விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

October 22, 2011

எனக்கு அறிவாளியாக ஆசையாக இருக்கிறதுமுன்னொரு காலத்தில், ஒரு குறிப்பிட்ட தேசத்தில் உள்ள குக்கிராமத்தில் சோம்பேறி ஒருவன் இருந்தான். எதற்கெடுத்தாலும் வெட்டி நியாயம் பேசிக்கொண்டு, எந்த வேலையும் செய்யாமலேயே காலத்தை கழித்து வந்தான். முப்பாட்டன் காலத்து சொத்துக்கள் இருந்ததால் அவனது ஜீவனத்துக்கு குறைவொன்றும் இல்லை. எப்போது தெருவில் சென்றாலும் கம்பீரமாக, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு செல்வான். யாருமே இவனை மதிக்கமாட்டார்கள். மாறாக அதே ஊரில் ஏழை பண்டிதர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் மதித்தார்கள். இவனுக்கு ஆத்திரமாக வந்தது. தன் நண்பனிடன் கேட்டான் 

"அதெப்படி?, அவன் அடுத்த வேளை சோற்றுக்கே கஷ்டப்படுகிறான். ஆனால் அவனை எல்லோரும் மதிக்கிறார்கள். என்னை எவனும் மதிக்க மாட்டேங்கறான்?"

நண்பர் கூறினார், "அவனை எல்லோரும் அறிவாளி என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நீயும் அறிவாளி என்று எல்லோரையும் நம்ப வைத்து விட்டால், உன்னையும் எல்லோரும் மதிப்பார்கள்." 

அந்த நொடியே, நம்மாளுக்கு அறிவாளி ஆகிவிட வேண்டும் என்ற பேராவல் உண்டானது. ஆனால் எப்படி என்ற உபாயம்தான் தெரியவில்லை. நண்பரின் ஆலோசனைக்கிணங்க ஊருக்கு வெளியே உள்ள ஒரு சாமியாரை பார்த்து, அவரிடம் பேசி, அறிவாளியாகும் வழியை கண்டு பிடித்து விடவேண்டும் என்ற நோக்கத்துடன், அந்த சாமியாரை சந்திக்க சென்றான். 

தியானத்தில் இருந்த சாமியாரின் முன்னால் தவிப்புடன் அமர்ந்திருந்தான். வெகு நேரம் கழித்து கண் திறந்த சாமியார், அவனின் வார்த்தைகளைக் கேட்டவுடன், மெலிதாக புன்னகைத்தார். பிறகு, "தெளிவாக சொல். நீ அறிவாளி ஆக வேண்டுமா? அல்லது அறிவாளி போல காட்டிக்கொள்ள வேண்டுமா?", என்று கேட்டார். 

இவன் திருதிருவென முழித்தான். "இரண்டுக்கும் என்ன வித்தியாசம் சாமி?", என்று கேட்டான். 

அவர், "அறிவாளி ஆவதற்கு வருடங்கள் ஆகும். ஆனால் அறிவாளி போல காட்டிக்கொள்வதற்கு கண நேரம் போதும். அறிவாளியாக இருப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. சமயத்தில் மாட்டிக்கொண்டு விழிக்க நேரிடும்.", என்று கூறினார். 

இவன் உடனே, "அப்படியானால் நான் அறிவாளியாக வேண்டாம். அறிவாளி போல காட்டிக்கொண்டால் போதும்." என்று கூறினான். 

சாமியார் இவன் காதில் ஏதோ சொல்ல, இவன் முகம் பிரகாசமானது.

அடுத்த நாளே அவன் பெயர் அந்த நாடு முழுவதும் பிரபலம் ஆனது. இவன் பின்னால் பலர் வரத்தொடங்கினர். அவனை அறிவாளி என்று ஒரு கூட்டம் தலையில் வைத்து கொண்டாடியது. வெளியூர் சென்றிருந்த அவனது நண்பருக்கு மகா ஆச்சர்யம். இவனிடம், "எப்படி இவ்வளவு சீக்கிரம் எல்லோரிடமும் அறிவாளி என்ற பெயர் பெற்றாய்?", என்று கேட்டார். 

அவன், "இன்று இரவு நடக்கும் இலக்கிய கூட்டத்துக்கு வா. உனக்கே புரியும்." என்று கூறினான்.  

அன்று இரவு இருவரும் அந்த இலக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டனர். பெருங்கூட்டம். அறிஞர் ஒருவர் தனக்கு தெரிந்த கருத்துக்களை மக்களிடம் கூறிக்கொண்டிருந்தார். 

அவர் பேசி முடித்தவுடன், நம்மாள் எழுந்து, நீங்கள் கூறுவது அத்தனையும் பொய். எல்லோரையும் ஏமாற்றுகிறீர்கள்." என்று அடித்து பேசினான். 

அவர் சில சான்றுகளை எடுத்துக்காட்டினார். இவன், "இல்லையில்லை. இவை எல்லாம் போலியாக தயாரிக்கபட்டவை. உங்களை நம்ப முடியாது. நீங்கள் சொல்வது உண்மை என்பதை இப்போதே நிரூபிக்க முடியுமா?" என்று சவால் விட்டான். அவர் அமைதியாகி விட்டார். 

இப்படியே வரிசையாக ஒவ்வொருவரின் கருத்துக்கும் எதிர்கருத்தை தெரிவித்து, நிரூபிக்க முடியுமா என்று சவால் விட்டான். எல்லோரும் பயந்து பின்வாங்கினார்கள். இவன் நண்பனிடம், "பார்த்தாயா?,  இருக்கிறது என்று சொல்வதற்கு நிறைய அறிவும், சான்றுகளும் தேவை. இல்லை என்று சொல்வதற்கு அறிவும், சான்றுகளும் தேவை இல்லை. இருக்கிறது என்று நிரூபிக்க நிறைய கால அவகாசம் வேண்டும். இல்லை என்று நிரூபிக்க, கண நேரம் போதும். என்னிடம் விவாதம் செய்யும் அனைவரும், ஒரு கட்டத்தில் பின் வாங்கி விடுவதால், மக்களும் என்னை அறிவாளி என்று ஒப்புக்கொண்டு விட்டனர்." என்று பெருமிதம் பொங்க கூறினான். 

இந்த கதையை படிக்கும்போது, நம்மூரில் இருக்கும், பகுத்தறிவாளர்களும், புரட்சியாளர்களும் தான் எனக்கு நினைவுக்கு வருகிறார்கள். 


- சுகி. சிவம் 
(சிற்சில மாற்றங்களுடன்)
ஏமாற்றாதே, ஏமாறாதே, புத்தகத்திலிருந்து


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....

35 comments:

Learn said...

கலக்கீட்டீங்க

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா நல்லதொரு பகிர்வு....!!!

பாலா said...

@தமிழ்தோட்டம்

நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க...

பாலா said...

@MANO நாஞ்சில் மனோ

வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

tamilvaasi said...

சுகிசிவம் வரிகள்... அருமையான பகிர்வு நண்பா...

K.s.s.Rajh said...

நல்ல பகிர்வு பாஸ் எனக்கு மிகவும் பிடித்த ஓருவர்..சு.கி.சிவம்..இன்று ஒரு தகவல் என்று முன்பு இந்திய வானொனி அலைவரிசை ஓன்றில் சொல்வாரே.அப்போது நான் விரும்பிக்கேட்கும் தகவல் அது(இப்ப அந்த நிகழ்சி இருக்கா என்று தெரியவில்லை)

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் என் தளத்தில் மேல் பாரில் /பேஸ்புக்கில் நான்/என்று என் பேஸ்புக் முகவரி இருக்கு அதில் ஒரு ரிக்குவஸ்ட் கொடுங்க(உங்கள் ஜடி எனக்குத்தெரியாது)உங்களை நமது நிரூபன் பாஸ் உருவாக்கின எமது நாற்று குழுமத்தில் அட்பண்ணிவிடுறன் அதில் 100ற்றுக்கனகான நண்பர்கள் இருக்கின்றார்கள் அங்கே உங்கள் பதிவுகளை பகிர்ந்தால் இன்னும் உங்கள் பதிவு பலரைச்சென்று அடையும்(செங்கோவி பாஸ்,மனோ பாஸ் உட்பட பல பதிவர்கள் அங்கே உறுப்பினர்களாக இருக்கின்றார்கள்)

Unknown said...

மாப்ள இந்த பகிர்வை படிக்கும் போது அவரின் குரலோடு படிப்பதாகவே தோன்றியது நன்றிய்யா!~

rajamelaiyur said...

அருமையான கதை ..

rajamelaiyur said...

முன்பே இந்த புத்தகம் படித்துள்ளேன்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

பா. ம. க சின்னம் மாறுகின்றதா?

முத்துசிவா said...

சூப்பர்... தல உங்களுக்கு எங்க office la நிறைய fans இருக்காங்க... :)

r.v.saravanan said...

சுகி சிவம் அவர்களின் குரலில் அவரது பேச்சுக்கள் நான் விரும்பி கேட்பதுண்டு

பகிர்வை தந்தமைக்கு நன்றி பாலா

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

மிக்க நன்றி நண்பா...

பாலா said...

@K.s.s.Rajh

மிக்க நன்றி நண்பரே. என்னை கவர்ந்த பேச்சாளர்களில் அவரும் ஒருவர். கண்டிப்பாக உறுப்பினர் ஆகிறேன்.

பாலா said...

@விக்கியுலகம்

நன்றி மாப்ள

பாலா said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி நண்பரே

பாலா said...

@முத்துசிவா

மிக்க நன்றி நண்பரே. நீங்கள் சொல்வது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை தக்க வைத்துக்கொள்ள கண்டிப்பாக முயற்சி செய்வேன்.

பாலா said...

@r.v.saravanan

நன்றி நண்பரே

Anonymous said...

பாலா ஒன்னு சொன்னா கோவிச்சிக்க மாட்டீங்களே... இல்லையில்லை. இவை எல்லாம் போலியாக தயாரிக்கபட்டவை. உங்களை நம்ப முடியாது. நீங்கள் சொல்வது உண்மை என்பதை இப்போதே நிரூபிக்க முடியுமா?

அம்பாளடியாள் said...

சுகிசிவம் அவர்களின் பேச்சை எப்போதுமே அலுக்காமல்
கேட்டுக்கொண்டே இருக்கலாம் .அவரை நினைவுபடுத்திய உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ வாழ்த்துக்கள் ............

சென்னை பித்தன் said...

நல்ல பகிர்வு.

நம்பிக்கைபாண்டியன் said...

சுகி.சிவம். மிகச்சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் அவர் பணியு,ம் அதை இப்படி எடுத்துச்சொல்லும் உங்கள் பணியும் சிறப்பு!

பாலா said...

@மொக்கராசு மாமா

நீங்க அறிவாளி ஆகிட்டீங்க போலிருக்கே...

நன்றி நண்பரே

பாலா said...

@அம்பாளடியாள்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

பாலா said...

@சென்னை பித்தன்

நன்றி சார்

பாலா said...

@நம்பிக்கைபாண்டியன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே, அடிக்கடி வாங்க

ப.கந்தசாமி said...

இதை முன்பே பார்த்திருக்கிறேன், கமென்ட் போடவில்லை. இப்போது போடுகிறேன்.

Vijayan Durai said...

//பகுத்தறிவாளர்களும், புரட்சியாளர்களும் தான் எனக்கு நினைவுக்கு வருகிறார்கள்.
//
மேலை நாட்களில் எல்லாம் கண்டுபிடிப்பாளர்களும், அறிவியல் அறிஞர்களுமே பகுத்தறிவாளிகள்..
இங்கோ பகல் கொள்ளையர்களே பகுத்தறிவாளர்கள்.
உண்மை தான் தோழரே இல்லை என்று சொல்பவர்கள் தான் அறிவாளியாக தெரிகிறார்கள்...
நல்ல பதிவு

Radhakrishnan said...

ஹா ஹா! ஆனால் அறிவாளிகளுக்கு தெரியும் இவன் ஒரு முட்டாள் என்று. ;) பகிர்வுக்கு நன்றி.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

இப்படி கூட இருக்குமோ.. கதை அலங்கரிப்பு.? சபா....ஷ்

பாலா said...

@DrPKandaswamyPhD

லேட்டா கமெண்ட் போட்டாலும் லேட்டஸ்டா கமெண்ட் போட்டதுக்கு நன்றி சார்.

பாலா said...

@விஜயன்

உண்மைதான் தோழரே, ஒன்றை மறுப்பதை விட, இருப்பதை நிரூபிப்பதே பகுத்தறிவு. வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க

பாலா said...

@V.Radhakrishnan

ஆமாம் ஆனால் அறிவாளிகள் அதை வெளியில் சொல்வதில்லை. நந்த்ர் நண்பரே

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

உங்க பாராட்டுகளுக்கு நன்றிங்க

Related Posts Plugin for WordPress, Blogger...