விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

April 7, 2010

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா..


எனக்கும் சானியாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
இந்த புள்ள போன ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சதுன்னு தெரியல. அத பிரச்சனைகள் விடாம துரத்திகிட்டிருக்கு. முதலில் கவர்ச்சியாய் உடை அணிகிறார், என்று தொடங்கியது. பின் இசுலாமியத்தை அவமதிக்கிறார் என்றும், விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்துகிறார் அதனால் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறார் என்று வசைபாடுகள். அதற்கேற்றார்போல் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து சரிவு. இவை எல்லாம் சானியாவை தாக்கி வந்தன. ஒரு வழியாக தன் குடும்ப நண்பரையே திருமணம் செய்து கொள்கிறார் சானியா என்று செய்தி கேட்ட பின் மனம் சிறிது நேரம் கலங்கியது (ஹி ஹி...) பின் மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாதது என்ற தத்துவத்தை மனம் ஏற்றுக்கொண்டது(இதே மனம் தானே அன்று ஹிங்கிஸ், அன்னா கோர்னிகோவா ஆகியோருக்கு அலைந்தது...) சாய்னா, தீபிகா ஆகியோருக்கு இடம் அளித்து சானியாவுக்கு "எங்கிருந்தாலும் வாழ்க.." என்று பாட தொடங்கிய வேளையில் அந்த அதிரடி செய்தி - சானியா திருமணம் நிறுத்தப்பட்டது. அதன் பின் நெடு நாளைக்கு பின் அவருக்கு சோயிப் மாலிக்குடன் திருமணம் என்று செய்தி வந்ததும் முதலில் நான் நம்பவில்லை. பின் அவர் வாயாலேயே சொன்னதும் தான் மறுபடியும் "எங்கிருந்தாலும் வாழ்க" பாட தொடங்கினேன். இருந்தாலும் இந்த முறை மனதில் ஒரு நெருடல்.  இந்தியாவில் பிறந்த ஒரு பெண், இந்தியாவுக்காக டென்னிஸ் விளையாடும் ஒரு பெண் எப்படி நம் விரோதிகளான(?!) பாகிஸ்தானியரை மணப்பது? சரி திருமணம் முடிந்தால் அவர் எங்கே இருப்பார்? இந்தியாவுக்காக விளையாடுவாரா? என்று பல கேள்விகள் என்மனதில் எழுந்தன. எனக்கே இப்படி என்றால் நம் மண்ணில் பிறந்த மாவீரர்களை கொண்ட சிவசேனா சும்மா விடுமா? அறிக்கை மழை பொழிந்து விட்டார்கள். 




ஒரு பழமொழி உண்டு. "கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை அவுத்து போட்டுட்டு ஆடுச்சாம்!".சானியா விஷயத்திலும் அதே கதைதான். சோயிப் தரப்பிலும் சானியாவுக்கு இணையாக பல சர்ச்சைகள். ஏற்கனவே திருமணம் ஆனவர், பெண்ணை ஏமாற்றியவர் என பல புகார்கள். இப்போது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, பாஸ்போர்ட் முடக்கம் வரை நடந்து முடிந்து விட்டது. இந்த பிரச்சனை எதில் போய் முடியும் என்று தெரியவில்லை. பாவம் அந்த புள்ளைக்கு இந்த சின்ன வயசுல எத்தன பிரச்சனை?


ஐபிஎல் போட்டிகள் இப்போதுதான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் இரண்டாம் சுற்று ஆட்டங்கள் தொடங்கும் போதுதான் ஒவ்வொரு அணியும் கடுமையாக போராட தொடங்கும். இந்த ஆண்டும் அப்படித்தான். கடந்த சில போட்டிகளில் ஒவ்வொரு அணியும் எடுக்கும் ரன் விகிதங்களே இதற்கு சாட்சி. மேலும் பட்டய கிளப்பும் சிக்சர்களும் அடங்கும். அதாவது இருநூறாவது சிக்சர் தொடரின் 25-வது ஆட்டத்தில் அடிக்கப்பட்டது. இப்போது நேற்று 390-வது சிக்சர் அதாவது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு தொடரின் 37-வது ஆட்டத்திலேயே அடிக்கபட்டுவிட்டது. அதனால் பவுலர்களுக்கு சுமை அதிகரித்துள்ளது. பெரும் தலை வலியை ஏற்படுத்தும் அதிரடி ஆட்டக்காரர்களுக்கு எதிராக புதிய வியூகங்களை பவுலர்கள் வகுக்க வேண்டி இருக்கும். இதற்கு ஒரு சான்று கிரிஸ் கெய்லுக்கு எதிராக மும்பை அணி மேற்கொண்ட பந்துவீச்சு முறை (லெக் ஸ்டம்ப் திசையில் புல் லென்த் ஆக பந்து வீசுவது). இதில் அவர்கள் வெற்றியும் அடைந்தார்கள்.


யூசுப் பதான் தன் உடையில் மதுபான விளம்பரங்களை அணிய மாட்டேன் என்று அறிவித்து அதை நிறைவேற்றியும் காட்டி உள்ளது வரவேற்கதக்கது. இதே மாதிரி பெங்களூரு அணிவீரர் யாராவது முடிவெடுத்தால் என்ன ஆகும்? அவர்கள் பர்தா அணிந்துதான் ஆட வேண்டி வரும். என் குறை பார்வைக்கு தட்டுபட்ட பெங்களூரு உடையில் இருக்கும் மதுபான விளம்பரங்கள் Royal challenge, Mcdowells, Kingfisher, Whitemischief, Mckay. மேலும் கண்டுபிடித்தவர்கள் சொல்லுங்கள் .திரு கில் அவர்கள் ஐபிஎல் போட்டிகளின் போது மது கரை புரண்டோடுகிறது, பெட்டிங் தாரளமாக நடக்கிறது என்று குற்றம் சாட்டி உள்ளார். பெட்டிங் தான் மாட்ச் பிக்சிங்கின் அடித்தளம். முன்பெல்லாம் இதை நடத்த தனியே தரகர்கள் இருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் போட்டி நடத்தும் நிறுவனமே இதை செய்ய ஆரம்பித்துள்ளன. 


WWF என்று ஒரு நிறுவனம் உண்டு. சிறு வயதில் அந்த மல்யுத்த போட்டிகள் முற்றிலும் உண்மை என்று நம்பி ஆர்வமாக பார்த்திருக்கிறேன். பின் அதன் சூட்சமம் புரிந்தது. பரபரப்பு, சுவாரசியம், எதிர்பார்ப்பு, ஆகியவற்றை கூட்ட போட்டிகள் முன்கூட்டியே நிர்ணயிக்க பட்டு நடத்த படுகின்றன. இதில் போதை மருந்துக்கும், பெட்டிங்கும் தங்கு தடை இன்றி வலம் வரும். இதே போல ஐபிஎல் ஆகி விடுமோ என்ற எண்ணம் வருகிறது. ஆட்டத்தின் சுவாரசியத்தை கூட்ட, தொடர்ந்து ரசிகர்களை பார்க்க வைக்க ஆட்டத்தின் போக்கை எப்படி வேண்டுமானாலும் மாற்றி விடுவார்கள் போலிருக்கிறது. 


இதே சூழ்ச்சிதான் முதல் ட்வென்டி20 உலகக்கோப்பை போட்டியிலும் நடந்ததாக கூறப்பட்டது. அதாவது இறுதி போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும், கடைசி வரை யார் வெல்வார்கள் என்று தெரியகூடாது என்பதெல்லாம் முன் கூட்டியே நிர்ணயிக்க பட்டது என்று கூட சொல்ல பட்டது. இப்போது கூட ஐபிஎல் இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் பெங்களூருவில் நடக்கின்றன. எனவே சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் அரையிறுதிக்கு வருவது உறுதி என்று ஒரு நண்பர் ஆரூடம் சொல்கிறார். WWF-ல் இருந்து ஓரளவிற்கு உண்மை தன்மை இருக்கும் கிரிக்கெட் பார்க்க வந்த எனக்கும் இந்த பழமொழி பொருந்தும்.."கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா.."




பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

4 comments:

Anonymous said...

நம்ப சிம்பு சானியாவை தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பதாக சொல்லிருந்தாரே அதை சொல்ல மறந்திடின்களே .anyway என்னுடைய வலைப்பதிவுக்கு வந்தமைக்கு நன்றி
மேனன்

Unknown said...

நல்ல உபயோகமான பதிவு நண்பா.. பின்பற்றுகிறோம்.. பிறருக்கும் எடுத்து சொல்றோம் MULLAIMUKAAM.BLOGSPOT.COM

"ராஜா" said...

இன்னும் திருமணம் நடக்களைல ... அப்ப இன்னும் நமக்கு வாய்ப்பு இருக்கு.....

//பாவம் அந்த புள்ளைக்கு இந்த சின்ன வயசுல எத்தன பிரச்சனை?
வயசுதான் சிறுசு ... ஆனா மத்த எல்லாமே பெருசு... (நான் அவங்க பண்ணுன சாதனைகளையும் அதுக்காக அவங்க அனுபவிச்ச வேதனைகளையும் சொன்னேன்... )

//அதாவது இறுதி போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும், கடைசி வரை யார் வெல்வார்கள் என்று தெரியகூடாது
பாவம் நம்ம பசங்க அவனுக உருப்படியா பண்ணுன சில விசயங்களில் இதும் ஒண்ணு... அதுலயும் கடப்பாறையை எறக்கனுமா...?

Yoganathan.N said...

//எனக்கும் சானியாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.//

கடைசி வரைக்கும் அது என்ன ஒற்றுமை என்று சொல்லவே இல்லையே... ஹிஹிஹி

//WWF என்று ஒரு நிறுவனம் உண்டு. சிறு வயதில் அந்த மல்யுத்த போட்டிகள் முற்றிலும் உண்மை என்று நம்பி ஆர்வமாக பார்த்திருக்கிறேன். பின் அதன் சூட்சமம் புரிந்தது. பரபரப்பு, சுவாரசியம், எதிர்பார்ப்பு, ஆகியவற்றை கூட்ட போட்டிகள் முன்கூட்டியே நிர்ணயிக்க பட்டு நடத்த படுகின்றன.//

உண்மை. WWF ஒரு திரைக்கதைப் போல உருவாக்கப் பட்டு, மல்யுத்த வீரர்கள் (அதாவது நடிகர்கள்) தங்களது வசனங்களை மனனம் செய்து ஒப்பிக்க வேண்டுமாம். வெற்றி தோல்வி பற்றி சொல்லவே தேவையில்லை. முன்னதாகவே நிர்னியக்கப்பட்டுவிடும்...
ஒரு காலத்தில் இதிலே குடியும் குடித்தனமுமாக இருப்பதை எண்ணி இப்பொழுது வெட்கித் தலை குணிகிறேன். :(

பி.கு கிரிக்கெட் பற்றி ஒன்றும் தெரியாது... சோ, நோ காமெண்ஸ்... ஹிஹி

Related Posts Plugin for WordPress, Blogger...