விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

February 22, 2011

நடு நிசி நாய்கள்


"நடு நிசி நாய்கள்" இந்த தலைப்பை பார்த்தவுடனே இது திரை விமர்சனம் என்று நினைத்து இங்கு வந்திருந்தால் நான் பொறுப்பல்ல. இந்த படத்தை போலவே நான் சொல்லபோவதும் ஒரு உண்மை சம்பவம்தான். (கொஞ்சம் பெரிய பதிவுதான். போராடித்தாலும் படித்து விடுங்கள்...)



நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த காலத்தில் ஆண்டுக்கு ஒருமுறை NSS கேம்ப்புக்கு அருகில் இருக்கும் கிராமத்துக்கு செல்வதுண்டு. அப்படி நான் சென்றது மதுரை மாவட்டத்தில் இருக்கும் சித்தூர் எனப்படும் உள்ளடங்கிய ஒரு கிராமம். இந்த கிராமத்தில் ஒரு ஸ்பெசாலிட்டி என்னவென்றால் மிக குறைந்த அளவே மக்கள் இருப்பார்கள். அதிலும் இரவு பத்து மணிக்கு மேல் ஆள் அரவமே இருக்காது. ஏன் என்று கேட்டதற்கு அவர்கள் ஒரு கதை சொன்னார்கள். கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தோம். கேரளாவில் (இந்த ஊரில் இருந்து போடி வழியாக கொஞ்சம் பக்கம்) இருந்து நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி இந்த ஊருக்கு வந்திருக்கிறாள். அவள் மீது சந்தேகம் கொண்ட ஊர் மக்கள் அவளை கல்லால் அடித்து துரத்தி இருக்கிறார்கள். குற்றுயிரும் குலை உயிருமாக ஊரை விட்டு ஓடி ஊருக்கு வடக்கே இருக்கும் சுடுகாட்டுக்கு அருகில் குழந்தையை பிரசவித்து விட்டு அங்கேயே இறந்துவிட்டாள். குழந்தையும் இறந்துவிட்டது. பத்தினியான தன்னை இப்படி அநியாயமாக தண்டித்த மக்களை பழிவாங்க அங்கேயே காத்திருந்து, அந்த பக்கமாக வருபவர்களை அடித்து கொல்ல தொடங்கி இருக்கிறாள். கலவரம் அடைந்த மக்கள் அவளிடம் மன்றாட, கோபம் தணிந்த அவள், சரி அப்படியானால் இந்த ஊரில் இறப்பவர்களை நான் சாப்பிட்டு விடுகிறேன் என்று சொல்லி விட்டாளாம். அன்றில் இருந்து இரவு பத்து மணிக்கு மேலாக ஊரை சுற்றி வருகிறாளாம். அதிலும் ஏதாவது சாவு நிகழ்ந்துவிட்டால் மிக ஆக்ரோஷமாக ஊரை சுற்றி வருவாளாம். மேலும் அந்த ஊரில் பிணத்தை எரித்தால் மட்டும் பிண வாடை அடிப்பதில்லை.


என்னை விட பயங்கர டெரர் எஃபெக்ட்டில் அந்த பெரியவர் சொன்னதும் வயிற்றில் புளியை கரைத்தது. பற்றாக்குறைக்கு அந்த கோவில் இருக்கும் இடத்துக்கு வேறு சென்றோம். மல்லாக்க படுத்து பிரசவித்த நிலையில் நாக்கை தொங்க விட்டபடி ஒரு முப்பதடி சிலை பயமுறுத்தியது. இது கேரளா மாசாணி அம்மன்தான் என்றாலும் பயம் மட்டும் விலகவில்லை. ஒருவழியாக பத்துநாள் கேம்ப் நிறைவு பெற்றது. ஒன்பதாவது நாள் இரவு எல்லோருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. நாங்கள் அனைவரும் கண்மாயில் நெருப்பு கொழுத்தி கேம்ப் பயர் கொண்டாடிவிட்டு நாங்கள் தங்கி இருந்த இடத்துக்கு திரும்புகையில் இரவு மணி பதினோன்றரைக்கு மேல் ஆகி விட்டது. தங்கும் இடம் என்றவுடன் ஹோட்டல் ரூம் என்று நினைக்காதீர்கள். ஊர் மக்கள் வீட்டு மொட்டை மாடிதான். விருந்து என்றவுடன் புல் கட்டு கட்டியதன் விளைவு கொஞ்ச நேரத்தில் தெரிய ஆரம்பித்தது. வேறு வழியே இல்லை. தங்கும் இடத்தில் டாய்லெட் எல்லாம் கிடையாது. ஒரு அரை கிலோமீட்டர் பயணம் செய்து சமூக நல கூட பொது கழிவறையை பயன்படுத்த வேண்டும்.


முதலில் ஒன்றும் தெரியவில்லை. தெருவில் இறங்கி நடக்க தொடங்கியபோதுதான் தெரிந்தது இந்த அரை கிலோமீட்டர் அம்பது கிலோமீட்டர் ஆக போகிறாதென்று. கும்மிருட்டு. மெதுவாக தட்டு தடுமாறி நடக்க தொடங்கினேன். உண்மையை சொல்கிறேன். சுமார் ஒரு இருபது நாய்கள் என்னை சுற்றி நின்றுகொண்டு குறைக்க தொடங்கின. நெஞ்சு படபடத்தது. ஓடலாமா? கூடாது ஆளுக்கு அரை கிலோ என்றாலும் என் உடலில் கறி மிஞ்சது. வேறு என்ன செய்வது. ஏதாவது விறகு கட்டையை கையில் எடுத்து கொள்ளலாமா? அதுவரை சும்மா இருந்த நாய்கள் கோபமாகி பாய்ந்து விட்டால்? சரி அகிம்சையே சிறந்த வழி. மெதுவாக நடந்தேன். நாய்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தது. இது உண்மையா? பிரமையா? பயத்தின் உச்ச கட்டத்தில் இருந்தேன். இதுவரை குரைத்து வந்த நாய்கள் ஊளையிட தொடங்கின. மிக எச்சரிக்கையாக நடந்தேன். ஒரு சிறு தவறு கூட நாய்களை உசுப்பேத்தி விடும். ரொம்ப தூரம் நடந்த மாதிரி இருந்தது. சாலை நீண்டு கொண்டே சென்றது. ஒருவழியாக போது கழிப்பறையை அடைந்து உள் பக்கமாக தாளிட்டேன். நிம்மதி பெருமூச்சு கூட விட முடியவில்லை. இதயம் துடிப்பது காதுக்கு கேட்டது.


அடுத்த பிரச்சனை. திரும்ப போகவேண்டுமே? கதவை திறந்து ஒரே ஓட்டமாக ஓடி விடலாமா? ஏற்கனவே நாய்களை எதிர்கொண்டதால் கொஞ்சம் தைரியம் வந்திருந்தது. மெதுவாக வெளியே வந்தேன். ஆச்சர்யம். ஒரு நாயை கூட காணவில்லை. தைரியமாக ஒரு பத்தடி நடந்திருப்பேன். எப்போதுமே ஒரு மனிதனுக்கு தனிமையில் இருக்கும்போது அவன் மறந்த எல்லா தேவையில்லாத விசயங்களும் நினைவுக்கு வரும். ஞாபகம் வந்தது. அந்த கர்ப்பிணி பெண் ஊரை சுற்றி வருவாளாமே? அய்யய்யோ இன்று அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரின் அம்மா தவறி விட்டார். அப்படியானால் கண்டிப்பாக அவரது பிணத்தை சாப்பிட்டுவிட்டு ஆக்ரோஷமாக ஊரை வலம் வந்து கொண்டிருப்பாளோ? நாய்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொண்டதற்கு இதுதான் காரணமோ? அடிவயிற்றில் குப்பென பயம் கவ்வியது. இன்னும் அரை கிலோமீட்டர் போக வேண்டுமே? சரி ஆனது ஆகட்டும் என்று திரும்பி பார்க்காமல் நடக்க தொடங்கினேன். ஊருக்குள் கேட்கும் வினோத ஒலிகள் எல்லாமே யாரோ காலில் சலங்கை கட்டி அதிர நடப்பது போன்றே இருந்தது. தூரத்து நிழல் கூட பெண்ணின் உருவமாக தோன்றியது.


இன்னும் இருபது அடிதான். வீட்டை நெருங்கி விட்டேன். அந்த இடத்தில் ஒரு அசாதாரண இருட்டு. சுத்தமாக கண் தெரியவில்லை. மனதில் ஏதோ ஒரு நெருடல். ஒரு இறுக்கம். அருகில் என்னவோ இருக்கின்றது. அது என்ன? காதை கூர்மையாக்கினேன். ம்ம்... ஹம்ம் ..ம்ம்... ஹம்ம் .. என்று யாரோ மூச்சு விடும் சத்தம். தூக்கத்தில் விடவில்லை. ஏதோ கோபத்தில் இருப்பது போல தோன்றியது. எனக்கு இதயமே நின்றுவிட்டது. போச்சு நாளை காலையில் இந்த இடத்தில் நாம் ரத்தம் கக்கி செத்து கிடப்போம் என்று நினைத்து கொண்டேன். மிச்சம் இருக்கும் தைரியம் (எங்க இருக்கு?) எல்லாவற்றையும் சேகரித்துக்கொண்டு, ஒரே ஓட்டம். கல் முள் எதுவும் தெரியவில்லை. வீட்டை அடைந்து குப்புற படுத்துக்கொண்டு போர்வையால் இருக மூடிக்கொண்டேன். மறுநாள் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக அந்த மூச்சு சத்தம் கேட்ட இடத்துக்கு விரைந்தேன். அங்கே ஒரு வயதான பசுமாடு படுத்து கிடந்தது. அதன் அருகில் சென்றேன். ம்ம்... ஹம்ம் ..ம்ம்... ஹம்ம் .. அட நீதானா அது? என்று நொந்து திரும்பினேன். தெருவோரத்தில் படுத்திருந்த ஒரு நாய் என்னை ஏளனமாக நிமிர்ந்து பார்த்தது.


என் வாழ்க்கையில் என்னால் மறக்கவே முடியாத ஒரு இரவாக அன்று அமைந்து போனது. இது பற்றி நான் யாரிடமும் சொல்லவில்லை, சொன்னால் கிண்டல் செய்வார்கள் என்று.

இந்த கதையால் அறியப்படும் நீதி.

நீதி #1: தெரியாத ஊரில் இந்த மாதிரி யாராவது கதை சொன்னால் அதை நம்பாதீர்கள். உங்களுக்கு கற்பனை வளம் அதிகம் என்றால் கதையை கேட்க கூட செய்யாதீர்கள்.

நீதி #2: ஓசியில் கிடைக்கிறது என்று அகால வேளையில் அன் லிமிடட் மீல்ஸை, புல் கட்டு கட்டாதீர்கள்.

நீதி #3: நாய் துரத்தினால் எக்காரணம் கொண்டும் ஓடாதீர்கள்...

டிஸ்க்: இது என் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவம். நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

24 comments:

சக்தி கல்வி மையம் said...

நம்பர மாதிரிதான் இருக்கு.

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_22.html

சக்தி கல்வி மையம் said...

அந்த இடத்தில் ஒரு அசாதாரண இருட்டு. சுத்தமாக கண் தெரியவில்லை. மனதில் ஏதோ ஒரு நெருடல். ஒரு இறுக்கம். அருகில் என்னவோ இருக்கின்றது. அது என்ன? காதை கூர்மையாக்கினேன். ம்ம்... ஹம்ம் ..ம்ம்... ஹம்ம் .. என்று யாரோ மூச்சு விடும் சத்தம். தூக்கத்தில் விடவில்லை. ஏதோ கோபத்தில் இருப்பது போல தோன்றியது. எனக்கு இதயமே நின்றுவிட்டது.////
ரொம்ப பயந்துடீங்க போல..

சக்தி கல்வி மையம் said...

என்னடா இவ்ளோ பெரிய பதிவுன்னு படிக்க ஆரம்பித்தேன்..ஆனால் இதை இதைவிட சுருக்கமுடியாது... அருமை.. பயத்தை வார்த்தைகளால் விதைத்திருக்கீறீர்கள்..

Chitra said...

பயங்கர அனுபவம் தான்....
ஆனாலும், நீங்க சொன்ன நீதி, வாசித்து விட்டு சிரிக்காமல் இருக்க முடியல...

Anonymous said...

ஆஹா எல்லாம் டெரர் மேட்டரா இருக்கே

Anonymous said...

இன்று திகிலா நடத்துங்க..

Anonymous said...

உங்களுக்கு கற்பனை வளம் அதிகம் என்றால் கதையை கேட்க கூட செய்யாதீர்கள்.
//
சொல்லாட்டியும் கேட்டிருந்தா எப்படி சொல்லியிருப்பான்னு கற்பனை பண்ண ஆரம்பிச்சிருவேன்..இதுக்கு என்ன பண்ண?

"ராஜா" said...

உங்கள் பதிவை படிக்கும் பொழுது கே டிவியில் நடுநிசியில் தளபதியோட படத்தை (மூஞ்சை) தனியாக அமர்ந்து பார்ப்பது போலவே திகிலாக இருந்தது ...

பாலா said...

@வேடந்தாங்கல் - கருன்

வருகைக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@Chitra

என்னோட அனுபவம் உங்களுக்கு சிரிப்பா இருக்கா? பரவாயில்லை சிரித்து விட்டு போங்கள்...

வருகைக்கு நன்றி மேடம்.

பாலா said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

அப்படியானால் கண்டிப்பா உங்களுக்கு பயம் இருக்காது. பேய்தான் உங்களுக்கு பயப்படும்.

நன்றி தலைவரே...

பாலா said...

@"ராஜா"

அய்யய்யோ நடு நிசி என்னங்க? பட்ட பகல்லயே அந்த மூஞ்சி டெரராதான் இருக்கும்.

Unknown said...

///என் வாழ்க்கையில் என்னால் மறக்கவே முடியாத ஒரு இரவாக அன்று அமைந்து போனது. இது பற்றி நான் யாரிடமும் சொல்லவில்லை, சொன்னால் கிண்டல் செய்வார்கள் என்று.///

அதான் சொல்லீட்டீங்களே ஹி ஹி ஹி

Unknown said...

பொதுவாக எல்லா கிராமத்திலும் இது போல் ஒரு கதை வைத்துருப்பார்கள்

எனக்கு பேய் என்றால் கூட பயம் கிடையாது ஆனால் நாய் என்றால் உண்மைலே ரொம்ப பயங்க , நாய் ரோட்டுல அந்த மூலைல இருந்துச்சுனா நா இந்த ஓரமா நடந்து போய்ட்டுருப்பேன் ,சில சமயம் தவிர்த்துகூட விடுவேன் அந்த பக்கம் போறத

பாலா said...

@நா.மணிவண்ணன்

அய்யய்யோ சொல்லீட்டெனா? ஒரு ஃப்லோல வந்துடுச்சு.

உங்களுக்கு நாய்னா பயமா? அப்போ நீதி#3 உங்களுக்கு பயன்படும்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

FIRST FEARING





AFTER LAUGHING.

Anonymous said...

ஹா ஹா.. தல செம டெரரா இருக்கே! :)

பாலா said...

@ஓட்ட வட நாராயணன்

தாங்க்ஸ் நண்பரே...

பாலா said...

@Balaji saravana

நீங்க ஒருத்தராவது இதை டெரர் கதைனு ஒத்துக்கிட்டீங்களே... நன்றி தல...

Unknown said...

ரொம்பவே பயமுறுத்துறீங்க பாஸ்

Unknown said...

மொதல் தடவையா வாறன் உங்க ஏரியாவுக்கு ...நல்லா இருக்கு

பாலா said...

@மைந்தன் சிவா

எதை சொல்றீங்க? இந்த கதை உங்களை பயமுறுத்துதா? இல்லை இந்த வலைத்தளமே பயமுறுத்துதா?

அடிக்கடி வாங்க பாஸ்...

Unknown said...

உங்க பேரு டெரர் பாலாவா ஹி ஹி!

பாலா said...

@விக்கி உலகம்

வேணாங்க இந்த பெயர் ஏதோ ஒரு ரவுடியோட பெயர் மாதிரியே இருக்கு. நாம எல்லாம் அந்த அளவுக்கு வோர்த் இல்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...