ஒரு குறிப்பிட்ட கேள்விகளுத்தான் பதில் அளிக்க வேண்டுமா என்று தெரியவில்லை. ஆகவே கொஞ்சம் சொந்தமான கேள்விகளையும் தந்திருக்கிறேன்.
1. விரும்பும் மூன்று விஷயங்கள்.
சினிமா பார்ப்பது (எதுவாக இருந்தாலும்)
புத்தகம் படிப்பது (எதுவாக இருந்தாலும்)
அரட்டை அடிப்பது
2. விரும்பாத மூன்று விஷயங்கள்.
அதிகாலையில் கண் விழிப்பது ( பத்தாண்டுகளாக கண் விழிப்பது 5.30க்கு)
குறைந்தபட்ச காமன் சென்ஸ் இல்லாமல் இருப்பவர்களை.
மற்றவர்களை கிள்ளு கீரையாக நினைப்பவர்களை.
3. மதிப்பிற்குரிய மூன்று மனிதர்கள் (பெற்றோர்களை தவிர்த்து)
கர்மவீரர் காமராசர்.
ஆபிரகாம் லிங்கன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
4. பிடித்த மூன்று திரைப்படங்கள்.
ஆறில் இருந்து அறுபது வரை
வாலி
காதலிக்க நேரமில்லை.
5. பிடித்த மூன்று உணவு வகைகள்.
அயிரை மீன் குழம்பு
கெண்டை மீன் பொரியல்
பாகற்காய் பொரியல்.
6. இறப்பதற்குள் செய்ய விரும்பும் மூன்று செயல்கள்.
ஒரே ஒரு மாணவனுக்காவது கல்விக்கு உதவி செய்வது
என் பெற்றோரை தாஜ்மகாலுக்கு அழைத்து செல்லவேண்டும்
சொந்தமாக ஒரு கார் வாங்கி அதில் பெற்றோரை கூட்டி செல்ல வேண்டும்
7. பிடித்த மூன்று ஊர்கள்.
விருதுநகர் (சொந்த ஊர்)
குற்றாலம் (என் தாத்தா ஹோட்டல் வைத்து நடத்திய ஊர்)
சென்னை(முதன் முதலில் சொந்த காசில் சோறு சாப்பிட்ட ஊர்)
8. என்னிடம் எனக்கு பிடித்த மூன்று குணங்கள்.
நிதானம்
காலம் தவறாமை
எதையும் சுலபமாக எடுத்துக்கொள்ளும் தன்மை.
9. என்னிடம் எனக்கு பிடிக்காத மூன்று குணங்கள்.
போலியாக கூட கோபப்பட தெரியவில்லை. சிரித்து தொலைக்கிறேன்.
பல நேரங்களில் நிறைய சிந்தித்து குழப்பி கொள்வது.
இரவு வெகு நேரம் கழித்து தூங்குவது
10. புரியாத மூன்று விஷயங்கள்.
கடவுள்
காலம்
காதல்
11. தொலைத்த மூன்று விஷயங்கள்.
எப்போதும் சிரித்த பள்ளி பருவம்
காதலில் விழாமல் தப்பித்த கல்லூரிப்பருவம்
சென்னையில் வாழ்ந்த பேச்சுலர் ரூம்.
12. கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்.
பாரபட்சமற்ற அன்பு
கடவுளிடமும் பேரம் பேசாமல் இருக்க
சிக்கனமாக இருக்க...
13. பெருமைப்படும் மூன்று விஷயங்கள்...
நான் ஒரு இந்தியன்
நான் ஒரு ஆசிரியன்.
சாதி மத பேதமில்லாமல் எல்லோரும் மதிக்கும் காமராசர் எங்க ஊர்க்காரர்.
14. மூன்று தாரக மந்திரங்கள்
எந்த பிரச்சனையையும் தள்ளி நின்று அணுகு
இதுவும் கடந்துபோகும்
எப்போதும் புன்னகை செய்
15. இந்த பதிவை தொடர நான் அழைக்கும் மூன்று நண்பர்கள்
(ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்தாலும் பரவாயில்லை, நேரம்
கிடைக்கும்போது எழுதுங்கள்)
44 comments:
ரைட்டு..
நீங்களும் ஆரம்பிச்சாச்சா?
அனைத்து மூன்றுகளும் முத்துக்கள்/..
என்னை அழைத்ததற்க்கு மிக்க நன்றி...
நான் ஏற்கனவே எழுதிவிட்டேன் பால...
முடிந்தால் ஒரு முறை படியுங்கள்..
http://kavithaiveedhi.blogspot.com/2011/07/blog-post_18.html
/////////
6. இறப்பதற்குள் செய்ய விரும்பும் மூன்று செயல்கள்.
ஒரே ஒரு மாணவனுக்காவது கல்விக்கு உதவி செய்வது/////
இதை தாங்கள் விரைவாக செய்யவும்
மற்ற விருப்பங்கள் நிறைவேறலும் வாழ்த்துகிறேன்...
/////
புரியாத மூன்று விஷயங்கள்.
கடவுள்
காலம்
காதல் /////
இது யாருக்கும் புரியாத விஷயங்கள் தான்...
அத்தனையும் தங்களை பிரிதிபலிக்கிறது...
தங்கள் பதிவுக்கு என் வாழ்த்துக்கள்..
அருமையான முன்று ..
நல்ல தொகுப்பு ... மற்றவர்களின் பதிவை எதிர்பர்கேறேன்
//தொலைத்த மூன்று விஷயங்கள்.
எப்போதும் சிரித்த பள்ளி பருவம்
காதலில் விழாமல் தப்பித்த கல்லூரிப்பருவம்
சென்னையில் வாழ்ந்த பேச்சுலர் ரூம்.//
உண்மைதான் நண்ரே இப்படி எத்தனை விசயங்களை தொலைத்துவிடுகின்றோம்.
நீங்கள் தொலைத்ததாக சொன்ன மூன்றில் நான்
நான் முதலாவதை தொலத்துவிட்டேன்.
இரண்டாவதை தொலைத்துக்கொண்டு இருக்கின்றேன்
மூன்றாவதை தொலைக்கப்போகின்றேன்.
பேச்சுலர் ரூம் களில் வாழ்வது.பல சிரமங்களைத்தந்தாலும் அதில் ஒரு சந்தோசம் இருக்கின்றது.
அப்பறம் இறப்பதற்குள் செய்ய விரும்பும் மூன்று செயல்கள். நிறைவேற வாழ்த்துக்கள்
அனைத்தும் அருமை!!!
மூணு மூணாவில் மூன்றாவது கேள்வியின் மூன்றாவது பதில் எனக்கு மிகவும் பிடித்தது :-)
நிறைவேற வாழ்த்துக்கள்
மூனு மேட்டர் சூப்பர்
நன்றி பாலா..
நிறைய விஷயங்கள் பகிர்ந்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்..
@!* வேடந்தாங்கல் - கருன் *!
நானும் ஆரம்பிச்சாச்சு.
@
# கவிதை வீதி # சௌந்தர்
ஏற்கனவே எழுதி விட்டீர்களா? ஒகே ஓகே. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே.
@"என் ராஜபாட்டை"- ராஜா
மிக்க நன்றி நண்பரே.
@Kss.Rajh
கருத்துக்கு நன்றி நண்பரே...
@ஆமினா
நன்றிங்க.
@எப்பூடி..
அட ஆமாங்க. நான் கூட இப்போதுதான் கவனிக்கிறேன். தலைவரே நீங்க ஷார்ப்பு.
@சமுத்ரா
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.
@Riyas
நன்றி நண்பா.
good
அன்புக்கு நான் அடிமை.தொடர்கிறேன்.
மூன்று மூன்றாக தாங்கள் தொகுத்து கூறிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. கலக்கல் நண்பரே..!!
தொடர் பதிவு எங்க போனாலும் மூணு மூணா தெரியுது...
தமிழ்வாசியில் இன்று:
அட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - இரண்டாம் பாகம்!
என்னிடம் எனக்கு பிடித்த மூன்று குணங்கள். நிதானம் காலம் தவறாமை எதையும் சுலபமாக எடுத்துக்கொள்ளும் தன்மை.
கடவுள் காலம் காதல்
அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@shanmugavel
Thank you.
@சென்னை பித்தன்
மிக்க நன்றி நண்பரே.
@! ❤ பனித்துளி சங்கர் ❤ !
கருத்துக்கு நன்றி நண்பரே.
@தமிழ்வாசி - Prakash
இந்த சீசன் அப்படி.
@மாய உலகம்
தங்கள் மேலான கருத்துக்கு நன்றி நண்பரே.
மூன்றை பற்றிய பகிர்வை பகிர்ந்தமைக்கு நன்றி பாலா தொடர் பதிவு எழுத அலைதமைக்கும் நன்றி தொடர்கிறேன்
கலக்கி புட்டீங்க மாப்ள!
@r.v.saravanan
மிக்க நன்றி நண்பரே. நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்.
@விக்கியுலகம்
நன்றி மாப்ள.
மூணு....மூணு....மூணு... எங்க போனாலும் மூணா தெரியுது.
தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்; விருப்பம் இருந்தால், நேரம் இருந்தால் எழுதவும் :-)
நண்பரே உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்,,
http://riyasdreams.blogspot.com/2011/07/blog-post_23.html
ஆகா...இங்கும் மூன்றா!....வாழ்த்துக்கள்.
அருமையான தகவல் தந்தீர்கள்.மிக்க
நன்றி பகிர்வுக்கு..........
@தமிழ்வாசி - Prakash
கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் தெரியும். கண்டுக்காதீங்க...
@எப்பூடி..
விரைவில் எழுதுகிறேன். மிக்க நன்றி நண்பரே.
@Riyas
கொஞ்சம் தாமதமானாலும் கண்டிப்பாக எழுதுகிறேன். என்னை அழைத்ததற்கு நன்றி நண்பரே.
@அம்பாளடியாள்
வருகைக்கு நன்றிங்க. அடிக்கடி வாங்க...
10 வது கேள்வி பதில் தான் ரொம்ப நச்சென்றிருக்கு...
@♔ம.தி.சுதா♔
ரொம்ப நன்றி நண்பரே...
Post a Comment