விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 23, 2011

வெட்டி அரட்டை - அதிமுக, ரஜினி, ஐ‌பி‌எல்....


கிரிக்கெட் பதிவுக்கு மீண்டும் ஒரு பிரேக். கிரிக்கெட் பதிவு தொடர், ஐபிஎல் மாதிரி நீண்டு கொண்டே இருப்பதால், இடைக்காலத்தில் பிற நிகழ்வுகளால் உண்டாகும் என் எண்ணங்களை வெளியிட முடியாமல் போய் விடுகிறது. ஆகவே அவை அனைத்தையும் ஒரே பதிவில் சொல்லி முடித்து விடுகிறேன். அம்மா அதிரடி.... 

தேர்தல் முடிவுகள் பற்றி நிறைய பேர் துவைத்து அலசி காய போட்டு விட்டார்கள். அதை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. "திமுக ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதிமுக கூட்டணிதான் வெல்லும் அதுவும் கிட்டத்தட்ட 140 இடங்கள் வெல்லும்." என்று முன்னமே நினைத்திருந்தேன்( நம்புங்கப்பா..). தேர்தல் அன்று ஜெயலலிதா பேட்டி அளித்தபோது மிகவும் சோர்வாக காணப்பட்டார். ஓய்வு தந்த சோர்வா? அல்லது வயது தந்த சோர்வா? என்று தெரியவில்லை. விஜயகாந்த் இந்த தேர்தலில் ஒன்றிரண்டு இடங்களை மட்டுமே ஜெயிப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் பிரதான எதிர்கட்சி அளவிற்கு உயர்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மக்கள் ஒட்டு மொத்தமாக திமுகவை துடைத்தெறிந்து விட்டார்கள்(அஞ்சு வருசத்துக்கு ஒருமுறை நடப்பதுதானே?). இனி விஜயகாந்துக்கு பொறுப்பு அதிகரித்து விட்டது. அவரது செயல்பாடுகளை மக்கள் கூர்ந்து கவனிப்பார்கள். பார்க்கலாம் என்ன செய்கிறார் என்று. சொல்ல மறந்துவிட்டேன் நேற்று தியேட்டரில் எங்கேயும் காதல் படம் பார்த்துக்கொண்டிருந்தேன். என் அருகில் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனும் படம் பார்த்தார்.(தியேட்டர் அவரோடது). எங்கள் ஊரில் போட்டியிட்டால் கண்டிப்பாக தோற்று விடுவோம் என்று தெரிந்து அருப்புக்கோட்டையில் போட்டியிட்டார். அங்கேயும் படுதோல்வி. இந்த மாதிரி தோல்வி வந்தால்தான் அமைச்சர்களை எல்லாம் நேரில் பார்க்க முடிகிறது. 

அம்மா என்றாலே அதிரடி என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இந்த முறை முதல் பந்தில் இருந்தே சிக்சர்களாக அடிக்க தொடங்கிவிட்டார். அவரது போக்குக்கு ஈடுகொடுக்க முடியாமல் மக்களே திண்டாட தொடங்கி விட்டார்கள். கடைசியாக சமச்சீர் கல்வியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதில் வந்து நிற்கிறார். புதிய பாடத்திட்டத்தில் கலைஞர் புகழ்பாடும் சில பக்கங்களை நீக்குவது வரை சரியே. கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது இறந்து விடக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருக்கிறேன் (என்ன ஒரு உயர்ந்த எண்ணம்?). அப்புறம் பாடங்களில் கலைஞர் சரித்திர நாயகனாக ஆகி விடுவார். அவருக்கு ஆயிரம் கோடி செலவில் நினைவிடம் எழுப்பப்படும். ஊருக்கு ஊர் அவருக்கு சிலை வைக்கப்படும். அந்த கொடுமையை எல்லாம் தாங்க முடியாது. ஏற்கனவே எம்ஜியார் நகர், அண்ணா நகர், கலைஞர் நகர் இல்லாத ஊர்களை தமிழகத்தில் பார்க்க முடிவதில்லை.  ஆனால் புதிய பாடத்திட்டத்தை நிறுத்தி வைத்தது சரியா என்று சொல்லத்தெரியவில்லை. ஒன்று மட்டும் உண்மை. விடுமுறை 15 நாட்கள் நீட்டிக்கபட்டுள்ளதால் பிள்ளைகள் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்கள். . 


இதெல்லாம் ஒரு பொழப்பா?


சமீப காலமாக ரஜினி அவர்களைப்பற்றி வருந்தத்தக்க வதந்திகள் நாடெங்கிலும் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றில் உண்மை இல்லை என்றாலும், அவற்றை கேட்டவுடன் மனதில் பதைபதைப்பு தோன்றுவது மறுப்பதற்கில்லை. இந்த மாதிரி கேவலமான ஈன பிறவிகளை பார்க்கும்போது தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் கண்முன்னே தோன்றுகின்றன. ரஜினி என்பவர் அயோக்கியனாகவே இருந்துவிட்டு போகட்டும். அவரை ஆராதிக்கும் கூட்டம் முட்டாள்களாகவே இருக்கட்டும். அதில் உனக்கென்ன வந்தது? ரஜினி என்பவர் இல்லாமல் போய் விட்டால் நீ வாழ்க்கையில் முன்னேறி விடுவாயா ? வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதன் முக்கிய காரணமே இந்த மாதிரி எண்ணம்தான் என்பது உங்களுக்கு புரியப்போவதில்லை. இந்த மாதிரி எண்ணம் இருப்பவர்கள் பொறாமையிலும், வயிற்றெரிச்சலிலும், ஆற்றாமையிலும் வெந்து, நிலைகொள்ளாத கேவலமான ஒரு வாழ்க்கையைத்தான் வாழ வேண்டி இருக்கும்.  இதை பயன்படுத்தி, பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் தங்கள் பங்குக்கு வியாபாரம் செய்து வருவதுதான் வேதனைக்குரிய விஷயம். இப்படி ஒரு பொழப்பு தேவையா? 


வதந்திகள் தலைவருக்கு ஒன்றும் புதிதில்லை. இருபது வருடங்களுக்கு முன் ரஜினி அவ்வளவாக மீடியாக்களுக்கு முகத்தை காட்டாமல் இருந்தார். அவரது குழந்தைகளோ வெளிஉலகத்துக்கே காட்டப்படாமல் இருந்தார்கள். அப்போது சில விஷமிகள், "ரஜினியின் குழந்தைகள் ஊனமுற்றவர்கள், ஆகவே அவர்களை வெளிஉலகுக்கு காட்ட ரஜினி தயங்குகிறார்." என்று கூசாமல் சொன்னார்கள். அந்த நேரத்தில் ஊனமுற்றவர்கள் நலனுக்காக தமிழக அரசு வெளியிட்ட ஒரு விளம்பரத்தில் ரஜினி நடித்தார். உடனே, "தன் குழந்தைகள் ஊனமுற்றவர்கள் என்பதாலேயே, விளம்பரங்களிலேயே நடிக்காத ரஜினி இதில் நடித்திருக்கிறார்." என்று இட்டுக்கட்டினார்கள். இந்த வதந்திகள் ரஜினியையோ, அவர் குடும்பத்தையோ சிறிதும் பாதிக்கவில்லை. இவற்றுக்கு ரஜினி பதிலளிக்கவும் இல்லை. அவர் பாணியில் சொல்வதானால், "காலம் பதில் சொல்லும்".  சொன்னது. 


இப்படிப்பட்ட வதந்திகளால் ஒரு மிகப்பெரிய நன்மை நடந்திருக்கிறது. ரஜினி என்ற நபர் மக்கள் மனதில் எப்பேற்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்று உலகுக்கு மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருக்கிறது. வதந்திகளை பரப்பிய மானங்கெட்ட மக்கா உங்களுக்கு ஒரு நன்றி.  


ஐபிஎல் போரடிக்குது... 


பொதுவாக டிவியில் ஒளிபரப்பப்படும், ஏர்டெல் சூப்பர் சிங்கர், அசத்தப்போவது யாரு போன்ற ரியாலிட்டி ஷோக்கள் முதலில் நன்றாக இருந்தாலும் போகப்போக போராடித்துவிடும். ஐபிஎல்லும் அந்த பட்டியலில் சேர்ந்து விடும் போலிருக்கிறது. இந்த சீசனில் ஒரு ஆட்டம் கூட சுவாரசியமாக இல்லை. என்னதான் கிறிஸ்கெய்ல் தாறுமாறாக அடித்தாலும் அதில் மனம் லயிக்க மறுக்கிறது. எண்ணற்ற போட்டிகள், ஒரே மாதிரியான டெம்ப்ளேட் ஆட்டங்கள் எல்லாம் ஆட்டங்களின் மீதுள்ள ஈடுபாட்டை குறைக்கவே செய்கின்றன. சும்மா பரபரப்புக்காக கிரிக்கெட் பார்க்காமல் வீரர்களின் ஆட்டநேர்த்தியை ரசிக்கும் ரசிகர்களுக்கு ஐபிஎல் ஒரு ஏமாற்றமே.  இந்த ஐபிஎல்லில் சச்சின் அடித்த சதத்தில் மட்டுமே ஒரு நேர்த்தி, முழுமைத்தன்மை இருந்தது. மற்றவை எல்லாம் அவசரத்தில் கிண்டிய பிரைட் ரைஸ் மாதிரியே இருக்கிறது. 


காலிஸ், டிராவிட் உள்ளிட்ட ஸ்டைலிஷ் ஆட்டக்காரர்கள் கூட தங்களின் இயல்பை மாற்றி ஆடுவது, பத்மாசுப்ரமணியம் டப்பாங்குத்து ஆடுவது போல பரிதாபமாக உள்ளது. இந்த ஐ‌பி‌எல்லில் பிடித்த கேட்ச்களை விட, தவற விட்ட கேட்ச்கள் மிக அதிகம். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது வேதனை அளிக்கிறது. முன்பெல்லாம் கேட்ச் தவற விடுவது என்பது மிக பெரும் தவறாக கருதப்பட்டது. இப்போது அது இயல்பாக மாறிவிட்டது. ஒரு போட்டியில் குறைந்த பட்சம் ஐந்தில் இருந்து ஆறு கேட்ச்கள் தவறவிடப்படுகின்றன. இது இந்த விளையாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல. அதே போல ஆக்ரோஷமாக ஆடுகிறேன் பேர்வழி என்று, வீரர்களுக்கிடையே கேனைத்தனமாக குழாயடி சண்டை வேறு அவ்வப்போது அரங்கேறுகிறது.  இதில் பேர் பிளே அவார்ட் வேறு. அதை எல்லாம் எவன் மதிக்கிறான்? 


வீரர்கள்தான் இப்படி என்றால் அம்பயர்கள் இன்னும் மோசம். முன்தினம் அடித்த சரக்கு மப்பு இறங்குவதற்குள், தொப்பியை மாட்டிக்கொண்டு களத்தில் இறங்கி விடுகிறார்கள். சிறு குழந்தை கூட சொல்லி விடும் விஷயத்தை வாக்கி டாக்கி மூலம் கேட்டு அறிகிறார்கள். பேசாமல் களத்தில் அம்பயர்களை நீக்கி விட்டு தர்ட் அம்பயரை மட்டும் பயன்படுத்தலாம் போலிருக்கிறது. இது மட்டுமில்லாமல், மனம்போன போக்கில், எல்‌பிடபில்யு, வைட் எல்லாம் கொடுக்கிறார்கள். இப்படியே போனால், கிரிக்கெட் என்பது WWE மாதிரி ஒரு நாடகமாக மாறிவிடும். அதற்காக ஐ‌பி‌எல் போன்ற ஆட்டங்களை தடை செய்யவேண்டும் என்று அர்த்தமில்லை. இவற்றை நெறிப்படுத்தினாலே போதுமனது. நான் ரசித்த ஒரு விஷயம், கில்கிறிஸ்ட் சதமடித்துவிட்டு, ஹெல்மெட்டை கழற்றி தலையை சிலுப்பியவுடன், பிரீதிஜிந்தா கண்கலங்கி உதடுகளை கடித்தாரே, எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். (இப்படித்தாண்டா ஐ‌பி‌எல் போணியாவுது...) 


இந்த பதிவில் தோழர்கள் ஸ்டைலில் காவி பயங்கரவாதம் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். பதிவு நீளமாகி விட்டதால் அடுத்த பதிவில் எழுதுகிறேன். 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

43 comments:

Unknown said...

அவசரத்தில் கிண்டிய பிரைட் ரயிஸ்-ரசித்தேன் ஹிஹி

Unknown said...

கிரிக்கட் ஞானி!!!

எப்பூடி.. said...

ரஜினி இப்பது உடல் நலம் பரவாயில்லை என்று செய்தி வந்தால் கூட, "அப்ப அவரை எதுக்கு காட்டல? சத்திய சாயிபாபா நிலைதான் அவருக்கும்" அப்பிடி இப்பிடின்னு தங்கள் ஆசையை பலர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சாகடிச்சாத்தான் ரஜினியை ஜெயிக்கலாம் என்கிற நிலையில்தான் ரஜினி இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறெந்த உதாரணமும் தேவையில்லை. தலைவர் மீண்டு வருவார், இந்த விசமிகளுக்கு பேதி புடுங்க வைப்பார்.

ஐபிஎல் - எனிமி ஒப் கிரிக்கெட்

ஜெஎலலிதா- நோ கமன்ட்

Unknown said...

///தேர்தல் அன்று ஜெயலலிதா பேட்டி அளித்தபோது மிகவும் சோர்வாக காணப்பட்டார். ஓய்வு தந்த சோர்வா? அல்லது வயது தந்த சோர்வா? என்று தெரியவில்லை.///

நேரடியாக பாட்டி என்று சொல்லாமல் சுத்தி வளைத்து கூறுகிறீர்கள் ,ஓகே ,நம் முதல்வர் என்றாலும் உண்மை அதுதானே .

சிசு said...

ஜெயலலிதா - நிமிர்த்தமுடியாது...

சிசு said...

ரஜினி - குதிரை...

//ரஜினியின் குழந்தைகள் ஊனமுற்றவர்கள்//

இதை சிலகாலம் நானும் நம்பிக்கொண்டிருந்தேன் :(

சிசு said...

// இந்த ஐபிஎல்லில் சச்சின் அடித்த சதத்தில் மட்டுமே ஒரு நேர்த்தி, முழுமைத்தன்மை இருந்தது.//

அதனாலதான் அவரு சச்சின்.....

//பிரீதிஜிந்தா கண்கலங்கி உதடுகளை கடித்தாரே, எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.//

ம்ம்ம்ம்......

டெக்கானுக்கு எதிராக சேவாக் ஆடிய ஆட்டம் பார்த்தீர்களா... விஷயம் அந்த சதம் அல்ல... அவர் அடித்து ஒவ்வொருமுறை பந்து எல்லைக்கோட்டைத் தொடும்போதும் டெக்கான் co-owner -ன் ரியாக்ஷனை பார்த்தவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். :)
இப்பல்லாம் அதுக்காகவே டெக்கான் மேட்ச் பாக்குறேன் பாஸ்...

சிசு said...

@ நா.மணிவண்ணன் கூறியது...

///தேர்தல் அன்று ஜெயலலிதா பேட்டி அளித்தபோது மிகவும் சோர்வாக காணப்பட்டார். ஓய்வு தந்த சோர்வா? அல்லது வயது தந்த சோர்வா? என்று தெரியவில்லை.///

நேரடியாக பாட்டி என்று சொல்லாமல் சுத்தி வளைத்து கூறுகிறீர்கள் ,ஓகே ,நம் முதல்வர் என்றாலும் உண்மை அதுதானே .//

நம் முதல்வராக இல்லாவிட்டாலும் அதுதான் உண்மை... :)

பாலா said...

@மைந்தன் சிவா

கருத்துக்கு நன்றி நண்பரே...

//கிரிக்கட் ஞானி!!!

காது கேக்கல...

பாலா said...

@எப்பூடி..

//இந்த விசமிகளுக்கு பேதி புடுங்க வைப்பார்.

கண்டிப்பாக வைப்பார்...

நன்றி தலைவரே...

பாலா said...

@நா.மணிவண்ணன்

உண்மை அதுதான். வயசாகுதில்ல...

Madhavan Srinivasagopalan said...

நல்ல அலசல்..

ஐ.பி.எல் : எல்லா மேட்ச்சுகளையும் பாக்காமல்.. கடைசி சுற்று போட்டிகளை மட்டும் நான் பார்ப்பதால், எனக்கு அலுப்பு தட்டவில்லை.
ஏற்கனவே உலகக் கோப்பை பார்த்ததால், ஐ.பி.எல் லீக் ஆட்டங்களை நான் பார்க்கவில்லை, அது இப்போது நல்லதாகிவிட்டது.. ரசிக்கிறேன் இப்போது..

பாலா said...

@சிசு

//ஜெயலலிதா - நிமிர்த்தமுடியாது..

நீங்களும் நேரா சொல்லாம சுத்து வளைச்சு சொல்றீங்க.

// டெக்கான் co-owner -ன் ரியாக்ஷனை பார்த்தவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். :)

நானும் அதிர்ஷ்டசாலிதான்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

பாலா said...

@Madhavan Srinivasagopalan

அடுத்த முறை உங்க ஐடியாவையே நானும் பாலோ பண்றேன். நன்றி நண்பரே...

Philosophy Prabhakaran said...

// கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது இறந்து விடக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருக்கிறேன் (என்ன ஒரு உயர்ந்த எண்ணம்?). அப்புறம் பாடங்களில் கலைஞர் சரித்திர நாயகனாக ஆகி விடுவார். //

சரியாக சொன்னீர்கள்... ஐம்பது வருடங்களுக்கு பிறகு வரப்போகும் மடையர்களுக்கு கருணாநிதியின் யோக்கியதை தெரியவா போகிறது...

NKS.ஹாஜா மைதீன் said...

பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்....

பாலா said...

@Philosophy Prabhakaran

ஆமாமாம்... வரலாறு முக்கியம் அமைச்சரே...

பாலா said...

@NKS.ஹாஜா மைதீன்

நன்றி நண்பரே...

Speed Master said...

கரக்க்டா சொன்னீங்க

ஐபில் கலை இழக்கிறது

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
ஒரு காதல் கதை
http://speedsays.blogspot.com/2011/05/love-story.html

கிரி said...

//இப்படிப்பட்ட வதந்திகளால் ஒரு மிகப்பெரிய நன்மை நடந்திருக்கிறது. ரஜினி என்ற நபர் மக்கள் மனதில் எப்பேற்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்று உலகுக்கு மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருக்கிறது.//

மறுக்கமுடியாத உண்மை. இதனால் ரஜினிக்கு இன்னும் கூடுதல் ரசிகர்கள் கிடைத்தார்கள் என்பதே நிஜம் :-)

பாலா said...

@Speed Master

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

பாலா said...

@கிரி

வருகைக்கு நன்றி நண்பரே...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மச்சி கூல்! இப்போ எதுக்கு டென்சன் ஆவுறே? நம்ம தலைவர பத்தி வதந்தி பரப்புறது இதுவா மொதல் தடவ? இல்லைத்தானே! விடு, தலைவர் சொல்றமாதிரி கதம் கதம்!!

சுதா SJ said...

//கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது இறந்து விடக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருக்கிறேன் (என்ன ஒரு உயர்ந்த எண்ணம்?).//ஹா ஹா

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதுதான் என் ஆசையாகவும் இருந்தது நண்பா

சென்னை பித்தன் said...

//காலிஸ், டிராவிட் உள்ளிட்ட ஸ்டைலிஷ் ஆட்டக்காரர்கள் கூட தங்களின் இயல்பை மாற்றி ஆடுவது, பத்மாசுப்ரமணியம் டப்பாங்குத்து ஆடுவது போல பரிதாபமாக உள்ளது.//
அதுதான் 20-20!

r.v.saravanan said...

நமது தலைவர் ரஜினி பற்றி எழுதியது சிறப்பு பாலா அதிலும் வதந்திபரப்புபவர்களுக்கு நீங்கள் சொன்னது சும்மா நச்சுனு இருக்கு

இறை அருளுடன் நோயை வென்று வருவார் தலைவர்

செங்கோவி said...

//இந்த வதந்திகள் ரஜினியையோ, அவர் குடும்பத்தையோ சிறிதும் பாதிக்கவில்லை. இவற்றுக்கு ரஜினி பதிலளிக்கவும் இல்லை. அவர் பாணியில் சொல்வதானால், "காலம் பதில் சொல்லும்". சொன்னது. // சரியாச் சொன்னீங்க பாலா. தலைவருக்கு இதெல்லாம் புதுசில்லை தான்..சீக்கிரமே மீண்டு வருவார்.

கார்த்தி said...

கருணாநிதி ஆட்சியிலிரந்து கலைத்ததுதான் மகிழ்ச்சி. ஜெயா கதிரைக்கு வந்தது பற்றி கரிசனையில்லை.

இவர்கள் சிலருக்கு மண்டைக்கில பிரச்சனை. ஒரு திறமைசாலி நல்ல முயற்சிசாலிதானே சுப்பர் ஸ்டார் ஆகி இருக்கிறார். அவரப்பற்றி பெரிசா போட்டு அவரப்பற்றி கிண்டலடிச்சா பெரியா ஆக்களாகிருவம் என்று பலபேருக்கு நினைப்பு!!

அதோட ஐபில் முந்தைபோல் விறுவிறுப்பில்லை. போட்டிகள் அதே அளவாக இருப்பினம் மப்பாதான் இருக்கு!!!

arasan said...

அனைத்தும் உண்மை வரிகள் ..
உங்களின் இந்த பதிவே போதும்
சில வதந்திகளை கூறும் மனிதர்களுக்கு
சரியான சவுக்கடியாக இருக்கும் ..
இறுதியில் ipl பற்றிய கருத்து அருமை ...

பாலா said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

ஓகே மச்சி கதம் கதம்.

பாலா said...

@துஷ்யந்தனின் பக்கங்கள்

பெரும்பாலானோர் மனதில் இந்த எண்ணம்தான் இருக்கிறது போலிருக்கிறது. நன்றி நண்பரே...

பாலா said...

@சென்னை பித்தன்

நன்றி நண்பரே...

பாலா said...

@r.v.saravanan

நன்றி நண்பரே...

பாலா said...

@செங்கோவி

சீக்கிரம் மீண்டு வருவார். நன்றி நண்பரே...

பாலா said...

@கார்த்தி

உங்கள் தமிழ் வித்தியாசமாக இருக்கிறது. நன்றி நண்பரே...

பாலா said...

@அரசன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

Unknown said...

பதிவு அருமை நண்பரே, நல்ல ஆராய்ச்சி

பாலா said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.

ஷர்புதீன் said...

படித்தேன்
:)

blackman said...

engal ullam kavrntha thalaivan meendum meendu varavendum blackman

ம.தி.சுதா said...

////அம்மா என்றாலே அதிரடி என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இந்த முறை முதல் பந்தில் இருந்தே சிக்சர்களாக அடிக்க தொடங்கிவிட்டார்./////

என்னப்பா கிரிக்கேட் பதிவு இல்லின்னிங்க அப்புறம் கிரி்க்கேட் மணம்கவுழுதே... ஹ..ஹ.. சும்மாப்பா...

கலைஞர்கள் எப்போதும் மரிப்பதில்லை சகோதரா...

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

பிரபாஷ்கரன் said...

ஒரே வரியில் சொன்னால் எல்லாமே சூப்பர் அதுவும் ரஜினி பற்றி சூப்பர் தலைவர் எப்போதுமே தலைவர் தான்

Sadhu said...

மேலும் வாசிக்க.... பார்க்க.........

Do Visit

மனசு ரெண்டும் புதுசு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html

ஜில் ஜில் ஜிலேபி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html

மாங்கனி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html


நாட்டு சரக்கு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html


http://www.verysadhu.blogspot.com/

Related Posts Plugin for WordPress, Blogger...