விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

February 19, 2010

அஜித் தமிழன் இல்லையா?

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் அஜித் குமார் பேசியது கோலிவுட் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
"அஜித் தன் மனதில் பட்டதை பேசினார். அத்தனை பெரிய கூட்டத்தில் அப்படி பேசுவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். அந்த தைரியம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது." என்று சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியுள்ளார். 
இதைப்பற்றி துக்ளக் பத்திரிகையில் வெளியான செய்தி:

அஜித் பேசிய கருத்துக்கள்தான்  முக்கியமானவை. எதற்க்கெடுத்தாலும் கலைஞர்களை மிரட்டி கலந்து கொள்ள வைத்து விழா, ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு... எல்லாம் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டி அஜித் வெளிப்படுத்தி இருப்பது, அசாத்திய துணிச்சல். அதே போல, அவர் பேசியபோது திக்பிரமித்துஇருந்த கூட்டத்தினருக்கு வழிகாட்டுகிற வகையில் ரஜினிகாந்த் எழுந்து நின்று கை தட்டியதும், துணிச்சலான செயலே. அதை தொடர்ந்து கூட்டத்தினரும் அஜித் பேச்சை ஆமோதித்து பெரும் கரகோஷத்தை எழுப்பி இருக்கிறார்கள். 

விழாவிற்கு வராதவர்களுக்கு பெப்சி ஒத்துழைக்காது என்று கூறினீர்களாமே இது மிரட்டல் ஆகாதா? என்று கேட்டதற்கு திரு வீ சி குகநாதன் அவர்கள்,

சில செய்தி தாள்களில் அப்படி வந்ததே தவிர நாங்கள் அப்படி சொல்லவில்லை. விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என்று சொல்லும் சில நடிகைகள் ஆந்திராவில் ஒரு விழாவில் அரை குறை ஆடையோடு ஆடுகிறார்கள். முன் வரிசையில் அமர்ந்திருக்கும் நடிகர்கள் மடியில் அமர்கிறார்கள் என்று தன துறையினர் மீதே புழுதியை வாரி இறைத்துள்ளார். நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கும் விவேக், சத்யாராஜ் அவர்களே, எங்கே போனீர்கள்?

மேலும் பொது பிரச்சனையில் கலந்து கொள்ளா விட்டால் தமிழன் இல்லை என்று புது பிரச்னையை கிளப்பி விடுகிறார்கள் என்று அஜித் கூறியுள்ளது பற்றி கேட்டதற்கு, " அஜித் என்ன சொல்ல வருகிறார்? அவர் தமிழன் இல்லை என்று சொல்கிறாரா?" என்று சம்பந்தம் இல்லாமல் கேள்வியை கேட்டு திசை திருப்பி விட்டார். 

இவர் பதிலில் இருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது. கொஞ்ச நாள் சும்மா மென்று கொண்டிருந்த வாய்க்கு அவ்வப்போது ரஜினி என்ற அவல் கிடைத்து கொண்டிருந்தது.  இப்போது அஜித் என்ற பபிள்கம் கிடைத்துள்ளது.  மெள்ளாமல் விடுவார்களா? 


ஜாக்குவார் தங்கம் மேலும் ஒரு படி முன்னேறி " கலைஞருக்காகத்தான் பொறுமையாக இருந்தோம். இல்லை என்றால் மேடையிலேயே அஜித்தை புரட்டி எடுத்திருப்போம்" என்று புலம்பி தள்ளி உள்ளார்.

முட்டாள்தனமாக உணர்ச்சி வசப்பட்டு வாய்க்கு வந்ததெல்லாம் பேசும் குகநாதன், ஜாக்குவார் தங்கம் போன்றோர் தமிழர்கள்  என்றால் உண்மையை மட்டும் பேசி உள்ள  அஜித் தமிழன் இல்லைதான் 

படிச்சது பிடிச்சிருந்தா தமிழிஷ்ல ஓட்டு போடுங்க. உங்க கருத்த  இங்க பதிவு பண்ணுங்க. 


7 comments:

Suresh Gandhi said...

நன்றி நண்பரே. தல’ய எவனும் ஒண்ணும் பண்ண முடியாது. நான் ஒரு விஜய் ரசிகரிடம் பேசினேன். அவர் சொன்னது. ‘ எனக்கு விஜயை ரொம்ப பிடிக்கும் நடிகர் என்பதால். இப்போது அஜித்தை மிகவும் ரொம்ப பிடிக்கும் மனிதர் என்பதால்.’ இது தான் தல. நாய் குழைக்க தான் செய்யும் என்ன செய்வது. அவை நன்றியுள்ள நாய்கள் அல்ல. நாய்-ஃபெஃப்சி.

Bala said...

//அஜித்தை மிகவும் ரொம்ப பிடிக்கும் மனிதர் என்பதால்

எல்லோருக்கும் பிடித்த மனிதராக அஜித் மாறி வருகிறார் என்பதே ஒரு நல்ல செய்திதான்.

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி நண்பரே

அஹோரி said...

அஜித் பேச்சால் கொஞ்சம் பேருக்கு அந்த நிகழ்ச்சியில் பித்தம் தெளிந்து இருக்கும்.

Anonymous said...

popa poi velaiya paru Ajith velai avar pathukuvaru

Unknown said...

அஜீத் பேசியதில் என்ன தவறு இருக்கிறது. தமிழன் தமிழன் என்று சொல்லிக்கிட்டு நாட்டை சுரண்டுர பெருச்சாலிங்களை எத்தனை காலம் தான் நம்புவது. இதே அஜீத் ஒரு அரசியல்வாதியாக இருந்துருந்தால் ஒரு நாயும் அவரை பார்த்து குரைத்திருக்காது.

இளங்கோ said...

மேடையேறி பேசும்போது ஆறு போல பேச்சு! கீழ எறங்கி தெருவில் வந்தா சொன்னதெல்லாம் போச்சு!

Bala said...

//அஜித் பேச்சால் கொஞ்சம் பேருக்கு அந்த நிகழ்ச்சியில் பித்தம் தெளிந்து இருக்கும்.

கண்டிப்பா...
நன்றி அகோரி

//popa poi velaiya paru Ajith velai avar pathukuvaru

அனானி அண்ணே பெயர் போட்டே சொல்லி இருக்கலாமே.
கருத்துக்கு நன்றி


உங்கள் கருத்துக்கு நன்றி முகம்மது..

கருத்துக்கு நன்றி இளங்கோ
மேடைப்பேச்சு என்றாலே லுலுலாய்க்கு தானே ஹி ஹி..

Related Posts Plugin for WordPress, Blogger...