விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

November 11, 2011

அம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு

அம்மான்னா சும்மா இல்லடா....


ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்டே வருவார். பொதுவாகவே ராமராஜனுக்கு இளையராஜாவின் குரல் மிகப்பொருத்தமாக இருக்கும். இந்தப்பாடலிலும்தான். பாடல் முழுவதும் தாயின் பெருமைகளை மிக உருகி பாடி இருப்பார் இளையராஜா. அதற்கேற்றார் போலவே லிப்ஸ்டிக் உதடுகளை அசைத்து பாடி இருப்பார் ராமராஜன். சரிதான் "அம்மான்னா சும்மா இல்லடா" பாடல் எல்லா அம்மாக்களுக்கும் பொருந்துகிறதோ இல்லையோ, முதல்வருக்கு நன்றாகவே பொருந்துகிறது. நம்ம மக்கள்கிட்ட இருக்கிற கெட்ட குணமே,  "இவரை விட அவர் நல்லது செய்வார்." என்று மாறி ஓட்டுப்போடுவது, அவர் பதவிக்கு வந்த கொஞ்ச, "நாளில் நாம் செய்தது சரியா?" என்று குழம்புவது, கடைசியில், "அவரே தேவலாம்." என்று அங்கே ஓட்டுப்போடுவது.


ஆனால் தப்பி தவறி கூட வேறு யாருக்கும் ஓட்டுப்போட்டு விட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எனவே தோல்வியை பற்றி எந்த கவலையுமே இல்லாமல், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஏதோ விடுமுறை கிடைத்ததை போல, சும்மா அறிக்கை மட்டுமே விட்டுக்கொண்டிருப்பது. பின் அடுத்த முறை ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையாக 'உழைப்பது' என்று திராவிட கட்சிகள் தமிழகத்தை மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கின்றன. "கடந்த ஐந்தாண்டுகளில் கலைஞர் பல சாதனைகள் செய்தார்." என்றும், "இதெல்லாம் ஒரு சாதனையா?" என்றும் பலர் வாதாடுகிறார்கள். என்னை பொறுத்தவரை, கலைஞர் தான் செய்த ஒவ்வொன்றையுமே, மிக கவனமாக செய்திருக்கிறார். அதாவது பிற்காலத்தில் தன்னை ஒரு சரித்திர நாயகனாக எல்லோரும் நினைக்க வேண்டும் என்பதற்காக செய்தது போலவே இருந்தது (இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு வரும் மடையர்களுக்கு என்ன தெரியவா போகிறது?). ஆனால் ஆட்சியில் அமர்ந்த மறுகணமே அம்மா, "இந்த வரலாற்று சுவடுகள் எதிர்கால சந்ததியினருக்கு தெரியக்கூடாது." என்ற முனைப்பில் அனைத்தையுமே அழிக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போ மக்களுக்கு எதுவுமே செய்ய மாட்டாங்களா? "மக்கள் கெடக்குறாங்க முட்டாபசங்க. என்ன நல்லது பண்ணாலும் அடுத்த தேர்தலில் கட்சி மாறித்தான் ஓட்டு போடுவாங்க. அதுக்குள்ள இவர் பண்ண எல்லாத்தையுமே அழிச்சுடனும்."  அம்மான்னா சும்மா இல்லடா....

 தரம் தாழ்ந்த பகுத்தறிவு


"பகுத்தறிவு என்றால் என்ன?" என்று இன்று யாருக்குமே சரியாக தெரியவில்லை. எனக்கும் தெரியவில்லை. ஆனால் பகுத்தறிவுக்கே பாசறையாய் விளங்கும் ஒரு இயக்கம் பல ஆண்டுகளாக பகுத்தறிவுக்கு பல இலக்கணங்களை கூறி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த இலக்கணம் அவர்களாலேயே மாற்றப்படுவதால், தற்போது "பகுத்தறிவு என்றால் என்ன?" என்பதிலேயே எல்லோருக்கும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. சரி இதெல்லாம் பழைய கதை. கொஞ்ச நாளைக்கு முன்னால் "கலாநிதிமாறன் பின்லாந்துக்கு ஓட்டம்!!" என்று, சில பார்ப்பன ஏடுகள் செய்தி வெளியிட்டிருத்தன அல்லவா?. வழக்கமாக இந்த மாதிரி ஏடுகளில் வரும் செய்திகளுக்கு பாசறையின் போர்வாள் ஏட்டில் பதில் கூறப்பட்டிருக்கும். அது உண்மையோ பொய்யோ என்பது அப்புறம்தான். அதே போல இந்த செய்திக்கும் பதில் கூறப்பட்டிருக்கிறது. வழக்கம்போல பாப்பன ஏடுகளை நடத்துபவர்களை வாங்கு வாங்கென்று வாங்கி இருக்கிறார்கள். கட்டுரையை எழுதியவர் ஒரு படி மேலே சாரி கீழே போயி, அந்த ஏடுகளை நடத்துபவர்களின் தாயின் கற்பின் மீதும் சந்தேகம் தெரிவித்திருக்கிறார்.


கலாநிதி பின்லாந்து சென்றுள்ளார் என ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறியுள்ள அந்த எழுத்தாளரும், அதனைப் பிரசுரித்த ஏடும், அதனை வெளியிட்ட வெளியீட்டாளரும், அதன் ஆசிரியரும், அதன் தலைவரும் உத்தமி ஒருத்திக்குப் பிற்ந்திருந்தால் - கலாநிதி மாறன் பின்லாந்து சென்றதை நிரூபிக்க வேண்டும்! செய்வார்களா? நிரூபித்துக்காட்டி தாங்கள் உத்தமிக்குப் பிறந்தவர்கள் என்பதை நிலை நிறுத்துவார்களா? பத்திரிகை இருக்கிறது; பேனா இருக்கிறது என்பதற்காக எதையும் எழுதலாம் என்ற ஈனபுத்தியாளர்கள், கலாநிதி மாறன் பின்லாந்து சென்றதை நிரூபித்து - தங்கள் தாயின் பத்தினித் தனத்தை நாடறியச் செய்வார்கள் என நம்புவோமாக!
(Courtesy: www.tamilleader.in)


அப்படியானால் உண்மையிலேயே கலாநிதி வெளிநாடு செல்லவில்லையா? அதுவும் இல்லை. அவர் வெளிநாடு சென்றிருக்கிறார் என்பதையும் ஒத்துக்கொள்கிறார்கள். சரி எங்கே சென்றார்? அது பற்றி எதுவும் கூறவில்லை. இப்போது கலாநிதியை பற்றி செய்தி வெளியிட்டது குற்றமா? இல்லை அவர் பின்லாந்து சென்றார் என்பது குற்றமா? இப்படி செய்தி வெளியிட்டதற்கு சம்பந்தப்பட்டவரின் தாய் எப்படி பொறுப்பாக முடியும்? அப்படியானால் தவறான நடத்தை உள்ள பெண்ணுக்கு பிறந்தவர்கள் எல்லோரும் நாட்டில் தவறு செய்வார்கள். அதற்கு முழுக்காரணமும் அந்த பெண்தான் இல்லையா? இதற்கு பெயர்தான் பட்டர்பிளை எஃப்பெக்டோ? பகுத்தறிவு கொண்டாடும் பெண்ணியம் பல்லிளிக்கிறது.

அஷ்'வின்' நட்சத்திரம் 


டெல்லியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருக்கிறது. முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பினாலும், ஆசிய அணிகளுக்கே உரிய சுழற்பந்து வீச்சை பயன்படுத்தி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இருக்கிறார்கள். இந்த போட்டியில் ஒட்டுமொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, தன் முதலாவது போட்டியிலேயே முத்திரை பதித்துள்ளார் அஷ்வின். மீதம் உள்ள போட்டிகளிலும், அடுத்து வரும் ஆஸ்திரேலிய தொடரிலும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், ஹர்பஜன் அணிக்குள் வருவது கேள்விக்குறி ஆகி விடும். இரண்டாவது இன்னிங்சில் வழக்கம்போல, "சச்சின் நூறாவது சதம் கடப்பார்." என்று எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அதற்கு பதிலாக 15000 டெஸ்ட் ரன்கள் என்ற இன்னொரு சாதனையை படைத்திருக்கிறார். சாதனைகள் என்பது முறியடிக்கத்தான். ஆனால் இந்த சாதனை நீண்ட நாள் நிலைத்திருக்கும் என்பது என் கருத்து. இப்போதைக்கு சச்சினை டெஸ்ட் போட்டிகளில் நெருங்கி வருபவர் ஜாக் காலிஸ் மட்டுமே (டிராவிட் மற்றும் பாண்டிங் மீது நம்பிக்கை இல்லை). இவர் டெஸ்ட் போட்டிகளில் 12000 ரன்களை நெருங்கி விட்டார். ஆனால் இவருக்கு இப்போதே 36 வயதாகி விட்டதாலும், சச்சின் எப்போது ஓய்வு பெறுவார் என்று சொல்ல முடியாததாலும், காலிஸ் சச்சின் சாதனையை முறியடிப்பது சந்தேகமே...

மண்ணை கவ்வுமா கங்காரு?


நாம் எல்லோரும் இந்த டெஸ்ட் போட்டியை கவனித்து கொண்டிருக்க, மறுபுறம் இதை விட சுவாரசியமான போட்டி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது பல வினோதமான நிகழ்வுகள் ஏற்படுவது சகஜமாகி விட்டது. 434 ரன்களை விரட்டி பிடித்தது, டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது கடின இலக்கான 414ஐ விரட்டி பிடித்தது என்று அவ்வப்போது நடந்து வந்துள்ளன. அந்த வரிசையில் இந்த போட்டியையும் இணைத்துக்கொள்ளலாம். முதலில் ஆடிய ஆஸ்திரேலியா தடுமாறினாலும், கிளார்க் 151ரன் எடுக்க, 284 எடுத்து மூச்சு விட்டுக்கொண்டது. பிறகு ஆடிய தென்னாபிரிக்கா எந்த எதிர்ப்பும் காட்டாமல், 96 ரன்னுக்குள் சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா மிக தெனாவட்டாக ஆட தொடங்கியது. எடுத்தவுடனே அதிர்ச்சிதான். அதன் பின்னர் 5 ஓவர் வரை விக்கெட் எதுவும் விழவில்லை. பிறகு ஒரு ஓவருக்கு ஒரு விக்கெட் என்ற ரீதியில் விக்கெட் விழ, 12 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 21 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து விட்டது. டெஸ்ட் போட்டிகளில் மிக குறைந்த ஸ்கோர் 26. அதை தவிர்க்க ஆஸ்திரேலியா போராடியது. கடைசியில் சிடில் வந்து சில பவுண்டரிகள் அடிக்க, 47 ரன்னுக்குள் ஆட்டத்தை முடித்துக்கொண்டது. தற்போது 236 ரன் என்ற இலக்கோடு தென்னாபிரிக்கா ஆடி வருகிறது. அவர்கள் ஜெயிக்கிறார்களா இல்லையா என்று இன்று தெரிந்து விடும். இன்று ஆட்டத்தின் மூன்றாம் நாள் மட்டுமே. இரண்டாம் நாளான நேற்று மட்டும் 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருக்கின்றன. என்னப்பா ஆச்சு உங்களுக்கு?

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....

49 comments:

rajamelaiyur said...

Aus ஆட்டம் காலி

rajamelaiyur said...

உங்களுக்காக இன்று

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்

தமிழ் உதயம் said...

ஹர்பஜன் மீண்டு வருவது கடினமே.

உண்மை தான். கலைஞர் எதையும் திட்டமிட்டு செய்யக்கூடியவர் தான்.

ஆஸ்தி v/s தெ.ஆ போட்டி மிக பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.

Yoga.S. said...

காலை(11.11.11)வணக்கம்,ஆளாளுக்கு ஆப்படிப்பதிலேயே பாதி ஆட்சிக் காலம் போய் விடுகிறது!மக்கள் பணி செய்ய நேரம் ஏது?

பாலா said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி நண்பரே.

பாலா said...

@தமிழ் உதயம்

ஆமாம் ஆனால் இது தென்னாபிரிக்கா மீண்டு வந்ததன் காரணம்தானே. அப்படியானால் அவர்களை பொறுத்தவரை இது சிறப்பான ஆட்டம் தானே? நன்றி நண்பரே.

பாலா said...

@Yoga.S.FR

கருத்துக்கு நன்றி நண்பரே

ஒசை said...

பகுத்தறிவின் சொல்லும, செயலும் குமட்டுகிறது.

எப்பூடி.. said...

பகுத்தறிவு இப்பெல்லாம் வடிவேலு பட காமடியைவிட செம காமடி ஆகிவிட்டது.

ஒருநாள். T/20 போட்டிகளில் அஷ்வின் ஓகே, டெஸ்ட் போட்டிகளில் ஹர்பஜன் அஸ்வினை விட மிகவும் சிறந்த பந்துவீச்சாளர். தென்னாபிரிக்கா இலகுவாக வென்றுவிடும் போலுள்ளது.

ஜெயலலிதா பற்றி நான் Facebook இல் போட்ட ஒரு status "ஒன்றில் ஜெயலலிதாவை 'அம்மா' என்று சொல்வதை நிறுத்துங்கள்; அல்லது உங்களை பெற்றவளுக்கு வேறு ஏதாவதொரு நல்ல பெயர் கண்டு பிடியுங்கள் # மம்மி கூட ஓகே"

சக்தி கல்வி மையம் said...

ராமராஜன் இன்னும் ஞாபகம் இருக்கா?

சக்தி கல்வி மையம் said...

அறிமுகப் போட்டியிலே ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதைப் பெற்ற மண்ணின் மைந்தன் க்கு வாழ்த்துக்கள்..

சக்தி கல்வி மையம் said...

சச்சின் சாதனைகளில் இன்னுமொரு மகுடம்..

பெருமை...

பாலா said...

@ஒசை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க...

பாலா said...

@எப்பூடி..

நன்றி தலைவரே. இங்கே வந்து பாருங்க.. திரும்பின பக்கம் எல்லாம் அம்மா மயம்தான்.

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

நன்றி நண்பரே. ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் அல்லவா?

பால கணேஷ் said...

நம்ம மக்கள்கிட்ட இருக்கிற கெட்ட குணமே, "இவரை விட அவர் நல்லது செய்வார்." என்று மாறி ஓட்டுப்போடுவது, அவர் பதவிக்கு வந்த கொஞ்ச, "நாளில் நாம் செய்தது சரியா?" என்று குழம்புவது, கடைசியில், "அவரே தேவலாம்." என்று அங்கே ஓட்டுப்போடுவது.

-அருமையான வரிகள். இதுதான் நிதர்சனம். பகுத்தறிவு? அதை விளக்க இன்னொரு பெரியார்தான் பிறந்துவர வேண்டும். அஷ்வின் மேலும் பல சாதனைகள் படைக்க தமிழன் என்ற முறையில் வாழ்த்துவோம். நல்ல பதிவு நண்பா...

arasan said...

அனைத்தும் கலக்கல்...
முதலில் கூறிய கருத்து கொஞ்சம் சிந்திக்க வேண்டும் ...
பகிர்வுக்கு நன்றிங்க

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா ரொம்ப நாள் காலம் கழிச்சி ராமராஜன் போட்டோ பாக்குறேன்...!

Unknown said...

அருமை பாலா சுளுக்கு எடுத்து இருக்கீங்க நன்று..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இன்றைய அரசியல் நொந்து போக வைத்திருக்கிறது ஒன்றும் சொல்வதற்கில்லை

Anonymous said...

ஆபிரிக்கா வெற்றி )

அஷ்வின் எதிர்காலம் எப்படி என்று இனிவரும் போட்டிகள் தீர்மானிக்கும். சிறந்த வீரராக வர வேண்டும் என்பதுவே என் ஆசை...

இராஜராஜேஸ்வரி said...

சரிதான் "அம்மான்னா சும்மா இல்லடா" பாடல் எல்லா அம்மாக்களுக்கும் பொருந்துகிறதோ இல்லையோ, முதல்வருக்கு நன்றாகவே பொருந்துகிறது.

சென்னை பித்தன் said...

த.ம.2
ஒரு நல்ல ரவுண்ட் அப்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அஷ்வின் நிச்சயமாக இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பார். நல்ல திறமை அவரிடத்தில் உள்ளது.


நம்ம தளத்தில்:
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 11

K.s.s.Rajh said...

அஸ்வினுக்கு வாழ்த்துக்கள் இந்திய அணியின் பந்துவீச்சை இளம்வீரர்கள் சிறப்பாக செய்கின்றனர் இது தொடரவேண்டும் அப்படி தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் பந்துவீச்சாளர்கள் தயார்

அதே போல சச்சின்,ராவிட்,லக்ஸ்மன்,ஓய்வு பெறமுன் அவர்கள் இடத்தை நிரப்பும் இளம்வீரர்களை கண்டறிய வேண்டும் இல்லை என்றால் இவர்கள் சமகாலத்தில் ஓய்வு பெறும் போது இந்திய அணி பெரும் பின்னடைவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.

எப்படி இருந்த அவுஸ்ரேலிய அணி இப்படி ஆகிவிட்டது.....ஹி.ஹி.ஹி.ஹி....

செங்கோவி said...

பகுத்தறிவைப் புரிஞ்சுக்க நமக்கு பகுத்தறிவு வேணும் பாலா!!

வேழமுகன் said...

நல்ல பதிவு.. தமிழ் நாட்டிலேயே மிகக் காமெடியான ஒரு கான்செப்ட் தான் பகுத்தறிவு :)

Unknown said...

மாப்ள அம்மா எப்பவுமே இப்படித்தான்னு மீண்டும் நிரூபிக்க ஆரம்பிச்சி இருக்காங்க ஹிஹி...பகுத்தறிவு எங்கும் விற்ப்பனைக்கு இல்லை ஹிஹி!..அஷ்வின் கெடச்ச சான்சை சரியா யூஸ் பண்ணிகிட்டாறு...ஆஸ்திரேலிய பக்கிகளுக்கு தெனவட்டுக்கு ஒன்னும் குறைச்சலில்ல போல ஹிஹி!...மொத்ததுல அசத்தல் பதிவுய்யா!

பாலா said...

@கணேஷ்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

பாலா said...

@அரசன்

நன்றி நண்பரே

பாலா said...

@MANO நாஞ்சில் மனோ

காலையில டிவில அவர் பாட்டு போட்டாங்க அதான்.

பாலா said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு

நன்றி நண்பரே

பாலா said...

@rufina rajkumar

நன்றிங்க அடிக்கடி வாங்க

பாலா said...

@கந்தசாமி.

என் ஆசையும் அதுதான் நண்பரே

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

நன்றிங்க

பாலா said...

@சென்னை பித்தன்

நன்றி சார்

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினால் நிரந்தரமான ஒரு இடம் கண்டிப்பாக கிடைக்கும். நன்றி நண்பரே

பாலா said...

@K.s.s.Rajh

இப்போது கோலி கம்பீர் ரெய்னா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஓய்வு பெரும் வீரர்களின் இடத்தை கண்டிப்பாக நிரப்புவார்கள் என்று நம்பலாம். நன்றி நண்பரே.

பாலா said...

@செங்கோவி

நமக்கு பகுத்தறிவு வந்திடக்கூடாதுன்னுதானே இந்த பகுத்தறிவாளர்கள் எல்லாம் போராடுறாங்க...

பாலா said...

@வேழமுகன்

நன்றி நண்பரே

பாலா said...

@விக்கியுலகம்

நன்றி மாப்ள

r.v.saravanan said...

மக்கள் கெடக்குறாங்க முட்டாபசங்க. என்ன நல்லது பண்ணாலும் அடுத்த தேர்தலில் கட்சி மாறித்தான் ஓட்டு போடுவாங்க. அதுக்குள்ள இவர் பண்ண எல்லாத்தையுமே அழிச்சுடனும்."

ஹா....ஹா....

அம்மான்னா சும்மா இல்லடா....

டைட்டில் இந்த பதிவுக்கு ரொம்ப பொருத்தம் பாலா

இராஜராஜேஸ்வரி said...

.இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

Karthikeyan said...

அஷ்வினுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவே படுகிறது. அவர் விக்கெட் டேக்கர் என்பதை நிரூபித்து வருகிறார். பாலாஜியை போல இவரும் பாதியில் போய்விடாமல் உடல் திறனை கட்டுக்குள் வைக்க வேண்டுமே..!

பாலா said...

@r.v.saravanan

நன்றி நண்பரே...

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

நன்றிங்க...

பாலா said...

@Karthikeyan

உண்மைதான் நண்பரே. உடல்தகுதியை மட்டும் கவனித்துக்கொண்டால் சிறப்பான ஒரு வீரராக உருவாகலாம். நன்றி.

நம்பிக்கைபாண்டியன் said...

அனைத்து கருத்துக்களும் அருமை!மிகவும் ரசித்து படிக்கவைத்தது! பகுத்தறிவு பற்றி நச்!

பாலா said...

@நம்பிக்கைபாண்டியன்

கருத்துக்கு நன்றி நண்பரே

Related Posts Plugin for WordPress, Blogger...