சொன்னதும், சொல்லாததும்.....
நான் சென்னைக்கு வந்த புதிதில் எல்லோருக்கும் வரும் குழப்பம் எனக்கும் இருந்தது. மாநகரப்பேருந்துகளில் டிக்கட் விலை ஒவ்வொரு பேருந்துக்கும் ஒரு மாதிரி இருக்கும். மஞ்சள், வெள்ளை, நீலம், பச்சை மற்றும் கருப்பு என்று ஏறுவரிசையில் டிக்கெட் நிர்ணயித்திருப்பார்கள். அப்புறம் கலைஞர் ஆட்சியில் தாழ்தள பேருந்துகள், சொகுசு பேருந்துகள் மற்றும் எக்ஸ்ப்ரஸ் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பழைய பேருந்துகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு, இவ்வகை புதிய பேருந்துகள் அதிகரிக்கப்பட்டன. டிக்கட் விலை கொஞ்சம் அதிகமாக இருந்தது. எதிர்ப்புகள் காரணமாக கட்டணத்தை கொஞ்சம் குறைத்தார்கள். ஒரு சில பேருந்துகளில், பழைய விலை, ஒரு சில பேருந்துகளில் புதிய விலை, என்று குழப்பம் நிலவியது. காலப்போக்கில் மக்கள் புதிய விலையோடு பழகி விட்டார்கள். அதன்பின் தங்கரதம் என்று ஒரு பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. கலரில் மட்டுமே வித்தியாசமாக இருந்த அந்த பேருந்தில் டிக்கெட் கட்டணம் மிக அதிகம். பின்னர் அதையும் மக்கள் ஏற்றுக்கொண்டனர். இது போதாதென்று, கட்டணம் அதிகம் உள்ள தங்கரதம், எக்ஸ்ப்ரஸ் போன்ற பேருந்துகள் பீக் அவர் என்னும் முக்கிய நேரங்களில் அதிகம் இயக்கப்பட்டு, குறைந்த டிக்கெட் கட்டணம் உள்ள பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டன. அவசர கதி வாழ்க்கையில் இதையெல்லாம் உற்று நோக்க மக்களுக்கு நேரமில்லை. இருந்தாலும், சொல்லியும் பிரயோசனமில்லை. பழகி கொண்டார்கள். இப்போதும், "சென்னையில் பீக் அவரில் முக்கிய ரூட்களில் எக்ஸ்ப்ரஸ் ரக பேருந்துகள் மட்டுமே அதிக அளவில் இயக்கப்படுகின்றன." என்று என் நண்பன் அலுத்துக்கொண்டான்.
எங்கள் ஊரில், பேருந்து கட்டணங்கள் ஏற்கனவே குழப்பமான சூழ்நிலையிலேயே இருந்து வந்தது. தற்போது கட்டண உயர்வுக்கு பிறகு, ஒரு மாத காலத்துக்கு, தாறுமாறாக வசூலித்து வந்தார்கள். ஆனால் தனியார் பேருந்துகளில் விலையை கொஞ்சமாக உயர்த்தி அதையே மெயிண்டேயின் பண்ணினார்கள். ஆகவே தனியார் பேருந்துகளுக்கு கிராக்கி கூடியது. திடீரென்று அரசு மொபசல் பேருந்துகளும் கட்டணத்தை குறைத்து தனியார் பேருந்துகளின் கட்டணத்தை பின்பற்றினார்கள். ஆனால் எல்லா அரசு பேருந்துகளிலும் இப்படி இல்லை. இதை விட பெரிய காமெடி, நான் கல்லூரி செல்லும் வழித்தடத்தில் மொபசல் பேருந்தை விட, சிட்டி எக்ஸ்பிரஸ் எனப்படும் நகரப்பேருந்துகளில் கட்டணம் அதிகம். இவை மட்டுமே எல்லா நிறுத்தங்களிலும் நின்று செல்லும். ஆகவே கிராமப்புற மக்கள் வேறு வழியே இல்லாமல் இவ்வகை பேருந்துகளையே நாட வேண்டி உள்ளது. இவ்வளவு நாள் வில்லனாக தெரிந்த தனியார் பேருந்துகள் இப்போது ஆபத்பாந்தவனாக தெரிகிறது. நல்ல இருக்கைகள், அதிரடி இசை மட்டுமல்லாமல், திட்டாமல் சில்லறை கொடுக்கும் கண்டக்டர்கள் என்று குறைந்த விலையில் மகிழ்வான பயணம் கிடைக்கிறது. இன்றைய தேதிக்கு, ஒரு பேருந்து தூரத்தில் வருகிறது என்றால், அதில் என்ன கட்டணம் வசூலிப்பார்கள் என்று யாரும் கணித்து விட முடியாது. சில அரசு பேருந்துகளில் சாதாரண கட்டணம் என்று எழுதி வைத்து மக்களை கவர்கிறார்கள்.இவ்வகை குழப்பங்களுக்கு மக்களும் பழகி விட்டார்கள். நான் முதல் பத்தியில் கூறிய செய்தியும், இரண்டாவது பத்தியில் கூறிய செய்தியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதுதான். அம்மா சொல்லிட்டு செஞ்சாங்க. கலைஞர் சொல்லாம செஞ்சார். அதான் சொன்னேன். ஜெயலலிதாவுக்கு சாமர்த்தியம் போதவில்லை என்று.
என் ராத்தூக்கம் போச்சு....
சென்னையில் வாழும் மக்கள் எல்லாம் ஒரு வகையில் புண்ணியம் செய்தவர்கள். அல்லது நம் அரசியல்வாதிகள் வாழும் புண்ணிய பூமியில் இருப்பதால் அந்த அனுக்கிரகம் இவர்களுக்கும் கிடைக்கிறது. ஏனைய தமிழக மக்களுக்கு உண்டாகும் எந்த அசவுகரியமும் மிக குறைந்த அளவிலேயே சென்னையை பாதிக்கிறது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்தால் அது தட்டுப்பாடு. எங்கள் ஊரில் பத்து வருடமாக மழை காலத்திலேயே ஒரு வாரத்துக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் நடக்கிறது. கோடை காலத்தில் இது இருபது நாட்கள் வரை நீளும். இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம். ஓட்டு மொத்த தமிழகமே சென்னையை பார்த்து வயிற்றெரிச்சல் பட்டது மின் வெட்டை பற்றித்தான். ஆனால் ஒரு கட்டத்தில் சென்னைக்கும் மின் வெட்டு அமல் படுத்தப்பட்டபோது, எல்லோரும் உள்ளூற மகிழ்ந்தார்கள். அது ஒரு அல்பசந்தோஷம். "தமிழகம் முழுவதும் ஏற்கனவே 4 மணிநேரமாக இருந்த மின்வேட்டை 8 மணிநேரம் ஆக்க போகிறார்கள்." என்று இன்று பேப்பரில் படித்தேன். ஆனால் எங்க ஊர் ரொம்ப அட்வான்ஸ். ரெண்டு நாளைக்கு முன்னாலேயே தொடங்கி விட்டார்கள். காலையில் 3 மணி நேரம், மதியம் 3 மணிநேரம், மாலையில் ஒண்ணறை மணிநேரம், இரவில் ஒண்ணறை மணிநேரம். "மொத்தம் 9 மணி நேரம் வருகிறதே?" என்ற சந்தேகம் வரலாம். 1 மணி நேரம் என்பது பேரருக்கு கொடுக்கும் டிப்ஸ் மாதிரி போலிருக்கிறது. இதில் உள்ள கொடுமை என்னவென்றால், மாலையில் இருந்து இரவு வரை உள்ள மூன்று மணிநேர மின்வெட்டு, நாலு பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு மணி நேர இடைவெளி விட்டு தூண்டிக்கிறார்கள். நினைத்து பாருங்கள். தூக்கம் வந்து கண் அயரும் நேரம் கரண்ட் கட். பிறகு 45 நிமிடம் கழித்து கரண்ட் வரும். அடுத்து தூக்கம் வர ஒரு அரை மணி நேரம் ஆகும். நன்கு தூக்கம் வந்து அடுத்த 30 நிமிடங்களில் இன்னொரு கட். இப்படி இரவு 1 மணி வரை நடந்தால் ஒரு மனிதன் வாழ்வில் எப்படி நிம்மதியாக இருக்க முடியும். இதில் புழுக்கத்தோடு சேர்ந்து, கொசுக்கள் வேறு காதில் வயலின் வாசிக்கின்றன. என்ன வாழ்க்கைடா?
ஜிந்தாத்தா.... ஜிந்தா ஜிந்தா ஜிந்தாத்தாத்தா...
கர்நாடக சட்ட சபையில் இரண்டு அமைச்சர்கள் (அதில் ஒருவர் பெண்கள் நலத்துறை அமைச்சராம்) இருவர் பலான வீடியோக்களை செல்போனில் பார்த்து கையும் கன்றாவியுமாக சிக்கி இருக்கிறார்கள். முன்பெல்லாம் இந்த மாதிரி செய்தி வந்தால் மக்கள் கோபமடைவார்கள். இப்போது தலையில் அடித்துக்கொண்டு சிரிக்கிறார்கள். மெரினா படத்தில் கடைசியில் சிவகார்த்திகேயன் சிரிப்பாரே, அதே போல ஒரு விரக்தி சிரிப்பு. இன்னும் ஒரு வாரத்தில் காதலர் தினம் வருகிறது. அப்போது தெருத்தெருவாக ரெய்டுக்கு போவார்களே? இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு போவார்கள்? காதலர்கள் திருப்பி மானங்கெட்ட கேள்வி கேட்பார்களே? சில வருடங்களுக்கு முன்னால் பார்ட்டியில் புகுந்து பெண் ஒருவரை பொடதியிலேயே அடித்தார்களே, இவர்களை என்ன செய்வார்கள்?
அதை விடுங்கள். இன்று இந்த நிகழ்வு குறித்து பதிவெழுதும் பதிவர்கள், தலைப்புகள் எப்படி வைப்பார்கள்?
கில்மா பதிவர்கள்
சட்டசபையில் செக்ஸ் வீடியோ?
அமைச்சர் கண்டுகளித்த கிளுகிளு காட்சிகள் - வீடியோ இணைப்புகள்
அமைச்சர் பார்த்த ஆபாச வீடியோ , நடிகை மறுப்பு (இரண்டும் வேறு வேறு செய்திகள்)
புரட்சியாளர்கள்
ஆர்எஸ்எஸ் அம்பிகள் பார்த்த ஆபாச வீடியோ- பல்லிளிக்கும் ஜனநாயகம்
ஆத்திகர்களின் வக்கிரபுத்தி
போதும் இதுக்கு மேல யோசிக்க முடியல....
ஜோக்கா இல்லையா?
செய்தியாளர்கள்:சட்டசபை உறுப்பினர்கள் ரெண்டு பேர் ஆபாச வீடியோ பார்த்ததை படமெடுத்து விட்டார்கள்.
எம்எல்ஏக்கள் :அய்யோய்யோ ........
செய்தியாளர்கள்:அவர்கள் பெயர் லட்சுமண் சவதி, மற்றும் CC பாட்டீல்...
எம்எல்ஏக்கள்:நல்லவேளை... நான் கூட என்னைன்னு நெனைச்சேன்....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.....
33 comments:
அது என்ன சென்னைக்கு மட்டும் மின் வெட்டு இல்லையாம் - ஒ அங்கு தான் மனிதர்கள் வாழ்கிறார்களோ
அட ஆமாம்...அப்புறம் நீங்க சொல்ற மாதிரி இல்ல ..நான் வச்ச தலைப்பு....ஹி ஹி...
அண்ணே....
மின்வேட்டு இபப்டியே போனா நாம கற்காலத்துக்கு போயிரலாம்..
அங்க மின்வெட்டே வராது...
அம்மா இங்கே வாவா ஆசை கரண்டு தாதா...இலையில் சோறு போட்டு fan யை கொஞ்சம் ஓட்டு...இது உனக்கு இது எனக்கு...ஓட்டு மட்டும் அம்மாக்கு ஹிஹி!
இன்னோர் விஷயம் விட்டுட்டனே...
மந்திரி யார் மந்திரி..எல்லாம் வல்ல நமீதா மேல் ஆசை..அதுக்கு பிறகு அனுஷ்கா மேல் ஆசை...மந்திரி நீ எந்திரி...
-- ஓஹோஹோ கிக்கு ஏறுதே...ஒஹோஹோ பொண்ணு ஓடுதே..வெறும் வெஜிடேரியன் பய புள்ள பாக்குதே...மாப்ள பாட்டு போதுமாய்யா!
////ஜோக்கா இல்லையா?
செய்தியாளர்கள்:சட்டசபை உறுப்பினர்கள் ரெண்டு பேர் ஆபாச வீடியோ பார்த்ததை படமெடுத்து விட்டார்கள்.
எம்எல்ஏக்கள் :அய்யோய்யோ ........
செய்தியாளர்கள்:அவர்கள் பெயர் லட்சுமண் சவதி, மற்றும் CC பாட்டீல்...
எம்எல்ஏக்கள்:நல்லவேளை... நான் கூட என்னைன்னு நெனைச்சேன்....////
ஹா.ஹா.ஹா.ஹா...செம ஜோக் பாஸ்
////
கில்மா பதிவர்கள்
சட்டசபையில் செக்ஸ் வீடியோ?
அமைச்சர் கண்டுகளித்த கிளுகிளு காட்சிகள் - வீடியோ இணைப்புகள்
அமைச்சர் பார்த்த ஆபாச வீடியோ , நடிகை மறுப்பு (இரண்டும் வேறு வேறு செய்திகள்)
////
ஹி.ஹி.ஹி.ஹி.....
கும்பகோணத்தில் மின் வெட்டு வெட்டோ வெட்டென்று இருக்கிறது பாலா
என்று தீரும் இந்த மின் வெட்டு ?
கூடங்குளம் அணுமின் நிலையத்தை நியாயப்படுத்த இப்படியொரு திட்டம்!அழுவதா சிரிப்பதா??????
செய்தியாளர்கள்:சட்டசபை உறுப்பினர்கள் ரெண்டு பேர் ஆபாச வீடியோ பார்த்ததை படமெடுத்து விட்டார்கள். ///விடுங்க;வுடுங்க!வூட்டுலதான் தாட்சருன்னா,அங்கயுமா????????
இன்றைய நடப்புகளை அற்புதமாய் வழங்கி இருக்கீங்க ..
ஒன்று இந்த மின்வெட்டு - நாங்கள் ஆட்சிக்கு மின்வெட்டு அறவே ஒழிப்போம் = இது யாரோ சொன்ன தேர்தல் வாக்குறுதி
இரண்டு : இரண்டு நாட்களுக்கு முன்னாடி நான் மக்களிடம் முன்னரே அறிவித்து அவர்களிடம் விளக்கி சொல்லி தான் பேருந்து கட்டணம்
உயர்த்தினோம் ,(பெயரை சொன்னால் குண்டர் தடுப்பு சட்டம் பாயுமாம்)
மூன்று - பெண்களின் நலத்துறை அமைச்சர் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை புரிந்து கொள்ளவே அந்த காட்சியை பார்த்திருக்கின்றார் - இதை சில குறிப்பிட்ட செய்தி நிறுவனங்கள் தான் அவதூறாக செய்தி வெளியிட்டிருக்கின்றது என்ற மறுப்பு செய்தி நாளையே வந்தாலும் ஆச்சர்ய படுவதிற்கில்லை...
சார் நாடு போறே போக்க பார்த்தா என்ன எங்கு நடந்தாலும் எதுவும் சொல்ல முடியாது போல ..
/ (அதில் ஒருவர் பெண்கள் நலத்துறை அமைச்சராம்)
//
அதான் பெண்கள் பற்றி பாத்துருகார்
இன்று
யுவராஜ்சிங்கிற்கு நுரையீரலில் கேன்சர் கட்டியா ?
எல்லோருக்கும் இலவச சிம்னிவிளக்கு கொடுக்கப் போகிறார்களாமே?
@மனசாட்சி
சரியா சொன்னீங்க. சொல்லப்போனா அங்கதான் நாகரீக மனிதர்கள் வாழ்கிறார்களாம். நன்றி நண்பரே.
@NKS.ஹாஜா மைதீன்
விடுங்க அரசியல்ல இதெல்லாம் சகஜம்.
@தமிழ்வாசி பிரகாஷ்
ஏற்கனவே அதற்கான பயணத்தை நாம தொடங்கிட்டோம்.
@விக்கியுலகம்
மாப்ள ரைம்ஸ் சூப்பர். எல்லோருக்கும் சொல்லி கொடுங்க.
@K.s.s.Rajh
வருகைக்கு நன்றி நண்பரே
@r.v.saravanan
கும்பகோணத்தில் மட்டுமல்ல ஓட்டு மொத்த தமிழகமே இப்படித்தான் இருக்கிறது. மின்வெட்டு நிற்க போவதில்லை. நாம் அனைவரும் மின்சாதனங்களை உபயோகப்படுத்துவதை நிறுத்த போகிறோம்.
@Yoga.S.FR
கருத்துக்கு நன்றி நண்பரே
@அரசன் சே
நீங்க சொல்றது கரெக்ட்தான் நண்பரே. ஓட்டு போட்டுட்டு புலம்பத்தான் முடியுது.
@"என் ராஜபாட்டை"- ராஜா
வருகைக்கு நன்றி நண்பரே
@விமலன்
சிம்னி விளக்கு கொடுப்பாங்க சார். மண்ணெண்ணை யார் கொடுக்குறது? வருகைக்கு நன்றி சார்.
நாட்டு நடப்புகளை அழகா அலசி இருக்கீங்க.. அம்மாவுக்கு தில்லு அதிகம்.. அய்யாவுக்கு பயம் அதிகம்.. இவங்க ரெண்டு பேருக்கும் இதுதான் ஒரே வித்தியாசம்..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
@Sankar Gurusamy
கருத்துக்கு நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க
// புரட்சியாளர்கள்
ஆர்எஸ்எஸ் அம்பிகள் பார்த்த ஆபாச வீடியோ- பல்லிளிக்கும் ஜனநாயகம்
ஆத்திகர்களின் வக்கிரபுத்தி //
I condemn the usage of the word 'ஆத்திகர்களின்' here.
I should actually have been 'ஆட்சியாளர்களின் / அமைச்சர்களின்'.
Even the usage of 'RSS' should have been avoided. The real meaning of RSS is 'Rashtriya Swayamsewak Sangh' -- meaning a group of people who do their jobs/fulfilment by using their own/national resouces without depending upon other countries. This was created with the love to the nation. just based on 'patriotism' -- please avoid using these valuable words for wrong doings..
@Madhavan Srinivasagopalan
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. உங்களுடைய கருத்துதான் என்னுடைய கருத்தும். ஆனால் ஒரு சில பதிவர்கள் இப்படித்தான் தலைப்பு வைப்பார்கள் என்று பகடி செய்துள்ளேன். அவ்வளவே.....
பேருந்து கட்டணம் மற்றும் மின்வெட்டு பற்றிய பலர் மனதிலும் இருக்கும் ஆதங்கத்தை தங்கள் ப்திவில் நன்றாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்!
இன்னும் ஒரு மாசம் போகட்டும். 24 மணி நேரமும் கரண்ட் இருக்காது.. அவுங்களால நமக்கு இருக்குற ஒரே ஆதாயம் கரண்ட் பில் வராது. டிவி சீரியல் பாக்க தேவையில்லை. மனைவி மக்களுடன் பேச நேரம் கிடைக்கும். ரேடியோவுக்கு மவுசு வரும்.
உங்களின் சிறந்த இடுகை இஸ்ரப்பன செய்திகளை அலசி இருக்கிறது தெளிவான பார்வை கருநாடக அமைச்சர்களை சாடிய விதமும் கூடங்குள திறப்பு விழாவிற்கு அடிக்கல் நாட்ட அரசுகள் இப்படி ஒரு மின்வெட்டு திணிப்பை செய்ய முயலாம் சிறப்பு பாராட்டுகள் ...
வணக்கம் பாலா சார்,திரு அட்சயா அவர்களால் எனக்கு அளிக்கப்பட்ட versatile Blogger award ஐ தங்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்,
தாங்களும் ஐவருக்கு இந்த விருதை பரிந்துரைக்கவும்.நன்றி.
@விமலன்
என்னையும் மதித்து விருது அளித்ததற்கு மிக்க நன்றி சார்.
Post a Comment