விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

February 3, 2012

டாக்டர் போல யாரு மச்சான்...?


மு.கு: படங்களுக்கும் கட்டுரைக்கும் எந்த தொடர்பும் இல்லை. படத்தில் இருக்கும் அனைவர்களும் டாக்டர்கள் என்பதை தவிர. 

இந்த தலைப்பை பார்த்ததும், ஒரு சிலர் மருத்துவர்களின் அருமை பெருமைகளைப்பற்றி எழுதப்போகிறேன் என்று நினைக்கலாம். ஆனால் இந்த தலைப்பை பார்த்ததும் டக்கென்று உங்களுக்கு யாருடைய ஞாபகம் வருகிறதோ, அவரை நினைத்து இந்த பதிவை படியுங்கள். இந்த பதிவுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. நீங்கள் எந்த மன நிலையில் படிக்கிறீர்களோ, அதையே இங்கே பிரதிபலிக்கும். ஒஸ்தி வேலன் ஸ்டைலில் சொன்னா, "இது கண்ணாடி மாறிலே... அங்கிட்டு என்னத்த காட்டுதியோ, அதேயே திருப்பி காட்டுவேன்". ஆமா? இவன் எப்போதுமே சினிமா பற்றியே பேசிக்கிட்டு இருக்கானேன்னு நீங்க நினைக்கலாம். ஆரம்ப காலத்தில் இருந்தே சொல்வது போல, எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கே ஒழிய, நான் ஒன்றும் கவிஞனோ, கதாசிரியானோ அல்ல. எனக்கு என்ன தெரியுமோ அதைத்தானே எழுத முடியும்?எல்லா பத்திரிக்கையாளர்களும் ஒருங்கே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் கண்களில் ஒருவித எதிர்பார்ப்பு. சர்க்கஸ் கூடாரத்தில் அமர்ந்திருப்போரின் மன நிலைதான். சிங்கமோ, புலியோ வருமா? இல்லை ஏதாவது ஒரு பொண்ணு வந்து ஜிம்னாஸ்டிக் செய்யுமா? இல்லை பஃபூன் வந்து காமெடி செய்வாரா? என்று கலவையான எதிர்பார்ப்புடன் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் இங்கு வந்திருப்பது கடைசி விஷயத்துக்குத்தான். ஏனென்றால் அவர்கள் பார்க்க வந்திருக்கும் டாக்டர் அப்படி. பத்திரிக்கையாளர்கள் ஏன் ஒரு டாக்டரை பார்க்க வேண்டும்? எல்லோருக்கும் எதேனும் கோளாறா? யாருக்கு கோளாறு என்று இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்கே புரியும். டாக்டர் என்பவர் டாக்டர் அல்ல. பின்னே? கம்பவுண்டரா? என்று  கவுண்டர்  ஸ்டைலில் கவுண்டர் கொடுக்கலாம். ஆனால் இந்த டாக்டர் ஒரு டாக்டர் அல்ல. ஒரு நடிகர். காலப்போக்கில் இவர் பெயருக்கு பின்னால் சாரி முன்னால் டாக்டர் சேர்ந்துகொண்டது. ஆனால் ஆச்சர்யப்படும் வகையில் இவர் டாக்டர் ஆனபின் நடிகர் ஆனாரா? இல்லை நடிகர் ஆனதால் டாக்டர் ஆனாரா என்று குழப்பம் இன்றும் நீடிக்கிறது. சரி விடுங்க. நாம டாக்டர் என்றே விளிப்போம். இவரை பார்க்கும்போதோ, அல்லது இவரால் பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்படும்போதோ, எல்லோரும் மிக குஷியாகி விடுவார்கள். ஏனென்றால் இவரது ஒரே பேட்டியை வைத்து ஒரு மாதம் பொழப்பு நடத்தலாம். டுவிட்டர், பேஸ்புக், யுட்யூப் போன்ற இடங்களில் இவரது பேட்டி பல இடங்களில், பல வெர்சன்களில் வெளியாகி களை கட்டும்.  அப்படி என்னதான் செய்வார்? என்று அறிந்து கொள்வதற்கு முன் இவர் குறித்த ஒரு சிறு அறிமுகத்தை பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக ஒரு நடிகரை சொல்வார்கள். சரி அவரை விட்டு விடலாம். அவரெல்லாம் நம் டாக்டரின் கால் தூசிக்கு சமமாக மாட்டார். விடா முயற்சியில் இவர் ஒரு எடிசன். தோல்வியை கண்டு துவளாத மனதில் இவர் ஒரு மாவீரன் அலெக்சாண்டர். தன் உடல் அமைப்பை கண்டு துளியும் வருத்தப்படாததில் இவர் ஒரு ஆபிரகாம் லிங்கன். அவார்டை விட ஆத்ம திருப்தியே முக்கியம் என்று நினைப்பதில் இவர் ஒரு கமலஹாசன். நான் ஏதோ இவரது படத்தின் அறிமுகப்பாடல் வரியை இங்கு எழுதுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அதுதான் உண்மை. இவ்வளவு நற்பண்புகள் இருந்தும் இவரால் சினிமா உலகில் சாதிக்க முடியவில்லை. காரணம் இவரல்ல. இவரை சுற்றி உள்ள சமூகம். ஒன்று அரசியல். "எங்கே இவர் அடுத்த முதல்வர் ஆகி விடுவாரோ?" என்று மிரளும் ஒரு கூட்டம், "எங்கே இவர் அடுத்த ரஜினி ஆகி விடுவாரோ?" என்று அஞ்சும் மற்றொரு கூட்டம் என்று, இவரை காலை வாரி விடுவதற்கென்றே நிறைய பேர் இருக்கிறார்கள்.  இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியம் இவரது ரசிகர்கள். இவர் சீரியசாக பேசினால் அதை காமெடியாகவும், இவர் காமெடியாக பேசினால் அதை சீரியசாகவும் எடுத்துக்கொண்டு, இவரைபற்றி வெளியே ஒரு பெரிய காமெடி இமேஜை உருவாக்கி விட்டார்கள். இன்றைய தேதிக்கு இவர் காமெடி ரோலில் நடித்தால், சந்தானம் ஃபீல்ட் அவுட் ஆகி விடுவார். ஆனால் நடித்தால் ஹீரோ ரோல்தான் என்பதில் உறுதியாக இருப்பது, ஒரு வகையில் இவரது மன உறுதியை காட்டினாலும், அதுவே இவரது பெரிய பலகீனம். இவரது எந்த படம் வெளிவந்தாலும் இளைய சமுதாயமே மகிழ்ச்சி கடலில் மிதப்பார்கள். மேலும் தொடர்ந்து வரும் இவரது பேட்டிகள் அவர்களின் உற்சாகத்தை இன்னும் அதிகாரிக்கும். உலகில் தன்னை விரும்பாதவர்களை கூட, தன் படத்தை எதிர்பார்க்க வைக்கும் திறமையில் உண்மையிலேயே இவர் ரஜினியை பின்னுக்கு தள்ளி விட்டார். இதை படித்தவுடன், யாராவது ரஜினி ரசிகர் என்னுடன் சண்டைக்கு வரலாம். ஆனால் அவர்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால், ஒரு முறை  கேட்டுப் பார்க்கட்டும். இவரது படங்கள் வெளியான மறுநாளே மாபெரும் வெற்றி பெற்றுவிடும். நூறாவது நாள் போஸ்டர் ஒட்டாத படங்களே கிடையாது. படம் ஓடுகிறதோ இல்ல்யோ, படம் பிரிண்ட் போடும்போதே, நூறாவது நாள் போஸ்டரும் பிரிண்ட் போடப்படும் என்பது நாடறிந்த உண்மை. எவ்வளவு உயரத்துக்கு போனாலும், இவர் மாறாத புன்னகையுடனே இருப்பார். இவர் பேச வேண்டியதை, இவரது ரசிகர்களே பேசி விடுவார்கள். சரி இப்போது அதற்கென்ன என்று கேட்கிறீர்களா? நான் முதலில் சொன்னேன் அல்லவா? ஒரு பத்திரிக்கையாளர் கூட்டம். அது போல ஏகப்பட்ட கூட்டத்தை இவர் கூட்டி அங்கே கோபம் வரும் அளவுக்கு காமெடி செய்திருக்கிறார். எப்போதுமே பயங்கர அலப்பறை செய்யும் இவரது வித்தியாசமான படம் ஒன்று, தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. ஆனால் இவர் இன்னும் அமைதியாகவே உள்ளார். "சின்னப்பயல் சூர்யா எல்லாம் வசூலில் மூன்றாம் இடம் என்று தம்பட்டம் அடிக்கும்போது, அதை எல்லாம் மிஞ்சும் திறமை மிக்க இவர் ஏன் அப்படி செய்யக்கூடாது?", என்று தோன்றியதான் விளைவே இந்த கற்பனை பத்திரிக்கையாளர் கூட்டம். 

பத்திரிக்கையாளர்கள் தவிப்போடு இருக்க, எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்று அச்சுறுத்தும் எரிமலையாக அங்கே நுழைகிறார் டாக்டர். அதிகம் பேசாத இவருக்கு முன்னால் இவரது மேனேஜர் பேசுகிறார். "சமீபத்தில் வெளியான அண்ணனின் படம், வெளியிட்ட எல்லா தியேட்டர்களிலும் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. இது உலக சினிமாவில் யாரும் செய்திடாத ஒரு சாதனை. அது அண்ணனாலேயே முடியும். மேலும் தமிழக, இந்திய ஏன் உலக ரெக்கார்டுகளையே இந்த படம் முறியடிக்கும் என்று எனக்கு தெரியும். உலகில் அதிக வசூல் செய்த படம் ....." (பெயர் மறந்து போனதால் கையில் வைத்திருக்கும் பிட்டை பார்க்கிறார்), பத்திரிக்கையாளர் ஒருவர், "களுக்", என்று சிரித்து விட, "ஏய் பேசிட்டிருக்கேன்ல?", என்று அண்ணன் ஸ்டைலில் சவுண்டு விட்டுவிட்டு, "ஆங் அவதார், அதை கூட நம்ம நாசர் அவதாரம் என்று தமிழில் ரீமேக் செய்திருப்பரே, அந்த படத்தின் வசூலை வீழ்த்தி விட்டதாக எனக்கு ரிப்போர்ட் வந்திருக்கிறது. இதனை அளித்தவர் எஃப் பிஐ அதிகாரி உயர்திரு ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் அவர்கள். இப்போது என்ன சொல்லப்போகிறார்கள் எதிரிகள்?", என்று கண்கள் சிவக்க பேசிவிட்டு, மேலும் பேச மனசாட்சி இடம் தராததால், அண்ணனுக்கு வழி விட்டு அமர்கிறார். டாக்டர் மைக்கை பிடித்து, "நான் அதிகம் பேச விரும்பவில்லை. என்னென்னமோ சொல்றாங்க, இந்த படம் பல சாதனைகளை முறியடிச்சிருக்குன்னு சொல்றாங்க. அவதார் வசூலையே மிஞ்சி விட்டதாக சொல்றாங்க. முதலில் நான் நம்பல. அப்புறம் மதுரை மாவட்டம், ஆட்டையாம்பட்டி SAC டூரிங் டாக்கீசில் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அவதார் படம் வந்திருக்கு. அது ஒரே நாள்ல, 9 ரூவா வசூல் பண்ணிச்சாம். இப்போ என் படம் அதே தியேட்டர்ல வந்திருக்கு. முதல் நாளே பத்து ரூவா வசூல் செய்து அதை முந்தி விட்டதாக, தியேட்டர் வாசலில் பீடி விற்கும், மன்ற செயலாளர் மன்னார்சாமி கண்ணீர் மல்க டுவிட்டரில் கூறி இருந்தார். இதை என் தலையில் ஏற்றிக்கொள்வதா? இல்லை முதுகில் ஏற்றிக்கொள்வதா? என்று தெரியவில்லை. என் சாதனை பயணத்தில் இது முதல் படிதான். அடுத்த வருடம், நிறைய மொக்கை டைரக்டர்களின் படத்தில் நடித்து அவர்களுக்கு வாழ்க்கை தரவேண்டி இருப்பதால் இத்தோடு முடித்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு, "வெற்றி கொடி ஏற்று, வீசும் நம்ம காற்று...." என்று விஜய்யின் பாடலை பாடிக்கொண்டே விடைபெறுகிறார். சிரித்து சிரித்து பெருகி இருந்த கண்ணீரை துடைத்தபடி, " டாக்டர் போல யாரு மச்சான்...?",  என்று அதே விஜய் பாடலை உல்டா செய்து பாடியபடி பத்திரிக்கையாளர்கள் நகர்கிறார்கள். 

பி.கு: இது கதை, கற்பனை, மொக்கை, பிளேடு, வயிற்றெரிச்சல், சொம்பு என்று எந்த வகையிலும் நீங்கள் சேர்க்கலாம். மொதல்லே சொன்ன மாதிரி இது கண்ணாடி மாதிரி. எதை நினைச்சு படிக்கிறீங்களோ அதையே பிரதிபலிக்கும். 

பி. கு : கடைசி வரை அந்த டாக்டர் யாருன்னு நான் சொல்லவே இல்லையே? இவர்தான் அவர். நீங்க யாரை நினைச்சீங்க?
44 comments:

"ராஜா" said...

டாக்குடர் அடுத்து நடிக்கபோர இன்னும் சூட்டிங் ஆரம்பிக்காத படத்தோட 200 ஆவது நாள் போஸ்டர் அதுக்குள்ள சிவகாசியில பிரிண்ட் ஆகிடுச்சாம்...


அந்த டாக்குடர் பிரஸ் மீட் வச்சாலே பயங்கர காமெடிதான் போங்க, வடிவேலு இல்லாத குறையை இப்ப அவரோட பிரஸ் மீட்ஸ்தான் தீர்த்து வைக்கிது... சும்மா காட்டு காட்டுன்னு காட்டுவாறு..

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா பாஸ் போன வருஷம் ரிலீஸ் ஆனா படங்களில் 100ஆவது நாள் போஸ்டர் பத்திருக்கையில் வந்த படங்கள் மூணே மூனுதான்
வானம் , வேலாயுதம் , லத்திகா... இதில் லத்திகா மட்டுமே காசு கொடுத்து ஒட்டபட்டது என்று அதன் நடிகராலே ஒப்புக்கொள்ளபட்டது , மற்ற இரண்டும் உண்மையிலேயே ஒடியதை போல ஒரு பில்ட் அப் ... அந்த வகையில் பவர் ஸ்டார் எவ்வளவோ மேல் , அவரை நீங்கள் கலாய்ப்பதை??? பவர் ஸ்டார் ரசிகர் மன்றம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்...

"ராஜா" said...

கடைசி ரெண்டு பாடங்களையும் பாக்கும்போது பயமா இருக்கு ... அந்த ரெண்டு படத்தை சேர்த்ததுக்கு நீங்க கண்டிப்பா தலைப்பில் 25+ (18+ எல்லாம் பத்தாது) சேர்த்திருக்க வேண்டும்...

ஆமினா said...

//இவர் சீரியசாக பேசினால் அதை காமெடியாகவும், இவர் காமெடியாக பேசினால் அதை சீரியசாகவும் எடுத்துக்கொண்டு, இவரைபற்றி வெளியே ஒரு பெரிய காமெடி இமேஜை உருவாக்கி விட்டார்கள்//

இதுக்கு சிரிப்பு அடக்காம இருக்க முடியல சகோ...

இன்னும் சிரிச்சுட்டிருக்கேன் :-)

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா. டாகுதரா கொக்கா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் செம கலக்கல் பாஸ்

டாகுதரின் அடிப்பொடிகளுக்கு செம கலாய்ப்பு

ஆமினா said...

//இவரது படங்கள் வெளியான மறுநாளே மாபெரும் வெற்றி பெற்றுவிடும். நூறாவது நாள் போஸ்டர் ஒட்டாத படங்களே கிடையாது//

தூளு... கலக்கிட்டீங்க!

ஆமினா said...

முதல் பாதி விஜயை தான் கற்பன பண்ணேன். பிற் பகுதி பவர் ஸ்டார்... அவ்வ்வ்வ்

2ம் கலந்த கலவையா?

ஹாலிவுட்ரசிகன் said...

கடைசி வரைக்கும் விஜயை தான் நினைத்துக் கொண்டு வாசித்தேன். அவ்வ்வ்வ்வ். கலக்கீட்டீங்க.

சுசி said...

:))

Unknown said...

அய்யயோ நான் இல்லீங்னா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே உங்க பதிவில் பொருட்குற்றம் உள்ளது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டாகுடர் பேட்டின்னா நைனாவும் பேசுவாரே (அவருதானே எல்லாத்தையும் பேசுவாரு), அது எங்க? நைனாவையே காணோம்....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எங்க தானைத்தலைவன் எஸ்.ஏ.சி இல்லாத பேட்டியை ஒத்துக்கவே மாட்டேன்......

Marc said...

சிரிச்சு சிரிச்சு முடியல .மிக மிக அருமை

arasan said...

இது என்னங்க என்னால சிரிப்ப அடக்க முடியலைங்க ...

ரஹீம் கஸ்ஸாலி said...

டாக்டர் பற்றி பதிவுபோட்ட ஆசிரியர் வாழ்க....

r.v.saravanan said...

ஹா.ஹா.ஹா.ஹா

பட்டை யை கிளப்பறீங்க பாலா

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

முடியல..ஹஹஹஹ

Yoga.S. said...

பின்னிட்டீங்க தலீவா!!!ஒவ்வொரு பாராவா படிச்சுட்டே போறப்ப எதிர்பார்ப்ப அதிகமாக்கிட்டே போனீங்க பாருங்க?அங்கின தாங்க "நிக்கிறீங்க"!கடேசியா போட்டிருக்கீங்க பாருங்க போட்டோவா?,ஸ்டில்லா?என்ன கருமா...........மோ?நல்லாருந்திச்சு!சிரிக்காமையே படிச்சு முடிச்சேன்னா பாத்துக்குங்களேன்?புடிங்க ஒங்களுக்கும் ஒரு "டாக்டர்"பட்டத்த,ஹ!ஹ!ஹா!!!!!!!!!

பி.அமல்ராஜ் said...

ஹி ஹி ஹி... கலாய்ப்பு கலக்கல். நம்ம தலைவரில்லே.. அடங்குவாரா என்ன...

பால கணேஷ் said...

ரொம்ப நாளா உங்க ஏரியா பக்கம் நான் வரலை, ஸாரி பாலா! நிறைய மிஸ் பண்ணிட்டேன். சேர்த்து படிச்சுடறேன். டாக்டர்ன்னு நீங்க விவரிச்சுக்கிட்டே வந்தப்ப விஜய்தான் மனசுல நின்னாரு... கடைசில நீங்க கொடுத்த ட்விஸ்ட் அசர வெச்சது. சிரிச்சு மாளலை. அருமை!

பாலா said...

@"ராஜா"

ஆமாம் நண்பரே பவர் ஸ்டாரின் பவர் தெரியாமல் பேசிவிட்டேன். அவரின் ரசிகர்களை குஷிபடுத்தவே அவரது டெரர் படத்தை கடைசியில் இணைத்தேன்

பாலா said...

@ஆமினா
அதான் சொன்னேனே மேடம். நீங்க யாரை கற்பனை பண்ணிக்கிறீங்களோ அவரைப்பற்றி எழுதியதாகவே தோன்றும். ஹி ஹி

பாலா said...

@K.s.s.Rajh

ஆமா செம கலாய்ப்பு. நீங்க டாக்டர் பவர் ஸ்டாரைத்தானே சொல்கிறீர்கள்?

பாலா said...

@ஹாலிவுட்ரசிகன்

உங்கள் சந்தேகத்தை தீர்க்கவே கடைசி படைத்தை இணைத்தேன். நன்றி நண்பா

பாலா said...

@சுசி

உங்க சிரிப்புக்கு நன்றிங்க. ஆனா அர்த்தம்தான் புரியல.

பாலா said...

@விக்கியுலகம்

மாப்ள எஸ்கேப் ஆகாதீங்க

பாலா said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

SAC இந்த பதிவில் கவுரவ வேடத்தில் வருகிறார். கவனிக்கவும். அவர் இல்லாம எழுத முடியுமா?

பாலா said...

@dhanasekaran .S

நன்றி நண்பா

பாலா said...

@அரசன் சே

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@ரஹீம் கஸாலி

நீங்களாவது என்னை ஆசிரியர்னு ஒத்துக்கிட்டீங்களே நன்றி சார்

பாலா said...

@r.v.saravanan

நன்றி நண்பரே

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

ரொம்ப நன்றிங்க. அடிக்கடி வாங்க

பாலா said...

@Yoga.S.FR

நண்பா நீங்களும் என்னை மாதிரியே எழுதி இருக்கீங்க. கலாய்க்கிறீங்களா இல்லை பாராட்டுறீங்களான்னு தெரியல. நன்றி நண்பரே. அப்புறம் நான் டாக்டர் வாங்குற அளவுக்கு தகுதி இல்லை.

பாலா said...

@பி.அமல்ராஜ்

அவர்தான் அடங்காத புயல் ஆச்சே? நன்றி நண்பரே

பாலா said...

@கணேஷ்

என்ன சார். ரெகுலரா படிக்கணும்னு சட்டமா என்ன? நன்றி சார்

vimalanperali said...

இவ்வளவுதானா,இன்னும் இருக்கா?தெரித்துதெர்கிற கேலி கிண்டலில் ந்டை முறை யதார்த்தம் தெரிகிறது.வாழ்த்துக்கள்.

முத்துசிவா said...

//சமீபத்தில் வெளியான அண்ணனின் படம், வெளியிட்ட எல்லா தியேட்டர்களிலும் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. இது உலக சினிமாவில் யாரும் செய்திடாத ஒரு சாதனை//

அடடா... இதுவல்லவா சாதனை... இதுக்கு இன்னும் கொஞ்ச நாள்ல விழா வேற எடுப்பாய்ங்க தல...

கிரி said...

// டாக்டர் மைக்கை பிடித்து, "நான் அதிகம் பேச விரும்பவில்லை. என்னென்னமோ சொல்றாங்க, இந்த படம் பல சாதனைகளை முறியடிச்சிருக்குன்னு சொல்றாங்க. அவதார் வசூலையே மிஞ்சி விட்டதாக சொல்றாங்க. முதலில் நான் நம்பல.//

:-)) தளபதி எப்போதுமே அடக்கம் தான். தன்னடக்கத்தின் சிகரம்.

கமெண்ட் போடுறவங்க எல்லாரும் டாக்குடர் டாக்குடர் என்று கூறுவதால் அவர்கள் முதலில் டாக்குடர் விஜயை பற்றி சொல்கிறார்களா இல்லை டாக்குடர் ஸ்ரீநிவாசன் பற்றி சொல்கிறார்களா என்றே தெரியவில்லை. ஏனென்றால் இரண்டு பேருக்குமே சொல்வது பொருந்துகிறது ஹி ஹி

பாலா said...

@விமலன்

உங்க கருத்துக்கு நன்றி சார்

பாலா said...

@முத்துசிவா

கண்டிப்பா நடக்குதா இல்லையான்னு மட்டும் பாருங்க.... நன்றி தல.

பாலா said...

@கிரி

உங்களுக்கு யாரை பிடிக்குமோ அவரை நினைத்துக்கொள்ளுங்கள். என்னை ஆளை விடுங்கள்... நன்றி நண்பரே

ஷர்புதீன் said...

ha ha ha ha

:-)

பாலா said...

@ஷர்புதீன்

Thanks for your smile.

Unknown said...

@"ராஜா" athukku munnadi neenga unga padatha konjam pakkalame

Related Posts Plugin for WordPress, Blogger...