நான் இரண்டு மனிதர்களின் பெயர்களை கூறுகிறேன். உங்களுக்கு தெரிகிறதா என்று பாருங்கள். ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் மற்றும் ஜீன் டொமினிக் பாபி. முதலாவது மனிதரை பெரும்பாலானோர் கேள்விபட்டிருப்போம். நான் முதலாமவரை பற்றி தேடும்போது இரண்டாமாவரை பற்றி தெரிந்து கொண்டேன். சரி இரண்டு பேரை பற்றியுமே கூறி விடுகிறேன்.
ஜீன் டொமினிக் பாபி மிகவும் புகழ் பெற்ற பிரெஞ்சு பத்திரிக்கையாளர். தனது 43ஆவது வயதில் பக்கவாதத்தால் எல்லா பக்கமும் தாக்கபட்ட அவர் 20 நாட்கள் கோமாவில் இருந்திருக்கிறார். கண்விழித்து பார்த்தால், அவரால் தன் உடலின் எந்த பாகத்தையுமே அசைக்க முடியவில்லை. கண் இமைப்பதை தவிர வேறு எதுவுமே அவரால் செய்ய முடியாது. இந்த நோய்க்கு லாக்டு இன் சிண்ட்ரம் (Locked in syndrome) என்று பெயர் சொல்கிறார்கள். அதாவது ஒருவர் உடலில் தன்னார்வ தசைகள் எல்லாம் செயலிலந்து போகுமாம். அனிச்சை செயல்கள் மட்டுமே சாத்தியம். சிந்திக்க முடியும். ஆனால் பேசவோ, எழுதவோ முடியாது. கிட்டத்தட்ட உயிருள்ள ஒரு தாவரம் மாதிரி.
இந்த நிலையிலும் அவருக்கு ஒரு ஆசை. இந்த நிலை ஏற்படுவதற்கு முன்னரும் பின்னரும் அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்று ஒரு புத்தகம் எழுத விரும்பினார். வெறும் கண்ணாசைவை மட்டும் வைத்து எழுதியும் முடித்தார். இவருக்கு உதவியாக இருந்தவர் கிளாட் மெண்டிபிள் என்னும் பெண். பிரெஞ்சு எழுத்துக்களை வரிசையாக வாசிப்பார் கிளாட். குறிப்பிட்ட எழுத்து வந்ததும் கண்ணாசைப்பார் பாபி. அதை எழுதிக்கொள்வார். வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அடிக்கடி பயன்படும் எழுத்துக்களை முதலில் எழுதி வைத்திருப்பாராம். இப்படியே ஒரு வார்த்தை, பிறகு வாக்கியம் என்று எழுதுவார்கள். இந்த புத்த்கம் எழுத பத்து மாதங்கள் ஆனதாம். இந்த புத்தகம் வெளிவந்து ஒரே வாரத்தில் லட்சக்கணக்கான பிரதிகள் விற்று தீர்ந்தது. புத்தகம் வெளிவந்த மூன்றாவது நாளில், தன் கடைசி ஆசை நிறைவேறிய மன நிறைவில், இமைத்து கொண்டிருந்த கண்களை நிரந்தரமாக மூடினார் பாபி.
ஸ்டீபன் ஹாகிங்க்ஸ் என்பவர் புகழ்பெற்ற பிரபஞ்ச அறிவியல் அறிஞர். பதின்ம வயதில் இவரை மோட்டார் நியூரான் டிசீஸ் (Motor neuron disease) என்னும் நரம்பியல் நோய் தாக்கி இருக்கிறது. நடக்கும்போது நிலை தடுமாறி போத்தென்று தரையில் விழுந்து பலமுறை தலையில் அடிபட்டிருக்கிறது. 21 வயதில் நோய் முழுமையாக தாக்க, டாக்டர்கள் இன்னும், "இரண்டு அல்லது மூன்று வருடங்கள் மட்டுமே ஹாக்கிங்க்ஸ் உயிரோடு இருப்பார்.", என்று கூறி விட்டனர். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக, கொஞ்சம் கொஞ்சமாக தன் உடல் இயக்கத்தை இழக்க தொடங்கியிருக்கிறார். தன் 40 வயதில் ஒட்டுமொத்தமாக உடலில் இயக்கம் நின்றுவிட்டது. இடையில் நிமோனியா வேறு தாக்க, அதற்கு கொடுத்த கடுமையான வைத்தியம் காரணமாக பேச்சும் நின்றுபோனது. "ஆனால் மூளை இயக்கத்தை நிறுத்தவில்லையே. அது போதும்!"., என்று நினைத்தவர் தன் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதையும், புத்தகங்கள் எழுதுவதையும் மட்டும் நிறுத்தவே இல்லை.
ஸிபீச் சிந்தஸைசர் (Speech synthesizer) என்ற கருவியை வாங்கி தாடையில் பொருத்திக்கொண்டார். இது நம் தாடை அசைவை வைத்து வார்த்தைகளை ஒலியாக மாற்றி தரும் கருவி. கேட்க நன்றாகத்தான் இருக்கும். மிகவும் வலியை தரும் ஒரு பேசும் முயற்சி. இதற்கு பேசாமேலேய இருந்துவிடலாம் என்று நினைக்க தோன்றும். மேலும் நாம் நினைக்கும் வார்த்தையை உருவாக்குவதற்குள் தாவு தீர்ந்து விடும். இந்த நிலையிலும் மனம் தளராது பல கருத்தரங்குகளிலும், மேடைகளிலும் தோன்றி உரையாற்றி இருக்கிறார் ஸ்டீபன். தன் பேச்சுக்களை முதலிலேயே பேசி ரெக்கார்ட் செய்து கொள்வாராம். ஆனால் லைவ் கலந்துரையாடல்களில் அது சாத்தியமல்ல. அப்போதுதான் அவர் பேச எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பது விளங்கும். ஒரு முறை ஒரு கேள்விக்கு பதில் அளிக்க சுமார் 7 நிமிடங்கள் எடுத்துக்கொண்டாராம்.
இவர் எழுதிய புத்தகங்கள், A Brief History of time, Black Holes and Baby Universes போன்றவை உலகப்புகழ் பெற்றவை. தற்போது உடல் நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட இவர் கொஞ்சம் கொஞ்சமாக நலமடைந்து வருகிறார். "இழப்பதற்கு ஒன்றுமில்லை. பெறுவதற்கு இந்த பொன்னுலகமே இருக்கிறது.", என்று சொன்னவர் காரல் மார்க்ஸ். இவரது வார்த்தைகள் போராட்டத்தின் உன்னதத்தை சொல்கின்றன. அதற்கு இந்த இருவரை தவிர வேறு சிறப்பான உதாரணம் யாராக இருக்க முடியும்? இவங்களுக்கு முன்னால, நமக்கு இருப்பதெல்லாம் என்னங்க கஷ்டம்?
கார்ல் மார்க்ஸ் என்றவுடன் நினைவுக்கு வருகிறது. தோழர்களுக்கு எதிராக பொதுபுத்தி கட்டுரை ஒன்று எழுதலாம்னு நினைச்சேன். மறந்துட்டேன். அப்புறம் எழுதுறேன்.
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....
45 comments:
மாப்ள விஷயங்கள் எனக்கு புதிது மற்றும் அதனை உம் மூலமாக அறிந்து கொண்டேன் நன்றி!
I read some jean dominique bauby's articles with sylvia plaths poems mind catching writer
நண்பரே, எனக்கு அவர்களை தெரியாது. உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்,
நம்ம தளத்தில்:
நமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது எப்படி?
நல்ல விஷயம் சொல்லியுளிர்கள் .. நன்றி
இன்று என் வலையில்
தூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்?":
தன்னம்பிக்கை ஒன்றை மட்டுமே வைத்து சாதித்த இவர்களை இத்தனை நாள் அறியாமல் இருந்து விட்டோமே என்ற வெட்கமும், இப்போதாவது தெரிந்து கொண்டோமே என்று சந்தோஷமும் மனதில் எழுகிறது. நன்றி பாலா...
புதிய சரித்திரம் நாமும் படைப்போம்..
இந்த தகவல் எனக்கு புதிதாக இருக்கிறது, இருந்தாலும் அவர்கள் தன்னம்பிக்கை யானையின் தும்பிக்கைக்கு ஈடானது....!!!
ianaman இந்த பெயரில் இன்ட்லியில் ஓட்டு போட்டதும் போடுவதும் நானே
உண்மையில் தன்நம்பிக்கை மனிதர்கள்தான்....தன்நம்பிக்கையை இழக்காத மனிதன் எப்பவும் சோர்ந்து போவதில்லை.
////இந்த நிலையிலும் அவருக்கு ஒரு ஆசை. இந்த நிலை ஏற்படுவதற்கு முன்னரும் பின்னரும் அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்று ஒரு புத்தகம் எழுத விரும்பினார். வெறும் கண்ணாசைவை மட்டும் வைத்து எழுதியும் முடித்தார். இவருக்கு உதவியாக இருந்தவர் கிளாட் மெண்டிபிள் என்னும் பெண். பிரெஞ்சு எழுத்துக்களை வரிசையாக வாசிப்பார் கிளாட். குறிப்பிட்ட எழுத்து வந்ததும் கண்ணாசைப்பார் பாபி. அதை எழுதிக்கொள்வார். வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அடிக்கடி பயன்படும் எழுத்துக்களை முதலில் எழுதி வைத்திருப்பாராம். இப்படியே ஒரு வார்த்தை, பிறகு வாக்கியம் என்று எழுதுவார்கள். இந்த புத்த்கம் எழுத பத்து மாதங்கள் ஆனதாம். இந்த புத்தகம் வெளிவந்து ஒரே வாரத்தில் லட்சக்கணக்கான பிரதிகள் விற்று தீர்ந்தது. புத்தகம் வெளிவந்த மூன்றாவது நாளில், தன் கடைசி ஆசை நிறைவேறிய மன நிறைவில், இமைத்து கொண்டிருந்த கண்களை நிரந்தரமாக மூடினார் பாபி.////
இவருக்கு உதவி செய்த பெண் போற்றுதலுக்குறியவர்
கேள்விப் பட்டதுகூடயில்லை
படித்ததும் மிகவும் வியந்து
போனேன்
படிப்பவர்களுக்கு தன்நம்பிக்கையைத் தரும்
பதிவு
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
இதையெல்லாம் தெரிந்துகொண்டால் தன்னம்பிக்கை தானே வரும்.நன்று.
தன்னம்பிக்கை பதிவு அருமை
@விக்கியுலகம்
நன்றி மாப்ள. உண்மைய சொல்றதுன்னா, விக்கிபீடியாவுக்குதான் நன்றி சொல்லணும்.
@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )
Thank you for your valuable comments
@தமிழ்வாசி - Prakash
நன்றி நண்பரே.
@"என் ராஜபாட்டை"- ராஜா
கருத்துக்கு நன்றி நண்பரே.
@கணேஷ்
இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை சார். எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க அவசியமில்லை. வருகைக்கு நன்றி சார்.
@Cpede News
நன்றி நண்பரே.
@MANO நாஞ்சில் மனோ
உங்க ஸ்டைலில் சொல்லி இருக்கீங்க. நன்றி/
@K.s.s.Rajh
ஆகவேதான் அந்த பெண்ணின் பெயரையும் சேர்த்தேன். நன்றி நண்பரே
@புலவர் சா இராமாநுசம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். அடிக்கடி வாங்க
@சென்னை பித்தன்
நிச்சயமாக. இது அவர்களை அறிமுகப்படுத்தும் ஒரு சிறு முயற்சியே. நன்றி சார்.
@ஜ.ரா.ரமேஷ் பாபு
மிக்க நன்றி நண்பரே.
பதிவு மூலம் தன்னம்பிக்கை டானிக் கொடுத்ததற்கு நன்றி ...
ஜீன் டொமினிக் பாபி.// ஆம் இவரைப் பற்றி இப்போதுதான் கேள்விப் படுகிறேன்..
தன்னம்பிக்கை வரிகள்..
சாதனை மனிதர்கள்,தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது.
பாலா உங்கள் பதிவை படித்ததும் பதிவர் மாணவன் தளம் போல இருந்தது.. :-) வரலாற்று நாயகர்கள் பற்றி அவர் தான் எழுதுவார்.
இதில் எனக்கு அநியாயத்துக்கு ஒன்று கூட தெரியவில்லை .. ஸ்டீபன் ஹாகிங்க்ஸ் பெயரைத்தவிர :-( தகவல்களுக்கு நன்றி.
ரொம்ப நல்ல பகிர்வு :))
கிளாட் மெண்டிபிள் என்னும் பெண்
பாபியின் தன்னம்பிக்(கை)!
இந்த தன்னம்பிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் உங்கள் மூலம் தான் அறிகிறேன். நன்றி.
@ananthu
உங்களுக்கும் நன்றி நண்பரே
@!* வேடந்தாங்கல் - கருன் *!
நன்றி நண்பரே
@shanmugavel
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
@கிரி
நன்றி நண்பரே. தெரியாமல் இருப்பதற்கு வருந்த தேவை இல்லை. எல்லாருக்கு எல்லாமும் தெரிவதில்லை.
@சுசி ரொம்ப நன்றிங்க
@சீனுவாசன்.கு
உண்மையில் அந்த பெண்ணும் மிகப்பெரிய சாதனையாளர். நன்றி நண்பரே.
@baleno
நன்றி நண்பரே.
அப்பா சாமி..
கிரேட்...
உண்மையிலேயே இநத மனிதரைப் பார்த்து மிகவும் வியந்து போனேன்
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரம்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution
தன்னம்பிக்கை தரும் தகவல்கள்,நீங்கள் சொல்வது போல் ஜீன் டொமினிக் பாபி பற்றி இன்றுதான் அறிந்தேன்! மிகவும் ஆச்சர்யமான மனிதர், ப்யனுள்ள பதிவு
@சந்தானம் as பார்த்தா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க
@♔ம.தி.சுதா♔
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா.
@நம்பிக்கைபாண்டியன்
நன்றி நண்பரே
Post a Comment