விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

இது விளம்பரம் அல்ல....

November 5, 2011

ஊடகங்கள் வளர்க்கும் குழந்தைகள்


இயக்குனர் சசிக்குமார் ஒரு முறை, "நம்ம நாட்டில் குழந்தைகளுக்காக படம் எடுப்பது மிக மிக குறைவு.", என்று குறைபட்டுக்கொண்டார். அது உண்மைதான். இப்போது நான் சொல்லப்போவது குழந்தைகளுக்கான படங்கள் எடுப்பதை பற்றி அல்ல. அது குறித்து இன்னொரு முறை எழுதுகிறேன். அதனோடு சம்பந்தப்பட்ட வேறு விஷயம். என்னதான் தொழில்நுட்பம், ஊடக வசதிகள் வளர்ந்து விட்டாலும், எல்லோருக்குமே, "அந்த காலம் மாதிரி வருமா?" என்று தங்களின் குழந்தை பருவத்து ஏக்கங்கள் வருவது மறுக்கலாகாது. இந்த மாதிரி நோஸ்டல்ஜிக்காக தோன்றும் சில தருணங்களை நினைத்து பார்க்கும்போது, நாம் பெற்ற சில விஷயங்களையும், நம் அடுத்த சந்ததியினர் இழந்த சில விஷயங்களையும் ஒப்பிட்டதன் விளைவே இந்த பதிவு. 


நான் வளர்ந்த சூழல் என்பது ஒரு கூட்டுக்குடும்பம் மாதிரி. என்னுடைய தெருவில் இருக்கும் அத்தனை பேருமே நான் பிறப்பதற்கு சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கே வாழ்பவர்கள். ஆகவே எல்லா வீட்டு பிள்ளைகளும், ஒன்றாக விளையாடுவோம், ஒன்றாக சண்டை போடுவோம், ஒன்றாகவே திட்டு வாங்குவோம். அதே போல எல்லா வீட்டிலேயுமே குறைந்தது ஒரு முதியவராவது இருப்பார். செல்போன்களும், கேபிள் டிவிகளும் ஆக்கிரமிப்பு செய்திராத அந்த நகரத்தின் தெருக்களில், மாலை நேரங்களில் எல்லா பெரியவர்களும் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு கேலியும் கிண்டலும் செய்தபடி, தங்களின் பால்ய காலத்தை நினைவு கூர்வார்கள்.சிறுவர்கள் நாங்கள் அனைவரும் அவர்களின் மத்தியில் அமர்ந்து கொண்டு அவர்களின் உரையாடலை கேட்போம். அவர்கள் உபயோகிக்கும் பல வார்த்தைகள் புரியாது. இருந்தாலும் கேட்போம். சிறுவயது காதல், கலவரம், பிரச்சனைகள், நகைச்சுவைகள் என்று கேட்க கேட்க சுவாரசியம் கூடிக்கொண்டே போகும். அந்த சமயத்தில் தெருவுக்குள் ஏதாவது பால்காரர், போஸ்ட்மேன், பழவியாபாரி என்று வந்து விட்டால் தொலைந்தது. "கலாய்ப்பது என்றால் என்ன?" என்று அப்போதுதான் நான் கற்றுக்கொண்டேன்.

திடீரென திட்டிக்கொள்வார்கள், உடனே ஒட்டிக்கொள்வார்கள். ரஜினி படம், எம்ஜியார் படம் என்றால் உடனே ஒரு தூக்குவாளி நிறைய காபி போட்டு எடுத்துக்கொண்டு, தெருவே தியேட்டருக்கு ஓடும். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, முறுக்கு, மிக்சர், அதிரசம், வடை என்று கைக்கு கை மாறி வந்துகொண்டே இருக்கும். பிறகு காலங்கள் மாறிய பிறகு, ஊருக்கு வெளியே பிளாட்டுகள் போட்டு தனி வீடுகள் வந்தன. எங்கள் தெரு காலியாக தொடங்கியது. இப்போது இன்னும் இருப்பது எங்களையும் சேர்த்து இரண்டே குடும்பங்கள்தான். எங்கள் உலகம் விரிய தொடங்கியது. ஆனால் உள்ளம் குறுகிப்போனது. விடுகதைகள், நக்கல் நையாண்டிகள், ஆரோக்கியமான விவாதங்கள், பழமொழிகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் இன்னும் பல என்று யாரும் எனக்கு கற்று தரவில்லை. அவர்களின் மத்தியில் வளர்ந்ததால் நானே கற்றுக்கொண்டேன். 


ஆனால், "இன்று வளரும் குழந்தைகள் ஒரே அறைக்குள், அதிலும் ஒரே மேஜைக்குள் கூறுகிப்போய்விட்டார்களோ?", என்று தோன்றுகிறது. பணிக்கு செல்லும் பெற்றோர் வீடு திரும்ப மாலை ஆறு மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. மதியம் மூன்று மணிக்கு வீட்டுக்கு வரும் குழந்தைக்கு, டிவியும் இண்டர்நெட்டுமே பெற்றோர். ஜான்சீனாவும், அண்டர்டேக்கருமே கதை மாந்தர்கள். அவர்கள் பேசுவதே மொழி. இண்டர்நெட்டில் கிடைப்பதே நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள். முனைவர் கு.ஞானசம்பந்தம் சொல்வார், "இக்கால குழந்தைகளுக்கு, அண்டார்டிக்காவில் இருக்கும் ஒரு இடத்தை பற்றி தெரியும். ஆனால் பள்ளி விட்டதும், தானாக வீட்டுக்கு வரும் வழி தெரியாது.". ஆமாம் அவர்களுக்கு பேஸ்புக்கில் இருக்கும் நண்பனின், நண்பியின் , நண்பனையை பற்றி எல்லாம் தெரியும். "தன் தாத்தா யார். அவர் எப்படி வாழ்ந்தார்?", என்று தெரியாது. என் பெற்றோருக்கு தெரிந்த அளவுக்கு சொலவடைகள், பழமொழிகள் எனக்கு நினைவில் இல்லை. எனக்கு தெரிந்த அளவுக்கு கூட என் இளையவர்களுக்கு தெரியவில்லை. இனி என் பிள்ளைகளுக்கு சொலவடை என்றால் என்ன? என்று கூட தெரியாமல் போய் விடுமோ? 


ஊடகத்தின் ஆளுமை என்பது தவிர்க்க இயலாதது, தவிர்க்க கூடாதது. இல்லாவிட்டால் கிணற்று தவளையாகவே இருந்து விடவேண்டியதுதான். ஆனால் ஊடகத்தின் கொம்பை பிடித்த வளரும் கொடிகள், தங்களின் வேர்களை மறப்பதுதான் கொடுமை. எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன், சொந்தங்களின் வீட்டு விசேஷங்களுக்கு வருவதை முற்றிலும் தவிர்ப்பான். கேட்டால், "எனக்கு crowd என்றாலே அலர்ஜி." என்று சொல்வான். ஆனால் வாரம் தவறாமல் பப் மற்றும் டிஸ்கோதே செல்வதை மறப்பதில்லை. அவன் ஊடகம் வளர்த்தெடுத்த குழந்தைக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். எப்படி என் முன்னோர்கள் மத்தியில் அமர்ந்து அவர்களிடம் கதை கேட்டேனோ, அதே போல தற்கால குழந்தைகள் இண்டர்நெட்டிலும், தொலைக்காட்சியிலும், நடப்பவற்றை ஊன்றி கவனிக்கிறார்கள். என்னை அறியாமல் நான் கற்றது போல, அவர்களை அறியாமலேயே அவர்களும் கற்கிறார்கள். ஆனால் நான் கற்றது Real World. அவர்கள் கற்றுக் கொண்டிருப்பது Virtual World. அதையே அவர்கள் உண்மை என்றும் நம்புகிறார்கள். ஊடகங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் தவறில்லை. ஆனால் பெரும்பாலான குழந்தைகள், சக மனிதர்களை ரத்தமும் சதையுமாக பார்க்காமல், தேவை இல்லை என்றால் அன்இன்ஸ்டால் செய்து கொள்ளும் சாஃப்ட்வேராகத்தானே பார்க்கிறார்கள்? 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க.... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....
  

24 comments:

rajamelaiyur said...

இப்ப உள்ள பல படங்கள் குழந்தையுடன் பார்க்க முடியாதவையாக உள்ளது

rajamelaiyur said...

இன்று என் வலையில்
விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு

நம்பிக்கைபாண்டியன் said...

நல்ல நினைவுகள் & கருத்துக்கள், அதிலும் அந்த கடைசி படம் நல்ல இந்த பதிவுக்கு பொருத்தமான நகைச்சுவை தேர்வு.

சக்தி கல்வி மையம் said...

ஊடகங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் தவறில்லை. ஆனால் பெரும்பாலான குழந்தைகள், சக மனிதர்களை ரத்தமும் சதையுமாக பார்க்காமல், தேவை இல்லை என்றால் அன்இன்ஸ்டால் செய்து கொள்ளும் சாஃப்ட்வேராகத்தானே பார்க்கிறார்கள்? // நிதர்சன உண்மை ..

மாங்கனி நகர குழந்தை said...

உண்மைதான்......இப்ப இருக்கற குழந்தைகள் எல்கேஜி படிக்கும் போதே கண்ணாடி போட்டு கொள்கிறார்கள் என்பது கொடுமை.....

K.s.s.Rajh said...
This comment has been removed by the author.
K.s.s.Rajh said...

சரியாகச்சொன்னீர்கள் பாஸ் நானும் கிட்ட தட்ட உங்களைப்போல எங்கள் ஊரில் வளர்ந்தவன் தான் ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது......

இனி வரும் சந்ததிக்கு இந்த சந்தோசங்கள் எல்லாம் முற்றாகவே கிடைக்காமல் போய்விடும்.....

இப்படி எத்தனை சின்ன சின்ன சந்தோசங்களை தொலைத்துவிட்டு வாழ்கின்றோம்

N.H. Narasimma Prasad said...

உங்கள் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். நம் குழந்தைகளை நாம் தான் எது தேவை, எது தேவையில்லை என்பதை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். இந்த கடமையை நாம் தவறவிடுவதால் தான் நம் குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

சிசு said...

//உலகம் விரிய தொடங்கியது. ஆனால் உள்ளம் குறுகிப்போனது.//

மிக உண்மை...

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பரான அலசல் பாலா, இன்று எடுக்கும் சினிமாக்கள், சிறுவர்களை முரடர்காக ஆக்குகிரத்தை நான் கண்ணால் பார்த்துருக்கிறேன்...!!!!

MANO நாஞ்சில் மனோ said...

அந்த டிவி பார்க்கும் ஸ்டைல் அழகா இருக்கே ஹி ஹி சூப்பர்ப்...!!!

Karthikeyan said...

என் மன ஓட்டங்களை உங்கள் பதிவு பிரதிபலிக்கிறது. உடலை வருத்தும் விளையாட்டுக்கள் இனி வரும் தலைமுறைக்கு கிடையாது. விளையாட இடமும் கிடையாது. அவர்களது வாழ்க்கை இனி ஒரு வட்டத்திற்குள் தான் இருக்கும். சில ஆயிரங்கள் சம்பாத்தியம் அதிகம் பண்ணலாம் என்பதற்காக குடும்பத்தையும் வளர்ந்த இடத்தினையும் பிரிய மனமில்லாதவர்களும் இருக்கிறார்கள் என்னைப்போல இன்னும். வெறும் பணத்திற்காக பல சந்தோஷங்களை இழக்க என் மனம் விரும்பவில்லை.

"ராஜா" said...

Good post , sadukudu vilayadiya munthaiya thalaimuraiyin udal matrum mana valimai cricket adiya namakku illai. Antha crickettaiye computeril vilaiyadum intha thalaimuraiyai patri enna solla?

சென்னை பித்தன் said...

சரியாகச் சொன்னீர்கள் பாலா.அவர்கள் சுற்றியிருக்கும் நிஜ உலகை விட்டு வேறு உலகத்தில்தான் வாழ்கிறார்கள்.

சுதா SJ said...

மிக நல்ல சமூக அக்கறை கொண்ட பதிவு.... பெற்றோர்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க வேண்டும்... இப்போது பல வீடுகளில் பார்க்குறேன் பல குழந்தைகள் உருவத்தில்தான், குழந்தைகளாக இருக்கிறார்கள் ஆனால் பேச்சிலும் நடத்தையிலும் அதிக பிரசங்கித்தனமாக இருக்கிறார்கள் இதற்க்கு காரணம் குழந்தைகளின் பொழுதுபோக்கான தொலைக்காட்சிகளே.....

Unknown said...

மாப்ள நச்!

சீனுவாசன்.கு said...

மாற்றம் ஒன்றே மாறாதது!

r.v.saravanan said...

"இக்கால குழந்தைகளுக்கு, அண்டார்டிக்காவில் இருக்கும் ஒரு இடத்தை பற்றி தெரியும். ஆனால் பள்ளி விட்டதும், தானாக வீட்டுக்கு வரும் வழி தெரியாது.".

ஆம் பாலா இன்றைய நிலை அது தான்

பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் எடுத்து கொள்ள வேண்டும்

r.v.saravanan said...

கடைசி படம் சூப்பர் பாலா

இராஜராஜேஸ்வரி said...

ப்பதே நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள். முனைவர் கு.ஞானசம்பந்தம் சொல்வார், "இக்கால குழந்தைகளுக்கு, அண்டார்டிக்காவில் இருக்கும் ஒரு இடத்தை பற்றி தெரியும். ஆனால் பள்ளி விட்டதும், தானாக வீட்டுக்கு வரும் வழி தெரியாது."./

நிதர்சன உண்மை.

படங்கள் அருமை..

வேழமுகன் said...

இது நிச்சயம் யோசிக்கவேண்டிய பிரச்சனை தான். ஆனால் இந்த நிலைமைக்கு முக்கியக் காரணம் பெற்றோர்களின் சோம்பேறித்தனமும்தான்.

ஷைலஜா said...

குழந்தைகளின் எதிர்காலம் நிஜமாக பயமாகவே இருக்கிறது.ஆனால் சில இடங்களில் பெற்றோர்கள் கவனமாகவும் இருக்கிறார்கள் நல்ல பதிவு இது.

பாலா said...

கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...