விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

November 17, 2011

அஜீத் என்ற அமெரிக்க கைக்கூலி


ஹிட்லரை பற்றி ஒரு விஷயம் சொல்வார்கள். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையுமே கேட்பவரை உடனே பாதித்துவிடும். அது எந்தவிதமாக என்பது வேறுவிஷயம். அவரது நோக்கம் கேட்பவர் தன் வார்த்தைகளால் உலுக்கப்பட வேண்டும். அதுதான் முக்கியம். இந்த தலைப்பை பார்த்தவுடன் எல்லோருமே கொஞ்சம் துணுக்குற்றிருப்பீர்கள். எனக்கு அதுதான் வேண்டும். எனக்கு மட்டுமல்ல பதிவுலகில் பெரும்பாலானோருக்கு இதுதான் வேண்டும். பதிவுலகிற்கு வந்து கொஞ்ச நாளிலேயே நாம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். ஒரு வார்த்தையை பார்த்தவுடன், அதை சொன்னவர் யார்? என்று எளிதில் கண்டுபிடித்துவிடலாம். சரி இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு யார் நினைவுக்கு வருகிறார்கள்? யாரும் நினைவுக்கு வரவில்லையா? சரி விடுங்க. அடுத்த பத்திக்கு போகலாம். 


நான் பதிவுலகிற்கு வரும் முன்னரே கம்யூனிசம் மீது கொஞ்சம் ஆர்வம் இருந்தது. அதை பற்றி தெரிந்து கொள்ள பல முயற்சிகள் எடுத்தேன். அதன் பின்னர் பதிவுலகில் நிறைய தோழர்கள் எழுதுகிறார்கள் என்றவுடன், அது பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம் என்றும் எண்ணி மகிழ்ந்தேன்.சில பல பதிவுகளை படிக்க தொடங்கிய பின் இருந்த கொஞ்ச நஞ்ச விருப்பமும் இல்லாமல் போய்விட்டது. சொல்லப்போனால் இப்போதெல்லாம் கம்யூனிசம் என்றால் ஏதோ தீவிரவாதிகளின் சித்தாந்தம் என்பது போல தோன்றுகிறது. இது இவர்களின் பிரச்சனையா? இல்லை கம்யூனிசமே இப்படித்தானா? இல்லை எனக்குத்தான் பிரச்சனையா? என்று தெரியவில்லை. என்னை மாதிரியான ஆட்களுக்கென்றே பிரேத்யேகமாக ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். அதுதான் "பொதுபுத்தியில் உறைந்து போன நடுத்தர வர்க்கம்". இந்த வார்த்தைகளை படிக்கும்போதெல்லாம் எனக்கு "தெருநாயின் புத்தியை உடைய", என்றே காதில் கேட்கிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னை ஒரு ஈனபிறவியாக நினைக்க வைத்த பெருமை பதிவுலக காம்ரேடுகளையே சாரும். என்னை பொறுத்தவரை ஒருவன் கீழ்நிலையில் இருக்கிறான் என்றால் அவனுக்கு போதிய அறிவை கற்பித்து அவனை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர மிகுந்த பொறுமை வேண்டும். அந்த மாதிரி கீழ்நிலையில் இருக்கும் என்னை மாதிரி ஆட்களுக்கு இவர்கள் எழுதும் வார்த்தைகள் வெறும் நக்கல் நையாண்டியாகவும், கோபமேற்றுவதாகவுமே உள்ளது. இதுதான் அவர்களது எழுத்தின் நோக்கமா?


சமீபத்தில் நடிகர் அஜீத் அவர்களைப்பற்றிய ஒரு கடுமையான விமர்சன கட்டுரையை ஒரு தளத்தில் அவர்கள் எழுதி இருந்தார்கள். அதனை படித்த கோபத்தில்தான் இந்த பதிவை நான் எழுதுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். கொஞ்ச நாளைக்கு முன்னால் சூர்யா பற்றியும் எழுதி இருந்தார்கள். இது மட்டுமல்லாமல் அப்துல்கலாம், உதயமூர்த்தி உள்ளிட்ட சில சமூக ஆர்வலர்கள் பற்றியும், அவ்வப்போது அருவருக்கத்தக்க வார்த்தைகளை நிரப்பி கட்டுரைகள் எழுதுவது வாடிக்கை. அந்த வகையில் அஜீத் பற்றி எழுதப்பட்டிருந்த அந்த கட்டுரையில் அவர்களது அடிப்படை சித்தாந்தக் கருத்துக்களையும் சேர்த்திருந்தார்கள். இந்த கட்டுரையை படித்தவுடன் என் மனதில் தோன்றிய எண்ணம், அஜீத் செய்தது சரியா தவறா? அடுத்தவருக்கு அன்பின் வெளிப்பாடாக விருந்து படைக்க வேண்டுமானால் கூட அதற்கு தோழர்களின் சம்மதம் வாங்கவேண்டும் போலிருக்கிறது. சமூகத்தில் பிறருக்கு நல்லது செய்பவனுக்கேன்றே சில தகுதிகள் வைத்திருக்கிறார்கள். அவன் பணம் சம்பாதிக்கக்கூடாது, சிகப்பாக இருக்கக்கூடாது, குறிப்பாக இந்துவாகவோ,பார்ப்பனராகவோ இருக்கக்கூடாது. அப்படி உதவி செய்தாலும் அதை வெளியே சொல்லக்கூடாது. ஆனால் மேற்படி நடிகர் ஒரு சிகப்பு சட்டைக்காரராக இருந்திருந்தால், மேலே உள்ள தகுதிகள் எதுவும் செல்லாது. அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த ஜாதியை, எந்த மதத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம். சும்மா வந்து கொடி பிடித்தாலே அவரது போட்டோவோடு, "எல்லோராலும் 'தல' என்று அன்பாக அழைக்கப்படும் தோழர் அஜீத்குமார்!!", என்று கட்டுரை எழுதுவார்கள். இதுதான் கம்யூனிசமா? எனக்கு தெரியவில்லை. உயர்சாதியில் பிறந்ததாலேயே ஒருவன் அயோக்கியனாகத்தான் இருப்பான் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான கருத்து.


"ஹிந்துவாக பிறந்தவனுக்கு தன்மானம் என்பதே கிடையாது.", என்கிற நோக்கில் இவர்கள் எழுதும் கட்டுரைகள் விழிப்புணர்வுக்கு மாறாக, கோபத்தையே உண்டு பண்ணுகிறது. இவர்களின் கட்டுரை எப்போதுமே சிறுபான்மையினரை நோக்கியே இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த நாடாக இருந்தாலும், அங்கே சிறுபான்மையினரை கவர்ந்திழுப்பதே இவர்களது நோக்கம். ஏனென்றால் அவர்கள்தான் கொஞ்சம் சீண்டினாலும் சிலிர்த்து எழுந்து விடுவார்கள். முதலில் இவர்களது கட்டுரைகளில் கொஞ்சம் நியாயம் இருப்பது போல தென்பட்டாலும், இவர்கள் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து எழுதுவது, அதனை எதிரியாக பாவிப்பவர்களை கவர்வதற்காக, என்று அப்பட்டமாக தெரிகிறது. அதே போல, "இந்த சமூகத்தில் நல்லது செய்பவன் கண்டிப்பாக கம்யூனிஸ்டாக மட்டுமே இருக்கவேண்டும். அதிலும் அவன் தங்கள் அமைப்பைச் சேர்ந்த கம்யூனிஸ்டாக மட்டுமே இருக்கவேண்டும்.", என்ற நோக்கம் இவர்களது கட்டுரைகளில் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு கட்டுரையிலும 'பார்ப்பன' என்ற வார்த்தையை பயன்படுத்தத் தவறுவதே இல்லை. சரி அவர்கள் சித்தாந்தப்படி எண்ணவேண்டுமானாலும் எழுதிக்கொள்ளட்டும். சம்பந்தப்பட்ட கட்டுரை படிப்பவர்களை சிந்திக்க வைப்பதை விட, வெறியேற்றவே செய்கிறது. குறிப்பிட்ட மனிதரை, சாதியை, எதிரியாக பாவிப்பவர்கள் தங்களது வயிற்றெரிச்சலை போக்கி கொள்ளும் இடமாகவே இருக்கிறது. படிப்பவர்கள் எந்த மன நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று இந்த மாதிரி எழுதப்படும் கட்டுரைகளுக்கு வரும் கருத்துரைகளைப் படித்தாலே தெரியும். இதுதான் அவர்களுக்கு வேண்டும். நாம் நினைப்பது போல புதிய சமுதாயம் மலரவேண்டும் என்பது அவர்களது நோக்கம் அல்ல. அவர்களின் நோக்கம் எல்லாம் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு இளைஞர் கூட்டத்தை உருவாக்குவதுதான். அவர்களே பல இடங்களில் தங்களை நக்சல் அமைப்பு என்று பெருமைப்படக் கூறிக்கொள்கிறார்கள். 


இது போல சிகப்பு சாயம் பூசிக்கொண்டு மறைமுகமாக இந்தியாவில் பல தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. இவை புரட்சி என்ற பெயரில் நாட்டில் இனத்தின், மதத்தின், வர்க்கத்தின் பெயரால் குழப்பம் விளைவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. நாமெல்லாம் நினைப்பது போல தீவிரவாதிகள் தங்களுக்கென்று வைத்திருக்கும் வலைத்தளங்கள் அனைத்துமே, "நாங்கள் தீவிரவாதிகள்", என்று சொல்லிக்கொள்வதில்லை. "நாங்கள் சமூக ஆர்வலர்கள். புதிய சமுதாயத்தை மலரச்செய்வோம்.", என்றே கூறிக்கொள்கின்றன. நம் ஆழ்மனதில் உள்ள ஆதங்கங்களை கண்டு பிடித்து, அதற்கு புது அர்த்தம் கற்பித்து, நம்மை மூளைச்சலவை செய்து, ஒரு தேச விரோதியாக மாற்றுவதே இவர்களின் நோக்கம். இவர்கள் பின்னால் செல்வதும், ஒரு சாதி சங்கத்தலைவர் பின்னால் செல்வதும் ஒன்றுதான். இவர்கள், "இன்றுவரை இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது." என்று சொல்லி வருகிறார்கள். உண்மைதான். எல்லா நாடுகளுமே ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்புவரை கிடையாதுதான். அதற்காக அனைத்தையும் பிரித்து விட்டால் எஞ்சி இருப்பது சூடுகாடுகள் மட்டுமே. நண்பர்களே பூணூல் போட்டிருககும் எல்லாம் பார்பனியம் அல்ல. பல நேரங்களில் அது சிகப்பு சட்டையும் போட்டிருக்கும் என்பதை மறவாதீர்கள்.


பின்குறிப்பு: இந்த கட்டுரை எழுத. நான் அமெரிக்கா உள்ளிட்ட எந்த முதலாளித்துவ நாட்டிடமும், காங்கிரசிடமும், இந்து முன்னணி உள்ளிட்ட எந்த இந்துத்வா அமைப்பிடமும் கூலி எதுவும் பெறவில்லை. மேலும் சினிமாக்காரன் பின்னால் செல்லும் விசிலடிச்சான் குஞ்சும் அல்ல. நான் சாதாரண, தெருநாய் புத்தி உள்ள சாரி, பொதுபுத்தி உடைய நடுத்தர வர்க்கம். அவ்வளவுதான். 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


72 comments:

நம்பிக்கைபாண்டியன் said...

எதையும் நடுநிலையோடு சிந்தித்து எழுதச்சொல்லி நடுநிலையோடு வலியுறுத்தியிருக்கிறீர்கள்,

Unknown said...

வாதம் நியாயமானது தான்.ஆனால் திருத்தத முடியாது என்பதே உண்மை

Philosophy Prabhakaran said...

// இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு யார் நினைவுக்கு வருகிறார்கள்? //

சந்தேகமே இல்லாமல் வினவு தோழர்கள் நினைவுக்கு வருகிறார்கள்...

ஆபீஸ் செல்லும் அவசரத்தில் இருக்கிறேன்... இரவு முழுமையாக படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன்...

Unknown said...

தமிழ்மணம் சமர்ப்பிச்சு விட்டேன்

எப்பூடி.. said...

கால் மார்க்ஸ், பிரட்டிக் ஏங்கல்ஸ், மாவோ, ஸ்டாலி, லெனின் என நிறைய புத்தகங்களை வாங்கிப்படித்தேன்; கம்யூனிசம் மீது மரியாதை ஏற்ப்பட்டது; பதிவுலகில் கம்யூனிச பதிவுகளை படித்தேன், குறிப்பாக 'வினவு', கம்யூனிசத்திற்கும் தீவிரவாதத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை; பாருங்கள் இங்கு கூட நமக்குள் ஒற்றுமை!!!

முன்பெல்லாம் இவர்கள் எழுதும் மலங்களை (அவர்களது பாஷைதான்) வாசிக்கும்போது ஆத்திரம் வரும், இப்பெல்லாம் சிரிப்பு வருது.....

பாலா said...

@மைந்தன் சிவா

நன்றி நண்பரே. யாரையும் நம்மால் திருத்த முடியாது. முடிந்தவரை நாம் விழிப்புணர்வோடு இருந்தாலே போதும்.

பாலா said...

@Philosophy Prabhakaran

பொறுமையா படிங்க நண்பா.

பாலா said...

@எப்பூடி..

தலைவரே நீங்கள் சொன்னது போல, மார்க்ஸ், ஸ்டாலின் ஆகியோரது புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு என்னுள் கம்யூனிசத்தின் மீது ஈடுபாடு உண்டாக்கின. ஆனால் அதனை தற்காலத்தில் எப்படி வளைத்து விட்டார்கள் எனும்போதுதான் வருத்தம் ஏற்படுகிறது. நன்றி தலைவரே.

தடம் மாறிய யாத்ரீகன் said...

அந்த பதிவுகளை படிக்குபோது எனக்கு ஏற்பட்ட உணர்வு என்னவென்றால், எல்லோரையும் குறை கூறுவதுதான் கம்யுனிசமா என்று. ஏன் எனில் யாரை பார்த்தாலும் குறை எதை செய்தாலும் ஒரு குட்டு. படிப்பதையே நிறுத்திவிட்டேன் இப்போது.

MANO நாஞ்சில் மனோ said...

ஏ யப்பா இம்புட்டு சாட்டையடி யாருக்கு...???

MANO நாஞ்சில் மனோ said...

திருந்தினால் சரிதான்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களுடைய நியாயம் கோவமும் ஏற்புடையதுதான் நண்பரே..

கேட்பதற்க்கு ஆள் இல்லை என்பதற்க்காக தன் எது வேண்டுமானாலும் சொல்லிவிடாலம் என்று இருக்கும் கூட்டத்தை ஓரம் கட்டவேண்டும்.

ஒரு மனிதனின் செயல் எப்போதும் நடுநிலையோடு இருக்கவேண்டும். அதை மீறுபவர்கள் தேவையில்லாமல் மற்றவர்களை புரளிச்சொல்லி குறைகூறுபவர்கள் இந்த உலகிற்கே தேவையில்லாதவர்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////////
"இந்த சமூகத்தில் நல்லது செய்பவன் கண்டிப்பாக கம்யூனிஸ்டாக மட்டுமே இருக்கவேண்டும். அதிலும் அவன் தங்கள் அமைப்பைச் சேர்ந்த கம்யூனிஸ்டாக மட்டுமே இருக்கவேண்டும்.",/////

கம்யூனிஷம் என்ற போர்வையில் அவர்கள் செய்வது சொல்வது போன்றவற்றை கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருக்க முடியாது.

உண்மையான கம்யூனிஷம் என்பது எல்லாவற்றையும் பகுத்தறிவோடும் சமநிலையோடு மற்றவர் மனது புண்படாதமாதிரி நடந்துக்கொள்வதில்தான் இருக்கிறது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////"நாங்கள் சமூக ஆர்வலர்கள். புதிய சமுதாயத்தை மலரச்செய்வோம்.",
//////

இதைச்சொல்லிதான் தன்னுடைய பக்கம் நிறைய நியாயம் இருப்பதாக காட்டிக்கொள்கிறார்கள்...


பொதுமக்களை கொன்று விட்டுப்போகும் தீவிரவாதிகளிக் செயவை எப்படி புனிதபோர் என்று எடுத்துக்கொள்ள முடியும்...

K.s.s.Rajh said...

ஏதோ தாங்கள் மட்டும்தான் சமூக சீர்த்திருத்த வாதிகள் போல தாங்கள் சொல்வது எல்லாம் சரி என்று செயற்படுவதுதான் இதற்கு பிரதான காரணம்.

நியாயமான ஆதங்கம் உங்களுடையது

பாலா said...

@அசோக் குமார்

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@MANO நாஞ்சில் மனோ

அவர்கள் திருந்துவார்கள் என்பது நடக்காத காரியம். நாம அலார்டா இருந்துக்க வேண்டியதுதான். நன்றி நண்பரே

பாலா said...

@கவிதை வீதி... // சௌந்தர் //

பதிவுலகத்துக்கு வருவதற்கு முன்னால் நான் அறிந்திருந்த கம்யூனிசம் வேறு. அந்த எண்ணங்களை அழித்ததே இந்த மாதிரி தளங்கள்தான். நன்றி நண்பரே

பாலா said...

@K.s.s.Rajh

நன்றி நண்பரே.

arasan said...

அடி செம அடி .. வரிகளில் அனலும், ஆதங்கமும் சேர்ந்தே இருக்கின்றது

சந்தானம் as பார்த்தா said...

தலைப்பை பார்த்து ஓடி வந்தேன்...

//இப்போதெல்லாம் கம்யூனிசம் என்றால் ஏதோ தீவிரவாதிகளின் சித்தாந்தம் என்பது போல தோன்றுகிறது.
//

அவனுங்க அப்படித்தான்...

ஒசை said...

பிரமிப்பா தெரிந்தது - இன்று அருவருப்பா தெரியுது. இந்த உருமாற்றம் அவர்களுக்கு பின்னடைவு தானே.

passerby said...

//இந்த கட்டுரை எழுத. நான் அமெரிக்கா உள்ளிட்ட எந்த முதலாளித்துவ நாட்டிடமும், காங்கிரசிடமும், இந்து முன்னணி உள்ளிட்ட எந்த இந்துத்வா அமைப்பிடமும் கூலி எதுவும் பெறவில்லை//


இனி கிடைக்கும். இப்படி எழுதுபவர்களைக் குறிவைத்து இந்துத்வாவினர் அலைகிறார்கள்.

//உயர்சாதியில் பிறந்ததாலேயே ஒருவன் அயோக்கியனாகத்தான் இருப்பான் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான கருத்து.//

நீங்கள் உயர்சாதி என்று எப்படி முடிவு கட்டினீர்கள் ? உங்களுக்கு யார் அந்தப்பட்ட்த்தைத் தந்த்து?

passerby said...

//இந்துவாகவோ,பார்ப்பனராகவோ இருக்கக்கூடாது. அப்படி உதவி செய்தாலும் அதை வெளியே சொல்லக்கூடாது//

உதவி செய்பவன் தன் அடையாளத்தைக்காட்டியோ, அல்லது அதைச் சட்டை பண்ணியோ செய்யமாட்டான். எவரின் அங்கீகாரத்தை எதிர்பார்த்தோ செய்யமாட்டான். அப்படி இருக்க நீங்கள் எப்படி இப்படி கற்பனை பண்ணுகிறீர்கள்?
பொதுவுடமைக் கருத்துகள் அதாவது கம்யூனிசம் எனபது நீங்களாகவே தெரிந்துகொள்வது. அதை வினவு தோழர்கள் கெடுத்தார்கள்; மாவோயிஸ்டுகள் அழித்தார்கள். வங்க கம்யூசினிஸ்டுகள் கிழித்தார்கள் என்றெல்லாம் கம்யூனிச கருத்துக்களை ஏற்றுக்கொள்பவன் செய்யமாட்டான்.
உங்களுக்குப்பிடிக்கவில்லை. அதை நேராகச் சொல்ல தைரியமுமில்லை. பழைய சட்டையைக் கொலுவ ஒரு பழைய ஊக்கியைத் தேடி கடைசியில் வினவில் மேல் போய் மாட்டுகிறீர்கள்.

பி இண்டிபெண்ட்ட்

baleno said...

சமூகத்தில் பிறருக்கு நல்லது செய்பவனுக்கேன்றே சில தகுதிகள் வைத்திருக்கிறார்கள். அவன் பணம் சம்பாதிக்கக்கூடாது, சிகப்பாக இருக்கக்கூடாது, குறிப்பாக இந்துவாகவோ,பார்ப்பனராகவோ இருக்கக்கூடாது.
ஹிந்துவாக பிறந்தவனுக்கு தன்மானம் என்பதே கிடையாது.", என்கிற நோக்கில் இவர்கள் எழுதும் கட்டுரைகள் விழிப்புணர்வுக்கு மாறாக, கோபத்தையே உண்டு பண்ணுகிறது.
எல்லா நாடுகளுமே ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்புவரை கிடையாதுதான். அதற்காக அனைத்தையும் பிரித்து விட்டால் எஞ்சி இருப்பது சூடுகாடுகள் மட்டுமே.

அருமையான உண்மைகள் நண்பரே. பாராட்டுக்கள்.

passerby said...

கம்யூனிஸ்டுகள் எவ்வளவோ செய்கிறார்கள்! செய்திருக்கிறார்கள் !! செய்து கொண்டும் வருகிறார்கள் !! பலதரப்பட்ட ஊழியர்களுக்கும், பலதரபட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கும் அவர்கள்தான் ஆதிக்கச்சக்திகளோடு போராடி உரிமைகளை வாங்கித்தந்திருக்கிறார்கள். உத்தபுரத்தில் இன்று தலித்துகள் அனுமதிக்கப்ப்ட காரணம் கம்யூனிஸ்டுகளின் தூண்டலே. உலமெங்கும் இந்த ஊரை நாற்டிக்க இன்னும் நாறவேண்டாம் என நினைத்தே பிள்ளைகள் இன்று இறங்கி வந்து தாங்களாகவே செய்கிறோம் என ஊரை ஏமாற்றுகிறார்கள். சங்கர்ராமன் கொலையில் சங்கராச்சாரியாரை உள்ளே போடு என தெருவில் இறங்கி போராடி வெற்றிபெற்றவர்கள். படிப்பறிவா சுரண்டப்படும் சாலைத்தொழிலாளர்கள், தீப்பெட்டித் தொழிலாளர்கள். பட்டாசுத் தொழிலாளர்கள் – இவர்களையெல்லாம் இவர்கள வாழ்க்கை உரிமைகளுக்காக போராடுவது யார்? நடிகனுக்கு வால்பிடிப்பவர்களா ? தன் ஜாதி உயர்சாதி என்று வலைபதிவில் தம்பட்டம் அடிப்பவர்களா? நீங்கள் எல்லாரும் கணப்தி ஹோம்ம் வளர்த்து, வளர்க்க உண்டியல் பிரிக்க அவர்கள் உழைக்கும் ஏழைத்தொழிலாளிகளுக்காக போராடுகிறார்கள்.
உங்களால் முடியாது. சுகங்கண்ட வர்க்கம் நீங்கள். எனவே உதவியில்லாவிட்டாலும் உபத்திரமில்லாமல் இருக்கப்பழகிக்கொள்ளுங்கள்.


உயர்சாதியாம் ! என்ன திமிர் !!

பாலா said...

@அரசன்

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@சந்தானம் as பார்த்தா

//அவனுங்க அப்படித்தான்...

ஒரே வரியில சுருக்கமா சொல்லீட்டீங்களே? நன்றி நண்பரே....

பாலா said...

@ஒசை.

கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@baleno

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே

பாலா said...

@passerby

நண்பரே உங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்....

இந்துத்வா கொடுத்தாலும் நான் பெறுவதில்லை. ஏனென்றால் பணம் கொடுத்து வளர்க்கும் எதுவுமே நல்ல சித்தாந்தம் அல்ல என்பது என் கருத்து.

கட்டுரையை படிப்பதற்கு முன் நீங்களாகவே முடிவு கட்டிக்கொண்டு படித்தால் நான் என்ன செய்வது. நான் உயர்சாதி என்று உங்களிடம் சொன்னேனா? சரி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிர்பதமாக என்ன வார்த்தை எழுதினாலும் உங்களுக்கு கோபம் வருமே? எப்படி மொழி பெயர்த்தாலும் தப்பாகத்தானே வருகிறது?

Be Independant

இதுதான் இந்த கட்டுரையின் சாராம்சமே.... ஆனால் நான் சொன்ன உயர்சாதி என்ற ஒரே வார்த்தை உங்கள் கண்களை மறைத்து விட்டது. கம்யூனிசம் என்பது தவறு என்று இந்த கட்டுரையில் எங்காவது சொல்லி இருக்கிறேனா என்று பாருங்கள்.

பாலா said...

@passerby

//நடிகனுக்கு வால்பிடிப்பவர்களா ? தன் ஜாதி உயர்சாதி என்று வலைபதிவில் தம்பட்டம் அடிப்பவர்களா?

இது என்னை பார்த்தா என்று தெரியவில்லை. இந்த வலைத்தளத்தில் எங்காவது ஒரு இடத்தில் என் ஜாதி அடையாளத்தை நான் காட்டி இருக்கிறேன் என்று நீங்கள் நிரூபித்தால், இதோடு நான் எழுதுவதை விட்டுவிடுகிறேன்.

//நீங்கள் எல்லாரும் கணப்தி ஹோம்ம் வளர்த்து, வளர்க்க உண்டியல் பிரிக்க அவர்கள் உழைக்கும் ஏழைத்தொழிலாளிகளுக்காக போராடுகிறார்கள்.

இதுவும் ஒரு குறிப்பிட்ட சாதியை சாடித்தான் இருக்கிறது. எங்கள் வீட்டில் இதுவரை ஒரு முறை கூட கணபதி கோமம் நடந்தது கிடையாது. ஆகவே இவை என்னை சேராது.

//உங்களால் முடியாது. சுகங்கண்ட வர்க்கம் நீங்கள். எனவே உதவியில்லாவிட்டாலும் உபத்திரமில்லாமல் இருக்கப்பழகிக்கொள்ளுங்கள்.


என் பரம்பரையில் கல்லூரி வாசலை மிதித்த முதல் பையன் நான். நான் சுகம் கண்ட வர்க்கம் என்று சொல்வதை கண்டால் எனக்கு சிரிப்பு வருகிறது.

//உயர்சாதியாம் ! என்ன திமிர் !!

இதுதான் நண்பா பிரச்சனையே... நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொள்ளாமலேயே, நான் என்னையே உயர்சாதி என்று திமிரோடு பறைசாற்றி கொண்டுவிட்டதாக நீங்கள் நினைத்துக் கொண்டால் நான் எப்படி பொறுப்பாக முடியும்?

Arun Ambie said...

கம்யூனிசம் செத்து மாமாங்கங்கள் ஆகிவிட்டன. சீனா இன்று ஏகாதிபத்தியக் கனவுகளோடு தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது. இறப்பை ஏற்க மறுத்துப் பிணத்தோடு வாழ்க்கை நடத்தும் மன்நோயாளிகளே இன்றைய தீவிர கம்யூனிஸ்டுகள். இவர்களை மதித்து இவர்களுக்கு மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டுமா? இந்தக் கும்பல் கூடிய விரைவில் நீர்த்துப் போகும்.

test said...

விடுங்க பாஸ்! அவிய்ங்க அப்பிடித்தான்!

ஒருவர் வந்து ஒழுங்கா வாசிக்காம, கட்டுரைக்கு சம்பந்தமே இல்லாம பொங்கிட்டு போயிருக்காரே! :-)

கேரளாக்காரன் said...

Kobamaaga karuthu sollalaamaa?

Jayadev Das said...

ஒரு முறை நடிகர் சூர்யா நடத்தும் அகரம் என்னும் நற்ப்பணி மன்றத்தை பற்றி இவர்கள் சாடி எழுதியிருந்தார்கள். அதை அவர் ரகசியமாய்ச் செய்திருக்க வேண்டுமாம். அவரது படங்கள் ஓடுவதற்காக நற்ப்பணி செய்வதாகக் காட்டிக் கொள்கிறாராம். [இதுல கொஞ்சமாவது லாஜிக் இருக்குதான்னு நீங்களே பாத்துக்குங்க!!]. இதைப் போல கேனத்தனம் வேறென்ன இருக்க முடியும்? அப்படி ஓடுவதென்றால் எல்லா நடிகனும் ஏதாவது ஒன்றை ஆரம்பித்து எல்லாப் படங்களையும் ஓட வைத்துவிடுவானே? இதை மறுத்து பின்னூட்டமிட்டேன், அவர்களுடைய கூலிப்படை ஆட்கள் என்னை பிடித்துக் கொண்டு தகாத வார்த்தைகளில் விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள். நற்ப்பணியை விளம்பரப் படுத்தினால் என்ன தவறு, மேலும் பலருக்கு இது தெரிய வரும், பணத்தை வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்று முழித்துக் கொண்டிருப்பவர்களும், இது குறித்து தெரிய வந்தால் உதவ முன் வரவும் செய்வார்கள். தவறென்ன?

Unknown said...

நல்ல அலசல்! வன்முறை மட்டுமே கம்யூனிஸ சித்தாந்தம் இல்லை, என்று உணர முன்வர வேண்டும்! சாடுவதில் வேகம் காட்டினால் அடிப்பொடிகள் வேண்டுமெனில் கை தட்டி,வாய் திட்டி மகிழ்வர்!

எப்பூடி.. said...

சொல்வதை புரிஞ்சிக்கவே முடியாத, புரிந்துகொள்ள முயர்ச்சிக்காத, தாம் சொல்வது மட்டுமே சரி என எண்ணும், தமக்கு ஆகாதவங்களை (இவங்களை தவிர மத்த எல்லோருமே ஆகாதவங்க) தூற்றுவது, பிடித்தவங்களை (தங்களுக்குள்ளேயே) போற்றுவது, தமது குழுவினருக்கு ஒத்து ஊதுவது என மிகவும் பரிதாபமான கேவலமான நிலையில் கம்யூனிசம் இருப்பது வேதனையான விடயம்.

இந்த போலி கம்யூனிசம் செய்யும் பங்கு என்ன தெரியுமா? பார்ப்பனியத்தையும், முதலாளித்துவத்தையும், போலி அரசியல்வாதிகளையும் வளர்த்து விடுவதுதான். இவர்கள் செய்வதற்கு (வினவு) பெயர் கம்யூனிசம் என்று நினைத்தால் அது நகைப்பிற்கிடமானது. இங்குகூட பொங்கியிருக்கும் 'அன்பர்' ஒருவர் பதிவை முழுமையாக படிக்காமல் எழுந்தமானமாக பதில் சொன்னதை பார்க்கும்போதே புரியவில்லையா 'மார்க்சும் ஏங்கல்சும் பாடுபட்டு பரப்பிய கம்யூனிசத்தின் இன்றையநிலை என்னவென்று' !!!!!

rajamelaiyur said...

அவனுங்க கிடக்கனுங்க .. தல தல தான் .. நாங்கள் ஜாதி பார்ப்பதில்லை .. சாதியை பார்க்கும் நாய்களை பற்றி கவலை இல்லை ..
அன்புடன்
ராஜா

நெருப்பு நரியுடன்(FIREBOX) சில விளையாட்டுகள்.

பாலா said...

@Arun Ambie

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

பாலா said...

@ஜீ...

அவரை சொல்லியும் குற்றமில்லை. கம்யூனிசம் மீதான அபிமானத்தால்தான் அப்படி கூறி இருக்கிறார். நன்றி நண்பரே.

பாலா said...

@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )

கோபமாக கருத்து சொல்லலாம். நிதானமில்லாமல்தான் கருத்து சொல்லக்கூடாது. நன்றி நண்பரே

பாலா said...

@Jayadev Das

ஒவ்வொரு கட்டுரைக்கும் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நினைப்பேன், ஆனால் அங்கே இருப்பவர்கள் அதை இதை சொல்லி ரூட்டையே திருப்பி நம்மை காமெடி பீஸ் ஆக்கி விடுகிறார்கள். சூர்யா பணத்தை எல்லாம் இவர்கள் உண்டியலில் போட்டிருந்தால் அப்படி எழுதி இருக்க மாட்டார்கள், நன்றி நண்பரே.

பாலா said...

@ரமேஷ் வெங்கடபதி

சரியாக சொன்னீர்கள். வன்முறை மட்டுமே கம்யூனிச சித்தாந்தம் இல்லை. நன்றி நண்பரே.

பாலா said...

@எப்பூடி..

// தமக்கு ஆகாதவங்களை (இவங்களை தவிர மத்த எல்லோருமே ஆகாதவங்க) தூற்றுவது, பிடித்தவங்களை (தங்களுக்குள்ளேயே) போற்றுவது, தமது குழுவினருக்கு ஒத்து ஊதுவது என மிகவும் பரிதாபமான

இதைத்தான் பார்ப்பனியம் என்றும் விளக்கம் சொல்லிக்கொண்டு அதையே அவர்களும் செய்கிறார்கள். கம்யூனிசத்தின் இன்றைய நிலை மிக பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது, நன்றி தலைவரே.

கேரளாக்காரன் said...

Ippo karuthu sollunnu solringala sollaadhannu solringala # i am confused

பாலா said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி நண்பரே

பாலா said...

@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )

நீங்க தாராளமா கருத்து சொல்லலாம். ஆனால் அது யார் மனதையும் புண்படுத்த கூடாது. குறைந்த பட்ச நாகரீகம் காத்தால் நல்லது.

நீங்க கேட்பதை பார்த்தால் பீதியாக இருக்கிறது. என்ன கருத்து சொல்ல போறீங்க?

சென்னை பித்தன் said...

நியாயமான கருத்து.இதற்குப் பாராட்டாக ஒரு மைனஸ் ஓட்டு!
நன்று பாலா.

பாலா said...

@சென்னை பித்தன்

எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என்ற அர்த்தம் இல்லையே சார். நான் இதை கவனிக்கவே இல்லை. இப்போதுதான் பார்க்கிறேன். முதல் முறையாக் மைனஸ் ஓட்டு விழுகிறது என்று நினைக்கிறேன். நன்றி சார்.

கேரளாக்காரன் said...

இந்த மாதிரி அப்பாடக்கர்கள் பத்தி நானே தனியாக பதிவு போடலாமென நினைத்தேன் ஆனா என்னோட பதிவுக்கு கிடைக்கிற ஹிட்ஸ் விட அதிகமாக உங்கள் கம்மன்ட் பெட்டிக்கு கிடைக்கும் என்பதால் இங்கே பதிவு செய்கிறேன்

இந்த மாதிரியான அல்லக்கைகளுக்கு பிடிக்காதவர்கள்

1 . தொழிலதிபர்கள்
2 . மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள்
3 . சிகப்பாக இருப்பவர்கள்;
படித்தவர்கள்'
4.பார்ப்பனர்கள்
5.தேவர்கள்(இவர்கள் ஆதிக்க ஜாதியினர் என அன்புடன் அழைக்கபடுவர்)
6.நாடார்கள் (இவர்கள் தேவர்களை சாடும் பதிவில் வஞ்ச புகழ்ச்சி அணியினால் வசை பாடப்பட்டு ,சரவணா ஸ்டோர்ஸ் போன்ற முதலாளிகளை பற்றி எழுதும்போது காம கொடூரர்களாக காட்டப்படுவார்)

அல்லக்கைகளின் சாதனைகள்

1.செங்கோவி,அட்ராசக்க போன்ற ஜாலியான வலைபதிவுகளை படித்து இளைப்பார நினைப்பவர்கள் கொலைவெறி கோவத்திற்கு ஆளாக்கியது
2.ஜாதி என்றால் என்ன என்று தெரியாதவனுக்கு கூட ஜாதி வெறி ஏற்றியது

இவர்கள் திரை விமர்சனம் எழுதும் பொது நாயகன் பணக்காரனாக இருந்தாலும் குற்றம் ஏழையாக இருந்தாலும் குற்றம்
உயர்த்த ஜாதியாக இருந்தாலும் குற்றம் தாழ்ந்த ஜாதியாக இருந்தாலும் குற்றம்
படம் இயல்பான படமாக இருந்தாலும் குற்றம் மசாலா படமாக இருந்தாலும் குற்றம்
இப்போ கடைசியாக ஹீரோ நல்லவனாக இருந்தாலும் குற்றம் கெட்டவனாக இருந்தாலும் குற்றம்

இவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது

----- பாது பழகுங்கடா மத்த எழுதாளர்கள பாத்து------

கேரளாக்காரன் said...

கம்மேண்டில் தனி மனித தாக்குதல் அல்லது வேறு ஏதேனும் தேவையில்லாமல் இருப்பதாக நினைத்தால் கமெண்டினை நீக்கி விடவும்

பாலா said...

@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )

நீங்க சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள். இவர்களைப் பொறுத்தவரை அடுத்தவர்கள் என்ன செய்தாலும் அது குற்றமே... நன்றி நண்பரே.

Anonymous said...

விடுங்க பாஸ்... எத்தனையோ பார்த்துட்டோம், இத பார்க்க மாட்டோமா?

Philosophy Prabhakaran said...

அஜீத் பற்றிய பதிவில், அஜீத் இப்படி ஊழியர்களுக்கு பிரியாணி போடுவதற்கு பதிலாக தன்னுடைய சம்பளத்தில் சில கொடிகளை குறைத்திருக்கலாமே என்று கூறியிருக்கக்கூடும்...

BTW, அந்த இடுகையின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே நான் வாசித்தேன்... வினவு பதிவுகள் எதையும் இதுவரை முழுமையாக படித்தது கிடையாது... பாதியிலேயே பேதி ஆகிவிடும்...

இந்த கட்டுரையில் ஒரு இடம் என்னை மிகவும் கவர்ந்தது...

// சும்மா வந்து கொடி பிடித்தாலே அவரது போட்டோவோடு, "எல்லோராலும் 'தல' என்று அன்பாக அழைக்கப்படும் தோழர் அஜீத்குமார்!!", என்று கட்டுரை எழுதுவார்கள். //

இந்தமாதிரி சொற்றொடர்களை நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன்... ஜெயலலிதாவே - புரட்சிதலைவி, கன்னட பிராமண பெண்மணி, பாசிச ஜெயலலிதா இப்படி பல பட்டங்களைப் பெறுவார்...

Philosophy Prabhakaran said...

One more thing, ஹிட்ஸ் வாங்குவதற்காக நீங்கள் இப்படி ஒரு தலைப்பை வைத்திருக்க மாட்டீர்கள் என்று எனக்கு நிச்சயமாக தெரியும்... ஆனால் எவனாவது வந்து ஹிட்ஸுக்காக எங்கள் தல அஜீத்தின் பெயரை பயன்படுத்தும் அல்லக்கையே என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருமா வராதா... அப்படித்தான் இருக்கிறது ரஜினி ரசிகர்கள் அந்த வார்த்தையை என்னிடம் சொல்லும்போது...

ரஜினி பற்றிய பதிவின் தலைப்பில் ரஜினி என்று வைக்காமல் ராமராஜன் என்றா வைக்க முடியும்...

Philosophy Prabhakaran said...

காலையில தெரியாத்தனமா follow up வச்சிட்டு போயிட்டேன்... யம்மா எம்புட்டு பின்னூட்டம்...

N.H. Narasimma Prasad said...

விடுங்க பாலா, 'தல'யை பார்த்து நாய் குறைக்கிறதுன்னு நெனச்சிக்கோங்க.

இனியன் said...

சூப்பர் கட்டுரை...

இதப் படிச்சு திருந்தும்ங்கிற நம்பிக்கை இல்லை..ஆனால், உண்மை உரைக்கும்...

பாலா said...

@Philosophy Prabhakaran

நன்றி நண்பரே. உங்கள் கருத்துக்களோடு ஆதங்கங்களையும் சொல்லி விட்டீர்கள். ரஜினி பற்றி எழுதாமல் அவரின் பெயரை மட்டும் தலைப்பில் சேர்ப்பதுதான் தவறு. மற்றபடி எதுவும் தவறில்லை.

பாலா said...

@மொக்கராசு மாமா

அதுவும் சரிதான். நன்றி நண்பரே

பாலா said...

@N.H.பிரசாத்

யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் அதன் உள்நோக்கம்தான் தவறாக இருக்கிறது. நன்றி நண்பரே

பாலா said...

@இனியன்

இதை படித்து யாரும் திருந்த மாட்டார்கள். குறைந்த பட்சம் மற்றவர்கள் விழிப்புணர்வோடு இருந்தாலே போதும். நன்றி நண்பரே.

naren said...

அந்த வினவு ‘தல’ பிரியாணிப் பதிவின் சாராம்சம்மே இதுதான் -சினிமா துறையிலிருக்கும் கடை நிலை ஊழியர்கள் தங்களின் தொழிலின் உரிமைகள் மேம்படவில்லை பெறவும்கில்லை. அப்படியிருக்கும்போது தல போட்ட பிரியாணி என்றச் செய்தியில் பெருமை படுவதற்கு ஒன்றுமில்லை. தல அவர்களின் உரிமைகளை, தரதை மேம்படுத்தியிருந்தால் பெருமைப் பட்டுகொள்ளலாம். இந்த கருத்து சரியானதுதான்.

இந்தச் செய்திக்கு இடையில், பதிவு எழுதியவர், பின்னூட்டமிட்டவர்கள் பற்றி வினவு அவர்களின் கொள்கை, சித்தாந்தம் ஆகியவற்றை புகுத்தி நீங்கள் பதிவில் போட்ட அர்த்ததில் விதத்தில் எழுதியிருக்கிறார்கள். அதை நீங்கள் சரியான முறையில் விமர்சனம் எழுதியுள்ளீர்கள். விமர்சனம் சரியாகவே படுகிறது.

பாலா said...

@naren

நீங்கள் சொல்வது சரிதான். அது திட்டமிட்டு பரப்பபட்ட ஒரு செய்தி அல்ல. அதே போல அது அஜீத் என்பவரின் மனித நேயத்தை வெளிப்படுத்திய விஷயம் என்பதும் உண்மைதானே. அஜித்தை கலையுலகை காக்க வந்த கடவுள் என்று கொண்டாடினால் அது கண்டிக்க தக்கது. குறைந்த பட்ச மனித நேயத்தை கூட குதர்க்கமாக விமர்சனம் செய்வது எந்த வகையில் நியாயம்?

அஜீத் மட்டுமல்ல, இன்ன பிற ஆட்களையும் இந்த ரீதியில்தான் அவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். நன்றி நண்பரே.

ஊடகன் said...

இந்த எதிர்வினையை படித்க்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்....!

http://vennirairavugal.blogspot.com/2011/11/blog-post_23.html

நன்றி,
ஊடகன்

பாலா said...

@ஊடகன்

பரிந்துரைக்கு நன்றி நண்பரே. கண்டிப்பாக படிக்கிறேன்.

Unknown said...

சரியான அடி அடிச்சிருக்கீங்க மாப்ள...சித்தாந்தம் உள்ள நாடுகள் உள்ளுக்குள்ள என்ன செய்ஞ்சிக்கிட்டு இருக்குன்னு யோசிக்க சொல்லணும்..ஏது அவங்களுக்கு அதுக்கெல்லாம் நேரம்!

பாலா said...

@விக்கியுலகம்

நன்றி மாப்ள

mubarak kuwait said...

நீங்கள் இப்படிலாம் எழுதினால் உங்களுக்கு தட்டையான அறிவு இருக்கு என்று அவர்கள் மொழியில் சொல்வார்கள், முடிந்தால் உங்கள் அறிவை வட்டமாகவோ, செவ்வகமாகவோ, முக்கோணமாகவோ மாற்றி கொண்டு வந்து இன்னொரு பதிவு போடவும்.

அவர்கள் ஹிந்துக்களை பற்றி மட்டுமா எழுதுகிறார்கள் முஸ்லிம்கள், கிருத்துவர்கள் எல்லோரையும் பற்றிதான் கீழ்த்தரமாக எழுதுகிறார்கள் அவர்களோடு சண்டை போட்டு எனக்கு அலுத்து விட்டது.

ஏற்கனவே எனக்கு தட்டையான அறிவு இருக்கு என்று சொல்லி விட்டார்கள்

mubarak kuwait said...

நீங்கள் இப்படிலாம் எழுதினால் உங்களுக்கு தட்டையான அறிவு இருக்கு என்று அவர்கள் மொழியில் சொல்வார்கள், முடிந்தால் உங்கள் அறிவை வட்டமாகவோ, செவ்வகமாகவோ, முக்கோணமாகவோ மாற்றி கொண்டு வந்து இன்னொரு பதிவு போடவும்.

அவர்கள் ஹிந்துக்களை பற்றி மட்டுமா எழுதுகிறார்கள் முஸ்லிம்கள், கிருத்துவர்கள் எல்லோரையும் பற்றிதான் கீழ்த்தரமாக எழுதுகிறார்கள் அவர்களோடு சண்டை போட்டு எனக்கு அலுத்து விட்டது.

ஏற்கனவே எனக்கு தட்டையான அறிவு இருக்கு என்று சொல்லி விட்டார்கள்

பாலா said...

@mubarak kuwait

உண்மைதான் நண்பரே. முதலில் நான் கூட சில இடங்களில் அவர்களுக்கு கருத்துரை அளித்திருக்கிறேன். ஆனால் அதெல்லாம் வீண் என்று பிறகுதான் தெரிந்தது. அப்புறம் அவர்கள் இந்துக்களை மட்டுமல்ல, சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு எல்லா மதத்தையுமே போட்டு தாக்கி விடுகிறார்கள்.

http://balapakkangal.blogspot.com/2012/04/blog-post.html

இதையும் படித்து பாருங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...