இலவசம்...இலவசம்
ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலின்போதும் பல அதிரடி நடவடிக்கைகளில் நம் அரசியல்வாதிகள் ஈடுபடுவார்கள். ஆனால் இந்தமுறை தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணைய அதிகாரிகளே அதிரடியாக பல நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் செய்கைகள் பலருக்கு இடஞ்சலாக இருந்தாலும் வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது. அது சரி, தேர்தல் முடிந்து சுமார் ஒரு மாத காலம் மின்னணு வாக்கு இயந்திரங்களை எப்படி காப்பாற்ற போகிறார்கள்? அதற்கு இன்னும் என்னென்ன கெடுபிடிகள் இருக்கும்? என்று தெரியவில்லை. நேற்று சன் செய்திகளில் வித்தியாசமான ஒரு நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது. திருப்பூரில் தேர்தலை முறியடிக்க சுமார் 200 பேர் வேட்புமனு தாக்கல் செய்ய போகிறார்களாம். 64 பேருக்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால் மின்னணு இயந்திரத்தை பயன்படுத்த முடியாதாம்.
தமிழகத்தில் பிறந்தவன்தானே நானும். தமிழ் மக்களின் தலை எழுத்துக்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா? வழக்கம்போல ஆட்சியில் இருக்கும் திமுக அரசை விட எதிரணியில் இருக்கும் அதிமுக மீது கொஞ்சம் அபிமானம் இருந்தது. ஆனால் நேற்றோடு அதுவும் போய் விட்டது. "என்ன கொடுமை இது?" என்றே கேட்க தோன்றுகிறது. இந்த இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கையை வேறு நாட்டவர் யாராவது படித்தால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். முதலில் கலைஞர் தனது இலவச பட்டியலை வாசித்தபோது 2006 தேர்தல் அறிக்கையை விட அதிக எரிச்சல் வந்தது. தற்போது அம்மாவும் அதே அறிக்கையின் அப்கிரெடெட் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் கடைசி ஏழை இருக்கும் வரை இலவசங்கள் தொடருமாம். அடப்பாவிகளா! இலவசங்கள் கொடுத்தால் ஏழைகள் அதிகமாகத்தானே செய்வார்கள்?
இந்த தேர்தல் அறிக்கையில் உருப்படியாக எந்த திட்டமும் இல்லை என்பதே என் கருத்து. எத்தனை பேர் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்? இலவசத்திற்காக வாங்கும் கடனை வேலை வாய்ப்பு உருவாக்க பயன்படுத்தலாமே? டிவி, மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என்று கொடுத்து விட்டு மின்சாரத்தை மட்டும் பிடுங்கி விடுகிறார்கள். தமிழ்நாடு ஒன்றும் செல்வத்தில் கொழிக்கவில்லை. எப்படியும் இலவசங்களை எல்லாம் கடன் வாங்கித்தான் செய்யப்போகிறார்கள். அப்படி வாங்கும் கடனில் மின்சாரம், குடிநீர், அணைகள், வேலைவாய்ப்பு முதலியவற்றுக்கு செலவளித்தாலே போதுமானது. லாப்டாப் கொடுக்க தேவை இல்லை. கல்வி கட்டணங்களை கட்டுப்படுத்தினாலே போதும். முடிந்தால் முதுகலை வரை இலவச கல்வி கொடுக்கட்டும். ஆரம்பத்தில் காமராஜர் இலவசமாக மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார். அதன் காரணம் ஓட்டு அல்ல. "அப்படியாவது பசங்க ஸ்கூலுக்கு வருவார்களே!!" என்ற எண்ணம்தான். ஆனால் அதன் வளர்ச்சியாக இப்படி இலவசம் மட்டுமே தரப்படும் தேர்தல் அறிக்கைகள் வரும் என்று அவரே கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார்.
இதற்கு யார் காரணம்? மக்களை பிச்சை எடுக்க பழக்கிய கலைஞரா? இல்லை அடாவடியாக ஆட்சி நடத்திய அம்மாவா? தன் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாயை திருடிவிட்டு தனக்கே பத்து பைசா பிச்சை போடுபவனை சாமி என்று கும்பிடும் மானமுள்ள மக்களா?
பாண்டிங் நல்லவரா கெட்டவரா?
அகமதாபாத்தில் நேற்று நடந்த காலிறுதி போட்டியை இந்தியர்களாலும், ஆஸ்திரேலியர்களாலும் மறக்கவே முடியாது. எப்படி 1996இல் பெங்களூருவில் நடந்த இந்தியா பாகிஸ்தான் காலிறுதியை மறக்க முடியாதோ அதே போல. சொல்லப்போனால் இந்தியாவை விட ஆஸ்திரேலியாவுக்குத்தான் பிரஸ்ஸர் அதிகம். நேற்று ஆஸ்திரேலியாவுடன் ஆடிய பிறகுதான் இதுவரை நாம் மோதிய அணிகளின் குறை தெரிந்தது. இத்தனைக்கும் ஆஸ்திரேலியாவில் அவ்வளவு நல்ல வீரர்கள் யாரும் இல்லை. வழக்கமான சொதப்பல்கள், புலம்பல்கள், திட்டல்கள் எல்லாம் இருந்தது. நேரம் நெருங்க நெருங்க பாண்டிங் தனது எல்லா அஸ்திரங்களையும் எய்து பார்த்தார். ஆனால் யுவராஜிடம் எதுவும் நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் தோனி விளையாடி கொண்டிருக்கும்போது எனக்கு நம்பிக்கையே போய் விட்டது. ஆனால் ரெய்னா களத்தில் இறங்கியபின் ஆட்டம் மீண்டும் சுறுசுறுப்பானது. என்னதான் உள்குத்து, வெளிக்குத்து, பிக்சிங் என்று காரணம் சொன்னாலும், ஒரு முழுமையான ஆட்டத்தை பார்த்த திருப்தி இருந்ததென்னவோ உண்மை. எவ்வளவுதான் கோபம் இருந்தாலும், இறுதியில் பாண்டிங்கை பார்த்த போது மனதில் என்னவோ செய்தது. அவர் ஆடிய முதல் ஆட்டத்தில் இருந்து பார்த்து வருவதாலோ என்னவோ. கமெண்ட்ரியில் இது அவரது கடைசி ஆட்டமாக இருக்கக்கூடும் என்று வேறு சொன்னார்கள்.
நேற்றைய ஆட்டத்தில் கவர்ந்தவை.
1. வாட்சனின் க்ளீன் போல்ட். ஹாட்ஸ் ஆப் டு அஷ்வின்.
2. சச்சினுக்கு பிரேட்லீ வீசிய 157 மைல் வேக பவுன்சர்.
3. முகத்தில் வழியும் ரத்தத்தை கூட துடைக்காமல் விருவிருவென்று உள்ளே சென்று ஒரு பிளாஸ்திரி மட்டும் ஓட்டிக்கொண்டு திரும்பி வந்த பிரேட்லீ
4. பிரேட்லீ பந்தை அசால்ட்டாக வெளியே அனுப்பிய ரெய்னா
5.ஜெயித்தவுடன் மண்டி போட்டு மட்டையை வீசியபடி யுவராஜ் வெளிப்படுத்திய வெற்றி கர்ஜனை.
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....
30 comments:
நேற்றைய ஆட்டம் போலவே உங்களின் பதிவும் அசத்தல்..
அரசியலும் ஒரு கிரிக்கெட் ஆட்டம்தான்; கிரிக்கெட்டிலும் அரசியல் இருக்கிறது என்பதால் இரண்டையும் இணைத்து ஒரு பதிவோ?
டோனி பேட்டிங் புடிச்ச ஸ்டைல பார்த்தே ,அவ்வளவுதான்னு நெனச்சேன் ,ஆனா ரைனா நல்ல பொறுமையா ஆடி மானத்த காப்பாத்துனாரு ,ஆனா இதே வீராப்ப பாகிஸ்தான் கூட காட்டுவாய்ங்களா?
கலக்கல் பதிவு நண்பா
எப்படியும் இலவசங்களை எல்லாம் கடன் வாங்கித்தான் செய்யப்போகிறார்கள். //
அதான் பகீர்ங்குது
கிரிக்கெட் அலசல் சூப்பர்
திருப்பூரில் அதிகபேர் போட்டியிடுவது சாய பிரச்சனையில் அரசின் கவனத்தை ஈர்க்கத்தான் நண்பா, ஏறக்குறைய 1000 பேர் போட்டியிடவேண்டும் என சொல்லி இருக்கிறார்கள், நேற்றைய கிரிக்கெட் ஆட்டம் செம, ரொம்ப நாள் கழித்து ந்ல்ல ஆட்டம் பார்த்த திருப்தி இருந்தது, அடுத்த மேட்ச் மட்டும் ஜெயித்தால் போதும், பைனலில் தோற்றாலும் கவலை இல்லை :-)
நல்ல ஆட்டத்தை பார்த்த திருப்தி நேற்று!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
@சென்னை பித்தன்
நான் அந்த அர்த்தத்தில் எழுதவில்லை. ஆனால் இதுவும் நல்லாத்தான் இருக்கு. நன்றி நண்பரே...
@நா.மணிவண்ணன்
பெரும்பாலான ஆளுங்க தோனி இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தால் ஆட்டம் மாறி இருக்கும்னு சொல்றாங்க.
தலைவரே கம்பி மேல நடக்குற மாதிரிதான். பாகிஸ்தான் ஆட்டத்தையும் திரில்லிங்கா பார்ப்போம்.
@விக்கி உலகம்
நன்றி நண்பா. அடிக்கடி வாங்க..
@ஆர்.கே.சதீஷ்குமார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல...
@இரவு வானம்
நூதனமான போராட்டம்தான்.
சரி வந்தவரை வந்தாச்சு அப்படியே கோப்பையையும் வாங்கிடலாமே?
நன்றி நண்பரே...
@வைகை
நன்றி நண்பரே
சுவாரஸ்யமான பதிவு..!! :)
\\இதற்கு யார் காரணம்?\\
சந்தேகமேயில்லை, இதற்க்குக் காரணம் \\தன் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாயை திருடிவிட்டு தனக்கே பத்து பைசா பிச்சை போடுபவனை சாமி என்று கும்பிடும் மானமுள்ள\\ மக்கள் மாக்களாகிப் போன
தான்.
\\கமெண்ட்ரியில் இது அவரது கடைசி ஆட்டமாக இருக்கக்கூடும் என்று வேறு சொன்னார்கள். \\ அவர்கள் சொன்னது உலகக் கோப்பையில் இது அவரது கடைசி ஆட்டமாக இருக்கக்கூடும் என்றுதான். அவர் இன்னும் ஒன்றிரண்டு வருடங்கள் ஆடக் கூடும், ஆனால் அடுத்த உலகக் கோப்பை வரை தாக்கு பிடிப்பாரா என்பது சந்தேகம்.
nice post
@சேலம் தேவா
நன்றி நண்பரே...
@Jayadev Das
கருத்துக்கு நன்றி நண்பரே....
ஆஸ்திரேலிய மீடியாக்கள் அவரை திட்டி தீர்த்துவிடும். மேலும் அவரை டெஸ்ட் மேட்ச்களுக்கு மட்டும் கேப்டன் ஆக்கி கேவல படுத்தாமல் இருந்தால் சரி.
@மைதீன்
Thankyou sir.
very nice post. :-)
Intha attathil ennai kavarntha innoru visayam mike hussiya zaheet bold akkiya vitham. Pakka delivery
நல்ல ஒரு பதிவு .. i like Raina's batting.. Y'day i had confidence that Raina can win match for us.. Similarly Ashwin is very good bowler in india team... Hope this same team will win against Pakistan and win the world cup too... All the Best India... All the best Bala for sure you will going to write about india world cup victory as special edition..
உண்மையில் மிக அருமையான போட்டி ஒன்றை பார்த்த திருப்தி ஏற்பட்டது...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...
//இறுதியில் பாண்டிங்கை பார்த்த போது மனதில் என்னவோ செய்தது. //
நமக்கு எப்போதுமே இளகின மனசு :)
வணக்கம் பாஸ்....
".நேற்றைய ஆட்டத்தில் கவர்ந்தவை"இது அசத்தல்..என்னையும் கவர்ந்தன பாஸ்!!
உங்க பெயர் வர காரணம் என்ன??
தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன?
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_26.html
பாலா சார் நாலு வரி எழுதவே நாக்கு தள்ளுது எனக்கு.
சர வெடி போல எழுதி தள்ளுகிறிர்களே எப்படி ?
எல்லாமே கலக்கல் வாழ்த்துக்கள்.
கலக்கல் பதிவு பாலா
சரிதான் போங்க
கண்ணா சிரிக்க ஆசையா?
கண்ணா விழுந்து விழுந்து சிரிக்க ஆசையா?
லிங்கில சொடுக்கிடுங்க.......
http://manithan-blog.blogspot.com/2011/03/blog-post_29.html
Post a Comment