நடிப்பு என்றால் ஒவ்வொரு தமிழனுக்கும் ஞாபகம் வருவது சிவாஜி. கிரிக்கெட் என்றால் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஞாபகம் வருவது சச்சின் டெண்டுல்கர்தான். கிரிக்கெட் விளையாட தொடங்கும் ஒவ்வொரு சிறுவனும் முதலில் நினைப்பது டெண்டுல்கரைத்தான். கிரிக்கெட்டை பொழுதுபோக்காக கொண்டவர் பலர். தொழிலாக கொண்டவர் பலர். வாழ்க்கையாக கொண்டவர் சிலர். கிரிக்கெட்டை உயிர் மூச்சாக கொண்டவர் ஒரே ஒருவர்தான். அவர் பெயர் சச்சின் டெண்டுல்கர். இன்று தன்னுடைய 37 ஆவது வயதை பூர்த்தி செய்திருக்கும் சச்சின் அவர்களை நினைத்து பார்க்கும் பொது சில வார்த்தைகள் தோன்றின. கவிதை என்று சொல்ல முடியாது. வசனம் என்றும் சொல்ல முடியாது. என் மனதில் தோன்றியவை அவ்வளவுதான்.
சாதனைகள் படைக்க ஒவ்வொரு வீரனும் விரும்புவான்.
இன்று நீ படைக்க சாதனைகள் விரும்புகின்றன...
எல்லோருக்கும் வயதை ஏறு முகத்தில் படைத்த கடவுள்,
உனக்கு மட்டும் இறங்கு முகத்தில் அமைத்து விட்டானோ.
வெற்றிகளை நீ துரத்துவதில்லை, வெற்றிகள் தான் உன்னை துரத்துகிறது.
புகழை நீ சுமப்பதில்லை, புகழ் உன்னை சுமக்கிறது,
உன்னிடம் கனமான மட்டை உண்டு, கனமாக மண்டை இல்லை.
மரம் பேசுமா? உன் கையில் இருந்தால் பேசுகிறதே?
விமர்சனங்களுக்கு நீயா பதில் சொல்கிறாய்? உன் மட்டைதானே சொல்கிறது?
சச்சினை பற்றி மற்ற கிரிக்கெட் வீரர்கள் சொன்னவை........
சச்சினை பற்றி மற்ற கிரிக்கெட் வீரர்கள் சொன்னவை........
சச்சினுடன் தோற்ப்பது கூட வெற்றிதான் - ஸ்டீவ் வாக்
சச்சினுக்கு ஹெல்மெட் அணிந்துதான் பந்து வீசுவேன் - லில்லி
சச்சினின் சாதனைகள் எழுதப்பட்ட விதி. மாற்ற இயலாது - பேரி ரிச்சர்ட்ஸ்
நான் கடவுளை பார்த்திருக்கிறேன். அவர் இந்திய அணியில் விளையாடுகிறார் - ஹெய்டன்
சச்சின் அடுத்து இறங்குகிறார் என்றால், ஒரு விக்கெட் விழுவதை கூட இந்தியர்கள் கண்டுகொள்வதில்லை - ஷேன் வார்னே
நீங்கள் நன்றாக பந்து வீசினால் அவர் போர் அடிப்பார், மோசமாக வீசினால் சிக்சர் அடிப்பார் - ஷேன் வார்னே
எனக்கு மிகவும் பிடித்த எதிரி சச்சின் - ஆலன் டொனால்ட்
அவர் ஒரு சரித்திரம், இத்தனை வருடங்களில் அவரின் வேகம் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை - கங்குலி
இவரைப்போல கொஞ்சம் கூட தலைகனம் இல்லாத வீரரை நான் பார்த்ததே இல்லை - இன்சமாம் உல் ஹக்.
அவர் கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக்கை கொடுத்தால் கூட அடிப்பார் - வக்கார் யூனிஸ்
இவ்வாறு எல்லோரும் அவரை புகழ்ந்து தள்ளி விட்டார்கள். நான் என்ன சொல்ல, சச்சின் அவர்களே
என்றும் மாறாத
உடல் ஆரோக்கியத்துடன்,
மன அமைதியுடன்,
இன்று போல் என்றும் வாழ்க!!!!
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க....
5 comments:
உங்கள் பதிவை 4தமிழ்மீடியாவில் மீள் பிரசுரம் செய்துள்ளோம்.
Happy Bday Sachin
கூலிங் கிளாஸ் போட்டுட்டு புல்லு கூட புடுங்க முடியாது .... ஆனா கிரிக்கெட் வெளையாட முடியும்... ஒரு கேவலமான கேம் அது.... இந்தியாவோட எதிர்காலத்த அழிக்கற ஒரு கேம் அது .. ப்ளீஸ் அதுக்கு சப்போர்ட் பண்ணாதிங்க.
//கூலிங் கிளாஸ் போட்டுட்டு புல்லு கூட புடுங்க முடியாது ....
நீங்க புடிங்கி பாத்துருக்கீங்களா? இம்புட்டு தெளிவா சொல்லுறீங்க?
//ஆனா கிரிக்கெட் வெளையாட முடியும்.
கண்டுபிடிச்சிட்டாரு கோலம்பஷ்ஷு.... அடுத்த நோபல் பரிசு உங்களுக்குத்தான்...
// இந்தியாவோட எதிர்காலத்த அழிக்கற ஒரு கேம் அது
ஆமா இப்ப நம்ம காலம் ரொம்ப வளமா இருக்கு ... கிரிக்கெட் விளையாடி அத அழிக்க போறாங்கே... போங்க சார் வெளையாட்ட வெளையாட்டா பாருங்க
Post a Comment