விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 29, 2011

என் கிரிக்கெட் வரலாறு - 15

தாதாவை துரத்திய சர்ச்சைகள்...




இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2003 உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் தோல்வி அடைந்து, சோகத்துடன் நாடு திரும்பியது. ஆனால் இந்திய வீரர்களின் திறமை மிக்க ஆட்டத்தை எல்லோரும் பாராட்டவே செய்தனர். தொடக்கத்தில் மோசமாக ஆடினாலும், தொடரின் முக்கிய கட்டங்களில் சிறப்பாகவே செயல் பட்டது இந்திய அணி. இந்த இறுதி போட்டியில் இருந்து இந்தியா கற்றுக்கொண்ட பாடம், இந்திய அணி ஒரு சிறந்த அணிதான். ஆனால் மிகச்சிறந்த அணி என்று தப்பு கணக்கு போட்டுவிட்டோம். அப்போதைக்கு தலைசிறந்த அணி ஆஸ்திரேலியாதான். ஒரு அணி முதலிடத்தை பிடிப்பது எவ்வளவு கஷ்டமோ, அதை விட மிக கஷ்டம் அதை வெகு காலத்துக்கு தக்க வைத்துக்கொண்டிருப்பது. அந்த வகையில் ஆஸ்திரேலியா தலை சிறந்த அணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பல வருடங்களாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் பட்டியலில் முதலிடம் வகிப்பது ஒன்றும் சாதாரண விஷயமில்லை. அதிலும் முதலிடத்துக்கும் இரண்டாமிடத்துக்கும் உள்ள புள்ளிகள் வித்தியாசம் எட்ட முடியாத தூரம. 1998 முதல் 2008 வரையிலான பத்து ஆண்டுகள் என்பது, ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஒரு பொற்காலம் என்றால் அது மிகையாகாது. அவர்கள் தொட்டதெல்லாம் வெற்றிதான். 2003 வரையாவது ஆஸ்திரேலியாவை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தவர்கள், அதன் பின் அந்த நினைப்பையே கைவிட்டனர். 



இது முதல் படிதான் இன்னும் நிறைய உழைக்கவேண்டும். உலககோப்பை வெல்வது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல என்று தெரிந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சவால் விட்ட இரண்டே அணிகள் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காதான். டெஸ்ட் தொடர்களோ, ஒருநாள் தொடர்களோ, இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாகவே விளங்கினர். குறிப்பாக லக்ஷ்மண் மற்றும் டிராவிட் இருவரும் ஆஸ்திரேலியாவை கலங்கடித்தனர். கிட்டத்தட்ட எல்லா போட்டிகளிலுமே டிராவிட் அரைசதமடித்தார். 2003 டிசம்பரில் ஆஸ்திரேலியா சென்ற இந்தியா அணி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேலும் ஒருநாள் தொடர்களிலும் சிறப்பாகவே ஆடியது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடனே ஆடியதாலோ என்னவோ, மற்ற அணிகளோடு விளையாடுவது இந்தியாவுக்கு மிக எளிதாக இருந்தது போலும். 


அதற்கு மிக சிறந்த உதாரணம், ஆஸ்திரேலிய தொடருக்கு அடுத்ததாக இந்தியா மேற்கொண்ட பாகிஸ்தான் பயணம். சில பல அரசியல் காரணங்களுக்காக பல வருடங்கள் பாகிஸ்தான் செல்லாமல் இருந்த இந்திய அணி 2004இல் பாகிஸ்தான் சென்றது. இத்தனை வருடம் கிரிக்கெட் ஆடியும், இந்திய அணியால் பாகிஸ்தான் மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட வெல்ல முடியவில்லை. முதல் டெஸ்ட் முல்தானில் நடந்தது. "எவண்டா சொன்னான். டெஸ்ட் போட்டி என்றாலே எல்லாரும் கட்டையை போடுவார்கள். மந்தமாக இருக்கும் என்று? இதோ பாருங்கடா! இதுவும் டெஸ்ட் போட்டிதான்.", என்று சொல்லாமல் ஆடிக்காட்டினார் சேவாக். முதல் நாள் முடிவில் இந்தியா 356 எடுக்க அதில் சேவாக் மட்டும் 228. மரண அடி என்றால் என்ன என்று மறுபடியும் நிரூபித்தார். சரி மறுநாள் அவுட் ஆகி விடுவார் என்று பார்த்தால், அதுவும் நடக்கவில்லை. சேவாக் சோர்வடைவது போலவே தெரியவில்லை. பொதுவாக சில பேட்ஸ்மேன்கள், தொண்ணூறுகளில் இருக்கும்போது சதம் அடிக்கும் வரை மெதுவாக ஆடுவார்கள். ஆனால் சேவாக் அந்த நெருக்கடியை விரும்புவதில்லை. முடிந்த வரை சீக்கிரமாக சதம் அடிக்க வேண்டும் என்றே விரும்பினார். 296 இல் இருந்து சிக்சர் அடித்து 300ஐ எட்டும் தைரியம் அவருக்கு மட்டுமே உண்டு. இந்த போட்டியில் அவர் எடுத்தது 309 ரன்கள். அன்றில் இருந்து அவரை எல்லோரும் முல்தான் கா சுல்தான் (முல்தானின் ராஜா) என்று அழைக்கிறார்கள். டெல்லியில் இருக்கும் சேவாக்குக்கு சொந்தமான ஓட்டலில், முல்தான் பிரியாணி 309 ரூபாய்க்கு விற்கபடுகிறது. 


இதுவரை பல வீரர்கள் அதிரடியாக டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருந்தாலும், சேவாக் மாதிரி மரண அடி இதுவரை யாரும் அடித்ததில்லை. அதாவது அதிவிரைவாக இரட்டை சதம் அடித்த பட்டியலில் முதல் பத்து இடங்களில், ஐந்து முறை சேவாக் பெயர் இடம்பெற்றுள்ளது, அதே போல அதிவிரைவாக முச்சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில், இரண்டு முறை அவர் பெயர் இடம் பெற்றுள்ளது. டெஸ்ட் போட்டிகளையும் சுறுசுறுப்பாக்கிய பெருமை சேவாக்குக்கு உண்டு. டெஸ்ட் போட்டிகள் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு நாள் போட்டிகள் மாதிரி, டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக ஆடுவதற்கு தனி திறமை வேண்டும். இதற்கு முந்தைய காலகட்டங்களில், தன் மீது சொல்லப்பட்டு வந்த குறைகளை மெதுவாக திருத்திக்கொண்டு, வேகத்தோடு மட்டுமே ஆடி வந்த சேவாக், விவேகமான வேகத்தோடு செயல் பட ஆரம்பித்தார்.


முல்தான் டெஸ்டில் சச்சின் டெண்டுல்கர் 194 ரன்னில் இருக்கும்போது அப்போதைய தற்காலிக கேப்டன் டிராவிட் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இது கடும் விமர்சனத்துக்குள்ளானது. "சச்சினை இரட்டை சதம் அடிக்க விடாமல் செய்ய வேண்டும் என்பதற்காக, கங்குலி தீட்டிய திட்டம்." என்றும் சொன்னார்கள். கங்குலி மீது மீண்டும் சர்ச்சைகள் வரத்தொடங்கின. பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி இந்தியா அணி சாதனை படைத்தது. ஸ்ரீநாத் விடைபெற்ற நிலையில், அணிக்கு வந்த பதான், பாலாஜி உள்ளிட்ட பவுலர்கள், ஒருநாள் தொடரிலும் சிறப்பாக ஆடி நம்பிக்கை அளித்தனர். தொடர்ந்து வந்த ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என்று ஒவ்வொரு தொடரிலும் இந்திய வீரர்கள் சிறப்பாகவே ஆடி வந்தனர். இந்த போட்டிகளின் போது, கங்குலி மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் நேரமே (2 நிமிடம்) களத்தில் இருப்பார் என்று கிண்டலாக பேசப்பட்டது. கங்குலி பெரும்பாலான போட்டிகளில் மிக மோசமாக ஆடினாலும், அவரது தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளை பெற்று வந்தது மறுக்கமுடியாதது. 

இருந்தாலும் கங்குலியின் தலைமை மீது ஒரு பெரும் குற்றம் சுமத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்திய அணி கிட்டத்தட்ட எல்லா இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுவிடும். ஆனால் இறுதிபோட்டியில் தோல்வி அடைது வெளியேறி விடும். அவர் தலைமையில் இந்தியா வரிசையாக 17 தொடர்களில் இறுதிபோட்டியில் தோல்வி அடைந்து சாதனை படைத்தது. மெல்ல மெல்ல கங்குலி மீது பலரும் அதிருப்தி அடைய தொடங்கினார்கள். இந்த நேரத்தில் கங்குலிக்கு ஆதரவாக இருந்த டால்மியா பதவி விலக, சரத் பவார் பி‌சி‌சி‌ஐ தலைவரானார்.  இவருக்கு டால்மியாவை பிடிக்காது. ஆகவே கங்குலியையும் பிடிக்காமல் போனது. வெகுநாட்களுக்கு யாருக்கும் தோன்றாத ஒரு கேள்வி மறுபடியும் முளைத்தது. அடுத்த கேப்டன் யார்? டிராவிட், கும்ப்ளே, அல்லது சேவாக் என்று எல்லோரும் பேசிக்கொண்டனர். இதற்கிடையே 2004 இறுதியில் இந்திய அணி வங்காளதேசம் சென்றது. 


பொதுவாக இந்த மாதிரி சிறிய அணிகளோடு விளையாடும் தொடர்கள் கண்டு கொள்ளப்படாமல் விடப்படும். இந்த தொடரும் அப்படித்தான் விடப்பட்டது. ஆனால் இரண்டாண்டுகளுக்கு பிறகே இந்த தொடரை பற்றி எல்லோரும் செய்தியை சேகரித்தார்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் கல்லூரி இறுதியாண்டு படித்து கொண்டிருந்தேன். சில சமயம் கல்லூரி அருகில் தங்கி இருந்த வெளியூர் நண்பர்களின் அறைக்கு செல்வது வழக்கம். அப்போது ஒரு டீக்கடையில் இந்தியா பங்களாதேஷ் ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் இந்திய அணி சார்பில் விளையாடிய ஒருவன் மிக வினோதமாக இருந்தான். அவன் மட்டை சுழற்றும் விதம், மிக வினோதமாக, கேவலமாக இருந்தது. இதற்கு முன் இந்திய அணியில் பெரும்பாலும் ஒல்லியானவர்களே ஆடி இருக்கிறார்கள். இவன் பார்ப்பதற்கு பயில்வான் மாதிரி இருக்கிறான். தோள்பட்டை வரை நீண்ட முடி. "யார்ரா இவன்? சரியான காட்டானாக இருக்கிறான். இவனெல்லாம் எப்படி டீமுக்குள்ள வந்தான்?" என்று கேட்டேன். அப்போது எனக்கு தெரியாது, அவனுடைய தலைமையில்தான் இந்திய அணி உலகக்கோப்பையை ஜெயிக்கபோகிறதென்று. அவன்தான் மகேந்திரசிங் தோனி. 


தூக்கி எறியப்பட்ட தாதா... கரீபியன் மண்ணில் உலகக்கோப்பை... 
அடுத்த பதிவில்..... 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...  

28 comments:

அருண் பிரசாத் said...

சேவாக் 309 அடிச்ச மேட்சை ஆபிசில் பார்த்தேன்.... 296ல சிக்சர் அடிப்பாருனு யாருமே எதிர் பார்க்கலை... செம மாட்ச்...

கங்குலி தானே ஆப்பை தேடி உட்கார்ந்துகிட்டாருன்னு தான் சொல்லனும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கிரிக்கெட்டின் அசலசல் வேறெங்கும் இதுபோல் பார்த்ததில்லை...


அற்ப்புதம்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

விரிவான கட்டுரை தினமும், எப்படிங்க?

Manoj said...

// அப்போது எனக்கு தெரியாது, அவனுடைய தலைமையில்தான் இந்திய அணி உலகக்கோப்பையை ஜெயிக்கபோகிறதென்று //

நீங்க மட்டும் இல்லே யாருமே இவன் இரண்டு வருஷத்துலே கேப்டன் ஆவன்னு யோசிக்ககூட இல்லே ... i feel its an accident ( his captainship)..

Mohamed Faaique said...

சூப்பரான ஒரு அலசல்..

சக்தி கல்வி மையம் said...

அறிய தகவல்கள்..
நன்றி பாலா.

Unknown said...

அண்ணா தோணி தனது முதல் சதம் அடித்த ஆட்டத்தைத்தான் நான் முதலில் பார்த்தேன். அந்தப் போட்டியில் தோணியை சேவாக் ஊக்கப்படுத்துவார் பாருங்கள். அதான் சேவாக்.

Unknown said...

எல்லோரும் தோணி கேப்டனானது அவன் அதிர்ஷ்டம் அப்படின்னாங்க. நான் சொன்னேன், அவன் உழைப்பு அப்படின்னு, யோசிச்சு பாருங்க வேற எந்த டீமிலயாவது விக்கெட் கீப்பர் பால் எடுக்க பவுண்டரி லைன் ஓடுவாங்களா.

Unknown said...

வழமை போல அருமை!!
அந்த முல்தான் முச்சதம் மறக்க முடியுமா பாஸ்!!

K.s.s.Rajh said...

எனக்கு ஒரு யோசனை தோன்றுகின்றது உங்கள் இந்த தொடர்பதிவை நீங்கள் இன்னும் கொஞ்சம் மெருகூட்டி ஒரு புத்தகமாக வெளியிடலாம்.ஏன் என்றால் தமிழ் மொழியில் இப்படி கிரிக்கெட் சம்மந்தமான புத்தகங்கள் வருவது குறைவுதானே.பெரும்பாலும் ஆங்கிலத்தில் வருதால் நல்ல வரவேற்பு இருக்கும் என நினைக்கின்றேன்.

90 ரன்களில் இருக்கும் போது சதம் அடிக்க பல வீரர்கள் மெதுவாக ஆடுவார்கள்.வேவாக்கிடம் அந்த குறை இல்லைதான் இலங்கையின் சங்கக்காரவும் டெஸ்ட்ப்போட்டிகளில் அப்படித்தான் ஒரு முறை 180 ரன்களில் இருந்த போது வரிசையாக 5 பவுண்ரிகள் விளாசி இரட்டைசதம் அடித்தார்.பலமுறை சங்கா இப்படி ஆடியுள்ளார் பதட்டம் அடைய மாட்டார்.ஆனால் 296ல் இருக்கும் போது சிக்சர் அடிக்கும் தைரியம் சேவாக்கைத்தவிர வேறு யாருக்கும் வராது.
டோனியின் அறிமுகம் அறிமையான வரிகளால் வர்ணித்துள்ளீர்கள்.

Kavin Raja said...

அற்புதம்....! பொதுவாக அதிரடி ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடுவது சாத்தியம இல்லை அனால் சேவாக் ??? அவருக்கே இது சாத்தியம் 309, 319, 293, 254... Kss.Rajh சொல்வது போல புத்தகம் எழுதலாம் ......

மாய உலகம் said...

கிரிக்கெட்டிற்கான அலசல் பதிவு என்றாலே உங்க பதிவு தான் வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

இன்று எனது வலைப்பதிவில்


நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.com

பாலா said...

@அருண் பிரசாத்

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.

பாலா said...

@# கவிதை வீதி # சௌந்தர்

நண்பா ஏதோ ஞாபகம் இருப்பதை வைத்து எழுதுகிறேன். மிக்க நன்றி நண்பரே.

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

கொஞ்சம் கஷ்டம்தான் நண்பரே. நிறைய விஷயங்கள் மனதில் இருப்பதால் விரைவில் எழுத முடிகிறது. படங்களுக்கு மட்டும்தான் கொஞ்சம் மெனக்கெடவேண்டி இருக்கிறது.

பாலா said...

@Manoj

நன்றி நண்பரே.

பாலா said...

@Mohamed Faaique

மிக்க நன்றி நண்பரே.

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

வருகைக்கு நன்றி கருண்.

பாலா said...

@மதுரை

நீங்க சொல்வது சரிதான் நண்பா. கேப்டன் பதவியை வேண்டுமானால் அதிர்ஷ்டத்தில் பிடித்து விடலாம். ஆனால் தொடர்ந்து வெற்றி பெறுவது என்பது கடின உழைப்பில்லாமல் முடியாது. நன்றி அடிக்கடி வாங்க.

பாலா said...

@Kss.Rajh

நமக்கு அந்த அளவுக்கெல்லாம் திறமை கிடையாதுங்க. மிக்க நன்றி.

பாலா said...

@Kavin Raja

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. அப்படி ஒரு எண்ணமே கிடையாது. பார்க்கலாம்.

பாலா said...

@மாய உலகம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

ரிஸ்வான் said...

ரொம்ப நல்லா இருக்கு சார்....கிரிக்கெட்ட பத்தி தெரியாத பல விஷயங்கள் தெரிஞ்சிக்க முடியுது.நீங்க தொடர்ந்து எழுதுங்க.....

ரிஸ்வான் k s a said...

ரொம்ப நல்லா இருக்கு சார்....கிரிக்கெட்ட பத்தி தெரியாத பல விஷயங்கள் தெரிஞ்சிக்க முடியுது.நீங்க தொடர்ந்து எழுதுங்க.....

arasan said...

செம கிரிக்கெட் விருந்து நண்பா ..

பாலா said...

@ரிஸ்வான் k s a

நன்றி நண்பா தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.

பாலா said...

@அரசன்

மிக்க நன்றி நண்பா

Related Posts Plugin for WordPress, Blogger...