விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

August 10, 2010

எந்திரனும், சில எதிர்வினைகளும்


எந்திரன் படம் வரும் வரை அதை பற்றி பேசக்கூடாது என்று எண்ணி இருந்தேன். ஆனால் விதி. பேசும்படி ஆகி விட்டது. இருந்தாலும் நான் பேசப்போவது எந்திரன் பற்றி அல்ல. ரஜினி பற்றி. சுமார் ஒரு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நெய்வேலி நோக்கி காவிரி பிரச்சனைக்காக நடிகர் சங்கமே திரண்டு ஒரு ஊர்வலம் நடத்தியது. இதில் ரஜினி கலந்து கொள்ளவில்லை. மாறாக சென்னையில் இருந்தே போராடலாமே என்று உண்ணாவிரதம் இருந்தார். கட்சி வித்தியாசம் இன்றி அனைவரும் வந்து ஆதரவு தெரிவித்தனர் என்பது வேறு விஷயம். நெய்வேலி ஊர்வலம் நடந்து முடிந்த பிறகு, பாரதிராஜா தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசியவர்கள் எல்லாம் காவிரி பிரச்சனை பற்றி பேசியதை விட, ரஜினி அதில் கலந்து கொள்ளாததை பற்றிதான் பேசினார்கள். அவர்கள் பேசியதில் தமிழ்பற்றோ, பொது நலமோ இருந்ததாக தெரியவில்லை. மாறாக ரஜினி என்பவரை திட்டுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்ற முனைப்பே தெரிந்தது. நடக்கும் நிகழ்ச்சியை தான் பெரிய ஆள் என்று காட்டி கொள்ளவும் பயன்படுத்திக்கொண்டனர். இதில் வடிவேலுவும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகன், அவன் நடிகன் என்பதையும் தாண்டி மக்களால் உயர்வாக எண்ணப்படுகிறானே என்ற வயிற்றெரிச்சல், அவர்களை இப்படி எல்லாம் பேச வைத்தது. அப்போது அமீர் ஒரு பேட்டியில் கூறினார். "எதற்கெடுத்தாலும் ரஜினியையே கூப்பிடுகிறீர்களே? அவர் உங்களுக்கு என்ன பாவம் செய்தார்? உங்கள் சொந்த ஊரை எதிர்க்க சொன்னால் எதிர்ப்பதற்கு யாருக்குதான் மனசு வரும்?".




ஊருக்கு ஒதுக்கு புறமாக கட்டப்பட்ட எதாவது ஒரு பங்களாவின் வழியாக சென்றிருப்பீர்கள். நன்றாக கவனித்திருந்தால் பெரும்பாலான பங்களாக்களின் கண்ணாடி ஜன்னல்கள் கல்வீசி தாக்கப்பட்டிருக்கும். இது மனிதனின் ஈன புத்தியை காட்டும் செயல். அதாவது ஒருவன் சொந்த உழைப்பில் கூட ஒரு பங்களா கட்டி விட கூடாது. அவன் வீட்டு ஜன்னல் கண்ணாடியில் ஒரு கல்லையாவது எறிந்து களங்கம் விளைவித்து விடவேண்டும். இப்படித்தான் ரஜினி என்னும் மனிதனை நோக்கி கற்கள் எறியப்படுகின்றன. 

ரஜினி என்பவர் பிறக்கும்போதே தனவானாக பிறக்கவில்லை. அவர் பணக்காரனாக கள்ள நோட்டு அடிக்கவில்லை. ஊழல் செய்தோ வரி ஏய்ப்பு செய்தோ பிழைக்கவில்லை. தனக்கு தெரிந்த ஒரு தொழிலை செய்கிறார். இதில் அவரை குற்றம் சாட்ட என்ன இருக்கிறது? என்னமோ ரஜினி என்னும் ஒருவராலேயே இந்திய பொருளாதாரம் சரிந்தது போலவும், இளைய தலைமுறையினர் எல்லாம் தடம் மாறி போய்விட்டது போலவும் பேசுகிறார்கள். சொல்லப்போனால் தமிழ் என்று ஒரு மொழி உண்டு என்று பல நாட்டு மக்களுக்கு அறிய செய்த பெருமை ரஜினியை சாரும். ரஜினி படம் பார்க்கவேண்டும், ரஜினியிடம் பேச வேண்டும் என்பதற்காகவே தமிழ் கற்ற ஜப்பானியர்கள் உண்டு. அவர்கள் கன்னடம் கற்கவில்லை. இதை இந்த மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட செய்ததில்லை. 


இதில் பணம் வந்ததும் ரஜினி தடம் மாறி விட்டாராம். ஆமாம் அவர் மட்டும் எம்ஜியார் மாதிரி இருந்திருந்தால் ஒரு பயலும் அவருக்கு எதிராக எழுதி இருக்கமாட்டான். எவனும் பேசி இருக்கமாட்டான். எந்திரன் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல். அதனை வரவேற்க மனமில்லாமல், வயிற்றெரிச்சலில் புகைந்து வாய்க்கு வந்ததை புலம்பி தள்ளி கொண்டிருக்கிறார்கள். இந்த வயசுல இவருக்கு இது தேவையா என்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் எல்லாம் ஐம்பதொம்போது வயசுலேயே தூக்கில் தொங்கி விடுவார்கள். இல்லை இவர்கள் பரம்பரையில் எல்லோரும் அப்படித்தான் போலும். எந்த ஒரு உழைப்பாளியும் தான் உழைப்பில் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதிலும், அதுபற்றி பெருமை பட கூறுவதிலும் என்ன தவறு இருக்கிறது?


இதில் புதுசா ஒரு கும்பல் படத்தில் சண்டை காட்சிகளில் ஈடுபடுவது ரஜினியே அல்ல. அலெக்ஸ் மார்டின் எனும் ஒருவர். ரஜினி மக்களை ஏமாற்றுகிறார் என்று கதறுகின்றார்கள். கஷ்டப்படுவது ஒருவன், கைத்தட்டல் வாங்குவது ஒருவன் என்ற ஜால்ரா பின்னூட்டம் வேறு. கதாநாயகர்கள் டூப் போட்டு நடிப்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குழந்தைக்கு கூட தெரியும். ஆனானப்பட்ட புருஸ்லீக்கே ஜாக்கிசான் என்னும் ஒரு டூப் நடிகர் தேவைப்பட்டார். புருஸ்லீ மீதான பொறாமையில் பொங்கிய பலர் இதனை ஆதாரத்துடன் வெளியிட்டனர். இதனை புருஸ்லீ மறுக்கவில்லை. ஜாக்கிசானும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே போல ஜாக்கிசானும் டூப் நடிகரை பயன்படுத்துவார். இதனை கேலி செய்து ஜெட்லி நடித்த ஒரு படத்தில் ஜாக்கி என்று ஒரு கோழை சினிமா நடிகர் பாத்திரமே உருவாக்கப்பட்டது. இதனை செய்தவர்கள்தான் காணாமல் போனார்கள். ஜாக்கிசான் அல்ல. ஏனென்றால் செய்தவர்கள் எண்ணத்தில்தான் விஷம் உள்ளது. ஜாக்கிசான் எண்ணத்தில் அல்ல. டூப் போட்டு நடிப்பதை மேடையிலேயே ரஜினி ஒப்புக்கொண்டார். கஷ்டப்படுவது ஒருவர். ஆனால் பெயர் எல்லாம் எனக்கு கிடைக்கிறது என்று.


சமுதாய நோக்கம் என்று சால்ஜாப்பு சொல்லி இதுமாதிரியான செயல்களில் ஈடுபட்டு வரும் பொதுநலவிரும்பிகள் சமுதாயத்துக்காக ஒரு துரும்பை கிள்ளி போட்டிருப்பார்களா என்பது சந்தேகமே. எந்திரன் படத்தை தயாரிக்க செலவழித்த பணத்தை வைத்து ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கலாமாம். ஏனென்றால் இவர்கள் மாதம் வாங்கும் சம்பளத்தில் தன் உணவுக்கு போக மீதியை எல்லாம் தானம் செய்து விடுவார்கள். சத்தமில்லாமல் ரஜினி செய்து வரும் நல்ல காரியங்கள் எத்தனை என்பது யாரும் அறியாதது. இந்த பதிவு என் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காகவே எழுதப்பட்டது. இதனால் எதுவும் மாறப்போவதும் இல்லை. உங்கள் பார்வையின் படி, ரஜினி திருந்தப்போவதும் இல்லை. வீணாக வயிற்றெரிச்சல் படாமல் (ரஜினி போல் இல்லாமல் நீங்களாவது) எதாவது உருப்படியான காரியங்களில் ஈடுபடுங்கள். 


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

22 comments:

Rajmohan said...

i read your articles about rajini. it is very realistic and super.

R.Gopi said...

பாலா......

மிக சரியாக எழுதப்பட்ட கட்டுரை, நல்ல அலசல்.... சரியான நேரத்தில் பதிலடி கொடுக்கும் வண்ணம் உள்ளது...

ரஜினியின் நல்ல மனசை யாரேனும் பின்பற்ற சொல்லுங்கள்... அதை செய்தால், ஊரே நல்லவர்களால் நிரம்பிவிடும்...

அதை விடுத்து, ஏதேதோ சொல்வது இந்த வயித்தெரிச்சல் கும்பலின் இயலாமையை தான் குறிக்கிறது...

அடுத்தவன் வாழ்வதை பார்த்து என்ன பொறாமை...

அட மூடர்களே.... நீங்கள் செய்யும் தொழிலில் நேர்மையாக இருந்து பாருங்களேன்... உங்களில் சிலர் ரஜினியை போல் நல்ல நிலையை அடையலாம்....

முயற்சியுங்கள்.....

அடுத்தவரை பாராட்ட பெரிய மனது வேண்டும்... அது குறை கூறுபவர்களுக்கு என்றுமே இருந்ததில்லை.... இருப்பினும், குறைந்த பட்சம், தூற்றாமலாவது இருந்து பாருங்களேன்...

வாழ்வில் நீங்கள் எதையும் இழந்து விட மாட்டீர்கள்....

Srinivas said...

Thalaivar Eppodhum Edhilum Right !!!!!!!!

Prasanna said...

Simply superb article sir...

marmayogi, madhavaraj pondravarkalukku sammatti adiyana article....

very happy to read this article...


Thanks a lot

பருப்பு (a) Phantom Mohan said...

சூரியனைப் பார்த்து நாய் குலைக்குது.
காய்ச்ச மரத்தில தான் கல்லடி படும்.

வேறுன்னுமில்லை வயித்தெரிச்சல், என்னடா இவருக்கு இவ்வளவு கூட்டமா என்று! இன்னொன்னு ரஜினிய வச்சு ஹிட் ரேட் கூட்டலாம், வேறென்ன பண்ண முடியும் இவங்களால? எழுதினவனங்க எல்லாரும் அவன் குடும்பத்தோட எந்திரன் பார்ப்பாங்க, இது உண்மை. ரஜினி ஒரு entertainer , உன்ன ஒரு மூணு மணி நேரம் entertain பண்ணுவாரு, என்ன மாதிரி ஆளுங்களை இருபது வருசமா entertain பண்றாரு, அவ்ளோ தான்.

சொல்லமுடியாது நாளைக்கே ஒரு பதிவு போடுவாங்க, திருப்பதி கோயிலுக்கு லட்சக்கனக்கானா கோடி சொத்து இருக்காம்ம்ன்னு!!!!!!!!!! எல்லாம் வயித்தெரிச்சல்....யார் யார் மேல பொறாமை படணும்ன்னு ஒரு வெவஸ்தையே கிடையாது.

பருப்பு (a) Phantom Mohan said...

பதிவு சூப்பர்!

இருந்தாலும் இவனுங்களுக்கு எல்லாம் பதில் சொல்லி அவங்களை பெரிய ஆள் ஆக்காதீங்க! எதுக்கு இவங்களுக்கு நம்மளே விளம்பரம் குடுக்கணும்.

எல் கே said...

kalakkal ..
//அவங்களை பெரிய ஆள் ஆக்காதீங்க! எதுக்கு இவங்களுக்கு நம்மளே விளம்பரம் குடுக்கணும்//

repeatt

Mohamed Faaique said...

SUPERB.... CARRY ON

எப்பூடி.. said...

இது சம்பந்தமாக நான் ஒரு பதிவு எழுதிக்கொண்டிருப்பதால் அதை எழுதி முடித்தபின்னர் உங்கள் ப்பதிவை வாசிக்கின்றேன்,லேட்டா வாறன்.

Kannan said...

Nethiyadi thalaivaaaa

"ராஜா" said...

// சொல்லப்போனால் தமிழ் என்று ஒரு மொழி உண்டு என்று பல நாட்டு மக்களுக்கு அறிய செய்த பெருமை ரஜினியை சாரும்

செம்மொழியான தமிழ் மொழியாம்...

அப்ப கலைஞர் மாநாடு நடத்துனதுக்கு பதிலா அவரோட கதை வசனத்துல ரஜினிய வச்சி ஒரு படம் பண்ணிருக்கலாம் ...

எந்திரனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் சொல்லிகிறேன் தல

சேலம் தேவா said...

வித்யாசமான கண்ணோட்டம்!!

பஹ்ரைன் பாபா said...

ஒரு மாங்கொட்ட பதிவர், நான் முன்னாடி ரஜினி ரசிகனாக்கும்.. ஆனா இப்போ வேற ஒருத்தனுக்கு.. அதனால ரஜினி பண்றதெல்லாம் தப்புன்னு ஒரு பதிவு போட்ருக்கு.. இதெல்லாம் என்னிக்கு உறுப்புட போகுதோ..
பாலா..
உங்க பதிவுக்கு நன்றி..

"ராஜா" said...

அந்த மானங்கெட்ட பதிவர் நாந்தாங்கோ .... ஆமா பாஸ் கரெக்ட்டா சொல்லிடீங்க நான் உருப்படாத பையங்கிரத ... நீங்களாவது புள்ளை குட்டிகளோட மஜாவா சந்தோஷமா இருங்க.... அப்புறம் உங்களுக்கு எதையுமே முழுசா படிச்சி புரிஞ்சிக்க தெரியாதா???as like ur comments எல்லாத்துளையும் அரைகுரைதானா???

எப்பூடி.. said...

அருமையான அலசல், சல்லிக் காசுக்கு கூட பெறுமதியில்லாத நாய்கள் குரைப்பது செல்லாது என்று தெரிந்திருப்பினும் மனம் கோபப்படாமல் இருக்கமாட்டேங்கிது.

Unknown said...

//தமிழ் என்று ஒரு மொழி உண்டு என்று பல நாட்டு மக்களுக்கு அறிய செய்த பெருமை ரஜினியை சாரும்//

சரியான நெத்தியடி தல !

இன்னமும் கூட சொல்லலாம்
தமிழ் நாடுன்னு ஒரு மாநிலம் இந்தியாவில் உண்டு. ஏன் இந்தியா என்று ஒரு தேசம் உலகத்தில் உண்டுன்னு பல நாட்டு மக்களுக்கு அறிய செய்த பெருமை ரஜினியையே சாரும்
இதைச் சொன்னாலும் இவய்ங்களுக்கு
ஒண்ணும் புரிய போவதில்லே

ச்ச்சும்மா லூஸ்லே வுடுங்க அப்பு!

Unknown said...

பின்னோட்ட அறிதலுக்கு

Bala said...

@Rajmohan

Thank you very much for your valuable comments

@R.Gopi

முற்றிலும் உண்மை நண்பரே... கருத்துக்கு நன்றி

@Srinivas

absolutely, Thank you

@Prasanna

I didnot intend to hurt anyone. But when it comes to Rajini, We have to reply. Thank you

@ Phantom Mohan

அதனாலதான் யார் பெயரையும் எழுதவில்லை. நன்றி தலைவரே...

@LK

வருகைக்கு நன்றி நண்பரே...

Bala said...

@ Mohamed Faaique

With all your support. Thank you

@ Kannan

நன்றி தலைவரே...

@சேலம் தேவா

எந்த வித உள்நோக்கமும் இல்லாத கண்ணோட்டம். நன்றி நண்பரே...

@ பஹ்ரைன் பாபா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

@ எப்பூடி..
//மனம் கோபப்படாமல் இருக்கமாட்டேங்கிது.

ரிப்பீட்டு....

@ "ராஜா"

//அப்ப கலைஞர் மாநாடு நடத்துனதுக்கு பதிலா அவரோட கதை வசனத்துல ரஜினிய வச்சி ஒரு படம் பண்ணிருக்கலாம் ...

நீங்கள் கிண்டலுக்கு சொல்கிறீர்களா என்று தெரியவில்லை. ஆனால் ஜப்பானியர்கள் தமிழ் கற்றது உண்மை. அதை அவர்கள் வாயாலேயே சொன்னார்கள் ஒரு டிவி நிகழ்ச்சியில்.

@ Karikal@ன் - கரிகாலன்

நண்பரே உங்கள் கருத்துரைக்கு பதில் உங்களுக்கு முன்பாக எப்பூடி அவர்கள் இட்ட கருத்திலேயே இருக்கிறது. வருகைக்கு நன்றி...

damildumil said...

எச்சி கையால காக்கா ஓட்டாத பயலுக எல்லாம் ரஜினிக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டானுங்க. உண்டியல் குலுக்கி கட்சி வளர்த்தவங்களோட குடும்பம் குட்டியெல்லாம் எப்படிடா பின்ன அமெரிக்கால இருக்காங்க. கேட்டா மூதேவி, சீனாவை பாரு ரஷ்யாவை பாருன்னு வாயில வண்டி ஓட்டுவாங்க. டேய் அவங்க எல்லாம் எப்போவோ மாறிட்டாங்கடா, நீங்க தான் இன்னும் குண்டுசட்டியில குப்பற படுத்துட்டு இருக்கீங்கன்னா செவிடான்னு தெரியல அவங்க காதுல விழவே மாட்டேங்குது

Yoganathan.N said...

எந்திரனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் :)

கிரி said...

தலைவா பின்னிட்டீங்க! நாங்களும் அப்புறமா பின்னுவோம் ;-)

Related Posts Plugin for WordPress, Blogger...