விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

September 7, 2011

மற்றவர்களை இம்ப்ரஸ் பண்ணனுமா?


"என் வழி தனி வழி, எனக்கு எதைப்பற்றியும் கவலை கிடையாது." என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதாவது, "என் இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்வேன். யாரையும் இம்ப்ரஸ் பண்ண வேண்டிய அவசியம் கிடையாது. நான் இப்படித்தான். பிடித்தால் பேசு, இல்லாவிட்டால் ஓடிப்போ." என்று நிறையபேர் சொல்வார்கள். இப்படி இவர்கள் சொல்லிவிட்டாலும், எல்லா மனிதனின் உள் மனதிலும் அடுத்தவர்களை எப்படியாவது இம்ப்ரஸ் செய்து விட வேண்டும் என்ற ஒரு ஆவல் உண்டு என்பதே உண்மை. அது மனித இனத்துக்கே உரிய ஒரு குணம். தனது செயல்களுக்கு குறைந்த பட்சம் ஒரு பாராட்டாவது கிடைக்கவேண்டும் என்று எல்லோருமே விரும்புவர். அதன் அடிப்படை இம்ப்ரஸ் செய்யவேண்டும் என்ற எண்ணம்தான். 


கீழே நான் கேட்டிருக்கும் சில கேள்விகளை உங்களை பார்த்து நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். 

  1. நிறைய நண்பர்கள் வேண்டும் என்று நினைத்ததுண்டா?
  2. நண்பர்கள் உங்களிடம் எல்லா பெர்சனல் விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறீர்களா?
  3. ஒரு பொது இடத்தில், எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கவேண்டும் என்று நினைத்ததுண்டா?
  4. உங்களுடைய வருகை உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும் என்று நினைத்ததுண்டா?
  5. எல்லோரும் உங்களை ஜெண்டில்மேன் அல்லது ஜெண்டில்வுமன் என்று சொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா? 
  6. திருமணம் அல்லது ஏதாவது பொது நிகழ்ச்சியில், ஏதாவது ஒரு பெண்ணாவது/பையனாவது நம்மை திரும்பி பார்க்கவேண்டும் என்று நினைத்ததுண்டா? 
  7. மொத்தத்தில் எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? 

இதற்கு பெரும்பாலான பதில்கள் ஆம் என்று இருந்தால் மட்டும் மேலும் தொடரலாம். 

பெரும்பாலானவர்களுக்கு மேலே நான் கேட்ட கேள்விகளுக்கு ஆம் என்றே சொல்ல தோன்றும். எல்லா மனிதர்களுமே அடுத்தவர்களை ஏதாவது ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்து விடவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கென வெகுவாக மெனக்கெடுகிறார்கள். தங்கள் உடை விஷயத்தில், பேச்சு, பாவனை ஆகியவற்றில் வலுக்கட்டாயமாக ஒரு நாகரிக தோரணையை பூசுகிறார்கள். நட்பு வட்டாரத்தில் ஒரு சென்டர் ஆப் அட்ராக்சன் அதாவது எல்லோருடைய கவனமும் நாம் மீதே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். கவுதம் மேனன் ஸ்டைலில் சொன்னால், எங்கே போனாலும் அந்த இடத்தை ஆளனும் என்று நினைக்கிறார்கள். "அப்படியெல்லாம் கிடையாதப்பா, அடுத்தவங்களை இம்ப்ரஸ் பண்ணி நான் என்ன பண்ண போறேன்?" என்று சொல்பவர்கள் ஒன்று பொய் சொல்கிறார்கள் அல்லது தாழ்வு மனப்பான்மையில், பேசுகிறார்கள் என்று அர்த்தம். 


சரி இம்ப்ரஸ் பண்ணுவதற்கு ஆசை இருப்பது ஓகே. ஆனால் எப்படி செய்வது? இந்த குழப்பம் பலருக்கு உண்டு. தான் சரியாக செய்வதாக நினைத்துக்கொண்டே சொதப்பி, பல்பு வாங்குபவர்கள் உண்டு. கீழே நான் சொல்லி இருக்கும் சில வழிமுறைகள், நான் சொந்தமாக யோசித்தது கிடையாது. சில புத்தகங்களில் படித்தவையே. ஆனால் பெரும்பாலானவையை நானே பின்பற்றி இருக்கிறேன். 

எல்லோருக்கும் நல்லவனாக இருப்பது... 


மிகப்பெரிய கடினமான காரியம். இன்னும் சொல்லப்போனால் நடக்காத காரியம். எல்லோருக்கும் நல்லவனாக இருக்கவே முடியாது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு நல்லவனாக இருக்க முடியும். மனிதர்களிடம் ஒரு ஈகோ உண்டு. அதாவது தன்னை பற்றி பெருமையாக எண்ணிக்கொள்வது. உதாரணமாக இரண்டு வேறு துறைகளில் இருப்பவர்கள் சந்தித்துக்கொண்டார்களானால், தத்தமது துறைகளை பற்றியே பேசுவார்கள். அது நிறையோ குறையோ எதுவானாலும், தன்னைப்பற்றி, தன்னை சார்ந்தவை பற்றி பேசுவதையே விரும்புவார்கள். அதே போல, எதிரே இருப்பவர்களின் சொந்த புராணத்தை கேட்க விரும்ப மாட்டார்கள். ஆகவே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம், பேசுவதை விட்டு விட்டு கேட்க தொடங்குவது. யாரை சந்தித்தாலும் அவரைப்பற்றி விசாரித்து பேச்சை தொடங்குங்கள். உங்க வேலை எப்படி போகிறது? என்பதில் தொடங்கி, அவர்கள் தொழிலுக்கே உரிய சில நடைமுறைகளில் சந்தேகம் கேட்பது போல கேளுங்கள். உடனே அவர்கள் மட மடவென பேச தொடங்குவார்கள். நீங்கள் அசராமல் கேட்டுக்கொண்டே இருங்கள். (கொஞ்சம் கஷ்டம்தான்). இடையில் குறுக்கிடக்கூடாது. அவர் முடிக்கும்வரை காத்திருங்கள். முடிவில் உங்களைப்பற்றி விசாரிப்பார். பிறகு நீங்கள் என்ன சொன்னாலும் காது கொடுத்து கேட்பார். பிறகு எங்கு பார்த்தாலும் உங்களை நலம் விசாரிப்பார். உங்களை பற்றி எல்லோரிடமும் நல்ல விதமாக சொல்வார். மாறாக எடுத்த எடுப்பிலேயே உங்களை பற்றி சொல்ல ஆரம்பித்தால், மனிதர் கடுப்பாகி விடுவார். 

கவனம்: புதியவர்களோடு பேசும்போது, பெர்சனல் கேள்விகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அது தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தி விடும். கேள்விகள் அசட்டுத்தனமாக இருப்பதையும் தவிர்த்து விட வேண்டும்.
 

விசாரிப்பதோடு நின்றுவிடாமல், அவர் சொல்வதை ஆர்வமாக கேட்கவேண்டும். நம் முக பாவனைகள் அவருக்கு மேலும் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கவேண்டும். அவர் வருத்தப்பட்டு பேசும்போது நாம் சிரித்து விடக்கூடாது. கேள்விகள் அக்கறையோடு கேட்பதாக இருக்கவேண்டும். ஏதோ சிபிஐ அதிகாரி மாதிரி கேட்க கூடாது.  எல்லாவற்றையும் விட ரொம்ப முக்கியம், அவரது மன நிலை தெரியாமல் தொண தொண என்று கேட்டு கொண்டிருக்க கூடாது. கொஞ்சம் கடினமான வழிமுறைதான் ஆனால் மிகவும் பலன் தரக்கூடியது. 

நட்பை பலப்படுத்துவது.... 


ஒருவரோடு ஏற்கனவே ஒன்றிரண்டு முறை பேசி இருப்போம். திடீரென்று ஒருநாள் சந்திக்கும் நிலை வரலாம். அப்போது டக்கென்று அவரது பெயரை சொன்னால் மனிதர் உச்சி குளிர்ந்து போவார். இருப்பதிலேயே மிகவும் கடினமான விஷயம் அடுத்தவர் பெயரை ஞாபகம் வைத்திருப்பது. அதே போல மிக மகிழ்ச்சி தரும் விஷயம் ஒருவர் நமது பெயரை ஞாபகம் வைத்து சொல்வது. இதற்கு முதலில் ஒருவரின் பெயரை கேட்டவுடன் ஒருமுறை நாமும் உச்சரிக்க வேண்டும். பிறகு அதை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். வெகு நாட்களுக்கு பிறகு அவரை சந்திக்கும்போது பெயரை சொல்லி, முதல் சந்திப்பில் நடந்த சுவாரசியமான விஷயத்தையும் கூறினால், பிறகு அவர் வாழ்நாள் முழுக்க உங்களை மறக்கவே மாட்டார். 


நாம் கலகலப்பாக பேசாவிட்டாலும், அடுத்தவர்களின் கலகலப்பை ரசிக்கத்தெரிய வேண்டும். சும்மா உம்மென்று இருந்தால் யாரும் மதிக்க மாட்டார்கள். நம் உள் உணர்வுகளை நண்பர்களிடம் வெளிக்காட்டுவதில் தவறே இல்லை. ஆனால் அது மிக நெருங்கிய நண்பர்களோடு மட்டும் என்பதில் நினைவில் கொள்க. நம்மோடு நெருங்கி பேசுபவர்கள் எல்லாம் நெருங்கிய நண்பர் ஆகிவிட மாட்டார்கள். உதாரணமாக உங்கள் அலுவலகத்தில் பணி புரிபவர் உங்களோடு நன்கு பழகுவார். ஒரு நாள் மேனேஜரை உங்கள் முன்னாலேயே திட்டுகிறார் என்றால், நீங்கள் அதற்கு பதிலாக ஒரு புன்னகை புரிந்து விட்டால் போதுமானது, அதை விட்டு விட்டு, நீங்களும் உங்கள் பங்குக்கு ஏதாவது சொல்லப்போக, அது நேரே மேனேஜர் காதுக்கு போகும் அபாயம் உண்டு. அலுவலகத்தில் இந்த மாதிரி போட்டு வாங்கும் பார்த்திபன்கள் அதிகம். எனவே இந்த மாதிரி நேரத்தில் நழுவுகிற மீனாக இருப்பதால் உங்கள் பெயர் கெட்டு விடாது. மாறாக நல்ல பெயரே கிடைக்கும். 

இளைஞர்களே.... 

வாலிப வயதினர், எதிர் பாலினத்தை இம்ப்ரஸ் செய்வதே முழு நேர தொழிலாக கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்றுதான். நாம் இயல்பாக இருப்பதே நல்லது. அதுதான் சவுகர்யமும் கூட. அநியாயத்துக்கு சீன் போட வேண்டிய அவசியம் இல்லை. பெண்களுக்கு ஜோக் அடிக்கும் ஆண்களை மிகவும் பிடிக்கும், ஆனால் அதை விட ஜெண்டில்மென்களை அதிகம் பிடிக்கும். உங்களுக்கு ஜோக் வரவில்லை என்றால். மெனக்கெட்டு முயற்சிக்காதீர்கள். அதற்காக நரசிம்மராவ் மாதிரி உம்மென்றும் இருக்காதீர்கள். மெல்லிய புன்னகையை முகத்தில் தவழ விடுங்கள். பேசும்போது எக்ஸ்பிரேஸ்ஸிவாக பேசுங்கள். முகத்தில் எந்த வித சலனமும் இல்லாமல் பேசாதீர்கள். நாம் சொல்லும் விஷயத்தின் கருத்தை நாம் முகத்தின் பாவனையிலேயே காட்டி விடலாம். அப்படி பேசினால், எல்லோரும் உங்கள் முகத்தை ரசிப்பதை தடுக்க முடியாது. 


அதே போல எந்த ஒரு இளைஞனும், கலகலப்பான பெண்ணை விரும்புவான். ஆனால் அதை விட அதிகமாக சாந்தமான பெண்ணை விரும்புவான். மேக்கப் போடும் பெண்ணை முதலில் கவனிப்பான். ஆனால் இயல்பாக இருப்பவர்கள் மீதே இம்ப்ரஸ் ஆகிறான். வளவள என்று பேசும் பெண்ணுடன் பேச எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் நிதானமாக பேசும் பெண்ணோடுதான் நட்பு பாராட்டுவார்கள். 

உங்கள் நண்பர்கள் உங்களோடு பெர்சனல் விஷயங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதற்கு நீங்கள் இயல்பாக இருப்பதே நல்லது. அதே போல இன்னொருவரின் பெர்சனல் விஷயத்தை நண்பரிடம் சொன்னால், அது உங்கள் மீது அவ நம்பிக்கையை உருவாக்கி விடும். நம்முடைய விஷயத்தையும் இப்படித்தான் யாரிடமாவது சொல்லிவிடுவானோ? என்று நினைப்பார்கள். 

மேலே சொன்னவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்று. எப்போதும் திறந்த மனதுடன், இயல்பான புன்னகையோடு நாம் நடந்து கொண்டால், எல்லோருமே நமது நடவடிக்கைகளில் இம்ப்ரஸ் ஆவார்கள். நமக்கு நிறைய உண்மையான நண்பர்கள் கிடைப்பார்கள். 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

37 comments:

K.s.s.Rajh said...

அற்புதமான ஒரு பதிவு நண்பா.உங்கள் கிரிக்கெட் பதிவுக்கு அடுத்தபடியாக நான் மிகவும் ரசிச்ச உங்களின் பதிவுகளில் இதுவும் ஒன்று

K.s.s.Rajh said...

முதல் வடை எனக்குதான் போல

பாலா said...

@K.s.s.Rajh

மிக்க நன்றி நண்பரே...
பப்ளிஷ் பண்ண உடனே வந்துட்டீங்க..

சக்தி கல்வி மையம் said...

இப்ப இங்லாந்துல போய் அடிவான்குற நம்ப அணியைப் பற்றி?

Unknown said...

அருமையான பதிவு பாஸ்!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

அசத்தல் பதிவு வாழ்த்துக்கள்...

சுதா SJ said...

எனக்கும் மிக பிடித்த பதிவு இது,
என்னை நானே திருத்திக்கொள்ள உதவியது....
அசத்தல் பாஸ், வாழ்த்துக்கள்.

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

அந்த கொடுமையை பற்றி எழுத வேறு செய்யனுமா? நீங்க வேற வந்த புண்ணுல வேல பாய்ச்சுக்கிட்டு...

பாலா said...

@ஜீ...

ரொம்ப நன்றி பாஸ்

பாலா said...

@Rathnavel

ரொம்ப நன்றி நண்பரே...

பாலா said...

@MANO நாஞ்சில் மனோ

மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@துஷ்யந்தன்

ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே...

tamilvaasi said...

சார்.... உங்களுக்கு பெரிய போஸ்ட் தான் எழுத வருமா?

tamilvaasi said...

இங்கிலாந்தில் நம்ம ஆட்கள் மீண்டு வருவாங்களா?

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

நண்பா நான் எவ்வளவு முயன்றும் சிறியதாக எழுத முடியவில்லை. முயற்சிக்கிறேன்.

அப்புறம் கிரிக்கெட் மேட்ச். அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க? ஒரு வழியா டூரை முடிச்சுட்டு வரட்டும்.

Unknown said...

மாப்ள அருமையா விளக்கமா சொல்லி இருக்கீங்க....

உதாரணம் : வெளி நாட்டினரை சந்திக்கும் போது அவரிடம் குடும்பம் பற்றி கேட்கக்கூடாது....அம்புட்டு தான் பய புள்ள நம்ம பக்கமே வராது ஹிஹி!

சென்னை பித்தன் said...

சிறப்பான பதிவு!

K R Rajeevan said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!

உங்களோட 199 வது ஃபாலோயர் நான் தாங்க!

மேட்டர் என்னான்னா, உங்க பதிவு என்னைய ரொம்பவே இம்ப்ரெஸ் பண்ணிருச்சு!

வாழ்த்துக்கள் சார்!

சம்பத்குமார் said...

நண்பரே முதல் வருகை

அருமையான பதிவு.

அடுத்தடுத்து வரவேண்டிய பக்கங்கள்
இந்த பாலாவின் பக்கங்கள்

200 ஆவது பதிவுலக நண்பரானதில் மகிழ்ச்சி

தங்களது பயணத்தில் மைல்கல்லாய் வந்துவிட்டேன் நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்

Unknown said...

படித்ததும் பாதித்த உபயோகமான,அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.இது போல நிறைய எழுதுங்கள்.

Dr. சாரதி said...

Excellent.......well written

r.v.saravanan said...

நண்பா நிஜமாகவே அசத்தல் பதிவு நீங்கள் சொல்லியுள்ள சில டிப்ஸ் ஏற்கனவே நான் நடந்து கொள்கிறேன் என்றாலும் இந்த பதிவின் மூலம் இன்னும் நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி தொடர்ந்து எழுதுங்கள்

அபிமன்யு said...

ஆசிரியரே ,
அருமையான பதிவு. உங்க மாணவர்கள் கொடுத்து வெச்சவங்க...

பாலா said...

@விக்கியுலகம்

ரொம்ப நன்றி மாப்ள...

பாலா said...

@சென்னை பித்தன்

நன்றி சார்..

பாலா said...

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

முதல் வருகைக்கு நன்றி நண்பரே... அடிக்கடி வாங்க...

பாலா said...

@சம்பத்குமார்

நிச்சயமாக உங்கள் வருகை ஒரு மைல்கல்தான். அடிக்கடி வாங்க...

பாலா said...

@R.Elan.

மிக்க நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க..

பாலா said...

@Dr. சாரதி

மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@r.v.saravanan

கருத்துக்கு நன்றி நண்பா...

பாலா said...

@அபிமன்யு

இப்போதாங்க ஒரு நல்ல ஆசிரியரா மாற முயற்சி செஞ்சுகிட்டு இருக்கேன். நன்றி நண்பரே.

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் இம்ரஸ் பண்ணிட்டா போச்சு .
எல்லோருக்கும் உபயோகமான , தெரிந்திருக்க வேண்டிய அம்சங்களை எல்லாம் சேர்த்திருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்

மாணவன் said...

தெளிவான பார்வையுடன் மிகவும் சிறப்பா எழுதியிருக்கீங்க...
நிறைய விசயங்கள் கற்றுக்கொண்டேன் ரொம்ப நன்றி ஆசிரியரே!

தங்களின் மகத்தான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

பாலா said...

@Pavi

மிக்க நன்றி சகோ...

பாலா said...

@மாணவன்

நன்றி மாணவரே... அடிக்கடி வாங்க...

சேலம் தேவா said...

சூப்பர் பாஸ்...நாங்களும் ஏதோ டீஸன்ட் ஆக மாறுவதற்கு நல்ல தொடர் ஆரம்பிச்சு இருக்கீங்க... :)

Related Posts Plugin for WordPress, Blogger...