாக செய்திருக்கிறார். இன்னும் ஒரு வருடத்துக்கு இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கப்போவது உறுதி. சந்தானம் கிடைக்கும் கேப்பில் எல்லாம் சிக்சர் அடிக்கிறார். முதல் பாதியில் பெரும்பாலான காட்சிகள் தியேட்டரே சிரிப்பலையில் மிதந்தது. படத்தின் பெரும் பலங்கள் , கேமரா மற்றும் பின்னணி இசை. கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது. அந்த ரயில் காட்சியில் எங்கெல்லாம் கேமரா வைத்திருந்தார்கள் என்றே தெரியவில்லை. அதே போல விஜய் ஆண்டனி, ஒரு கமர்ஷியல் படத்துக்கு என்ன தேவையோ அதை கொடுத்திருக்கிறார். பாடல்கள் ஆடியோவிலேயே மிகப்பெரிய ஹிட். படத்தில் பார்க்கும்போது மிக அருமை. ஜில்லாக்ஸ் பாடலுக்கு கால்கள் தாளம்போடுவதை தடுக்க முடியவில்லை. 

கடந்த நான்கு நாட்களில் சென்னையில் மட்டுமே 7 கோடி வசூல் ஆகி உள்ளதாம். இது வேலாயுதத்தை விட அதிகமான திரை அரங்குகளில் வெளியான எந்திரனுக்கு இணையானது. மேலும் இது போட்டியே இல்லாமல் வந்த மங்காத்தாவின் பத்து நாள் வசூல் என்பதை மனதில் கொள்க. இனி மாஸ் ஓப்பனிங் யாருக்கு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள். சிகரெட் பிடிக்கவில்லை, தண்ணி அடிக்கவில்லை, கெட்ட வார்த்தை பேசவில்லை. ஆனாலும் தன் அப்பாவித்தனத்தாலேயே மாஸ் காட்டுகிறார் விஜய். எம்ஜியாருக்கு அப்புறம் சம காலத்தில் யாராலுமே இதை செய்ய முடியாது என்பது உறுதி. 

வேலாயுதம் - 1000வாலா பட்டாசு நடுநிலை விமர்சனம் #2 

கமர்ஷியல் படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாதாம் சரி. லாஜிக் பற்றி நான் எதுவும் பேசப்போவதில்லை. 


"கெமிக்கல் பேக்டரிக்குள் செல்லும் தண்டவாளம் நேராக விஷ வாயு கண்டெய்னரில் சென்று ஏன் முடிகிறது?" என்று நான் கேட்கபோவதில்லை. "அந்த பார்வை தெரியாத பெண் கத்தியவுடன், அவ்வளவு பெரிய ஸ்டேடியத்தில் அனைவரும் அமைதி ஆவது எப்படி?" என்று நான் கேட்கப்போவதில்லை. ஜெனிலியா ஏதோ ஒரு டி‌வி சேனலில் வேலை பார்க்கிறார். "ஆனால் அங்கே எப்போதுமே ஜெயா டிவியே ஓடிக்கொண்டிருப்பதை ஏன்?" என்று நான் கேட்கப்போவதில்லை. "கதாநாயகனுக்கு இருக்கும் முறைபெண்கள் எல்லோருமே சேட்டு வீட்டு பெண்கள் போலவும், லூசாகவும் இருப்பது ஏன்?" என்று கேட்கப்போவதில்லை. "இறுதிக்காட்சியில் இருவரும் அந்த சின்ன கேமராவின் பிரேமுக்குள்ளேயே சண்டை போடுவது ஏன்?" என்று கேட்கபோவதில்லை. கிளைமாக்ஸில், "அவ்வளவு நேரம் அந்த அண்டர் கிரவுண்ட் சண்டை லைவ் ரிலே ஓடிக்கொண்டிருக்கும் வரை காவல் துறையும் அதை பார்த்து ரசித்துக்கொண்டே இருந்ததா?" என்றும் கேட்கபோவதில்லை. ஒரு உள்துறை அமைச்சர் ஒரு வார்டு கவுன்சிலர் ரேஞ்சுக்கு இறங்கி வேலை செய்வதை பற்றியும் நான் கேட்கபோவதில்லை. 

சிங் இஸ் கிங் (Singh is King) படத்தில் வரும் கோழி பிடிக்கும் சீனை அப்படியே ஆட்டைய போட்டிருக்கிறார்கள். மிக மிக நல்லவராக வரும் விஜய், பெண்களின் சேலையை உருவுவதும், ஜெனிலியாவின் டிக்கியில் தட்டுவதும், ஜெனிலியாவை உடை மாற்றும் அறையில் பார்த்ததும், தானும் பதிலுக்கு திறந்து காட்டுவதும் அப்பாவித்தனமாம். விஜய்க்கு நடிக்க தெரியாது என்ற பேச்சு பரவலாக இருக்கிறதல்லவா, ஆகவே பெரும்பாலான காட்சிகளில் முகத்தை அஷ்ட கோணலாக வைத்து நடிக்க முயன்று கடுப்பேற்றுகிறார். 

ரயில் விபத்தை அடிப்படையாகக்கொண்ட அன்ஸ்டாப்பாபுள் (Unstoppable) படத்தை ஐந்து நிமிடத்துக்குள் எடுத்து, அதில் சூப்பர் ஹீரோவை நுழைத்த உத்தி ராஜாவுக்கு மட்டுமே கை வந்த கலை. அந்த படத்தின் இயக்குனர் இதை பார்த்தார் என்றால், ஏதோ ஸ்பூஃப் என்று நினைத்துக்கொள்வார். ஜெனிலியா மிக வறட்சியாக இருக்கிறார். அதற்கெல்லாம் சேர்த்து ஹன்ஸிகா மிக செழிப்பாக இருக்கிறார். பலான படத்தில் பிட்டு போடுவார்களே அதே போல இந்த படத்தில் இரண்டு பிட்டுகளில் சாரி காட்சிகளில் பயன்பட்டிருக்கிறார். எம்‌எஸ் பாஸ்கர் மாதிரி ஒரு "மாமா" அமையமாட்டாரா என்று எல்லோரும் நிச்சயம் ஏங்குவார்கள். இந்த படத்துக்கு சந்தானம் பிளஸ் பாயிண்டா இல்லை மைனஸ் பாயிண்டா என்று தெரியவில்லை. 

நீங்கள் தியேட்டருக்கு நிறைய பஞ்சு எடுத்து சென்றாலும், உங்கள் காது ஜவ்வு கிழிவதை யாராலும் தடுக்க முடியாது. ரீரிக்கார்டிங்கும் வேலாயுதமாக மாறி காதை படம் பார்க்கிறது. விஜய் ஆண்டனி தான் ஆட்டைய போட்ட பழைய மெட்டுக்களையே திரும்ப டின்கரிங் செய்து கொடுத்திருக்கிறார். ஜில்லாக்ஸ் பாடல், சுக்ரன் படத்தில் வரும் சாத்திக்கடி போத்திக்கடி பாடலை நினைவூட்டுகிறது. இறுதிக்காட்சியில் சாமர்த்தியமாக தன் கட்சி கொடியை இணைத்து விட்டு அதுவும் பொய் என்று அந்தர் பல்டி அடித்து விட்டார்கள். தல வந்தாச்சு என்று சொன்னவுடன், மிரண்டு ஓடுவது போல நடித்திருக்கிறார் விஜய். கலாய்ச்சிட்டாராமாம்... 

இதையும் ரத்தத்தின் ரத்தங்கள் காவலன் மாதிரியே கொஞ்ச நாளைக்கு கொண்டாடுவார்கள். அப்புறம் மறந்து விடுவார்கள். வேலாயுதம் விஜய்யின், வில்லு, குருவி, வேட்டைக்காரன், ஆகிய வெற்றிப்படங்களின் வரிசையில் இணைகிறது. இதுக்குமேல முடியல.... 

வேலாயுதம் - என்னத்த சொல்ல... 

நடுநிலை விமர்சனம் #3 


அடப்போங்கப்பா... நானும் எத்தனை நடுநிலை விமர்சனம்தான் எழுதுறது? அப்படியே எழுதினாலும் ஒத்துக்கவா போறீங்க. அப்படி எழுதினா விசிலடிச்சான் குஞ்சுன்னு சொல்லுவீங்க. இப்படி எழுதினா சைக்கோன்னு சொல்வீங்க. எதுக்கு வம்பு? அதனாலதான்தான் இப்படி ஒரு சைக்கோ விசிலச்சான் குஞ்சாக மாறிட்டேன். உங்களுக்கு எந்த விமர்சனம் பிடிச்சிருக்கோ அதை படிச்சு சந்தோசப்பட்டுக்கோங்க . ஏன்னா விமர்சனத்தை படிச்சுட்டு படம் பாக்கிறவுங்க ரொம்ப கம்மி. சந்தோசத்துக்குதானே விமர்சனம் படிக்கிறீங்க. அதை நான் ஏன் கெடுக்கணும். அதுக்காக மாத்திப்படிச்சு கடுப்பானா நான் பொறுப்பு கிடையாது. இதுக்கு நீங்க போட போற கமெண்ட்ஸ் பற்றி எனக்கு கவலை இல்லை. என்னா நமக்கு ஹிட்ஸ்தான் முக்கியம். தளபதி பற்றி எழுதினால் நிறைய ஹிட்ஸ் கிடைக்குமாம். சொன்னாங்க. 

பி கு: இந்த படத்தில் வேலாயுதம் என்ற வார்த்தை எத்தனை தடவை வருகிறது என்று கண்டு பிடித்து சொல்பவர்களுக்கு ஒரு பரிசும் கிடையாது. அவ்வளவு உன்னிப்பாக படத்தை பார்த்ததே பெரிய பரிசுதான். 


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 


67 comments:

rajamelaiyur said...

பின்னிடிங்க தலைவா

"ராஜா" said...

// தளபதி பற்றி எழுதினால் நிறைய ஹிட்ஸ் கிடைக்குமாம். சொன்னாங்க.

ஆனா அவருக்குதான் (ஹிட்)ஸ் கிடைக்கமாட்டேங்கிது ..

//இப்படி எழுதினா சைக்கோன்னு சொல்வீங்க

அப்படினா ஊருக்குள்ள விஜய் ரசிகர்களை தவிர மத்த எல்லாருமே சைக்கோதானா...

//இதையும் ரத்தத்தின் ரத்தங்கள் காவலன் மாதிரியே கொஞ்ச நாளைக்கு கொண்டாடுவார்கள். அப்புறம் மறந்து விடுவார்கள்.

தளபதிக்கு அடுத்து ஒரு நிஜமான ஹிட் வரும் வரைக்கும் அவர்களும் மறக்க மாட்டார்கள் நம்மையும் மறக்க விட மாட்டார்கள்...

//கமர்ஷியல் படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாதாம்

அப்படி சொன்னவர்கள் எல்லாம் ஏன் வெடி படத்தில் அது நொட்டை இது நொட்டை என்று லாஜிக் தேடினார்கள்.. அதையும் லாஜிக் இல்லாமல் பார்த்து ரசித்திருக்க வேண்டியதுதானே... அவர்களுக்கு விஷால் எப்படியோ அப்படிதான் மற்றவர்களுக்கு விஜய்....


ஐயையோ ஓவரா பேசிட்டனே .. என்னைய சைக்கோன்னு சொல்லிடுவாணுகளே?

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Unknown said...

சை கோ - அப்படின்னா சைட்டடிக்கிற கம்பனிய சேந்தவங்களா டவுட்டு....மாப்ள இது கும்மாங்குத்தால்ல இருக்கு!

Unknown said...

:-)

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

ஒரு முடிவோடதான் இருக்கீங்களா? ஆனா இந்த கழுவற மீன்ல நழுவற வித்தைய எங்களுக்கும் கொஞ்சம் சொல்லித்தந்தீங்கன்னா நாங்களும் உங்க மாதிரி நடுநிலை விமர்சனம் போட்டு ஹிட்ஸ் ஏத்திக்குவோம். நடுநிலை விமர்சனம் நம்பர் 3 ஓகே, மற்றைய ரெண்டும் படு மொக்கை (இது எப்புடியிருக்கு?)

Unknown said...

//மங்காத்தாவை மிஞ்சிய வேலாயுதம்//
இப்பிடியொரு பதிவு இன்னும் வரலயேன்னு பாத்துட்டிருந்தேன்! :-)

இராஜராஜேஸ்வரி said...

அருமையான் உத்தி. பாராட்டுக்கள்/

சேக்காளி said...

//கடந்த நான்கு நாட்களில் சென்னையில் மட்டுமே 7 கோடி வசூல் ஆகி உள்ளதாம். இது வேலாயுதத்தை விட அதிகமான திரை அரங்குகளில் வெளியான எந்திரனுக்கு இணையானது. மேலும் இது போட்டியே இல்லாமல் வந்த மங்காத்தாவின் பத்து நாள் வசூல் என்பதை மனதில் கொள்க//
இந்த தகவல்கள் கிடைக்கும் முகவரி வேண்டும்.

சக்தி கல்வி மையம் said...

எனக்கு பிடிச்சிருக்கு, ஓட்டு போட்டாச்சு..

பாலா said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி நண்பரே.

பாலா said...

@"ராஜா"

நீங்கள் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். காவலன் ஹிட், வேலாயுதம் சூப்பர் ஹிட். வெடி படம் விஜய் நடித்தது அல்ல. ஆகவே அது அசுர மொக்கை. வேலாயுதம் விஜய் நடித்தது ஆகவே அது அசுர மாஸ். இல்லை என்றால் நீங்க ஒரு சைக்கோதான்.

பாலா said...

@Online Works For All

இருக்கிற வேலையே ஒழுங்கா பாக்காம ஒபி ஆடிச்சுக்கிட்டு இருக்கோம். இதுல இன்னொரு வேலையா?

பாலா said...

@விக்கியுலகம்

மாப்ள இது நல்லா இருக்கே.

பாலா said...

@ஜீ...

நன்றி நண்பரே.

பாலா said...

@Dr. Butti Paul

விமர்சனத்துக்கே விமர்சனம் எழுதுற ஆள் நீங்கதான். சும்மாவா அப்பாடக்கர் ஆச்சே... நன்றி நண்பரே.

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

நன்றிங்க

பாலா said...

@சேக்காளி

அதுக்கு நெறைய வெப்சைட் இருக்குங்க. இதை எல்லாம் யாரும் சரி பார்ப்பது கிடையாது. அதனால் ஏன் தேவை இல்லாமல் அங்கெல்லாம் போய் டைம் வேஸ்ட் பண்ணணும்னு நானே சிந்திச்சு இந்த தகவல்களை எல்லாம் போட்டேன்.

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

நன்றி நண்பரே

CS. Mohan Kumar said...

Interesting

Unknown said...

ஹி ஹி ஹி இப்பிடியெல்லாம் கூட ஹிட்ஸ் ஏத்திக்கலாமா

umarfarook said...

ஏழாம் அறிவை தாக்கியும் வேலாயுதத்தை உயர்தியும் விமர்சனங்கள் வரும் போது நானும் உண்மையில் வேலாயுதம் சூப்பரோ என தப்பாக நினைத்து விட்டேன்...

ஆனால் உண்மையில் நான் சொல்ல நினைத்ததை நீங்கள் விமர்சனம் 2ன் மூலம் சொல்லிவிட்டீர்கள்.... சூப்பர்...

Unknown said...

//தல வந்தாச்சு என்று சொன்னவுடன், மிரண்டு ஓடுவது போல நடித்திருக்கிறார் விஜய். கலாய்ச்சிட்டாராமாம்... //

ஹா...ஹா.. சூப்பர்..

அந்த 7 கோடி மேட்டர் ச்சும்மா உட்டாலக்கடிதானே!!

நல்லாருக்கு தலைவரே! )

r.v.saravanan said...

இந்த படத்தில் வேலாயுதம் என்ற வார்த்தை எத்தனை தடவை வருகிறது என்று கண்டு பிடித்து சொல்பவர்களுக்கு ஒரு பரிசும் கிடையாது. அவ்வளவு உன்னிப்பாக படத்தை பார்த்ததே பெரிய பரிசுதான்.

இப்ப படம் பார்க்கலாம் னு சொல்றீங்களா வேண்டாம் னு சொல்றீங்களா

MANO நாஞ்சில் மனோ said...

கும்முங்க எசமான் கும்முங்க ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

நான் இன்னும் ஒரு படமும் பார்க்கலை...!!!!

பாலா said...

@மோகன் குமார்

Thank you

பாலா said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு

அப்படித்தான் சொல்லிக்கிறாங்க.. நன்றி நண்பரே

பாலா said...

@umarfarook

அய்யய்யோ வெளிய சொல்லிறாதீங்க.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பாலா said...

@கறுவல்

ஆமாம் நண்பரே. எப்படி கண்டு பிடிச்சிங்க? சரி நமக்குள்ளேயே இருக்கட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பாலா said...

@r.v.saravanan

பாருங்கன்னு சொன்னா விசிலடிச்சான் குஞ்சுன்னு சொல்வாங்க

பாக்க வேணாம்னு சொன்ன சைக்கோ, அஜீத் ரசிகன்னு சொல்றாங்க. ஆகவே முடிவை உங்களிடமே ஒப்படைக்கிறேன்.

நன்றி நண்பரே,

பாலா said...

@MANO நாஞ்சில் மனோ

பார்க்காத வரைக்கும் நல்லது.

K.s.s.Rajh said...

பாஸ் பொறுங்க முதலில் சிரிச்சுட்டு வாரன்

ஹா.ஹா.ஹா.ஹா.ஹா.ஹா.ஹா.ஹா..................

K.s.s.Rajh said...

சூர்பர் ஹீரோ கதைன்னா அப்படிதான் இருக்கும்......தண்டவாளம் ஏன் பக்டரிக்கு நேராக முடியுதுனு கேட்க கூடாது....இப்படி எதையையும் கேட்க கூடாது.

நீங்க இது ஹிட்ஸ்க்காக எழுதிய பதிவு...விஜய் பற்றி எழுதினால் ஹிட்ஸ் வரும் என்று நீங்கள் கண்டது எல்லாம் எழுதக்கூடாது.....இரண்டே நாளில் வேலாயுதம் பிரமாண்டமான வெற்றி......
(யாவும் கற்பனை)

K.s.s.Rajh said...

என்ன டாகுதர் ஆக்கள் ஒருத்தரையும் இந்தப்பக்கம் இன்னும் காணவில்லை

N.H. Narasimma Prasad said...

என்னமோ போங்க. நான் இன்னும் தீபாவளிக்கு ரிலீசான ரெண்டு படத்தையும் பார்க்கல.

sontha sarakku said...

கலக்கிடீங்க பாஸ்...

சௌந்தர் said...

ரசிகர்களின் ஆதரவோடும், கோடிக்கணக்கான மக்களின் ரசனையோடும் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது வேலாயுதம். //

ம்ம பாலா உங்களுக்கே இது ஓவரா தெரியல கோடி கணக்கா...

படம் நல்லா இருக்கு ரொம்ப ஓவர் பந்தா இல்லை அதிகம் பஞ்ச் டைலாக் இல்லை... ஒரே ஒரு அதுவும் சாதாரணம விஜய் சொல்றது நல்லா இருக்கு...

ஆனா விஜய் பறந்து பறந்து ரயிலை பிடிக்குறார் அதை எப்போ விடுவாரோ..

சௌந்தர் said...

சிகரெட் பிடிக்கவில்லை, தண்ணி அடிக்கவில்லை, கெட்ட வார்த்தை பேசவில்லை. ஆனாலும் தன் அப்பாவித்தனத்தாலேயே மாஸ் காட்டுகிறார் விஜய். எம்ஜியாருக்கு அப்புறம் சம காலத்தில் யாராலுமே இதை செய்ய முடியாது என்பது உறுதி.//

ஹி ஹி ஹி எதுக்கு தல வேலாயுதம் படத்துல... அஜித் பத்தி பேசுறீங்க...???

நடிப்பில் எப்படி வேணா இருக்கலாம்.. நிஜத்தில் தான் அப்படி எல்லாம் இருக்க கூடாது..

அப்பறம் ரஜினி ரஜினி ஒரு நடிகர் சிகிரெட் பிடிக்காம நடிக்கிறார் தல...

சௌந்தர் said...

வேலாயுதம் விஜய்யின், வில்லு, குருவி, வேட்டைக்காரன், ஆகிய வெற்றிப்படங்களின் வரிசையில் இணைகிறது. இதுக்குமேல முடியல.... ///

ஏன் இப்படி விஜய் ய கலாய்குறீங்க.. வில்லு படம் பிரஸ் மீட் வீடியோ பாக்கலையா நீங்க.... :))

இருந்தாலும் நீங்க இப்படி கலாய்க்க கூடாது...

சௌந்தர் said...

அப்பறம் ஒன்னு மறந்துடீங்க விஜய் டீ கடையில் இருக்கும் போது விளையாடு மங்காத்தா பாட்டு கேக்கும்... அத பத்தி நீங்க ஒன்னும் சொல்லவே இல்லையே

சௌந்தர் said...

செம போஸ்ட் பாலா :)))என்னா நமக்கு ஹிட்ஸ்தான் முக்கியம். தளபதி பற்றி எழுதினால் நிறைய ஹிட்ஸ் கிடைக்குமாம். சொன்னாங்க.//

இந்த வரிகாகவே நான் கமெண்ட் போட்டேன் :))) :)))) :))))

tamilvaasi said...

விமர்சனம் சூப்பர்.. அதிலும் டைட்டில் ஹிட்ஸ் வாங்க தானே?

வருண் said...

***கடந்த நான்கு நாட்களில் சென்னையில் மட்டுமே 7 கோடி வசூல் ஆகி உள்ளதாம். இது வேலாயுதத்தை விட அதிகமான திரை அரங்குகளில் வெளியான எந்திரனுக்கு இணையானது. ***

I dont understand why you are comparing with enthiran but NOT talking about his last HIT (I mean flop) Kavalan.

Are you admitting that kavalan is a flop now, then? I mean if you add that with mangatha???

Enthiran was released widely in Andhra and in Hindi too but Velayudham?? NO WAY!!!

There is absolutely no need for bringing up enthran and it is outrageoust that you make a claim without any sources (bo) like Behindwoods??

How about the entertainment tax today compared to earlier??? I thought it all went up now?

நம்பிக்கைபாண்டியன் said...

நல்லா எழுதியிருக்கீங்க, இது நடுநிலை விமர்சனம் அல்ல 50/50 விமர்சனம்

வருண் said...

நீங்க மண்ணைக் கவ்வியதாக சொன்னபடம்..

-------------------

No. Days Completed: 5
No. Shows in Chennai over this weekend: 594
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 13,217,553
Total collections in Chennai: Rs. 2.20 Crore

Verdict: Very Good Opening

---------------------

நீங்க ஒரே கிழியா கிழிச்சுட்டதா சொன்னபடம்..

No. Days Completed: 5
No. Shows in Chennai over this weekend: 492
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 11,701,270
Total collections in Chennai: Rs. 1.95 Crore

Verdict: Very Good Opening

-----------------

I am not saying 7 m aRivu is a hit or anything. I just want you to give the FACTS right. You were only talking about the five-day collection. Right???

What do you really think of the readers of your blog by making outrageous claims? IDIOTS, I guess!

Anonymous said...

விமர்சனங்கள் பலே!!

பாலா said...

@K.s.s.Rajh

நான் எதையுமே கேட்கமாட்டேன். எனக்கு ஹிட்ஸ்தான் முக்கியம்.

நன்றி நண்பரே

பாலா said...

@N.H.பிரசாத்

சீக்கிரம் போய் பாருங்க. எடுத்துட்டு வேற படம் போட்டிட போறாங்க...

பாலா said...

@sontha sarakku

நன்றி நண்பரே.

பாலா said...

@சௌந்தர்

நண்பா என்னோட பதிவு மாதிரியே உங்க கமெண்ட்டும் சீரியஸா காமெடியான்னு ஒரே குழப்பமா இருக்கு. சரி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

அதான் சொல்லிட்டேனே ஹிட்ஸ் வாங்கத்தான்.

பாலா said...

@வருண்

நண்பா கூல்டவுன். ஏன் இப்போ ரொம்ப டென்ஷன் ஆகுறீங்க. மொதல்ல அவசரப்படாதீங்க. நிதானம் ரொம்ப முக்கியம்.

எல்லா விமர்சனங்களையும் படித்து குழம்பி கடுப்பாகி, அவர்களை கலாய்க்கிறதுக்கு சும்மா ஒரு பதிவு எழுதினா அதை நீங்க சீரியஸா எடுத்துக்கிட்டு இப்படி இறங்குவீங்கன்னு நான் எதிர் பார்க்கல. மூணாவதா ஒரு விமர்சனம் எழுதி இருக்கேனே கவுண்டமணி படம் போட்டு. அதை படிச்சா இந்த பதிவோட உள் அர்த்தம் புரியும்.

வேற ஏதாவது விளக்கம் வேணுமா?

நன்றி நண்பரே.

பாலா said...

@நம்பிக்கைபாண்டியன்

மிக்க நன்றி நண்பரே.

பாலா said...

@ஷீ-நிசி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க.

kanavugalkalam said...

ENNA BOSS SOLTRINGA ANGA ORUTHAR CHENNAILA MATTUM 5 NATKAL COLLECTION 7 CRORE SOLLITU THERIYARAURU........

அம்பாளடியாள் said...

அழகிய திரைப்பட விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள் சகோ மிக்க
நன்றி பகிர்வுக்கு ............

சுசி said...

நல்லா எழுதி இருக்கீங்க :))

ravi said...

ennavo ponga

வருண் said...

****எல்லா விமர்சனங்களையும் படித்து குழம்பி கடுப்பாகி, அவர்களை கலாய்க்கிறதுக்கு சும்மா ஒரு பதிவு எழுதினா அதை நீங்க சீரியஸா எடுத்துக்கிட்டு இப்படி இறங்குவீங்கன்னு நான் எதிர் பார்க்கல. ***

அப்படியா!!! அப்போ நான் எழுதியதை "அவங்களுக்கு"னு விட்டுருங்க! சாரி, பாலா!

பாலா said...

@kanavugalkalam

அப்படித்தான் சொல்வோம். அடுத்த படம் வந்ததும் இது மறந்து போகும். நன்றி நண்பரே.

பாலா said...

@அம்பாளடியாள்

வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் நன்றி சகோ

பாலா said...

@சுசி

ரொம்ப நன்றிங்க... அடிக்கடி வாங்க

பாலா said...

@ravi

விடுங்க எப்பவுமே இப்படித்தான். சீரியஸா எடுத்துக்காதீங்க. அடிக்கடி வாங்க நன்றி.

பாலா said...

@வருண்

விடுங்க நண்பா இதெல்லாம் சகஜம்தானே...

கார்த்தி said...

என்னமா கலாய்க்கிறீஙக சார்!!

பாலா said...

@கார்த்தி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

Related Posts Plugin for WordPress, Blogger...