விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

January 24, 2011

வெட்டி அரட்டை - வெகுநாளாக ஒரு சந்தேகம்.....


வர வர பதிவுகளில் அதிகமாக கவனம் செலுத்த முடிவதில்லை. வேலைப்பளுவெல்லாம் கிடையாது. ஒரு பதிவெழுதுவதற்கு ஒண்ணரை மணிநேரம் செலவாகும். அதனால் நேரம் கிடைப்பதில்லை என்று சொல்ல இயலாது. முதல் பிரச்சனை மேட்டர் பிரச்சனை. எழுதுவதற்கு தோதான மேட்டர் வேண்டும், அல்லது படிக்க சுவாரசியமாக எந்த மேட்டரையும் எழுத தெரிய வேண்டும். இவை என்னிடம் ரொம்ப கம்மி. இரண்டாவது பிரச்சனை அப்படியே ஏதாவது மேட்டர் சிக்கி எழுத உட்கார்ந்தால், சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி மறுத்ததை போல, இண்டர்நெட் இணைப்பு பல்லை காட்டும். 

ரொம்ப நாளாவே எனக்கும் ஏர்டெல்லுக்கும் பெரிய வாய்க்கால் தகராறே நடந்து வருவது எல்லோரும் அறிந்ததே. அந்த பிரச்சனை முத்தி, பல்வேறு திருப்பங்களை சந்தித்து வருகிறது. அந்த கதையை பற்றி எழுதவேண்டுமானால் கலைஞரின் தாய்காவியம் தோற்றுவிடும். அவ்வளவு போராட்டங்கள். (புதிய பதிவர்களுக்கு: "எந்த ஒரு மேட்டருமே இல்லாமல் ஒரு பத்தி எழுதுவது எப்படி?" என்ற ஐடியாவுக்கு, மேலே உள்ள பத்தியை ரெஃபரன்சாக வைத்துக்கொள்ளுங்கள்)



வெகுநாளாக ஒரு சந்தேகம்.


நான் விபரம் தெரிந்த நாள்முதலாக தினமலரின் சிறுவர்மலர், மற்றும் வாரமலரை தவறாமல் படிப்பவன். முன்பெல்லாம் வாரமலரின் சினிமா துணுக்குகள் ஆறு பக்கங்கள் வரும். அதிலும் நடு பக்கத்தை யாரும் இல்லாத இடத்தில் சென்றுதான் பார்க்க முடியும். இப்போது சினிமா துணுக்குகளை நான்கு பக்கமாக குறைத்து விட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை. இப்போது பிரச்சனை அதுவல்ல. வெகு நாட்களாக, அதாவது இருபது வருடங்களுக்கும் மேலாக அந்துமணி என்னும் நபர் எழுதும் பகுதி ஒன்று வரும். நிறைய பேர் படித்திருப்பீர்கள். கிட்டத்தட்ட பதிவுலக ஸ்டைலில் எழுதப்ப்ட்டு வரும் இந்த பகுதியை தொடர்ந்து படிப்பவராக இருந்தால் ஒரு விஷயம் உங்களுக்கு புலப்படும். ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை பற்றி தங்களுக்குள் நடந்த விவாதத்தை விவரிப்பார். பெரும்பாலும் அவை தண்ணியடிக்கும்போது நடந்தவைகளாக இருக்கும். "எல்லோரும் அடித்தார்கள். நான் அடிக்கவில்லை" என்ற வரி கண்டிப்பாக இருக்கும். அதே போல தனக்கு ஆங்கிலமே தெரியாது என்று ஒவ்வொரு வாரமும் சொல்லிவிடுவார். தன்னை பெண் குல காப்பாளர் போலவும் காட்டிக்கொள்வார். 


தனக்கு குடிப்பழக்கம் இல்லை என்பதையும், ஆங்கிலம் தெரியாது என்பதையும் ஒவ்வொரு வாரமும் சொல்வதன் தேவை என்ன? இவர் குடித்தால் என்ன? குடிக்கா விட்டால் என்ன? இல்லை "நாங்கள் தண்ணி அடித்தோம்" என்ற சம்பவத்தையே விவரிக்காமல் தவிர்த்திருக்கலாமே? எனக்கு அந்துமணி மீது தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவரது பகுதியை படிக்கும்போது கடுப்புதான் வருகிறது. சமீபத்தில் அவர் மீது பாலியல் தொந்தரவு புகார் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. ("நீ எழுத தெரியாது! என்று ஒவ்வொரு பதிவிலும் சொல்கிறாயே, அது போலத்தான் இது!" என்று யாரும் சொல்லாதீர்கள்)


மானத்தை காப்பாற்றிய பதான் 


இந்தியா தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை கைப்பற்றி சாதனை புரியும் என்று நினைத்த எனக்கு இந்த ஆண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி இரண்டு ஆட்டங்களில் இந்தியா ஆடிய விதத்தை பார்த்த போது ஏமாற்றத்தை மிஞ்சி அச்சமே உண்டானது. ஐம்பது அறுபது ரன்கள் எடுப்பதற்குள் நான்கைந்து விக்கெட்டுகளை இழந்து விடுவது, பின்னர் அரைகுறை ஆட்டக்காரர்கள் வந்து பந்தை அடிப்பதற்கு பதிலாக காற்றிலேயே மட்டையை சுழற்றுவது என்று கடுப்பை கிளப்பும் ஆட்டம் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு சொந்தம். ராபின்சிங் ஒரு புறம் வியர்வை வழிய நிற்க , கும்ப்ளேவோ, பிரசாத்தோ மறுபுறத்தில் மட்டையால் விக்கெட் கீப்பருக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருப்பார்கள். அதே நிகழ்வு மீண்டும் நடந்த போது, உலக கோப்பை மீது சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. மேலும் "இவர்கள்தான் ஐபிஎல்இல் ஏலம் எடுக்கபட்டு விட்டார்களே. அவர்கள் ஆட்டம் அப்படித்தான் இருக்கும்." என்று எண்ண  தோன்றியது. இருப்பினும் இறுதி ஆட்டத்தில் ஒரு மோசமான தோல்வியை தவிர்க்க வேண்டி விளையாடிய யூசுப் பதான் ஒரு கட்டத்தில் வெற்றிக்கு மிக அருகில் அணியை அழைத்து சென்றது சிறப்பு.  

ஹோம் தியேட்டர் எஃப்பெக்ட்டில் ஒரு படம் 


எல்லா நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஒரு ஆடம்பர ஆசை உண்டு. தன் வீட்டில் ஹோம் தியேட்டர் சிஸ்டம் வாங்கி ஒரு அறையில் பொருத்தி, யாருமில்லாமல் தனியாக ப்ரோஜெக்டரில் தியேட்டர் எஃப்பெக்ட்டோடு படம் பார்க்க வேண்டும் என்று. அந்த ஆசையை தற்காலிகமாக தீர்த்து வைத்தது இளைஞன் படம். தியேட்டரில் என்னையும் சேர்த்து நான்கு பெரியவர்கள் ஒரே ஒரு சிறுவன். ஐந்து பேருக்காக ஒரு காட்சி. விரும்பிய இடத்தில் எப்படி வேண்டுமானாலும் அமரலாம். தனியாக இருப்பது கொஞ்சம் பயமாக இருந்தது. இருந்தாலும் இவ்வளவு சுதந்திரமாக எந்த படத்தையுமே நான் பார்த்ததில்லை. அதுசரி டீவியில் இளைஞன் பட விளம்பரத்தில் எல்லோரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை விடுத்து, கதை எழுதியவரை வாழ்த்துகிறார்கள். அதே நேரம் சன் பிக்சர்ஸ் படம் என்றால், கதை எழுதியவர், இயக்குனரை விடுத்து, தயாரிப்பாளரை ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்களே? எப்படி?  

பதிவு ரொம்ப நீளமாகி விட்ட படியால், மனதை வருடிய ஒரு படத்தை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

31 comments:

சக்தி கல்வி மையம் said...

Me the first..

சக்தி கல்வி மையம் said...

ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்மபக்கம் வந்துட்டு போங்க..
http://sakthistudycentre.blogspot.com

Anonymous said...

//ஹோம் தியேட்டர் எஃப்பெக்ட் //
ஹா ஹா! டிக்கெட் எடுக்கும் போது கூடவா உங்களுக்கு டவுட்டு வரல? ;)
//எழுதுவதற்கு தோதான மேட்டர் வேண்டும், அல்லது படிக்க சுவாரசியமாக எந்த மேட்டரையும் எழுத தெரிய வேண்டும்// :)

r.v.saravanan said...

எழுதுவதற்கு தோதான மேட்டர் வேண்டும்

correct

Unknown said...

நன்றாக இருக்கிறது, ஆமாம் அந்த போட்டோவில் இருப்பவர்தான் அந்துமணியா?

எப்பூடி.. said...

தண்ணியடிக்கிற மேட்டர பார்த்தா அந்துமணி என்கிற பேர்ல எழுதிறது அன்புமணியா இருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது :-))

இளைஞர் வரலாறு காணாத மாபெரும் வெற்றி என்று கலைஞர் தொலைக்காட்சியில் சொல்கிறார்களே உண்மையா?

karthikkumar said...

தல எங்க வூர்ல உளியின் ஓசை நூறு நாள் ஓடுச்சு (ஓட்டப்பட்டது) கிட்டத்தட்ட முதல் நாளும் கடைசி நாளான நூறாவது நாளும்தான் மக்கள் அந்த தியேட்டருக்கு போய் படம் பாத்தாங்க ( பாக்க வெச்சாங்க) ஆனா இப்போ நாலு தியேட்டர்ல இளைஞன் ரிலீஸ் பண்ணுனாங்க 3 வது நாளே தூக்கிட்டாங்க... :)

karthikkumar said...

எனக்கு ஒரு டவுட் குறிப்பிட்ட நபர்களுக்கு குறைவா இருந்தா படம் போடமாட்டாங்கலாமே. எங்கையோ படிச்ச ஞாபகம்...

Madurai pandi said...

அந்துமணிய படிக்றத விட்டு பல நாள் ஆச்சு பாலா!!!

Unknown said...

அந்துமணியின் ஸ்டைலுக்கு இப்பொ வவேற்பு இல்லை.
இது மட்டும் இல்லை
நல்ல கவனிச்சு பார்த்தா 10-15 வருடம் முன்னால் வந்த வாசகியர் கடிதம் , அத பகுதிய இப்பொ நேத்து வந்த மாதிரி மறு பிரசுரம் பண்ணுவாஙக.

எப்போன்னலும் நான் டீ வாங்கும் பையான்ன்னு சொல்லுவாங்க.. எந்த டீ பாய் வாசகர் கேள்விக்கு பதில் சொல்ல அனுமதிப்பங்க ? டீ பாய்க்கு வெளிநாட்டுக்கு போக அனுமதிப்பங்கள ?

NKS.ஹாஜா மைதீன் said...

சாதாரணமாவே நல்ல சுவாரஸ்யமா எழுதிட்டு நமக்கு அப்படி எழுத வராதுன்னு சொல்றிங்களே ......தன்னடக்கத்தின் பெயர் இதுதானா.....சூப்பர்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

என்ன பால சார் உங்களுக்கு பதிவு எழுத மேட்டர் இல்லையா? நம்பவே முடியவில்லை! " நான் பால ஆனது எப்படி? " ங்கிற தலைப்பில ஏதாவது எழுதுங்க! மேட்டர் ரெடி!

Philosophy Prabhakaran said...

அந்துமணியின் அபத்தங்களை ஏற்கனவே ஒரு பத்திரிகை அம்பலப்படுத்தியதாக ஞாபகம்... அவரது படத்தை எங்கே கண்டுபிடித்தீர்கள்...

பாலா said...

@sakthistudycentre-கருன்

நன்றி நண்பரே.. கண்டிப்பா வருகிறேன்

பாலா said...

@Balaji saravana

எந்த வித மொக்கை படத்தையும் பார்ப்பதே என் வேலை. More over "நாங்கல்லாம் சுறாவையே ரெண்டு தடவை பார்த்தங்க (ஆடுகளம் ஸ்டைலில் படிக்கவும்)"

நன்றி நண்பரே

பாலா said...

@r.v.saravanan

வருகைக்கு நன்றி நண்பரே

பாலா said...

@இரவு வானம்

அப்படித்தான் நினைக்கிறேன். கூகிளில் தேடியபோது சிக்கியது.

பாலா said...

@எப்பூடி..

:)

ஆமாம் இளைஞன் வரலாறு காணாதே சாதனைதான். பின்னே ஆளே இல்லாமல் இத்தனைநாள் ஒரு படம் ஓடுகிறது என்றால் அதுவும் சாதனைதான்.

பாலா said...

@karthikkumar

எங்கள் ஊரில் படம் ஓடுவது திமுக அமைச்சர் தியேட்டரில். அதனால் படத்தை தூக்குவது சாத்தியமில்லை. அதே போல எங்கள் ஊரில் படம் ஆரம்பித்த அரைமணிநேரம் கழித்துதான் கூட்டமே வரும். அது எந்த படமாக இருந்தாலும் சரி. ஆகவே ஆட்கள் இல்லாவிட்டாலும் படம் ஆரம்பித்து விடுவார்கள்.

பாலா said...

@Madurai pandi

நாமதான் எதையும் படிக்கிற ஆளாச்சே ஆதலால் படித்து விடுகிறேன்.

பாலா said...

@Vinoth
நீங்கள் சொல்வதைப்பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. தன்னை ஆபீஸ்பாய் என்றே இன்றும் சொல்லிக்கொள்கிறார்.

பாலா said...

@NKS.ஹாஜா மைதீன்

அப்படி சொல்லாதீங்க தல. ஒரு பதிவு எழுதுறதுக்குள்ள மண்டைய உடைச்சுக்கிறது எனக்க்த்தான் தெரியும்.

நன்றி

பாலா said...

@மாத்தி யோசி

அது பெரிய கதை எல்லாம் இல்லீங்க. பாலசுப்பிரமணியன் என்று கூப்பிட கஷ்டமாக இருந்ததால் பாலா ஆக்கி விட்டார்கள். இத பதிவா போட எப்படி முடியும்?

நன்றி நண்பரே...

பாலா said...

@Philosophy Prabhakaran

அந்துமணியின் படம் என்று கூகிள் கொடுத்தது இது. அவரின் அபத்தங்களை அம்பலப்படுத்தியது அவர்களின் போட்டி பத்திரிக்கை என்று நினைக்கிறேன். அதனால் அதுவும் சந்தேகமாக இருக்கிறது.

தல ஒயின் ஷாப் எப்படி போய்ட்டிருக்கு?

சேலம் தேவா said...

//ஹோம் தியேட்டர் எஃப்பெக்ட்டில் ஒரு படம்//

செம காமெடி பாஸ்..!!

பாலா said...

@சேலம் தேவா

தல தியேட்டரில் போய் பாருங்க. படம் செம காமெடி.

Prabu Krishna said...

உங்க அளவுக்கு எங்களுக்கு தைரியம் இல்லை இளைஞன் படம் பாக்க. அதனால அப்பீட்டு.

பாலா said...

@பலே பிரபு

நீங்க தப்பிச்சுட்டீங்க.....

Unknown said...

அந்துமணி பற்றியும், இளைஞன் பற்றியும் நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகள் நியாயமானவை.. யோசிக்க வைக்கின்றன...

Unknown said...

நீங்கள் பதிவெழுதும் விதம் சுவையாக இருக்கிறது. உங்களுக்கு எம் வந்தனங்கள்..

ப்ரியா said...

இன்று தான் உங்கள் பதிவுகளை பார்க்கிறேன் ... எழுத்து நடை சுவாரசியமாக இருக்கிறது ... நன்றி தொடர்ந்து எழுதுங்கள் ...

Related Posts Plugin for WordPress, Blogger...