விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 15, 2011

வெட்டி அரட்டை - நித்யானந்தா, ரஜினி, தில்ஷன்...


மறுபடியும் கிரிக்கெட் தொடருக்கு ஒரு சின்ன இடைவேளை. மிகப்பெரிய இடைவேளையாக இருக்காது என்று நம்புகிறேன். இந்த இடைப்பட்ட வேளையில் சமீபத்தில் நடக்கும் நாட்டு நடப்புகளில் சிலவற்றை பற்றி அரட்டை அடிக்கலாம் என்று நினைக்கிறேன். இது வெட்டி அரட்டைதான். உருப்படியா எதுவும் இல்லைனு அப்புறம் கோவிச்சுக்காதீங்க.... 




என் கதை முடியும் நேரமிது....

இந்த பாடலை பாடியதால்தான் தனக்கு மார்க்கெட் போய் விட்டாதென்று டி‌எம் சவுந்திரராஜன் சொல்வாராம். ஆனால் அவரை விட இந்த பாடல் இப்போது கலைஞருக்குத்தான் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது. "ஏம்பா ஒரு மனுஷன் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்க முடியும்?", இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள, திமுகவுல இருக்கிறவர்களுள் கலைஞர் மட்டுமே வெளியே இருப்பார் போலிருக்கிறது.

"செயின் திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு போயிட்டாங்க." என்று அம்மா சொன்னாலும் சொன்னாங்க, ஊர்ல எங்க செயின் திருட்டு நடந்தாலும் அங்கே கலைஞர் டிவி ஆஜர். அந்த நியூசை முழுவதும் கவர் செய்து விட்டு, அம்மா சொன்னதையும் சுட்டிக்காட்ட தவருவதில்லை. குறிப்பாக பாதிக்க பட்டவர்களை அதிமுக அரசை நாலு திட்டு திட்ட சொல்லி அதையும் படம்பிடித்துக் கொள்கிறார்கள். கேஸ் சிலிண்டருக்கு தமிழக அரசு தந்த மானியம், பொது காப்பீட்டு திட்டம், தயாநிதி ராஜினாமா ஆகிய செய்திகளை பற்றி மூச்... முன்பு ஜெயா டிவி செய்ததை, இப்போது இவர்கள் செய்கிறார்கள். 


நகுர்தனா தீரானானா ...... 


நித்தியானந்தா. இந்த மனிதர் சன் டிவிக்கும், நக்கீரனுக்கும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறார். பின்னே?, அவர் குமுதத்தில் தொடர் எழுதி கொண்டிருந்தபோது கூட இவ்வளவு புகழ் பெறவில்லை. அவரது பிட்டு (இந்த வார்த்தையை யாருப்பா கண்டுபிடிச்சது?) ரிலீஸ் ஆன பிறகுதான் எங்கோ போய் விட்டார். அதிலும் ரெண்டு நாளைக்கு முன்னால பத்திரிக்கைகாரங்களுக்கு பேட்டி கொடுத்தார் பாருங்க, இந்த மனுஷனுக்குள்ளேயும் ஏதோ இருக்குனு நமக்கு உணர்த்திருச்சு. கடைசில ஒண்ணு சொன்னாரு. "சன் டிவி குடும்பத்தாரே, உங்கள் வீட்டு பெண்களும் என்னிடம் பல முறை வந்திருக்கிறார்கள்.....(கொஞ்ச நேரம் கழித்து) ஆன்மீக காரணங்களுக்காக, பலனும் அடைந்திருக்கிறார்கள்..... (கொஞ்ச நேரம் கழித்து) ஆன்மீக ரீதியாக." வெண்ணிற ஆடை மூர்த்தி தோத்தார் போங்க.... 


பள்ளிக்கூடம் போகலாமா.... 

ஒரு வீட்டுல அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. எதுலயுமே நேர்மார்தான். அவங்களுக்கு ஒரு குழந்தை. பள்ளிக்கூடம் போகுற வயசு வந்துச்சு. அப்பா சொல்றார், "ஸ்டேட் போர்டுலயே சேத்துடலாம்." 

அம்மா சொல்றாங்க, "இல்லை. சி‌பி‌எஸ்‌இ சிலபஸ் இருக்குற ஸ்கூல்ல சேர்க்கலாம்." 

"இல்லைமா. இந்த சின்ன வயசுல ஏன் கஷ்டபடணும்?" என்கிறார் அப்பா.

"ஓ! நீங்க முடிவு பண்ணிட்டா, அதுக்கு நான் கட்டுப்படனுமா?" இது அம்மா.

"ஆமாண்டி, அப்படித்தான்." வாய்ஸை உயர்த்துகிறார் அப்பா. 

சண்டை முற்றுகிறது. அருகில் இருக்கும் குழந்தை பேந்த பேந்த விழிக்கிறது. 

அம்மா பெட்டிய தூக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய் விட, அப்பா விவாகரத்து கேஸ் போடுவேன் என்று மிரட்டுகிறார். ரெண்டு பக்கமும் பலத்த சண்டை. இந்த சண்டையில் ஒரு விஷயத்த ரெண்டு பேருமே மறந்துட்டாங்க. அவங்க பிள்ளையை ஸ்கூலில் சேர்க்கும் தேதி முடிந்து விட்டது. இனி அடுத்த வருடம்தான் சேர்க்க முடியும். அந்த பிள்ளையின் படிப்பு இந்த வருடம் அதோகதிதான். ஆனால் அதெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை. எனக்கு ஈகோதான் பெரிசு.... வீட்டுல நடக்குற மாதிரிதானே நாட்டுலயும் நடக்குது? 


ராணுவ வீரன்னா பெரிய கொம்பா?

இந்தியாவையே லேசாக உலுக்கிய ஒரு சம்பவம், (வட இந்தியாவில் நடந்திருந்தால் பலமாக உலுக்கி இருக்கும்), "சிறுவன் தில்ஷன் ஒரு ராணுவ அதிகாரியால் சுட்டு கொல்லப்பட்டான்." இதை பற்றி பலவித கட்டுரைகள் பதிவுலகத்தில் வந்துவிட்டன. ஆனால் இதை வைத்து தன்னை புரட்சிக்காரர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் நடத்திய சில்லறைதனமான செய்கைகள்தான் பெரும் எரிச்சலை தந்தன. 

முதலில் வந்த செய்தி, "சிறுவன் ஒருவன் ராணுவ குடியிருப்பில் இருக்கும் காவலாளியால் சுட்டுக்கொல்லப்பட்டான்." இந்த ஒரு செய்தி வந்தவுடன், என்னமோ, "தனக்குத்தான் எல்லாம் தெரியும், தங்களால் மட்டுமே இந்தியாவை காக்க முடியும்!" என்று சொல்லிக்கொண்டு முட்டாள்தனமாக கருத்துக்களை வெளியிட்டார்கள் சில புரட்சிக்காரர்கள். இந்தியா என்று ஒரு நாடே இருக்க கூடாது என்று நினைக்கும் இவர்களுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்தது வேடிக்கையே. அதற்கு பல சிங்ஜாக்கள் வேறு... 

"அய்யய்யோ, இந்திய ராணுவத்தின் அட்டூழியத்தை பார்த்தீர்களா? அராஜகம், காவலாளி என்றால் சுட்டு விடுவதா? அந்த காம்பவுண்ட் என்ன பாகிஸ்தான் பார்டரிலா இருக்கிறது? சிறுவன் என்றாலும் சேரிப்பையன் அல்லவா? அதனால்தான் சுட்டார்கள், அய்யோ கொடுமை, ரத்தம், புரட்சி, குய்யோ, முறையோ!!" என்று கேனைத்தனமாக கட்டுரை எழுதி வெளியிட்டார்கள். ஆனால் சுட்டது காவலாளி அல்ல, ரிட்டையர் ஆன, மறை கழன்ற, ஒரு ஆள். சொந்த விருப்பு வெறுப்பு காரணமாக செய்த ஒரு செயலை, சாமர்த்தியமாக ஒரு அமைப்பின் செயலாக சித்தரித்து அதில் சிகப்பு பெயிண்ட் அடிக்க நினைத்தார்கள். பிறகு எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆனதும், "இருந்தாலும், ராணுவத்தில் இதை எல்லாம் சொல்லி கொடுக்க மாட்டார்களா? என்ன ராணுவம்? என்று வேறு ரூட்டில் திரும்புகிறார்கள். 


இதில் கொடுமை என்னவென்றால் ஒரு சில ஜால்ராக்களின் கருத்துக்களை படித்தவுடன், அப்படியே காலில் இருப்பதை கழட்டி அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் போலிருந்தது. அதில் சில.... 

#ராணுவ வீரனும் சம்பளத்துக்குத்தானே வேலை செய்கிறான். அப்புறம் என்ன வீரன். ராணுவ கூலி என்றுதானே சொல்ல வேண்டும்?

#இந்திய ராணூவத்தால பொதுமக்களுக்குன்னு நடந்த ஒரு நல்ல சம்பவத்த சொல்லுங்க 

#இவனுங்களுக்கு பெரிய புடுங்கீங்கன்னு நெனப்பு,தின்னு கொழுத்த மயிரான்டிங்க

#கார்கிலில் தூங்கிவிட்டு, எதிரிகள் கண்ணெதிரே வரும்வரை துப்பாக்கியை காலிடுக்கில் வைத்து சுத்தம் செய்துகொண்டிருந்தவர்கள்தான், இன்று குடியிருப்பு பகுதி சிறுவனை கொன்றிருக்கிறார்கள் 

#சியாச்சின் பனிமலைப்பகுதிகளில் சும்மா இருந்துதான் பொழுது போக்குகிறார்கள். ஒன்னத்துக்கும் பிரயோசனமத்த பனிப் பாலைவனத்த நாய் தேங்காய் சில்லை காவக் காத்த மாதிரி மோந்து பாத்துட்டு உக்காந்திருக்குற மூதேவிக்கு என்ன மருவாதி வேண்டிக் கிடக்கு?அங்கே இவிங்க இருந்தா என்னா செத்தா என்னா? 

என்னங்க இவங்க சொல்றதும் கரெக்ட்தானே? பார்டர்ல பனிமலையில ஜாலியா இருக்கும் ராணுவ வீரர்களை சாரி கூலிகளை வேலைய விட்டு தூக்கிட்டு, இந்திய ராணுவத்தையே கலைச்சுட்டு, பேசாம இந்த கருத்துக்களை உதிர்த்த பெருந்தகைகளை அங்கே அனுப்பினால் தேவலாம். பின்னே என்னங்க? கார்கில் போர் நடந்தப்போ கூட நம்ம வீரர்கள் தூங்கிக்கிட்டுதானே இருந்தாங்க? பாகிஸ்தான்காரந்தானே, பாவம் தூங்குரவுங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு, பெரிய மனசு பண்ணி திரும்பி போனான். 


தலைவர் ரிட்டர்ன்ஸ்


கிட்டத்தட்ட இரண்டு மாத அவதிக்கு பிறகு உடல் நிலை தேறி சிங்கப்பூரில் இருந்து சிங்கமாக திரும்பி வந்திருக்கிறார் தலைவர். அவர் ராணாவில் நடிப்பாரா? அரசியலுக்கு வருவாரா? என்று எந்த கவலையும் இல்லாமல், அவர் திரும்பி வந்ததையே அவர் ரசிகர்கள் பெரிய நிகழ்வாக கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இல்லாத கவலை, சில சமூகவாதிகளுக்கு வந்தது ஏன் என்று தெரியவில்லை. "அவர் என்ன சிங்கப்பூரில் பெரிய சாதனை செய்துவிட்டா வந்தார்? அவருக்கேன் இப்படி வரவேற்பு?" என்று தங்கள் சமூக அக்கறையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் "அவர் விருந்து கொடுக்கிறேன் என்று சொன்னதை மறந்து விட்டீர்களா?" என்று ரசிகர்களுக்காக வாதாடுகிறார்கள். இப்படி தேவை இல்லாத இடத்தில் எல்லாம் மூக்கை நுழைப்பது இந்த சமூகவாதிகளுக்கு வாடிக்கையாகவே போய் விட்டது. 


கொசுறு: இந்த செய்தி மிகவும் சென்ஸிட்டிவ், மேலும் நம்பகத்தன்மை குறைவு என்பதால் இப்படி கொசுறுவாக சொல்கிறேன். என் உறவினர் ஒரு டாக்டர். அவரது நெருங்கிய நண்பர் (அவரும் டாக்டர்தான்) ஒருவர் ரஜினியின் குடும்ப டாக்டருக்கு வேண்டியவர். அவர் சொன்னது, "இமயமலைக்கு எல்லோரும் நினைத்த மாத்திரத்தில் சென்று விட முடியாது. அதற்கு மிகுந்த மனோபலமும், உடல்பலமும் வேண்டும். முக்கியமாக சுவாச கோளாறு இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இருக்க ரஜினி வருடா வருடம் செல்கிறார் என்றால் அவரது உடல் அவ்வளவு பலமானதாக இருக்கிறது என்று அர்த்தம். ஆகவே நுரையீரலில் நீர் கட்டுவது, சுவாசக்கோளாறு என்பவை ரஜினியின் உடல்நிலையை பொறுத்தவரை சாத்தியமே இல்லை. ஏற்கனவே ரஜினியின் வீட்டுக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியேயும் பல அரசியல் பிரச்சனைகள். ஆகவே ரஜினிக்கு யாரோ ஸ்லோ பாய்சன் கொடுத்திருக்க வேண்டும். இது யூகமாக இருந்தாலும், அதன் சாத்தியக்கூறுகள் மிக அதிகம். இது வெளியே கசிய் தொடங்கியவுடன், எதற்கு பிரச்சனை என்று சிங்கப்பூருக்கு சென்று விட்டார்கள்." 

 தலைவா உனக்குத்தான் எத்தனை தொல்லைகள்?


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....


36 comments:

Unknown said...

வெட்டி அரட்டை பயனுள்ளதாகத்தான் உள்ளது, இராணுவத்தை பற்றி பேசுபவர்களையெல்லாம் ஒருநாள் காஷ்மீர் பார்டரில் பணி எடுக்க வைத்தால் சரியாகிவிடும், வெறும் இணையத்தில் மட்டும் புரட்சி செய்பவர்கள் ஒரு பிரச்சனை என்றால் எத்தனை பேர் முன்னுக்கு நிற்பார்கள்? தலைவரை பற்றி பழுத்த மரம்தான் கல்லடி படும், அவர்களுக்கு பதில் கூறியே போதும் போதும் என்றாகிவிட்டது

K.s.s.Rajh said...

அருமையான தொகுப்பு பதிவு நண்பரே.கருணாநிதி தன் சுயலாபத்திற்காக ஈழத்தமிழர் பிரச்சனை என்று ஈழத்தமிழர் பிரச்சனையை வைத்து எவ்வளவு அரசியல் நடத்தினார்.ஆனால் அவர் ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்தார்.
தலை இடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள்.அது போல் கருணாநிதி ஜயாவுக்கு இது எல்லாம் தேவைதான்.

சூப்பர் ஸ்டார் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவேண்டும் அவருக்கு வாழ்த்துக்கள்.

சேலம் தேவா said...

//வெண்ணிற ஆடை மூர்த்தி தோத்தார் போங்க.... //

ஹா.ஹா..ஹா..சூப்பர் கமெண்ட் பாஸ்..!!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

http://www.youtube.com/watch?v=HToT6Y_VeIA

http://www.youtube.com/watch?v=vCWDmGRlWIE&feature=related

http://www.youtube.com/watch?v=YKZNv4bDcEs&feature=related

http://www.youtube.com/watch?v=IjQLETUS7TU


இவை அனைத்தும் பாகிஸ்தான் இராணுவமா ?? காஸ்மீரில்,மணிப்பூரில் குதறப்படும் பெண்களை மிருக ஜாதிக்குள் உள்ளடக்கலாமா?

ஒருவேளை பயிரைபாதுகாக்கும் வேலிதானே அப்பப்போ பயிர்களையும் மேய்ந்துகொள்ளலாம் என்று எண்ணுகிறீர்களோ?
மாடுகள் பயிரை மேய்வதை விட வேலியாய் தம்மை காட்டிக்கொண்டு பயிரை மேய்வது எவ்வளவு கொடுமையானது??

பாலா said...

@இரவு வானம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

பாலா said...

@Kss.Rajh

மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@சேலம் தேவா

நன்றி நண்பரே...

பாலா said...

@பெயரில்லா

நண்பரே நான் சொல்வதில் நியாயம் இருக்கிறதென்று நான் நம்புகிறேன். ஆகவேதான் தைரியமாக கூறுகிறேன். நீங்கள் கூறுவது நியாயம் என்றால், வெளிப்படையாக பெயருடனே பேசலாமே? முகமூடி போட்டுக்கொண்டு எதற்காக?

நான் பாகிஸ்தான் ராணுவம் இப்படி செய்கிறதென்று சொல்லவில்லை. அதே போல ராணுவத்தில் இப்படி செய்ய சொல்லி பயிற்சி கொடுத்து அனுப்பவும் இல்லை. தனி மனித குற்றங்களை சுயலாபத்துக்காக அரசியல் ஆக்குவது மிகாத்தவறு.

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசிக்கும் படியான தொகுப்பு...

சுதா SJ said...

நித்தியானத்தாவின் தொடர் வந்தது ஆனந்த விகடன் அல்ல குமுதம் பாஸ்

சுதா SJ said...

அப்புறம் போட்டோவில் ரஞ்சிதா அழகா இருக்காங்க உங்க பதிவைப்போலவே

சுதா SJ said...

நல்ல தொகுப்பு பாஸ்

Manoj said...

// அவர் விகடனில் தொடர் எழுதி கொண்டிருந்தபோது கூட இவ்வளவு புகழ் பெறவில்லை.//

small correction: அது விகடன் இல்லை " குமுதம் ".

Shiva sky said...

#ராணுவ வீரனும் சம்பளத்துக்குத்தானே வேலை செய்கிறான். அப்புறம் என்ன வீரன். ராணுவ கூலி என்றுதானே சொல்ல வேண்டும்

நல்ல சிந்தனை

Madhavan Srinivasagopalan said...

நல்ல தொகுப்பு..
வாழ்த்துக்கள்

பாலா said...

@Manoj

மற்றும்

@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்

சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி நண்பர்களே. மாற்றி விட்டேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

பாலா said...

@Madhavan Srinivasagopalan

மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@Shiva sky

நன்றி நண்பரே..

சக்தி கல்வி மையம் said...

தலைவர் பற்றிய கொசுறு செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா?

அந்நியன் 2 said...

பதிவு திருப்தி.

வாழ்த்துக்கள்!

சென்னை பித்தன் said...

கொசுறு ,உண்மையென்றால்,ரொம்ப ஷாக்கிங்.

Unknown said...

உங்கள் எழுத்து கலக்கல் பாலா நண்பரே!!!
எல்லா விசயத்திலும் பிச்சு புடுங்குறீங்க!!!

எப்பூடி.. said...

தலைவர் சம்பந்தப்பட்ட கொசிறு மீது எனக்கு நம்பிக்கை குறைவாகவே உள்ளது!!!! தலைவர் திரும்பி வந்தது வார்த்தைகளுக்கப்பாற்ப்பட்ட மகிழ்ச்சி. புரட்சிக்கார புன்னாக்குகளை நினைத்தால் சிப்பு சிப்பா வருது.

Jayadev Das said...

\\முன்பு ஜெயா டிவி செய்ததை, இப்போது இவர்கள் செய்கிறார்கள்.\\ அப்படின்னா, ஜெயா டி.வி. மறைக்கும் அளவுக்கு மக்களுக்கு நன்மை ஆவது போல மஞ்சள் துண்டு எதாச்சும் செய்ததா என்ன?

Jayadev Das said...

சாமியார் என்றால் காவி உடை தான் போடணும், வேறு எந்த வண்ணமும் அணியக் கூடாது. இந்த ஆள் அப்பப்ப மாப்பிள்ளை மாதிரி வெள்ளை ஆடை போட்டுக்கறான், [தலையில் தெனாலி ராமன் மாதிரி தலைப்பாகை வேறு!], அப்புறம் வருஷத்துக்கு ஒரு முறை பொம்பிளை வேடம் வேற அந்த தரிசனம் பெற ரெட்டும் ஜாஸ்தியாம், பல லட்சங்களில்.... [அதாவது, அம்பாள் வேடமாம்]

Jayadev Das said...

\\ஆகவே நுரையீரலில் நீர் கட்டுவது, சுவாசக்கோளாறு என்பவை ரஜினியின் உடல்நிலையை பொறுத்தவரை சாத்தியமே இல்லை.\\ அவ்வாறு இருப்பதாக வந்த செய்திகளை யார் பரப்பியது, நோக்கமென்ன, அந்த செய்தி தவறு என்று இவர் குடும்பத்தார் மறுத்துள்ளார்களா?

Anonymous said...

நல்ல பதிவு..,வாழ்த்துக்கள்...

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

இருக்கலாம்... உறுதியாக கூற முடியாது. நன்றி நண்பரே...

பாலா said...

@அந்நியன் 2

மிக்க நன்றி நண்பரே....

பாலா said...

@சென்னை பித்தன்

உண்மையாக இருக்க கூடாது என்பதே என் வேண்டுதல். நன்றி.

பாலா said...

@மைந்தன் சிவா

பிச்சு புடுங்குறீங்க அப்படின்னா என்ன அர்த்தம். ஏதோ நல்லதா சொன்ன சரிதான். நன்றி நண்பரே...

பாலா said...

@எப்பூடி..

கண்டிப்பாக அது பொய்யாக இருக்க வேண்டும். நன்றி நண்பரே.

பாலா said...

@Jayadev Das

அதை சொல்லவில்லை. அவர்கள் செய்யும் தவறுகளை மட்டும் நான்கு போகஸ் செய்தார்கள். அதே போல அரசு அறிவிக்கும் திட்டங்கள் அது சரியோ, தவறோ, அவற்றை பற்றி செய்து வெளியிட மாட்டார்கள் அதைத்தான் சொன்னேன்.

ரஜினி சென்னையில் உள்ள மருத்துவமனையில் இருக்கும்போதே நுரையீரலில் நீர் கட்டி இருக்கிறது என்று சொன்னார்களே... ஆனால் அவரை பற்றிய இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. நாமெல்லாம் ஊடகங்களை நம்பிதானே இருக்க வேண்டி இருக்கிறது?

மிக்க நன்றி நண்பரே...

ம.தி.சுதா said...

யாரப்பா சொன்னது வெட்டி அரட்டை என்று அருமையான ரைம் பாஸ்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

பாலா said...

@♔ம.தி.சுதா♔

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...

Related Posts Plugin for WordPress, Blogger...