விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 8, 2011

மகளிர் தினத்தில் ஒரு ஆணாதிக்க பதிவு....

சுயமுன்னேற்றத்தை பற்றி ஒரு பதிவு எழுதவேண்டும் என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். திடீரென்று ஞாபகம் வந்தது. இன்று மகளிர் தினம் என்று. பதிவுலகத்தில் நிறைய பதிவர்கள் எழுதி தள்ளி விட்டார்கள். தினமும் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் சில பதிவுகளை மட்டுமே என்னால் படிக்க முடிகிறது. ஒரு சில பதிவர்கள் என்ன எழுதினாலும் எனக்கு உடன்பாடாக இருக்காது. இருந்தாலும் அவர்கள் பதிவை தினமும் படிப்பேன். அப்படி படித்த சில பதிவுகள்தான் இந்த பதிவை என்னை எழுதத் தூண்டியது.



பெரும்பாலும் நான் படிக்கும் புத்தகங்கள், கட்டுரைகள் ஆகியவற்றில் சில சமூக கருத்துக்கள் இருந்தால் அதை நாம் பின்பற்றுகிறோமா? என்று எனக்கு சந்தேகம் வரும். இல்லாவிட்டால் வருத்தமாக இருக்கும். தற்போதும் அதே மன நிலையில்தான் இருக்கின்றேன். ஏனென்றால் சாடிசம், சைக்கோதானம், திமிர், ஆணவம், அராஜகம் ஆகியவற்றின் மொத்த உருவமான ஆண்பிள்ளையாக பிறந்துவிட்டோமே என்று. பெண்களுக்கென்று வரும் பிரத்யேக இதழ்கள், கட்டுரைகள், பெண்கள் அமைப்பின் பேச்சுக்கள், எல்லாமே இதை நிலை நிறுத்தும் வகையில்தான் இருந்து வருகிறது. இன்று இணையத்தில் பெண்கள் தின சிறப்பு கட்டுரைகள் அனைத்தும் இதை ஆணித்தரமாக கூறுகின்றன. அப்படி என்றால் நான் ஒரு சாடிஸ்ட் என்பது உண்மையாகத்தானே இருக்கவேண்டும்?

எனக்கு தெரிந்த சில விஷயங்களை சொல்கிறேன். டாமினேசன் என்னும் ஆளுமை குணம் எல்லோருக்கும் உண்டு. அது செல்லுமிடத்தில் செல்லுபடியாகிறது. பொதுவாக ஆண் என்பவன் மனதால் பலம் குன்றியவன். அதனை மறைக்க முரட்டுத்தனம் என்கிற முகமூடியை மாட்டிக்கொள்கிறான். ஒரு ஆணின் மன நிலையில் இருந்து சொல்கிறேன், பெரும்பாலான ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் டாமினேட் செய்வதில்லை. தன்னை விட பலம் குன்றி யார் இருந்தாலும் அவர்கள் மீது இந்த ஆளுமையை காட்டுவான். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. இந்த பொதுவான மிருக குணம் அவன் எவ்வளவு படித்திருந்தாலும் மறைவதில்லை. ஒருவன் இன்னொருவனை பார்த்து கெட்ட வார்த்தையில் திட்டுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் இருவரும் ஒரே ஜாதியினர் என்றால் பிரச்சனை வருவதில்லை. இருவரும் வேறு ஜாதியினர் என்றால் அங்கே அது சாதி சண்டையாக உருவெடுக்கும். ஒரு ஆண் இன்னொருவரை டாமினேட் செய்ய முயல்கிறான் என்றால் அது இன்னொரு ஆணாக இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் அது ஒரு பெண்ணாக இருந்து விட்டால் அங்கே அது ஆணாதிக்கமாக மாற்றப்படுகிறது. முற்றிலும் ஆண்களே இருக்கும் பணியிடங்களிலும் இந்த டாமினேசன் உண்டு.

வரதட்சணை பிரச்சனை என்பது ஒவ்வொரு மனிதரின் பேராசையினால் வருவது. இதற்கு ஆண் பெண் என்ற பேதமில்லை. நூற்றுக்கு 35 சதவீத பெண்களும், 35 சதவீத ஆண்களும் வீட்டுக்கு வரும் பெண்ணிடம் பணத்தை வாங்கி முதலீடு செய்ய அல்லது அனுபவிக்க விரும்புவார். மீதம் இருக்கும் 30 சதவீதம் பேர் அப்படி வாங்குவதை கேவலமாக நினைப்பவர்கள். ஒரு சைக்கிளாக இருந்தாலும் அது தன் சொந்த பணத்தில்தான் வாங்கவேண்டும் என்று நினைக்கும் ஆண்மகன்கள் ஏராளம். இதற்கு காரணம் சமூக அக்கறை அல்ல. முதலில் கூறிய அந்த மிருக குணம். ஆளுமை குணம். தனக்கு வரும் மனைவி என்றில்லை, நண்பர்கள், உறவினர்கள் யாரிடமும் கை எந்த கூடாது என்று நினைப்பவர்கள். அவர்களிடம் உதவி கோரினால் எங்கே தன் ஆளுமையை விட்டு இறங்கி வர வேண்டியிருக்குமோ? என்று பயந்து உதவி கேட்காமல் இருப்பவர்கள். துரஷ்டவசமாக அவர்களும் ஆணாதிக்க சாயம் பூசப்படுகிறார்கள்.

ஆணாதிக்கத்தை எதிர்த்துவரும் கட்டுரைகள் எல்லாமே வீட்டுக்கு வரும் புதுப்பெண் கணவன் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்தே சொல்லப்படுகின்றன. ஆனால் அங்கேயும் ஆண்களை விட பெண்களே வில்லிகளாக இருப்பதாக கூறுகிறார்கள். ஆண் செய்யும் தவறாக கூறப்படுவது வாய் பேசாமல் ஊமையாக இருந்துவிடுவது. எந்த சமூகத்துக்காக பொறுத்துக்கொண்டு இருப்பதாக ஒரு பெண் கூறுகிறாளோ அதே சமூகத்துக்காகத்தான் ஆணும் ஊமையாக இருக்க வேண்டி இருக்கிறது. நேற்றுவரை தன்னிடம் எரிந்து விழுந்த மகனை ஒன்றும் சொல்லமாட்டாள் தாய். திருமணத்துக்கு பிறகு அதே மாதிரி நடந்தால் அதற்கு காரணம் வந்த மருமகள் என்று புலம்ப தொடங்குகிறாள். அவளை சமாதானப்படுத்த முடியாது. அவனை பெற்றவள் அல்லவா? ஆகவே மனைவியை சமாதான படுத்த முயல்கிறான். ஆண்களுக்கும் பெண்களுக்கும் மனதளவில் ஒரு வித்தியாசம் உண்டு. ஆண்கள் அப்போது நடக்கும் விஷயத்தை வைத்து ஒருவரின் குணத்தை முடிவு செய்பவர்கள். பெண்கள் அப்படி அல்ல. அவர்களுக்கு first impressionதான் முக்கியம். வீட்டுக்குள் வந்தவுடன் தன் கண்ணுக்கு வில்லியாக தெரியும் மாமியார் அவளுக்கு நல்லவளாக தெரியபோவதே இல்லை. ஆகவே கணவன் சமாதானப்படுத்தினாலும் அவள் கேட்பதில்லை. 

கணவன் முன்னிலையில் அமைதியாக இருந்தாலும், அவன் இல்லாத நேரத்தில் மாமியாரிடம் லேசாக உரசுகிறாள். போதுமே? மகன் வந்தவுடன் அனைவர் முன்னிலையிலும் கண்ணீர்வடிக்கிறாள் தாய். படுக்கை அறையில் தனியாக கண்ணீர் வடிக்கிறாள் மனைவி. முன்பே சொன்னது போல ஆண் மனதளவில் பலவீனமானவன். அவனால் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள முடியவில்லை. முரட்டுத்தனத்தை எடுத்து முகமூடியாக அணிந்து கொள்கிறான். மற்றபடி ஆண்கள் தனியாக சங்கம் வைத்து, ஒவ்வொரு குழந்தையையும் பெண்ணை அடிமைப்படுத்த வேண்டும் என்று சொல்லி அனுப்புவதில்லை. சொல்லப்போனால் பெண் சமூகம்தான் திருமணத்துக்கு முன் ஆண்கள் சமூகத்தை ஒரு சைக்கோ கூட்டம் என்பது மாதிரியான எண்ணத்தை பெண்ணின் மனதில் விதைத்து விடுகிறது. திருமணம் என்பது மனதளவில் இரு பாலருக்குமே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதை வெளிஉலகத்தில் மறந்துவிடுகிறான் ஆண். ஆனால் பெண் அதை தன் தோழிகளோடு பகிர்ந்து கொள்கிறாள். ஆனால் அங்கேயும் அதே கதைதான். ஆகவே அவளுக்குள் சுமை அதிகமாகவே செய்கிறது.

ஆண் அறிவுப்பூர்வமாக செயல்படுபவன். ஆகவே எதையுமே மேலோட்டமாக அணுகுபவன். ஆனால் பெண் உணர்வு பூர்வமாக செயல்படுபவள். ஆகவேதான் ஆணின் அணுகுமுறைகள் பெண்ணின் மனதில் பெரிய காயத்தை ஏற்படுத்தி விடுகின்றன. ஒவ்வொரு ஆணின் மனதிலும் ஒரு பெண்மை உண்டு. அது எப்போதாவது வெளிவரும்போது அவன் நாடுவது தாய் மடியை அல்லது மனைவியின் மடியை. அப்போதுதான் அவனுக்கு அவளின் அருமை புரிகிறது. பெண்களே! உலகில் நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா பாலினத்திலும் இருக்கிறார்கள். வெகு காலத்துக்கு முன்பு வேண்டுமானால் பெண்கள் முற்றிலும் அடிமை படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் தற்காலத்தில் இந்த நிலை மாறிவருகிறது. பெரும்பாலான இளைஞர்கள் மனதளவில் மாறி வருகிறார்கள். இனியும் ஆண்களை சைக்கோவாக சித்தரிக்கின்ற போக்கை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான முறையில் சிந்திக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.


அண்ணே எங்க போறீங்க? இது நமக்கு. ஆம்பள பசங்களுக்கு. புதுசா ஒரு பெரிய கம்பெனிக்கு வேலைக்கு போறீங்க. மோத நாள் எல்லா பயலும் உங்கள பாத்து மொறைக்கிறான். அப்ப உங்க ஊர்க்காரன் ஒருத்தனை பாக்குறீங்க. அப்ப உங்க மனசுல ஒரு நிம்மதி வருமே? அப்படித்தான் இருக்கும் உங்கள கட்டிக்கிட்டு உங்க வீட்டுக்கு வர்ற பொண்ணுக்கும். அவளுக்கு அந்த வீட்டுல உங்கள விட்டா வேற யாருமில்ல. அதனால அவ மனசு நோகாம நடந்துக்கிறதுதானே நல்ல ஆம்பளைக்கு அழகு. நமக்கு எப்பவுமே ஈகோவை டச் பண்றது பிடிக்காதில்லையா? இப்போ ஈகோவை டச் பண்ற மாதிரி ஒண்ணு சொல்றேன். நீங்க சரியான ஆம்பளையா இருந்தா உங்களுக்கு சமமான பலத்துல இருக்குறவங்கிட்ட உங்க வீரத்த காட்ட வேண்டியதுதானே? அத விட்டுட்டு அப்பாவி பொண்ணுகிட்ட வீரத்த காட்டலாமா?

ஆண் பெண் இருவருக்கும் ஒன்று சொல்கிறேன். மனிதநேயத்துக்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. எதிர்பாலினமாக பார்க்காமல் சக மனிதராக பார்த்தால் வேற்றுமை குறையும். நாம் கற்ற கல்வி பணம் சம்பாதிக்க அல்ல. நம்மை மிருகத்தனத்தில் இருந்து மனிதனாக மாற்றவே. இனி வரும் காலங்களில் மகளிர் தினத்தை கொண்டாடும் அவசியம் இல்லாமல் போக வேண்டும் என்பதே என் ஆசை.

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

22 comments:

சக்தி கல்வி மையம் said...

I...

சக்தி கல்வி மையம் said...

ஒருவன் இன்னொருவனை பார்த்து கெட்ட வார்த்தையில் திட்டுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் இருவரும் ஒரே ஜாதியினர் என்றால் பிரச்சனை வருவதில்லை. இருவரும் வேறு ஜாதியினர் என்றால் அங்கே அது சாதி சண்டையாக உருவெடுக்கும் ///
சரியாச்சொன்னீங்க...

சக்தி கல்வி மையம் said...

வெகு காலத்துக்கு முன்பு வேண்டுமானால் பெண்கள் முற்றிலும் அடிமை படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் தற்காலத்தில் இந்த நிலை மாறிவருகிறது.--- இதுவும் முற்றிலும் உண்மையே...

சக்தி கல்வி மையம் said...

மனிதநேயத்துக்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. எதிர்பாலினமாக பார்க்காமல் சக மனிதராக பார்த்தால் வேற்றுமை குறையும். நாம் கற்ற கல்வி பணம் சம்பாதிக்க அல்ல. நம்மை மிருகத்தனத்தில் இருந்து மனிதனாக மாற்றவே. இனி வரும் காலங்களில் மகளிர் தினத்தை கொண்டாடும் அவசியம் இல்லாமல் போக வேண்டும் என்பதே என் ஆசை.---
இது சவுக்கடி... உங்கள் ஆசை நிறைவேரட்டும். விரைவில்..

Unknown said...

அதே அதே...............
இதே பதிவு நானும் போடலாம்னு இருந்தேன் பாஸ்..
நமக்கு தான் இப்ப ஒண்ணுமே கிடைக்குதில்ல............

சக்தி கல்வி மையம் said...

அருமையான பதிவு ..
நிறைவான பதிவு நண்பரே..

பாலா said...

@வேடந்தாங்கல் - கருன்

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@மைந்தன் சிவா

அந்த வருத்தம் எனக்கும் இருக்கு... என்ன பண்றது?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

KALAKKAL......

பாலா said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

நன்றி தல

Anonymous said...

ஆனால் அங்கேயும் ஆண்களை விட பெண்களே வில்லிகளாக இருப்பதாக கூறுகிறார்கள்//
தலையணை மந்திரமா

Anonymous said...

இவ்வளவு நீளமான கருத்துள்ள பதிவு..எப்படி முடியுது..தல

Anonymous said...

ஒரு சைக்கிளாக இருந்தாலும் அது தன் சொந்த பணத்தில்தான் வாங்கவேண்டும் என்று நினைக்கும் ஆண்மகன்கள் ஏராளம்//ஆச்சர்யமா இருக்கு இந்த ஸ்பெக்ட்ரம் காலத்துல

பாலா said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

புகுந்தவீட்டில் தொல்லை தருபவர்களாக மாமியார் மற்றும் நாத்தனாரையே பெரும்பாலும் சொல்கிறார்கள்.

என்னது இது நீளமான பதிவா. உண்மைதமிழன் அவர்களின் பதிவை படித்ததில்லையா? அவரை பார்த்துத்தான் நான் பதிவெழுத தொடங்கினேன். இப்போ புரிந்திருக்குமே?

நாட்டில் ஒரு ராசாதான் இருக்கிறார். ஆனால் மானமுள்ள மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

Chitra said...

ஆண் பெண் இருவருக்கும் ஒன்று சொல்கிறேன். மனிதநேயத்துக்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. எதிர்பாலினமாக பார்க்காமல் சக மனிதராக பார்த்தால் வேற்றுமை குறையும். நாம் கற்ற கல்வி பணம் சம்பாதிக்க அல்ல. நம்மை மிருகத்தனத்தில் இருந்து மனிதனாக மாற்றவே.


......சிந்திக்கிறேன்.

tamilbirdszz said...

அருமையான பதிவு.......
http://tamilbirdszz-naalikai.blogspot.com/2011/03/blog-post_5363.html
இதையும் வாசித்து பார்க்கவும் உண்மையில் நான் பெண்களுக்கு எதிரானவன் இல்லை நசைச்சுவையாக எழுதபட்டது

பாலா said...

@Chitra

மிக்க நன்றி மேடம்.

பாலா said...

@tamilbirdszz

நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க...

Unknown said...

அண்ணே விடுங்கண்ணே விடுங்கண்ணே ஒத்துக்கிறேன்னே ,என் ஈகோவை உடைச்சுட்டீங்கனே ,கல்யாண ஆனா பிறகு மனசு நோகாம பாத்துக்கிறேன்

ப.கந்தசாமி said...

நல்ல பதிவு.

பாலா said...

@நா.மணிவண்ணன்

நன்றி நண்பரே...

பாலா said...

@DrPKandaswamyPhD

நன்றி சார்

Related Posts Plugin for WordPress, Blogger...