விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

February 22, 2010

தல போல வருமா? - அஜித் என்னும் உழைப்பாளி

ன்றைய தமிழ் திரை உலக ஹாட் டாபிக் அஜித் பற்றிதான் . அதிகம் பேசாமல் இருந்தவர். அடிக்கடி நான் பேச மாட்டேன் என்று சொல்வார். ஏன் என்று இப்போதுதான் புரிகிறது.

தொடக்கத்தில் எனக்கு அஜித் பற்றி அவ்வளவாக எந்த அபிப்ராயமும் இல்லை. நான் சொல்வது காதல் கோட்டை கால கட்டங்கள். அப்போதெல்லாம் பல பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார். அப்போதெல்லாம் அஜித் படங்கள் மீது அவ்வளவாக ஈடுபாடு இல்லாத காரணத்தால் அவர் படங்களை சரியாக பார்த்தது இல்லை.  ஏன் என்றால் ஒரு அஜித் படம் ரிலீஸ் ஆனால் கண்டிப்பாக அந்த படத்தின் நாயகியுடன் சேர்த்து அஜித் பெயர் கிசுகிசுக்கப்படும். இது அவர் மீது எந்த வித மரியாதையையும் ஏற்படுத்த வில்லை . மாறாக ஒரு வித எரிச்சலையே ஏற்படுத்தியது.

இன்று அஜித் பிடிக்காது என்பவர்கள் சொல்லும் காரணம் இதுவாகத்தான் இருக்கும்.  இது அவருக்கும் தெரியும். அந்த காலகட்டங்களில் இப்போது இருப்பது போல அவருக்கு பக்குவம் இல்லாத காரணத்தால் தோன்றியதை பேசினார்.  பத்திரிக்கைகளும் அதை மனம்போல் மாற்றி எழுதின. விளைவு BAD IMPRESSION.

"நான் பாத்து பாத்து வளர்ந்த வீட்டு மரம் அல்ல, தானா வளர்ந்த காட்டு மரம்.
எரிந்து முடித்த சாம்பலில் இருந்து எழுந்து பறக்கும் பீனிக்ஸ் போல"

இந்த வரிகளை பார்க்கும்போது அஜித் மீது ஈடுபாடு இல்லாதவர்களுக்கு மற்றும் அவரை பிடிக்காதவர்களுக்கு எரிச்சல் வரும். ஆனால் இந்த வரிகள் அஜித்தை பொறுத்த வரை எவ்வளவு உண்மை என்று அவர் கடந்து வந்த பாதையை பார்த்தாலே தெரியும். போதும் அஜித் பற்றி புகழ் என்று பெருமூச்சு விடுபவர்களுக்கு, மேலே கூறியவை பொய் இல்லை என்று மட்டும் தெரியும்.

 அஜித்தை பொறுத்தவரை ஒரு அடி எடுத்து வைத்தால் பத்து அடி சறுக்கும். பெற்ற வெற்றிகளை விட வாங்கிய அடிகள் அதிகம். அடி என்றால் சாதாரண அடி அல்ல. எழுந்திருக்கவே  முடியாத அளவுக்கு மரண அடி. சுதாரித்து எழுவதற்குள் இன்னொரு அடி. 

சரி அவர் நடிப்பு career பற்றி பார்க்கலாம். முதலில் அவரை எல்லோரும் அறிய வைத்தது ஆசை. ஆனால் அதற்கு அப்புறம் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் , ஏனோதானோவென்று  படங்களில் நடித்து வந்தார். அஜித் வாழ்வில் பெற்ற முதல் மிகப்பெரிய வெற்றி என்றால் காதல் கோட்டை தான் . விஜய்க்கு எப்படி பூவே உனக்காகவோ அது மாதிரி அஜித்துக்கு காதல் கோட்டை.

இந்த காலகட்டத்தில் அஜித் இளம்பெண்களின் கனவு நாயகனாக இருந்தார். அப்போது அஜித்தை அடையாள  படுத்தும் விஷயங்கள் இரண்டு. கிசு கிசு மற்றும் அதிகப்பிரசங்கி தனமான பேச்சு. அஜித்துக்கு வாய்க்கொழுப்பு நடிகர் என்ற பெயர் சரியாக பொருந்தியது.

பின்  வரிசையாக படங்கள் ஓட வில்லை. மரண அடி. ஒரு கட்டாய வெற்றியை நோக்கி ஓடி கொண்டிருக்கும் போது தான் வாலி வந்தது.  பின் சில தோல்விகள்.  அவ்வப்போது சில வெற்றிகள் என்று நடித்துக்கொண்டிருந்தார். 
 எல்லாருக்கும் வரும் பிரச்சனை அஜித்துக்கும் வந்தது.  இமேஜ் வட்டம். அந்த வட்டத்துக்குள் சிக்கி வெளிய வர வழி தெரியாமல் மொக்கை படங்களாக நடித்துக் கொண்டிருந்தார் .  வரலாறு போன்ற ஒன்றிரண்டு நல்ல படங்கள் கூட சரியான நேரத்தில் வெளி வராமல் சோதித்தன . இமேஜ் வட்டத்துக்குள் இருந்து வெளி வரும் முதல் முயற்சியாக அஜித் நடித்த படம் பில்லா. இப்போது அசல் படத்தின் மூலம்  இதில் சிறிது  முன்னேற்றம் கண்டுள்ளார். SWOT ANALYSIS FOR AJITH:
பலம் 
பெரிய ஒப்பனிங். சரியாக ஓடாத அஜித் படங்கள் கூட வசூல் அதிகம் பெறுவதற்கு இதுதான் காரணம்
நடிப்பு. இந்த விசயத்தில் அண்மைக்காலமாக ஓரளவுக்கு நடிக்க தெரிந்த நடிகர். 

பலவீனம் 
கதை தேர்வில் குழப்பம். இதனால் பல பெரிய இயக்குனர்கள் கூட தோல்வி படங்களாக தந்து விடுகின்றனர். 
நடனம் மற்றும் பிட்நெஸ். ஒவ்வொரு படத்திலும் அஜித் ஒவ்வொரு விதமாக தெரிகிறார். நெடுநாள் எடுத்த படமாக இருந்தால் வெவ்வேறு காட்சிகளில் வெவ்வேறு மாதிரி தெரிகிறார்.( வரலாறு, ஜி)வாய்ப்புகள்:
இப்போது சிறிதளவு ட்ராக் மாறி இருப்பதால் மக்கள் மத்தியில் ஓரளவுக்கு ஆதரவு கூடி இருக்கிறது.
பெரிய ஒப்பனிங் இருப்பதால் இன்னும் சில ரிஸ்குகள் எடுக்கலாம்.

அச்சுறுத்தல்கள்:
என்னதான் மனதில் பட்டதை பேசினாலும் தாமரை இலை தண்ணீர் போல பட்டும் படாமலும் பேசுவது நல்லது
ஸ்டைல் ஆன படங்கள் நடிக்கிறேன் என்று பில்லா மாதிரி படங்கள் தொடர்வதை தவிர்க்கலாம் 

தோல்விகளோ அவமானங்களோ அஜித்துக்கு புதிதில்லை. 
மீனாவுடன் நடனம் ஆடும்போது, மீனாவின் அம்மாவின் வற்புறுத்தலால் (1995 என்று நினைக்கிறேன். மீனா அப்போது உச்சத்தில் இருந்தார். அஜித் அப்போது புதுமுகம்) வலுக்கட்டாயமாக மேடையில் இருந்து இறக்கி விடப்பட்டார். அப்போதில் இருந்து எந்த மேடையிலும் தோன்றுவதில்லை. இப்போது தான் மேடையில் தல தெரிகிறது. இது மாதிரி எத்தனையோ அவமானங்களை சந்தித்திருக்கிறார் அஜித்.

எனவே சோதனைகளை சாதனைகளாக்கி தொடர்ந்து வெற்றிபெறுவார் என்று நம்புவோம்.


உங்களுக்கு பிடிச்சிருந்தா தமிழிஷ்ல ஓட்டு போடுங்க
உங்க கருத்துக்கள இங்க பதிவு பண்ணுங்க.

7 comments:

Yoganathan.N said...

நல்ல அலசல்... இனிவரும் படங்களுக்கு வாழ்த்துகள். :)

பி.கு அஜித் இனி சினிமாவில் இருப்பாரா என்பதே தற்பொழுது ஒரு பெரிய கேள்விக்குறியாக உள்ளது :(

Bala said...

எரிந்து முடித்த சாம்பலில் இருந்து ... என்ற வரி அவருக்கு இப்போதும் பொருந்தும் என்று நம்பலாம்.
அவர் சினிமாவை விட்டு காணமல் போய் விடுவார் என்ற நிலை பல நேரங்களில் வந்திருக்கிறது.

கருத்துக்கு நன்றி நண்பரே....

அ.ஜீவதர்ஷன் said...

//மீனாவுடன் நடனம் ஆடும்போது, மீனாவின் அம்மாவின் வற்புறுத்தலால் (1995 என்று நினைக்கிறேன். மீனா அப்போது உச்சத்தில் இருந்தார். அஜித் அப்போது புதுமுகம்) வலுக்கட்டாயமாக மேடையில் இருந்து இறக்கி விடப்பட்டார்.//

இது எனக்கு புதிய தகவல், அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

Subankan said...

அஜித்ததைப்பற்றி நிறைய விசயங்கள் தெரிந்துவைத்திருக்கிறீர்களே!

Raju said...

அட, நல்லாருக்கு..

prince said...

there is no wrong in ajith's speech.he told what was appeared in his mind.no hesitate to speak the truth.so according me ajith speech is very correct

Bala said...

@ சுபாங்கன்
ஏதோ தெரிந்த விஷயத்தை எழுதி இருக்கிறேன்.

@ ராஜு
கருத்துக்கு நன்றி நண்பரே

@ பிரின்ஸ்
கருத்துக்கு நன்றி இளவரசரே

Related Posts Plugin for WordPress, Blogger...