விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 10, 2011

பணம் சம்பாதிக்கத்தான் கல்வியா?


நாள்தோறும் ஒரு நாள் விடாமல் ஐ‌பி‌எல் மேட்ச் ஓடுவதால் கிரிக்கெட் மீதே ஒரு வித வெறுப்பு உண்டாகிறதே? அதே போல, தொடர்ந்து கிரிக்கெட் பற்றியே எழுதி வருவதால் எனக்கே கூட ஒரு விட சலிப்பு உருவாகி விட்டது. அதற்காக கிரிக்கெட் தொடரை நிறுத்திவிடுவேன் என்று நினைக்காதீர்கள். ஒரு சின்ன பிரேக். இன்னும் இரண்டு பதிவுகள் கழித்து கிரிக்கெட்டை தொடருகிறேன். சென்ற வருடம் கிட்டத்தட்ட இதே சீசனில், ஒரு பதிவு எழுதி வெளியிட்டேன். அதே போல இன்னொரு பதிவை இப்போது வெளியிடுகிறேன். 



வர வர பிளஸ்டூ தேர்வு முடிவுகள் என்பது தேர்தல் முடிவுகள் மாதிரி மிகவும் பரபரப்பானதாக மாறிவிட்டது. நேற்று எல்லா தொலைக்காட்சிகளிலும் இது முழு நேர செய்தியாக ஓடிக்கொண்டிருந்தது. முதலில் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். முதலிடம் பிடித்த அந்த மாணவர்களின் மகிழ்ச்சியும், பெற்றோர் கண்களில் தெரிந்த பெருமிதமும், என்னையும் தொற்றிக்கொண்டது. மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 95 சதவீதம் பெற்று 26ஆவது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது கல்விக்கண் திறந்த காமராசரின் பிறந்த மாவட்டமான விருதுநகர் மாவட்டம். விருதுநகர்காரனாக எனக்கு இது பெருமைதான்.  


இது ஒரு புறம் இருக்க, வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்ததில் ஒருவர் கூட தமிழில் பேசவில்லை. தான் படித்த பள்ளி, அதன் முதல்வர், ஆசிரியர்கள் பெற்றோர் ஆகியோருக்கு நன்றி, என்று உணர்ச்சிப்பெருக்கில் அவர்கள் பேசியது எல்லாமே ஆங்கிலத்தில். ஒரு மனிதன் எப்போதுமே உணர்ச்சிவசப்பட்டால் வெளிப்படுவது தாய்மொழிதான். அப்படியானால் இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு தாய்மொழியாக புகட்டப்படுவது ஆங்கிலம்தானா? இது என் மனதில் தோன்றிய சிறிய வருத்தம்தான். இது ஒன்றும் கொலைக்குற்றம் அல்ல. அந்த குழந்தைகளை குறை சொல்லி என்ன பயன்? 


அதுசரி இந்த பிளஸ்டூ தேர்வுகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது? ஒரு மாணவன் பதினொன்றாம் வகுப்பை பாதி முடித்துவிட்டாலே அவனை சுற்றி இருக்கும் சூழ்நிலைகள் எல்லாம் தலைகீழாக மாறிவிடுகிறது. கேபிள் கட், விஷேச நிகழ்ச்சிகள் கட், டூர் கட், விளையாட்டு கட், அவனது நிம்மதி முழுவதும் கட். ரஷ்யா போன்ற நாடுகளில் எட்டு ஆண்டுகளுக்கு அடுத்து நடக்கபோகும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக 4 வயதில் இருந்தே குழந்தைகளை தேர்ந்தெடுத்து, ஜிம்னாஸ்டிக் பயிற்சி கொடுப்பார்களாம். அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஜிம்னாஸ்டிக்ஸ் மட்டுமே. அதே போல அடுத்த ஒண்ணறை ஆண்டுகள் ஒரு மாணவன் மனதில் வெறும் தேர்வுகளின் நினைவு மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. 


"அடப்போப்பா, இந்த ஒண்ணறை ஆண்டுகள் கொஞ்சம் கஷ்டப்பட்டால், வாழ்க்கை முழுவதும் அவன் கஷ்டப்படவேண்டியதே இல்லை. பெரிய காலேஜில் இடம் கிடைக்கும், நல்ல வேலை கிடைக்கும், நிறைய சம்பளம் கிடைக்கும், நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். படிக்க வேண்டிய வயதில் படிக்காமல் இருந்தால் உருப்படாமல் போக வேண்டியதுதான்." இதுதான் இன்றைய பெற்றோர்கள், மற்றும் பெரும்பாலான ஆசிரியர்களின் வாதம். ஆக பணம் இருந்தால், நிம்மதியான வாழ்க்கை கிடைத்துவிடும் என்ற முட்டாள்தனமான நமது எண்ணத்தை, நமது பிள்ளைகளிடமும் நாம் திணிக்கிறோம். 


பிளஸ்டூவில் முண்டியடித்து ஒரு நல்ல மதிப்பெண் பெற்று, பெரிய கல்லூரியில் இடம் பிடித்தபின், படிக்கமுடியாமல் தவித்து, மனதளவில் கூனிக்குறுகிப்போகும் மாணவர்களைப்பற்றி நாம் கவலைப்பட்டதுண்டா? "என் மகன் பிளஸ்டூவில் நல்ல மார்க்தான். காலேஜில் ஏன் சரியா படிக்க மாட்டேங்கிறான் என்று தெரியவில்லை." என்று கல்லூரிக்கு வந்து புலம்பும் பெற்றோர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு ஒரு உண்மை தெரியவில்லை. செக்கு மாட்டை வண்டியில் பூட்டினால், வண்டி ஊர் போய் சேராது. பன்னிரண்டாம் வகுப்பில் நாம் செய்து கொண்டிருப்பது, நமது கன்றுக்குட்டிகளை செக்கு மாடாக ஆக்குவதுதான். மேலும் "உலகத்திலேயே சிறந்த இடம் முதல் இடம்தான். முதலிடம் பிடிப்பவனே திறமைசாலி."என்று ஒரு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் சிறு வயதில் இருந்தே சொல்லி சொல்லி வளர்க்கிறார்கள்.  நாம் குழந்தையை ஊக்கப்படுத்த இந்த மாதிரி சொல்வதில் தவறில்லை. ஆனால் முதலிடம் பிடிக்காதவன் எல்லாம் இந்த உலகிலேயே வாழ தகுதியற்றவன் என்று சொல்லி சொல்லி, குழந்தைகளை வெறியேற்றி மன நோயாளிகளாக்கி விடுகிறோம். 


இதனால் வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு தோல்விகளை கூட அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. கல்லூரி இறுதி ஆண்டில், கேம்பஸ் இண்டர்வியூவில் முதல் கம்பெனியில் தோல்வி அடைந்தவுடன் தன் வாழ்க்கையே தொலைந்து போய் விட்டதைப்போல புலம்பிய மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன். இதன் காரணம், பள்ளியில் இருந்தே அவர்களுக்கு வெற்றி என்ற மாயை மட்டுமே காட்டப்பட்டு வந்திருக்கிறது. நல்ல துடிப்புள்ள, அறிவுள்ள பல மாணவர்கள் தங்களின் அறிவுத்திறனை இந்த மாதிரி குறுகிய ஒரு வட்டத்துக்குள் வீணடிப்பதற்கு பெற்றோர் ஆகிய நாமும் ஒரு காரணம். கல்லூரி வாழ்க்கையை முடித்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவருக்கும் இந்த உலகம் ஒரே மாதிரியான பிரச்சனைகளைத்தான் அளிக்கிறது. உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். உங்களுடன் படித்த அத்தனை நல்ல படிப்பாளிகளும் இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்களா? அத்தனை மக்கு மாணவர்களும் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்களா? இன்னும் உற்று கவனித்தால், சரியாக படிக்காதவர்களே அதிக உயரத்துக்கு சென்றிருப்பார்கள். படிப்பாளிகள் தங்களை அரசு உத்தியோகத்திலோ, அல்லது ஏதாவது ஒரு கம்பெனியிலோ நிரந்தர பணியில் அமர்த்தி கொண்டு, அதுதான் வாழ்வின் வெற்றி என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்று கொண்டு, தன் பிள்ளைகளுக்கும் அதை புகட்டிக்கொண்டிருப்பார்கள். 


நடிகர் சிவக்குமார் சொன்னது போல, தற்கால கல்வி என்பது நிறைய பணம் சம்பாதிக்க கற்றுக்கொடுக்கிறது. ஆனால் ஒழுக்கத்தையோ, நேர்மையையோ, வாழும் முறையையோ கற்றுக்கொடுக்கவில்லை. இது எவ்வளவு உண்மை. இப்போது பெற்றோர்களும் இதை கற்றுக்கொடுக்க தவறி விட்டனர். நம் குழந்தை எக்கேடு கேட்டாலும் நமக்கு கவலை இல்லை. அவன் ஒரு நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்க வேண்டும். என்ற எண்ணம்தான் பெரும்பாலான பெற்றோரின் எண்ணமாக இருக்கிறது. நண்பர்களே, நம் பிள்ளைகள் சமூகத்தில் பெரிய இடத்துக்கு வரவேண்டும் என்றால் அவர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வித்தையை கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. ஒழுக்கத்தையும், நேர்மையையும், வாழ்க்கையின் உன்னதத்தையும் கற்றுக்கொடுங்கள். பெரிய ஆளாய் வரும் வித்தையை அவர்களே கற்றுக்கொள்வார்கள். அப்படியே கொஞ்சம் நம் தாய்மொழியையும் கற்றுக்கொடுங்கள். தமிழ் எழுதப்படிக்க தெரிந்த பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 

42 comments:

இராஜராஜேஸ்வரி said...

தமிழ் எழுதப்படிக்க தெரிந்த பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தற்போது இந்த தொழிலில் அனைத்து அரசியல் வாதிகளும் இறங்கி விட்டதால்தான் இப்படி ஆகிவிட்டது...

சக்தி கல்வி மையம் said...

அமாம் நீங்கள் சொல்லுவது சரியே... அருமையான கருத்துக்கள்..

சிங்கக்குட்டி said...

கல்வி வியாபாரமாக மாறி வெகு வருடங்கள் ஆகிவிட்டன.

NKS.ஹாஜா மைதீன் said...

#ஒரு மனிதன் எப்போதுமே உணர்ச்சிவசப்பட்டால் வெளிப்படுவது தாய்மொழிதான். அப்படியானால் இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு தாய்மொழியாக புகட்டப்படுவது ஆங்கிலம்தானா?#

வருத்தம் கலந்த உணர்வுபூர்வமான சிந்திக்க வைத்த வார்த்தைகள்.....

Unknown said...

கல்வி வியாபாரம் பணம் கொழிக்கும் நல்ல தொழிலாகிவிட்டது அதனால் அதில் எந்த ஒரு மாற்றம் வர போவதில்லை

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

கருத்துக்கு நன்றி மேடம்.

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

பாலா said...

@சிங்கக்குட்டி

நாம் மனது வைத்தால் அதை மாற்றலாம்.

பாலா said...

@NKS.ஹாஜா மைதீன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

பாலா said...

@நா.மணிவண்ணன்

நீங்கள் சொல்வதும் உண்மைதான். ஆனால் அதை மாற்றும் வழி குறித்து சிந்திக்க வேண்டும்.

Unknown said...

நல்லா பதிவு, நீங்கள் ஏன் ஷேர் பட்டன் போடவில்லையா உங்க பதிவில்? உங்களுக்கு அது பற்றி தெரியவில்லை என்றால் இதை பதித்து பார்த்து ஷேர் பட்டன் யை போடவும்.
http://njmahesh.blogspot.com/2010/11/blog-post.html

Chitra said...

ஆனால் முதலிடம் பிடிக்காதவன் எல்லாம் இந்த உலகிலேயே வாழ தகுதியற்றவன் என்று சொல்லி சொல்லி, குழந்தைகளை வெறியேற்றி மன நோயாளிகளாக்கி விடுகிறோம்.

....how sad!

Chitra said...

சிந்திக்க வைக்க, பல கருத்துக்களை கொண்ட பதிவு.

சென்னை பித்தன் said...

இந்த ஆங்கில மோகம் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருப்பதாக நான் நினைகிறேன்.
சரியான நேரத்தில்,நல்ல பதிவு பாலா!

techsatish said...

நண்பரே இந்த விட்ஜெட்டை தங்கள் தளத்தில் இணைத்து கொள்ளுங்கள்
திருட்டை தடுக்க 95% உத்திரவாதம்...!

சண்முககுமார் said...

தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்

http://tamilthirati.corank.com

பாலா said...

@njmahesh

உண்மைதான் நண்பரே. இது பற்றி எனக்கு தெரியாது. லிங்க் கொடுத்து உதவியதற்கு நன்றி நண்பரே.

பாலா said...

@Chitra

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

பாலா said...

@சென்னை பித்தன்

மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@இந்தியன்

பரிந்துரைக்கு நன்றி நண்பரே. பயன்படுத்துகிறேன்.

பாலா said...

@சண்முககுமார்

தங்கள் பரிந்துரைக்கு நன்றி நண்பரே...

Unknown said...

மாப்ள நான் டமிலன் டமில்ல தான் பேசுவேன்.........சத்தியம் என்பது வடமொழிச்சொல் அதனால்........ப்ராமிசாக நீங்க சொல்வது சரிதான் ஹிஹி!

ஷர்புதீன் said...

dear bala, me too write with this kind of topic in below the link-

http://kazhuhu.blogspot.com/2011/05/blog-post_05.html

பாலா said...

@விக்கி உலகம்

ஹி ஹி ... 'தேங்க்ஸ்' நண்பா...

பாலா said...

@ஷர்புதீன்

படித்துவிட்டேன் நண்பரே. மிக ஆழமாகவும் தெளிவாகவும் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி

பாலா said...

நல்ல பதிவு பாலா..

எங்கோ சமீபத்தில் வாசித்த ஞாபகம். வார்த்தைகள் சரியாய் நினைவில்லை.. சாரம் இதுதான்..

//தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பொறியியல், மருத்துவம், மாத சம்பளம் என்று பூட்டிய கதவுகளுக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்... தோல்வியடைந்த அந்த மாணவர்கள் தான் நாட்டை ஆக்கும் சக்தியாகவோ அழிக்கும் சக்தியாகவோ உருவெடுக்கிறர்கள்...//

பாலா said...

@பாலா

இந்த பதிவின் மூலக்கருத்தே நீங்கள் சொல்லி இருப்பதுதான். நன்றி நண்பரே...

Sivakumar said...

சிக்சர் அடித்துள்ள பதிவு. பெற்றோரின் மைன்ட்செட்டை மாற்ற வேண்டும். அதுவரை ரோபோக்கள் தான் உருவாவார்கள். படைப்பாளிகள் அல்ல.

arasan said...

இன்றைய நிலைக்கு தகுந்த பதிவு ..
நிச்சயம் இந்நிலை மாற்றம் வேண்டும் ..
இல்லை இவ்வுலகம் சுழல்வதும் கூட இயற்க்கைக்கு மாறாக சுழல ஆரம்பிக்கும் ..

arasan said...

இன்றைய கல்வி கூடங்கள் எப்படி இருக்கின்றன ,,,
இதை பார்த்தும் உணர வேண்டும் ,..
அறிவை திறக்க தான் கல்வி ..
அழிவை திணிக்க இல்லை என்பதை உணர வேண்டும் ..

பதிவுக்கு நன்றி

பாலா said...

@அரசன்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

பாலா said...

@! சிவகுமார் !

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

r.v.saravanan said...

நம் பிள்ளைகள் சமூகத்தில் பெரிய இடத்துக்கு வரவேண்டும் என்றால் அவர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வித்தையை கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. ஒழுக்கத்தையும், நேர்மையையும், வாழ்க்கையின் உன்னதத்தையும் கற்றுக்கொடுங்கள். பெரிய ஆளாய் வரும் வித்தையை அவர்களே கற்றுக்கொள்வார்கள்.

good bala

அந்நியன் 2 said...

வேலைப் பழுவின் காரணமாக ஒரு வாரம் இனைய தலத்திர்க்கு வர இயலவில்லை இன்ஷாஅல்லாஹ் பதினாரு தேதி அன்று ஊருக்கு போறேன் சந்திப்போம்...

சக்தி கல்வி மையம் said...

உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் ..
நேரம் இருந்தால் பார்க்கவும்..


என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2

பாலா said...

நண்பர்களே பிளாக்கரில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக சில பின்னூட்டங்களும், என்னுடைய பதில்களும் காணாமல் போய் விட்டன. எனவே வந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

நடிகர் சிவக்குமார் சொன்னது போல, தற்கால கல்வி என்பது நிறைய பணம் சம்பாதிக்க கற்றுக்கொடுக்கிறது. ஆனால் ஒழுக்கத்தையோ, நேர்மையையோ, வாழும் முறையையோ கற்றுக்கொடுக்கவில்லை.//
என்ன ஒரு சத்தியமான வார்த்தைகள்!

Anonymous said...

பணம் சம்பாதிக்க மட்டுமல்ல..இப்போது வெறி பிடித்து அலைகிறார்கள்..பணக்காரன்னு தெரிஞ்சா ஆஸ்பத்திரியில எப்படி பணம் பிடுங்குறாங்களோ..அதுபோல கோடீஸ்வரன் மகன் என தெரிந்தால் ஸ்பெஷல் கட்டணம் வசூலிக்கிறார்கள்

போளூர் தயாநிதி said...

கல்வி வியாபாரமாக மாறி வெகு வருடங்கள் ஆகிவிட்டன.சிந்திக்க வைத்த வார்த்தைகள்.....

பாலா said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

பாலா said...

@போளூர் தயாநிதி

மிக்க நன்றி நண்பரே

Related Posts Plugin for WordPress, Blogger...