விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

இது விளம்பரம் அல்ல....

January 17, 2011

காவலனும் பொங்கல் கொண்டாடிய கதையும்....


வழக்கமாக பண்டிகை தினங்களில் தொலைக்காட்சிக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நான், இந்த முறை ஒரு சிறப்பு நிகழ்ச்சி கூட பார்க்கவில்லை. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள், சிறப்பு திரைப்படங்கள் எதுவுமே என்னை கவரவில்லை. நண்பர்களை சந்திப்பது, புதுப்படங்கள் பார்த்தது என்று பொங்கல் கழிந்து விட்டது

பொங்கல் திரைப்படங்கள்

டிஸ்க்: இது திரைப்பட விமர்சனம் அல்ல. அவற்றை பார்த்த போது என் மனதில் தோன்றியது. ஸ்பாய்லர் என்று கூட வைத்துக்கொள்ளலாம்.சிறுத்தை 

முதலில் காவலன் பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். போகி அன்று ரிலீஸ் ஆகாததால், சிறுத்தை பார்க்க சென்றேன். பொதுவாக எனக்கு தெலுங்கு மசாலா படங்கள் மீது கொஞ்சம் ஈடுபாடு உண்டு. விக்கிரமார்க்குடுவின் ரீமேக் என்றவுடன் இப்படித்தான் இருக்கும் என்று முடிவு கட்டி இருந்தேன். நான் எதிர்பார்த்ததை விட படம் சிறப்பாகவே இருந்தது. அதிலும் சந்தானம் புல் ஃபார்மில் இருக்கிறார். அவர் அடிக்கும் ஒன்லைனர்கள் மற்றும் கவுண்டர்களுக்கு திரை அரங்கில் ஓட்டு மொத்த கூட்டமும் சிரித்து சிரித்து களைத்து போனது. 


படத்தில் "லாஜிக் என்றால் கிலோ எவ்வளவு?" என்று கேட்டாலும், படத்தை ரசிக்க வைத்திருப்பதில்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பருத்திவீரன் சாயலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கார்த்தி வெளிவந்து கொண்டிருக்கிறார். தமன்னா ஒரு சில நேரங்களில் மட்டும் அழகாக இருக்கிறார். வில்லன்களை கொடூரமானவர்களாக காட்டுகிறேன் என்று மந்திரவாதி மாதிரியும் ராப்பிச்சைகாரன் மாதிரியும் காட்டி இருக்கிறார்கள். காமிரா மற்றும் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. வித்யாசாகர் எல்லா பாடல்களுக்கும் ஒரே பீட்டை வாசித்திருக்கிறார். எல்லா பாடல்களுமே "டங்கு..டக்கு...டங்கு..டக்கு" என்று ஒரே சத்தம். "ராக்கெட் ராஜா" பாடலும், "ரக்கம்மா ராக்கு" பாடலும் கொஞ்சமேனும் ரசிக்க வைக்கிறது. தியேட்டரில் பாடல்களை படத்தின் ஸிபீடு பிரேக்கர்களாகத்தான் பார்க்கிறார்கள். எங்கள் ஊரிலேயே ஒரு பாடாவதி தியேட்டரில் படம் வெளியாகி உள்ளது. அந்த தியேட்டரில் சமீபத்தில் எந்த படமும் ஓடி வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. அவர்களுக்கு சிறுத்தை கண்டிப்பாக மறுவாழ்வு தரும் என்பது மூன்றுநாட்களாக ஹவுஸ்புல்லாக ஓடுவதில் இருந்தே தெரிகிறது.

காவலன் 


பொங்கல் அன்று காலையில் காவலன் பார்க்கலாம் என்று தியேட்டருக்கு சென்றால், "பொட்டி வரலை!" என்று காவலன் (போலீஸ்காரர்) அனைவரையும் அடித்து விரட்டிக்கொண்டிருந்தார். சரி மதியம் 2.30 காட்சிக்கு சென்றால். அப்போதும் அதே கதை. ஆனால் ரசிகர் கூட்டம் கலையவில்லை. அதோ இதோ என்று 3.45க்கு படம் தொடங்கினார்கள். விஜய் ரசிகர்கள் காய்ந்து போய் இருக்கிறார்கள் என்று நன்றாக தெரிந்தது. முதல் பதினைந்து நிமிடங்களுக்கு வசனம் காதில் விழவில்லை. கண்டிப்பாக விஜய்க்கு இது ஒரு வித்தியாசமான படம்தான். ஆனால் விஜய்க்கு மட்டும்தான். 


பொதுவாக விஜய் படங்கள் மீது அவ்வளவாக ஈடுபாடு இல்லாவிட்டாலும் பல படங்களை ரசித்து பார்த்திருக்கிறேன். இதே பொங்கல் அன்று ஆழ்வார் பார்த்த கடுப்பில், போக்கிரியை ரசித்து பார்த்திருக்கிறேன். வேட்டைக்காரனில் இடைவேளை வரை கூட ரசிக்கும்படிதான் இருந்தது. படம் பார்க்கும்போது பத்து வருடங்களுக்கு முன்பு வந்த பூவெல்லாம் உன் வாசம் படம்தான் ஞாபகம் வந்தது. இந்த படத்தில் ரசிகர்களை திருப்தி படுத்தும் விதமாக ஏதும் இல்லாமல் ரசிகர்களையும், ஒரு சராசரி பொதுஜனம் ஏற்றுக்கொள்ளாத விதமாக கிளைமாகஸ் வைத்து மக்களையும் ஏமாற்றி விட்டார்கள். 

இந்த ஹேர்ஸ்டைலை பார்த்தவுடன் அசல் படத்தில் அஜித் ஹேர்ஸ்டைலை கலாய்த்தவர்கள்தான் ஞாபகத்துக்கு வந்தார்கள் 
காமெடி அவ்வளவாக எடுபடவில்லை. போன் பேசிக்கொண்டே பெண்கள் டாய்லெட்டில் நுழைவது மட்டும் கிச்சு கிச்சு மூட்டுகிறது. விஜய் இளமையாகவும், அசின் முதுமையாகவும் இருக்கிறார்கள். அவரது சித்திப்பெண் ஓகே. விஜய் பாடல் காட்சியிலும், கிளைமாக்சிலும் தேவை இல்லாமல் தன்னுடைய சிகை அலங்காரத்தை மாற்றி அமைத்திருக்கிறார். அவருக்கு பொருந்தவில்லை. ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. பாடல்கள் சுமார்தான். "யாரது..." பாடல் மட்டும் கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருக்கிறது. மற்றபடி காவலன் மகா ஹிட்டாக வாய்ப்பில்லை. ஆவரேஜ் வரிசையில்தான் சேரும். விஜய்யை பொறுத்தவரை முதலுக்கு மோசமில்லை.


ஒரு பயணமும் விபத்தும் 


மாட்டுப்பொங்கல் அன்று திருச்சியை சுற்றி உள்ள கோவில்களுக்கு சென்று வந்தோம். அதனால் அன்று முழுவதும் ஒரே சுத்தல்தான். மலைக்கோட்டையில் ஒரு பிரெஞ்சு குடும்பத்தினர் அனைவரது நெற்றியிலும் திருநீர் பட்டையும், அவர்கள் பிள்ளையார் என்று சொன்ன உச்சரிப்பும் வேடிக்கையாக இருந்தது. வரும் வழியில் மேலூர் அருகே நடு ரோடில் ஹைவே பேட்ரோல் வண்டி நின்று கொண்டிருந்தது. காவல்காரர் வண்டிகளை வேறு பாதையில் திருப்பி விட்டுக்கொண்டிருந்தார். யாரோ ஒரு சுமோகாரன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஐந்துபேரை அதிவேகமாக மோதி சிதறடித்து விட்டான். இத்தனைக்கும் அவர்கள் ஒன்றாக சென்றவர்கள் அல்ல. குறிப்பிட்ட இடைவெளியில் நடந்து சென்றவர்கள். 


வந்தவன் புல் மப்பில் இருந்திருக்க வேண்டும். இல்லை என்றால் வரிசையாக ஐந்து பேரை இடித்திருக்க மாட்டான். ஊர்மக்கள் ஒன்று கூடி சாலையை மறித்து விட்டார்கள் (இந்த இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டுகோள் விடுத்து மறுக்கப்பட்டதாம்). ஆகவே சிவகங்கை மாவட்டத்துக்குள் நுழைந்து சுற்றி விருதுநகர் வந்தோம். நாற்கர சாலை வந்ததில் இருந்து பயண நேரம் குறைந்து விட்டது. விபத்துக்களின் எண்ணிக்கையோ தாறுமாறாக உயர்ந்து விட்டது.

வலைச்சரம், கோவில்களுக்கு சென்றது என்று இந்த வருட பொங்கலும் வித்தியாசமான அனுபவமாகத்தான் இருந்தது. இந்த வலைப்பக்கத்தை தொடர்பவர்கள் 99 பேர். யார் அந்த நூறாவது நபர் என்று அறிய ஆவலாக உள்ளேன்.

பிகு: எங்கள் ஊரில் இருந்த மூன்று திரைஅரங்குகளை காவலன், சிறுத்தை மற்றும் இளைஞன் ஆக்கிரமித்துவிட்டதால் ஆடுகளம் ரிலீசாகவில்லை. 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

18 comments:

Madurai pandi said...

காவலன் நல்லா இல்லையா பாலா? எல்லாரும் நல்லா இருக்குறதா சொல்றாங்க!! நான் இன்னும் பொங்கல் படம் எதுவும் பார்க்கல!!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

பாலா said...

@Madurai pandi

என்னை படம் ஈர்க்கவில்லை. நான் மிகவும் உன்னிப்பாக எல்லாம் கவனிப்பது கிடையாது. ஓரளவிற்கு என்டர்டெய்ன் பண்ணினாலே போதும். ஆனால் படமே ஒரு மந்த கதியில் இயங்குவது போல இருக்கிறது.

"ராஜா" said...

சிறுத்தை இன்னும் பார்க்கவில்லை ... காவலன் எப்போதும் நூறு ரன்களுக்குள் சுருளும் அயர்லாந்து அணி எடுத்த இருநூறு ரன்கள் போல... அந்த அணியின் ரசிகர்கள் வேண்டுமானால் நல்ல ஆட்டம் என்று ரசிப்பார்கள் ... ஆனால் பொதுவானவர்களுக்கு அது மந்தமான ஆட்டமே...

குறிப்பாக இரண்டாம் பாதி சொல்வதர்க்கு ஒன்றுமே இல்லை ...

அசல் கெட்டப்பை வெண்காயம் என்று சொன்னவர்கள் இதை கரிச்சட்டி மண்டை என்றுதான் சொல்ல வேண்டும் ... இளைங்கன் படத்தில் வடிவேலு இதே விக்கோடு வருகிறார் என்று நினைக்கிறேன் .. அதர்க்கும் இதர்க்கும் வித்தியாசமே இல்லை

NKS.ஹாஜா மைதீன் said...

#வழக்கமாக பண்டிகை தினங்களில் தொலைக்காட்சிக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நான், இந்த முறை ஒரு சிறப்பு நிகழ்ச்சி கூட பார்க்கவில்லை.#

நல்லவிசயம்தான்......ஆமாம்..பண்டிகைக்கும் தொலைக்காட்சிக்கும் என்ன சம்பந்தம்....பண்டிகை நம் உறவினர்களோடும் ,நண்பர்களோடும் செலவிடும் நேரம் அல்லவா.....

கும்மாச்சி said...

நூறு நான் இல்லை பாஸ், பரவாயில்லை லேட்டா வந்தாலும்................வந்துட்டேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்லா தொகுத்திருக்கீங்க. இன்னும் எந்தப் படமும் பார்க்கவில்லை. நன்றி.

Philosophy Prabhakaran said...

// பொதுவாக எனக்கு தெலுங்கு மசாலா படங்கள் மீது கொஞ்சம் ஈடுபாடு உண்டு //

ஏன் இந்த கொலைவெறி...?

// இந்த ஹேர்ஸ்டைலை பார்த்தவுடன் அசல் படத்தில் அஜித் ஹேர்ஸ்டைலை கலாய்த்தவர்கள்தான் ஞாபகத்துக்கு வந்தார்கள் //

நீங்க யாருங்க... ஒண்ணுமே புரியல... ரெண்டு போரையும் கலாய்க்குறீங்க...

// இந்த வலைப்பக்கத்தை தொடர்பவர்கள் 99 பேர். யார் அந்த நூறாவது நபர் என்று அறிய ஆவலாக உள்ளேன். //

நூறாவது நபராக இணைந்திருப்பவர் எனது கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிய சுதன் சார் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்...

பாலா said...

@"ராஜா"

நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே.

//இளைங்கன் படத்தில் வடிவேலு இதே விக்கோடு வருகிறார் என்று நினைக்கிறேன்

:))

பாலா said...

@NKS.ஹாஜா மைதீன்

அதுவும் சரிதான். ஆனால் இப்போதெல்லாம் எல்லோருமே டிவியில்தானே பண்டிகையே கொண்டாடுகிறார்கள்.

பாலா said...

@கும்மாச்சி

பரவாயில்லை நண்பரே லேட்டஸ்டாதானே வந்திருக்கீங்க...

பாலா said...

@ச.செந்தில்வேலன் / S.Senthilvelan

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@Philosophy Prabhakaran

//ஏன் இந்த கொலைவெறி...?

நண்பரே பாலையா படங்களில்தான் கொஞ்சம் ஓவராக காட்சிகள் இருக்கும். மற்றபடி லாஜிக் இல்லாமல் பார்த்தால் பெரும்பாலான தெலுங்கு படங்கள் சுவாரசியமாகத்தான் இருக்கும்.

//நீங்க யாருங்க...

அபிமானம் என்பது வேறு. கிண்டல் செய்வது என்பது வேறு. எனக்கு அஜித் மீது அபிமானம் உண்டு. ஆனால் கலாய்ப்பது என்று வந்து விட்டால் பாரபட்சம் கிடையாது. தனக்கு பிடிக்காதவர்களை மட்டும்தான் கலாய்க்க வேண்டும் என்பது தவறுதானே?

பாலா said...

@Philosophy Prabhakaran

//நூறாவது நபராக இணைந்திருப்பவர் எனது கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிய சுதன் சார் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்...


அப்படியா மிக்க மகிழ்ச்சி.

Unknown said...

காவலன் உங்களுக்கும் பிடிக்கலையா, என்னோட பிரண்ட்ஸ் நிறைய பேருக்கும் பிடிக்கலைன்னு சொன்னாங்க, நான் இன்னும் பார்க்கலை, நல்லா இருக்குங்க

ஷர்புதீன் said...

i would like to talk with you, can you give me your number to my mail?

பாலா said...

@இரவு வானம்

மகா மட்டமான படம் என்று சொல்ல இயலாது. படம் ரசிகர்கள் சொல்வது போல ஆஹா ஓஹோ கிடையாது. ரொம்ப சுமார்தான்.

பாலா said...

@ஷர்புதீன்

we will talk in mail

பாலா said...

@ஷர்புதீன்

send me a mail

Related Posts Plugin for WordPress, Blogger...