விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

August 16, 2010

யார் இந்த பாலா?

இந்த பதிவுலகத்துக்கு வந்து நான் எழுதும் முதல் தொடர்பதிவு இது. என்னை மதித்து அழைத்த மதுமிதா அவர்களுக்கு நன்றி. அவரை நான் பின்தொடர்வது கிடையாது. பின்னூட்டம் இடுவது கிடையாது. ஆனால் அவரது பதிவுகளை தவறாமல் படிப்பேன். அவ்வளவுதான். ஆனால் என்னை கண்டுபிடித்து தொடர்பதிவு எழுத அழைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பாலா


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயர்தான் ஆனால் முழுப்பெயர் பாலசுப்பிரமணியன். சுருக்கமாக எல்லோரும் அழைப்பது பாலா. அதையே என் வலைப்பதிவுக்கும் வைத்துவிட்டேன்.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

வலைப்பதிவு தமிழில் இருப்பது எனக்கு ஒரு ஆண்டுக்கு முன்னால்தான் தெரியும். எனக்கு மனதில் தோன்றும் விஷயங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எப்போதுமே தோன்றும். சுருக்கமாக சொன்னால் ஓட்டைவாய். அதற்கு வழிவகுத்து கொடுத்தது பதிவுலகம். முதன்முதலில் படித்தது உண்மைத்தமிழன். பிறகு ஹாலிவுட்பாலா, கேபிள்சங்கர் என்று பட்டியல் நீண்டு விட்டது. எழுதுவதற்கு முன் ஆறுமாதம் நிறைய பதிவுகளை படிக்க மட்டுமே செய்தேன். பின் என் எழுதும் எண்ணத்தை நிறைவேற்றினேன்.


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நான் என் வலைப்பதிவு பிரபலமாக ஒன்றுமே செய்யவில்லை. தமிழிஷில் இணைத்ததை தவிர. பல பதிவுகளை படித்திருக்கிறேன். அதிகம் பின்னூட்டம் இடுவதில்லை. என் கருத்துடன் முரண்பட்டால் மட்டும் என் கருத்தை பின்னூட்டமாக இடுவேன்.தோனி சொல்ல மறந்த கதை என்ற பதிவு மிக பிரபலம் அடைந்தது. இதில் காமெடி என்னவென்றால் அதனை காபி செய்து பல பேர் தன பதிவில் போட்டு கொண்டார்கள்.நண்பர்கள் பலருக்கும் மின்னஞ்சல் அனுப்பினார்கள். அது எனக்கும் வந்தது. மற்றபடி ஒன்றும் செய்ததில்லை. அப்பப்ப அஜித் விஜய் என்று எழுதி நிறைய ஓட்டு வாங்கியதுண்டு.  ஆமா என் வலைப்பதிவு எப்ப பிரபலம் ஆச்சு?


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

எனக்கு கற்பனையும் கிடையாது, தட்டிவிட குதிரையும் கிடையாது. நான் எழுதிய எல்லாமே என் சொந்த கருத்துக்கள். அவற்றை சொல்லும்போது என் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களையும் சொல்லி இருக்கிறேன். விளைவு பெரிதாக எதுவும் இல்லை. ஒருவேளை நான் சொல்வது எதார்த்தமாக இருப்பதாலோ என்னவோ?


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இரண்டுமே இல்லை. எனக்கு பொழுதுபோக்க நிறைய வழிகள் இருக்கின்றன. அதே போல பணம் சம்பாதிக்கவும் நிறைய வழிகள் இருக்கின்றன. பதிவு எழுதுவது ஒரு மனநிறைவு, அவ்வளவுதான்.


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

முதலில் அவசரப்பட்டு ஒரு ஆண்டுக்கு முன்னால் ஒரு பதிவு தொடங்கினேன். பின் அதை கண்டுகொள்ளவே இல்லை. தற்போது இருப்பது ஒன்றே ஒன்றுதான்.


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம் என்பது நம் கருத்துக்கு மாற்று கருத்து தெரிவிக்கும் அனைவரிடமும் வரும். உதாரணமாக கார்க்கி தலயை கிண்டல் பண்ணும்போதெல்லாம் வரும், கடவுள் மறுப்பாளர்கள் கடவுளை திட்டும் போதெல்லாம் வரும். ஆனால் வன்மம் யார் மீதும் வந்ததில்லை. பதிவுலகம் என்றில்லை பொதுவாகவே அப்படித்தான்.

பொறாமை நிறைய பேரிடம் இருக்கிறது. ஹாலிவுட் பாலா, பட்டாப்பட்டி, நீ கேளேன் ஜெட்லி ஆகியோரின் பதிவை படிக்கும்போது அவர்களின் ஸ்டைல், நக்கல் கலந்த பதில் கண்டு பொறாமை வரும். அவர்களைப்போல் நாமும் எழுதவேண்டும் என்ற உத்வேகத்தை கொடுக்கும்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதல் பின்னூட்டம் Moulefrite என்பவர் இட்டது. தொடர்பு கொண்டது, பாராட்டியது, பாலோயர் ஆனது எல்லாமே ராஜாதான்

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன் பதிவுகளின் வாயிலாக.


இந்த பதிவை தொடர நான் அழைப்பவர்கள்

ராஜாவின் பார்வை - ராஜா
எப்பூடி - ஜீவதர்ஷன்
Phantom மோகன்
அக்கம்பக்கம் - அமுதா கிருஷ்ணா


5 comments:

எப்பூடி.. said...

என்னை பதிவெழுத அழைத்தமைக்கு நன்றி, முயற்சி செய்கின்றேன்.

"ராஜா" said...

நன்றி தல என்னை அழைத்ததிற்கு ... உடனே எழுதி விடுகிறேன்

Madumitha said...

நன்றி பாலா.
தொடருங்கள் உங்கள் பதிவுகளை.

அமுதா கிருஷ்ணா said...

பாலா என்னை தொடர் பதிவு எழுத அழைத்ததற்கு நன்றி.சில நாட்களில் எழுதுகிறேன்.

mohamedali jinnah said...

எனக்கு மிகவும் பிடித்த "கோட்ஸ்"பழமொழி.....
"மார்க்குக்காக மட்டுமே படிக்கிற படிப்பும், ஹிட்டுக்காக மட்டுமே எழுதுற பதிவும், எதுக்கும் உதவப்போறதில்லை."

ரொம்ப நல்லாருக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...