விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

January 13, 2011

திரும்பி பார்க்கிறேன் - பிளாஷ்பேக்


இந்த மாதம் முழுவதுமே பிளாஷ்பேக் மாதம் போலிருக்கிறது. நண்பர் பாலாஜி சரவணன் என்னை கடந்த வருடத்தை திரும்பி பார்க்க அழைத்திருக்கிறார். முதலில் அவருக்கு என் நன்றிகள். இத்தோடு மூன்றாவது தடவையாக திரும்பி பார்க்கிறேன். இதற்குமுன் 100ஆவது பதிவுக்காக ஒரு முறையும், வலைச்சரத்துக்காக ஒரு முறையும் ஏற்கனவே திரும்பி பார்த்து விட்டேன். மறுபடியும் ஒருமுறை திரும்பி பார்க்கிறேன்.சொந்த வாழ்வை பற்றி திரும்பி பார்ப்பதா? அல்லது பதிவுலகில் நடந்ததை பற்றி திரும்பி பார்ப்பதா? என்று தெரியவில்லை. 


சொந்த வாழ்க்கையில் கடந்த ஒரு ஆண்டில் பெரிதாக எதுவும் மாற்றங்கள் நிகழவில்லை. என் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் அதிகரித்தார். அழகான உறுப்பினர். என் அண்ணனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த நேரத்தில் நான் வாடா படம் பார்த்துக்கொண்டிருந்தேன் என்று ஏற்கனவே கூறி இருக்கிறேன். 

பதிவுகளை நான் படிக்க ஆரம்பித்தது 2009இல். ஆனால் பதிவெழுத தொடங்கியது 2010 பிப்ரவரியில். எதையாவது வாசித்து விட்டாலோ, எந்த ஒரு போது நிகழ்வுகளைப்பற்றி மனதில் அபிப்ராயம் ஏற்பட்டாலோ யாரிடமாவது பகிர்ந்து கொள்வது (அதாவது ஓட்டை வாய்) எனக்கு மிக பிடிக்கும். அந்த மாதிரியான நேரங்களில் நான் சொல்வதை புரிந்து கொள்ளும் அளவுக்காவது விபரம் தெரிந்த நபர்கள் இல்லை என்றால், யாரிடம் சொல்வது என்று திண்டாட்டம்தான். இந்த குறையை போக்க எனக்கு கிடைத்த வழிதான் பதிவுகள். என் பதிவுகள் வாயிலாக நான் நினைப்பதை, படித்ததை பகிர்ந்து கொள்ள முடிந்தது.


எதைப்பற்றி எழுதுவது என்று தெரியாமல், நினைத்ததை எல்லாம் எழுதி தள்ளி இருக்கிறேன். சில பதிவுகள் இப்போதும் என் மன நிலையை பிரதிபலிக்கின்றன. சில பதிவுகள் அந்த சமயத்தில் என்னுடைய சிறு பிள்ளை தனமான எண்ணங்களை வெளிப்படுத்தி இருப்பதை காட்டுகின்றன. ஆரம்பத்தில் இருந்தே யார் வம்பு தும்புக்கும் போறதில்லை. ஆனால் கார்க்கி தொடங்கி, வால்பையன், வெண்ணிற இரவுகள் கார்த்தி, புலவன் புலிகேசி, சதீஷ் வரை  நிறைய விவாதம் செய்திருக்கிறேன். வீண் விவாதமும் செய்திருக்கிறேன். இதில் வெண்ணிறஇரவுகள் கார்த்தியோடு செய்த விவாதம் என்னை பிரபலப்படுத்தியது. நான் எழுதிய ஒரே எதிர்வினை இவருக்குத்தான்.

ஒரு நண்பர் நான் சினிமா மற்றும் கிரிக்கெட் பற்றி அதிகம் எழுதுவதாக குறைபட்டுக்கொண்டார். நான் ஹிட்ஸ், மற்றும் ஓட்டுக்களுக்காக எதுவும் எழுதுவதில்லை. தினமும் நினைத்த மாத்திரத்தில் கதை, கவிதை படைக்க நான் பெரிய எழுத்தாளன் கிடையாது. நமக்கு எது வருகிறதோ அதை மட்டுமே செய்யவேண்டும். நமக்கு வருவதெல்லாம் வெட்டிப்பேச்சுதான். அதைத்தான் ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறேன்(ஹி..ஹி). முடிந்த அளவு யாரையும் காயப்படுத்தாமல், ஆபாசமாக இல்லாமல், அநாகரீகமாக இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன் (அதை படிக்கிறவங்க சொல்லணும்).


பதிவுலகில் கடந்த வருடத்தில் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். தொழில் நுட்ப ரீதியாக, உளவியல் ரீதியாக. என் வலைத்தளத்தில் முதல் ஆறு மாதங்களுக்கு ஃபாலோயர் பட்டை கிடையது. பெரும்பாடு பட்டு இணைத்தேன். ஓரளவுக்கு எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுத கற்றுக்கொண்டுள்ளேன். உளவியல் ரீதியாக பார்த்தால், எந்த ஒரு விவாதத்திலும் வெற்றி கிட்டுவதில்லை. ஒன்று சண்டையில் சென்று முடிகிறது. இல்லை விதண்டா வாதமாக மாறுகிறது. முடிவில் நட்பு முறிவதென்னவோ நிச்சயம், என்றெல்லாம் தெரிந்து கொண்டேன்.

ஏதோ ஒரு வலைப்பதிவில் படித்தது. "பதிவுலகம் என்பது நம் காலப்பெட்டகம். டைரி என்று கூட வைத்துக்கொள்ளலாம்". அவ்வப்போது கடந்த காலங்களில் எழுதிய என் பதிவுகளை திருப்பி படிக்கும்போது, அந்த கால கட்டங்களில் என் மன நிலையும், சமூகத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளையும் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. கடந்த ஒரு வருடத்தில் எழுத்திலும், எண்ணத்திலும் சில முன்னேற்றங்கள் தென்படுகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே அளிக்கிறது.

26 comments:

Thirumalai Kandasami said...

flashback mania in blog..


http://enathupayanangal.blogspot.com

Anonymous said...

கதை, கவிதை படைக்க நான் பெரிய எழுத்தாளன் கிடையாது. நமக்கு எது வருகிறதோ அதை மட்டுமே செய்யவேண்டும்.//
அதுதான் சரி

Anonymous said...

இவ்வளவு நல்லா திரும்பி பார்த்திருக்கீங்க ஒரு பய திரும்பி பார்க்கலையே ஏன்?

Anonymous said...

கார்க்கி தொடங்கி, வால்பையன், வெண்ணிற இரவுகள் கார்த்தி, புலவன் புலிகேசி, சதீஷ் வ//
அப்படியா எப்ப சண்டை போட்டோம் நினைவில்லை இன்னொரு முறை சண்டை போடலாம் வாங்க

ரஹீம் கஸ்ஸாலி said...

ரொம்ப அருமையா திரும்பி பார்த்திருக்கீங்க...
நானும் திரும்பி பார்த்திருக்கிறேன். அதையும் பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க நண்பரே....
http://ragariz.blogspot.com/2011/01/flashback-of-rahim-gazali.html

NKS.ஹாஜா மைதீன் said...

என்னை வலைச்சரத்தில் அறிமுக படுத்தியதுக்கு மிக்க நன்றி நண்பரே....


நல்லாத்தான் திரும்பி பார்த்து இருக்கீங்க

பாலா said...

@Thirumalai Kandasami

நன்றி நண்பரே

பாலா said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

நான் திரும்பி பார்த்தது போதாதா. மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையை திரும்பி பார்க்கவே நேரம் இருக்காது.

உங்களை சொல்வதாக இருந்தால் ஆர் கே சதீஷ் என்று சொல்லி இருப்பேன். நான் சொன்னது வேறொரு சதீஷ்.
நன்றி நண்பரே...

பாலா said...

@ரஹீம் கஸாலி
பாத்திடுறேன். நன்றி நண்பரே

பாலா said...

@NKS.ஹாஜா மைதீன்

நன்றி நண்பரே

Philosophy Prabhakaran said...

பதிவுக்கு நீங்க இந்த அஜித் ஸ்டில்லை தேர்ந்தெடுத்த உங்கள் கிரியேட்டிவிட்டி பாராட்டுக்குரியது... அதுசரி, நீங்க தல ரசிகரா...

பாலா said...

@Philosophy Prabhakaran

தல போல வருமா?

THOPPITHOPPI said...

திரும்பிப்பார்க்கிறேன் உங்களுடையது கொஞ்சம் இயல்பானது

Yoganathan.N said...

தல படம் சூப்பர். :)

//கடந்த ஒரு வருடத்தில் எழுத்திலும், எண்ணத்திலும் சில முன்னேற்றங்கள் தென்படுகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே அளிக்கிறது.//

At the end of the day, this is what really matters. Keep rocking.

நம்ம பக்கமும் வந்து போங்க. :)

பாலா said...

@THOPPITHOPPI

நன்றி நண்பரே

பாலா said...

@Yoganathan.N

மிக்க நன்றி நண்பரே

Anonymous said...

என் அழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி பாஸ்!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் :)

வார்த்தை said...

//உளவியல் ரீதியாக பார்த்தால், எந்த ஒரு விவாதத்திலும் வெற்றி கிட்டுவதில்லை. ஒன்று சண்டையில் சென்று முடிகிறது. இல்லை விதண்டா வாதமாக மாறுகிறது.//

வெற்றி இருக்குங்க .... அது தான் "பப்ளிக்குட்டி ...."

"கோயில் மாட்ட" விட "சொறி நாய்"க்கு தான் "பப்ளிக்குட்டி ...." சுளுவா கிடைக்கும்னு எண்ணம் கொண்டதுங்க, இதுங்க.
அதுக்காகத்தான் சில எச்சல பொறுக்கிங்க எதுனா டாபிக்க தூக்கிகிட்டு பிளாக் பிளாக்கா போய் விவாதம்ங்கிற பேர்ல அலையுதுங்க ...

உங்கள் பிளாக்கில் உங்கள் கருத்தை எழுதுங்கள். வேறு ஒருவருடைய இடுகையின் கருத்துக்கு எதிர் கருத்து இருந்தால், அதை உங்கள் பதிவில் எழுதுங்கள். ஆனால், அதை அந்த இடுகையை எழுதியவருக்கு எதிர் இடுகை எழுதுவதை போல் எழுத வேண்டாம் . ஏனெனில் "இங்கே யாரும் புதிதாக ஒரு சித்தாந்தத்தையோ தியரியையோ எழுதுவதில்லை".

பொங்கல் வாழ்த்துக்கள்

(This comment is intended for you only. you may decide to retain or delete this comment, bala)

வார்த்தை said...

////கடந்த ஒரு வருடத்தில் எழுத்திலும், எண்ணத்திலும் சில முன்னேற்றங்கள் தென்படுகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே அளிக்கிறது.//

At the end of the day, this is what really matters. //
repeat...

எப்பூடி.. said...

/கடந்த ஒரு வருடத்தில் எழுத்திலும், எண்ணத்திலும் சில முன்னேற்றங்கள் தென்படுகின்றன//

இதை தொடர்ந்தும் மெயின்டேன் பண்ணுங்க, இங்க குழப்புரவங்க ஜாஸ்தி குழம்பிக்காதீங்க :-))))))

ம.தி.சுதா said...

தங்கள் வளர்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்

இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

பாலா said...

@Balaji saravana

பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே

பாலா said...

@வார்த்தை

உங்கள் வார்த்தைகள் உண்மையானவை. பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே...

பாலா said...

@எப்பூடி..

மிக்க நன்றி நண்பரே... பொங்கல் வாழ்த்துக்கள்

பாலா said...

@ம.தி.சுதா

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Prabu Krishna said...

வலைச்சரத்தில் என்னை அறிமுக படுத்திய தங்களுக்கு நன்றி நண்பரே.

Related Posts Plugin for WordPress, Blogger...