விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

இது விளம்பரம் அல்ல....

April 11, 2011

மாப்பிள்ளை - ரஜினி ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை...


கிரிக்கெட் திருவிழா, ஊர் திருவிழா என்று சில பல காரணங்களால் வலைப்பக்கத்தில் தலைக்காட்ட முடியாமல் போய் விட்டது. கடந்த சில நாட்களாக பதிவுலகில் பெரும்பாலும் உலககோப்பை செய்திகள் அல்லது தேர்தல் சம்பந்தமான செய்திகள் என்று ரிப்பீட்டோ ரிப்பீட்டு. ஆகவே பெரும்பாலான வலைப்பக்கங்கள் ஒரு சுவாரசியமே இல்லாமல் இருக்கிறது. ஹி ஹி நான் மட்டும் என்ன விதிவிலக்கா? கிரிக்கெட் பற்றி தொடர்ந்து பதிவாக எழுதி தள்ளலாம் என்று முடிவு கட்டி இருக்கிறேன். (இது கிரிக்கெட் பதிவல்ல...) உலகக்கோப்பை கொண்டாட்டம்

1991 இல் இருந்து கிரிக்கெட் பார்த்து வரும் ஒருவனது இருபது வருட ஏக்கம் தீர்ந்த கணத்தை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. இந்த கோப்பைக்கு இந்திய அணி தகுதியானதுதான். என் இருபது வருட கிரிக்கெட் பயணத்தை தனியாக பதிவிடுகிறேன். இப்போதைக்கு இந்தியாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நம்ம சச்சினையே கண் கலங்க வச்சுட்டாங்கப்பா... எத்தனை பேர் வீட்டில் தொலைக்காட்சி முன்னாள் அழுதார்களோ?

அடிதடி விஜயகாந்த் 

சமீப காலமாக விஜயகாந்த் தும்மினால் கூட அதை ஒரு செய்தியாக்கி வெளியிடும் வேலையில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் மீடியாக்கள் ஈடுபட்டு வருகின்றன. வேட்பாளரை அடித்தார், அதிமுகவினரை திட்டினார், ஆஃப் அடிக்க வேண்டும் என்று சொன்னார் என்று அவரது செயல்களை படம் போட்டு காட்டிகொண்டு இருக்கிறார்கள். 

கடந்த 4ஆம் தேதி எங்கள் ஊரில் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை முழுவதுமாக கேட்டேன். மறுநாள் 'நம்பர் ஒன்' பேப்பரில் அதனை பற்றி செய்தி. அதிர்ச்சி அடைந்து விட்டேன். அதாவது ராமமூர்த்தி ரோடு என்பதற்கு பதில் ராமநாதன் ரோடு என்று சொல்லிவிட்டார். மறுநாள், "குடிபோதையில் உளறிய விஜயகாந்த்." என்று செய்தி. மைக் சரியாக வேலை செய்யாததால், நிறுத்தி நிறுத்தி பேசிக்கொண்டிருந்தார். உடனே, " தொடர்ந்து பேசும் அளவிற்கு கூட நிதானம் இல்லாத விஜயகாந்த்." என்று செய்தி. ஆக சாதாரண ஒரு செய்தியை வேண்டுமென்றே திரித்து சொல்லி வருகிறார்கள். டாஸ்மாக் வருமானத்தை நம்பியே ஆட்சி நடத்தும் அரசுக்கு இதை கேட்க என்ன தகுதி இருக்கிறது? "மாறன்கள் உட்பட அனைத்து பேரன்களுக்கும் மெட்ரோ சிட்டிக்களில் இரவு நேர டிஸ்கோ கிளப்புகள் இயங்கி வருகின்றன, அங்கே ரெய்டுக்கு போனால் போலீசுக்கு ராஜ உபச்சாரம் கிடைக்கும்." என்று எப்போதோ படித்ததாக நினைவு. "ஒரு ரூபாய்க்கு அரிசி" என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் காய்கறி, பருப்பு, எண்ணை, கேஸ் ஆகிய விலை உயர்வை மறந்து விடுகிறார்கள். அது சரி எல்லாம் செலக்டிவ் அம்னீசியாதான். 


பிரச்சாரம் என்கிற பெயரில் ஒருவர் செய்யும் சிறு சிறு தவறுகளை பூதக்கண்ணாடியில் காட்டுவது காமெடியாகத்தான் உள்ளது. சிறப்பு பாராட்டு விழா நடத்தினால்தான் இலவச டிவி வழங்குவதற்கு வருவேன் என்று அடம்பிடித்தவர் எங்க ஊர் அமைச்சர். அதற்கு வீட்டுக்கு வீடு வசூல் நடந்ததெல்லாம் தனிக்கதை. 


ஒரு சந்தேகம். ஒருவேளை அதிமுக ஜெயித்து, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டால், வடிவேலு, லியோனி ஆகியோர் என்ன ஆவார்கள்? அதிலும் குறிப்பாக லியோனி அம்மாவை சரமாரியாக தாக்கி வருகிறார். 

அன்னா கசாரே 


நாடெங்கிலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு பெயர். இவரது செயல், இதை பயன்படுத்திய மீடியாக்கள் ஆகியவற்றின் மீது பல்வேறான விமர்சனங்களை நிறைய தோழர்கள் சொல்கிறார்கள். என்னை பொறுத்தவரை நல்ல விஷயத்தை நோக்கி முதல் அடி எடுத்து வைத்திருப்பதே ஒரு சாதனைதான். இந்த லோக்பால் மசோதா நிறைவேறி நடைமுறைக்கு வந்தால் நன்றாகத்தான் இருக்கும். குறிப்பாக நிறைய இளைஞர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. ஆனால் இந்த ஈடுபாடு ஐபிஎல் பார்த்தவுடன் திசை திரும்பாமல் இருந்தால் நல்லது. எல்லாவற்றிலும் லாபம் பார்ப்பது நம்ம அரசியல்வாதிகளின் வேலைதானே. "இந்த மசோதாவை ஏன் பாஜக ஆட்சியிலேயே நிறைவேற்றவில்லை?" என்று திருவாளர் பிரணாப் முகர்ஜி கேள்வி எழுப்பி உள்ளாராம். அட ...................(கெட்ட வார்த்தை. அவர் பதவிக்கு மதிப்பு கொடுத்து சென்சார்) இப்ப இந்த கேள்வி ரொம்ப முக்கியமா? அப்போதே நிறைவேறி இருந்தால் நிறைய ஊழல்களை தடுத்திருக்கலாம் என்ற நல்ல நோக்கத்தில் சொல்லி இருப்பாரோ?


மாப்பிள்ளை 


சுறா படம் பார்த்ததில் இருந்து எந்த படம் பார்ப்பதற்கும் மனதில் தைரியம் வந்துவிட்டது. ஆனால் சுறாவையே விழுங்கும் அளவிற்கு ஒரு படம் வரும் என்று அப்போது தெரியாது. அதுவும் ரஜினியின் படப்பெயரில். ரஜினி ரசிகர்கள் யாரும் தயவு செய்து தியேட்டர் பக்கம் கூட சென்று விடாதீர்கள். மிகுந்த துயரத்துக்கு ஆளாக வேண்டி வரும்.  ரஜினி நடித்த மாப்பிள்ளையில் வரும் நல்ல காட்சிகளை எல்லாம் ஞாபகபடுத்திக் கொள்ளுங்கள். அவற்றை அப்படியே எதிர்பதமாக, படுமட்டமாக எடுத்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது மாப்பிள்ளை. விவேக் பேசாமல் ஒரு இரண்டு வருடம் எங்காவது சென்று ஓய்வெடுத்தால் நல்லது. இல்லை வடிவேலு மாதிரி தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கலாம். அவுட் ஆஃப் ஃபார்ம். கடந்த ஞாயிறு அன்று, "வெளியிட்ட இடமெல்லாம் மெகா ஹிட்" என்று ஒரு பத்திரிக்கையில் விளம்பரம் வந்தது. எந்த பத்திரிக்கை என்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்களேன். படத்தில் உருப்படியான ஒரே விஷயம், கீழே இருப்பவர்தான். அதையும் இயக்குனர் வீணடித்து விட்டார். 


தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது இரண்டு முறை கரண்ட் கட் ஆனது. உடனே ஒருவர், "எல்லோரும் கலைஞருக்கு ஓட்டு போடுங்கப்பா. இலவசமா சிம்னி விளக்கும், அஞ்சு லிட்டர் மண்ணெண்ணையும் தருவாறு." என்று சொல்ல ஒரே சிரிப்பொலி. 


உங்களுக்கு பிடிச்சிருந்த ஓட்டு போடுங்க....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 

29 comments:

Unknown said...

என்ன நண்பா நீங்க அம்மா ஆதரவாளரா சொல்லவே இல்லை :-) என்ன வேணா சொல்லுங்க இத்தனை நாளா நீங்க காணாம போனதுக்கு சொன்ன ரீசன் சரியில்ல ஆமாம், விஜயகாந்த பத்தி ஹி ஹி தான்

rajamelaiyur said...

very true..விஜயகாந்த் பேச்சை திசை திருப்புவதே சன் டிவி வேலை

rajamelaiyur said...

வடிவேலு அ.தி .மு .க. கு ஒட்டு போடுகாணு வாய் தவறி சொல்லிட்டார் அத இவனுங்க கண்டுக்கல

பாலா said...

@இரவு வானம்

அம்மா ஆதரவாளர் எல்லாம் கிடையாது தலைவரே. நாம எப்பவுமே ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சிதான். விஜயகாந்த் மேட்டர்ல எனக்கு என்ன தோணுதுன்னா இவங்க பேசி பேசி, விஜயகாந்து தோத்து, அம்மா தனியா போயி கோட்டையில உட்காரப்போராங்கன்னு. அம்மாவோட ஆசையும் அதுவாகத்தான் இருக்கும்.

பாலா said...

@Raja=Theking

கரெக்டா சொன்னீங்க...

நன்றி நண்பரே...

Unknown said...

மாப்பிள்ளை படமாங்க அது ,

///தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது இரண்டு முறை கரண்ட் கட் ஆனது///

இரண்டு முறைதான எங்கள் ஊரில் ஐந்தாறு முறை அல்லவா தடைபட்டது

பாலா said...

@நா.மணிவண்ணன்

இரண்டு முறை கரண்ட் போனது ஆனால் ஒவ்வொரு தடவையும் ஒரு மணி நேரம் கரண்ட் இல்லை.

சென்னை பித்தன் said...

விளையாட்டு,அரசியல் ,திரைப்படம் என்று கலக்கிட்டீங்க!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கடந்த சில நாட்களாக பதிவுலகில் பெரும்பாலும் உலககோப்பை செய்திகள் அல்லது தேர்தல் சம்பந்தமான செய்திகள் என்று ரிப்பீட்டோ ரிப்பீட்டு. ஆகவே பெரும்பாலான வலைப்பக்கங்கள் ஒரு சுவாரசியமே இல்லாமல் இருக்கிறது.

true

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சுறா படம் பார்த்ததில் இருந்து எந்த படம் பார்ப்பதற்கும் மனதில் தைரியம் வந்துவிட்டது. ஆனால் சுறாவையே விழுங்கும் அளவிற்கு ஒரு படம் வரும் என்று அப்போது தெரியாது.

me too

Chitra said...

உடனே ஒருவர், "எல்லோரும் கலைஞருக்கு ஓட்டு போடுங்கப்பா. இலவசமா சிம்னி விளக்கும், அஞ்சு லிட்டர் மண்ணெண்ணையும் தருவாறு." என்று சொல்ல ஒரே சிரிப்பொலி.


..... Super punch! :-))))

Anonymous said...

//மாப்பிள்ளை //
அவ்வளவு ”டேமேஜ்” ஆ பாஸ்! ;)
தப்பிச்சிட்டேன். நன்றி தல!...

பாலா said...

@சென்னை பித்தன்

வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

சேம் பிளட் போலிருக்கே?
நன்றி தல...

பாலா said...

@Chitra

வருகைக்கு நன்றி மேடம்

பாலா said...

@Balaji saravana

அதெல்லாம் தப்பிக்க முடியாது, திரைத்துளி, இந்தியா தொலைக்காட்சியில் முதல் முறையாக, சூப்பர் ஹிட் திரைப்படம் என்று போட்டு எப்படியாவது பார்க்க வைத்து விடுவார்கள்.

நன்றி தல

r.v.saravanan said...

நல்ல விஷயத்தை நோக்கி முதல் அடி எடுத்து வைத்திருப்பதே ஒரு சாதனைதான். இந்த லோக்பால் மசோதா நிறைவேறி நடைமுறைக்கு வந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

கண்டிப்பாக பாலா

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கருத்து கலவை வாழ்த்துக்கள்..

பாலா said...

@r.v.saravanan

நன்றி நண்பரே...

பாலா said...

@# கவிதை வீதி # சௌந்தர்

நன்றி நண்பரே

Yoganathan.N said...

(கிரிக்கெட்) உலக கோப்பையை வென்றதற்கு வாழ்த்துகள். :)

எல்லாரும் மாப்பிள்ளை படம் பயங்கர மொக்கை என்று தான் சொல்கிறார்கள்.

தல ரசிகர்களுக்கு ஆதரவா ஒரு காட்சி வருமாமே... ஹிஹி

Unknown said...

டாஸ்மாக் வருமானத்தை நம்பியே ஆட்சி நடத்தும் அரசுக்கு இதை கேட்க என்ன தகுதி இருக்கிறது?//
செருப்பால அடிச்ச மாதிரி ஒரு கேள்வி

Unknown said...

என்ன நண்பா நீங்க அம்மா ஆதரவாளரா சொல்லவே இல்லை :-) //
உடனே இதை சொல்லி கட்டம் கட்டிருவீங்களே

பாலா said...

@Yoganathan.N

அந்த ஒரு காட்சியை பார்க்க படத்துக்கு போய்டாதீங்க...

பாலா said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

Anonymous said...

podaa baduuuu

Unknown said...

// "எல்லோரும் கலைஞருக்கு ஓட்டு போடுங்கப்பா. இலவசமா சிம்னி விளக்கும், அஞ்சு லிட்டர் மண்ணெண்ணையும் தருவாறு.//


தியேட்டரிலும் அரசியல் கலந்து வீசிய நம்ம ஆளுகளை பாராட்டியே ஆகவேண்டும்..

பாலா said...

@பாரத்... பாரதி...

வருகைக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@பெயரில்லா

அண்ணே அந்த மாதிரி தொழில் எல்லாம் நான் பண்றதில்லை. ஒரு வேளை நீங்க பண்றீங்களா?

Related Posts Plugin for WordPress, Blogger...