விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

April 16, 2010

இதெல்லாம் ஒரு பொழப்பா...



இதெல்லாம் ஒரு பொழப்பா?


இந்த வார்த்தையை நாம் எப்போதெல்லாம் பயன் படுத்துவோம்? இப்போது இது பரவலாக கிண்டலுக்காக பயன்படுத்தபட்டாலும், ஒருவரை அவமானப்படுத்த இதை விட வேறு ஒரு கேவலமான சொல் கிடையாது. பொதுவாக கீழ்த்தரமான செயல்கள் செய்து வாழ்பவர்களை இப்படி சொல்வது உண்டு. நாம் வாழ்க்கையில் பல்வேறு மனிதர்களை சந்திக்கிறோம், பல செய்திகளை கேள்வி படுகிறோம். சிலரை மட்டுமே இந்த வார்த்தையால் திட்டுவோம். அப்படி யாரை எல்லாம் சமீபத்தில் திட்டி இருக்கிறோம் என்று உட்கார்ந்து யோசித்ததில் சில ஞாபகம் வந்தன. பெரும்பாலும் அண்மை கால நிகழ்ச்சியாகவே இருக்கின்றன. 


நான் எந்த அமைப்பையும் தனிப்பட்ட முறையில் எதிர்ப்பவன் அல்ல. ஆனால் இங்கு இடம்பெறும் சில விஷயங்கள் அப்படி அமைந்தது விடுகிறது என்ன செய்ய. 

1. முன்பெல்லாம் தன்னுடைய திரைப்படம் ஓடவில்லை என்றால் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அந்த படத்தை சார்ந்தவர்களுக்கு இருந்தது. ஆனால் இன்றோ நிலைமை அப்படி இல்லை. படம் படு மொக்கையாக இருந்தால் கூட, ஆஹா வெற்றி, அய்யயோ வெற்றி,சத்தியமா வெற்றி என்று கூப்பாடு போடுகிறார்கள். தியேட்டருக்கு சென்று ஏற்கனவே கடுப்பில் இருக்கும் பார்வையாளர்களை மேலும் கடுப்பாக்குகிறார்கள். படத்தின் வெற்றி பற்றி அறிய படம் வெளி ஆகி சிறிது காலம் ஆகும். ஆனால் சமீபத்தில் ஒரு படம் வெளியாகி நான்கே நாளில் வெற்றி விழா கொண்டாடியது. இதன் மூலம் மக்கள் அந்த நிறுவனத்தின் மீது, நடிகர்கள் மீது நம்பிக்கை இழந்து விடுகிறார்கள். இப்படி கூப்பாடு போட்டு உங்க படத்த விற்கிறீர்களே உங்களுக்கும் பிளாட்பாரத்தில் புது ஜட்டி பத்து ரூபா என்று கூவி விற்பவனுக்கும் என்ன வித்தியாசம். இதெல்லாம் ஒரு பொழப்பா?


2. நாம் நாளிதழ்களில் எல்லாம் படிப்போம் 65 வயது முதியவர் கின்னஸ் சாதனை என்று. அப்போதெல்லாம் நமக்கு புல்லரித்து போகும். ஆனால் 87 வயது முதியவர் சத்தமில்லாமல் சாதனை ஒன்றை செய்துவருகிறார். ஆம் எந்த ஒரு மனிதனும் தன் வாழ்நாளில் இத்தனை விருதுகள், பாராட்டுவிழாக்கள் ஆகியவற்றை பெற்றிருக்க முடியாது. இதற்கு சாதி மத பேதம் எல்லாம் கிடையாது. இது உண்மையிலேயே ஒரு சாதனைதான். சரி இதெல்லாம் தேவைதானா? நாட்டில் ஆயிரக்கணக்கான பிரச்சனைகள் இருக்கும்போது, மக்கள் பணத்தை விழா கொண்டாடவும், விருது வழங்கவும் செலவிடுவது எந்த வகையில் நியாயம்? அயராது உழைத்து நாட்டை சுபிட்சம் ஆக்கிவிட்டதாலோ என்னவோ படப்பிடிப்பு, கிரிக்கெட் ஆட்டம் என்று பொழுது போக்குகிறார். நடக்க இயலாத போதும் சக்கர நாற்காலியில் வந்தேனும் முதல்வர் நாற்காலியில் அமர்வேன் என்று அடம்பிடிப்பது காலம் கடந்தும் அவரின் பதவி வெறியையே காட்டுகிறது. பதவியை துடிப்புள்ள உங்கள் இளவல்களுக்கு கொடுத்துவிட்டு கவுரவ ஆலோசகராக இருந்து செயல் படலாமே? இதெல்லாம் விட்டு விட்டு, நாற்காலியை அட்டை போல ஒட்டிக்கொண்டு, வேளைக்கொரு விழா, விருது என்று தன்னை தானே வருடிக்கொள்வதை பார்க்கும் போது கேட்க தோன்றுகிறது, இதெல்லாம்...(அவரின் பதவி, வயது காரணமாக வரியை முடிக்கவில்லை).

3. இது பதிவுலகத்தில் நடக்கும் ஒரு கேவலமான பொழப்பு. ஒரு உலக மகா நடிகரை பற்றி கிண்டலாக நாலு வார்த்தை பதிவிட்டு விட்டால் போதும். உடனே நல்ல பிள்ளை மாதிரி அதற்க்கு கண்டனம் தெரிவித்து பின்னூட்டம் இடுவது. தன்னை ஜென்டில் மேன் என்று தனக்கு இருக்கும் கோடானு கோடி பாலோயர்கள், குறிப்பாக பெண்கள் நினைக்கவேண்டும் என்று இந்த ஆக்டிங். பின் சப்தம் இல்லாமல் தன்னுடைய இன்னொரு வலைப்பூ(இது பினாமி பெயரில் நடத்த படுவது) முகவரியில் வந்து கெட்ட கெட்ட வார்த்தைகளில் பின்னூட்டமிடுவது. இது உங்கள் மீது மட்டும் அல்ல அந்த நடிகர் மீதும் வெறுப்பை ஏற்படுத்துகிறது. வெளிஉலகில் அப்பாவி மாதிரி இரட்டை வேடம் போடுவதால்தான் அந்த நடிகரை பலருக்கு பிடிக்கவில்லை என்று உங்களுக்கு தெரியாதா? இப்படி இரட்டை வேடம் போடுவதால் உங்களுக்கு என்ன லாபம்? இதெல்லாம் ஒரு பொழப்பா?

4. சத்தியமாக எனக்கு பின் நவீனத்துவம், நுண்ணரசியல் இவற்றின் அர்த்தம் தெரியவில்லை. தெரிந்து கொண்டு ஞானி ஆகி சாநி அடி வாங்க விருப்பம் இல்லை. இதுவும் பதிவுலகம் பற்றிதான். சில அதிபுத்திசாலிகள் மாற்று சிந்தனை என்று எண்ணிக்கொண்டு, கேனத்தனமாக எழுதி வாங்கி கட்டிகொள்வார்கள். அவர்களை அதிபுத்திசாலிகள் என்று சொன்னதன் காரணம் அவர்கள் பதிவுக்கு வைக்கும் தலைப்பு மற்றும் எழுதும் விஷயம். எல்லோரும் வாய் வழியே சாப்பிடவேண்டும் என்று சொன்னால் அப்படி ஏன் செய்ய வேண்டும் என்று மாற்று சிந்தனை உடையவர்கள். இவர்களுக்கு எதையாவது திட்டிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லை என்றால் சோறு இறங்காது. ஒரு சின்ன விஷயத்தை கூட அடுத்தவன் சரியாக சொல்லிவிட கூடாது. இவர்கள் சொல்வது மட்டுமே சரியாக இருக்கும். இருக்க வேண்டும். இல்லை என்றால் குருநாதர் ஸ்டைலில் திட்டி விட்டு பகடி என்று சொல்லி விடுவார்கள். ஊரறிந்த ஒரு உண்மையை ஒத்துக்கொள்வதில் அப்படி என்ன தயக்கமோ தெரியவில்லை. இவர்கள் பார்க்கும் படங்கள் மட்டும்தான் உலக சினிமா. ஏனென்றால் நாமெல்லாம் செவ்வாய் கிரகத்தில் சென்றுதான் படம் பார்க்கிறோம். இப்படி எதிர்மறையாக பேசியே பொழப்பு நடத்துபவர்கள் பதிவுலகத்தில் ஏராளம். இதெல்லாம் ஒரு பொழப்பா?


5. தன்னை நல்லவன் என்று நம்பி ஏமாந்து தன்னிடம் வரும் பக்தர்களிடம் பணத்தை பிடுங்குவது மட்டும் அல்லாமல், ஆண் பெண் என்ற பாகு பாடில்லாமல், அனைவரிடமும் தான் மன்மத லீலைகளை அரங்கேற்றி உள்ளார்கள் மாட்டிக்கொண்ட, இன்னும் மாட்டிக்கொள்ளாத சாமியார்கள். ஒரு சாமான்யனே செய்ய அஞ்சும் ஒரு காரியத்தை கருவறையிலேயே வைத்து செய்தது முடித்து விட்டு வெற்றி களிப்புடன் காமிரா முன் சிரிக்கிறீர்களே? இதெல்லாம் ஒரு பொழப்பா?

6. அப்படி வெக்கமில்லாமல் சாமியார்கள் நடந்து கொண்ட ஒரு நிகழ்வை வீடியோ படுத்திகொண்டு, அதை ஏதோ மெகா சீரியல் போல வாரம் ஒரு அதிரடி திருப்பத்துடன், வெளியிட்டு உங்கள் டிஆர்பி மற்றும் சர்குலேஷனை உயர்த்தி கொள்கிறீர்களே தொலைகாட்சி மற்றும் பத்திரிகை நண்பர்களே, இதெல்லாம் ஒரு பொழப்பா?

7. இப்போதெல்லாம் மக்கள் எதுவுமே தெரியாமல் செய்யும் இரண்டு செயல்கள் ஓட்டு போடுவது மற்றும் மருந்து கடைகளில் மருந்து வாங்குவது. இரண்டுக்குமே அறிவு தேவை இல்லை. காலாவதியான மருந்து மாத்திரைகளை விற்றதோடு மட்டுமல்லாமல், சுண்ணாம்பு உருண்டைகளை மாத்திரை என்று சொல்லி விற்று மக்களின் அடிப்படை நம்பிக்கையின் மீது வெடிகுண்டு வைத்து தகர்த்து விட்டார்கள். எனக்கு ஒரு சந்தேகம். அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் நிலை பாதிக்க பட்டு அவர்கள் மருந்து கடைகளில் மருந்து வாங்கும்போது அவர்களுக்கு மனம் பதறாதா? இதெல்லாம் ஒரு பொழப்பா?

8. இதை பற்றி முன்பே கூறி உள்ளேன். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உடனே மக்களை மூளை சலவை செய்து தான் பக்கம் இழுப்பது. இது சமீபத்தில் கூட நடந்தது . அதை படித்ததும் எனக்கு சிரிப்பாக வந்தது. நான் படித்ததை அப்படியே தருகிறேன், " காலாவதியான மருந்துகளை விற்று பணம் குவித்த கும்பலைச் சேர்ந்தவர்களைக் கவனித்தீர்களா? அவர்களின் நெற்றிகளையெல்லாம் பாருங்கள், பட்டையும், குங்குமமும் அப்படியே ஜொலிக்கிறது. அப்படியே பக்திப் பழமாகக் காட்சியளிக்கின்றனர். அவர்கள் செய்த காரியமோ மக்களின் உயிர்களோடு விளையாடும் விபரீதச் செயல்!உண்மையைச் சொல்ல-வேண்டுமென்றால் பக்தி செலுத்துபவர்கள் தனி ஒழுக்கத்தைப் பற்றியோ, பொது ஒழுக்கத்தைப் பற்றியோ கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் நம்பும் மதமும், கடவுளும், வழிபாடும், சாஸ்திர சம்பிரதாயங்களும் ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுப்பவை அல்லவே!" . இது இந்து மதத்தை தாக்கி எழுதப்பட்டது. அதாவது கடவுள் நம்பிக்கை உள்ளவன் மட்டும் தான் தவறு செய்வானாம். அதனால் கடவுளை நம்பாதீர்கள் என்று பறை சாற்றுகிறார்கள். என்னே ஒரு கற்பனை வளம். கவுண்ட மணி சொன்ன மாதிரி,"நீ சொன்ன இந்த வாக்கியத்த தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வச்சுட்டு பக்கத்துலையே நீ உக்காந்துக்க. உனக்கு பின்னால வரும் சந்ததிகள் பாத்து தெளிவா நடந்துக்குவாங்க". இதெல்லாம் ஒரு பொழப்பா?

இன்னும் நிறைய இருக்கு பதிவின் நீளம் கருதி முடித்து கொள்கிறேன்.


பி.கு: இப்படி வெட்டித்தனமா பதிவு போட்டிருக்கியே. இதெல்லாம் ஒரு பொழப்பா? அப்படின்னு யாரும் பின்னூட்டம் போடக்கூடாது சொல்லிப்புட்டேன். 


பிடிச்சிருந்த ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

2 comments:

Yoganathan.N said...

3-ஆவதாம் விசயம்

இதில் நான் இல்லையப்பா... ஹிஹி
Seriously, இப்படி எல்லாமா நடக்குது???

4-ஆவதாம் விசயம்

தங்களை அதிமேதாவியாக காட்டிக் கொள்வதே சிலருக்கு வேலையாகிவிட்டது...

8-ஆவதாம் விசயம்

பிற மதத்தை தவறாக காட்டி, நாத்திகம் பேசும் அயோக்கியர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பாகத் தான் வரும். இன்னும் better-ஆ try பண்ணு என்று தான் சொல்லத் தோண்றும்.

//இப்போதெல்லாம் மக்கள் எதுவுமே தெரியாமல் செய்யும் இரண்டு செயல்கள் ஓட்டு போடுவது மற்றும் மருந்து கடைகளில் மருந்து வாங்குவது. இரண்டுக்குமே அறிவு தேவை இல்லை.//

இது டாப்பு... ;P

Bala said...

@Yoganathan

இது ஒரு சாம்பிள்தான். இப்போ இருக்குற நிலைமைல யார பாத்தாலும் இதெல்லாம் ஒரு பொழப்பான்னுதான் கேக்க தோணுது.

Related Posts Plugin for WordPress, Blogger...