விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

October 7, 2011

என் கிரிக்கெட் வீரர்கள் - 5

நெட் இணைப்பு இன்னும் பிரச்சனையாகவே இருப்பதால் இங்கே சரிவர தலைக்காட்ட முடியவில்லை. எப்போது சரியாகும் என்றும் தெரியவில்லை. இந்த தொடர் முடியும் தருவாயில் இருப்பதால், இதை விரைவாக வெளியிடுகிறேன். இதுவரை எனக்கு பிடித்த பிற நாட்டு கிரிக்கெட் வீரர்களை பற்றி கூறினேன். தற்போது இந்திய அணியில் என்னை கவர்ந்தவர்களை பற்றி கூறுகிறேன். பொதுவாக சொந்த அணியில் ஒரு சிலரைத்தவிர எல்லோருமே பிடித்தவர்களாகவே இருப்பார்கள். ஆகவே சட்டென நினைவுக்கு வரும் வீரர்களை பற்றி மட்டும் கூறுகிறேன். 


சவுரவ் கங்குலி


இன்றும் நான் கிரிக்கெட்டை நேசிக்கிறேன் என்பதன் முதல் காரணம் இவர்தான்.  சர்ச்சைகள் நிறைந்ததாக இருந்த இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இவரது ஆட்டத்திறமை மட்டுமல்லாமல், இவரது ஆளுமைக்காகவும் பலர் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள், என்னையும் சேர்த்து. இந்தியாவின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவர். 

மொஹமது அசாருதீன்


என் முதல் கிரிக்கெட் கதாநாயகன். சிறப்பான ஆட்டக்காரர். இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும், இவர் மீதுள்ள அபிமானம் காரணமாக இவர் மீது எனக்கு கோபம் வரவில்லை. சமீபத்தில் மகனை பறிகொடுத்துள்ளார். இவ்ரது மகனுடைய முகம் இளவயது அசாருதீனை நினைவுபடுத்துகிறது. 

சச்சின் டெண்டுல்கர்


கிரிக்கெட் என்று எழுதிய பிறகு, அடுத்து என்ன வார்த்தை எழுதுவது? என்று நினைத்தால், மனதில் வருவது டெண்டுல்கர்தான். தன் வாழ்நாள் முழுவதையுமே கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்த ஒப்பற்ற வீரன். இவ்வளவு புகழ், பணம் சம்பாதித்த பிறகும், இன்னமும் மிஸ்டர் க்ளீன் என்ற பெயருடன் வாழ்கிறார். அதிக பெண் ரசிகைகளை பெற்றவர்.
  
ராகுல் டிராவிட்


"கிரேட் வால் ஆப் இந்தியா" என்று ரசிகர்களாலும், "ஜாமி" என்று சக வீரர்களாலும் அழைக்கப்படும் இவர், கிரிக்கெட் உலகின் ஒப்பற்ற வீரர்களில் ஒருவர். இந்திய அணியின் ஓவர்சீஸ் நாயகன். அரை கிலோமீட்டர் தூரம் ஓடி வந்து அக்தர் பந்தை வீச, அதை அசால்டாக அடிக்க, பந்து அங்கேயே கிடக்கும்.  அக்தர் வெறுத்து போய் விடுவார்.

அஜய் ஜடேஜா


இவர் உள்ளூர் நாயகன். உள்ளூர் ஆடுகளங்களில் தூள் பறத்தி விடுவார். எப்போதுமே சிரித்தபடியே ஆடுபவர். 

ஹேமாங் பதானி


மிக சிறந்த பேட்ஸ்மேன். பல இந்திய வீரர்கள் மிகுந்த பிரஸ்ஸரோடு ஆடும்போது, இவர் கூலாக ஆடுவார். அதே நேரம் அதிரடியாகவும் ஆடுவார். பிரபலமான வீரராக வர வேண்டியவர், என்ன காரணம் என்று தெரியவில்லை, சோபிக்க முடியாமல் போனது. 

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்


இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தை துவக்கி வைத்தவர். இவர் அடிக்கும் பந்துகள் வெகு தொலைவில் சென்று விழாது. மாறாக, செங்குத்தாக மேலே எழும்பி, எல்லை கோட்டை தாண்டி விழும். ஷாட் அடித்த பின் தோள்பட்டையை ஒரு உலுக்கு உலுக்கி, மூக்கை உறிஞ்சுவார் (போக்கிரியில் விஜய் செய்வது போல), இது மிக பிரபலம். 

வீரேந்தர் சேவாக்


இவருக்கு புல்டோசர் என்றுதான் பெயர் சூட்டவேண்டும். யாரைப்பற்றியும் கவலைப்படாமல் இடித்து தள்ளி போய்க்கொண்டே இருப்பார். ஒரு பேட்டியில் "எனக்கு ஆடுகளங்களைப்பற்றி கவலை இல்லை. பந்து வீச ஒரு பவுலர் இருந்தால் போதும்." என்று கூறினார். பல கேப்டன்கள் இவரை வீழ்த்த வியூகங்களை வகுத்து, இவர் அவுட் ஆகி விட்டாலே பெரிய கடமை முடிந்து விட்டதை போல பெருமூச்சு விட்டதுண்டு. 

வி‌வி‌எஸ் லக்ஷ்மன்


இன்றும் ஆஸ்திரேலியர்களிடம் அதிகம் திட்டு வாங்கும் வீரர் இவராகத்தான் இருக்கும். இவரை ஐந்தாம் நாள் வீரர் என்று அழைக்கிறார்கள். டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சுக்கு சாதகமான ஐந்தாவது நாளில் நிலைத்து ஆடும் திறமை மிக்கவர். டெஸ்ட் போட்டிகளில் தவிர்க்க முடியாத ஒரு வீரர்.   

ராபின் சிங் 


கடும் உழைப்பாளி. இந்திய அணியின் மோசமான 90களின் இறுதியில், ஒற்றை ஆளாக அணியில் போராடியவர். இடைப்பட்ட ஓவர்களில் பந்து வீச்சிலும் சிறப்பாக பங்களித்தவர். நல்ல பீல்டர். 

சுரேஷ் ரேய்னா


முதலில் அணியில் இடம்பிடித்து, பிறகு நீக்கப்பட்டு, மறுபடியும் இடம்பிடித்தவர். பிறகு வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து வருகிறார். பயமறியாத இளம் வீரர். எனவேதான் பவுன்சர்களை அவசரப்பட்டு அடித்து அவுட் ஆகி விடுகிறார். இந்திய அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம். 

யுவராஜ் சிங்


இந்திய அணி உலகக்கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றியவர். இந்திய அளவில் பெண் ரசிகைகளை அதிகம் பெற்றவர். ஆகவே சர்ச்சைகளும் அதிகம். கொஞ்சம் திமிர் பிடித்தவர் என்றும் கூறப்படுகிறது. 

கபில்தேவ்


உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். ஆக்ரோஷம் என்பது பந்து வீச்சில் இருக்கவேண்டும், என்று செய்து காட்டியவர். திலகரத்னேவை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் சாதனை நிகழ்த்தியதை லைவாக பார்த்ததை இன்றும் மறக்கவில்லை. "நீங்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டீர்களா?", என்ற கேள்விக்கு, தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் குமுறி அழுதார். 

இர்பான் பதான்


முதலில் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகம் ஆகி, அல்ரவுண்டராக மாறியவர். ஒரு காலத்தில், ஒப்பனர்களை வீழ்த்துவதையே குறிக்கோளாக வைத்திருந்தார். இவருக்கும் தோனிக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. இவரை அணியில் சேர்க்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். காயங்களால் அதிகம் அவதிப்பட்டவர்.  

ஜவகல் ஸ்ரீநாத்


கபில்தேவுக்கு அப்புறம் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு வேகப்பந்து வீச்சாளர். 2003 உலககோப்பை முழுவதும் சிறப்பாக பந்து வீசினார். ஆட்டம் சூடு பிடித்து விட்டால், ஓட்டு மொத்த போட்டியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார் இந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர். 

அனில் கும்ப்ளே


90களில் கிரிக்கெட்டை கலக்கிய சுழல்பந்து மும்மூர்த்திகளுள் ஒருவர். கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி.  பல போட்டிகளில் ஒரு அரை மணி நேரத்துக்குள், ஒட்டுமொத்த ஆட்டத்தையுமே தலை கீழாக மாற்றி இருக்கிறார். 

ஹர்பஜன் சிங்


கும்ப்ளேவுக்கு அப்புறம் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு சுழற்பந்து வீச்சாளர். முரளிதரன் மாதிரி இவரும், "பந்தை எறிகிறார்", என்ற சர்ச்சையில் சிக்கி மீண்டு வந்து சாதித்தவர். இவர் பெயரை சொன்னவுடன், ஸ்ரீசாந்தும், சைமண்ட்சும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. 

அஜீத் அகார்க்கார்


வெகு வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர். இவரது யார்க்கர்கள் மிக பிரபலம். ரன்களை வாரி வழங்கினாலும், சரியான நேரத்தில் துல்லியமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவர். 

ஜாகீர்கான்


இந்திய பவுலிங்கின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம். இந்திய அணி உலகக்கோப்பை வென்றதில் முக்கிய காரணம் இவரது அதிரடியான பந்துவீச்சுதான். காயங்களால் அதிகம் அவதிப்படுகிறார். 

நயன் மோங்கியா


சொல்லிக்கொள்ளும்படியான ஒரு விக்கெட் கீப்பர். இவர், கலூவிதரானா, மொயின்கான் ஆகிய மூவரும் களத்தில் ஏதாவது கத்திக்கொண்டே இருப்பார்கள். இவரது "ஐகோ... சபா சபா" ஆகிவற்றை அர்த்தம் புரியாமேலேயே நாங்கள் தெருவில் ஆடும்போதும் கத்தி இருக்கிறோம். 

மகேந்திரசிங் தோனி


கேப்டன் கூல் என்று பெயரெடுத்தவர். மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு பகுதியில் இருந்து வந்து கேப்டன் அளவுக்கு உயர்ந்தவர். மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களுள் ஒருவர். இவரது குண்டக்க மண்டக்க பேட்டிங் ஸ்டைலே இவரது ஸ்பெஷல். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுத்தந்தவர். 
   

-முடிந்தது 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க.... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

25 comments:

எப்பூடி.. said...

அஜாருடீனையும், ஜடேஜாவையும் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதிலும் அஜாரின் ரிஸ்க்(மணிக்கட்டு) பட்டிங் ரொம்ப ரொம்ப பிரிக்கும், இவர்களில் எனக்கு பிடிக்காதவர் அகார்கர்; விக்காட்டுகளை அதிகம் வீழ்த்தினாலும் இவருக்கு எக்கானமி ரேட் மிக அதிகம். மற்றும் இவரது வேகமான 50 விக்கட்டுகள் சாதனை முறியடிக்கப்பட்டுவிட்டது.

Unknown said...

நல்ல பகிர்வு பாலா

வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு சச்சினை பிடிக்கும், கபில்தேவ் பிடிக்கும்...!! மும்பையில் சச்சினின் ரெஸ்டாண்டில் போயி நண்பர்களுடன் சாப்பிடுவது உண்டு...

தமிழ் உதயம் said...

தொடர் முழுவதையுமே சிறப்பாக எழுதி இருந்தீர்கள். வாழ்த்துகள்.

K said...

நண்பா! உங்களுக்குப் பிடித்த பலர் எனக்கும் பிடித்துள்ளார்கள்! குறிப்பாக தோனி! பகிர்வுக்கு நன்றி அண்ணே!

அப்புறம் என்னோட வலைக்கு வரக்கூடாதுன்னு, நேர்த்தியா???

Unknown said...

மாப்ள கலக்கல் தொடர்...செமையா எழுதி இருக்கீங்க...நன்றி!

பாலா said...

@எப்பூடி..

தலைவரே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பாலா said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு

மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@MANO நாஞ்சில் மனோ

கருத்துக்கு நன்றி நண்பரே.

பாலா said...

@தமிழ் உதயம்
நன்றி நண்பரே...

பாலா said...

@Powder Star - Dr. ஐடியாமணி

தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே. அப்புறம் உங்கள் தளத்துக்கு வரக்கூடாதுன்னு நேர்த்தி எல்லாம் இல்லை. ஒரு வாரமாகவே இன்டர்நெட் மக்கர் செய்து வருகிறது. கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் டைப் செய்து வைத்திருக்கும் பதிவுகளை காப்பி செய்து வெளியிடவே நேரம் சரியாக இருக்கிறது. தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். கண்டிப்பாக வருகிறேன்.

பாலா said...

@விக்கியுலகம்

வருகைக்கு நன்றி மாப்ள

கேரளாக்காரன் said...

Ella baallayum sixer adichuittinga aprama

gambhir 2 world cup(t20 and 2011) final super star mattum missunnu nenakkaren

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ்
உங்களுக்கு பிடித்த வீரர்களை எனக்கு இந்திஅணியில் மிகவும் பிடிக்கும்.
என்ன சச்சினை எனக்கு அவ்வளவு பிடிப்பது இல்லை பிடிப்பது இல்லை.காரணம் கங்குலியின் தீவிர ரசிகனாக இருப்பதோ என்னமோ தெரியவில்லை ஆனால் பொதுவான ஒரு கிரிக்கெட் ரசிகனாக என்றும் அவரது சாதனைகளுக்கும் கனவான் தன்மைக்கும் நான் ரசிகன் தான்.

மற்றது தோனிய மிகவும் பிடிக்கும் ஆனால் அவரை ஒரு மிகச்சிறந்த கேப்டன் என்று என்னால் சொல்ல முடியவில்லை.

மற்றபடி சாதாரன ஒரு குடும்பத்தில் பிறந்து இன்று இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தது.உலக்கோப்பையை வென்ற இந்திய அணியை வழிநடத்தி வரலாற்றில் இடம் பிடித்த அவரது தன்நம்பிக்கை பலருக்கு வாழ்க்கையில் முன்னுக்கு வர சிறந்த உதாரணம் தோனி

K.s.s.Rajh said...

எனக்கும் புரியவில்லை இர்பான் பதானை ஏன் அணியில் சேர்க்க மாட்டேன் என்கின்றார்கள்

Unknown said...

http://stats.espncricinfo.com/ci/content/records/283193.html

Agarkar is the 14th highest wicket taker in ODI...

K.s.s.Rajh said...

ஆமா பாஸ் பதானி மிகச்சிறந்த வீரராக வந்து இருக்கவேண்டியவர் இடையில் காணாமல் போய்விட்டார்.

சேலம் தேவா said...

ஜடேஜாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.வெறி பிடித்த ஆஸ்திரேலிய வீரர்களை கூட கூலாக சமாளிப்பார். :)

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

சவுரவ் கங்குலிக்கு உரிய மரியாதையை கிரிகெட் அரசியல் வழங்கவில்லை என்பதே நிஜம். அடிக்கடி பல சர்சைகளுக்கு ஆளானாலும், என்னை பொறுத்தவரை இந்தியா உருவாக்கிய தலைசிறந்த பாட்ஸ்மேன் கங்குலியே, அவரைப்போலவே டிராவிட். கிரிகெட் உலகில் பல சாதனைகள் செய்திருந்தாலும் இந்தியா உருவாக்கிய பாட்ச்மேன்கள் தர வரிசையில் இவர்கள் இருவருக்கும் அடுத்ததாகவே சச்சினை கூறுவேன். (எத்தன பேர் கும்மபோராங்கன்னு தெரியலியே).

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

ஜடேஜாவை நினைவுபடுத்திவிட்டு 96 உலகக்கோப்பை கால் இறுதியில் வகார் யூனிஸின் கடைசி இரண்டு ஓவர்களுக்கு விளாசியதை கூறாமல் விட்டு விட்டீர்களே. கங்குலி, டிராவிட், சச்சின் ஒரு கூட்டணி என்றால், அசாருதீன், ஜடேஜா, ராபின் சிங் ஒரு கூட்டணி. இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள். மறக்கடிக்கப்பட்ட பல வீரர்களை நினைவுபடுத்தியமைக்கு நன்றி தலைவரே.

sontha sarakku said...

நல்ல தொடர் பாலா...பகிர்ந்தமைக்கு நன்றி. கபிலின் சாதனையை நானும் லைவ் ஆக பார்த்திருக்கிறேன். அடுத்த ஓவர் அவர் அதிகம் ஓடாமல் பக்கத்தில் இருந்து வந்து ஸ்பின் பால் எல்லாம் போட்டார். திராவிடின் பல சாதனைகள் வெளிநாட்டில் நிகழ்த்தப்பட்டதால் உள்ளூர் ரசிகர்கள் தெரிந்து கொள்ள வில்லை.

arasan said...

கிரிக்கெட்டை பற்றி செய்தி படிக்கவேண்டும் என்றால் அது உங்களின் பக்கத்திற்கு வரணும் ...
அந்த அளவுக்கு துல்லியமான செய்திகளை வழங்கும் உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் ...
நல்ல பதிவுக்கு நன்றி ..

Madhavan Srinivasagopalan said...

ஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் போயிடும்..
---- சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்..

Madhavan Srinivasagopalan said...

உங்கள் பதிவில் சம்பந்தமில்லாமல் கமெண்டு போட்டதற்கான காரணம் எனது இந்தப்(சுட்டி) பதிவில்

DOS said...

nayan mongia, ajay jadeja, mohammed azharuddin.. why are you mention like this people. They already punished for match fixing. If you like them it will encourage other players... :(

Related Posts Plugin for WordPress, Blogger...